Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

12 வயது மாணவியை பாலியல் வல்லுறவிற்குட்படுத்திய மூவர் கைது.!

Featured Replies

1393843296Untitled-1.jpg

12 வயது பாடசாலை மாணவியை பாலியல் வல்லுறவிற்குட்படுத்திய மூவரை காத்தான்குடி பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி கே.ஜெயசீலன் தெரிவித்தார்.

இச்சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.  

மட்டக்களப்பு மாநகர சபை பிரதேசத்திற்குட்பட்ட திருச்செந்தூர் கடற்கரை பிரதேசத்திற்கு குறித்த சிறுமியை அழைத்துச்சென்று பாலியில் வல்லுறவிற்குட்படுத்தியுள்ளதாக தெரியவருகிறது.

சிறுமியை பாலியல் வல்லுறவிற்குட்படுத்திய குற்றத்தின் பேரில் ஒருவரும் அவருக்கு உதவிய குற்றச்சாட்டின்பேரில் இருவருமாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.

பாடசாலையில் ஏழாம் ஆண்டில் கல்வி பயிலும் இச்சிறுமி தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர்கள் மட்டக்களப்பு நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

http://www.virakesari.lk/article/5518

  • கருத்துக்கள உறவுகள்

காத்தான்குடி.. காடைகளின் குடியாக விட்டதோடு.. அங்கு காடைகளுக்கு மதச் சாயம் பூசி பாதுகாப்பும் அளிக்கப்படுகிறது. 

வடக்குக் கிழக்கில் சிங்கள இராணுவக் காடைகள் செய்வது போதாதென்று.. இப்போ முஸ்லீம் காடைகளும்.. தமிழ் பெண்களை சீரழிப்பதில் தீவிரமாகி விட்டன. 

இதெல்லாம்.. உலகின் கண்களுக்கு.. குற்றமாகவோ.. இனச்சுத்திகரிப்பின்.. இன அழிப்பின்.. காரணியாகவோ தெரியாது.  சனநாய் அக வெளியில் நிகழும் மனிதர்களுக்கு எதிரான.. ஒரு சின்னச் சம்பவம் ஆகும்...?! tw_angry::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர் கண்டபடி காத்தான்குடியாரைபத்தி எழுதாதையுங்கோ, உங்கள் வீடுதேடி வில்லங்கம்வரும் (ஐஎஸ் ஐஸ்) காரணம் அவர்களது வலைப்பின்னல் மிகவும் ஆழமாகழானைத்து இடங்களிலும் வேரூன்றியுள்ளது.அல்லது கவிஞர் ஜெயபாலன் கோவிப்பார் முஸ்லீம்கள் தமிழர் மத்தியில் விசத்தை விதைக்கிறியள் என.

  • கருத்துக்கள உறவுகள்

இது முஸ்லிம் இனத்தவரால் செய்பட்டது என்று எப்படி தெரியும். 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, MEERA said:

இது முஸ்லிம் இனத்தவரால் செய்பட்டது என்று எப்படி தெரியும். 

காத்தான்குடியில்.. வேறு மதத்தவர்கள் வாழ இடமளிக்கப்பட்டிருக்காங்கோ..??! அங்கு வேறு மதத்தினர் போய் ஒளிந்திருக்க இடமளிப்பிருக்காங்கோ..??! காத்தான்குடியைப் பற்றி அறியாத மக்களிடம் கேட்டாலும் பறுவாயில்லை....... 

முன்னரும் இதே போன்ற ஒரு செய்தியில் (கல்முனைச் சம்பவம்) இதே போன்ற ஒரு கேள்வியை எழுப்பினீர்கள்..

பின்னர் அங்கு சம்பவத்தில் சம்பந்தப்பட்ட ஆளைக் கைது செய்த பொலிஸ் அதிகாரியே இன வன்முறைகளை தூண்டும் என்று கருதி தான் உடனடியாக சம்பவத்துடன் சம்பந்தட்ட முஸ்லீம் நபரை கைது செய்ததாகச் சொன்னார். நீங்கள் அப்போ கப் சிப் ஆகிவிட்டீர்களே...??! 

சந்தேகப்படலாம்.. ஆனால் வெளிப்படை உண்மைகளை மறைக்க முற்படக் கூடாது. அது குற்றவாளிகளுக்கு இன அழிப்பாளர்களுக்கு தான் கூடிய வசதி.. செய்து கொடுக்கும்.:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் எழுந்த மாத்திரத்தில் நாம் கதைத்து விட்டு போக்க்கூடாது. குற்றவாளி யார் என தெரியாமல் ஓர் இனத்தை  குறை சொல்வது எனக்கு சரியாகப்படவில்லை. 

நீங்கள் குறிப்பிட்ட மற்றய திரி எனக்கு ஞாபகத்தில் இல்லை,

23 minutes ago, nedukkalapoovan said:

நெடுக்ஸ் இது தமிழ் பிரதேசம் திருச்செந்தூர் கல்லடி அருகில் உள்ளது 

இந்த சம்பவம் முஸ்லிம் நபர்களால் ஏற்படுத்தப்பட்டிருந்தால் இந்த  செய்தி இன்னும் ருசிகரமான முறையில் எழுதபட்டிருக்கும் ஆகையால் இது நம்ம காவாலிகளாக இருக்க கூடும் 

இது காத்தான்குடி பொலிசாரின் விசாரணை பிரதேசத்திற்கு உட்பட்டது என நினைக்கிறேன் அவர்கள் விசாரணை செய்கிறார்கள். 

7 hours ago, MEERA said:

இது முஸ்லிம் இனத்தவரால் செய்பட்டது என்று எப்படி தெரியும். 

4 hours ago, nedukkalapoovan said:

காத்தான்குடியில்.. வேறு மதத்தவர்கள் வாழ இடமளிக்கப்பட்டிருக்காங்கோ..??! அங்கு வேறு மதத்தினர் போய் ஒளிந்திருக்க இடமளிப்பிருக்காங்கோ..??! காத்தான்குடியைப் பற்றி அறியாத மக்களிடம் கேட்டாலும் பறுவாயில்லை....... 

முன்னரும் இதே போன்ற ஒரு செய்தியில் (கல்முனைச் சம்பவம்) இதே போன்ற ஒரு கேள்வியை எழுப்பினீர்கள்..

பின்னர் அங்கு சம்பவத்தில் சம்பந்தப்பட்ட ஆளைக் கைது செய்த பொலிஸ் அதிகாரியே இன வன்முறைகளை தூண்டும் என்று கருதி தான் உடனடியாக சம்பவத்துடன் சம்பந்தட்ட முஸ்லீம் நபரை கைது செய்ததாகச் சொன்னார். நீங்கள் அப்போ கப் சிப் ஆகிவிட்டீர்களே...??! 

சந்தேகப்படலாம்.. ஆனால் வெளிப்படை உண்மைகளை மறைக்க முற்படக் கூடாது. அது குற்றவாளிகளுக்கு இன அழிப்பாளர்களுக்கு தான் கூடிய வசதி.. செய்து கொடுக்கும்.:rolleyes:

இந்த சம்பவம் பற்றி முழுவதும் அறிந்த பிறகு மேலதிக தகவல்கள் தருகிறேன் 

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, nedukkalapoovan said:

காத்தான்குடி.. காடைகளின் குடியாக விட்டதோடு.. அங்கு காடைகளுக்கு மதச் சாயம் பூசி பாதுகாப்பும் அளிக்கப்படுகிறது. 

வடக்குக் கிழக்கில் சிங்கள இராணுவக் காடைகள் செய்வது போதாதென்று.. இப்போ முஸ்லீம் காடைகளும்.. தமிழ் பெண்களை சீரழிப்பதில் தீவிரமாகி விட்டன. 

இதெல்லாம்.. உலகின் கண்களுக்கு.. குற்றமாகவோ.. இனச்சுத்திகரிப்பின்.. இன அழிப்பின்.. காரணியாகவோ தெரியாது.  சனநாய் அக வெளியில் நிகழும் மனிதர்களுக்கு எதிரான.. ஒரு சின்னச் சம்பவம் ஆகும்...?! tw_angry::rolleyes:

அண்ணை ....சும்மா கண்டபடிக்கு எழுதாதையுங்கோ .....
உந்த பிரதேசம் காத்தன்குடியிலிருந்து நியாயமான தூரத்தில் உள்ளது ......ஒருகாலத்தில் எனது நெருங்கிய உறவுகள் குடியிருந்தார்கள் அடிக்கடி சென்றும் வந்திருக்கிறேன். கல்லடிப்பாலத்திட்கு சற்று முதலில் உள்ளதால் காத்தான்குடி போலிஸ் நிலைய கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது ...
முஸ்லிம்கள் இந்த இடத்திற்க்கு  உள்ள வந்து இந்த சித்து விழையாட்டு காட்டுவது அவ்வளவு இலகு இல்லை...கடலோரமாக இருப்பதால்
சுனாமியில் அதிக இழப்பு சந்தித்த இடம் ....கொஞ்ச தொலைவு போனால் சவுக்கு தோப்பு வரும் அது இப்படியான கில்மாக்களுக்கு ஏற்ற இடம் 
அடிக்கடி  ஜோடி .ஜோடியாக  ஒதுங்குவார்கள். இதை  நிச்சயமாக நம்மடை கழுதையல் தான் பண்ணியிருக்கு ....

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, அக்னியஷ்த்ரா said:

 இதை  நிச்சயமாக நம்மடை கழுதையல் தான் பண்ணியிருக்கு ....

2 hours ago, முனிவர் ஜீ said:

ஆகையால் இது நம்ம காவாலிகளாக இருக்க கூடும் 

எங்கடை ஆக்கள் செய்திருந்தால்... திரியை, டக்கெண்டு மூடி விடுங்கோ.... அவமானமாய் இருக்கு. SmileySmiley

  • கருத்துக்கள உறவுகள்

ம் நான் முதலில் சொன்னது போல் 

உன்மை தான் அக்னி அந்த மூன்று பேரும் தமிழ் பொடிகள்தான்.

42 minutes ago, அக்னியஷ்த்ரா said:

அண்ணை ....சும்மா கண்டபடிக்கு எழுதாதையுங்கோ .....
உந்த பிரதேசம் காத்தன்குடியிலிருந்து நியாயமான தூரத்தில் உள்ளது ......ஒருகாலத்தில் எனது நெருங்கிய உறவுகள் குடியிருந்தார்கள் அடிக்கடி சென்றும் வந்திருக்கிறேன். கல்லடிப்பாலத்திட்கு சற்று முதலில் உள்ளதால் காத்தான்குடி போலிஸ் நிலைய கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது ...
முஸ்லிம்கள் இந்த இடத்திற்க்கு  உள்ள வந்து இந்த சித்து விழையாட்டு காட்டுவது அவ்வளவு இலகு இல்லை...கடலோரமாக இருப்பதால்
சுனாமியில் அதிக இழப்பு சந்தித்த இடம் ....கொஞ்ச தொலைவு போனால் சவுக்கு தோப்பு வரும் அது இப்படியான கில்மாக்களுக்கு ஏற்ற இடம் 
அடிக்கடி  ஜோடி .ஜோடியாக  ஒதுங்குவார்கள். இதை  நிச்சயமாக நம்மடை கழுதையல் தான் பண்ணியிருக்கு ....

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, முனிவர் ஜீ said:

ம் நான் முதலில் சொன்னது போல் 

உன்மை தான் அக்னி அந்த மூன்று பேரும் தமிழ் பொடிகள்தான்.

நன்றி ஜீ

1 hour ago, அக்னியஷ்த்ரா said:

20 minutes ago, முனிவர் ஜீ said:

பாதிக்கப்பட்ட மாணவிக்கு உள்ள தேவைகள் என்ன என்று பார்க்க முடியுமா? Counselling etc 

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, MEERA said:

நன்றி ஜீ

பாதிக்கப்பட்ட மாணவிக்கு உள்ள தேவைகள் என்ன என்று பார்க்க முடியுமா? Counselling etc 

அது பற்றி மற்ற கவுன்சிலிங் மற்றும் இதர நிறுவனங்கள் தொடர்ந்து அவரை கவனத்துடன் பார்த்து கொள்ள இருக்கிறது  மீரா

பிள்ளையின் நடவடிக்கை மீதும் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது இதற்கு அவர்கள் பெற்றோரும் ஒரு வகையில் காரணம் தான் 

நெடுக்ஸ் உங்கள் ஆதங்கம் புரிகிறது நீங்கள் தமிழ் மக்கள் மீது வைத்து உள்ள பற்றை மதிக்கிறேன் நான் நீங்கள் ஒழுங்காக இருந்து என்ன பயன் சமுதாயம் ஒழுங்காக இருக்க வேண்டும் அல்லவா 

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Athavan CH said:

மட்டக்களப்பு மாநகர சபை பிரதேசத்திற்குட்பட்ட திருச்செந்தூர் கடற்கரை பிரதேசத்திற்கு குறித்த சிறுமியை அழைத்துச்சென்று பாலியில் வல்லுறவிற்குட்படுத்தியுள்ளதாக தெரியவருகிறது.

முனிவர் ஜீ சம்பவம்.. மட்டக்களப்பு மாநகர பிரதேச எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்திருக்குது. விசாரணையை காத்தான்குடி பொலிஸ் செய்யுது... மட்டக்களப்பு மாநகர எல்லைக்கு உட்பட்ட ஒரு பிரதேசத்தில் நடந்த சம்பவத்திற்கு.. காத்தான்குடி பொலிஸ் பிரிவு.. ஏன் விசாரணைக்கு வரனும்...?! 

இப்போ.. புங்குடுதீவில் நடந்த சம்பவத்திற்கு அந்தப் பொலிஸ் தானே விசாரணை பண்ணினது முதலில். யாழ் நகரப் பொலிஸ் இல்லைத் தானே...?!

குற்றவாளிகள் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குள் பதுங்கி இருந்திருக்கிறார்களா.... அது தான் சந்தேகம் வலுக்கிறது இங்கு....! :rolleyes:

8 hours ago, MEERA said:

நெடுக்ஸ் எழுந்த மாத்திரத்தில் நாம் கதைத்து விட்டு போக்க்கூடாது. குற்றவாளி யார் என தெரியாமல் ஓர் இனத்தை  குறை சொல்வது எனக்கு சரியாகப்படவில்லை. 

நீங்கள் குறிப்பிட்ட மற்றய திரி எனக்கு ஞாபகத்தில் இல்லை,

கல்முனையில் தமிழ் பெண் முகாமையாளர் கொல்லப்பட்ட சம்பவத் தலைப்பிலும்.. இதே சந்தேகம் எழுப்பட்டது. குற்றவாளி முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது பின்னர் வெளிப்படையாகவே சொல்லப்பட்டது. ஆரம்பத்தில் மறைக்கப்பட்டே செய்திகள் எழுதப்பட்டன. tw_angry:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, அக்னியஷ்த்ரா said:

அண்ணை ....சும்மா கண்டபடிக்கு எழுதாதையுங்கோ .....

உந்த பிரதேசம் காத்தன்குடியிலிருந்து நியாயமான தூரத்தில் உள்ளது ......ஒருகாலத்தில் எனது நெருங்கிய உறவுகள் குடியிருந்தார்கள் அடிக்கடி சென்றும் வந்திருக்கிறேன். கல்லடிப்பாலத்திட்கு சற்று முதலில் உள்ளதால் காத்தான்குடி போலிஸ் நிலைய கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது ...
முஸ்லிம்கள் இந்த இடத்திற்க்கு  உள்ள வந்து இந்த சித்து விழையாட்டு காட்டுவது அவ்வளவு இலகு இல்லை...கடலோரமாக இருப்பதால்
சுனாமியில் அதிக இழப்பு சந்தித்த இடம் ....கொஞ்ச தொலைவு போனால் சவுக்கு தோப்பு வரும் அது இப்படியான கில்மாக்களுக்கு ஏற்ற இடம் 
அடிக்கடி  ஜோடி .ஜோடியாக  ஒதுங்குவார்கள். இதை  நிச்சயமாக நம்மடை கழுதையல் தான் பண்ணியிருக்கு ....

ஏன் காத்தான்குடியில் உள்ளோரால் தமிழ் மக்கள் ஒரு சீரழிவையும் இதுவரை சந்திக்கவில்லையா...??! கடந்த காலங்களில்.. தமிழ் பெண்கள் இங்கிருந்து வந்தோரால் சீரழிக்கப்படவில்லையா...??! நிகழ்ந்து தானே இருக்கிறது.

இந்தச் சம்பவம் தொடர்பில் வீரகேசரி எழுதி உள்ள செய்தியின் பிரகாரம்.. அப்படி சந்தேகிக்க வைக்கிறது. அவ்வளவும் தான். 

அதற்காக காத்தான்குடிக்குள் உள்ளவை தமிழ் மக்களோடு புட்டும் தேங்காய் பூவுமா இருக்கினம் என்று காட்ட முனைவதை நம்புவது கடினமாக உள்ளது. tw_blush::rolleyes:

1 hour ago, முனிவர் ஜீ said:

ம் நான் முதலில் சொன்னது போல் 

உன்மை தான் அக்னி அந்த மூன்று பேரும் தமிழ் பொடிகள்தான்.

உங்கள் உறுதிப்படுத்தலை நம்புகிறோம் முனிவர் ஜீ. நன்றியும். tw_warning:

ஆனாலும் வீரகேசரி எழுதிய செய்தியின் பிரகாரம் மற்றும் எமது மக்கள் சந்தித்த... முன்னைய சம்பவங்களின் அனுபவ அடிப்படையில் காத்தான்குடியில் உள்ளோர் மீது சந்தேகம் எழுவது தவிர்க்க முடியாததும் கூட. 

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, nedukkalapoovan said:

முனிவர் ஜீ சம்பவம்.. மட்டக்களப்பு மாநகர பிரதேச எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்திருக்குது. விசாரணையை காத்தான்குடி பொலிஸ் செய்யுது... மட்டக்களப்பு மாநகர எல்லைக்கு உட்பட்ட ஒரு பிரதேசத்தில் நடந்த சம்பவத்திற்கு.. காத்தான்குடி பொலிஸ் பிரிவு.. ஏன் விசாரணைக்கு வரனும்...?! 

இப்போ.. புங்குடுதீவில் நடந்த சம்பவத்திற்கு அந்தப் பொலிஸ் தானே விசாரணை பண்ணினது முதலில். யாழ் நகரப் பொலிஸ் இல்லைத் தானே...?!

குற்றவாளிகள் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குள் பதுங்கி இருந்திருக்கிறார்களா.... அது தான் சந்தேகம் வலுக்கிறது இங்கு....! :rolleyes:

 அப்படி இல்லை நெடுக்ஸ் ஒவ்வொரு பொலிஸ் நிலையத்திற்கும் குறிப்பிட்ட சில ஊர்கள் வரைக்குமே கடமைகள் வழங்கப்பட்டிருக்கும் கல்லடி திருச்செந்தூர் பகுதி காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குள்  வரையறுக்கப்பட்டிருக்கு ஆனால் காத்தான்குடி பொலிஸ் நிலையம் அமைந்திருப்பது  நாவற்குடா காத்தான்குடி என்ற ஊர்களுக்கு  எல்லையில்  அதை காத்தான்குடி பொலிஸ் நிலையம் என்று கூற முடியாது 

இதே போல காரைதீவில் அமைந்துள்ள நேவி முகாம் சாய்ந்தமருதுக்குரியது ஆனால் அதை அவர்கள் காரைதீவில் அமைந்துள்ளார்கள் 

மாளிகை காடு காரைதீவு போன்ற பிரதேசங்களுக்கு பக்கம் கல்முனையாக இருந்தாலும் எதையாவது உறுதி படுத்த வேண்டிய நிலை வந்தால் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்கே செல்ல வேண்டும் 

இங்கே செய்தி முற்றும் முழுமையாக வெளிவராமல் அரைகுறையாக வருவதால் தான் இந்த பிரச்சனை 

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, nedukkalapoovan said:

ஏன் காத்தான்குடியில் உள்ளோரால் தமிழ் மக்கள் ஒரு சீரழிவையும் இதுவரை சந்திக்கவில்லையா...??! கடந்த காலங்களில்.. தமிழ் பெண்கள் இங்கிருந்து வந்தோரால் சீரழிக்கப்படவில்லையா...??! நிகழ்ந்து தானே இருக்கிறது.

இந்தச் சம்பவம் தொடர்பில் வீரகேசரி எழுதி உள்ள செய்தியின் பிரகாரம்.. அப்படி சந்தேகிக்க வைக்கிறது. அவ்வளவும் தான். 

அதற்காக காத்தான்குடிக்குள் உள்ளவை தமிழ் மக்களோடு புட்டும் தேங்காய் பூவுமா இருக்கினம் என்று காட்ட முனைவதை நம்புவது கடினமாக உள்ளது. tw_blush::rolleyes:

1 hour ago, nedukkalapoovan said:

முனிவர் ஜீ சம்பவம்.. மட்டக்களப்பு மாநகர பிரதேச எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்திருக்குது. விசாரணையை காத்தான்குடி பொலிஸ் செய்யுது... மட்டக்களப்பு மாநகர எல்லைக்கு உட்பட்ட ஒரு பிரதேசத்தில் நடந்த சம்பவத்திற்கு.. காத்தான்குடி பொலிஸ் பிரிவு.. ஏன் விசாரணைக்கு வரனும்...?! 

இப்போ.. புங்குடுதீவில் நடந்த சம்பவத்திற்கு அந்தப் பொலிஸ் தானே விசாரணை பண்ணினது முதலில். யாழ் நகரப் பொலிஸ் இல்லைத் தானே...?!

குற்றவாளிகள் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குள் பதுங்கி இருந்திருக்கிறார்களா.... அது தான் சந்தேகம் வலுக்கிறது இங்கு....! :rolleyes:

எண்டை அம்மே .....முடியல 
அண்ணை நீங்கள் சொல்லிறமாதிரி பொலிஸ் வேலை செய்ய முடியாது.....மட்டக்களப்பு மாகாணத்திட்க்கு கீழே பொலிஸ் பிரிவுகளாக 
மட்டக்களப்பு,காத்தான்குடி,ஏறாவூர்,வாழைச்சேனை,கழுவாஞ்சிக்குடி,கல்குடா,வெல்லாவெளி,திக்கட்டுஓயா,கரடியனாறு,வவுணதீவு,கொக்கட்டிச்சோலை,வாகரை மற்றும் ஆயித்தியமலை ஆகிய  போலீஸ் பிரிவுகள் உண்டு....ஒவ்வொரு பிரிவிற்கும் ஒரு Coverage Area உண்டு அதற்குள் தமிழ் ஏரியா பட்டாலும் சரி முஸ்லிம் ஏரியா பட்டாலும் சரி சிங்கள ஏரியா பட்டாலும் சரி அவர்கள் தான் அதை விசாரிப்பார்கள்.....உங்கடை விருப்பத்திற்குரிய ஸ்டேஷனில இருந்து பொலிசை கொண்டுவர முடியாது 

1 hour ago, nedukkalapoovan said:

கல்முனையில் தமிழ் பெண் முகாமையாளர் கொல்லப்பட்ட சம்பவத் தலைப்பிலும்.. இதே சந்தேகம் எழுப்பட்டது. குற்றவாளி முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது பின்னர் வெளிப்படையாகவே சொல்லப்பட்டது. ஆரம்பத்தில் மறைக்கப்பட்டே செய்திகள் எழுதப்பட்டன. tw_angry:

திரும்ப  திரும்ப உங்களிடம் சொல்வது கண்டபாட்டிற்கு இங்கே அடித்துவிடவேண்டாம் ....இப்படி  யூ கேயிலிருந்து கொண்டு தமிழ் வின்  வாசித்து கரடி விடுவது   அங்கே இருப்பவர்களுக்கு சுத்து மாத்து காட்ட உதவும் .....பெண்ணிண்ட சவ அடக்கத்துக்கே போயிற்று வந்த எங்களிடம் வேகாது 
யாரண்ணை சொன்னது குற்றவாளி முஸ்லிம் சமூகத்தவன் என்று ....? பெண்ணை போட்டுத்தள்ளியது அவரது நெருங்கிய உறவினர் பெயர் 
உதயகுமார் பொன்னம்பலம்...இதே பெயரை முகப்புத்தகத்தில் தேடுங்கள் ஆள் கிடைப்பார் (ஊரில தற்போது வைத்திருக்கும் பெயர் "கழுத்துவெட்டி" உதயகுமார்)...  ....பெண்ணை போட்ட அண்டைக்கே ஆள் பிடிபட்டுவிட்டார். சும்மா எல்லாவற்றுக்கும் முஸ்லிம் சாயம் அடிக்க வெளிக்கிடாதயுங்கோ ....எங்கடை நாதேரிகள் செய்யும் வேலைகள் அவர்களை விட அப்பாடக்கர் ரகம் 

Edited by அக்னியஷ்த்ரா

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, அக்னியஷ்த்ரா said:

எண்டை அம்மே .....முடியல 
அண்ணை நீங்கள் சொல்லிறமாதிரி பொலிஸ் வேலை செய்ய முடியாது.....மட்டக்களப்பு மாகாணத்திட்க்கு கீழே பொலிஸ் பிரிவுகளாக 
மட்டக்களப்பு,காத்தான்குடி,ஏறாவூர்,வாழைச்சேனை,கழுவாஞ்சிக்குடி,கல்குடா,வெல்லாவெளி,திக்கட்டுஓயா,கரடியனாறு,வவுணதீவு,கொக்கட்டிச்சோலை,வாகரை மற்றும் ஆயித்தியமலை ஆகிய  போலீஸ் பிரிவுகள் உண்டு....ஒவ்வொரு பிரிவிற்கும் ஒரு Coverage Area உண்டு அதற்குள் தமிழ் ஏரியா பட்டாலும் சரி முஸ்லிம் ஏரியா பட்டாலும் சரி சிங்கள ஏரியா பட்டாலும் சரி அவர்கள் தான் அதை விசாரிப்பார்கள்.....உங்கடை விருப்பத்திற்குரிய ஸ்டேஷனில இருந்து பொலிசை கொண்டுவர முடியாது 

திரும்ப  திரும்ப உங்களிடம் சொல்வது கண்டபாட்டிற்கு இங்கே அடித்துவிடவேண்டாம் ....இப்படி  யூ கேயிலிருந்து கொண்டு தமிழ் வின்  வாசித்து கரடி விடுவது   அங்கே இருப்பவர்களுக்கு சுத்து மாத்து காட்ட உதவும் .....பெண்ணிண்ட சவ அடக்கத்துக்கே போயிற்று வந்த எங்களிடம் வேகாது 
யாரண்ணை சொன்னது குற்றவாளி முஸ்லிம் சமூகத்தவன் என்று ....? பெண்ணை போட்டுத்தள்ளியது அவரது நெருங்கிய உறவினர் பெயர் 
உதயகுமார் பொன்னம்பலம்...இதே பெயரை முகப்புத்தகத்தில் தேடுங்கள் ஆள் கிடைப்பார் (ஊரில தற்போது வைத்திருக்கும் பெயர் "கழுத்துவெட்டி" உதயகுமார்)...  ....பெண்ணை போட்ட அண்டைக்கே ஆள் பிடிபட்டுவிட்டார். சும்மா எல்லாவற்றுக்கும் முஸ்லிம் சாயம் அடிக்க வெளிக்கிடாதயுங்கோ ....எங்கடை நதேரிகள் செய்யும் வேலைகள் அவர்களை விட அப்பாடக்கர் ரகம் 

அவரையும் தெரியும் ஆனால் நான் நம்ம வில்லை அந்த மனுசன் அப்படி செய்வான் என்று 

அந்த அக்கா அவர் குழந்தையும் ஒவ் வொரு நாளும் நான் காலையில் காண்பது வழமை??

  • கருத்துக்கள உறவுகள்
Just now, முனிவர் ஜீ said:

அவரையும் தெரியும் ஆனால் நான் நம்ம வில்லை அந்த மனுசன் அப்படி செய்வான் என்று 

அந்த அக்கா அவர் குழந்தையும் ஒவ் வொரு நாளும் நான் காலையில் காண்பது வழமை??

அப்ப நீங்க நம்ம ஏரியாவா .....?

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, அக்னியஷ்த்ரா said:

எண்டை அம்மே .....முடியல 
அண்ணை நீங்கள் சொல்லிறமாதிரி பொலிஸ் வேலை செய்ய முடியாது.....மட்டக்களப்பு மாகாணத்திட்க்கு கீழே பொலிஸ் பிரிவுகளாக 
மட்டக்களப்பு,காத்தான்குடி,ஏறாவூர்,வாழைச்சேனை,கழுவாஞ்சிக்குடி,கல்குடா,வெல்லாவெளி,திக்கட்டுஓயா,கரடியனாறு,வவுணதீவு,கொக்கட்டிச்சோலை,வாகரை மற்றும் ஆயித்தியமலை ஆகிய  போலீஸ் பிரிவுகள் உண்டு....ஒவ்வொரு பிரிவிற்கும் ஒரு Coverage Area உண்டு அதற்குள் தமிழ் ஏரியா பட்டாலும் சரி முஸ்லிம் ஏரியா பட்டாலும் சரி சிங்கள ஏரியா பட்டாலும் சரி அவர்கள் தான் அதை விசாரிப்பார்கள்.....உங்கடை விருப்பத்திற்குரிய ஸ்டேஷனில இருந்து பொலிசை கொண்டுவர முடியாது.

திரும்ப  திரும்ப உங்களிடம் சொல்வது கண்டபாட்டிற்கு இங்கே அடித்துவிடவேண்டாம் ....இப்படி  யூ கேயிலிருந்து கொண்டு தமிழ் வின்  வாசித்து கரடி விடுவது   அங்கே இருப்பவர்களுக்கு சுத்து மாத்து காட்ட உதவும் .....பெண்ணிண்ட சவ அடக்கத்துக்கே போயிற்று வந்த எங்களிடம் வேகாது 
யாரண்ணை சொன்னது குற்றவாளி முஸ்லிம் சமூகத்தவன் என்று ....? பெண்ணை போட்டுத்தள்ளியது அவரது நெருங்கிய உறவினர் பெயர் 
உதயகுமார் பொன்னம்பலம்...இதே பெயரை முகப்புத்தகத்தில் தேடுங்கள் ஆள் கிடைப்பார் (ஊரில தற்போது வைத்திருக்கும் பெயர் "கழுத்துவெட்டி" உதயகுமார்)...  ....பெண்ணை போட்ட அண்டைக்கே ஆள் பிடிபட்டுவிட்டார். சும்மா எல்லாவற்றுக்கும் முஸ்லிம் சாயம் அடிக்க வெளிக்கிடாதயுங்கோ ....எங்கடை நாதேரிகள் செய்யும் வேலைகள் அவர்களை விட அப்பாடக்கர் ரகம் 

மேலே வீரகேசரி செய்தியைப் படித்தால்.. மட்டு மாநகர எல்லைக்குள் நடந்த சம்பவத்திற்கு காத்தான்குடி விசாரிக்குது எனும் போது இயல்பாக எழும் சந்தேகமும்.. முஸ்லிம் காடைகள் தமிழ் பெண்களை சீரழித்த முன்னைய நிகழ்வுகளும் சேர்ந்து தான்.. பலத்த சந்தேகமாக பரினமித்தது. அது தவிர்க்க முடியாதது..!

கல்முனை சம்பவம் தொடர்பில்.. முன்னுக்குப் பின் பல முரண்பட்ட செய்திகளை ஊடகங்கள் வெளியிட்டு வந்துள்ள நிலையில்... கல்முனையில் தமிழ் மக்களைக் குறிவைத்து தொடர் கொலைகள் முஸ்லீம் வியாபாரிகளால் நிகழ்த்தப்பட்டு வந்துள்ள நிலையில்... இந்தக் கொலை தொடர்பிலும்.. சந்தேகம் உதித்தது. ஊடகங்களும் செய்திகளை கண்ணாபின்னான்னு எழுதின. 

இப்போது கதை இப்படிச் சொல்லப்படுகிறது. சொறீலங்கா பொலிஸ் சொல்வதை எல்லாம் நம்பிற அளவுக்கு அது ஒன்னும் நேர்மையான பொலிஸ் இல்லை என்பது வேற முக்கியமானது. ஏனெனில் இச்சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்கு பொலிஸ் தரப்பே முன்னுக்குப் பின் முரணான செய்திகளை வழங்கி இருக்குது.. அது ஏன் அண்ணே. 

இங்கு யாரும் கரடி விடல்ல. ஊடகங்களில் வந்த செய்திகளின் அடிப்படையில் தான் விடயங்கள் பேசப்படுகின்றன. 

ஊடகங்களுக்கு வழங்கப்பட்ட செய்திகள்.. ஊடகங்கள் சொல்லும் செய்திகளில் இருக்கும் தவறுக்கு.. அவை மறைக்கும் தகவல்களுக்கு.. நாம் பொறுப்பல்ல.

இப்படியான திரிகள் உண்மைகள் வெளிக்கொணரப் பயன்படுவதை வரவேற்கிறோம்.

குறிப்பாக செய்திகளை உறுத்திப்படுத்த முயலும்.. முனிவர் ஜீக்கும் உங்களுக்கும் நன்றி. tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, nedukkalapoovan said:

அப்பாடா நிம்மதி ?☺

கல்முனையில் நடந்த சம்பவ நேரத்தில் நான் யாழுக்கு வரவில்லை வந்தால் உன்மை செய்தியை தந்து இருப்பேன் ?

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, nedukkalapoovan said:

. ஏனெனில் இச்சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்கு பொலிஸ் தரப்பே முன்னுக்குப் பின் முரணான செய்திகளை வழங்கி இருக்குது.. அது ஏன் அண்ணே

அதுவாண்ணே .....பதில் தாறேன் அண்ணே 

அண்ணே ....எங்கடை ஆக்கள் முசிலிம்களை விட மோட்டுகூட்டமண்ணே.....உதயகுமார் இருக்கரேல்லோ அண்ணே இவர் தொழிலில கடும் கையாடல் கேசண்ணே (அடிச்ச காசு அண்ணே கோடிக்கணக்கில அண்ணே)....செத்தபிள்ளை இவரோட மருமகள் முறையண்ணே .....இவருதான் அந்தபிள்ளைக்கும் வேலை எடுத்துகொடுத்தவர் அண்ணே ...பிள்ளை தொழிலில் கடும் கறார் அண்ணே ....கழுத்துவெட்டி ஸ்பெசலிஸ்ட்டோட விளையாட்டு மேலிடத்துக்கு மணக்க அண்ணே ...மாமா இருத்த இடத்திற்க்கு மருமகளை முகாமையாளராக போட்டுட்டினமண்ணே ..வந்த மருமகள் மாமாவோட கைவரிசையை முழுக்க தூசுதட்டி மேலிடத்திட்க்கு தகவல் ரெடிபன்னிட்டாரண்ணே ....ஸ்பெசலிஸ்ட் இதை மோப்பம் புடிச்சு அவாவோட நிறையத்தரம் வாக்குவாதப்பட்டிருக்காரண்ணே. ஒருநாள் ஆக்கள் இல்லாத நேரமாக பார்த்து அலுவலகம் உள்ள போய் பிள்ளையோட பெரிய சண்டை போட்டு கழுத்தை வெட்டி கழுத்து வெட்டி ஸ்பெசலிஸ்ட் ஆகிட்டாரண்ணே ...அதோட சேர்த்து பிள்ளையின் காது தோட்டு இடுக்கில் தன்னோட நகத்தையும் ...கொண்டுபோன ஹெல்மட்டையும் ....அங்கயே விட்டுபோட்டு ..அவரோட உடம்பு முழுக்க நகக்கீறலை வாங்கிட்டுவந்திட்டாரண்ணே 
அதோட போனையும் OFFபண்ணிபோட்டரண்ணே 
இப்பதான் அண்ணே கபார் என்ட்ரி ஆகிறாரண்ணே ....இவர் கல்முனை போலிஸ் பொறுப்பதிகாரி அண்ணே ...இருத்த தடயங்களை வைத்து ஆராய்ந்ததிலும் ... பிள்ளையோட யார் பகையில இருந்தினம் என்று விசாரிச்சதிலும் ...ஸ்பெசலிஸ்ட் பெயர் மேலை வர ...ஸ்பெசலிஸ்ட்டை  தொடர்பு கொண்டால் போனும் OFFஅண்ணே..பொலீஸ் ஆளை அமுக்கி விசாரிக்க வேண்டிய வகையில் விசாரிக்க ஸ்பெசலிஸ்ட் எல்லாவற்றையும் கக்கி விட்டரண்ணே ....பிள்ளைக்கு இருந்த ஒரே பகை ஸ்பெசலிஸ்ட் ..அவரே கொலையாளி ...போதாக்குறைக்கு தன்னால முடிந்த அளவுக்கு தடயங்களையும் போதும் போதும் என்ற அளவுக்கு விட்டு விட்டு போயிருக்கிராரண்ணே ....எட்டு மணித்தியாலத்தில் கொலையாளி கைது என்று அண்ணே முழு போலிஸ் அதிகாரிகளும் கபாரை அண்ணே பெரிய Scotland Yard இற்கு சமனாக ஆக்கிவிட்டினம் அண்ணே...அவார்ட்டும் அறிவிச்சு போட்டினம் அண்ணே  ...சுண்டிப்போய் கிடந்த கபார் என்னன்னே செய்வார் ...தானும் பெரிய அப்பாடக்கர் கணக்கா ஏதோ பெரிய புலனாய்வு செய்ததாக நிமிசத்திட்கொருதரம் வித்தியாசம் வித்தியாசமாக அடித்துவிட்டார் அண்ணே .. ....எங்கடை நாதேரிகள் கொலை செய்தாலும் கூட   அதிலும் முஸ்லிம்கள் தான் பலன் பெறுகிறார்கள் அண்ணே ..இதுதாண்ணே  நடந்தது 

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பதிவில் வந்த செய்தியை வாசிப்பவர்களுக்கு நியாயமாக எது தோன்றுமோ அதுவே நெடுக்ககாலைபோவன் அவர்களுக்கும் தோன்றியிருப்பதாக எண்ணுகிறேன். மக்களைக் குழப்பி மீன்பிடிப்பதற்கு சில மீடியாக்களும் பின்னிற்பதில்லை. பதிவை மீண்டும் உன்னிப்பாக வாசியுங்கள் உண்மை புரியும். முசுலீம்கள் தமிழர்களைவிடவும் புனிதமானவர்கள் என்று இங்கு நிறுவ முனைபவர்களுக்கும் புரியும். :rolleyes:

புலிகளின் காலத்தில் தவறாக எதுநடந்தாலும் அது புலிகள்தான் என்று அடித்துச் சொல்லிப் ************** புலம்பியபோது கப் சிப் என்றுதான் எல்லோரும் இருந்தனர். இன்று கண்ணால் கண்டதும் பொய், காதால் கேட்டதும் பொய் தீரவிசாரித்து அறிவதே மெய் என்று வரிந்து கட்டுவது எதனாலோ....! ஓகோ எங்கள் தலைவர்கள் சிங்கக்கொடிதூக்கி முசுலீம்களுக்கு அனுதாபம் தெரிவிக்கும் பண்பைப் பின்பற்றுவதாலா..!! :shocked:

22 hours ago, Athavan CH said:

1393843296Untitled-1.jpg

12 வயது பாடசாலை மாணவியை பாலியல் வல்லுறவிற்குட்படுத்திய மூவரை காத்தான்குடி பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி கே.ஜெயசீலன் தெரிவித்தார்.

இச்சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.  

மட்டக்களப்பு மாநகர சபை பிரதேசத்திற்குட்பட்ட திருச்செந்தூர் கடற்கரை பிரதேசத்திற்கு குறித்த சிறுமியை அழைத்துச்சென்று பாலியில் வல்லுறவிற்குட்படுத்தியுள்ளதாக தெரியவருகிறது.

சிறுமியை பாலியல் வல்லுறவிற்குட்படுத்திய குற்றத்தின் பேரில் ஒருவரும் அவருக்கு உதவிய குற்றச்சாட்டின்பேரில் இருவருமாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.

பாடசாலையில் ஏழாம் ஆண்டில் கல்வி பயிலும் இச்சிறுமி தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர்கள் மட்டக்களப்பு நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

http://www.virakesari.lk/article/5518

Edited by நியானி
தணிக்கை

நியாயமாக எண்ண தோன்றுவது .tw_cry:

சூப்பரோ சூப்பர் .

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Paanch said:

பதிவை மீண்டும் உன்னிப்பாக வாசியுங்கள் உண்மை புரியும். முசுலீம்கள் தமிழர்களைவிடவும் புனிதமானவர்கள் என்று இங்கு நிறுவ முனைபவர்களுக்கும் புரியும்

1 hour ago, Paanch said:

. இன்று கண்ணால் கண்டதும் பொய், காதால் கேட்டதும் பொய் தீரவிசாரித்து அறிவதே மெய் என்று வரிந்து கட்டுவது எதனாலோ....!

எல்லோரும் சிலவற்றை புரிந்து கொள்ளவேண்டும் .....இங்கு யாரும் முஸ்லீம்களை புனிதமானவர்கள் என்று நிறுவ முற்படவில்லை ....
கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர்கள்  என்ற அடிப்படையில் இங்கே  எங்களுக்கு முஸ்லிம், தமிழ் பிரதேசங்களின் நீட்சி தெரியும் ...எவ்வளவு தூரம் ஒரு தமிழனாலோ, முஸ்லிமாலோ இப்படியான வேலைகளுக்கு ஊடுருவ  முடியும்  என்பதும் தெரியும் .. மேட்குறிப்பிட்ட இரண்டு சம்பவங்களிலும் முஸ்லிம்களின் தொடர்பு அறவே இருக்கவில்லை ...காத்தான்குடி என்ற பெயர் காணப்பட்டதால் மட்டும் அவர்களும் உள்ளே வந்தார்கள்...
இப்போது இது முற்றுமுழுதாக தமிழனால் அவனது இன பெண்களுக்கு எதிரான வன்முறை என்று தெரிந்ததும் ...அதை ஏற்றுகொள்ள முடியாமல் 
அதை ஆய்ந்து கூறுபவர்களை முஸ்லிம்களுக்கு சார்பானவன் என்று கூறுகிறோம் ...இதன்மூலம் நாம் அடையமுயல்பவை எவை........? 

ஏற்க்கனவே தனி மனித ஒழுக்கம் ,சுய கட்டுப்பாடு போன்றவை அறவே இல்லாது போய் நலிந்த இனமாகி கிடக்கும் எமதினத்தில் அவர்கள் இழைக்கும் தவறினை எப்படி இன்னுமோர் இனத்தின்மீது போட்டு தப்பித்துகொள்வது என்று வழி சொல்லித்தருகிறோமா   ....?

இல்லை இதனை தமிழர்கள் செய்ததால் அவர்களை தண்டிப்பதோ ...அல்லது முச்சந்தியில் நிட்பாட்டுவது அவசியமற்றது என்று நினைக்கிறோமா ....?

எனக்கேதோ இவைகள் எல்லாம்  அடிப்படை மனித கோட்பாடுகளை மறந்து ஒழுக்கமற்ற காட்டுமிராண்டி  சமூகமாக மாறிக்கொண்டிருக்கும்  சமூகத்தின் அபாயமணியாகவே தெரிகிறது 

சரி பாதிக்கப்பட்ட பெண்களுக்கு என்ன சொல்லப்போகிறோம் ....அவர்களுக்கு பாதிப்பு என்பது சமனானது அதை முஸ்லிம் செய்திருந்தாலும் சரி  ,தமிழன் செய்திருந்தாலும் சரி .....இவர்களிடம் இதனை தமிழன் செய்ததால் மன்னித்து மறந்துவிடும்படி கூறப்போகிறோமா .....? முஸ்லிம் செய்தால் மட்டும் கிளர்ந்தெழு என்று கூறப்போகிறோமா ....?

  • கருத்துக்கள உறவுகள்

அக்கினி அண்ணே.. தமிழ் இளைஞர்கள் காடைகளாகத் திரிய தமிழ் சமூகம் தொடர்ந்து அனுமதிக்குமா என்பது கேள்விக்குறி. வடக்குக் கிழக்கில் மாற்று இயக்கத்தினர் என்று சொல்லிக் கொள்ளும் ஒட்டுக்குழுக்களில் இருப்பவர்களும் அவர்களின் வாலுகளும் தான்.. சிங்கள அரச படைகளின் பின்புலப் பலம் தம்மிடம் உள்ளது என்ற துணிவில்.. இவ்வாறான தமிழ் மக்கள் விரோதச் செயல்களில் கடந்த காலங்களில் ஈடுபட்டு வந்தனர். இப்போதும் அது வேறு வடிவங்களில் தொடர்கிறது.

முஸ்லீம்களைப் பொறுத்த வரை அவர்கள்.. ஒரு இனக்குரோத எண்ணத்தில்.. சில முஸ்லீம் மத அடிப்படைவாத வெறித்தன அரசியல்வாதிகளால் தூண்டி விடப்பட்டு இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இரண்டுக்கும் வேறுபாடுள்ளது. இரண்டும் கண்டிக்கத்தக்கது. இரண்டுக்கும் நிரந்தரத் தீர்வு தேடப்பட வேண்டும். பாதிக்கப்படுபவர்களுக்கு நீதியும் நியாயமும்.. புனர்வாழ்வும்.. எதிர்கால வாழ்க்கை செழிப்புற நடவடிக்கைகளும் அவசியம்.

நாம் கடந்த காலத்தை அவ்வளவு இலகுவில் மறந்து விட முடியாது.. ஏனெனில்.. முஸ்லீம்கள் செய்த காடைத்தனங்கள் மறைக்கப்பட்டு.. புலிகள் அவற்றுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் பயங்கரவாதமாகச் சித்தரிக்கப்பட்டு.. இந்த முஸ்லீம் காடைத்தனங்கள் பாதுக்காப்பட்டு வந்துள்ள நிலையில்.. இன்றைய கிழக்கிலங்கைச் சம்பவங்கள் தொடர்பில் அவர்கள் மீது சந்தேகம் எழுவது தவிர்க்க முடியாததாகிறது.. என்ற யதார்த்தப் புறநிலையையும் நாம் புரிந்து கொண்டு நடக்க வேண்டியவர்களாக உள்ளோம். 

சில தமிழ் இளைஞர்கள் முஸ்லீம்களோடு சேர்ந்து கொண்டும்.. சமூக விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட நிகழ்வுகளும் நடந்தே வந்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

கீழே சமீப காலச் சம்பவம் ஒன்றும்.. வரலாற்று நிகழ்வுகளின் தொகுப்பு ஒன்று என்றும் இரண்டு உள்ளன. இவை குறித்தான உங்கள் நிறுவுதல் என்ன.. எண்ணப்பாடு என்ன..??!

முஸ்லிம் இளைஞர்களால் இரு தமிழ் பெண்கள் வானில் கடத்தி துஸ்பிரயோகம்

admin 04-06-16 இலங்கை வாசித்தோர் : 183

  முஸ்லிம் இளைஞர்களால் இரு தமிழ் பெண்கள் வானில் கடத்தி துஸ்பிரயோகம்

மட்டக்களப்பு கிரான் தெற்கு பிரதேச செயலக பிரிவுக்குப்பட்ட வாகனேரி பிரதேசத்தில் இருந்து இரண்டு இளம் பெண்கள் இரு முஸ்லிம் இளைஞர்களால் வானொன்றில் கடத்திச் சென்று துஸ்பிரயோகத்துக்கு உட்;படுத்தப்பட்டு விடுவிக்கப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட இரண்டு பெண்களும் 13, 19 வயதுடைய இளம் பெண்கள் ஆகும்.

குறித்த வயதுடைய இரண்டு பெண்களையும் சம்பத்திற்கு முதல் தினமே வாகனேரியில் வைத்து வான் ஒன்றில் ஏற்றிச் சென்று தூர இடத்துக்கு கொண்டு சென்று மறு நாள் அவர்களின் பிரதேசத்தில் இறக்கிவிட்டுச் சென்றதாக கிராம வாசிகள் தெரிவிக்கின்றனர்.

குறித்த பெண்கள் இருவரின் உடலில் காயங்கள் காணப்பட்டதாகவும் தெரிவித்தனர். இரு பெண்களையும் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக தெரியவருகின்றது.

வாகனேரி அண்மித்த பிரதேசங்களுக்கு அடிக்கடி ஓட்டமாவடி, வாழைச்சேனையைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞனர்கள் வந்து செல்வதாகவும். இதனால் பல சமூக சீர்கேடுகள் நடைபெறுவதாகவும் இதனை உரியவர்கள் இனம் கண்டு கட்டுப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த பிரதேசங்களில் வசிக்கும் தமிழ் மக்களின் வறுமையை காரணமாக பயன்படுத்தி இவ்வாறான செயற்பாடுகள் நடைபெறுவதாக அறியமுடிகின்றது.

- See more at: http://www.seithyulagam.com/fullview-post-4993-cat-1.html#sthash.lXC5V7lG.dpuf

தமிழர்கள் மீதான முஸ்லிம் ஊர்காவல் படையின் வன்முறைகளும் கொலைகளும்

Published on November 2, 2015-6:38 pm   ·   No Comments

Sathurukondanதிராய்க்கேணி படுகொலைகள் (Thiraikkerney massacre) என்பது 1990 ஆம் ஆண்டு ஆகத்து 6 ஆம் நாள் இலங்கையின் அம்பாறை மாவட்டத்தில் திராய்க்கேணி என்னும் தமிழ்க் கிராமம் ஒன்றில் இடம்பெற்ற படுகொலை நிகழ்வைக் குறிக்கும். சிறப்பு இராணுவப் படையினர் எனச் சந்தேகிக்கப்படுபவர்களின் உதவியுடன் முஸ்லிம்களால் 47 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். திராய்க்கேணி ( Thiraayk-kea’ni) கிராமம் மட்டக்களப்பு நகரில் இருந்து தெற்கே 70 கிமீ தொலைவில் அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ளது. சிறப்பு இராணுவத்தினரின் உதவியுடன் திராய்க்கேணி கிராமத்தினுள் நுழைந்த முஸ்லிம்கள் அங்குள்ள கோயிலில் தஞ்சமடைந்திருந்த 47 தமிழர்களைப் படுகொலை செய்தனர். வீடுகளினுள் வைத்து முதியவர்கள் பலர் உயிருடன் தீவைத்துக் கொளுத்தப்பட்டனர். 350 வீடுகள் முஸ்லிம் குண்டர்களால் தீக்கிரையாக்கப்பட்டன.

சரோஜா என்ற 13 வயதுச் சிறுமி ஒருத்தி கடத்தப்பட்டு பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டாள். காலை ஏழு மணிக்கு ஆரம்பமான இப்படுகொலை நிகழ்வுகள் மத்தியானம் வரை நீடித்திருந்தது.இப்படுகொலைகளை அடுத்து அக்கிராமத்தில் இருந்து வெளியேறிய மக்கள் காரைதீவு அகதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டு 4 ஆண்டுகளுக்குப் பின்னரே ஊர் திரும்பினர்.

இப்படுகொலைகள் குறித்து முழுமையான விசாரணைகள் வேண்டும் எனக் குரல் கொடுத்த திராய்க்கேணி கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் ஈ. மயிலைப்போடி என்பவர் 1997 ஆம் ஆண்டில் படுகொலை செய்யப்பட்டார்.

2003 அக்டோபர் 12 ஆம் நாள் திராய்க்கேணி பெரியதம்பிரான் கோயில் பகுதியில் சுத்திகரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் அங்குள்ள குழி ஒன்றில் மனித எச்சங்கள் பலவற்றக் கண்டுபிடித்தனர். இவ்வெச்சங்கள் திராய்க்கேணிப் படுகொலைகளில் கொல்லப்பட்டவர்களினதாய் இருக்கலாம் என உள்ளூர் மக்கள் தெரிவித்தனர்.இது தொடர்பான விசாரணைகள் எதுவும் இடம்பெறவில்லை.

1990 செப்டம்பர் 9ஆம் திகதி மட்டக்களப்பில் மிகப்பெரிய இனப்படுகொலை நடைபெற்றது. சத்துருக்கொண்டான், பிள்ளையாரடி, திராய்மடு கிராமங்களை சேர்ந்த 198 பொதுமக்கள் அன்று மாலை சத்துருக்கொண்டானில் இருந்த இராணுவ முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு வைத்து சித்திரவதை செய்யப்பட்ட பின்னர் படுகொலை செய்யப்பட்டதாக காயங்களுடன் தப்பி வந்த சிவகுமார் என்ற இளைஞர் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்திருந்தார்.

கொல்லப்பட்டவர்களில் மூன்று குழந்தைகளும் அடங்கியிருந்தன. எட்டு மாத குழந்தை விஜயகுமார், 3மாத குழந்தைகளான பிரியா, வேணுதாஸ் ஆகியோரையும் இராணுவத்தினரும் முஸ்லீம் ஊர்காவல்படையினரும் இரண்டு துண்டுகளாக வெட்டி எரியும் நெருப்பில் போட்டனர் என இச்சம்பவத்தை நேரில் கண்டவர் தெரிவித்திருந்தார். இச்சம்பவத்தில் 8வயதுக்கு உட்பட்;ட 68 சிறுவர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். கொல்லப்பட்டவர்களில் 80க்கு மேற்பட்டவர்கள் பெண்கள். இவர்கள் மிகக்கொடுமையாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
25வயதுடைய ஜீவமலர் என்ற பெண்ணின் கையில் இருந்த மூன்று மாத குழந்தை பிரியாவை பறித்தெடுத்து வெட்டி வீசிய படையினர் அப்பெண்ணை இழுத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்த பின் வெட்டி கொன்றனர்.

இந்த படுகொலையில் இராணுவத்துடன் முஸ்லீம் ஊர்காவல்படையும் இனப்படுகொலை புரிந்தனர் என்பது பின்னர் தெரியவந்தது.காயங்களுடன் தப்பி சென்ற சிவகுமார் என்ற இளைஞரை இராணுவம் தேடிய போது மட்டக்களப்பு பிரஜைகள் குழுவும் ஆயர் இல்லமும் அவரை மறைத்து வைத்து வைத்தியம் செய்து காப்பாற்றியிருந்தனர். இதன் பின்னர் ஜனாதிபதி ஆணைக்குழு முன் அவர் இந்த படுகொலைகள் பற்றி சாட்சியமளித்திருந்தார்.

இது போன்று கிழக்கில் பல படுகொலைகள் நடந்தன.
சம்மாந்துறை படுகொலை, சித்தாண்டி படுகொலை, பொத்துவில் படுகொலை, கல்முனை படுகொலை, துறைநீலாவணை படுகொலை, ஏறாவூர் வைத்தியசாலை படுகொலை, கோராவெளி ஈச்சையடித்தீவு படுகொலை, ஏறாவூர் படுகொலை, நற்பிட்டிமுனை படுகொலை, புதுக்குடியிருப்பு படுகொலை, கொக்கட்டிச்சோலை படுகொலை என கிராமம் கிராமமாக ஆயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

1990ஆம் ஆண்டு சிறிலங்கா விசேட அதிரடிப்படையினருடன் சேர்ந்து சம்மாந்துறை மற்றும் அதனை சூழவுள்ள முஸ்லீம்கள் வீரமுனை தமிழ் மக்களை வெட்டிக்கொலை செய்து அக்கிராமத்திலிருந்து வெளியேற்றியிருந்தார்கள்.

அண்மைக்காலத்தில் தான் அவர்கள் மீண்டும் வீரமுனையில் குடியேறி வாழ்ந்து வருகின்றனர்.
1990களில் வீரமுனை பிள்ளையார் கோவில் உட்பட சைவ ஆலயங்களில் தஞ்சம் அடைந்திருந்த தமிழ் மக்களை முஸ்லீம்கள் ஈவிரக்கமின்றி வெட்டி கொலை செய்தனர். பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்தனர். கைக்குழந்தைகளை கூட இரண்டு துண்டாக வெட்டி வீசினர். வீரமுனை தமிழ் கிராமத்தில் தமிழர்கள் மீது 1990ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஒரு சில படுகொலைகளை திகதி வாரியாக இங்கே தருகிறேன்.

20.06.1990 வீரமுனை பிள்ளையார் கோவில் படுகொலை அதிரடிப்படை மற்றும் முஸ்லீம்களால் 69 தமிழர்கள் படுகொலை 05.07.1990 வீரமுனையில் 13 தமிழர்கள் படுகொலை 10.07.1990 வீரமுனையில் 15 தமிழர்கள் படுகொலை . 16.07.1990 மல்வத்தை இராணுவத்தினரும் முஸ்லீம் ஊர்காவல்படையினருமாக சுமார் 30 பேர் 8 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்தனர். 26.07.1990 வீரமுனையில் 23 சிறுவர்கள் உட்பட 32 இளைஞர்கள் முஸ்லீம் ஊர்காவல்படையினராலும் விசேட அதிரடிப்படையினராலும் கைது செய்யப்பட்டு காணாமல் போயினர். 29.07.1990 8 ஆசிரியர்கள் குடும்பத்துடன் பஸ் ஒன்றில் வீரமுனையை விட்டு வெளியேறிக்கொண்டிருந்த போது அவர்கள் அனைவரும் கடத்தி செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். 01.08.1990 சவளக்கடையில் 18பேர் கைது செய்யப்பட்டு காணாமல் போயினர். 12.08.1990 வீரமுனை அகதி முகாமில் புகுந்த முஸ்லீம் குழு வாள்களால் வெட்டி தாக்குதல் நடத்தியது. இதில் ஆலய பரிபாலனசபை தலைவர் தம்பிமுத்து சின்னத்துரை உட்பட 14பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். வீரமுனையில் 600வீடுகளும், சம்மாந்துறை, மல்லிகைத்தீவு, வளத்தாப்பிட்டி கணபதிபுரம், மல்வத்தை ஆகிய கிராமங்களில் இருந்த 1352 தமிழர்களின் வீடுகள் முஸ்லீம்களால் முற்றாக தீக்கிரையாக்கப்பட்டது. 20.06.1990க்கும் 15.08.1990க்கும் இடைப்பட்ட காலத்தில் வீரமுனையில் மட்டும் 232 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் 1600க்கு மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டது. இதனை முன்னின்று செய்தவர்கள் அயல்கிராமமான சம்மாந்துறையை சேர்ந்த முஸ்லீம்கள்.

கிழக்கு மாகாணத்தில் மோசமான தாக்குதலுக்கு உள்ளான பிரதேசங்களாக வாழைச் சேனை, செங்கலடி ஆரையம்பதி, நீலாவனை, பாண்டிருப்பு முதலானவை காணப்படுகின்றன. குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் நிகழ்த்தப்பட்ட தாக்குதல்களால் தமிழ்க் கிராமங்கள் பல அழிவுற்றன.

பரம்பரை பரம்பரையாகத் தமிழர்கள் வாழ்ந்து சூறையாடப்பட்டு இன்று சிதைவுக்குள்ளான கிராமங்களாகப் பாலமுனை, பாணமை, மீனோடைக்கட்டு, ஒலுவில், நிந்தவூலீ, சம்மாந்துறை, கரவாகு, தீகவாவி, மாந்தோட்டம், கொண்டா வெட்டுவான், பூரணி, செம்மணிக்குளம், தங்கவேலாயுதபுரம், உடும்பன்குளம் முதலானவை காணப்படுகின்றன.

தமிழர்கள் வாழ்ந்தமைக்கான சுவடுகள் துடைத்தழிக்கப்பட்டு இக்கிராமங்கள் இன்று முஸ்லிம் கிராமங்களாக மாறியுள்ளன. இச்சூழலில் அம்பாறை மாவட்டத்தில் படிப்படியாக முஸ்லிம் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகும் தமிழ்க் கிராமங்களாக அட்டைப்பள்ளம், சவளக்கடை, திறாய்க்கேணி, சொறிக்கல்முனை, மீராச்சோலை முதலானவற்றைக் கூறலாம்.

இப்பூர்வீகக் கிராமங்களில் பிறந்த தமிழர்கள் பலர் இவ்வன்முறையோடு தாக்குதல்களுக்கு உள்ளானவராகவும் தம் சுயமிழந்து அகதி அந்தஸ்து அங்கீகரிக்கப்படாதவராகவும் காணப்பட்டனர். முஸ்லிம் இனவாதக் குழுக்களால் இக்கிராமப் பெண்கள் பலர் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டதோடு மிலேச்சத்தனமான முறையில் படுகொலையும் செய்யப்பட்டனர்.

1990களில் திறாய்க்கேணி, நிந்தவூலீ, வீரமுனை முதலான தமிழ்ப் பிரதேசங்களில் முஸ்லிம் தீவிரவாதக் குழுக்களால் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் அறத்திற்குப் புறம்பானவை. திராய்க்கேணி பிள்ளையார் கோயிலில் உயிருக்கஞ்சி அடைக்கலம் புகுந்த தமிழ் இளைஞர்கள், யுவதிகளை அடித்தும் வெட்டியும் கொன்ற முஸ்லிம் இனவாதக் குழுக்கள் நிந்தவூர் முருகன் கோவிலில் 64 தமிழர்களையும் வீரமுனைப் பிள்ளையார் கோயிலில் 85 இளைஞர்களையும் டுகொலைசெய்தனர்.

மத வணக்கத்தலங்களில் நிகழ்த்தப்பட்ட இந்த வன்முறைத் தாக்குதல்கள் தமிழ், முஸ்லிம் உறவுக்குத் குந்தகம் விளைவிக்கும் செயல்களாக மைந்தபோதிலும் எவராலும் தடுத்து நிறுத்தப்படவில்லை; கண்டிக்கப்படவில்லை.இவை தவிர இக்காலப்பகுதியில் தமிழ், முஸ்லிம் இன மோதல்களால் ஏராளமான இந்து ஆலயங்கள் சுவடுகள் இன்றி அழித்தொழிக்கப்பட்டன.

சம்மாந்துறைக் காளிகோயில், அட்டப்பள்ளம் மீனாட்சியம்மன் கோயில், கல்முனை கரவாகு காளிகோயில், மீனோடைக்கட்டுப் பிள்ளையார் கோயில், ஓட்டமாவடிப் பிள்ளையார் கோயில் எனப் பல இந்துக் கோயில்கள் முஸ்லிம்களால் சிதைக்கப்பட்டுக் கோயில்கள் பள்ளிவாசல்களாகவும் (கரவாகு காளிகோயில்), மாட்டிறைச்சிக் கடைகளாகவும் (ஓட்டமாவடி பிள்ளையார் கோயில்) இன்று மாற்றப்பட்டுள்ளன./” இருபத்தைந்து ஆண்டுகள் ஆகிவிட்டன.இன்றுவரை விசாரணையும் இல்லை.பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியும் இல்லை.

இந்த போர்க்குற்றங்கள், இனப்படுகொலைகள் பற்றி தமிழர் தரப்புக் கூட இப்போது பேசுவதை மறந்து விட்டதோ என்று எண்ணத்தோன்றுகிறது.

ஏரம்பமூர்த்தி கங்காதரன்.

( குறிப்பு கிழக்கில் முஸ்லீம்களால் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட படுகொலைகள் மற்றும் 40க்கு மேற்பட்ட தமிழ் கிராமங்களிலிருந்து தமிழ் மக்கள் வெளியேற்றப்பட்ட கொடுமைகள் பற்றி விரிவாக விரைவில் தினக்கதிரில் வெளிவரும்)

http://www.thinakkathir.com/?p=63166

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.