Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் - சிங்கள மாணவர் மோதல்: இலங்கை ஜனாதிபதி கவலை

Featured Replies

தமிழ் - சிங்கள மாணவர் மோதல்: இலங்கை ஜனாதிபதி கவலை

160718164021_srilanka_college_sirisena_6

 

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் தமிழ் - சிங்கள மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் குறித்து இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கவலை வெளியிட்டுள்ளார்.

ஜெர்மன் அரசின் நிதி உதவியுடன் கிளிநொச்சி அறிவியல் நகரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தொழிற்பயற்சி நிலைய கட்டடத்தை அவர் திறந்து வைத்தார்.

அங்கு உரையாற்றிய அவர் யாழ் பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்களுக்கும், தமிழ் மாணவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்கள் குறித்து கவலை வெளியிட்டார்.

  160718164133_srilanka_college_sirisena_6

நாளைய தலைவர்களாகிய இளைஞர்கள் மத்தியில் தேசிய நல்லிணக்கத்தை உருவாக்க வேண்டி இருக்கின்றது.

பல்கலைக்கழகங்களையும், தொழிற் பயற்சிக் கல்லூரிகளையும் தேசிய நல்லிணக்கத்தை உருவாக்குகின்ற மையங்களாகச் செற்படுத்த வேண்டும் என்றார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.

தேசிய நல்லிணக்கத்தை உருவாக்க வேண்டும் என்று கூறுவது இலகு. ஆனால், அதனை நடைமுறைபடுத்துவது என்பது சவால் மிக்க செயற்பாடாகும்.

இருப்பினும் அதனைச் செயற்படுத்தாமல் விட முடியாது என்றார் அவர்.

இந்தக் கைங்கரியத்திற்கு அனைவரும் ஒத்துழைக்க முன்வர வேண்டும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசென கேட்டுக்கொண்டார்.

160718164244_srilanka_college_sirisena_6  

கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின்போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் பின் நிற்கப் போவதில்லை. வடபகுதி மக்களுக்குப் பிரச்சினைகள் இருக்கின்றன என்பதைத் தென்பகுதி மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

சிங்கள பௌத்த மக்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்றால் இந்த நாட்டில் வாழ்கின்ற ஏனைய மக்களின் பிரச்சினைகளை அறிந்து அதன் அடிப்படையில் செயற்பட வெண்டும் என்றார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.

இந்த நிகழ்வில் ஜெர்மன், சுவிட்சர்லாந்து நாடுகளின் இலங்கைக்கான தூதுவர்களும், யாழ்ப்பணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதர் மகாலிங்கம், திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற் பயிற்சித்துறை அமைச்சர் மகிந்த சமரசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவருமாகிய ஆர்.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண ஆளுநர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

http://www.bbc.com/tamil/sri_lanka/2016/07/160718_srilanka_kilinochi_college

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நவீனன் said:

சிங்கள பௌத்த மக்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்றால் இந்த நாட்டில் வாழ்கின்ற ஏனைய மக்களின் பிரச்சினைகளை அறிந்து அதன் அடிப்படையில் செயற்பட வெண்டும் என்றார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.

இப்படிச் சொல்லிக்கிட்டே இந்தா ஒழிக்கிறன் என்ற ஜனாதிபதிப் பதவியை 5 ஆண்டுகள் அலங்கரிச்சிட்டு.. தமிழர் நிலத்தை சிங்கள பெளத்த பூமி ஆக்கிட்டு.. ரா ரா பாய் பாய் சொல்லக் கணக்கா இருக்கும். சிங்கள இராணுவ அடக்குமுறை ஆக்கிரமிப்பின் கீழ் தமிழர்களை அடக்கி ஆளலாம் என்ற நினைப்பு உள்ள வரை எந்த சிங்கள அரசியல்வாதியும் தமிழர்களுக்குரிய பிரச்சனைகளை சரியாக இனங்காணப் போவதும் இல்லை தீர்க்கப் போவதும் இல்லை.

சர்வதேச கடைக்கண் பார்வை கிடைத்து தமிழர்களுக்கு இதனைக் கொடுத்தே ஆக வேண்டும் என்ற நிலையை சர்வதேசத்தின் மூலம் உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் ராஜதந்திர ரீதியிலும் வெகுசன ரீதியிலும் வற்புறுத்தினால் அன்றி.. தமிழருக்கு ஒரு நன்மையும் விளையாது இலங்கைத் தீவில். இதுதான் யதார்த்தம் அங்கு. :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, நவீனன் said:

தமிழ் - சிங்கள மாணவர் மோதல்: இலங்கை ஜனாதிபதி கவலை

ச்....ச்.....ச்.....ச்.....ச்......:cool:

  • கருத்துக்கள உறவுகள்

160718164133_srilanka_college_sirisena_6

நடுவுல.... ஒருத்தர்.. தலையை குனிஞ்சு  கொண்டு நிக்கிறார். 
இவர் யார்?    ஏன்,,, குனியுறார்? :grin:

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் தேவையில்லாமல் குதிச்ச சிங்கள மாணவர்களை அடக்கினா எல்லாபிரச்சினையும்   முடியும் .

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

160718164133_srilanka_college_sirisena_6

நடுவுல.... ஒருத்தர்.. தலையை குனிஞ்சு  கொண்டு நிக்கிறார். 
இவர் யார்?    ஏன்,,, குனியுறார்? :grin:

வயசு போனா ,இனி எல்லாமே இப்பிடித்தான் tw_blush:

  • தொடங்கியவர்
சிங்கள பௌத்த மக்கள் மகிழ்ச்சியாக வாழவேண்டுமென்றால் ஏனைய மக்களின் பிரச்சினைகளை சரியாக புரிந்து கொண்டு செயற்படவேண்டும் - ஜனாதிபதி மைத்­தி­ரி­பால சிறி­சேன
2016-07-19 09:23:48

(சு .பாஸ்­கரன், கண்­டா­வளை, பாஸ்­கரன் கதீஷன் வவு­னியா)

 

நாட்­டிலே தேசிய ஐக்­கி­யத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு அனை­வரும் அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­ப­ட­வேண்டும். எனவே இந்த நாட்டில் வாழு­கின்ற சிங்­கள பௌத்த மக்கள்  மகி­ழ்ச்­சி­யாக வாழ­வேண்­டு­மென்றால் இந்த நாட்­டில் வாழு­கின்ற ஏனைய மக்­களின் பிரச்­சி­னை­களை சரி­யாக புரிந்து கொண்டு செயற்­ப­ட­வேண்டும் என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­துள்ளார். 

 

18030_28.jpg

கிளி­நொச்சி அறி­வியல் நகரில் நிர்­மா­ணிக்­கப்­பட்ட ஜேர்மன்- இலங்கை தொழில் பயிற்சி நிலைய திறப்பு விழா­வுக்கு வருகை தந்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, எதிர்க்­கட்சித் தலைவர்  இரா. சம்­பந்தன், அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஆகியோர் வர­வேற்­கப்­பட்ட போது பிடித்த படம்.                                            ........................................................................................................

 

கிளி­நொச்சி அறி­வியல் நகரில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்ட ஜேர்மன்  –- இலங்கை தொழில் பயிற்சி நிலை­யத்­தினை   ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன  திறந்து வைத்து உரை­யாற்­றிய போதே அவர் இவ்­வாறு குறிப்­பிட்­டுள்ளார்.

 

தொடர்ந்து உரை­யாற்­றிய அவர், கடந்த ஆண்டு ஜன­வரி  மாதம் 8 ஆம் தி­கதி இந்த நாட்டு மக்கள் புதிய அர­சாங்­கத்தை உரு­வாக்­கி­னார்கள். நாங்கள் முன்­வைத்த தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தை ஏற்றுக் கொண்­டு­ தான் மக்கள் இந்த அர­சாங்­கத்தை அமைத்­தார்கள்.

 

2015 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் 8ஆம் திகதி தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் முன்­வைத்த அத்­தனை விடயங்­க­ளையும் நாங்கள் செய்து வைப்போம். 

 

18030_IMG_6504.jpg

 

இந்த நாட்­டிலே தேசிய ஐக்­கி­யத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு அ­னை­வரும் அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­ப­ட­வேண்டும். எனவே இந்த நாட்டில் வாழு­கின்ற சிங்­கள பௌத்த மக்கள்  மகிழ்­ச்சி­­யாக வாழ­வேண்­டு­மென்றால் இந்த நாட்­டி­லேயே வாழு­கின்ற ஏனைய மக்­களின் பிரச்­சி­னை­களை சரி­யா­கத் ­தெ­ரிந்து கொண்டு செயற்­ப­ட­வேண்டும். 

 

இந்த நாட்டின் வடக்கில் உள்ள மக்­க­ளுக்கு பிரச்­சி­னை­கள் உள்­ள­தென்­பதை நாங்கள் தெரிந்து கொள்­ள­வேண்டும்.  இந்த நாட்­டி­லுள்ள அனைத்து மக்­க­ளி­டை­யேயும் ஒற்­று­மையை ஏற்­ப­டுத்த நாங்கள் செய்­ய­வேண்­டிய வேலை­களைப் புரிந்து அந்த அடிப்­ப­டையில் நாங்கள் செயற்­ப­ட­வேண்டும்.

 

நாங்கள் நேர்­மை­யாக மக்­க­ளுக்கு பணி­பு­ரி­ய­வேண்டும். எங்கள் மத்­தியில் தவ­றுகள் இருந்தால் அதை நாங்கள் திருத்­திக்­கொள்­ள­வேண்டும்.  நல்­லி­ணக்கம் பற்றி கல்விச் சமூ­கத்­திற்கு எடுத்­துச்­சொல்­ல­வேண்டும்.

 

18030_IMG_6500.jpg

 

எனவே, இந்த தேசிய நல்­லி­ணக்கம் பற்­றிய விட­யங்­களை பாடப்­புத்­த­கங்­களில் சேர்த்­துக்­கொள்­ள­வேண்டும். அண்­மையில் யாழ்ப்­பாண பல்­க­லைக்­க­ழ­கத்தில் இடம்­பெற்ற சம்­ப­வத்­தை­யிட்டு  நான் கவ­லைப்­ப­டு­கின்றேன். இவ்­வா­றான சம்­ப­வங்கள் எதிர்­கா­லத்தில் நடை­பெ­றக்­கூ­டாது என்றார்.

 

இந்­நி­கழ்வில்  திறன்­வி­ருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர் மஹிந்த சமரசிங்க,  எதிர்க்கட்சித்  தலைவர்  இரா. சம்பந்தன், வடமாகாண  ஆளுநர்  ரெஜினோல்ட் குரே, நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, அங்கஜன் இராமநாதன், கே.கே.மஸ்தான் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

- See more at: http://www.metronews.lk/article.php?category=news&news=18030#sthash.oqWQKX0Q.dpuf
  • தொடங்கியவர்

'தேசிய நல்லிணக்கத்தின் கேந்திர நிலையமாக பல்கலைக்கழகங்களை மாற்ற வேண்டும்'
 
19-07-2016 09:14 AM
Comments - 0       Views - 32

article_1468899950-ms000.jpg-எஸ்.என்.நிபோஜன், சுப்பிரமணியம் பாஸ்கரன்

'புதிய அரசியலமைப்புக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போது, அதற்கு எதிரான பொய்ப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டன. புதிய அரசியலமைப்பை உருவாக்குவது என்பது, நாட்டைப் பிரிப்பதற்கான நடவடிக்கை அல்ல.

எல்லோரையும் ஒன்றாக, ஒரே குடையின் கீழ் வைத்து, சமாதானமாக வாழக்கூடிய நிலைமையினை உருவாக்கவே புதிய அரசியலமைப்பை ஏற்படுத்துகின்றோம்'  என்று தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பல்கலைக்கழகங்கள் தேசிய நல்லிணக்கத்தின் கேந்திர நிலையமாக மாற்றப்படவேண்டும். இதற்கு மதகுருமார்கள் பாடுபடவேண்டும் என்றும் கூறினார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞானபீடத்தில் கடந்த 16ஆம் திகதி இடம்பெற்ற மோதல் சம்பவம் போன்று இனிமேலும் இடம்பெறக்கூடாது. மாணவர்களுக்கு நல்லதொரு நாட்டை உருவாக்குவதற்காக நாங்கள் அர்ப்பணிப்புடன் உழைத்துக்கொண்டிருக்கின்றோம்' என்று ஜனாதிபதி கூறினார்.

கிளிநொச்சி, அறிவியல் நகர்ப்பகுதியில், ஜேர்மன் அரசாங்கத்தின் 800 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட ஜேர்மன் தொழில் பயிற்சி நிறுவனத்தை, நேற்றுத் திங்கட்கிழமை (18) திறந்துவைத்து உரையாற்றும் போதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறியதாவது,

'இந்நாட்டில், தேசிய ஐக்கியத்தை ஏற்படுத்த, அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும். நாட்டில் வாழ்கின்ற சிங்கள பௌத்த மக்கள், சந்தோசமாக வாழ வேண்டும் என்றால், ஏனைய மக்களின் பிரச்சினைகளைப் புரிந்து, தெரிந்து செயற்பட வேண்டும். வடக்கில் உள்ள மக்களுக்குப் பிரச்சினைகள் உண்டு என்பதனை நாங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்' என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

'வடமாகாணத்தில் போதைப்பொருள் விற்பனை அதிகரித்துள்ளது. போதைப்பொருள் வியாபாரிகள், சிறுவர்கள், மாணவர்கள் மற்றும் மக்கள் ஆகியோர் தொடர்பில் அக்கறை செலுத்தாமல் தங்கள் வியாபாரத்தை நோக்காக வைத்துச் செய்கின்றனர்' என கூறினார்.

'நாட்டிலுள்ள சிலர், புதிது புதிதாக சில சில இயக்கங்களை உருவாக்கி வருகின்றார்கள். அது குறித்து, நான் நன்கறிவேன். இந்தப் புதிய இயக்கங்கள் எல்லாம் எதற்காக? என்று நான் அவர்களைப் பார்த்துக் கேட்கின்றேன். நான் எப்பொழுதும் ஓர் அடி முன்னால் வைப்பேனே தவிர, பின்னால் வைக்கமாட்டேன். எல்லோரும் இந்த நாட்டில் உள்ள பிரச்சினைகள் பற்றி சரியாக புரிந்துகொள்ள வேண்டும். அவை பற்றி நன்றாகத் தெரிந்துகொள்ள வேண்டும்.

நாட்டில், தேசிய ஐக்கியத்தை ஏற்படுத்த, அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும். இந்நாட்டில் வாழ்கின்ற சிங்கள பௌத்த மக்கள், சந்தோசமாக வாழ வேண்டும் என்றால், ஏனைய மக்களின் பிரச்சினைகளைப் புரிந்து, தெரிந்து செயற்பட வேண்டும். வடக்கில் உள்ள மக்களுக்குப் பிரச்சினைகள் உண்டு என்பதனை நாங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். நாட்டில் உள்ள எல்லா இன மக்கள் மத்தியிலும், ஒற்றுமையை ஏற்படுத்துவதற்காக, நாம் செய்ய வேண்டிய பல விடயங்களைப் புரிந்துகொண்டு, அவற்றின் அடிப்படையில்  செயற்படவேண்டும்.

எனவே, நாட்டை சரியான வழியில்  கொண்டுசெல்ல வேண்டும், சரியான வழியில் வழிநடத்த வேண்டும் என்றால், அந்த நாட்டில், நல்ல நேர்மையான  எவ்வித தவறுகளும் செய்யாத நல்ல  தலைவர் இருக்க வேண்டும். ஆனால், அந்தத் தேவை, இன்று இல்லை என்று எண்ணுகிறோம். கடந்த வருடம் ஜனவரி மாதத்துக்குப் பின்னர், நாம் அந்தக் குறையைத் தீர்ப்பதற்கே பொறுப்பை ஏற்றுகொண்டிருக்கின்றோம். எனவே, இந்த நாட்டை அபிவிருத்தி செய்து, நாட்டு மக்கள் மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்த, நாம் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.

பல்கலைக்கழகங்களிலிருந்து வெளியேறுகின்ற கலைப்பிரிவுப் பட்டதாரிகள், வேலை இல்லை என்று கூறி, ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்களை நடத்துகின்றார்கள். அவர்கள் வேலையில்லை என்று கூறிக்கொண்டு, இவ்வாறு போராட்டம் நடத்துவதற்கு, நாட்டின் கல்விக் கொள்கையில், கல்வித் திட்டமிடலில் உள்ள தவறே காரணமாகும். இந்தத் தவறை  நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். எனவேதான், தொழில் வாய்ப்பை வழங்கக்கூடிய கல்வியை வழங்க வேண்;டும். அதற்கு எங்களுடைய கல்விக்கொள்கையிலும் திட்டமிடலிலும் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்.

வடமாகாணத்தில் தொழில் வாய்ப்புக்கள் இல்லாத நிலைமை அதிகளவில் காணப்படுகின்றது. இதனால், போதைப்பொருள் வியாபாரம் அதிகளவில் நடக்கின்றது. தொழில்வாய்ப்புக்களுக்காக சட்டவிரோத வியாபாரங்களுக்கு அதிகளவானவர்கள் ஈர்க்கப்படுகின்றனர். இதனால், இளம் சமூகம் சீரழிகின்றது' என்றார்.

- See more at: http://www.tamilmirror.lk/177372/-த-ச-ய-நல-ல-ணக-கத-த-ன-க-ந-த-ர-ந-ல-யம-க-பல-கல-க-கழகங-கள-ம-ற-ற-வ-ண-ட-ம-#sthash.dPgzRA2M.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.