Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துப்பாக்கிச் சூடு நடத்தி இலங்கை அகதிகளை அச்சுறுத்தியதற்கு சர்வதேச மன்னிப்புச்சபை கண்டனம்!

Featured Replies

'எங்களை சுட்டுக் கொன்று விடுங்கள்..!' இந்தோனேஷிய போலீஸிடம் கதறும் தமிழ் அகதிகள் (பதற வைக்கும் வீடியோ)

srilankatamilrefugee.jpg

ந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயற்சித்ததாக சொல்லப்படும் 44 இலங்கை தமிழ் அகதிகள்,  படகு கோளாறால் இந்தோனேஷியாவில் கடந்த 11ம் தேதி தத்தளித்து கொண்டிருந்தனர். அவர்களை இந்தோனேசிய கடற்படை மீட்டது. Aceh என்ற மாகாண கடற்கரையோரம் படகில் ஆறு நாட்களுக்கு மேலாக அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

பாஸ்போர்ட், பயண ஆவணங்கள் எதும் இல்லாததால் அகதிகளை கரையில் இறக்க இந்தோனேஷிய அரசு மறுக்கிறது. இந்த நிலையில் படங்களில் இருந்தவர்கள், எங்களை சுட்டுக் கொல்லுங்கள் என்று கதறினர். நேற்று படகில் இருந்து ஐந்து பெண்கள் வெளியே குதித்துள்ளனர். இவர்களை எச்சரிக்கும் விதத்தில் வானத்தை நோக்கி சுட்டுள்ளது இந்தோனேஷிய பாதுகாப்பு படை. இது போன்ற அகதிகளின் செயல்களை தடுப்பதற்காகவும் அந்த பகுதியில் உள்ள மக்கள் யாரும் படகின் அருகில் வரக்கூடாது என்பதற்கான எச்சரிக்கையாக இதை குறிப்பிட்டுள்ளனர்.

இந்த சூழலில் கியூடன்யோ, ஆம்னெஸ்டி உள்ளிட்ட மனித உரிமை அமைப்புகள், அகதிகள் தரையில் இறங்கி ஐ.நா.அதிகாரிகளை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என இந்தோனேஷிய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.   

இந்தோனேஷிய அரசு அகதிகளை திருப்பி அனுப்புவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக தெரிகிறது. ஐ.நா.வின் அகதிகள் உடன்படிக்கையில் இந்தோனேஷியா கையெழுத்திடாததால் அகதிகள் அந்நாட்டில் சட்டப்பூர்வமாக வேலை செய்ய முடியாது. தற்போதைய நிலையில் 13 குடியேற்ற தடுப்பு முகாம்களில் 13,679 அகதிகள் உள்ளனர்.

    

இவர்கள் இந்தோனேஷியாவிலிருந்து வேறு ஒரு நாட்டில் குடியமர்த்தபடுவதற்காக வைக்கப்பட்டுள்ளனர்.  இந்த நிலைமையில் படகில் உள்ள 44 தமிழ் அகதிகள் தொடர்பாக என்ன முடிவெடுக்கப்படும் என்பது இன்னும் உறுதிப்படத் தெரியவில்லை. 44 அகதிகளில் ஒரு கர்ப்பிணி பெண் உட்பட 15 பெண்கள், 9 குழந்தைகள், 20 ஆண்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.vikatan.com/news/world/65284-shoot-us-emotional-protest-from-tamil-refugess.art

  • தொடங்கியவர்

rtet.png

fghfgh.png

fbgdfg.png

ymtututyu.png

 

  • தொடங்கியவர்

இந்தோனேசியா: 40 தமிழ் குடியேறிகள் அடங்கிய படகு ஒன்றை கடலுக்குள் இழுத்துவிட முயற்சி

 

இந்தோனேசியா அதிகாரிகள் 40க்கும் மேற்பட்ட தமிழ் குடியேறிகள் அடங்கிய படகு ஒன்றை கடலுக்குள் இழுத்துச் செல்ல தயராகி வருகிறன்றனர்.

 

160617095207_lanka_migrants_512x288_gett

 

இலங்கையில் இருந்து வந்துள்ளதாகக் கருதப்படும் இவர்களில் ஒன்பது குழந்தைகளும் ஒரு கர்ப்பிணி பெண்ணும் அடங்குவர். அவர்களின் படகு இந்தோனேசியாவின் அச்சே மாகாணத்தில் இயந்திர கோளாறு காரணமாக நின்றுவிட்டது.

இந்த குடியேறிகள் பல நாட்களுக்கு முன்பு மீட்கப்பட்டனர்.

160617095433_lanka_migrants_512x288_gett

 

கடற்கரைக்கு அருகே ஆழமற்ற கடல் பகுதிக்கு அந்த படகை அதிகாரிகள் இழுத்து வந்து அதன் மோட்டாரை சரி செய்ய உதவினார்.

160617095611_lanka_migrants_512x288_gett

 

இந்த குடியேறிகள் ஆஸ்திரேலிய பிரதேசத்தை சேர்ந்த கிறிஸ்துமஸ் தீவை அடையும் முயற்சியில் கடந்த ஒரு மாதமாக கடலில் பயணித்துள்ளனர்.

160617095714_lanka_migrants_512x288_gett

 

இந்தோனேசியாவின் துணை அதிபர் ஜூஸுப் கல்லா மாகாண அதிகாரிகளிடம் குடியேறிகளை தற்காலிகமாக கரையிறங்க அனுமதிக்குமாறு வலியுறுத்தி வருகிறார்.

http://www.bbc.com/tamil/global/2016/06/160617_srilanka_migrants_indonesia?ocid=socialflow_facebook

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அகதிகளின் நலனில்.. வடக்கு மாகாண சபை மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு.. தமிழ் தேசிய முன்னணி போன்ற அமைப்புக்களும் அரசியல் கட்சிகளும் கவனம் எடுத்து இவர்களை ஐ நா அகதிகள் அமைப்பு பொறுப்பேற்க நடவடிக்கைக்கு வற்புறுத்த வேண்டும். கொழும்பில் உள்ள இந்தோனிசிய தூதரகம்.. ஐநா துணை அலுவலகம்.. ஊடாக இதனைச் செய்யலாம். 

உண்மையான அகதிகள் இனங்காணப்பட்டு பாதுகாப்பான நாடுகளில் அரசியல் தஞ்சம் பெற உதவ வேண்டும். மேலும் அகதிகள் என்று நிரூபிக்க முடியாதவர்கள் பாதுக்காப்பாக தாய் நாடு திரும்ப உதவி செய்வதோடு அரச அதிகாரிகளால்.. துன்புறுத்தப்படுவதில் இருந்து பாதுகாக்கப்படுவதும் அவசியமாகும். 

Edited by nedukkalapoovan

இந்த நாடகங்கள் முடிவுக்கு வர வேண்டும்!

  • தொடங்கியவர்

அகதிகள் தொடர்பில் இந்தோனேசியாவின் முடிவுக்கு சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் கண்டனம்

18 ஜூன் 2016
Bookmark and Share
 

குளோபல் தமிழ்ச்செய்தியாளர் கொழும்பு

அகதிகள் தொடர்பில் இந்தோனேசியாவின் முடிவுக்கு சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் கண்டனம்



இந்தோனேசியாவின் ஆச்சே மாகாண கடற்கரையில் தரித்திருக்கும் இலங்கைத் தமிழ் அகதிகள் படகை மீண்டும் கடற்பரப்புக்குள் தள்ளிச் செல்லும் இந்தோனேசியாவின் முடிவுக்கு சர்வதேச மன்னிப்புச் சபை மற்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம்  என்பன  கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன.

கர்ப்பிணிப் பெண் ஒருவர் மற்றும்  9 சிறுவர்கள் உட்பட 44 இலங்கை தமிழ் அகதிகள் சட்டவிரோத கடற்பயணத்தை மேற்கொண்டு அவுஸ்திரேலியாவுக்கு சென்ற வேளை படகில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு  காரணமாக படகு  இந்தோனேசியாவின் ஆச்சே மாகாணத்தில் தரைதட்டியது.

இவர்களை மீட்ட இந்தோனேசிய அதிகாரிகள்இ அவர்களுக்கு உணவு வழங்கியதுடன்  அவர்களது உடல்நிலையும் பரிசோதித்ததன் பின்னர் படகில் ஏற்பட்ட  இயந்திர கோளாறை சரி செய்து மீண்டும் அவர்களை தமிழகத்துக்கே கடல்வழியாக திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையிலேயே  இந்தோனேஷிய அதிகாரிகள் மனிதாபிமானற்ற வகையில்  செயற்படுவதாக  சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கண்டித்துள்ளன.

இதற்கிடையேஇ  தமது  நாட்டுக்கு அகதிகளை அனுப்பி வைக்கும் முயற்சியில் ஈடுபடவேண்டாம் எனவும் அவர்களை தடுத்து நிறுத்துமாறும் அவுஸ்திரேலியா இ  இந்தோனேசிய அரசை வற்புறுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/133223/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

துப்பாக்கி சூடு நடத்தி, இலங்கை அகதிகளின் உயிர்களுக்கு ஆபத்தை உணர்த்தி அவர்களை படகுகளுக்குள் தள்ளிய இந்தோனேசிய அதிகாரிகளின் நடவடிக்கை, சர்வதேச நீதியை மீறும் செயல் என சர்வதேச மன்னிப்பு சபை குற்றம் சுமத்தியுள்ளது.

துப்பாக்கி சூடு நடத்தி, இலங்கை அகதிகளின் உயிர்களுக்கு ஆபத்தை உணர்த்தி அவர்களை படகுகளுக்குள் தள்ளிய இந்தோனேசிய அதிகாரிகளின் நடவடிக்கை, சர்வதேச நீதியை மீறும் செயல் என சர்வதேச மன்னிப்பு சபை குற்றம் சுமத்தியுள்ளது.

   

பெண்கள் சிறுவர்களுக்கு எதிராக இவ்வாறான அச்சுறுத்தல் தந்திரோபாயங்களை நிறுத்தி, அகதிகளை படகில் இருந்து இறக்கி, ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான அதிகாரிகளை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புசபையின் தென்னாசிய மற்றும் பசுபிக் பிராந்திய பணிப்பாளர் ஜோசெப் பெனேடிக்ட் கூறியுள்ளார். அகதிகளை சந்திப்பதற்கு ஐக்கிய நாடுகளின் அதிகாரிகள் தயாராக இருப்பதாகவும் பெனேடிக்ட் தெரிவித்துள்ளார்.

படகில் இருக்கும் ஐந்து பெண்கள், படகில் இருந்து குதித்து கரைக்கு செல்ல முயன்றபோதே அச்சுறுத்தும் வகையில் துப்பாக்கி பிரயோகம் ஆகாயம் நோக்கி மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் அச்சே மாகாண அதிகாரிகள், அகதிகளின் படகை திருத்தம் செய்தும், அவர்களுக்கு உணவுகளை வழங்கியும் அவர்கள் சர்வதேச கடலில் கொண்டுபோய் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

http://www.seithy.com/breifNews.php?newsID=159792&category=TamilNews&language=tamil

  • தொடங்கியவர்

இந்தோனேஷிய கடற்கரையில் பரிதவிக்கும் இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்றுங்கள்: ஐ.நா., மோடிக்கு வைகோ கடிதம்

 
 
அதிகளாகத் தஞ்சம் பெற கடல் வழியாக பயணித்தபோது, படகில் பழுது ஏற்பட்டதால் இந்தோனேஷியக் கடற்கரையில் 40-க்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் பரிதவிப்பு. | படம்: ஏஎஃப்பி
அதிகளாகத் தஞ்சம் பெற கடல் வழியாக பயணித்தபோது, படகில் பழுது ஏற்பட்டதால் இந்தோனேஷியக் கடற்கரையில் 40-க்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் பரிதவிப்பு. | படம்: ஏஎஃப்பி

இந்தோனேஷிய கடற்கரை அருகில் உயிருக்குப் போராடுகின்ற இலங்கைத் தமிழர்களை பாதுகாக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக ஐ.நா., அகதிகள் ஆணையத் தலைவர் ஃபிலிப்போ கிராண்டிக்கும், பிரதமர் மோடிக்கும் இன்று அவர் அனுப்பிய மின்னஞ்சல் கடிதத்தில், ''2009 ஆம் ஆண்டு, இலங்கை ராணுவம் நடத்திய கோரமான படுகொலைத் தாக்குதல்களில் ஒன்றரை லட்சம் இலங்கைத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். தமிழ் இனப் படுகொலை நடந்து முடிந்தபின்னரும், அதனுடைய பின் விளைவான துன்பமும், துயரமும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழர்களை இன்றைக்கும் வாட்டி வதைத்துக் கொண்டு இருக்கின்றது.

காணாமல் போன ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் எங்கே இருக்கின்றார்கள் என்பதே தெரியவில்லை. பல்லாயிரக்கணக்கானோர் ராணுவ முகாம்களிலும், சிறைகளிலும் வாடுகிறார்கள். இந்தத் துன்பத்தில் இருந்து விடுபட எண்ணிய தமிழர்கள், வேறு நாடுகளுக்குச் சென்று, அதிகளாகத் தஞ்சம் பெறும் நோக்கத்தில் கடல் வழியாகப் படகுகளில் பயணிக்கின்றார்கள்.

அப்படி ஆஸ்திரேலியாவை நோக்கிப் புறப்பட்ட ஒரு படகின் இயந்திரங்கள் பழுது அடைந்ததால், இந்தோனேஷிய கடற்கரையை ஒட்டிய கடலில் பரிதவித்துக் கொண்டு இருக்கின்றார்கள். உதவி கேட்டு அவலக்குரல் எழுப்பிக் கொண்டு இருக்கின்றார்கள். இந்தோனேஷிய அரசு அவர்களுக்கு உணவு வழங்கி இருக்கின்றது. ஆனால், தங்கள் நாட்டுக் கடற்கரையில் இறங்குவதற்கு அனுமதிக்கவில்லை. வாழ்வதா? சாவதா? என்று புரியாமல், தமிழர்கள் கண்ணீரில் தத்தளிக்கின்றார்கள்.

சிரியா உள்ளிட்ட மத்திய தரைக் கடல் நாடுகளில் இருந்து உயிர் பயத்தால் ஏராளமானவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்கின்றனர். அப்படிச் சென்ற அய்லான் என்ற இரண்டு வயதுச் சிறுவன், கிரேக்கக் கடற்ரையில் பிணமாகக் கிடந்தது, உலகெங்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனால், சுவிட்சர்லாந்து, சுவீடன் போன்ற நாடுகள் மனிதாபிமானத்தோடு அகதிகளாக வருகிறவர்களை, குறிப்பாக பெண்கள் சிறுவர்களைப் பாதுகாத்துத் தஞ்சம் கொடுக்கின்றன.

அதுபோல, இந்தோனேஷிய கடற்கரை அருகில் உயிருக்குப் போராடுகின்ற இலங்கைத் தமிழர்களை, இந்தோனேசிய நாட்டுக் கடற்கரையில் இறங்குவதற்கும், மனிதாபிமானத்தோடு அவர்களைப் பாதுகாப்பதற்கும் இந்தோனேசிய அரசுடன் தொடர்பு கொண்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்'' என்று கூறியுள்ளார்.

 

http://tamil.thehindu.com/tamilnadu/இந்தோனேஷிய-கடற்கரையில்-பரிதவிக்கும்-இலங்கைத்-தமிழர்களைக்-காப்பாற்றுங்கள்-ஐநா-மோடிக்கு-வைகோ-கடிதம்/article8745668.ece?homepage=true

  • கருத்துக்கள உறவுகள்

அகதிகள் படகை இந்தியாவுக்கே திருப்பி அனுப்ப இந்தோனேசியா முடிவு

aus785அவுஸ்ரேலியா நோக்கில் செல்லும் வழியில் மோசமான காலநிலை மற்றும் இயந்திரக் கோளாறினால், இந்தோனேசியாவில் தரைதட்டியுள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் படகு மீண்டும் இந்தியாவுக்கே பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக, இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கர்ப்பிணிப் பெண் மற்றும் 9 சிறுவர்கள் உள்ளிட்ட 44 இலங்கைத் தமிழ் அகதிகள் பயணித்த படகு ஆச்சே பிராந்தியத்தின் கரையில் இருந்து 300 மீற்றர் தொலைவில் தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில் கடந்த சனிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது.

கடந்த புதன்கிழமை இரவு உள்ளூர் மற்றும் மத்திய அரசாங்க அதிகாரிகளுக்கிடையில் நடத்தப்பட்ட பேச்சுக்களின் போது, படகை கரைக்கு கொண்டு வரவும் எரிபொருள் மற்றும் உணவு உதவிகளை வழங்கவும் முடிவு செய்யப்பட்டது. எனினும், அவர்கள் திரும்பிச் சென்று விடவேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் இந்தோனேசிய உதவி அதிபர் யூசுப் கல்லாவும் பங்கேற்றிருந்தார். இலங்கை அகதிகளை சட்டவிருாத குடியேற்றவாசிகள் என்று குறிப்பிட்ட ஆச்சே பிராந்திய குடிவரவு அதிகாரியான சமடான், போதிய பயண ஆவணங்கள் இல்லாமை, பயண நோக்கத்தை அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தாமை, காரணமாக அவர்களைத் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்தப் படகு இந்தோனேசியாவை விட்டு, இந்தியா நோக்கி பாதுகாப்புடன் வெளியேற்றப்படும் என்று எப்போது இது நடக்கும் என்று உறுதிப்படுத்த முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

http://ekuruvi.com/akathikal-17-06-2016/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.