Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பு அருகே ராணுவ முகாமில் பெரும் தீ விபத்து

Featured Replies

கொழும்பு அருகே ராணுவ முகாமில் பெரும் தீ விபத்து

 

கொழும்புக்கு அப்பால் சாலாவ பகுதியில் அமைந்துள்ள ராணுவ மிகாமொன்றில் சற்று முன்னதாக பெரிய அளவிலான தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளதாக ராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

 

சாலாவ ராணுவ முகாமில் வெடி பொருட்கள் அடங்கிய கிடங்கில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக இந்த தீ பரவியுள்ளதாக சந்தேகிப்பதாக ஊடகங்களுக்கு கருத்துக்களை தெரிவித்த ராணுவ பேச்சாளர் பிரகேடியர் ஜெயநாத் ஜெயவீர தெரிவித்தார்.

இதன் காரணமாக ராணுவ முகாமில் சுற்றுப் புறத்தில் வசிக்கும் மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக அந்தப் பிரதேசத்திற்குப் பொறுப்பான போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த தீயை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக முப்படையினர் அனுப்பி வைக்கப் பட்டுள்ளதாகவும் ராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சேதங்கள் தொடர்ப்பான விவரங்கள் இதுவரை தெரியவில்லை என்று போலீசார் தெரிவிக்கின்றனர்.

http://www.bbc.com/tamil/sri_lanka/2016/06/160605_armycampfire

 

 

 

 

இராணுவ ஆயுதக் கிடங்கில் தீ
 
 

கொஸ்கமவிலுள்ள சலாவ இராணுவ முகாமில் உள்ள ஆயுதக் களஞ்சியசாலையில் சற்று நேரத்துக்கு முன்னர் தீ பற்றியுள்ளதாக இராணுவ உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.

இத்தீயினைத் தொடர்ந்து குறித்த இராணுவ முகாமிற்கு முன்னால் உள்ள கொழும்பு - அவிசாவளை பிரதான வீதி மூடப்பட்டுள்ளது.

மேலும், சுமார் 6 கிலோமீட்டர் சுற்றளவுக்கு பொதுமக்களும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இத்தீயைக் கட்டுப்படுத்துவதற்கு முப்படைகளின் உதவியும் கோரப்பட்டுள்ளது.

article_1465133851-image_1465133897-8933

article_1465137104-image_1465134491-1f8e

- See more at: http://www.tamilmirror.lk/173955/இர-ண-வ-ஆய-தக-க-டங-க-ல-த-#sthash.kKxJsctg.dpuf

Edited by நவீனன்

23 minutes ago, நவீனன் said:

இந்த தீயை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக முப்படையினர் அனுப்பி வைக்கப் பட்டுள்ளதாகவும் ராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

 

மிக நல்ல செய்தி!

முப்படைகளும் முகாமை நோக்கி மனிதாபிமான நடவடிக்கையாக செல் அடித்தால்  தீ கட்டுக்குள் வந்துவிடும்.

  • தொடங்கியவர்

ஆயுதக் களஞ்சியசாலை தீ: மின்சாரமும் துண்டிக்கப்பட்டது
 
 

article_1465144132-image_1465144471-e834அவிசாவளை பிரதேசத்துக்கான மின்சார உட்பத்தி நிலையம் சற்று நேரத்துக்கு முன்னர் மூடப்பட்டுள்ளதாகவும் இதனால் குறித்த பிரதேசத்துக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

- See more at: http://www.tamilmirror.lk/173970/ஆய-தக-களஞ-ச-யச-ல-த-ம-ன-ச-ரம-ம-த-ண-ட-க-கப-பட-டத-#sthash.DoyEOazN.dpuf

 

 

மக்கள் வெளியேறிய வீடுகளை பாதுகாக்க இராணுவத்தினர் ரோந்து
 
 

-ஜே.ஏ.ஜோர்ஜ்

'கொஸ்கம இராணுவ முகாமில் ஏற்பட்ட தீ விபத்தையடுத்து குறித்த முகாமை சுற்றியுள்ள வீடுகளில் இருந்து வெளியேறிய மக்கள், பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதுடன் மக்கள் கைவிட்டு சென்ற வீடுகளில் உள்ள பொருட்களை பாதுகாக்க இராணுவ வீரர்கள், ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்' என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயனாத் ஜயவீர, தமிழ்மிரருக்கு தெரிவித்தார்.

- See more at: http://www.tamilmirror.lk/173968/மக-கள-வ-ள-ய-ற-ய-வ-ட-கள-ப-த-க-க-க-இர-ண-வத-த-னர-ர-ந-த-#sthash.rMqQWE08.dpuf

 

 


'வதந்தி வேண்டாம்'
 
 

article_1465141917-3df7e0c4dbf2b00cc-500கொஸ்கம இராணுவ முகாமில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில் வதந்திகளை பரப்பாமல் இருக்குமாறு கேட்டுக்கொள்வதாக  ஊடகத்துறை பிரதி அமைச்சர் கரு பரணவிதான, டுவிட்டர் வலைத்தளத்தில் பதிவிட்டு கேட்டுக்கொண்டுள்ளார்.

 

article_1465142313-155c13a03e9e85b0b0d9a

- See more at: http://www.tamilmirror.lk/173964/-வதந-த-வ-ண-ட-ம-#sthash.ZQPkg3sZ.dpuf

 

 

சாலாவ தீ விபத்தில் மூவர் காயம்
 
 

article_1465142746-article.jpgகொஸ்கமவிலுள்ள சாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த மூவர், அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவத்தில் காயமடைந்த எவரும், கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலை, கொழும்பு தேசிய வைத்தியசாலை ஆகியவற்றில் இதுவரை அனுமதிக்கப்படவில்லை.

- See more at: http://www.tamilmirror.lk/173966/சல-வ-த-வ-பத-த-ல-ம-வர-க-யம-#sthash.H5TFKKMz.dpuf

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

கொஸ்கம தீ விபத்து: முதலாவது உயிரிழப்பு பதிவு?
 

article_1465145111-image_1465144993-0040கொஸ்கம இராணுவ முகாமில் ஏற்பட்ட தீ  விபத்தில் முதலாவது உயிரிழப்பு பதிவாகியுள்ளதாக ஹோமாகம வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

- See more at: http://www.tamilmirror.lk/173972/க-ஸ-கம-த-வ-பத-த-ம-தல-வத-உய-ர-ழப-ப-பத-வ-#sthash.N6ba30Vb.dpuf

 

 

தீ விவகாரம்: விசாரிக்குமாறு சீ.ஐ.டியினருக்கு உத்தரவு
 
 

article_1465144443-aop.jpgகொஸ்கமவிலுள்ள சாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட தீ விபத்துத் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு, குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சம்பவ இடத்துக்குச் சென்றவுடனேயே, விசாரணைகளை ஆரம்பிக்குமாறு சீ.ஐ.டியினருக்கு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

- See more at: http://www.tamilmirror.lk/173971/த-வ-வக-ரம-வ-ச-ர-க-க-ம-ற-ச-ஐ-ட-ய-னர-க-க-உத-தரவ-#sthash.WjD5hg4i.dpuf

 

 


அவிசாவளையிலுள்ள பாடசாலைகள், அரச அலுவலங்களுக்கு பூட்டு
 
 

article_1465141047-download.jpgகொஸ்கமவிலுள்ள சாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட தீ விபத்துக் காரணமாக, அவிசாவளை தேர்தல் தொகுதிக்குட்பட்ட, அனைத்துப் பாடசாலைகள் மற்றும் அரச அலுவலங்கள் நாளைய தினம் மூடப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

- See more at: http://www.tamilmirror.lk/173962/அவ-ச-வள-ய-ல-ள-ள-ப-டச-ல-கள-அரச-அல-வலங-கள-க-க-ப-ட-ட-#sthash.WmcO0UVX.dpuf

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
கொஸ்கமுவ தீ விபத்து: இராணுவ வீரர் பலி
 
 

article_1465142746-article.jpgகொஸ்கமவிலுள்ள சாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட தீ விபத்தில் இராணுவ வீரரொருவர் உயிரிழந்துள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

இது தவிர, காயமடைந்த இருவர், அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவத்தில் காயமடைந்த எவரும், கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலை, கொழும்பு தேசிய வைத்தியசாலை ஆகியவற்றில் இதுவரை அனுமதிக்கப்படவில்லை.

- See more at: http://www.tamilmirror.lk/173966/க-ஸ-கம-வ-த-வ-பத-த-இர-ண-வ-வ-ரர-பல-#sthash.tGXvdJiy.dpuf

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

விபத்தா அல்லது சதியா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாட்டி விடுறதுக்கு இப்ப அவங்களும் இல்லை tw_anguished:

கொஸ்கம இராணுவ முகாமில் ரவைகள் களஞ்சியசாலையில் தீ விபத்து ஏற்பட்டிருந்த நிலையில், இறுதி வெடிச்சத்தம் இன்று திங்கட்கிழமை காலை 1.30க்கு கேட்டது.

http://www.tamilmirror.lk/173977/இற-த-வ-ட-ச-சத-தம-க-க-க-ட-டத-

கொஸ்கம இராணுவ முகாமில் ரவைகள் களஞ்சியசாலையில் ஏற்பட்டிருந்த தீ விபத்தினால் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 47ஆக அதிகரித்துள்ளது என்று வைத்தியசாலை தகவல் தெரிவிக்கின்றது.

இதில் 35பேர் சிறு காயங்களுக்குஉள்ளானாகியுள்ளனர்.

http://www.tamilmirror.lk/173978/-க-ஸ-கம-த-ப-ர-க-யம-

கொஸ்கம சலாவ இராணுவ முகாமில் ரவைகள் களஞ்சியசாலையில் ஏற்பட்டிருந்த தீ விபத்தையடுத்து அங்கிருந்து வெடித்து சிதறியவற்றை எடுக்கவே வேண்டாம் என்று  இராணுவம் அறிவித்துள்ளது.

சலாவ இராணுவ முகாமிலிருந்து 1 கிலோமீற்றருக்கு அப்பால் வீடுகள் இருந்தால், அவ்வானவர்கள் மட்டும் தங்களுடைய வீடுகளுக்கு திரும்பலாம் என்று இராணுவப் பேச்சாளர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், வெடிக்காத வெடிபொருட்களும் கீழே கிடக்கலாம் என்பதனால், அவ்வாறானவற்றை எடுக்காது 0113818609 என்ற தொலைபேசி இலக்கத்து அறிவிக்குமாறும் இராணுவம் அறிவித்துள்ளது.

http://www.tamilmirror.lk/173982/-க-ழ-க-டப-பத-எட-க-க-த-ர-கள-

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ரதி said:

விபத்தா அல்லது சதியா?

சதிதான் ....புதிதாக சிறிது நாட்களுக்கு முன் தற்கொலை அங்கியுடன் முளைத்த விடுதலை புலிகளின் முதலாவது தாக்குதல் .
இப்பிடி விசாரணை முடிவில் அறிவித்தாலும் ஆச்சரியப்பட எதுவுமில்லை 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.