Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் பாடசாலை மாணவன் மீது வாள்வெட்டு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
யாழ்.ஓட்டுமடம்- தட்டாதெரு பகுதியில் பாடசாலை சிறுவன் மீது இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவத்தில் குறித்த சிறுவன் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

15 பேர் கொண்ட குழு ஒன்றினால் மேற் கொள்ளப்பட்ட குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

மேற்படி பகுதியல் உள்ள மரக்காலை ஒன்றில் இன்றைய தினம் மாலை 5.30 மணியளவில் கே.கேமராஐன்( வயது17) என்ற சிறுவன் நின்றிருந்த நிலையில்,

இச் சிறுவனை இலக்கு வைத்தே மேற்படி கொலைவெறித் தாக்குதலை மேற்கொண்டுள்ளப்பட்டுள்ளது.

சிறுவன் மரக் காலையில் நின்றவேளையில் அங்கு வந்த இளைஞர்கள் வாள், பொல்லுகள், கைக் கிளிப்புகள் சகிதம் வந்த சுமார் 15 பேர் கொண்ட குழு சிறுவனைத் தாக்கியதுடன் காலை உரிமையாளர் மீதும் தாக்கி வாகனங்களையும் அடித்து நொறுக்கினர்.

இவ்வாறு இவர்களின் தாக்குதலை அடுத்து இவர்கள் எழுப்பிய அவலக் குரலையடுத்து அயலவர்கள் திரண்டு தாக்குதலில் ஈடுபட்டவர்களை மடக்கி பிடிக்க முயன்ற நிலையில், மோட்டார் சைக்கிளையும் கைவிட்டுத் தப்பியோடியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுவன் யாழ் பொலிசில் முறையிட்டதையடுத்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

attack_jfna_003.jpg

attack_jfna_004.jpg

attack_jfna_005.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

15 பேர் வந்து தாக்குதல் செய்யிற அளவுக்கு கேமராஜன் என்ன செய்திருப்பார்?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

15 பேர் வந்து தாக்குதல் செய்யிற அளவுக்கு கேமராஜன் என்ன செய்திருப்பார்?

நீங்கள் எப்போதுமே வன்முறையை நியாப்படுத்துவதற்கான காரணங்களை தேடுவீர்களா?

அப்படியானால் இதையும் கேட்டு பார்க்கலாமே?

ஈழத்தமிழருக்கு எதிரான இலங்கை அரசின் யுத்தத்துக்கு எல்லா உலக நாடுகளும் ஆதரவு அளிக்கும் அளவுக்கு ஈழத்தமிழர் என்ன செய்து இருக்கிறார்கள்?

 

Edited by Jude

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
34 minutes ago, Jude said:

நீங்கள் எப்போதுமே வன்முறையை நியாப்படுத்துவதற்கான காரணங்களை தேடுவீர்களா?

அப்படியானால் இதையும் கேட்டு பார்க்கலாமே?

ஈழத்தமிழருக்கு எதிரான இலங்கை அரசின் யுத்தத்துக்கு எல்லா உலக நாடுகளும் ஆதரவு அளிக்கும் அளவுக்கு ஈழத்தமிழர் என்ன செய்து இருக்கிறார்கள்?

 

போர் முடிந்து  தமிழனின் ஒரு பரப்பு காணியை திருப்பிக்குடுக்க  சிங்களவனுக்கு   ஏழுவருசம் சென்றிருக்கு.?!!   இதற்குள் உங்கள் உலகநாடுகள் என்ன மயிரையா புடுங்கிச்சு?

Edited by குமாரசாமி
சிங்களவனுக்கு...

  • கருத்துக்கள உறவுகள்
On 3/14/2016 at 9:10 PM, குமாரசாமி said:

போர் முடிந்து  தமிழனின் ஒரு பரப்பு காணியை திருப்பிக்குடுக்க  சிங்களவனுக்கு   ஏழுவருசம் சென்றிருக்கு.?!!   இதற்குள் உங்கள் உலகநாடுகள் என்ன மயிரையா புடுங்கிச்சு?

உலக நாடுகள் பெருமளவில் இலங்கைக்கு போருக்கு உதவவில்லை என்றா சொல்கிறீர்கள்? 

வென்ற காணியை அவர்கள் ஏன் திருப்பி கொடுக்க வேண்டும்?

  • கருத்துக்கள உறவுகள்

சிவலிங்கப்புளியடிச் சந்தி போராட்ட காலத்துக்கு முன்னர் ஒரே ரவுடிகள் இருந்த இடமாம் என்று பெரியவங்க சொல்லுவாங்க. இப்ப மீண்டும் அந்த நிலையை உருவாக்குகிறது சொறீலங்கா பொலிஸ். இந்த ரவுடிசம் பெருக சொறீலங்கா பொலிஸின் கையாலாகாத்தனமும்... மாற்றான் தாய் மனப்பான்மையுமே முக்கிய காரணம். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, nedukkalapoovan said:

சிவலிங்கப்புளியடிச் சந்தி போராட்ட காலத்துக்கு முன்னர் ஒரே ரவுடிகள் இருந்த இடமாம் என்று பெரியவங்க சொல்லுவாங்க. இப்ப மீண்டும் அந்த நிலையை உருவாக்குகிறது சொறீலங்கா பொலிஸ். இந்த ரவுடிசம் பெருக சொறீலங்கா பொலிஸின் கையாலாகாத்தனமும்... மாற்றான் தாய் மனப்பான்மையுமே முக்கிய காரணம். :rolleyes:

உங்களுக்கு யாரோ றோங் இன்பர்மேசன் குடுத்திருக்கினம் யுவர் ஆனர்....!

சிவலிங்கப் புளியடிச் சந்தியில் எந்த ரவுடீஸ்சும் இருந்ததுமில்லை வாழ்ந்ததுமில்லை. அது ஒரு அமைதிப் பூங்கா. பக்கத்தில் புறக்டர் விஸ்வநாதன் வீடு இருந்தது.சிறப்பான பெரிய கறாஜ்ஜும், சன்முகநாதன் சைக்கிள் கடையும் இருந்தது.  அங்கால ஓட்டுமடம் ,பொம்மைவெளி, ஐந்துசந்தி ஆகியன் முஸ்லீம் ஏரியா...! அப்படியே நாவாந்துறை, கொட்டடி ,கோனாந்தோட்டம், கரையூர், அரியாலை, துண்டி என்று சில பல விழுப்புண் வீரர்கள் வாழ்ந்து மறைந்திருக்கின்றார்கள்....! tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

சிவலிங்கப் புளியடியில ஒரு பெரிய புளிய மரமும்... அவிச்சுக் காயவிடுகிற புழுங்கல் அரிசி மனமும் தான் நினைவிருக்கு! வேற ஒரு பிரச்னையும் இருந்த மாதிரி நினைவில்லை!

மதில் பாய்ஞ்சு செக்கண்ட் ஷோ பாக்கிற எங்களுக்குத் தெரியாமல் இருக்குமா?

ஆங்....! நாதமுனியர் ஸ்டையில்..! 

சைக்கிள் கடை எண்டு சுவியர் சொல்லுறது.. அந்தச் சைக்கிள் வாடகைக்கு விடுகிற கடை தானே?

  • கருத்துக்கள உறவுகள்

சிவலிங்கப் புளியடியில் கே கே எஸ் வீதியில்... ஒரு சாராயக்கடையும் இருந்ததாமே..?! சொல்லிக்கிறாங்க. tw_blush:

எங்கள் காலம் போராட்ட காலம் ஆகையால்... சிவலிங்கப் புளியடி நிழலடி மாத்திரம் தான். அமைதியான இடம். புலிகள் சில தடவைகள் பிக் அப்போடு.. கலிபரை கொண்டு வந்து நிறுத்தினவர்கள். அவ்வளவு தான். tw_blush:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, nedukkalapoovan said:

சிவலிங்கப் புளியடியில் கே கே எஸ் வீதியில்... ஒரு சாராயக்கடையும் இருந்ததாமே..?! சொல்லிக்கிறாங்க. tw_blush:

எங்கள் காலம் போராட்ட காலம் ஆகையால்... சிவலிங்கப் புளியடி நிழலடி மாத்திரம் தான். அமைதியான இடம். புலிகள் சில தடவைகள் கலிபரை கொண்டு வந்து நிறுத்தினவர்கள். அவ்வளவு தான். tw_blush:

சாராயக் கடை இருந்த நினைவில்லை!

ஆனால் ஒத்தைக்கதவு வியாபாரம் இருந்த நினைவு! மில்லுக்குப் பக்கத்தில இருந்த கடை எண்டு நினைவு!

ஒத்தைக்கதவு வியாபாரம் உங்களுக்கு விளங்குமோ தெரியாது நெடுக்ஸ்!

ஆனால் அந்த வெட்டிரும்பை சனம் அடிச்சுப் போட்டு.. வாயை ஒரு வெட்டு வெட்டிச் செருமுவினம்!

அதைப் பார்க்க ஆயிரம் கண் காணாது!

  • கருத்துக்கள உறவுகள்

செல்வம் பற்றிக்கடை இருந்தது. இஞ்சால ஐயற்ற மில்லும் முன்னால ஏழரைப் பரியாரியின் வீடும் இருந்தது. அவர் எந்த வருத்தத்துக்கும் ஏழரை ருபாய்தான் வாங்குவார். அவரை ஏழரைப் பரியாரி எனச் சொல்வார்கள். பின்பு விலைவாசி ஏறியதால பதினைந்து ருபாய் எடுப்பார். பின் டபுள் ஏழரையாய்ப் போனார். சற்று உள்ளே சிறாப்பர் வீடு. வாசலில் தாமரைக் குளத்துல் சரஸ்வதி சிலை உண்டு. நல்லூருக்கு கைலாசவாகனம் அன்பளிப்பு செய்தவர்....!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புங்கையூரன் said:

ஒத்தைக்கதவு வியாபாரம் உங்களுக்கு விளங்குமோ தெரியாது நெடுக்ஸ்!

சத்தியமா.. இப்படி இன்று வரை தெரியாது. யாழ் கோட்டையில் இருந்து... செல்லடி விழுகிற காலங்களில்.. யாழ் நகரில்.. ஒற்றைக்கதவில் கடை திறந்திருக்கும். அப்படி ஏதாவதா..??! :rolleyes:

Edited by nedukkalapoovan

1 hour ago, suvy said:

பக்கத்தில் புறக்டர் விஸ்வநாதன் வீடு இருந்தது.சிறப்பான பெரிய கறாஜ்ஜும், சன்முகநாதன் சைக்கிள் கடையும் இருந்தது.  அங்கால ஓட்டுமடம் ,பொம்மைவெளி, ஐந்துசந்தி ஆகியன் முஸ்லீம் ஏரியா...!

பக்கத்தில் புறக்டர் விஸ்வநாதன் வீடு

மேயர் விஸ்வநாதன் (உருத்திரகுமாரின் அப்பா) வீடுதானே. அதையும் எப்பவோ வித்தாச்சு + இப்போது வீட்டில் ஆளரவம் இல்லை.

அங்கால ஓட்டுமடம் ,பொம்மைவெளி, ஐந்துசந்தி

இந்த ஏரியாக்கள் கொஞ்சம் அப்படி இப்படித்தான் அந்த நாட்களில். இப்பவும் போதைப் பொருட்களுக்கு பிரபல்யம் என்கிறார்கள் - எனக்கு தெரியாது.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம், தட்டாதெருச் சந்தி, ஐயனார் கோவிலடியிலுள்ள மரக்காலையில் பணிபுரியும் சிறுவனை வாளால் வெட்டி படுகாயப்படுத்திய சம்பவம் தொடர்பில், இரண்டு சந்தேக நபர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ். தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.டி.பி.வீரசிங்க தெரிவித்துள்ளார். கடந்த வருடம் உயர்தர பரீட்சைக்கு தோற்றியிருந்த மாணவர்களே இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளமை விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.

   

தாக்குதல் மேற்கொண்ட கும்பல் கைவிட்டுச் சென்ற மோட்டார் சைக்கிள் இலக்கம், போக்குவரத்து திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில் அதிலிருந்து கிடைக்கப்பெறும் தகவல்களின் அடிப்படையில், ஏனையோரும் கைது செய்யப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தட்டாதெருச் சந்தி, ஐயனார் கோவிலடியில் அமைந்துள்ள மரக்காலைக்குள் பொல்லுகள், கைக்கிளிப்புக்களுடன் நுழைந்த 15 பேர் கொண்ட கும்பலொன்று அதே பகுதியைச் சேர்ந்த கே.கேமராஜன் என்ற சிறுவனைக் கடுமையாகத் தாக்கியது. இதன்போது படுகாயமடைந்த சிறுவன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.seithy.com/breifNews.php?newsID=153487&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.