Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளின் பாடலைக் கேட்டதாக குருநகர் இளைஞர் கைது! - 14 நாட்கள் விளக்கமறியல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
புலிகளின் பாடலைக் கேட்டதாக குருநகர் இளைஞர் கைது! - 14 நாட்கள் விளக்கமறியல்
[Thursday 2016-04-21 19:00]
தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் பாடல்களை கேட்டு ரசித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் யாழ்ப்பாணம், குருநகர் பகுதியில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று சிவில் உடையில் சென்ற பொலிஸாரினாலேயே 25 வதுடைய குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட இளைஞன் இன்று மாலை யாழ் நீதவான் நீதிமன்ற நீதிபதியின் உத்தியோகப்பூர்வ வாசஸ்தலத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையிலேயே எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=155950&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

மைத்திரி ஆட்சியில் கருத்துச் சுதந்திரம் கொடிகட்டிப் பறக்குது என்று பிரித்தானியா வேற அறிக்கை விடுகுது..??! கொடுமைடா... என்ன உலகமப்பா இது. ஆதிக்க சக்திகள் ஒருவருக்கு ஒருவர் நல்லா முதுகு சொறிவார்கள் போல. :rolleyes:tw_angry:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனியென்ன...தேடுதல் வேட்டை எண்டு சொல்லி ஊர் ஊராய் திரிஞ்சு பெடியளை புடிச்சு உள்ளுக்கை போட வேண்டியதுதான் 

  • கருத்துக்கள உறவுகள்

பிரச்சினை வரும் என தெரிந்தும் ஏன் இவர் இதனை செய்தார். வேண்டும் என்றே இதனை செய்தும் இருக்காலம். ஒருவேளை
வெளி நாட்டில் அசூல் அடிப்பதற்காகவும் இவர் இதனை செய்து இருக்கலாம்.

Edited by colomban

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, colomban said:

பிரச்சினை வரும் என தெரிந்தும் ஏன் இவர் இதனை செய்தார். வேண்டும் என்றே இதனை செய்தும் இருக்காலம். ஒருவேளை
வெளி நாட்டில் அசூல் அடிப்பதற்காகவும் இவர் இதனை செய்து இருக்கலாம்.

இங்கு பல முஸ்லீம்கள்... புலிகளை சாட்டி, 
25 வருடத்துக்கு மேல் சுமூகமாக வாழ்கின்றார்கள். 
அந்த.... நினைப்பு, கொழும்பானுக்கும், வந்திட்டுதோ....
 
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சிறி 

நாடு இப்பொழுது இருக்கும் நிலையில் இவர் ஏன் இந்த பாடல்களை கேட்கின்றார்? இவருக்கு இது தேவையா? இதனுடைய விளைவுகள் என்னவென்பது இவருக்கு முன்பே தெரியும். 

அங்கே தற்கொலை அங்கி கண்டுபிடிக்கப்பட்டது, இங்கே இந்த ஜங்கி கண்டுபிடிக்கப்பட்டது என அப்பவிகளை அனியாயமக பிடித்துக் கொண்டு செல்லும் நேரத்தில் இவர் இப்படி செய்தது சந்தேகத்துக்கிடமாகவே தெரிகின்றது. மேலும் இவாரல் இன்னும் பல அப்பவிகள் கைது செய்யாப்படலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, colomban said:

இப்ப நாடு இருக்கும் நிலையில் எண்டால்?????? என்ன மாதிரி இருக்கெண்டு விளக்கமாய் ஒருக்கால் சொல்லுறியளே?
ஏனெண்டால்  அங்கை இப்ப சென்றியும் இல்லையாம்....மண்மூட்டையும் இல்லையாம்......செக்கிங் இல்லையாம். ஆமி எல்லாரோடையும் கை குடுத்து கதைக்கிறானம்....அங்கை பிரச்சனை முடிஞ்சுது...அவங்களையும் முடிச்சாச்சு எண்டு இஞ்சை ஒருசில சனம் சீட்டி அடிச்சுக்கொண்டு திரியுது....நீங்கள் என்னடாவெண்டால் நாடு இருக்கும் நிலையில் எண்டு சொல்லி வெருட்டுறியள்:mellow:

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை சட்டத்தின் பிரகாரம் புலிகள் பயங்கரவாதிகள். எனவே அவர்கள் தொடர்பான பொருட்களை வைத்திருப்பது குற்றம்.

அரசியல்வாதிகள் தமது சமையலுக்கு ஏற்றவாறு புலிகளை கூட்டியோ குறைத்தோ பயன்படுத்தலாம் என்பது எழுதாத விதி. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, MEERA said:

இலங்கை சட்டத்தின் பிரகாரம் புலிகள் பயங்கரவாதிகள். எனவே அவர்கள் தொடர்பான பொருட்களை வைத்திருப்பது குற்றம்.

அரசியல்வாதிகள் தமது சமையலுக்கு ஏற்றவாறு புலிகளை கூட்டியோ குறைத்தோ பயன்படுத்தலாம் என்பது எழுதாத விதி. 

நல்லதொரு கருத்தும் வசனநடையும்.... tw_thumbsup:

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, colomban said:

தமிழ்சிறி 

நாடு இப்பொழுது இருக்கும் நிலையில் இவர் ஏன் இந்த பாடல்களை கேட்கின்றார்? இவருக்கு இது தேவையா? இதனுடைய விளைவுகள் என்னவென்பது இவருக்கு முன்பே தெரியும். 

அங்கே தற்கொலை அங்கி கண்டுபிடிக்கப்பட்டது, இங்கே இந்த ஜங்கி கண்டுபிடிக்கப்பட்டது என அப்பவிகளை அனியாயமக பிடித்துக் கொண்டு செல்லும் நேரத்தில் இவர் இப்படி செய்தது சந்தேகத்துக்கிடமாகவே தெரிகின்றது. மேலும் இவாரல் இன்னும் பல அப்பவிகள் கைது செய்யாப்படலாம்.

நீங்கள் சொல்வது உண்மைதான் 
ஆனால் இது சாதாரண விடயமாக அங்கே இருக்கிறது.
இப்போ தமிழர்கள் போல் புலானாய்வு பொலிசார் திரிகிறார்கள் அவர்களிடம்தான் 
இவர் மாட்டி இருக்கிறார்.
மாட்டுவேன் என்றும் செய்திருக்க மாட்டார் 
இன்னொரு விடயம் தொடர்ந்து கேட்பவராகவும் இருந்திருக்க மாட்டார்.
தொடர்ந்து கேட்பவர்கள் எச்சரிக்கையாக இருப்பார்கள்.

நாமும் முன்னைய நாட்களில் கெலி பொம்பர் அடித்தால் உடனே சையிகிளை எடுத்துகொண்டு 
அந்த இடத்திற்கு விரைந்து செல்வோம். ஒரு வேலை மீண்டும் திரும்பி வந்து அடித்தால் ?
பளை சந்தையில் அப்படி ஒருமுறை நடந்து மயிர் இழையில் தப்பினேன். 
இருந்து அந்த சூழலில் அறிவு வேலை செய்வது குறைவு. இப்போது பார்க்கும் போது லூசுத்தனமாக இருக்கலாம்.
காயபாட்டவர்கள் தூக்குவது ஆஸ்பத்திரி அனுப்பவது எல்லாம் ரிஸ்கான விடயமாகவே இருந்திருக்கிறது.

இங்கிருக்கும் நாம் எப்படி மாட்டாது வாழ்வது என்று யோசிக்கிறோம்.
அவர்கள் வாழ்கையை இயல்பாக வாழ்கிறார்கள்.
எம்மிலும் இப்படி ஏதாவது ஒரு குறை இப்போதும் இருக்கும் அதை வேறு ஒரு இடத்தில் 
இருப்பவர் இருந்து பார்த்து சொன்னால்தான் புரியும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.