Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் 27 இளைஞர்கள் கைது

Featured Replies

யாழில் 27 இளைஞர்கள் கைது 

யாழில் 27 இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் இன்று வியாழக்கிழமை தெரிவித்தனர். 

யாழ். பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு குற்றச்சாட்டுக்களில் சந்தேகத்தின் பேரில் சுமார் 18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்களே இவ்வாறு  கைது செய்யப்பட்டுள்ளனர். arrest_07.jpg

அண்மைக்காலமாக யாழ். குடாநாட்டில் குற்றச்செயல்கள் அதிகரித்த காரணத்தினால், வீதிகளில் அநாவசியமாக நிற்பவர்கள், திருட்டு மற்றும் பெண்களுடனான சேட்டைகளில் ஈடுபடுபவர்கள் என பலர் தொடர்ந்தும் கைதுசெய்யப்பட்டு வருகின்றார்கள். 

யாழ். பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் குற்றச்செயல்களைத் தடுப்பதற்கான விஷேட பொலிஸ் குழு ஒன்று நியமிக்கப்பட்டு, அக்குழுவினர் பல பகுதிகளிலும் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடுவதுடன், சோதனைகளையும் மேற்கொண்டு வருகின்றார்கள். 

இவ்வாறு சோதனை மேற்கொள்ளும் போது, சந்தேகத்திற்கிடமாக காணப்பட்டால், கைதுசெய்வதுடன், நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றார்கள். 

கடந்த ஒரு வாரத்தில்  சுமார் 50ற்கும் மேற்பட்ட இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், நீதிமன்றங்களில் ஆஜர்ப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், நீதிமன்றினால் பிணையிலும் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இவ்வாறு நேற்று புதன்கிழமை கைதுசெய்யப்பட்ட 27 இளைஞர்களையும் யாழ். நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையினையும் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

http://www.virakesari.lk/article/5728

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல விசயம்.நாதாரியள் உள்ளபோகோணும்

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனை அப்பாவி இளைஞர்களை இனத்துவேசம் கைதுசெய்ய வைத்திருக்கும்....? கைது செய்யும் காவல்துறையில் இருக்கும் அனைவரும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவர்களா? அனைவரும் தமிழினத்தை அழித்துவரும் அரச கூலிகள்தானே!.:(  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உதுகல் ஒன்டும் அப்பாவியள் இல்லை. பூரா வப்புவள். நீங்கள் தாயக நிலவரம் புரியாமல் வெளிநாட்டில் இருந்து கதைக்காதேங்கோ.இந்த வப்புகளால கஸ்ரப்படுற ஊர் சனத்துக்குதான் தெரியும் அந்த கஸ்ரம். குற்றவாளிகளையும்,திருடர்களையும் தெருச்சண்டியஙளையும் பொலிஸ் கைதுசெய்யாமல் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்காமல் வெளிநாட்டில இருந்துபோய் நீங்கள் கைது செய்து நடவடிக்கை எடுக்கபோறியளோ? உங்களுக்கென்ன வெளிநாட்டு பொலிஸ் பாதுகாப்பில நீங்களும் உங்கட புள்ளைகுட்டியளும் இருந்துகொன்டு ஞாயம் கதைப்பியள்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்பிடிப்போடுங்க ....Third Eye அரிவாளை 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Thirdeye said:

வணக்கம்.... மூன்றாவது கண்,
நீங்கள், ஸ்ரீலங்கா பொலிஸ் சுத்தமானவர்கள் என்று நம்புகின்றீர்களா? 
"யாழில்  27 இளைஞர்கள்   கைது"  என்பது தான்.... தலைப்பு.
அதுகும்.. அந்தச் செய்தியின் படி, புதன்கிழமை... அதாவது ஒரே நாளில், கைது செய்யப் பட்டவர்கள் தான் அந்த 27 பேரும்.
அவர்கள் அவ்வளவு பேரும்,  உங்கள் மொழியில்.... வப்புகள், குற்றவாளிகளும்,திருடர்களும்,  தெருச்சண்டியங்களும் என்றால்....
18 வயதிற்கு மேற்பட்ட தமிழன் அத்தனை பேரும்... எந்த நேரமும், கைது செய்யப் படலாம், என்பதையே.... யாழ்கள உறவு  பாஞ்ச், தனது அனுபவத்தில் .... நாகரிகமாக தெரிவித்துள்ளார்.  புரிந்தால் சரி, புரியாவிட்டால்....  இதுக்கு, மருந்து இல்லை.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, தமிழ் சிறி said:

பொலிஸ் தெருப்பொறுக்கியளத்தான் கைது செய்திருக்கு.செய்திய வடிவா வாசிக்கவும்.தெருப்பொறுக்கியள கைது செய்யுறதுக்கு உங்களுக்கு குத்திமுறியுது என்டா ஒன்டில் நீங்களும் ஒருகாலத்தில் தெருப்பொறுக்கி திருட்டு பொம்பிளபொறுக்கி கூட்டத்தில இருந்திருக்கவேணும் இல்லா இந்த தெறுப்பொறுக்கி கூட்டத்தில ஏதோ ஒரு தொடர்பு இருக்கவேனும்.சிவில் நடவடிக்கை இதுக்கும் சிங்கள புலனாய்வுத்துறை செய்யுற கைதுகளுக்கும் முடிச்சு போட்டு தெருப்பொறுக்கியளுக்கு வக்காலத்துக்கு வாங்காதையுங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Thirdeye said:

Smileyநல்ல அழகிய தமிழில்.... முற்றுப் புள்ளி  ஒன்றும் வைக்காமல், என்னைப் புகழ்ந்து ... தொடர்ச்சியாக எழுதியமைக்கு நன்றி.  Smiley

அப்பிடி என்றால்... நீங்கள், ஸ்ரீலங்கா  பொலிசை நம்பும்.. பொச்சை தமிழன்.  Smiley
நாளைக்கு....  உமது, உறவினர்களும், இதே... போர்வையில் கைது செய்யப் பட்டாலும்....  Smiley
சொறிலங்கா பொலிசுக்கு, நீங்கள் வக்காலத்து வாங்க வரவேண்டும். சரியா...  Smiley

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Thirdeye said:

இதை விட... ஒன்று, அதிகமாக செய்தனான்... அதை குறிப்பிட மறந்து விட்டீர்கள்.

Edited by தமிழ் சிறி

10 hours ago, தமிழ் சிறி said:

வணக்கம்.... மூன்றாவது கண்,
நீங்கள், ஸ்ரீலங்கா பொலிஸ் சுத்தமானவர்கள் என்று நம்புகின்றீர்களா? 
"யாழில்  27 இளைஞர்கள்   கைது"  என்பது தான்.... தலைப்பு.
அதுகும்.. அந்தச் செய்தியின் படி, புதன்கிழமை... அதாவது ஒரே நாளில், கைது செய்யப் பட்டவர்கள் தான் அந்த 27 பேரும்.
அவர்கள் அவ்வளவு பேரும்,  உங்கள் மொழியில்.... வப்புகள், குற்றவாளிகளும்,திருடர்களும்,  தெருச்சண்டியங்களும் என்றால்....
18 வயதிற்கு மேற்பட்ட தமிழன் அத்தனை பேரும்... எந்த நேரமும், கைது செய்யப் படலாம், என்பதையே.... யாழ்கள உறவு  பாஞ்ச், தனது அனுபவத்தில் .... நாகரிகமாக தெரிவித்துள்ளார்.  புரிந்தால் சரி, புரியாவிட்டால்....  இதுக்கு, மருந்து இல்லை.

4 hours ago, Thirdeye said:

பொலிஸ் தெருப்பொறுக்கியளத்தான் கைது செய்திருக்கு.செய்திய வடிவா வாசிக்கவும்.தெருப்பொறுக்கியள கைது செய்யுறதுக்கு உங்களுக்கு குத்திமுறியுது என்டா ஒன்டில் நீங்களும் ஒருகாலத்தில் தெருப்பொறுக்கி திருட்டு பொம்பிளபொறுக்கி கூட்டத்தில இருந்திருக்கவேணும் இல்லா இந்த தெறுப்பொறுக்கி கூட்டத்தில ஏதோ ஒரு தொடர்பு இருக்கவேனும்.சிவில் நடவடிக்கை இதுக்கும் சிங்கள புலனாய்வுத்துறை செய்யுற கைதுகளுக்கும் முடிச்சு போட்டு தெருப்பொறுக்கியளுக்கு வக்காலத்துக்கு வாங்காதையுங்கோ.

சரி சரி சண்டைய விடுங்கோ

கைது செய்யப்பட்டவர்கள் யாவருமே இந்த சமுதாயத்திற்கு தேவையற்ற காவாலிகள்தான். கடந்த இரு வாரங்களாக யாழில் நடைபெற்ற அசம்பாவங்கள் தொடர்பில் இந்த கைதுகள் நடைபெற்றிருக்கிறது. உதுகள் வெளியே இருப்பதை விட கொஞ்ச நாள் உள்ளேயே இருக்கட்டும். 
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, தமிழ் சிறி said:

Smileyநல்ல அழகிய தமிழில்.... முற்றுப் புள்ளி  ஒன்றும் வைக்காமல், என்னைப் புகழ்ந்து ... தொடர்ச்சியாக எழுதியமைக்கு நன்றி.  Smiley

அப்பிடி என்றால்... நீங்கள், ஸ்ரீலங்கா  பொலிசை நம்பும்.. பொச்சை தமிழன்.  Smiley
நாளைக்கு....  உமது, உறவினர்களும், இதே... போர்வையில் கைது செய்யப் பட்டாலும்....  Smiley
சொறிலங்கா பொலிசுக்கு, நீங்கள் வக்காலத்து வாங்க வரவேண்டும். சரியா...  Smiley

வேற எந்த பொலிச நம்புறதாம்? உங்கட ஜேர்மன் பொலிஸ அனுப்பி காவாலியலை தண்டிச்சு திருடுபோன பொருட்களுக்கும் பாதிக்கப்பட்ட சனத்துகும் நீதிவாங்கி தரப்போறியளோ? இங்க இருக்கிற சனம் வாழோனும்.உங்கள மாதிரி ஜேர்மன் பொலிசின்ட பாதுகாப்பில இருந்துகொன்டு புள்ளைகுட்டியளுக்கு உலகிலையே சிறந்த கல்வி உணவு உடுப்பு போக்குவரத்து எதிர்காலத்துக்கு உத்தரவாதம் பாதுகாப்பு என்டு ஆக்கிகுடுத்திட்டு புளிச்சல் கதை விடேலா. ஊரில இருக்கிற சனமும் உங்களமாதிரிதான் உணர்ச்சி உள்ள வாழப்பிறந்த மனுசர்.நீங்கள் மட்டும்தான் வாழப்பிறந்தவர்கள் அதுகள் சாகப்பிறந்ததுகல் எண்ட கணக்கா கதைக்கிறத நிறுத்துங்கோ.என்ன மனுசரப்பா நீங்கள் எல்லாம்.உலகமகா சுயநலவாதிகள்.

6 hours ago, தமிழ் சிறி said:

இதை விட... ஒன்று, அதிகமாக செய்தனான்... அதை குறிப்பிட மறந்து விட்டீர்கள்.

அதை உங்கட பேருக்கு பின்னால எழுதி பேப்பரில போடுங்கோ.உங்கட வீரப்பிரதாபங்களை உலகம் அறியட்டும்.<_<

  • கருத்துக்கள உறவுகள்

அனைத்துத் துறைகளிலும் முன்னேறியிருந்த இலங்கைத் தமிழர்களை இல்லாது ஒழிப்பதற்கு சிங்களம் எடுத்த முயற்சிகள் படிப்படியாக நிறைவேறி வருகிறது. அந்தச் சிங்களத்தின் செயற்பாடுக்குரிய கோடாரிக்குப் பிடியாக தமிழர்கள் சிலரும் செயற்படுவது கண்கூடு. காடைகள் அதிகம் நிறைந்துள்ள சிங்கள இனத்தைப்போல் தமிழினத்திலும் காடையர்களை வளர்த்து விடுவதில் சிங்களம் வெற்றிகொண்டு வருகிறது. சிறிமாவோ பண்டாரநாயக்க பிரதமராக வரும்வரை கல்வியில் முன்னணி வகித்த தமிழர்கள் படிப்படியாக பின்தள்ளப்பட்டு, இன்று கடைநிலையில் இருப்பதாக சமீபத்தில் செய்தியை வெளியிட்டார்கள். வப்புகள், குற்றவாளிகள், திருடர்கள், தெருச்சண்டியர்களை எந்த இனம் மிகவும் அதிகமாகக் கொண்டிருந்தது என்பதைச் சென்ற தலைமுறையினரைக் கேட்டால் சொல்வார்கள். தமிழினத்தில் இப்படியான சமூக விரோதிகள் அதிகம் உருவாகாமல் தடுப்பதற்காகவும் தமிழர்கள் அதிகமாக வாழும் வட, கிழக்கு மாகாணங்களுக்குக் காவல்துறை அதிகாரத்தையும் தமிழ்த் தலைவர்கள் கேட்டனர். இலங்கை குடியரசுநாடாக மாறுவதற்கு முன்பும், அதன்பின் ஆயுதப்போராட்டம் நடைபெற்ற 30 வருட காலத்திலும் தமிழர்களை ஆளும் அதிகாரம் ஓரளவு தமிழர்களிடமே இருந்தது. இந்தக் காலங்களில், எப்படி இத்தகய காடையர்கள் இல்லாத இனமாகத் தமிழினத்தால் வாழ முடிந்தது......???
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொலிஸ் காணி அதிகாரங்கள் வடகிழக்கில் தமிழர்களுக்கு கொடுக்கப்பட்டால் இந்த சமூகவிரோத பிரச்சினைகளுக்கு தீர்வுகாணலாம் பாஞ்.ஆனால் பொலிஸ் அதிகாரம் தமிழர் கைகளுக்கு வந்தவுடன் அங்கு சாதிபுகுந்துவிடும்.அடக்குமுறை அங்கு இன்னொரு வடிவம் பெறும். உயர்ந்த சாதிக்காறன் தாழ்ந்த சாதிக்காறனை அடக்க ஆரம்பிப்பான் இந்த அதிகாரம்களை கொண்டு.வடக்குக்கும் கிழக்குக்கும் பிரதேச காழ்ப்புணர்வு வேறு உண்டாகும். தமிழனா கொக்கா.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையான வப்புகள் பிடிபட்டால் நல்ல காரியம். ஒரு சில காலம் உப்பிடித்தான் பிடிக்கிறோம் என்று, பிடிபட்டவை  எல்லாரும்  குடிகாரரும், மனநிலை பாதிக்கப் பட்டவர்களுந்தான். உண்மையான குற்றவாளிகள் யாரையும் பிடிக்கேலை. எலியை  விட்டிட்டு வாலைப் பிடிப்பினம். அப்பாவிகளை  பிடித்து போட்டு புலியள் என்று  படம் காட்ட, ஆமியள் வீரர், சூரர் என்று சிங்களவர் புளகாங்கிதம் அடைந்ததுபோல் நாங்களும் அடைவோம்.

  • கருத்துக்கள உறவுகள்
On 29.4.2016 at 2:51 PM, Thirdeye said:

உதுகல் ஒன்டும் அப்பாவியள் இல்லை. பூரா வப்புவள். நீங்கள் தாயக நிலவரம் புரியாமல் வெளிநாட்டில் இருந்து கதைக்காதேங்கோ.இந்த வப்புகளால கஸ்ரப்படுற ஊர் சனத்துக்குதான் தெரியும் அந்த கஸ்ரம். குற்றவாளிகளையும்,திருடர்களையும் தெருச்சண்டியஙளையும் பொலிஸ் கைதுசெய்யாமல் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்காமல் வெளிநாட்டில இருந்துபோய் நீங்கள் கைது செய்து நடவடிக்கை எடுக்கபோறியளோ? உங்களுக்கென்ன வெளிநாட்டு பொலிஸ் பாதுகாப்பில நீங்களும் உங்கட புள்ளைகுட்டியளும் இருந்துகொன்டு ஞாயம் கதைப்பியள்.

6 hours ago, Thirdeye said:

பொலிஸ் காணி அதிகாரங்கள் வடகிழக்கில் தமிழர்களுக்கு கொடுக்கப்பட்டால் இந்த சமூகவிரோத பிரச்சினைகளுக்கு தீர்வுகாணலாம் பாஞ்.ஆனால் பொலிஸ் அதிகாரம் தமிழர் கைகளுக்கு வந்தவுடன் அங்கு சாதிபுகுந்துவிடும்.அடக்குமுறை அங்கு இன்னொரு வடிவம் பெறும். உயர்ந்த சாதிக்காறன் தாழ்ந்த சாதிக்காறனை அடக்க ஆரம்பிப்பான் இந்த அதிகாரம்களை கொண்டு.வடக்குக்கும் கிழக்குக்கும் பிரதேச காழ்ப்புணர்வு வேறு உண்டாகும். தமிழனா கொக்கா.

புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களிடம் ஏற்பட்டுள்ள மாற்றங்களை, நேரில்வந்து அவதானித்தால் உங்களுக்கு அதிர்ச்சி ஏற்படும் என்றே எண்ணுகிறேன். உயர்ந்தவன், தாழ்ந்தவன். உயர்ந்தசாதி, தாழ்ந்தசாதி என்ற பாகுபாடுகளை இங்குள்ள தமிழர் வெளிப்படுத்துவதில்லை. ஊரில்,மேல்மட்டத்தில் உயர்ந்து வாழ்ந்தவரும், பிராமணர்கள் உட்பட இங்கு தங்கள் வைபவங்களை நடாத்தும்போது, அனைவரையும் அழைத்துக் கொண்டாடுவார்கள். சாதிக்கண்ணோட்டம் இங்கு இருப்பதில்லை. ஆனால் இதே தமிழர்கள் சொந்த மண்ணில் வந்து நிற்கும்போது அங்குள்ள தங்கள் உறவுகளை எண்ணிப் பழையநிலைக்குப் போய்விடுவது ஏன்? என்றும் ஆராய்தல் வேண்டும்! ஊர்ச்சனமும் தங்களை மாற்றிக்கொள்ள முன்வரவேண்டும். மாற்றம் வரும் என்ற நம்பிக்கை உள்ளது. அனைத்திற்கும் முதலில் தமிழினம், தங்களைத் தாங்களே தாழ்த்திக் குறைகூறுவதை விடுத்து, வேற்றினங்களின் அடக்குமுறைக்குள்ளிருந்து வெளிவரவேண்டும் என்பதை உணர்வது அவசியம்.
 
Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.