Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலகுவில் செய்யக்கூடிய விடயங்களையும் அரசாங்கம் மேற்கொள்ளத் தவறியுள்ளது! – சுமந்திரன்

Featured Replies

இலகுவில் செய்யக்கூடிய விடயங்களையும் அரசாங்கம் மேற்கொள்ளத் தவறியுள்ளதாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க காங்கிரஸ் சபையின் இலங்கை ஆர்வலர்கள் கூட்டத்தில் உரையாற்றிய போது அவர்இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அவர் மேலும் கூறுகையில்,

இலங்கையில் யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் முன்னேற்றம் அற்ற நிலைமை காணப்பட்டது.புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் ஓரளவு முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டன.

காணிகளை விடுவித்தல் மற்றும் அரசியல் கைதிகளை விடுதலை செய்தல் போன்றன தொடர்பில்செய்யக்கூடிய ஆற்றக்கூடிய கருமங்களை அரசாங்கம் ஆற்றத் தவறியுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில்அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை.இதனால் மக்கள் தொடர்ந்து அதிருப்தி அடைந்துள்ளனர்.

அரசியல் அமைப்பு விடயங்கள் ஓரளவு முன்னேற்றம் கண்டுள்ளது.எனினும் அன்றாடம் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறையவில்லை.

எனவே, இந்த அரசாங்கமும் தமிழ் மக்களுக்கு உரிய நலன்களை வழங்கவில்லை எனதெரிவித்துள்ளார்.

மேலும், இந்த சந்திப்பில் உரையாற்றிய அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர் பிரசாத்காரியவசம் பரிந்துரைகள் மெதுவாகவே நிறைவேற்றப்படுவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டைஏற்றுக்கொள்வதாக கூறினார் என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஆனால் ஜெனீவா தீர்மானத்தின் அடிப்படையில் எல்லா விடயங்களும் நிறைவேற்றப்படும், அதில் தாமதம் ஏற்பட்டிருக்குமே தவிர நிறைவேற்றப்படாத நிலை ஏற்படாது எனகாரியவசம் கூறியிருந்தார் எனவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

http://www.tamilwin.com/politics/01/107704

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே வந்து சும் பிளேட்டையே மாத்தி போடுவார் பாருங்க ??

Edited by முனிவர் ஜீ

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் மட்டும்... போர் முடிந்த கையுடன்,
சர்வதேசத்துக்கும், ஐ.நா. வுக்கும் அழுத்தங்களை கொடுக்காமல்.....சொதப்பிக் கொண்டு, 
அரசுடன் இதயத்தால் இணைந்து   இருக்கின்றோம் என்று லூசுத்  தனமான அறிக்கை  விட்டுக் கொண்டு இருந்தவர்கள் தானே....

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, தமிழ் சிறி said:

இவர்கள் மட்டும்... போர் முடிந்த கையுடன்,
சர்வதேசத்துக்கும், ஐ.நா. வுக்கும் அழுத்தங்களை கொடுக்காமல்.....சொதப்பிக் கொண்டு, 
அரசுடன் இதயத்தால் இணைந்து   இருக்கின்றோம் என்று லூசுத்  தனமான அறிக்கை  விட்டுக் கொண்டு இருந்தவர்கள் தானே....

அதே தான்.... இன்று வரை

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, போல் said:

இலகுவில் செய்யக்கூடிய விடயங்களையும் அரசாங்கம் மேற்கொள்ளத் தவறியுள்ளதாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஓ .....அப்படியா ...வாவ்......துரை அரசாங்கத்தை பற்றியெல்லாம் பேசுறாரு  
எங்கேயோ நம்மடை மக்களுக்கு  வகையாக இருக்கு ஆப்பு.....அனேகமாக ஜெனிவாவில என்று தான்  நினைக்கிறேன் 

Edited by அக்னியஷ்த்ரா

  • கருத்துக்கள உறவுகள்

அப்புக்காத்துக்கு

அடுத்த தவணை ஒன்றை தமிழ் மக்கள் மேல் போடுவதற்கு

சோடனைகளை தொடங்கியிருக்கிறார்  என்பது தெரிகிறது

மணி ஓசை வருகுது

அடுத்தது......??

  • தொடங்கியவர்

தமிழர்களை பிரதிநித்துவப்படுத்தும் உரிமையை தமிழர்கள் சுமந்திரனுக்கு வழங்கவில்லை என்பதை சம்சும் இரட்டையர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.

சம்பந்தன், சுமந்திரன், மாவை இந்த மூவரும் தனித்தோ சேர்ந்தோ எந்த ராஜதந்திரிகளையும் சந்தித்து தமிழர் இனப்பிரச்சினை தொடர்பாக கதைப்பதை தமிழர்கள் ஒரு போதும் ஏற்றுக் கொள்ளவில்லை. ஏனைய கட்சிகளின் பிரதிநிதிகளும் சந்திப்புக்களில் இடம்பெறுவதையே தமிழர்கள் விருபுகிரார்கள்.

அல்லது  கட்சி அரசியலுக்கு அப்பால்பட்ட விக்னேஸ்வரன் அவர்கள் தமிழர் இனப்பிரச்சினை தொடர்பாக தெளிவாக கதைக்கும் ஆற்றல் படைத்தவர் என்பதும் மக்கள் விருப்பம்.

இவை கடந்தகால அனுபவங்களில் இருந்து பெறப்பட்டவை. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, போல் said:

ஆனால் ஜெனீவா தீர்மானத்தின் அடிப்படையில் எல்லா விடயங்களும் நிறைவேற்றப்படும், அதில் தாமதம் ஏற்பட்டிருக்குமே தவிர நிறைவேற்றப்படாத நிலை ஏற்படாது எனகாரியவசம் கூறியிருந்தார் எனவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்தா முடிவே வந்துட்டுது...:grin:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.