Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

26 வருடங்களின் பின்னர் காங்கேசன்துறை நாடேஸ்வரா கல்லூரி மீள்ஆரம்பம்

Featured Replies

26 வருடங்களின் பின்னர் காங்கேசன்துறை நாடேஸ்வரா கல்லூரி மீள்ஆரம்பம்
 
article_1464856510-KKS-%287%29.jpg

-சொர்ணகுமார் சொரூபன்

காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரியின் கனிஷ்ட வித்தியாலயம், 26 வருடங்களின் பின்னர் மீண்டும் தனது சொந்த இடத்தில், இன்று வியாழக்கிழமை (02) முதல் மீண்டும் இயங்க ஆரம்பித்துள்ளது.

கடந்த கால யுத்தத்தின் போது, யாழ். மாவட்டத்தினை இராணுவத்தினர் முழுமையாக கைப்பற்றும் நோக்கில் தாக்குதல் மேற்கொள்ளபட்டது. இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த மக்கள், கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19ஆம் திகதி இடம்பெயர்ந்தனர்.

இதன் பின்னர், கடந்த 26 வருடங்களாக குறித்த பாடசலையின் கல்வி நடவடிக்கைகள் அனைத்தும்  தெல்லிப்பழை ஸ்ரீ சாயிதுர்க்கை அம்மன் ஆலயத்தின் முன்பாக உள்ள தனியார் வீடொன்றில் இடம்பெற்று வந்தது.

இதனையடுத்து, இவ்வாண்டு மார்ச் மாதம் 12ஆம் திகதியன்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், குறித்த இரு பாடசாலைகளும் அவற்றின் அதிபர்களிடம் கையளிக்கப்பட்டன.  இந்நிலையில், போர்ச்சூழலில் அழிவுற்று எஞ்சிய கட்டிடங்களைத் திருத்தி, கல்வி நடவடிக்கைகள் யாவும் இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இப்பாடசாலையில் தற்போது சுமார் 150 மாணவர்கள், கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். வலிகாமம் வலயக்கல்வி பணிப்பாளர் செ.சந்திரராஜாவின் தலைமையில் இடம்பெற்ற இன்றைய ஆரம்ப நிகழ்வில், இப்பாடசாலையின் பழைய மாணவனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராசா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், வடமாகாண கல்வி அமைச்சர் தம்பிராஜா குருகுலராஜா மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

article_1464856524-KKS-%284%29.jpg

article_1464856533-KKS-%282%29.jpg

- See more at: http://www.tamilmirror.lk/173676#sthash.C5p4XCGO.dpuf
  • கருத்துக்கள உறவுகள்

சுமார் ஒரு தலைமுறைக் காலங்கள் கடந்து விட்டது... இனியாவது அது மிகவும் நல்ல முறையில் நடக்க வேண்டும்....!

2 minutes ago, suvy said:

சுமார் ஒரு தலைமுறைக் காலங்கள் கடந்து விட்டது... இனியாவது அது மிகவும் நல்ல முறையில் நடக்க வேண்டும்....!

மக்கள், வீடுகள் இல்லா இடத்தில் இது சரிவரும் என்று தோன்றவில்லை. இன்று போயிருந்தேன் பாடசாலைக்கு.

நம்பிக்கைதான் வாழ்க்கை.

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மீள் குடியேறுவதும் , போக்குவரத்துச் சேவைகள் தொடர்ந்தும்  வர சில காலத்தில் சீராகும் என நம்புகின்றேன்....!

7 minutes ago, suvy said:

கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மீள் குடியேறுவதும் , போக்குவரத்துச் சேவைகள் தொடர்ந்தும்  வர சில காலத்தில் சீராகும் என நம்புகின்றேன்....!

இல்லை சுவி, கட்டிடங்களையே  அத்திவாரத்துடன் பெயர்த்து வெறும் வெளியாக உள்ளது காங்கேசன்துறை. இந்த வெளிக்குள்தான் நூற்றுக்கணக்கான வீடுகளும், பல கோவில்களும் இருந்ததா என்று தோன்றுகிறது. இவை இருந்ததிற்கான எந்த அடையாளமும் இல்லை. வெளி என்பதால் தூரம் என்பது குறுகியதாவே உள்ளது. 

இது  மற்றைய விடுவிக்கப்பட்ட இடங்கள் போல இல்லை. அங்கு வீடுகள் இடிந்திருந்தாலும் சுவர்களாவது மிச்சம் இருந்த்தது. இங்கு தாம் பாவிக்கு வீடுகளை தவிர அத்தனையும் அத்திவாரத்துடன் கிண்டி எடுக்கப் பட்டுள்ளது. யாழ் மாவட்டத்தில் இருந்த நகர சபைகளில் இதுவும் ஒன்று. 3 வருடங்களின் முன்பு கூட எல்லாமே இடிந்த நிலையில் இருந்த்தது. பின்னர் மகிந்தவால் புடுங்கப்பட்டது. கிணறுகள் கூட இல்லை. காணிகளை அடையாளம் கூட காண முடியாது - இத்தனைக்கும் இங்கு சண்டையே நடந்தது இல்லை. பருத்தித்துறை வீதிக்கும் கடலுக்கும் இடையே இருந்த அவ்வளவும் இன்று இல்லை. எத்தனை தேவாலயங்கள், கோவில்கள், பாடசாலைகள், வீடுகள்.

அவ்வளவையும் அழித்துவிட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஜீவன் சிவா said:

சிங்கள அரசும் அவர்களுடைய ராணுவமும் ரொம்ப நல்லவர்கள்
புலிகளின் ஆழ ஊடுருவும் அணியினர் தான்  இப்படியான வேலையைச் செய்திருப்பார்கள்.

நல்லதொரு விடயம் நடந்துள்ளது.

வடமாகாண சபையின், குறிப்பாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் உண்மைகளை உரக்க கூறிவந்ததன் பயன் தான் இந்த மகிழ்ச்சியான தருணம்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் தகவல்களுக்கு நன்றி ஜீவன்...! ஒரு போர் எத்தனை வழிகளில் தேசத்தை அழிக்கின்றது....!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.