Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போரின்போது இருந்த நிலை இலங்கையில் இன்னமும் மாறவில்லை! குற்றவாளிகள் தப்புகிறார்கள்!! சாடுகிறது அமெரிக்கா!

Featured Replies

போரின்போது இருந்த நிலை இலங்கையில் இன்னமும் மாறவில்லை! குற்றவாளிகள் தப்புகிறார்கள்!! சாடுகிறது அமெரிக்கா!
 
 
போரின்போது இருந்த நிலை இலங்கையில் இன்னமும் மாறவில்லை! குற்றவாளிகள் தப்புகிறார்கள்!! சாடுகிறது அமெரிக்கா!
இலங்கையில் ஆயுத மோதல்கள் இடம்பெற்ற காலத்திலும் அதன் பின்னரான காலத்திலும் சித்திரவதைகள், பாலியல் வன்புணர்வுகள், ஊழல், மனித உரிமைகள் மீறலில் ஈடுபட்டோர் தண்டனையில் இருந்து தப்புகின்றனர் என அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.
 
இலங்கையின் மனித உரிமைகள் நடைமுறைகள் 2015' என்ற அறிக்கையை அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் நேற்று வெளியிட்டது. அதிலேயே மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டவை வருமாறு,
கடந்த ஆண்டில், சிவில் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் துன்புறுத்தப்படுதல், தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அனுதாபிகள் எனக் கருதப்படுவோர் கண்டபடி கைது செய்யப்படுதல், தடுத்து வைக்கப்படுதல், சித்திரவதை செய்யப்படுதல், வல்லுறவுக்கு உட்படுத்தப்படுதல், இலங்கை படைகள் மற்றும் பொலிஸார் பாலியல் மற்றும் பாலின அடிப்படையில் வன்முறைகளில் ஈடுபடுகின்றனர். 
 
சிறைகளில் அதிகளவிலானோர் அடைக்கப்பட்டுள்ளமையால் ஏற்பட்டுள்ள இட நெருக்கடி மற்றொரு பாரிய மனித உரிமைப் பிரச்சினையாகும். உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களின் மனித உரிமைகள் இன்னமும் பிரச்சினையாக உள்ளன. பெண்கள், குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுவதும் தொடர்கிறது. 
 
ஆயுத மோதல்களின் போதும், மோதல்களின் பின்னரும், குற்றமிழைத்தவர்கள், குறிப்பாக சித்திரவதைகள், பாலியல் வன்முறைகள், ஊழல், மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள், தண்டனையில் இருந்து தப்பித்துக் கொள்ளும் நிலை பரந்தளவில் தொடர்கிறது. 
 
இலங்கை அரசாங்கம், ஒரு தொகையான இராணுவம், பொலிஸார் மற்றும் ஏனைய அதிகாரிகளை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொலைகள், கடத்தல்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்களின் கொலைகள் உள்ளிட்டவற்றுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில், பழைய மற்றும் புதிய வழக்குகளில் கைது செய்து தடுத்து வைத்துள்ளது என்றும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 
 
அதேவேளை, இந்த அறிக்கையில், சுதந்திரமாக நடத்தப்பட்ட தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் பதவியில் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள இராஜாங்கத் திணைக்களம் இலங்கை அரசாங்கத்தின் பல்வேறு நடவடிக்கைகளை சுட்டிக்காட்டி பாராட்டியுள்ளது.
 
ஓமந்தை சோதனைச்சாவடி மூடப்பட்டமை, இலங்கை ஜனாதிபதியின் அதிகாரங்களை மட்டுப்படுத்தும், 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தம், ஜெனிவா தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கியமை, ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர்கள் மற்றும் குழுவினர், ஐ.நா மனித உரிமை ஆணையாளரை வரவேற்றமை, தேசியநல்லிணக்கத்துக்கான செயலகம் ஆரம்பிக்கப்பட்டமை, தேசிய கலந்துரையாடல் அமைச்சை உருவாக்கியமை, காணாமற்போனோருக்கு, காணாமற்போனவர் சான்றிதழை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் அளித்தமை, பல்வேறு புலம்பெயர் தமிழர் அமைப்புகள், தனிநபர்கள் மீதான தடையை நீக்கியமை உள்ளிட்ட விடயங்களில் இலங்கை அரசாங்கத்தின் நகர்வுகளை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அறிக்கை பாராட்டியுள்ளது. 
 
அத்துடன் இலங்கை படைகள், காத்திரமான முறையில் சிவில் அதிகாரிகளால் நிர்வகிக்கப்படுகின்றனர் என்றும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 
 
  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையையும் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டும் அமெரிக்கா........... :( :shocked:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நவீனன் said:

கடந்த ஆண்டில், சிவில் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் துன்புறுத்தப்படுதல், தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அனுதாபிகள் எனக் கருதப்படுவோர் கண்டபடி கைது செய்யப்படுதல், தடுத்து வைக்கப்படுதல், சித்திரவதை செய்யப்படுதல், வல்லுறவுக்கு உட்படுத்தப்படுதல், இலங்கை படைகள் மற்றும் பொலிஸார் பாலியல் மற்றும் பாலின அடிப்படையில் வன்முறைகளில் ஈடுபடுகின்றனர்

இது கடந்த ஆண்டு 

1 hour ago, நவீனன் said:

அத்துடன் இலங்கை படைகள், காத்திரமான முறையில் சிவில் அதிகாரிகளால் நிர்வகிக்கப்படுகின்றனர் என்றும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

இது இந்த ஆண்டு 

சர்ட்டிபிகேட் தந்திருப்பது நாட்டாமை .....


ஹி ....ஹி நாங்கள் அப்பவே சொன்னோம் ....அறிக்கையை பார்த்தால் அரிவரி படிக்காதாவனுக்கு கூட பத்திக்கொண்டு தான் வரும் ஆனால் ஒரு மண்ணும் புடுங்கமுடியாது ....எங்கே மேற்கோள் காட்டும் பார்ட்டிகள் 
ஒன்றும் இங்கே ஆஜராக காணோம்..அறிக்கையின் கடைசி லைனை பார்த்தவுடன் இடத்தை காலிபண்ணிட்டினம் போல 

 

  • கருத்துக்கள உறவுகள்

பிடல் காஸ்ரோ பயங்கரவாதி.. அவர் தம்பி ஜனநாயகவாதி.. அமெரிக்க நிலைப்பாடுகள் இதுதான்.

அமெரிக்கா சொல்வது எல்லாம் ஏற்புடையது என்றால்.. உலகில் ஏன் இவ்வளவு அரசு சாரா அமைப்புக்கள்.. புலனாய்வு அமைப்புக்கள்.. மனித உரிமை அமைப்புக்கள் இயங்குகின்றன.

அமெரிக்க ராஜாங்க திணைக்கள அறிக்கை என்பது முழுக்க முழுக்க.. அமெரிக்க நலன் சார்ந்த அறிக்கை. தமிழ் மக்கள் நலன் சார்ந்த அறிக்கையல்ல. அதில் பாஞ்ச் அண்ணா சொன்னது போல.. பிள்ளையைக் கிள்ளி விட்டு தாலாட்டி தமது தேவைகளை அமெரிக்கா தீர்த்துக் கொள்ளும். அதனை நோக்கியே 2015 ஆட்சி மாற்றம் பற்றி அமெரிக்கா கடுமையா பேசியும் செயற்பட்டும் வந்தது. இப்ப அந்த தொனி அடங்குது.. காரணம்.. அமெரிக்க தேவைகள் நிறைவேறி வரும் அறிகுறிகள் அதற்கு தென்படுவதால்.

ஆனால்.. மைத்திரி அரசு.. அமெரிக்க கட்டுப்பாட்டை மீறி சீனா பக்கம் கடுமையாகச் சாய்ந்தால்.. அடுத்த அறிக்கை இதனை விட காரமாக வரும். அப்ப தமிழர்களுக்கு புதிசா பிரச்சனை வந்தது என்றில்லை. இருக்கிற ஆயிரம்  பிரச்சனையில் அமெரிக்கா சொல்லாமல் விட்டது சொல்லப்படுகுது என்றாகும். அவ்வளவும் தான்.

ஆனால்.. country guidance  அப்படி அல்ல. அது குடிவரவு குடியகழ்வு சம்பந்தப்பட்ட மக்களுக்கான சட்டத்துறைக்கான அறிவுறுத்தல். அந்த வகையில்.. அது கூடிய அளவு உண்மை பேச வாய்ப்புள்ளதோடு பல்வேறு அரசு சாரா அமைப்புக்களின் மனித உரிமை அமைப்புக்கள்.. ஊடகங்களின்.. ஆய்வுகள் கள நிலவர அறிக்கைகள் அதில் ஆராய்ந்து.. சேர்க்கப்படும். 

சிலருக்கு இந்த வேறுபாடுகளை உள்வாங்கும் சக்தி இல்லை. என்ன செய்வது........................ சொறீலங்கா சொக்கத் தங்கம் என்று சொல்லனுன்னு அவை நினைக்கினம். அது இன்னும் கறள் கட்டிய இரும்பு தான்.. தமிழர்களைப் பொறுத்த வரை. tw_blush:tw_warning:

எல்லாம் போர்ட் சிட்டி ப்ராஜெக்ட் சீனாவுக்கு தொடர வழங்கியதன் எதிரொலி தான் ....மற்றும் படி ஒன்றும் இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

சீனா போர்ட் சிட்டி போடப்போயினம்
இந்தியா பாலம் போடப்போயினம்
அமெரிக்கா என்ன போடப்போயினமாம்?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பிரபாதாசன் said:

எல்லாம் போர்ட் சிட்டி ப்ராஜெக்ட் சீனாவுக்கு தொடர வழங்கியதன் எதிரொலி தான் ....மற்றும் படி ஒன்றும் இல்லை

அதே....

எப்படி இவர்களால்  இப்ப தொடர்ந்து........???

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.