Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கலாமுக்கு சிலை

Featured Replies


கலாமுக்கு சிலை
 
 

 

article_1466149676-DSC_0055.JPG

-சொர்ணகுமார் சொரூபன்

இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவரும் இந்திய அணு ஆராய்ச்சியின் தந்தையுமாகிய மறைந்த டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் திருவுருவச் சிலை யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (17) திறந்து வைக்கப்பட்டது.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சின்ஹா மற்றும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் இணைந்து அப்துல் காலமின் திருவுருவச் சிலையை திரைநீக்கம் செய்து வைத்தனர்.

இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட இந்த அழகிய திருவுருவச் சிலை யாழ் பொது நூலகத்திலுள்ள இந்திய கோணர் வளாத்தில் நிறுவப்பபட்டுள்ளது.

யாழ்ப்பாணத்துக்கு அப்துல் கலாம் வருகை தந்திருந்த போது அவரைக் காண்பதற்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். அப்துல் கலாமுக்கு யாழ்ப்பாணத்திலும் மாணவர், மக்களின் ஆதரவு நிலைத்திருப்பதை இவ்வுலகம் அறிந்திருந்தது.

அப்துல் கலாமின் கருத்தை ஏற்கும் யாழ்ப்பாண மாணவர்கள் அவரைப் போன்று வரவேண்டும் என்ற ஒரு ஊந்துதலுக்கான அடித்தளமாக இந்ந சிலை யாழ் பொது நூலகத்தில் நிறுவப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் கூறினர்.

வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், வடமாகாண ஆளுநரின் செயலாளர் எல்.இளங்கோவன், வடமாகாண பிரதம செயலாளர் ஏ.பத்திநாதன், வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, யாழ் மாநகர சபை ஆணையாளர் பொ.வாகீசன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ந.சண்முகலிங்கன், யாழ்ப்பாணம் இந்தியத் துணைத்தூதரக கொன்சலட் ஜெனரல் ஆ.நடராஜன் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்

article_1466149692-DSC_0063.JPG

article_1466149700-DSC_0066.JPG

article_1466149711-DSC_0075.JPG

- See more at: http://www.tamilmirror.lk/174929/கல-ம-க-க-ச-ல-#sthash.0aqybmI8.dpuf
  • தொடங்கியவர்

யாழ்ப்பாணத்தில் அப்துல் கலாமின் சிலை திறப்பு

 

 
 
  • kalam11_2898291g.jpg
     
  • kalam2_2898292g.jpg
     

யாழ்ப்பாணத்திலுள்ள பொது நூலகத்தில் நிறுவப்பட்டுள்ள மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் சிலையை இலங்கைக்கான இந்தியத் தூதர் சின்கா, வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கடந்த 2012 ஜனவரியில் இலங்கையிலுள்ள யாழ்பாணத்திற்கு முதன்முறையாக வந்தார்.

யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தில் புயலைத்தாண்டினால் தென்றல் என்ற தலைப்பில் பேசினார். இந்த உரையாடலின் போது கலாம் 1941 இல் ராமேசுவரத்திலே 5ம் வகுப்பில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கனகசுந்தரநாத் ஆசிரியரிடம் கணிதம் பயின்றேன் என்பதையும் நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.

தொடர்ந்து 120 ஆண்டுகள் பழமையான யாழ்பாணம் இந்து கல்லூரியில் கலாம் உரையாற்றிய போது, மாணவி ஒருவர், "பொறுப்புள்ள இலங்கை பிரஜையாக திகழ நான் என்ன செய்ய வேண்டும்' என கலாமிடம் கேட்டார். அம்மாணவி தொடுத்த வினாவிற்கு, பதிலளித்த கலாம் , உனது இதயத்தில் நேர்மை இருந்தால், உனது நடத்தையில் அழகு இருக்கும். உன் நடத்தையில் அழகு இருந்தால், வீட்டில் அமைதி இருக்கும். வீட்டில் அமைதி இருந்தால், நாட்டில் அமைதி நிலைக்கும், என்றார். கலாம் கூறியதை, அப்படியே எப்பிழையும் இல்லாமல் கூடியிருந்த மாணவர்கள் அனைவரும் மடை திறந்த வெள்ளம் போல் திரும்பக் கூறியதைப் பார்த்தவுடன், கலாம் தமக்கு யாழ்ப்பாணத்து இளைஞர்களைப் பற்றிய நம்பிக்கை ஒளி பிரகாசித்தாகக் குறிப்பிட்டார்.

இலங்கையில் நல்ல ஜனநாயகம் மலர வேண்டும், அமைதி திரும்ப வேண்டும், அங்கு வாழும் அனைத்து மக்களும் ஒற்றுமையாக, சமாதானமாக, சரிசமமாக வாழவேண்டும், அங்கு வாழும் மாணவர்கள், இளைஞர்களுக்கு, வாழ்க்கையில் ஒரு நம்பிக்கை வரவேண்டும், அவர்களும் வளர்ச்சி பாதையில் செல்ல வேண்டும் என்ற உள்ளடக்கத்தில் யாழ்ப்பாணம் பல்கலைக்ககழகம் மற்றும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கலாம் ஆற்றிய உரைகள் இலங்கையின் வட வடமாகாணத்தின் பல இடங்களிலும் இருந்து வருகை தந்திருந்த மாணவர்கள் மத்தியில் ஓர் எழுச்சியையும் உத்வேகத்தையும் அப்போது ஏற்படுத்தியது.

இரண்டாவது முறையாக கடந்த 2015 ஜுன் மாதம் கொழும்பிற்கு அரசமுறைப் பயணமாகச் இலங்கை சென்றார். அதுவே கலாம் தன்வாழ்நாளில் கடைசியாகப் பயணம் செய்த வெளிநாட்டுப் பயணமும் ஆகும்.

கடந்த வருடம் ஜுலை மாதம் அப்துல்காலம் மறைவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் பதிவுகளை மேற்கொள்வதற்காக யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் வைக்கப்பட்டிருந்த பதிவேட்டில் பலரும் ஆயிரக்கணக்கானோர் தங்களின் அனுதாபங்களைத் தெரிவித்திருந்தனர். தற்போது இலங்கையின் வடமாகாணங்களில் அப்துல் கலாமின் பெயரில் இளைஞர் சங்கங்கள் இயங்கி வருகின்றன.

இந்நிலையில் இந்தியா-இலங்கை இடையே நட்புறவை வளர்க்கும் விதமாக இந்திய தூதரகம் சார்பில் யாழ்பாணம் பொதுநூலகத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் மார்பளவு சிலையினை வெள்ளிக்கிழமை இந்தியத் தூதர் ஒய்.கே. சின்கா, வடமாகாண முதலமைச்சர் வி. விக்னேஸ்வரன் ஆகியோர் இணைந்து வெள்ளிக்கிழமை திறந்து வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதர் என். நடராஜன், வடக்கு மாகாண அவைத்தலைவர் சிவஞானம், வடக்கு மாகாண ஆளுநரின் செயலார் இளங்கோவன், வடக்கு மாகாண கல்வி அமைச்சர் தம்பிராஜா குருகுலராஜா, யாழ்ப்பாணம் மாநகர ஆணையாளர் வாகீசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்தியாவிற்கு வெளியே கலாமிற்கு முதன்முறையாக சிலை நிறுவது இலங்கையில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

http://tamil.thehindu.com/tamilnadu/யாழ்ப்பாணத்தில்-அப்துல்-கலாமின்-சிலை-திறப்பு/article8741547.ece?homepage=true

  • தொடங்கியவர்
கலாமின் சிந்தனைகள் நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தன: சி.வி
 
17-06-2016 02:41 PM
Comments - 0       Views - 6

டாக்டர் அப்துல் கலாம் சிந்தனைகள் எப்போதும் மனிதவள மேம்பாடு, நாட்டின் வளர்ச்சி என்பவற்றையே குறியாகக் கொண்டிருந்தன. ஒரு நாட்டை மேம்படுத்துவதற்கு மாணவர்களின் பங்களிப்பே மிக உன்னதமானது என்பதில் அவர் உறுதியாக இருந்தார் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறினார்.

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும் தலைசிறந்த விஞ்ஞானியுமான மறைந்த டாக்டர் அப்துல் கலாமின் திருவுருவச் சிலை யாழ்ப்பாணப் பொது நூலக வளாகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (17) திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே முதலமைச்சர் இவ்வாறு கூறினார். அங்கு அவர் தொடர்ந்து கூறியதாவது,

'எம்மிடையே வாழ்ந்துவரும் பலர் இறந்து போகின்றார்கள். இவ்வாறு இறந்தவர்களை அவர்களின் குடும்பத்தினரும், உற்றார் உறவினர்களும் நினைவு கூருகின்றனர். இன்னும் சிலர் அவர்களின் குடும்பத்தாரால் மட்டுமன்றி அவர்கள் பிறந்த ஊர், மற்றும் கிராமத்தில் உள்ள மக்களால் நினைவு கூரப்படுகின்றார்கள். அவர்கள் நினைவாக உள்ளுர் மண்டபங்களை, பஸ் தரிப்பிடங்களை அமைக்கின்றனர். மற்றும் இன்னோரன்ன நினைவுச் சின்னங்களை அமைத்து அவர்களை நினைவு கூருகின்றார்கள். ஆனால், மிகச்சிலரே உலகளாவிய ரீதியில் நினைவு கூறப்படுகின்றார்கள்.

இப்புவியில் வாழ்ந்த காலப்பகுதியினுள் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட வாழ்க்கை முறைமை, அவர்களால் சாதிக்கப்பட்ட சிறந்த சாதனைகள், விடாமுயற்சிகள், அவர்கள் நடத்தையின் முன் உதாரணங்கள் போன்றவை அவர்களை உதாரண புருசர்களாகக் கருத வைக்கின்றன. எனவேதான் அவர்களின் பின்னால் வருகின்றவர்கள் அவர்கள் காட்டிய பாதையை அடியொற்றி முன்னேறக்கூடிய வகையில் அவர்கள் நினைவு கூரப்படுகின்றார்கள். ஆனால், அவர்களையும் விஞ்சிய மிகச் சிலர் கற்பனையில் கூட நாம் சிந்தித்துப் பார்க்க முடியாத அளவு அதீத திறமைகளையும் ஆற்றல்களையும் கொண்டவர்களாக விளங்கி, இவ் உலகில் மிகப் பெரிய சாதனைகளைப் புரிந்து, உலகமே வியந்து அவர்களை உற்று நோக்குமாறு வாழ்ந்து மடிந்துள்ளார்கள்.

டாக்டர் அப்துல் கலாம் அவர்களும் அவர்களில் ஒருவர். ஒப்புவமை இல்லாதவர். அவரின் திறமைகளை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை எனலாம். என்றாலும் அவர் எளிமையின் பிறப்பிடமாக வாழ்ந்து மறைந்தார். மன்னர்களாலும் மாமேதைகளாலும் மதிக்கப்பட்டாலும் மக்களுடனேயே அவர் வாழ எத்தனித்தார். சாதாரண மக்கள் போலவே வாழ்ந்தார்.

டாக்டர் அப்துல் கலாம் சிந்தனைகள் எப்போதும் மனிதவள மேம்பாடு, நாட்டின் வளர்ச்சி என்பவற்றையே குறியாகக் கொண்டிருந்தன. ஒரு நாட்டை மேம்படுத்துவதற்கு மாணவர்களின் பங்களிப்பே மிக உன்னதமானது என்பதில் உறுதியாக இருந்த டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் மாணவர்களை நெறிப்படுத்துவதிலும் அறிவூட்டுவதிலும் அவர்களைச் சரியான பாதையில் வழிப்படுத்துவதிலும் தமது கூடிய நேரங்களைச் செலவழித்தார்.

டாக்டர் அப்துல் கலாம், தமிழ் நாட்டில் இராமேஸ்வரம் பகுதியில் பிறந்து வளர்ந்த ஒரு இந்தியராக இருந்த போதும், அவர்  இந்திய மண்ணுக்கு மட்டும் சொந்தமானவர் அல்ல. அவர் தமிழை நன்கு பேசக்கூடிய ஒரு தமிழ்ப் பேசும் உலகத் தலைவராகத் திகழ்ந்தார். அந்த வகையில் அவர் எமது வடபகுதி மக்களுக்குஞ் சொந்தக்காரராக எமது தமிழ்ப் பேசும் மக்களின் தலைசிறந்த தலைவனாக, எம் மாணவர்களின் வழிகாட்டியாக எம்முள் இன்றும் மிளிர்ந்து கொண்டிருக்கின்றார்.

இவர் மாணவர்களை விழிக்கும் போது 'அன்பான மாணவர்களே கனவு காணுங்கள்' என விழித்தே தமது உரையைத் தொடங்குவார். அவரின் உரையில் கனவு என்பதற்கு மிகச் சிறப்பானதொரு விளக்கத்தை அளித்திருந்தார். அதாவது 'உறக்கத்தில் வருவதல்ல கனவு. உன்னை உறங்க விடாமல் செய்வது தான் கனவு'. ஒவ்வொரு மாணவனும் மாணவியரும் தாம் என்னவாக வரவேண்டும் என்பதை முற்கூட்டியே தீர்மானித்துக் கொண்டு அந்த நிலையை அடையும் வரை ஊன் உறக்கம் மறந்து தொடர்ந்து பாடுபட வேண்டும்; அப்போது அவர்களின் இலக்கைச் சுலபமாக அடைய முடியும் என்பதே அவரின் கருத்தாக இருந்தது.

டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் 2012ம் ஆண்டில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த போது யாழ் பல்கலைக்கழகத்தில் 'புயலைத் தாண்டிய தென்றல்' என்ற தலைப்பின் கீழ் எமது பல்கலைக்கழக மாணவர்களுக்கு அரியதொரு உரையை ஆற்றியிருந்தார். யாழ் இந்துக் கல்லூரியிலும் மாணவர்களிடையே உரையாற்றியது மட்டுமன்றி அம் மாணவர்களையும் எதிர்காலம் பற்றியதொரு விழிப்புணர்வை உண்டாக்கக் கூடிய சிறந்த உரையை வழங்கிச் சென்றிருந்தார்.

இத்துணை சிறப்புக்களும் கொண்ட டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் திருவுருவச் சிலை யாழ்ப்பாணத்தில் அமைக்கப் பெற்று இன்று திரை நீக்கம் செய்யப்பட்டுள்ளதென்றால் அது எமது மக்களுக்கான ஒரு கௌரவம் என்றே நாம் கொள்ள வேண்டும்' என்றார்.

- See more at: http://www.tamilmirror.lk/174935#sthash.kPDOxWE4.dpuf
  • கருத்துக்கள உறவுகள்

என்ன மசிருக்கு 

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, நந்தன் said:

என்ன மசிருக்கு 

இந்தியக்கொம்பு  இருந்ததாம்....

  • கருத்துக்கள உறவுகள்
ஒரு நாட்டை மேம்படுத்துவதற்கு மாணவர்களின் பங்களிப்பே மிக உன்னதமானது என்பதில் டாக்டர் அப்துல் கலாம் உறுதியாக இருந்தார் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறினார். இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும் தலைசிறந்த விஞ்ஞானியுமான மறைந்த டாக்டர் அப்துல் கலாமின் திருவுருவச் சிலை யாழ்ப்பாணப் பொது நூலக வளாகத்தில் இன்று  திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது.

ஒரு நாட்டை மேம்படுத்துவதற்கு மாணவர்களின் பங்களிப்பே மிக உன்னதமானது என்பதில் டாக்டர் அப்துல் கலாம் உறுதியாக இருந்தார் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறினார். இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும் தலைசிறந்த விஞ்ஞானியுமான மறைந்த டாக்டர் அப்துல் கலாமின் திருவுருவச் சிலை யாழ்ப்பாணப் பொது நூலக வளாகத்தில் இன்று திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது.

   

இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே முதலமைச்சர் இவ்வாறு கூறினார். அங்கு அவர் தொடர்ந்து கூறியதாவது, 'எம்மிடையே வாழ்ந்துவரும் பலர் இறந்து போகின்றார்கள். இவ்வாறு இறந்தவர்களை அவர்களின் குடும்பத்தினரும், உற்றார் உறவினர்களும் நினைவு கூருகின்றனர். இன்னும் சிலர் அவர்களின் குடும்பத்தாரால் மட்டுமன்றி அவர்கள் பிறந்த ஊர், மற்றும் கிராமத்தில் உள்ள மக்களால் நினைவு கூரப்படுகின்றார்கள். அவர்கள் நினைவாக உள்ளுர் மண்டபங்களை, பஸ் தரிப்பிடங்களை அமைக்கின்றனர். மற்றும் இன்னோரன்ன நினைவுச் சின்னங்களை அமைத்து அவர்களை நினைவு கூருகின்றார்கள்.

ஆனால், மிகச்சிலரே உலகளாவிய ரீதியில் நினைவு கூறப்படுகின்றார்கள். இப்புவியில் வாழ்ந்த காலப்பகுதியினுள் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட வாழ்க்கை முறைமை, அவர்களால் சாதிக்கப்பட்ட சிறந்த சாதனைகள், விடாமுயற்சிகள், அவர்கள் நடத்தையின் முன் உதாரணங்கள் போன்றவை அவர்களை உதாரண புருசர்களாகக் கருத வைக்கின்றன. எனவேதான் அவர்களின் பின்னால் வருகின்றவர்கள் அவர்கள் காட்டிய பாதையை அடியொற்றி முன்னேறக்கூடிய வகையில் அவர்கள் நினைவு கூரப்படுகின்றார்கள்.

ஆனால், அவர்களையும் விஞ்சிய மிகச் சிலர் கற்பனையில் கூட நாம் சிந்தித்துப் பார்க்க முடியாத அளவு அதீத திறமைகளையும் ஆற்றல்களையும் கொண்டவர்களாக விளங்கி, இவ் உலகில் மிகப் பெரிய சாதனைகளைப் புரிந்து, உலகமே வியந்து அவர்களை உற்று நோக்குமாறு வாழ்ந்து மடிந்துள்ளார்கள். டாக்டர் அப்துல் கலாம் அவர்களும் அவர்களில் ஒருவர். ஒப்புவமை இல்லாதவர். அவரின் திறமைகளை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை எனலாம். என்றாலும் அவர் எளிமையின் பிறப்பிடமாக வாழ்ந்து மறைந்தார். மன்னர்களாலும் மாமேதைகளாலும் மதிக்கப்பட்டாலும் மக்களுடனேயே அவர் வாழ எத்தனித்தார். சாதாரண மக்கள் போலவே வாழ்ந்தார்.

டாக்டர் அப்துல் கலாம் சிந்தனைகள் எப்போதும் மனிதவள மேம்பாடு, நாட்டின் வளர்ச்சி என்பவற்றையே குறியாகக் கொண்டிருந்தன. ஒரு நாட்டை மேம்படுத்துவதற்கு மாணவர்களின் பங்களிப்பே மிக உன்னதமானது என்பதில் உறுதியாக இருந்த டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் மாணவர்களை நெறிப்படுத்துவதிலும் அறிவூட்டுவதிலும் அவர்களைச் சரியான பாதையில் வழிப்படுத்துவதிலும் தமது கூடிய நேரங்களைச் செலவழித்தார். டாக்டர் அப்துல் கலாம், தமிழ் நாட்டில் இராமேஸ்வரம் பகுதியில் பிறந்து வளர்ந்த ஒரு இந்தியராக இருந்த போதும், அவர் இந்திய மண்ணுக்கு மட்டும் சொந்தமானவர் அல்ல.

அவர் தமிழை நன்கு பேசக்கூடிய ஒரு தமிழ்ப் பேசும் உலகத் தலைவராகத் திகழ்ந்தார். அந்த வகையில் அவர் எமது வடபகுதி மக்களுக்குஞ் சொந்தக்காரராக எமது தமிழ்ப் பேசும் மக்களின் தலைசிறந்த தலைவனாக, எம் மாணவர்களின் வழிகாட்டியாக எம்முள் இன்றும் மிளிர்ந்து கொண்டிருக்கின்றார். இவர் மாணவர்களை விழிக்கும் போது 'அன்பான மாணவர்களே கனவு காணுங்கள்' என விழித்தே தமது உரையைத் தொடங்குவார். அவரின் உரையில் கனவு என்பதற்கு மிகச் சிறப்பானதொரு விளக்கத்தை அளித்திருந்தார்.

அதாவது 'உறக்கத்தில் வருவதல்ல கனவு. உன்னை உறங்க விடாமல் செய்வது தான் கனவு'. ஒவ்வொரு மாணவனும் மாணவியரும் தாம் என்னவாக வரவேண்டும் என்பதை முற்கூட்டியே தீர்மானித்துக் கொண்டு அந்த நிலையை அடையும் வரை ஊன் உறக்கம் மறந்து தொடர்ந்து பாடுபட வேண்டும்; அப்போது அவர்களின் இலக்கைச் சுலபமாக அடைய முடியும் என்பதே அவரின் கருத்தாக இருந்தது. டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் 2012ம் ஆண்டில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த போது யாழ் பல்கலைக்கழகத்தில் 'புயலைத் தாண்டிய தென்றல்' என்ற தலைப்பின் கீழ் எமது பல்கலைக்கழக மாணவர்களுக்கு அரியதொரு உரையை ஆற்றியிருந்தார்.

யாழ் இந்துக் கல்லூரியிலும் மாணவர்களிடையே உரையாற்றியது மட்டுமன்றி அம் மாணவர்களையும் எதிர்காலம் பற்றியதொரு விழிப்புணர்வை உண்டாக்கக் கூடிய சிறந்த உரையை வழங்கிச் சென்றிருந்தார். இத்துணை சிறப்புக்களும் கொண்ட டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் திருவுருவச் சிலை யாழ்ப்பாணத்தில் அமைக்கப் பெற்று இன்று திரை நீக்கம் செய்யப்பட்டுள்ளதென்றால் அது எமது மக்களுக்கான ஒரு கௌரவம் என்றே நாம் கொள்ள வேண்டும்' என்றார்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=159774&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

அய்யாவுக்கும் ஆச்சா....முடியல

  • கருத்துக்கள உறவுகள்

Kalam visits JaffnaKalam visits Jaffna

காலஞ் சென்ற முன்னாள் இந்திய ஜனாதிபதி  அப்துல் கலாம் அவர்களைப் பற்றி...
பல்வேறு கருத்துக்கள் இருந்தாலும், 
தான் இறக்க முதல்.... யாழ். மண்ணை மதித்து, அங்கு வந்து பொதுசன நூலகத்தில்...
யாழ். பல்கலைகழக மாணவர்களின், கடுமையான கேள்விகளையும் தாங்கிக் கொண்டு சென்ற உயர்த்த மனிதன்.
அவர் பதவியில் இருக்கும் போது... தடுத்த பல விடயங்களை,  பதவி இழந்த பின் சாதாரண மனிதராக யாழ். மண்ணில் தனது பாதத்தை பதித்த உயர்த்த மனிதன். அவர்... நேசிப்பது.... தமிழ் இனத்தை என்பதை.... நான் நன்கு அறிவேன். ப்ளீஸ்... அந்தப் பெரியவரை. வாழ்த்தாவிட்டாலும். திட்டாதீர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

Abdul_Kalam_Douglas_1.JPG

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ரை கணக்கின்படி கட்டுமரம் கண்ணை மூட அதுக்கும் சிலை வைப்பினம் எண்டு நினைக்கிறன் :grin:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.