Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாள்வெட்டு குழு தலைவனை பல்லாண்டு வாழ வாழ்த்திய மாணவர்கள்

Featured Replies

வாள்வெட்டு குழு தலைவனை பல்லாண்டு வாழ வாழ்த்திய மாணவர்கள்

 

 

யாழில் இடம்பெற்று வரும் வாள் வெட்டு சம்பவங்களின் சூத்திரதாரிகள் என பொலிசாரால் தேடப்பட்டு வரும் சந்தேக நபர்களை வாழ்த்திய இரு மாணவர்களை ஜூன் மாதம் 6ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் உத்தரவு இட்டுள்ளார்.

யாழில் இடம்பெறும் வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் நேற்று ஞாயிற்றுக் கிழமை இரு சந்தேக நபர்கள் கந்தரோடை பகுதியில் வைத்து சுன்னாக பொலிசாரினால் கைது செய்யப்பட்டனர்.அவர்களிடம் இருந்து வாள் ஒன்றும் நீண்ட கத்தி ஒன்றும் கைப்பற்றப்பட்டு இருந்தது.

குறித்த இருவரும் யாழில் உள்ள பிரபல பாடசாலை மாணவர்கள் ஆவார்கள். அவர்கள் இருவரையும் இன்றைய தினம் திங்கள்கிழமை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் நீதவான் ஏ.யூட்சன் முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர்.

அதன் போது குறித்த சந்தேக நபர்கள் , யாழில் இடம்பெற்று வரும் வாள் வெட்டு சம்பவங்களின் சூத்திரதாரிகள் என தேடப்பட்டு வரும் இரு சந்தேக நபர்களான சன்னா  மற்றும் தேவா எனப்படுபவர்களுடன் தொடர்புகளை பேணி வந்ததாகவும் ,

அவர்களுக்கு கைத்தொலைபேசியில் "எங்கள் அண்ணா நீங்கள் பல்லாண்டு  வாழ வேண்டும். நாடு  நல்லா  இருக்க  பல்லாண்டு  வாழ வேண்டும். எங்கள் உயிரினும் மேலான எங்கள் அண்ணா என குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்.) அனுப்பியுள்ளதாக நீதவானின் கவனத்திற்கு இந்த குறுந்தகவல்களை பொலிசார் கொண்டு வந்தனர்.

அத்துடன் அவர்களது தொலைபேசியில் இருந்து அவர்கள் வாள் மற்றும் கத்தியுடன் விதம் விதமாக (போஸ்) எடுத்த படங்களையும் பொலிசார் நீதவானின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

அதனை அடுத்து இருவரையும் எதிர்வரும் 6ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு இட்டார்.

இதேவேளை கடந்த சில நாட்களுக்கு முன்னரும் வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் இரு பாடசாலை மாணவர்கள் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டு உள்ளனர்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/132442/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

 "எங்கள் அண்ணா நீங்கள் பல்லாண்டு  வாழ வேண்டும். நாடு  நல்லா  இருக்க  பல்லாண்டு  வாழ வேண்டும். எங்கள் உயிரினும் மேலான எங்கள் அண்ணா என குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்.) அனுப்பியுள்ளதாக நீதவானின் கவனத்திற்கு இந்த குறுந்தகவல்களை பொலிசார் கொண்டு வந்தனர். 

பெடியள் வித்தியாசமாய்தான் சிந்திக்கின்றார்கள்....

1 hour ago, putthan said:

 

 

பெடியள் வித்தியாசமாய்தான் சிந்திக்கின்றார்கள்....

இப்படி சிந்திப்பதற்கு நாம் அனுமதி கொடுத்தபடியால்தான்,  30 வருட காலத்தை நாமே நாசமாக்கிக் கொண்டோம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெரியார் said:

இப்படி சிந்திப்பதற்கு நாம் அனுமதி கொடுத்தபடியால்தான்,  30 வருட காலத்தை நாமே நாசமாக்கிக் கொண்டோம்.

அந்த சிந்திப்புக்கும் இந்த சிந்திப்புக்கும் வித்தியாசம் இருக்கு கண்டியளோ.....அந்த சிந்திப்பு தேவையின் நிமித்தம் வந்தது அதை வளர்த்ததில் வேறு இனம் பெரும் பங்காற்றியது மட்டுமல்ல ஊக்கிவித்ததும்....அதில் எங்களுக்கும் பெரும் பங்கு உண்டு ....இன்று வெளியில் இருந்து கொண்டு 30 வருடம் நாசமாய் போய்விட்டது என்று சொல்லலாம் ஆனால் அதற்கு முக்கிய காரணத்தையும் நாம் மறக்ககூடாது...

12 minutes ago, putthan said:

அந்த சிந்திப்புக்கும் இந்த சிந்திப்புக்கும் வித்தியாசம் இருக்கு கண்டியளோ.....

சிந்திப்பது வேறு வேறு?

அதன் விளைவுகள் அழிவு, நாசம்.

வித்தியாசம் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, பெரியார் said:

சிந்திப்பது வேறு வேறு?

அதன் விளைவுகள் அழிவு, நாசம்.

வித்தியாசம் இல்லை.

உண்மை ,ஆனால் அதையும் இதையும் ஒப்பிடமுடியாது ஒன்று தேவையின் நிமித்தம் உருவானது மற்றயது திமிரின் நிமித்தம் உருவானது
 

பேங்க் கொள்ளை அடிப்பதற்கும்  வேறு இனம்தான் எம்மை ஊக்குவித்ததா?

பேங்க் கொள்ளையும் தேவையின் நிமித்தமா?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

உண்மை ,ஆனால் அதையும் இதையும் ஒப்பிடமுடியாது ஒன்று தேவையின் நிமித்தம் உருவானது மற்றயது திமிரின் நிமித்தம் உருவானது

புத்தர்  நேரம் பொன்னானது...

 

1 hour ago, பெரியார் said:

பேங்க் கொள்ளை அடிப்பதற்கும்  வேறு இனம்தான் எம்மை ஊக்குவித்ததா?

பேங்க் கொள்ளையும் தேவையின் நிமித்தமா?

வங்கி மட்டுமா கொள்ளை அடித்தார்கள் .

இரு சுருட்டு தொழிலார்களை கொலை செய்துதான்  குரும்பசிட்டி வன்னியசிங்கம் வீட்டில் கொள்ளை அடித்தார்கள் .

இது என்ன  தேவையின் நிமித்தம் :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

விடிய முழிச்சவுடன் ஆரம்பிச்சாச்சு..

வாந்தி

எத்தனை திரிகளை பூட்டினாலும்

எத்தனை வயது வந்தாலும்

உறைக்கவே மாட்டுது

ஒரு நட்டு களண்டிட்டு போல...

Edited by விசுகு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, பெரியார் said:

இப்படி சிந்திப்பதற்கு நாம் அனுமதி கொடுத்தபடியால்தான்,  30 வருட காலத்தை நாமே நாசமாக்கிக் கொண்டோம்.

தம்பி பெரியாரே! வாள்வெட்டு/கத்திவெட்டு கலாச்சாரம் இயக்கங்கள் வரமுன்பே கொடிகட்டி பறந்தது. இலங்கை தமிழரின் பழைய நிலவரங்கள் சம்பவங்கள் தெரியாவிட்டால் தெரியாது என்று சொல்லுவது மனிதனுக்கு அழகு.
அதற்காக மற்றவர்களில் பழி போடாதீர்கள். பழக்கதோசமாக்கும்..:cool:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, arjun said:

வங்கி மட்டுமா கொள்ளை அடித்தார்கள் .

இரு சுருட்டு தொழிலார்களை கொலை செய்துதான்  குரும்பசிட்டி வன்னியசிங்கம் வீட்டில் கொள்ளை அடித்தார்கள் .

இது என்ன  தேவையின் நிமித்தம் :unsure:

கிளிநொச்சி வங்கி அடித்தது தேவையின் நிமித்தமோ?

கொள்ளை அடிப்பதே குற்றம் தான்

ஆனால் வங்கிக்கும் தனிநபர் வீட்டுக்கும் வித்தியாசம் இருக்கு .அதுவும் இரு அப்பாவிகளை கொலைசெய்து .

இவையெல்லாம் விளங்காதபடியால் தான் இன்று இந்த நிலை 

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, nunavilan said:

கிளிநொச்சி வங்கி அடித்தது தேவையின் நிமித்தமோ?

அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட 2013 அறிக்கையில்.. உந்த ஒட்டுக்குழுக்கும்பல் எப்படி என்ன வகையில் மக்கள் மீது பயங்கரவாதத்தை.. சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளை.. சித்திரவதைகளை எல்லாம் நடத்தினார்கள் என்று பட்டியலிட்டு இருக்கிறார்கள். அமெரிக்கனுக்கே தெரிஞ்ச விசயங்கள்.. இவைக்கு தெரியாது தானே.

விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் யாழ் குடா இருந்த காலத்தில்.. பின் வன்னி கிழக்கு அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த போது.. ஒரு வாள் வெட்டு.. கத்தி வெட்டுச் சம்பவங்களும் நடந்ததாகத் தெரியவில்லை. சிறிய சிறிய குடும்பப் பிணங்குகளைத் தவிர.

ஆனால்.. 1987 - 90 மார்ச் வரை இந்தியப் படைகள் காலத்தில்.. தினமும் வாள் வெட்டுத்தான்.. மண்டையன் குழுக்கள் என்ன.. கொள்ளையடி குழுக்கள் என்ன.. எல்லாம் ஒட்டுக்குழுக்கள் - இந்தியப் படைகளின் கூட்டுங் கைங்கரியம்.

இப்போ மீண்டும் அந்தக் காலம் வந்திருக்குது. எப்போதும் எமது நிலம் எதிரியின் ஆக்கிரமிப்பின் கீழ் போகும் போதும்.. ஒட்டுக்குழுக்களின் செயற்பாடுகள் அதிகரிக்கும் போதும் இவ்வாறான பயங்கரவாதச் செயற்பாடுகளால் மக்களை அச்ச மூட்டி வைப்பது தொடர்கதை ஆகிறது.

போராட்ட காலத்திற்கு முன் சில தமிழ் அரசியல் கட்சிகளே சண்டியர் அரசியலை வகுத்தெடுத்து.. சண்டியர்கள் மூலம்.. மக்களை மிரட்டி வாக்குப் பறிக்கும் தந்திரங்களை எல்லாம் கையாண்டதாக அன்றைய காலங்களில் பொலிஸில் இருந்து ஓய்வுபெற்ற தமிழர் பெரியவர்கள் இப்பவும் சாட்சிகளாகச் சொல்லக் கேட்க முடியும். 

 எமது மக்களின் கேடயமாக விளங்கிய மக்களின்.. நேசிப்புக்கு பாத்திரமான விடுதலைப்புலிகளின் மெளனிப்பின் பின்.. இவை எல்லாம் அரங்கேறும்.. என்று.. எதிர்பார்க்கப்பட்ட ஒன்று தான். தவறாமல் அரங்கேறுகிறது.

கொள்கைகள் அற்ற.. கொள்ளையனையும் கொலைகாரனையும் கூப்பிட்டு வைச்சுக் கொண்டு.. சுதந்திரமாக உலவ விட்டுக் கொண்டு.. எப்படி ஒரு உருப்படியான அமைதியான சிவில் சமூகத்தைக் கட்டி அமைக்க முடியும். அது சாத்தியமற்ற பகற்கனவு. :rolleyes:

Edited by nedukkalapoovan

விக்கி தம்பி 

உங்களுக்கு பதில் எழுதுவது நேரவிரயம் .மாட்டை பற்றி எழுதசொன்னால் மாட்டை கொண்டுபோய் பிலா மரத்தில் கட்டிவிட்டு பிலாவை பற்றி எழுத தொடங்கிவிடுவீர்கள் .

உங்களிடம் ஒன்று இரண்டு அறிக்கைகள் தான் இருக்கு என்னிடம் ஆயிரம் அறிக்கைகள் இருக்கு .அது சர்வதேசத்திடமும் இருக்கு .

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகள் நீதியான சமூகம்.. மக்களுக்காக நாடு கேட்டுப் போராடி சர்வதேசத்திடம் பெயர் வாங்கினார்கள் என்றால்..

ஒட்டுக்குழுக்கள்.. காட்டிக்கொடுப்பு.. பயங்கரவாதம்.. பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள்.. சட்டவிரோதச் செயற்பாடுகள்.. கப்பம்.. கொள்ளை.. கொலை... படுகொலைகள் என்று எதிரிகளுக்காகச் சொந்த மக்களுக்கு எதிராகச் செய்து சர்வதேசத்திடம் பெயர் வாங்கி இருக்கிறார்கள். இதன் தொடர்ச்சி தான்.. இந்த சமூக வன்முறைகளின் பெருக்கம்.  tw_blush:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கப்பம்,பாலியலுக்காக கொலை கொள்ளை அடித்தவர்கள் ஒரு நாட்டுக்காகவும் இனத்துக்காவும் போராடியவர்களை தூற்றவது மொக்குத்தனத்தின் சிறப்பம்சம்.

நான்தான் நல்லவன் நீ கூடாதவன் 

நான் செய்தது நீ செய்தது பிழை 

இப்படியே நீட்டி முழக்காமல்

ஒரு முற்றுபுள்ளியை வைப்பம் .

வன்னியசிங்கம் வீட்டில் நகை கொள்ளைக்கு போய் இரு சுருட்டு தொழிலார்களை சுட்டுகொன்றது சரியா? பிழையா?

பிறகு மிச்சத்தை கதைப்பம் .  

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியசிங்கம் வீட்டில் கொள்ளை நடந்ததற்கு என்ன ஆதாரம்.. வன்னியசிங்கமே அதைச் செய்திருக்கலாம்.. ஒட்டுக்குழுக்கள் அதில் பங்கு பிரிச்சிருக்கலாம்.. இப்படி எத்தனையோ கதை பின்னலாம்.. ஒரு சம்பவத்தை வைச்சு. அதுவும் எத்தனையோ ஆண்டுகளின் பின்னாடி..!!

முதலில் அப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால்.. அதற்கான நீதி விசாரணை அவசியம். அப்படி ஒன்று நடந்திருந்தால் அதற்கான ஆதாரம்.. நீதிமன்ற அறிக்கை.. அல்லது தீர்ப்பு..  அவசியம். அதன் பின் தான் மிச்சத்தை யார் எப்படி.. எவ்வாயால் சொல்வது என்றிருக்கும். அதை விடுத்து.. கொன்றார்கள்.. கொள்ளை அடித்தார்கள் என்று.. ஒட்டுக்குழுக்கள் தங்கள் வசதிக்கு அவிட்டு விடுவதை எல்லாம் நம்பி கதை அளந்து கொண்டிருப்பதில் பயனில்லை.

நாங்கள் ஒட்டுக்குழுக்கள்.. மீது பன்னாட்டு நீதி அமைப்புக்கள் முன்வைக்கும் குற்றங்களை தான் பட்டியல்படுத்தி இருக்கிறோம். எமது மக்கள் அதனை அனுபவித்த போது உடனடிச் சாட்சியங்களாக இருந்து கண்டிருந்தாலும் கூட...! 

இந்த வாள் வெட்டுகளுக்கு பின்னணியில்.. எதிரிகளின் ஆக்கிரமிப்பும்.. எதிரிகளுக்கு அடிவருடும்.. ஒட்டுக்குழுக்களும் இருக்க பலமான வாய்ப்புள்ளது என்பதை தான் பன்னாட்டு நீதிச் சமூகம் இனங்காட்டும் அறிக்கைகள் சொல்கின்றன. tw_blush:

தம்பி விடயம் மாட்டை பற்றியது பலாவை பற்றியது அல்ல .tw_confused:

குறுக்கால ஒரே கீறு சைபர் மார்க்ஸ் .tw_dissapointed:

இனி அடுத்தவரின் பதிலை பார்ப்பம் .:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்பு.. தற்போதைய சிங்கள இராணுவ ஆக்கிரமிப்பின் பின்னான வாள் வெட்டுக் கலாசாரம் பற்றியது..

யார் எதை எங்க எப்ப செய்தான் என்பதற்கு சரியான ஆதாரமற்ற.. பழைய மாட்டைப் பற்றியதோ.. பலாவைப் பற்றியதோ அல்லவே.

டபிள் சைபர். tw_blush:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

யாழின் நிர்வாகத்துக்கு.....

விமர்சனம் என்றரீதியில்

தமிழரது போராட்டத்தின் மீதும்

போராளிகள் மீதும்

மாவீரர்கள் மீதும்

வைக்கப்படும் கேடு கெட்ட பழி உணர்வுகளை இப்படியே அனுமதிக்கப்போகின்றீர்களா?

இதன் மூலம் மாவீரர்களை

சாதாரண கள்ளர்கள்

கொலை வெறியர்கள்

பாவஇருக்கமற்ற அரக்கர்கள் என வரலாற்றை எழுதிமுடிக்கப்போகின்றீர்களா??

முடிவை தந்தால்

நாங்களும் எமது முடிவுகளை எடுக்கும் காலம் வந்துவிட்டது என நினைக்கின்றேன்...

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பெரியார் said:

பேங்க் கொள்ளை அடிப்பதற்கும்  வேறு இனம்தான் எம்மை ஊக்குவித்ததா?

பேங்க் கொள்ளையும் தேவையின் நிமித்தமா?

அண்ணனுக்கு ராபின் குட் கதை தெரியாது போல. ராபிக் குட் கொள்ளைக்காரன் அரசுக்கு.. ஆனால்.. மக்களுக்கு புரட்சியாளன். 

ராபின் குட் டோட.. மாபியாக்களையும்.. பைரேட்ஸையும் ஒப்பிடக் கூடாது. ராணி கமிக்ஸ் வாங்கிப் படியுங்கண்ணன்.. முதலில.  :rolleyes:tw_blush:

2 minutes ago, விசுகு said:

யாழின் நிர்வாகத்துக்கு.....

விமர்சனம் என்றரீதியில்

தமிழரது போராட்டத்தின் மீதும்

போராளிகள் மீதும்

மாவீரர்கள் மீதும்

வைக்கப்படும் கேடு கெட்ட பழி உணர்வுகளை இப்படியே அனுமதிக்கப்போகின்றீர்களா?

இதன் மூலம் மாவீரர்களை

சாதாரண கள்ளர்கள்

கொலை வெறியர்கள்

பாவஇருக்கமற்ற அரக்கர்கள் என வரலாற்றை எழுதிமுடிக்கப்போகின்றீர்களா??

முடிவை தந்தால்

நாங்களும் எமது முடிவுகளை எடுக்கும் காலம் வந்துவிட்டது என நினைக்கின்றேன்...

இதையே தான் நான் யாழில் இணைந்த காலம் முதல் கேட்கின்றேன் .

போராட சென்ற மாற்று இயக்க போராளிகள் மீது இப்படியான குற்றங்களை வைத்தால் அவர்களுக்கு எவ்விதமும் புலிகளும் சளைத்தவர்கள் அல்ல என்பதை  அனைவரும் அறியவேண்டும் என்றுதான் ஆதாரங்களுடன் நான் பதிகின்றேன் .

எல்லோருக்கும் மரியாதையை  கொடுத்து மதித்தால் எனக்கும் நேரம் மிச்சமாகிவிடும் .

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, arjun said:

இதையே தான் நான் யாழில் இணைந்த காலம் முதல் கேட்கின்றேன் .

போராட சென்ற மாற்று இயக்க போராளிகள் மீது இப்படியான குற்றங்களை வைத்தால் அவர்களுக்கு எவ்விதமும் புலிகளும் சளைத்தவர்கள் அல்ல என்பதை  அனைவரும் அறியவேண்டும் என்றுதான் ஆதாரங்களுடன் நான் பதிகின்றேன் .

எல்லோருக்கும் மரியாதையை  கொடுத்து மதித்தால் எனக்கும் நேரம் மிச்சமாகிவிடும் .

உங்களுக்கு ஒரு சிலரை பழி வாங்க

அவர்கள் தான் கிடைத்தார்களா?

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.