Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சூளைமேடு கொலை வழக்கு: டக்ளஸிடம் 5ஆம் திகதி வீடியோ விசாரணை

Featured Replies

சூளைமேடு கொலை வழக்கு: டக்ளஸிடம் 5ஆம் திகதி வீடியோ விசாரணை
 
 

article_1446010639-c4joua1d.gif

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவிடம் சென்னை செசன்ஸ் நீதிமன்றத்தில் எதிர்வரும் 5ஆம் திகதி காணொளிக் காட்சி மூலம் விசாரணை நடைபெற உள்ளது.

அன்றைய தினம் காலை 10 மணிக்கு அரசு தரப்பு சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜராக ஏற்பாடுகள் செய்யவேண்டும் என நீதிபதி எம்.சாந்தி, உத்தரவு கடிதம் அனுப்பியுள்ளதாக  இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

அரச சட்டத்தரணி எம்.பிரபாவதி மற்றும் சூளைமேடு பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஆகிய இருவருக்கும் இந்த உத்தரவு கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில், 'தேசிய தகவல் மையத்தின் மூலம், இலங்கையில் உள்ள டக்ளஸ் தேவானந்தாவிடம் காணொளிக்காட்சி மூலம் வழக்கை விசாரிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எனவே, மார்ச் 5ஆம் திகதி காலை 10 மணிக்கு அரசு தரப்பு சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜராக ஏற்பாடுகள் செய்யவேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.

1986ஆம் ஆண்டு சென்னை சூளைமேட்டை சேர்ந்த திருநாவுகரசு என்பவரை சுட்டுக்கொலை செய்ததாகவும், பொதுமக்கள் மீது துப்பாக்கியால் சுட்டதாகவும் டக்ளஸ் தேவானந்தா மீது இந்திய பொலிஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு சென்னை 4ஆவது கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. டக்ளஸ் தேவானந்தா, இலங்கையில் வசிப்பதால் இந்த வழக்கை காணொளிக்காட்சி மூலம் அவரிடம் விசாரிக்கவேண்டும் என்று செசன்ஸ் நீதிமன்றத்துக்கு உயர்நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது.

இந்தநிலையில், இந்த வழக்கு 4ஆவது கூடுதல் செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி எம்.சாந்தி முன்பு கடந்த 18ஆம் திகதி விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் ஆஜரான சட்டத்தரணி எம்.பிரபாவதி, 'இந்த வழக்கு நீண்டகாலமாக நிலுவையில் உள்ளதால், காணொளிக்காட்சி மூலம் டக்ளஸ் தேவானந்தாவிடம் விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்' என்று வாதிட்டார். 

இதையடுத்து, இந்த வழக்கு விசாரணையை மார்ச் 5ஆம் திகதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

(இந்திய  செய்தி)

- See more at: http://www.tamilmirror.lk/167215/%E0%AE%9A-%E0%AE%B3-%E0%AE%AE-%E0%AE%9F-%E0%AE%95-%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%B3%E0%AE%B8-%E0%AE%9F%E0%AE%AE-%E0%AE%86%E0%AE%AE-%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%A4-%E0%AE%B5-%E0%AE%9F-%E0%AE%AF-%E0%AE%B5-%E0%AE%9A-%E0%AE%B0%E0%AE%A3-#sthash.7OwFBGQv.dpuf
  • கருத்துக்கள உறவுகள்

முந்தி அரசாங்க அமைச்சர் என்று சொல்லி விசேட ஏற்பாட்டில் இந்தக் காணொளி விசாரணை என்று சொல்லிச்சினம்.. இப்ப சும்மா வெட்டிக்குத்தானே இருக்கிறார்.. நாடு கடத்தி.. பிடிச்சு உள்ள வைச்சு.. வழக்கை கெதியா விசாரிச்சு தீர்ப்பைச் சொல்லுங்க.

இப்படியே வழக்கை இழுத்துக்கிட்டு போனா.. பாதிக்கப்பட்டவர்களின் சந்ததி கூட நீதி கிடைக்காமல் செத்துப் போயிடப் போகுதுகள்.

ஹிந்தியாவில் சொறீலங்காவில் சட்டத்தின் முன் சகலரும் சமன்.. இவருக்கு மட்டும் என்ன மண்ணாங்கட்டிக்கு விசேட விசாரணை. ஆளை நாடு கடத்த வைச்சு இந்த விசாரணையை விரைவாக நடத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு எனியும் தாமதம் இன்றி நீதி கிடைக்க செய்யனும். சட்டவாளர்கள் முயற்சிப்பார்களா...??!

ஹிந்தியா.. சொறீலங்காவில் நீதித்துறை அரசியல்மயமாகிக் கிடக்கிறது என்பதற்கு இந்த வழக்குச் சாட்சி. இதுங்க எல்லாம் சனநாயக நாடுகளாம். :rolleyes:tw_angry:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

வீடியோ விசாரணையை விடுத்து   நீதிபதி அடங்கலாக ஒரு விசாரணைக்குழுவை   இந்தியாவில் இருந்து ஸ்ரீதர் தியேட்டருக்கு அனுப்பி வையுங்கள். அந்தளவிற்கு அண்ணாச்சி இப்ப பிசி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜேர்மனியில் இன்றும் போர் கொலை / அரசியல் கொலை குற்றவாளிகளை கண்டு பிடித்து  தள்ளுவண்டியிலாவது கொண்டுவந்து விசாரித்து தண்டனை வழங்குகின்றார்கள்.

Auschwitzprozesse, Gericht, Wachmann, Auschwitz, Prozess, Orosz, SS, Gröning, Mengele, KZ-Arzt, Befreiung, Nebenklage, Baby, Gesundheitszustand, Zeugen, Tochter  

328D2A00A65C78E9-U411467099901XwF--600x3

நான் சொல்ல வந்தது என்னவெண்டால் வெளிநாட்டு அரசியல் முறையை கொப்பியடிச்சு அங்காலை முன்னேறி சிகரம் கட்டுவம் எண்டு சொல்லீனமெல்லே....அது சிங்களவனோடை சரிவராது எண்டு சொல்லவாறன் கண்டியளோ...:cool:

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

ஜேர்மனியில் இன்றும் போர் கொலை / அரசியல் கொலை குற்றவாளிகளை கண்டு பிடித்து  தள்ளுவண்டியிலாவது கொண்டுவந்து விசாரித்து தண்டனை வழங்குகின்றார்கள்.

Auschwitzprozesse, Gericht, Wachmann, Auschwitz, Prozess, Orosz, SS, Gröning, Mengele, KZ-Arzt, Befreiung, Nebenklage, Baby, Gesundheitszustand, Zeugen, Tochter  

328D2A00A65C78E9-U411467099901XwF--600x3

நான் சொல்ல வந்தது என்னவெண்டால் வெளிநாட்டு அரசியல் முறையை கொப்பியடிச்சு அங்காலை முன்னேறி சிகரம் கட்டுவம் எண்டு சொல்லீனமெல்லே....அது சிங்களவனோடை சரிவராது எண்டு சொல்லவாறன் கண்டியளோ...:cool:

சிங்க‌ளவர் எங்களுக்கு புனர்வாழ்வு தரப்போயினம் ,அதற்காக பலர் கியூவில நிற்கினம் 
நீங்கள் வேற......tw_tounge_wink:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.