Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீள்குடியேற்ற வாக்குறுதி பற்றி வாய்திறக்காத ஜனாதிபதி! - வலி.வடக்கு மக்கள் ஏமாற்றம்

Featured Replies

யாழ்ப்பாணம் வருகை தந்த ஜனாதிபதி மீள் குடியேற்றம் தொடர்பில் எவ்வித கருத்தையும் வெளியிடவில்லை.

யாழ்.துரையப்பா விளையாட்டரங்கை திறந்து வைப்பதற்காக யாழ்ப்பாணத்திற்கு இன்று காலை விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மீள் குடியேற்றம் தொடர்பில் கருத்துக்களை கூறுவார் எனும் எதிர்ப்பார்ப்புடன் வலி.வடக்கில் இருந்து கடந்த 30 வருட காலமாக இடம்பெயர்ந்து வாழும் மக்கள் எதிர்பார்த்து இருந்தனர்.

அந்நிலையில் விளையாட்டரங்கை திறந்து வைத்து உரையாற்றிய ஜனாதிபதி மீள் குடியேற்றம் தொடர்பில் எந்த விதமான கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை. இதனால் எதிர்பார்ப்புடன் இருந்த மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

கடந்த டிசம்பர் மாதம் 20ம் திகதி யாழில் நடைபெற்ற தேசிய நத்தார் தின நிகழ்வில் கலந்து கொள்ள யாழ்ப்பணத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி ஆறு மாத கால பகுதிக்குள் இடம்பெயர்ந்த மக்கள் அனைவரையும் மீள சொந்த இடத்தில் மீள் குடியேற்றுவேன் என உறுதி வழங்கி இருந்தார்.

ஜனாதிபதி கொடுத்த கால கெடு ஆனது எதிர்வரும் 20ம் திகதியுடன் முடிவடைகின்றது.  என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை தாம் ஜனாதிபதியின் வாக்குறுதியை நம்பி மீள் குடியேற்ற கனவுடன் கடந்த ஆறு  மாத காலமாக காத்திருந்ததாகவும் , ஆனாலும் ஆறு மாத காலபகுதியில் மீள் குடியேற்றம் தொடர்பில் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காது தம்மை ஜனாதிபதி ஏமாற்றி விட்டதாகவும் அதனால் எதிர்வரும் 22ம் திகதி முதல் மீள் குடியேற்றத்தை கோரி தொடர் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக நேற்றைய தினம் வலி.வடக்கு மக்கள் அறிவித்து உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/133225/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்
மீள் குடியேற்றம் தொடர்பில் கருத்துக்களை கூறுவார் எனும் எதிர்ப்பார்ப்புடன் இருந்த வலி.வடக்கு மக்கள், நேற்றைய கூட்டத்தில் மீள் குடியேற்றம் தொடர்பில் ஜனாதிபதி எந்த கருத்துக்களையும் வெளியிடாததால்  ஏமாற்றம் அடைந்துள்ளனர். துரையப்பா விளையாட்டரங்கை திறந்து வைப்பதற்காக யாழ்ப்பாணத்திற்கு நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வந்திருந்தார். அவர் மீள்குடியேற்றம் குறித்து கருத்து வெளியிடுவார் என்று வலி.வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்தனர்.

எனினும், ஜனாதிபதி அதுபற்றி வாய்திறக்காதது அவர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 20ம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய நத்தார் தின நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி ஆறு மாத கால பகுதிக்குள் இடம்பெயர்ந்த மக்கள் அனைவரையும் மீள சொந்த இடத்தில் மீள் குடியேற்றுவேன் என உறுதி வழங்கி இருந்தார். ஜனாதிபதி கொடுத்த காலக்கெடு எதிர்வரும் 20ம் திகதியுடன் முடிவடைகின்றது குறிப்பிடத்தக்கது.

http://www.seithy.com/breifNews.php?newsID=159857&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

சரவணபவனிடமும்.மாவையிடமும் கேக் சாப்பிடும்போது சொல்லிவிட்டுப் போனவராமே/

  • கருத்துக்கள உறவுகள்

மைத்திரி சொல்லி வந்ததில் எதையும் நிறைவேற்றல்ல.. சர்வதேச  போர்க்குற்ற விசாரணை என்பதை இல்லாமல் செய்ததையும்.. மகிந்த கம்பனியை காப்பாற்றியதையும் தவிர..!

காணி விடுவிப்பாக இருக்கட்டும்..

மீள் குடியேற்றங்களாக இருக்கட்டும்..

முன்னாள் போராளிகளின் சமூக சுமூக வாழ்வாக இருக்கட்டும்..

படை விலகலாக இருக்கட்டும்..

வலிந்து விகாரைகள் அமைக்கப்படுவது நிறுத்தலாக. இருக்கட்டும்..

வலிந்த சிங்களக் குடியேற்றங்கள் நிறுத்தலாக இருக்கட்டும்..

ஏன் ஜனாதிபதிப் பதவியை இல்லாமல் செய்வதாக இருக்கட்டும்..

ஏன் சம் சும் கும்பலுக்கு வாய் மொழி மூலம் வழங்கியதாக அவர்கள் சொல்லிக் கொண்ட 2016 இல் அதிசயமாக இருக்கட்டும்..

மகிந்த மற்றும் அமைச்சர்களின் ஊழல் குற்றவிசாரணையாக இருக்கட்டும்..

எதுவுமே.. மைத்திரியால் சாத்தியமாகவில்லை.

சாத்தியமானதெல்லாம்.. தமிழர் நில அபகரிப்பும்.. விகாரைகளின் பெருக்கமும்.. சிங்கள முஸ்லிம் குடியேற்றங்களும்.. போதைப் பொருளும்.. வன்முறைகளும்.. ஏமாற்றங்களுமே தவிர வேறு எவையும் அல்ல. 

மகிந்த கம்பனியை காப்பாற்றி அப்பம் தின்ற நன்றிக்கடனை நிறைவேற்றி விட்டுள்ளார்.. அவ்வளவே. :rolleyes:

11 hours ago, nedukkalapoovan said:

மைத்திரி சொல்லி வந்ததில் எதையும் நிறைவேற்றல்ல.. சர்வதேச  போர்க்குற்ற விசாரணை என்பதை இல்லாமல் செய்ததையும்.. மகிந்த கம்பனியை காப்பாற்றியதையும் தவிர..!

காணி விடுவிப்பாக இருக்கட்டும்..

மீள் குடியேற்றங்களாக இருக்கட்டும்..

முன்னாள் போராளிகளின் சமூக சுமூக வாழ்வாக இருக்கட்டும்..

படை விலகலாக இருக்கட்டும்..

வலிந்து விகாரைகள் அமைக்கப்படுவது நிறுத்தலாக. இருக்கட்டும்..

வலிந்த சிங்களக் குடியேற்றங்கள் நிறுத்தலாக இருக்கட்டும்..

ஏன் ஜனாதிபதிப் பதவியை இல்லாமல் செய்வதாக இருக்கட்டும்..

ஏன் சம் சும் கும்பலுக்கு வாய் மொழி மூலம் வழங்கியதாக அவர்கள் சொல்லிக் கொண்ட 2016 இல் அதிசயமாக இருக்கட்டும்..

மகிந்த மற்றும் அமைச்சர்களின் ஊழல் குற்றவிசாரணையாக இருக்கட்டும்..

எதுவுமே.. மைத்திரியால் சாத்தியமாகவில்லை.

சாத்தியமானதெல்லாம்.. தமிழர் நில அபகரிப்பும்.. விகாரைகளின் பெருக்கமும்.. சிங்கள முஸ்லிம் குடியேற்றங்களும்.. போதைப் பொருளும்.. வன்முறைகளும்.. ஏமாற்றங்களுமே தவிர வேறு எவையும் அல்ல. 

மகிந்த கம்பனியை காப்பாற்றி அப்பம் தின்ற நன்றிக்கடனை நிறைவேற்றி விட்டுள்ளார்.. அவ்வளவே.

சிங்கள-பௌத்த இனமதவெறி அரசுகளால் சிங்கள-பௌத்த இனமதவெறி அரச இயந்திரங்களால் தமிழர்கள் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் கிடைக்காது என்பது 60 வருட அனுபவங்கள் மூலம் நிரூபிக்கப்பட்ட உண்மை. இன்று சர்வதேசம் ஒப்புக்காவது தமிழர் பிரச்சினை என்ற ஒன்றைப் பேசுவதற்கு விடுதலைப் போராட்டமே காரணம்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, போல் said:

இன்று சர்வதேசம் ஒப்புக்காவது தமிழர் பிரச்சினை என்ற ஒன்றைப் பேசுவதற்கு விடுதலைப் போராட்டமே காரணம்.

அதிலும் புலிகள் மீண்டும் வந்திடுவாங்களோ என்ற சின்னப் பயமும்.. வெளிநாடுகளில் உள்ள தமிழர்களின் பணப்புழக்கமும் தான்.. முக்கியமா இந்தப் பிரச்சனையில்.. அமெரிக்காவே சிலதை நினைவில் வைச்சு.. தடையை கூட்டி விளையாடிக்கிட்டு இருக்க முடியுது. :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.