Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிரான் பிரதேசத்தில் ஹிஸ்புல்லாவின் திட்டமிடலில் அத்துமீறிய காணி சுவீகரிப்பு (படங்கள்)

Featured Replies

3499_1460161717_PhototasticCollage-2016-

மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பூலாக்காடு வயல் பிரதேசத்தில் பொதுமக்கள் சிலருக்கு சொந்தமான வயல் நிலங்களை மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா அத்துமீறி சுவீகரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக பாதிக்கப்பட்டோர் கவலை தெரிவிக்கின்றனர். 

இது தொடர்பாக மேற்படி பிரதேசத்தில் வயல் செய்கை நடவடிக்கையில் மேற்கொண்ட விவசாயிகள்வெள்ளிக்கிழமை காலை வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை பதிவுசெய்துள்ளனர்.

இதனை தொடர்ந்து சாட்சியங்களை பதிவு செய்யும் முகமாக பொலிசார் குறித்த பிரதேசத்திற்கு பாதிக்கப்பட்ட விவசாயிகள் சகிதம் நேரடியாக சென்று சாட்சியங்களை பதிவு செய்தனர்.

இதன்போது அங்கு 2 ஜேசிபி இயந்திரங்கள் வயல் நிலங்களை துப்பரவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதை அவதானித்து குறித்த வேலையினை நிறுத்துமாறு உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

அத்துடன்அங்கு வேலையில் ஈடுபட்டிருந்த வேலையாட்களை சனிக்கிழமை வாழைச்சேனை பொலிஸ் நிலையம் வந்து முறைப்பாட்டுக்கான வாக்கு மூலத்தனை பதிவு செய்யுமாறு பொலிசார் அங்கிருந்தவர்களிடம் தெரிவித்து சென்றுள்ளதாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் தகவல் தெரிவித்தனர்.

3499_1460161717_IMG_0163.jpg   

3499_1460161717_IMG_0176.jpg   

3499_1460161717_IMG_0184.jpg   

3499_1460161717_IMG_0124.jpg   

3499_1460161717_IMG_0118.jpg  

http://battinaatham.com/description.php?art=3499

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு நான் ஒன்றும் எழுத போவதில்லை இந்த பகுதி எங்கே இருக்கிறது செய்தி படங்கள்உன்மையா சில வேளை போட்டோ எடிட்டிங் பண்ணியிருக்கலாம் என்றும் கூட்டமைப்பை ஏன் இங்கே இழுக்க வேண்டும்  என்று கேள்வி கேட்க நெறைய பேர் இருக்குறாங்க ???

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம்கள் சம்பந்தனின் சுமந்திரனின் சொத்துக்களை ஆக்கிரமிக்கும் வரை அந்த இரண்டு ஜென்மங்களும் தமிழரை தமிழர் நிலத்தை மாற்றானுக்கு அடகு வைச்சு பதவி சுகம் அனுபவிக்கவே நிற்குங்கள்.

இந்தா அதிசியம் நிகழப் போகுது என்றார்கள்.. இதுதான் அதிசயம்.. தமிழர் நிலத்தை ஒருப்பக்கம் சிங்களவனும் இன்னொரு பக்கம் முஸ்லீமும் ஆக்கிரமிக்க விட்டுப் போட்டு இவை.. எதிர்கட்சி பதவியில் பூரண திருப்தி காண வேண்டியான்.

சர்வதேச விசாரணை போய்.. கைபிரைட் விசாரணை போய்.. காமன்வெல்த் விசாரணை போய்.. உள்ளக விசாரணை போய்.. விசாரணையே இல்லை என்று வந்து நிற்குது போர்க்குற்ற விசாரணை அது போலவே.. கூட்டமைப்பு சம் சும் ********. நிலத்தையும் தமிழர்களுக்கு இல்லை என்று ஆக்கிப் போட்டுத்தான் பாடை ஏறுங்கள். tw_angry:tw_anguished:

Edited by நியானி
பண்பற்ற சொல்லாடல் நீக்கப்பட்டுள்ளது.

6 hours ago, nedukkalapoovan said:

கூட்டமைப்பு சம் சும் *********. நிலத்தையும் தமிழர்களுக்கு இல்லை என்று ஆக்கிப் போட்டுத்தான் பாடை ஏறுங்கள். tw_angry:tw_anguished:

இவர்கள் நிலத்தை மட்டும்தான் இல்லை என்றாக்குவார்கள். 

ஆனால் சில ********* பாடை ஏற முதல்  தமிழரின் எதிர்காலத்தையே இல்லாம  கொன்னுட்டாங்களே. 

*****************

Edited by நியானி
மேற்கோளும் அதற்கான பதில் வரி ஒன்றும் தணிக்கை செய்யப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு  அடி... தமிழ் மண்ணும் பறி போகும் போது.....
அதற்கு... எதிர்த்துக்  குரல் எழுப்புவன் மட்டுமே.. தமிழன்.
அனுராதபுரத்தை ஆண்டவனும்,  கதிர்காமத்தில் இருந்தவனும், திருகோண மாமலையை.... ஆண்டவனும் தமிழன். 
இங்கு... சிலருக்கு,  இப்படியான செய்திகள் கசப்பாக இருப்பது, வியப்பாக உள்ளது.

தமிழ்.... மொழி, 7 ஆயிரம் ஆண்டு  பழமை வாய்ந்தது,  அந்த... இனத்தை... அழிக்க, தமிழனே... முன் நிற்பதா?  
கொஞ்சம் கூட.... உங்களிடம், சுய புத்தி இருக்க வேண்டாமா?
உங்களுக்கு... 30 வருடம் போராடிய.... தலைவர் பிரபாகரனை பிடிக்கவில்லை என்றால், 
அடுத்த.... இலக்கை, நீங்கள் வைத்து இருக்க வேண்டும்.  இரண்டும்.... இல்லை.
செய்வதையும் செய்து விட்டு.... பிறகு என்னத்துக்கு.... இங்கு வந்து,  ஏன்... புலம்புகின்றீர்கள். 

Edited by தமிழ் சிறி

8 minutes ago, தமிழ் சிறி said:

உங்களுக்கு... 30 வருடம் போராடிய.... தலைவர் பிரபாகரனை பிடிக்கவில்லை என்றால், 
அடுத்த.... இலக்கை, நீங்கள் வைத்து இருக்க வேண்டும்.  இரண்டும்.... இல்லை.
செய்வதையும் செய்து விட்டு.... பிறகு என்னத்துக்கு.... இங்கு வந்து,  ஏன்... புலம்புகின்றீர்கள். 

நான் என்றுமே பிரபாகரனை பிடிக்கவில்லை  என்று சொன்னதில்லை.

பிரபாகரனை பிடிக்கும், அவரது மனம் தளராத கொள்கைப்பற்று பிடிக்கும். இத்தனை ஆயிரம் தமிழர்கள் அவர் சொல் பின்னால் போனார்களே அந்த ஆளுமை பிடிக்கும்.

எனக்கு ஹிட்லரையும் பிடிக்கும், அவரது மனம் தளராத கொள்கைப்பற்றும்  பிடிக்கும். இத்தனை லட்சம் ஜெர்மனியர்கள் அவர் சொல் பின்னால் போனார்களே அந்த ஆளுமையும்  பிடிக்கும்.

ஆனால் இவர்களது கொலை வெறி, கொள்கை பிடிக்காது. இதை வரலாறு மறுபடியும் மறுபடியும் நிரூபிக்கின்றது. 

Just now, ஜீவன் சிவா said:

அதாவது பிரபாகரனும் ஹிட்லரும் ஒன்று என்று சொல்ல வருகின்றீர்கள்?

2 minutes ago, நிழலி said:

அதாவது பிரபாகரனும் ஹிட்லரும் ஒன்று என்று சொல்ல வருகின்றீர்கள்?

இல்லை. பிரபாகரனது போராட்டத்தில் நியாயம் இருந்தது. ஆனால் வழிமுறைகள்தான் தப்பு என்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஜீவன் சிவா said:

இவர்கள் நிலத்தை மட்டும்தான் இல்லை என்றாக்குவார்கள். 

ஆனால் சில ******* பாடை ஏற முதல்  தமிழரின் எதிர்காலத்தையே இல்லாம  கொன்னுட்டாங்களே. 

***********************
 
ஜீவன் புலிகளை தாமே அழித்தோம் என்று கூவும் உங்கள் ******** நண்பர்களிடம் போய் கேளுங்கள் புலிகளை அழித்தால் இப்படி ஏற்படும் என்று தெரியாதா?

Edited by நியானி
தணிக்கை

Just now, ஜீவன் சிவா said:

இல்லை. பிரபாகரனது போராட்டத்தில் நியாயம் இருந்தது. ஆனால் வழிமுறைகள்தான் தப்பு என்கிறேன்.

 இலங்கை பேரினவாதத்தின் கொலை இயந்திரமான அரச படைகளை எதிர்த்து ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடாமல் தேவாரம் பாடி, காவடி தூக்கி பிரபாகரன்  போராடி இருக்க வேண்டும் என்கின்றீர்களா?

4 hours ago, MEERA said:

ஜீவன் புலிகளை தாமே அழித்தோம் என்று கூவும் உங்கள் ******* நண்பர்களிடம் போய் கேளுங்கள் புலிகளை அழித்தால் இப்படி ஏற்படும் என்று தெரியாதா?

நல்ல பாசை ,

புலிகள் தொடங்க முதலே சுவீகரிப்பில் அரசு இறங்கிவிட்டது அது இன்றுவரை தொடருது ,

Edited by நியானி
தணிக்கை

18 minutes ago, நிழலி said:

 இலங்கை பேரினவாதத்தின் கொலை இயந்திரமான அரச படைகளை எதிர்த்து ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடாமல் தேவாரம் பாடி, காவடி தூக்கி பிரபாகரன்  போராடி இருக்க வேண்டும் என்கின்றீர்களா?

ஆயுதப் போராட்டம் பிழை என்பது எனது கருத்தில்லை. அது எமது தெரிவுமில்லை - எம் மீது திணிக்கப்பட்ட  ஒன்று. அது வெறுமனே ஒரு குழுவாதத்திற்குள் மூழ்கி வேறுபட்ட  கருத்துடையவர்களை எல்லாம் ஏற்க மறுத்து, அவர்களை துரோகி என்று டயர் போட்டு எரித்துவிட்டு எமக்கு கிடைத்த சந்தர்பங்களை எல்லாம் பாழாக்கி எமது சமுதாயத்தை நடுத் தெருவில் விட்டுவிட்டு, மறுபடியும் அவ்வழிதான் சரி என்றும், தவறுகளை ஏற்றுக் கொள்ள மறுத்து அதே வழியில் போவோம் என்று அடம் பிடிப்போர்க்கு காட்டப்பட்ட உதாரணம்தான் அது.

நிழலி

இன்றும் இங்கும் அது மாறவில்லை என்பது இப்பதிவை பார்க்கையில் புரிகிறது. தமிழருக்கான நீலிக்கண்ணீர் தொடர்கிறது.

5 hours ago, MEERA said:

ஜீவன் புலிகளை தாமே அழித்தோம் என்று கூவும் உங்கள் ******  நண்பர்களிடம் போய் கேளுங்கள் புலிகளை அழித்தால் இப்படி ஏற்படும் என்று தெரியாதா?

அதே புலிகளிடம் உங்களால் கேட்டிருக்க  முடியுமா - மற்ற  இயக்கங்களை அழித்தால் தமிழருக்கு கேடுதான் என்று. 

Edited by நியானி
மேற்கோள் தணிக்கை

8 minutes ago, ஜீவன் சிவா said:

ஆயுதப் போராட்டம் பிழை என்பது எனது கருத்தில்லை. அது எமது தெரிவுமில்லை - எம் மீது திணிக்கப்பட்ட  ஒன்று. அது வெறுமனே ஒரு குழுவாதத்திற்குள் மூழ்கி வேறுபட்ட  கருத்துடையவர்களை எல்லாம் ஏற்க மறுத்து, அவர்களை துரோகி என்று டயர் போட்டு எரித்துவிட்டு எமக்கு கிடைத்த சந்தர்பங்களை எல்லாம் பாழாக்கி எமது சமுதாயத்தை நடுத் தெருவில் விட்டுவிட்டு, மறுபடியும் அவ்வழிதான் சரி என்றும், தவறுகளை ஏற்றுக் கொள்ள மறுத்து அதே வழியில் போவோம் என்று அடம் பிடிப்போர்க்கு காட்டப்பட்ட உதாரணம்தான் அது.

தவறுகளை ஏற்றுக் கொள்ளாமை, மாற்றுக் கொள்கைகளை மதிக்காமை, குறைந்தபட்ச சனநாயக கோட்பாடுகளைக் கூட விரும்பாமை, மாற்று கருத்தாளர்களை கொன்று குவித்தமை, துரோகி என்று பட்டம் கொடுத்தமை என்பது பிரபாகரனில் மட்டுமே இருந்த குறைகளா அல்லது ஒட்டு மொத்த ஈழத் தமிழ் இயக்கங்கள் மட்டும் ஈழத் தமிழர்கள் எம்மிடம் எல்லாம் நிறைந்து இருக்கும் விடயங்களா?

அது பிரபாகரனிடம் மட்டுமே என்றால், நீங்கள் மேற் சொன்ன விடயங்களை செய்யாத இயக்கம் ஈழத் தமிழ் மக்களிடம் ஏதும் தோற்றம் பெற்றதா?

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவன் புலிகளை எதிர்த்தது  Telo மட்டும் தான். மற்ற இயக்கங்கள் உட்கட்சிப் பூசலால் புலி அடிக்க வந்த போது தாமாகவே ஓடினர். 

மற்ற இயக்கங்கள் இருந்திருந்தால் போராட்டத்திற்கு பின்னடைவு தவிர நன்மை அல்ல. 

புலிகளால் அடித்து விரட்டப்பட்ட இயக்கங்கள் ஒற்றுமையாக இருந்தார்களா இல்லையே.  

12 minutes ago, ஜீவன் சிவா said:

நிழலி

இன்றும் இங்கும் அது மாறவில்லை என்பது இப்பதிவை பார்க்கையில் புரிகிறது. தமிழருக்கான நீலிக்கண்ணீர் தொடர்கிறது.

அதே புலிகளிடம் உங்களால் கேட்டிருக்க  முடியுமா - மற்ற  இயக்கங்களை அழித்தால் தமிழருக்கு கேடுதான் என்று. 

2 minutes ago, MEERA said:

மற்ற இயக்கங்கள் இருந்திருந்தால் போராட்டத்திற்கு பின்னடைவு தவிர நன்மை அல்ல. 

எப்படி போராட்டத்திற்கு பின்னடைவு என்று விளக்க முடியுமா?

உட்கட்சி பூசல் மோசமாக இருந்த இயக்கங்களில் ஒன்று புலிகள். விக்ரர், கிட்டு என்று தொடங்கி மாத்தையாவையும் கடந்து, கருணா என்று பல உதாரணங்கள்.

7 minutes ago, நிழலி said:

இன்று யாழில் இருந்து புலிகளுக்கு மாறாக கருத்தெழுதும் நான் இதை 2009ற்கு முன்னர் செய்திருக்க முடியுமா?
மற்ற இயக்கங்களை அழித்துவிட்டு தாமே விடுதலை வீரர்கள், தாமே ஏகப் பிரதிநிதிகள் மற்றவர்கள் துரோகிகள் என்பவர்கள் மீதானதுதான் எனது  குற்றச்சாட்டு. தமக்கு மாற்றுக்கருத்து இருக்கக்கூடாதென்று அழித்தவர்களிடம்தான் மக்களை பாதுகாக்க வேண்டிய தார்மீக கடமை உள்ளது. சகல வழிகளையும் அடைத்துவிட்டு எம்மை அம்போ என்று விட்டவர்கள்தான்  விமர்சிக்கப்பட  வேண்டியவர்கள். 

என் கேள்விக்கு நீங்கள் இன்னும் பதில் சொல்லவில்லை

//

தவறுகளை ஏற்றுக் கொள்ளாமை, மாற்றுக் கொள்கைகளை மதிக்காமை, குறைந்தபட்ச சனநாயக கோட்பாடுகளைக் கூட விரும்பாமை, மாற்று கருத்தாளர்களை கொன்று குவித்தமை, துரோகி என்று பட்டம் கொடுத்தமை என்பது பிரபாகரனில் மட்டுமே இருந்த குறைகளா அல்லது ஒட்டு மொத்த ஈழத் தமிழ் இயக்கங்கள் மட்டும் ஈழத் தமிழர்கள் எம்மிடம் எல்லாம் நிறைந்து இருக்கும் விடயங்களா?

அது பிரபாகரனிடம் மட்டுமே என்றால், நீங்கள் மேற் சொன்ன விடயங்களை செய்யாத இயக்கம் ஈழத் தமிழ் மக்களிடம் ஏதும் தோற்றம் பெற்றதா?

//

புலிகளின் இடத்தில் புளொட்டோ அல்லது ஈபியோ இருந்திருந்தால் இதில் மாற்றம் இருந்திருக்காது.

--------------------

3 minutes ago, நிழலி said:

அது பிரபாகரனிடம் மட்டுமே என்றால், நீங்கள் மேற் சொன்ன விடயங்களை செய்யாத இயக்கம் ஈழத் தமிழ் மக்களிடம் ஏதும் தோற்றம் பெற்றதா?

உங்கள் கேள்விக்கு பச்சை போட்டதே - விடைதானே 

இல்லை  - அடித்து சொல்வேன் இல்லை -  இது எமது சமுதாய சீர்கேடு . 

2 minutes ago, ஜீவன் சிவா said:

உங்கள் கேள்விக்கு பச்சை போட்டதே - விடைதானே 

இல்லை  - அடித்து சொல்வேன் இல்லை -  இது எமது சமுதாய சீர்கேடு . 

இதுதான் ஜீவன் யதார்த்தம்

பிரபாகரன் எங்கள் சமூகத்தின் பிம்பம். அவரில் குறை கண்டு பிடிப்பவர்களும் அவரை குறை சொல்பவர்களும் பிரபாகரனின் கூறுகளை கொண்டவர்களே. வெறுமனே அவரை குறை சொல்லியும் குற்றம் சொல்லியும் நாம் செய்வது எல்லாம் வெறும் தப்பித்தல் மட்டுமே. 

விடுதலை போராட்டத்தினை மீள் விமர்சனம் செய்வது என்பது தனியே பிரபாகரனையும், விடுதலைப் புலிகளையும் மீள் விமர்சனம் செய்வதில் முடிந்து விடுகின்றது. ஆனால் அதையும் தாண்டி எம் ஒட்டு மொத்த சமூகத்தின் மீதான விமர்சனமாக பார்க்கும் போதே அது எட்ட வேண்டிய இலக்கை கொஞ்சமேனும் எட்டும்.

9 minutes ago, நிழலி said:

பிரபாகரன் எங்கள் சமூகத்தின் பிம்பம். அவரில் குறை கண்டு பிடிப்பவர்களும் அவரை குறை சொல்பவர்களும் பிரபாகரனின் கூறுகளை கொண்டவர்களே. வெறுமனே அவரை குறை சொல்லியும் குற்றம் சொல்லியும் நாம் செய்வது எல்லாம் வெறும் தப்பித்தல் மட்டுமே. 

இல்லை இதனையும் மீறி விடுதலைப் புலிகள் விமர்சிக்கப் படவேண்டும். அப்போதுதான் நாம் ஏன் தோற்றோம், 30 வருட போராட்டம் ஏன் இவ்வாறு முடிந்ததது  என்பது பற்றிய புரிதல் கிடைக்கும்.

நன்றி நிழலி. " விடுதலை போராட்டத்தினை மீள் விமர்சனம் செய்வது என்பது தனியே பிரபாகரனையும், விடுதலைப் புலிகளையும் மீள் விமர்சனம் செய்வதில் முடிந்து விடுகின்றது. ஆனால் அதையும் தாண்டி எம் ஒட்டு மொத்த சமூகத்தின் மீதான விமர்சனமாக பார்க்கும் போதே அது எட்ட வேண்டிய இலக்கை கொஞ்சமேனும் எட்டும்."  இதற்கு மேல் இத் திரியில் எழுத ஒண்டுமில்லை.

ஆரியனும் சிங்களவனும் போட்ட எலும்புத்துண்டை முகர்ந்துகூட பார்க்காதவன் தான் எம்தலைவன்....... சும்மா கருத்தெழுதிறம் என்ற பெயரில் கண்டபாட்டுக்கதைக்ககூடாது. 

தமிழன் என்று ஒருவன் உலகில் இருப்பதும்.....தமிழர் மீது கொஞ்சமேதும் எதிரி பயப்பயப்படுவதும் எம் தலைவரால்தான் என்பதை முதலில் புரிந்து கொள்ளனும்.

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன் காலத்தில் ஹிஸ்புல்லா.. எங்கோ பதுங்கிக் கிடந்தவர். எத்தனையோ கெட்டதுகளை தமிழர்கள் மீது இவரும் இவரது ஆட்களும் செய்ய விளைந்த போதும்.. புலிகள் மட்டுமே அரணாக நின்றார்கள். 

இன்று.. அந்த அரண் இல்லை என்றதும்....  நிறம் மாறும் நிலையற்ற சிலர்... தமிழ் தலைவர்கள் என்ற முத்திரையோடு வலம் வரும் நிலையில்.. பதவிக்கு மொத்த இனத்தையும் தாரைவார்க்கக் கூடியதுகள் முன்னிலையில்... தமிழர்களின் அனைத்தையும் முஸ்லீம் மயமாக்கத் துடிக்கிறார்..இந்த ஹிஸ்புல்லா.

இவரிம் கடந்த காலம் மிக அசிங்கமானது. அது இன்று வெளிப்படையாக அரங்கேறுகிறது கிழக்கில். ஆனால் இதனை தமிழ் மக்கள் எவ்வளவுக்கு இன்னும் இன்னும் சகித்துக் கொண்டு.. இவர்களின் ஆட்டங்களுக்கு இடமளிப்பார்கள் என்று தெரியவில்லை. பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு.

இன்றுள்ள தமிழ் தலைமைகள் என்போரை நம்பினால்.. நாடற்ற தமிழன்.. நிலமற்றவனும் ஆவது உறுதி. tw_anguished::rolleyes:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.