Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொறுமையோடு உள்ளோம்: புதிய ஆட்சியாளர்கள் மீது அதிருப்தி : அமெரிக்காவில் சுமந்திரன் தெரிவிப்பு

Featured Replies

பொறுமையோடு உள்ளோம்: புதிய ஆட்சியாளர்கள் மீது அதிருப்தி : அமெரிக்காவில் சுமந்திரன்  தெரிவிப்பு  

 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்கி ஏற்றுக்கொண்ட தீர்மானத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்  என வலியுறுத்தியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் பொறுப்புக் கூறல் கடப்பாட்டை நிறைவேற்றுவதற்கு சிறப்பு நீதிபதிகளைக் கொண்ட நீதிமன்றம் அமைக்கும்வரை பொறுமையோடு எதிர்பார்த்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.american-congress.jpg

ஆட்சி மாற்றத்தின் போது வழங்கப்பட்ட உறுதிமொழிகள் தற்போதுவரையில் நிறைவேற்றப்படவில்லை எனச் சுட்டிக்காட்டிய சுமந்திரன் எம்.பி இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து அமெரிக்கா தனது திருப்திகரமான நிலைப்பாட்டை அவசரப்பட்டு வெளியிட்டுவிடக்கூடாது எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்க காங்கிரஸினால் வொசிங்டனில் ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கையின் சமகால நிலைமைகள் குறித்து உரையாற்றும் நிகழ்வில் கலந்து கொண்டு பேசுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

அவர் மேலும் உரையாற்றுகையில், 

கடந்த காலத்தில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறைமை காணப்பட்டது. ஆட்சியில் அமர்ந்திருந்த கடந்த ஆட்சியாளர்கள் இரண்டு வருடங்களுக்கு மட்டுப்படுத்திருந்த ஆட்சிக்காலத்தை தமது விருப்புக்கு ஏற்றவகையில் சட்டத்தினை மாற்றி தொடர்ந்து ஆட்சியில் அமர்ந்திருப்பதனை இலக்காக வைத்து செயற்பட்டனர். இதனால் நாடு செங்குத்தான திசையில் கீழ்நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. 

வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை

இவ்வாறான நிலைiயில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஆட்சி மாற்றம் தமிழ் மக்களின் பங்களிப்புடன் ஏற்படுத்தப்பட்டிருந்தது. இதன்போது எமக்கு பல்வேறு உறுதி மொழிகள் வழங்கப்பட்டிருந்தன. எனினும் ஆரம்பத்தில் சொற்ப அளவிலான முன்னேற்றகரமான நிலைமைகள் காணப்பட்டிருந்த போதும் ஆட்சி மாற்றத்தின் உண்மையான மாற்றங்களை எதிர்பார்த்துக் காத்திருந்த மக்களுக்கு, அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை 

குறிப்பாக காணி விடுவிப்பு, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை போன்ற அரசாங்கத்தினால் நிறைவேற்றக்கூடிய விடயங்கள்கூட இதுவரை இழுத்தடிப்புச் செய்யப்பட்டு வருகின்றது. 

காணமால்போனர்வர்கள் தொடர்பான அலுவலகத்தை அமைப்பதற்கு அண்மையில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. எனினும் அது தொடர்பில் முழுமையான முன்னேற்றகரங்கள் ஏற்படவில்லை.  புதிய அரசியலமைப்புத் தொடர்பில் அரசாங்கம் முன்னேற்றகரமான செயற்பாடுகளை முன்னெடுத்தாலும், அன்றாடம் இடம்பெறும் பல பிரச்சினைகள் காரணமாக, மக்களுக்கு இன்னும் திருப்தியான நிலைமைகள் கிடைக்கவில்லை. 

 பயங்கவாத தடைச்சட்டம்

1979ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டம் தற்காலிகமாக ஆறுமாதகாலங்களுக்கே எனக் கூறி முதற்தடவையாக அமுல்படுத்தப்பட்டது. எனினும் தற்போது வரையில் அது நீடித்தவாறே உள்ளது. இந்நிலையில் பயங்கரவாதத் தடைச்சட்டத்துக்குப் பதிலாக வேறு சட்டடமொன்றைக் கொண்டுவருவதற்கு சட்ட ஆணைக்குழு முயற்சிகளை எடுத்துள்ளது. அதனை விரைவில் அரசாங்கம் நடைமுறைக்குக் கொண்டுவரும் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது.

பொறுப்புக்கூறல்

பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கு கலப்பு நீதிமன்றமே அவசியம் என நாம் வலியுறுத்தியிருந்தோம். எனினும், இது விடயம் தொடர்பில் நடத்தப்பட்ட கலந்துரையாடல்களில் வெளிநாட்டு நீதிபதிகள் மற்றும் விசாரணையாளர்களின் பங்களிப்புடன் விசாரணைப் பொறிமுறையொன்று பற்றி கூறப்பட்டது. இதனை நடைமுறைப்படுத்துவதாயின் இலங்கையின் அரசியலமைப்பு இடமளிக்குமா என்ற சந்தேகம் எம்மிடம் இருந்தது. 

இது பற்றி பாராளுமன்றத்தில் பல தடவைகள் சுட்டிக்காட்டியதுடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற  ஐ.நா தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது தொடர்பான சர்வ கட்சிகள் கூட்டத்தொடரிலும் இவ்விடயத்தை சுட்டிக்காட்டி கூறியிருந்தோம். தற்போது அரசாங்கம் தனது நிலைப்பாட்டை மாற்றுவது ஆச்சர்யமளிக்கிறது. இருந்தபோதும் சிறப்பு நீதிபதிகளைக் கொண்ட நீதிமன்ற பொறிமுறை அமைக்கப்படவில்லை. பிரேரணையில் குறிப்பிடப்பட்ட விடயங்களை நிறைவேற்றும் வகையில் இந்தப் பொறிமுறை அமையுமா என்பதை பார்வையிட எதிர்பார்த்திருக்கின்றோம் என்றார். 

http://www.virakesari.lk/article/7660

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையா?

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கன் பொறுமை இழந்து நாட்டை துவசம் செய்யப்போறான்..

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, putthan said:

சிங்கன் பொறுமை இழந்து நாட்டை துவசம் செய்யப்போறான்..

ஆபரேசன் வெற்றி

ஆனால் ஆள் காலி..

முடிவு விரைவில் வரும்...

  • கருத்துக்கள உறவுகள்
Just now, விசுகு said:

ஆபரேசன் வெற்றி

ஆனால் ஆள் காலி..

முடிவு விரைவில் வரும்...

ஐ.நா தானே ஒபரேசன் தியட்டர்?..

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, putthan said:

ஐ.நா தானே ஒபரேசன் தியட்டர்?..

ஒரு  இடமாக இருந்தால்

ஒரு வைத்தியராக இருந்தால்

மாட்டிக்கொள்ள

பொறுப்புக்கூற வேண்டுமே

நாங்க தான் சுழியன்களாச்சே புத்தர்...

  • கருத்துக்கள உறவுகள்

sumanthiranஆட்சி மாற்றத்தின் போது வழங்கப்பட்ட உறுதிமொழிகள் சிறிலங்கா அரசாங்கத்தினால் நிறைவேற்றப்படவில்லை என்பதால், சிறிலங்கா அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து அமெரிக்கா அவசரப்பட்டு திருப்தி வெளியிட்டு விடக்கூடாது என்று கோரிக்கை விடுத்துள்ளார், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்.

அமெரிக்க காங்கிரசினால் வொசிங்டனில் கடந்த செவ்வாய்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறிலங்காவின் சமகால நிலைமைகள் குறித்த கலந்துரையாடல் உரையாற்றிய போதே,  அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“சிறிலங்காவில் கடந்த ஆண்டு தமிழ் மக்களின் பங்களிப்புடன்  ஆட்சிமாற்றம் ஏற்படுத்தப்பட்டது. இதன்போது எமக்கு பல்வேறு உறுதி மொழிகள் வழங்கப்பட்டிருந்தன.

எனினும் ஆரம்பத்தில் சொற்ப அளவிலான முன்னேற்றகரமான நிலைமைகள் காணப்பட்டிருந்த போதும், ஆட்சி மாற்றத்தின் உண்மையான மாற்றங்களை எதிர்பார்த்துக் காத்திருந்த மக்களுக்கு, வழங்கிய வாக்குறுதிகளை சிறிலங்கா அரசாங்கம் நிறைவேற்றவில்லை

குறிப்பாக காணி விடுவிப்பு, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை போன்ற அரசாங்கத்தினால் நிறைவேற்றக் கூடிய விடயங்கள் கூட இதுவரை இழுத்தடிப்புச் செய்யப்பட்டு வருகின்றன.

காணாமற்போனவர்கள் தொடர்பான பணியகத்தை அமைப்பதற்கு அண்மையில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. எனினும் அது தொடர்பில் முழுமையான முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை.

புதிய அரசியலமைப்புத் தொடர்பாக அரசாங்கம் முன்னேற்றகரமான செயற்பாடுகளை முன்னெடுத்தாலும், அன்றாடம் இடம்பெறும் பல பிரச்சினைகள் காரணமாக, மக்களுக்கு இன்னும் திருப்தியான நிலைமைகள் கிடைக்கவில்லை.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு அமெரிக்கா கணிசமான பங்களிப்பு வழங்கியிருந்தது. அந்தப் பங்களிப்பு தொடரவேண்டும்.

அமெரிக்கத் தூதுவர் குறிப்பிட்டதைப்போன்று மாற்றங்கள் ஏற்பட்டுள்ளமை உண்மைதான். இருந்தாலும் மிதிபலகையிலிருந்து கால்கள் அவசரமாக எடுக்கப்பட்டுவிடக் கூடாது.

அழுத்தங்கள் மற்றும் ஊக்குவிப்புக்கள் காரணமாகவே எம்மால் மாற்றங்களை காண முடிந்தது. எனவே அமெரிக்கா அவசரப்பட்டு தனது திருப்தியை வெளியிட்டுவிடக் கூடாது.

1979ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டம் தற்காலிகமாக ஆறுமாதகாலங்களுக்கே எனக் கூறி முதற்தடவையாக  நடைமுறைப்படுத்தப்பட்டது. எனினும் தற்போது வரையில் அது நீடிக்கிறது.

பயங்கரவாதத் தடைச்சட்டத்துக்குப் பதிலாக வேறு சட்டமொன்றைக் கொண்டு வருவதற்கு சட்ட ஆணைக்குழு முயற்சிகளை எடுத்துள்ளது. அதனை விரைவில் அரசாங்கம் நடைமுறைக்குக் கொண்டுவரும் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது.

பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கு கலப்பு நீதிமன்றமே அவசியம் என நாம் வலியுறுத்தியிருந்தோம்.

இது தொடர்பாக நடத்தப்பட்ட கலந்துரையாடல்களில் வெளிநாட்டு நீதிபதிகள் மற்றும் விசாரணையாளர்களின் பங்களிப்புடன் விசாரணைப் பொறிமுறையொன்று பற்றி கூறப்பட்டது.

இதனை நடைமுறைப்படுத்துவதாயின் சிறிலங்காவின் அரசியலமைப்பு இடமளிக்குமா என்ற சந்தேகம் எம்மிடம் இருந்தது.

இது பற்றி நாடாளுமன்றத்தில் பல தட வைகள் சுட்டிக்காட்டியதுடன், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடை பெற்ற ஐ.நா. தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது தொடர்பான அனைத்துக்கட்சிகள் கூட்டத்திலும் சுட்டிக்காட்டி கூறியிருந்தோம்.

தற் போது சிறிலங்கா அரசாங்கம் தனது நிலைப்பாட்டை மாற்றுவது ஆச்சரியமளிக்கிறது. இருந்த போதும் சிறப்பு நீதிபதிகளைக் கொண்ட நீதிமன்ற பொறிமுறை அமைக்கப்பட வில்லை.

தீர்மானத்தில் குறிப்பிடப்பட்ட விடயங்களை நிறைவேற்றும் வகையில் இந்தப் பொறிமுறை அமையுமா என்பதை பார்வையிட எதிர்பார்த்திருக்கிறோம் என்று தெரிவித்தார்.

http://www.puthinappalakai.net/2016/06/17/news/16861

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 16.6.2016 at 8:35 PM, நவீனன் said:

 

பொறுமையோடு உள்ளோம்: புதிய ஆட்சியாளர்கள் மீது அதிருப்தி : அமெரிக்காவில் சுமந்திரன்  தெரிவிப்பு  

பாத்தியளே!!! இந்தா புடுங்கிறம் வெட்டுறம் படுக்கிறம் எண்டிச்சினம். இப்ப பொறுமையோடை இருக்கினமாம்..இவையள் கொதிச்சினமெண்டால் இந்த பூமியே தாங்காது. ha
6859_zpslcp20ddh.gif    sampanthan-sumanthiran-300-news.jpg6859_zpslcp20ddh.gif

Edited by குமாரசாமி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.