Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மரிக்கார் ராம்தாஸ் காலமானார்

Featured Replies

மரிக்கார் ராம்தாஸ் காலமானார்

 

இலங்கையின் புகழ்பெற்ற திரைப்பட மற்றும் நாடக கலைஞரும் எழுத்தாளருமான மரிக்கார் ராம்தாஸ் என்றழைக்கப்படும் எஸ்.ராம்தாஸ் இன்று காலை காலமானார்.

அண்மைக்காலமாக சுகவீனமுற்றிருந்த அவர், சென்னையில் வைத்து 69 வயதில் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் கோமாளிகள் திரைப்படத்தின் ஊடாக சர்வதேச அளவில் அறியப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

asdsaa.jpg

http://www.virakesari.lk/article/8879

  • கருத்துக்கள உறவுகள்

பலரின் மனங்களின் நீங்க இடம்பிடித்த சிறந்த நகைச்சுவை கலைஞர்.  

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.

Edited by தமிழரசு

  • தொடங்கியவர்

நான் கண்ட மரிக்கார் ராம்தாஸ்! குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக நியூசிலாந்திலிருந்து எஸ் எம் வரதராஜன்:

13 ஜூலை 2016
Bookmark and Share
 

 

நான் கண்ட மரிக்கார் ராம்தாஸ்! குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக நியூசிலாந்திலிருந்து  எஸ் எம் வரதராஜன்:
1974 ஆம் ஆண்டு டீ எஸ் சேனநாயக்க கல்லூரி மண்டபத்தில் ஓர் இளைஞர் அரை மணி நேர நாடகம்  ஒன்றை மேடையேற்றினார் .அ வர பின்னர் பல வானொலி நாடகங்களையும் எழுதி நடித்து மேடையுமேற்றினார் .இந்த நாடகத்தை மக்கள் வங்கியின் விளம்பரத்திற்காக அமரர்  சில்லையூர் செல்வராசன் வானொலிக்கு எழுதித் தரும்படி கேட்க -அதுவே -கோமாளிகள் கும்மாளமனது.
இதனை எழுதிய அந்த இளைஞர் தான் அமரர் எஸ் ராம்தாஸ் .
 
 
90 வாரங்கள் வானொலியில் வெற்றிகரமாக ஒலித்த இந்த நாடகம் பின்னர் "கோமாளிகள் "திரைப்படமானது ராம்தாஸ் அதில் முக்கிய பாத்திரமேற்று நடித்தார் .அதுவே அவருக்கு மரிக்கார் என்ற இடுகுறிப் பெயரையும் கொடுத்தது .
 
யாழ்ப்பாணத்தில்  "கோமாளிகள் "திரைப்படம் பார்க்க வந்த ரசிகர்கள் நுழைவுச் சீட்டுக் கிடைக்காமல் திரும்பிப் போன அதிசயம் ஈழத்துத் தமிழ்த் திரைப்படம் ஒன்றிற்கு நிகழ்ந்தது  (மல்லிகை) . 
 
கோமாளிகள் திரைப்படம் ஏற்கனவே வெளிவந்த இலங்கைத் தமிழ்த் திரைப்படங்களை விட அதிக நாட்கள் ஓடியது .
 
படம் ஒரு நகைச்சுவைப் படமெனினும் ஈழத்தில் இனிமேல் தமிழ்ப் படங்களைத் தயாரிக்கலாம் என்ற தெம்பை ஏற்படுத்தியது எனப்படும் 
 
ஈழத்துத் தமிழ்த் திரைப்பட உலகில் கோமாளிகள் ஒரு புதிய நம்பிக்கையை  ஏற்படுத்தியது (சுதந்திரன் ) 
 
கோமாளிகளைத் தொடர்ந்து ஏமாளிகள் திரைப்படத்தை ராம்தாஸ் தயாரித்து  வெளியிடடார் .இதன் கதைவசனம் உதவி நெறியாள்கை   ஆகிய பணிகளையும் இவரே மேற்கொண்டார் .
 
அமரர் வீ பீ கணேசனின் புதிய காற்று ,நான் உங்கள் தோழன் , நாடு போற்ற வாழ்க ஆகிய திரைப்படங்களுடன் குத்து விளக்கு ,மாமியார் வீடு , Blendings, நொமியன   மினிசு - ஷர்மிளாவின் இதயராகம் 
  • ஆகிய படங்களிலும் நடித்துள்ளார் .
 
  • புரோக்கர் கந்தையா,சுமதி,காதல் ஜாக்கிரதை,கலாட்டா காதல் போன்றவை அவர் நடித்த நாடகங்கள் 
 
 
காலங்கள் ,எதிர்பாராதது  காணிக்கை , மலையோரம் வீசும் காற்று , அதிர்ச்சி வைத்தியம் என்பன இவர் நடித்த  தொலைக் காட்சி நாடகங்கள் .
 
நடிப்பதில் கடினமான விடயம் பெண்ணாக நடித்தல் என்பர் .ராம்தாஸ் பெண் பாத்திரத்தில் அருமையாக  நடித்து பலரது பாராட்டையும் பெற்றிருந்தார் .
 
பல குணசித்திரப்  பாத்திரங்களில் நடித்த ராம் தாஸ் ஒரு மரிக்கார் என்ற நகைச்சுவைப் பாத்திரமாகவே மக்கள் மனதில் நிறைந்தார் .
 
வானொலி வர்த்தக விளம்பரசேவையில் அவரது பணி குறிப்பிடத்க்கது ."அங்கிள் எனக்கு இன்னைக்கு மனசு நல்லால்ல " என்று இவரது மகள் பிரியா சொல்வதும் அதனைத் தொடர்ந்து மரிக்கார் கதைப்பதுமான ஸ்டார் விளம்பரம் எங்கள் பாடசாலை நாட்களில் வானொலியில் ஒலித்து பள்ளி மாணவர்களும் சொல்லித் திரிந்த ஒன்றாகும் .
 
செய்மதித் தொலைக் காட்சிகள் இலங்கையில் தமது ஆதிக்கத்தைச் செலுத்துவதற்கு முன்னர்,  இலங்கைத் தொலைக்காடசி வரலாற்றில்  ஆதிக்கம் செய்த ஒரு "பெரும் கோள்" மறைந்த கலைஞர் மரிக்கார் எஸ் ராமதாஸ் அவர்கள் என்று  சொல்லமுடியும் .
 
1982 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி தொடங்கிய ரூபவாஹினி, அதன் முக்கிய தமிழ் நிகழ்ச்சிகளில் ஒன்றாக '"பொன் மாலைப் பொழுது " என்ற நிகழ்ச்சியை -தமிழ் பேசும் குடும்பங்கள்   தமது அன்றாடக் கடமைகளை ஒத்திவைத்துப் பார்க்கும் வகையில் தென்னிந்திய திரைப்படப் பாடல் களை  அவை அங்கு வெளியிட்ட கையோடு இலங்கையில் ஒளிபரப்பிய சேவையைப் புரிந்தவர் ராம் தாஸ்  .விளம்பர நிகழ்ச்சியெனினும் மக்கள் ரசனையைப்  புரிந்து வாராவாரம் அவற்றை அழகுறத் தொகுத்து வழங்கி வந்தவர் அவர் .
 
நடிகை ராதிகாவின்  கன்னிப   படைப்பான பெண்  ( ஓரங்கத் தொடர்கள்) பாலசந்தரின் தொடர்கள் ,அகிலனின் சித்திரப்பாவை போன்ற ஆரம்பகால தொலைக்காடசித் தொடர்கள்  தமிழகத்தில் வெளிவந்தபோது அவற்றை விளம்பர உதவியுடன் இலங்கைத் தமிழ்பேசும் இரசிகர்கள்  சுவைப்புக்கு   வழிசெய்தவர்  ராம்தாஸ் .
 
இலங்கை அரசின்கட்டுப்பாட்டிலுள்ள அரச கூட்டுத்தாபனம் தமிழ் பேசும் ரசிகர்கள் மீது உள்ளார்ந்தமான அக்கறையைக் காட்டுமாக இருப்பின் தனது அதிகாரிகளில் ஒருவரை இந்தியாவுக்கு அனுப்பி நல்ல நிகழ்ச்சிகளைத் தெரிவுசெய்து தனது பணியில் முக்கிய பணி யாக நாட்டின் ஒரு பகுதி மக்களுக்குத்  தரமான நிகழ்ச்சிகளை வழங்க வேண்டியது அதன் கடனாகும். ரூபவாஹினி தொடங்கிய  காலம் முதல் தகுதி வாய்ந்த தமிழதிகாரிகள் அங்கு பணியாற்றி வருகின்ற்னர் . ஆனால் அரச நிறுவனம் அந்தச் சேவையை செய்யவில்லை . தமிழ் நிகழ்ச்சிகளுக்கென்று நியமிக்கப்படட பணிப்பாளர் சபை உறுப்பினர்களும் எண்ணவில்லை .
 
ராம்தாஸ்  இந்த இடத்தை நிரப்பினார் .இதனால்  இலங்கை தமிழ் ரசிகர்களின் இரசனையையும்  அவரே நிரப்பவேண்டியவரானார்.
 
செய்மதித் தொலைகாட்சிகளின் வருகையும் தனியார் தொலைக்காடசியின் செய்மதித் தொடர்புகளும் மேவும் வரையிலும் ராம்தாஸ் இலங்கைத் தொலைக்காட்சி வரலாற்றில் ஓர்  இணைகரமாக இயங்கியவர் .பெரும்பாலுமே .
ரூபவாஹினியின் ஒளிபரப்பு விதிமுறைகளுக்கேற்ப நிகழ்ச்சிகளைத் தொகுத்து ,தயாரித்து வழங்கினார் .
 
 
நான் சக்திக்கு முகாமையாளரான பின்னர் ஒருநாள்  சக்தியில் ஒரு சினிமாப் பாடல்  
ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தவேளை தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது .மறுமுனையில் ராம்தாஸ் அண்ணர் "வரதா வணக்கம் ...என்று சுகம்விசாரித்துப் பேச்சைத் தொடங்கியவர் .இப்போ போய்க்கொண்டிருக்கும் பாடல் நினைவிருக்கிறதா ?" என்று  கேட்டார் .
 
ரூபவாஹினியில் அந்தப் பாடலை அவர் "பொன் மாலைப் பொழுது" நிகழ்ச்சியில் இட்டு வந்தபோது அதில்  இரண்டு "செக்கன்ட்ஸ் "கால அளவுள்ள காட்சியை  எடுத்துவிட்டு அனுப்பும்படி நிகழ்ச்சியை -ஒளிபரப்பிற்கு முதல் பார்வையிட்ட  நான் அவரிடம் கேட்டிருந்தேன் .
 
ஆனால் நான் முகாமையாளராக பணியாற்றிய தனியார் ஊடகத்தில் அது போகிறதே என்பதை எனக்கு நினைவூட்டவே எனக்கு அவர் தொலைபேசி எடுத்தார் .
 
"ஒரு "இரண்டு செக்கன்ஸ்(விநாடிகள்)காட்சிக்கு"  --என்னை  "எடிட்டிங்" புக் பண்ண வைச்சு என்ன வேலை செய்தீர்கள் ...இப்ப பார்த்தீர்களா .சன்னில(Sun) வாற எல்லாம் இனி எப்பிடி எடிட் பண்ணி போட போறீர்கள் என்று நானும் பார்க்கத்தானே போறேன் "...என்று பகிடியாகச் சொன்னார்.
 
சில நாட்களுக்கு முன்னர் ராம் அண்ணர் தொடர்பான சில படங்களைத் தேடினேன்.
 
 அவர் பிரதி எழுதி -அவசரமாய் ஒரு புதுவருடத் திருநாளுக்கு நான் தயாரித்த "அதிர்ச்சி வைத்தியம் " நகைச்சுவை நாடகத்தின் shooting shots படங்களைத் தான் நான்  தேடினேன் .
 
அந்தப் படங்களை  வைத்தே ராம் அண்ணரைப் பற்றி ஒரு குறிப்பு எழுத நினைத்தேன்  அவர்  மகன் சதீஷ் உள்ள படம் ஒன்று கிடைத்தது . அதனை வைத்து (அமரர் கே எஸ் பாலச்சந்திரனுடன் அவர் நிற்கும் படம் ) முகநூலில் எழுதியிருந்தேன்.
 
சதீஷ் ராமதாஸ் அதற்கு குறிப்புரையும் எழுதியிருந்தார்.
 
நெல்லியடி மத்திய  மகா வித்தியாலயத்தில் "கிரேஸி கோமாளிகள் "நாடகம்  மேடையேறியபோது ராமதாஸை  முதலில் நேரில் பார்த்தேன் . அன்று  பத்தோடு பதினொன்றாக  ஒரு  ரசிகனாக இருந்தேன் .கதைக்கமுடியவில்லை .ராமதாஸ் நாடகம் முடிந்து மேடையை விட்டிறங்கி வித்தியாலய வாசல் வரைக்கும் செல்லும் வரை நாமும் பின்னால் சென்று அவரை வழியனுப்பினோம். அது எம் பாடசாலைக் காலம் .
 
பின்னர் ரூபவாஹினிக்கு வந்தபின்னர் தான் அவருடன் நேரில் பழகும் வாய்ப்புக் கிடைத்தது .பொன் மாலைப் பொழுது "கசட் " டை வாரம் தோறும் கொண்டுவார் .ரூபவாஹினி வரவேற்பு மண்டபம் , வர்த்தகப் பிரிவு என்பன அவரின் நினைவுகளைச்  சுமக்கும்.
 
மலையோரம் வீசும் காற்று தொலைக்காட்சி தொடர் நாடக ஒளிப்பதிவில் நான் உதவித் தயாரிப்பாளர் . ஹட்டன்- " டின் சின்" பெருந்தோட்டப்  பயிற்சி மண்டபத்தில்  ஒளிப்பதிவுக் குழுவினர் ,கலைஞர்கள் தங்கியிருந்தோம்  . ராம்தாஸ் அண்ணரின் நகைச்சுவைகளும் அவர்  
நடித்த திரைப்படங்களின் ஒளிப்பதிவின்போது ஏற்படட சுவையான அனுபவங்களும் இரவில் அங்கு தங்கியிருந்த கலைஞர்களை மகிழ்ச்சியில் குளிக்க  வைத்தன . 
 
பெருநாள் ஒளிபரப்பு ஒன்றிற்கு விளம்பர அனுசரணையுடன்  ஒரு தொலைக்காடசி நாடகம் தருவதாக ராம் உறுதியளித்திருந்தார் .
 
ஆனால் அதனைத் தருவதில் ஏதோ சிக்கல் ஏற்பட்டது . பணிப்பாளராக இருந்த திரு விஸ்வநாதன்  
-"ராம்தாஸிடம் ஒரு பிரதி  இருக் கிறது . நகைச்சுவை நாட கம் தான் . ஏற்கனவே ஒதுக்கப்பட்ட் நேரம் உள்ளது .அதனை விடவும்  முடியாது . செய்கிறீர்களா ?  .".என்று கேட்டுக் கொண்டார்.
 
பொதுவாகவே அந்நாளில் ஒரு அரை மணி நேர தொலைக்காட் நாடகத்திற்கு -ஒளிப்பதிவுக்கு - ஐந்து  நாட்கள்  சராசரி தேவைப்படும் . ஆனால் கமரா -சாதனங்கள் வழங்கற்  பிரிவில் அந்தளவு நாட்களுக்கு கமரா இருக்கவில்லை.  மூன்று நாட்களே இருந்தன.
 
ராம்தாஸ் சொன்னார். "நீங்கள் book  பண்ணுங்கள் .நான் செய்து  தருகிறேன் " என்று. 
 
ரூபவாஹினியில் Programme budget (Drama) அனுமதிக்கு  பிரதியையும் இணைத்தல்  வேண்டும் என்ற வழமையிருந்தது. .
 
ராம்தாஸ் பிரதியைத் தரவேயில்லை . அதனால் அனுமதிக்கு தாமதாயிற்று .நிதிப்பிரிவில் உள்ளவர்களுக்கு  தமிழ் மொழி விளங்காததால் - அவர்களைச் சமாளிப்பது சுலபமாக  இருந்தது . எப்படியும் பிரதியை ஒளிப்பதிவுக்கு முன் தந்துவிடுவேன் -என்ற  உறுதியுடன் அனுமதியைப் பெற்றுவிடடேன் . அப்போதான் செலவுக்கான முற்பணத்தைப் பெறமுடியும் .
 
ராம்தாஸ் - பிரதியைத் தந்தது ஒளிப்பதிவு ஆரம்பமாவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னராகும் .
 
நான் "டென்சனாக " இருந்தாலும் அவர்  வழமைபோலவே எவ்விதமான குழப்பமுமில்லாமல் இருந்தார் .
 
 
ஆயினும் Location survey  விடயங்கள் பற்றியெல்லாம் ஒன்றும் யோசிக்கவேண்டாம் என்றும் தான் எல்லாம் பார்த்துள்ளதாகவும் சொல்லியிருந்தார் . எனினும் நான் இயக்குனர் என்ற வகையில் முதல் நாள் இரவில் தமது வாகனத்தில் கூட்டிச்சென்று காட்டினார் .
 
இவருடன் அதில் நடித்தவர்கள் உபாலி செல்வசேகரன் விஜயாள் பீட்டர் ,ஸ்ரீதர் ,நிலாமதி  ,ஒரு பாம்பு .
 
ஒரு பாம்புக்காக மூன்று பாம்புகள் நடிக்கவேண்டியிருந்தன.ஏனெனில் ஒளி வெளிச்சம் , எமது  தயாரிப்பு வேலைகளின் சத்தம் என்பவற்றில் பாம்பு களைத்துவிடும்..கோபம் வந்து பலமாய்ச் சீறும் இரவில் பாம்பு "சீன் "எடுப்பதால் அடுத்த இரண்டு வீடுகளுக்கு கேட்கும் . ஒளிப்பதிவாளர் , ஏனையவரளுடன்  நானும் தளர்ந்திடுவேன் .செய்து முடித்து "எடிட் பண்ணி" ம்யூஸிக்  எல்லாம் போட்டு எப்போ முடிக்கப் போகிறேன் என்று ...
 
 அவரது வலது  கரமான  உபாலி கூடத்  தளர்ந்து போய் விடுவார் .ராம் தளரமாடடார் . அவரில் எந்தவிதமான "சுருதி " மாற்றமும் இருக்காது 
 
"வரதா ..இந்த Field இல எத்தனையோ பாம்பைக் கண்டவன்  .நாளைக்கு  களணியில சிங்களப் படங்களுக்குப் பாம்பு  மிருகம் கொடுக்கறவன் ஒருத்தன் இருக்கான் .அவனிடம் காலையில போய் கூட்டி வாறேன் " என்று சொன்னபடியே நேரம் சற்றுப் பிந்தினாலும் பாம்புடனும் பாம்புக்கு காரானுடனும் வந்திறங்கினார் ராம் அண்ணர் .
 
கலைஞர்களுக்கான உணவு சிற்றுண்டியை விட பாம்புரிமையாளரின் " முட்டைத் தொல்லை " (பாம்புக்கு உணவு) ஒரு புது அனுபவம் .
 
ராம்தாஸ் அண்ணருக்கு இந்த ஒளிப்பதிவுடன் வேறு பல அலுவல்களுமிருந்தன. இலங்கை  வானொலி விளம்பர  நிகழ்ச்சிகள் ரூபவாஹினியின் விளம்பர நிகழ்ச்சிகள் - என்பன அவை .
 
அவற்றுக்கு மத்தியிலும் இந்த ஒளிப்பதிவில் சொன்ன நேரத்துக்கு வந்து செய்து தந்துவிடுவார் .
 
இதில் முக்கிய சிறப்பம்சம் என்னவெனில் - பிரதியை ஒருதரம் பார்ப்பார் ; அதிலுள்ள (அவரே எழுதிய) கதை வசனத்தை 
அவர் சொல்லாமல் தமக்கு வந்ததை ஒளிப்பதிவின்போது சொன்னாலும் -அதனையே வேறு Takes தடவைகள் எடுக்கும்போதும் சொற்கள் ஒழுங்கு மாறாமல் சொல்வர் .
 
நகைச்சுவையில் வசனங்கள் இப்படி ஒரே மாதிரியாகவே சொல்வது என்பது சிரமமான விடயமாகும் .நடிப்பவர்கள் ஒவ்வொரு கோணத்திலும் சொற்களின் ஒழுங்கை மாறி மாறிச் சொல்கையில் பின்னர் தொகுப்பின்போது மிகவும் சிரமப் படவேண்டியிருக்கும் . ராம் அண்ணருடன் இந்த விடயத்தில்  வேலை செய்வது சுலபமானதாகும் என்பதை இங்கு பதிவு செய்கிறேன்.  
 
 
அவர் சொன்னது போலவே  மூன்று நாட்களில் ஒளிப்பதிவை முடித்தோம் இதற்கு அவரது பல்வகைமையான திரையனுபம் எனக்குத் துணையாக இருந்தது .   
 
 
 இந்த அவசரங்களில் ஓரு காடசியில் வீட்டினுள்ளே மூக்குக் கண்ணாடியுடனும் வெளியே கண்ணாடியில்லாமலும் காட்சியை எடுத்து  விட்டோம் .
 
எடிட்டிங் மேசையிலிருந்தபோதுதான் அது தெரிந்தது.
 
ராம் அண்ணருக்கு இதை நான் மறுநாள் சொன்னபோதும் அவர் "அப்படியா? அதுக்கு யோசிக்காதீங்க ...ஆட்கள் சிரிப்பிலேயே அதனைக் கவனிக்க மாட்டார்கள் " என்று சாதாரணமாகவே சொன்னார்.
 
ரசிகர்களை நன்க றிந்து வைத்த கலைஞர் அவர் .
 
அதனால் தான்   பல தசாப்தங்களாக தமக்கென்று ஒரு ரசிகர் கூடடத்தையே தமக்கென அவர் வைத்துக்கொள்ள முடிந்தது !
 
சுகவீனமுற்றிருந்த வேளையில் கூட  ஏதாவது கலைப்பணி செய்யவேண்டும் என்ற மிகுந்த ஆர்வத்துடனிருந்தவர் அவர் !
 
நிம்மதியின் கரங்கள் அவரை நித்திய உறக்கத்தில் ஏந்தட்டும் !

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/134024/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

Marikar Ramdas-1

Marikar-Ramdas-2.jpg

1970 களில்.... கொடி கட்டிப் பறந்த கலைஜர்களில், மரிக்கார் ராமதாசும் ஒருவர். 
அன்னாரின் மறைவுக்கு... ஆழ்ந்த இரங்கல்கள்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்:..... .

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அஞ்சலிகள்

  • கருத்துக்கள உறவுகள்
 
கோமாளிகள்

இந்த பாட்டு நினைவு உள்ளதா மரைக்கார் ராமதாசின் சொந்தக் குரலில் பாடிய பாடல் தவில் அடிப்பது யார் தெரியுமா ? வி .எச் . அப்துல் ஹமீத் ( இன்று அவரின் பிறந்த தினம் ) இதில் ஜூவால் என்ற சொல் இப்போதும் பழக்கத்தில் உள்ள சொல் .... இந்த பாடல் நினைவு உள்ளவர்கள் மட்டும் லைக் பண்ணுங்கள் நினைவில் நீங்காத இலங்கை சினிமா பாடல் .....

Posted by Subathiran Thambi on Dienstag, 12. April 2016

 

இந்த பாட்டு நினைவு உள்ளதா மரைக்கார் ராமதாசின் சொந்தக் குரலில் பாடிய பாடல் 
தவில் அடிப்பது யார் தெரியுமா ? வி .எச் . அப்துல் ஹமீத் ( இன்று அவரின் பிறந்த தினம் ) இதில் ஜூவால் என்ற சொல் இப்போதும் பழக்கத்தில் உள்ள சொல் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.