Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முன்வரிசையில் சரத்... பின்வரிசையில் ஸ்டாலின்: ஜெ. பதவியேற்பு விழாவில் அவமதித்ததாக கருணாநிதி குற்றச்சாட்டு

Featured Replies

முன்வரிசையில் சரத்... பின்வரிசையில் ஸ்டாலின்: ஜெ. பதவியேற்பு விழாவில் அவமதித்ததாக கருணாநிதி குற்றச்சாட்டு

 
 
திமுக தலைவர் கருணாநிதி. | படம்: ஜே.மனோகரன்.
திமுக தலைவர் கருணாநிதி. | படம்: ஜே.மனோகரன்.

முதல்வர் பதவியேற்பு விழாவில் ஸ்டாலினுக்கு கூட்டத்தோடு கூட்டமாக இடம் போடப்பட்டு அமரவைத்தது ஜெயலலிதா திருந்தவில்லை என்பதையே காட்டுவதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''இன்று சென்னைப் பல்கலைக் கழக நூற்றாண்டு மண்டபத்தில் நடைபெற்ற முதல்வர், மற்றும் அமைச்சர்கள் பதவியேற்ற அரசு விழா நடந்தது.

அண்மையில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில், 89 இடங்களைப் பெற்று பிரதான எதிர்க் கட்சி வரிசையிலே அமரும் தகுதியைப் பெற்ற ஸ்டாலினுக்கு கூட்டத்தோடு கூட்டமாக இடம் போடப்பட்டது.

அதே தேர்தலில் தோற்றுப் போன சரத்குமாருக்கு முதல் வரிசையில் இடம் போட்டு - அமர வைத்து வேண்டுமென்றே திமுகவை திட்டமிட்டு அவமானப்படுத்திய ஜெயலலிதாவைப் பார்க்கும்போது இன்னும் அவர் திருந்தவில்லை, திருந்தப் போவதுமில்லை என்று தான் தெளிவாகப் புரிகிறது! தமிழ் மக்கள் அல்லவா திருந்த வேண்டும்'' என்று கருணாநிதி கூறியுள்ளார்.

http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/article8636409.ece?homepage=true

stalin1.jpg

  • கருத்துக்கள உறவுகள்

திமுகவும் ஆதரவாளர்களும் இதை நினைத்து அழுத வண்ணம் உள்ளனர்,

யாரய்யா ஸ்டாலின் எதிர்கட்சி தலிவரா? 

  • கருத்துக்கள உறவுகள்

செம்மொழி மாநாட்டில் உங்கள் குடும்பத்தினரை தான் முதல் வரிசையில் அமர வைத்தீர்கள் தமிழ் அறிஞர்களை பின் வரிசையில் அமர வைத்தீர்களாமே.கணக்கு சரி தானே.
 

  • தொடங்கியவர்

ஸ்டாலினை அவமதிக்கும் எண்ணமில்லை..! ஜெயலலிதா விளக்கம்

jayalong1aa.jpg

 

தவியேற்பு விழாவில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு பின்வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா விளக்கம் அளித்துள்ளார்.

தமிழக முதல்வராக ஜெயலலிதா 6வது முறையாக நேற்று பதவியேற்றுக் கொண்டார். சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற விழாவில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர். ஆனால் அவர்களுக்கு பின் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு, திமுக தலைவர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஸ்டாலினுக்கு இருக்கை ஒதுக்கிய விவகாரம் தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா விளக்கம் அளித்துள்ளார். அதில், 'எனது பதவியேற்பு விழாவில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டதில் மகிழ்ச்சியடைகிறேன். அவருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். விழா அரங்கில் எம்.எல்.ஏ.க்கள் அமர்வதற்காக ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் ஸ்டாலின் அமர்ந்திருந்தார். பொதுத்துறை அதிகாரிகள் பதவி வரிசைப்படியே இருக்கையை ஒதுக்கியுள்ளனர்.
 

stalin1.jpg


எனவே, ஸ்டாலின் அவருக்கு பின் வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டதில் ஏதேனும் வருத்தம் ஏற்பட்டிருந்தாலும், அவருக்கு நான் இத்தருணத்தில் ஒரு விளக்கத்தை தர விரும்புகிறேன். இருக்கை ஒதுக்கீடு மூலம் திமுகவையோ, ஸ்டாலினையோ அவமதிக்கும் உள்நோக்கம் எனக்கு இல்லை.

ஒருவேளை, ஸ்டாலின் எனது பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதாக அதிகாரிகள் முன்னரே எனக்குத் தெரிவித்திருப்பார்கள் என்றால் மரபு விதிகளைத் தளர்த்தி அவருக்கு முன் வரிசையில் இருக்கை ஒதுக்க அறிவுறுத்தியிருப்பேன். அவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதுடன், மாநிலத்தின் நன்மைக்காக அவரது கட்சியுடன் இணைந்து பணியாற்ற காத்திருக்கிறேன்.' என்று குறிப்பிட்டுள்ளார்.

http://www.vikatan.com/news/politics/64526-jayalalithaa-convey-wishes-to-mkstalin.art

13254349_1142144215846424_55135516801204

அடுத்த அதற்கடுத்த தேர்தலிலும் வெற்றிக்கு இப்பவே அலுவல்கள் பார்க்க தொடங்கிவிட்டார் அம்மா .

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ராலினுக்கு பின் வரிசை கொடுத்ததே பெரிய விசயம். எல்லாம் கட்டுமரம்.. அண்ணன் அழகிரிக்கு செய்த துரோகம் தான் இப்ப ஜெ வடிவில் வந்து பழிவாங்குது. tw_blush:tw_tounge_xd:

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞருக்கு வயதாகிவிட்டது. அதனால் அடுத்த முதன்மை எதிரியாக ஸ்டாலினுக்கு முக்கியத்துவம் அளிக்கிறார் ஜெயா.

  • கருத்துக்கள உறவுகள்

’வேண்டுமென்றே அன்பழகனுக்கு அவமரியாதை செய்யவில்லை. அதிகாரிகள் என் கவனத்துக்கு கொண்டு வந்திருந்தால் அவருக்கு முதல் வரிசையில் இடம் ஒதுக்க ஆணையிட்டு இருப்பேன். அவர் மீது எனக்கு நிரம்ப மரியாதை உண்டு.’

-- 2002 யில் ஜெயலலிதா

திமுகவையோ, ஸ்டாலினையோ அவமதிக்கும் உள்நோக்கம் இல்லை. ஒருவேளை, ஸ்டாலின் எனது பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதாக அதிகாரிகள் முன்னரே எனக்குத் தெரிவித்திருப்பார்கள் என்றால் நடைமுறை விதிகளைத் தளர்த்தி அவருக்கு முன் வரிசையில் இருக்கை ஒதுக்கியிருப்பேன்.

-- 2016 யில் ஜெயலலிதா...

# ஸ்டார்டிங் எப்பொழுதும் அப்படிதான் இருக்கும் பினிஷிங் தான் "அம்மாடி"யானு இருக்கும்.. இதில் கருணாநிதி குடும்பமும் விதிவிலக்கல்ல.. அவனுங்க ஆட்சிக்கு வந்தா இதை விட "அப்பாடி"யானு இருக்கும்..

 

13233058_236934906681205_207035933644169

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.