Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு அபூர்வ சக்திவாய்ந்த மரம்!

main-qimg-33a9ac8b455501aa14e89906752466a4

ஒருவன் வனப் பகுதியில் ட்ரெக்கிங் போய் கிட்டு இருந்தபோது அவனுடைய ஷு ! அறுந்து விட்டது!

அங்கு இருந்த மரத்தில் அதை தொங்க விட்டான். ஒரு பலகை பக்கத்தில் இருக்க!

" இந்த மரத்தில் உங்கள் காலணிகளை தொங்க விட்டால்! உங்கள் மனைவி உங்கள் பேச்சை கேட்பார்கள் " என்று எழுதி விட்டு சென்றான்!

கொஞ்ச நாள் கழித்து அந்த மரத்தின் படம் இது!

புரியுது! இந்த மரம் எங்கே என்று தானே கேட்கிறீங்க!😆

  • Replies 3.5k
  • Views 400.3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • யார் அழகி??*ஒரு முறை கலாம் ஐயா பெண்கள் பள்ளி விழா ஒன்றில் கலந்து கொண்டார்..விழா முடிந்ததும் வழக்கம் போல மாணவிகளோடு ஒரு கலந்துரையாடல் நடக்கிறது..அப்போது ஐஸ்வர்யா ராய் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டிருந

  • இணையவன்
    இணையவன்

    1 - மூஞ்சியை நீட்டாமல் சிரிக்க 2 - நெடுக மூஞ்சியை நீட்டாமல் சிரிக்க 3 - மூஞ்சியை நீட்டிக் கொண்டு இருக்காமல் சிரிக்க 4 - சும்மா வந்து சிரிக்க  5 - கொஞ்ச நேரம் சிரிக்க 6 - சேர்ந

  • கலைஞன்
    கலைஞன்

    வட்ஸ்அப்பில் இன்று வந்தது. சிரிக்க மட்டும்  *** மனைவி: ஏங்க நான் முடி வெட்டிக்கவா? கணவன்: ஒகே, வெட்டிக்கோ. மனைவி: வெட்டினால் மறுபடியும் இப்படி முடி வளர ரொம்ப நாள் ஆகும். கணவன்:

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

திரைப்பட பாடலாசிரியர் வாலியின் நகைச்சுவை!

main-qimg-5c91c82d14214cb7b5ae7273f363c8d0

திரைப்பட பாடலாசிரியர் 'வாலி'யை, ஒரு சமயம் அவருடைய நண்பர் ஒருவர் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது நண்பர் "டி.எஸ். ரங்கராஜன் என்ற அம்சமான உங்கள் இயற்பெயரை விடுத்து, வாலி என்று தாங்கள் பெயர் வைத்துக்கொள்ள என்ன காரணம்?" என்று கேட்டார்.

அதற்கு வாலி அவர்கள், "இராமாயணத்தில் வரும் வாலி எதிராளியின் பலத்தில் பாதியைப் பெற்று விடுபவன். அதேபோல நான் பார்ப்பவர்களின் அறிவில் பாதியைப் பெறவே இந்தப் பெயரை வைத்துக்கொண்டேன் " என்று கூறினார்.

உடனே அந்த அதிக பிரசங்கித்தனமான நண்பர் வாலியை மட்டம் தட்டுவதாக எண்ணி "உங்களைப் பார்த்தால் அப்படி அறிவைப் பெற்றவர் போல் தெரியவில்லையே? என்று கிண்டலாகச் சொன்னார்.

அதற்கு வாலி சிரித்துக் கொண்டே, "நான் இன்னும் எந்த அறிவாளியையும் சந்திக்கவே இல்லையே!" என்று மடக்கி நண்பரை திக்கு முக்காட வைத்தாரே பார்க்கலாம் !

  • கருத்துக்கள உறவுகள்

468301157_561079653351264_77105181369999

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text

நாய்... கடித்து இறந்த கோழியை, சமைத்து சாப்பிடலாமா? 😂

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, suvy said:

468301157_561079653351264_77105181369999

நண்பேன்டா....!

  • கருத்துக்கள உறவுகள்

468217538_973590854801685_90891206476395

  • கருத்துக்கள உறவுகள்
🥱மெதுவா படிச்சுட்டு சிரிச்சுட்டு படுங்க நிம்மதியா தூக்கம் வரும் !!

1. உலகத்திலேயே சிறந்த ஜோடி செருப்புதான்... ஒன்றை பிரிந்தால் மற்றொன்று வாழவே வாழாது..!

2. எல்லா பெண்களையும் விசிலடித்து திரும்பி பார்க்க வைத்தாலும் செருப்படி வாங்காத ஒரே ஜீவன் குக்கர் தான்..!

3. மாமா பொண்ணும், உப்புமாவும் ஒன்னு! வேற எதுவுமே கிடைக்காத பட்சத்துல நம்மளோட தலையில கட்டப்படும்!

4. நிம்மதியாக இருக்கும் வயதில் மனைவியைத் தேடுவதும், மனைவி வந்தப்பின் நிம்மதியைத் தேடுவதுமே.. ஆண்களின் வாழ்க்கை தேடல்..!

5. இந்த உலகத்தில் என்னையும் ஒரு மனிதனாக மதித்து பொன்னாடை போர்த்தும் ஒரே நபர்.. சலூன் கடைக்காரர் மட்டுமே..! "நீங்க வெட்டுங்க பாஸ்.."..!! .

6. ஒரு புடவை வாங்க முன்னூறு புடவைகளைப் புரட்டிப் பார்த்த மனைவியிடம் எரிச்சலுடன் கணவன் சொன்னான்: "ஆதிகாலத்தில் ஏவாள் வெறும் இலையை மட்டுமே உடுத்தி இருந்தாள். இது போன்ற தொல்லைகள் நல்ல வேளை ஆதாமுக்கு இல்லை."

இதற்கு மனைவி சொன்ன பதில்: "அதுக்கு அவன் எத்தனை மரம் ஏறி இறங்கினானோ?"

7. தொலைபேசியில் ஒரு பதற்றமான குரல்.. "டேய் மச்சான்... எங்கடா இருக்க?" "வீட்லதான்டா இருக்கேன்..." "அப்பாடா... இப்பதான்டா நிம்மதியா இருக்கு...!!" "ஏன்டா? என்ன விஷயம்??" "அதில்லடா.....

காலையில பேப்பரை பார்த்தேன். அதுல, உங்க தெருவுல வெட்டியா சுத்திகிட்டிருந்த நாய்களை எல்லாம் கார்பரேசன்காரங்க புடிச்சுட்டு போனதா செய்தி போட்டிருந்துச்சு. அதான்... எங்க நீ மாட்டிகிட்டீயோன்னு பயந்தே போயிட்டேன்....."

8. அம்மா: என்னடி உன் புருஷன் தினமும் இப்படி குடிச்சுட்டு வராரே

நல்லாவா இருக்கு.?

மகள் : தெரியலை அம்மா நான் இன்னும் டேஸ்ட் பண்ணி பார்க்கலை!

9. நீ என் தங்கக் குட்டியாம்… தாத்தா சொல்றதைக் கேப்பியாம்…

நான் உன் புத்தகப் பையைத் தூக்கிட்டு வருவேனாம்…. பாப்பா நடந்து வருவியாம். வேண்டாம் தாத்தா… என் பையைத் தூக்கி நீ கஷ்டப்பட வேணாம். நானே என் பையைத் தூக்கிக்கிறேன். நீ என்னைத் தூக்கிக்கிட்டு வந்தாப் போதும்…

10. “ஏன் ஸ்கூட்டரை திருடினே…?” “டிராபிக் போலீஸ்காரர்தாங்க சீக்கிரம் வண்டிய எடு, வண்டிய எடுன்னு அவசரப்படுத்தினாரு எசமான்..!”

11. பகல்ல உங்களுக்குக் கண் தெரியாதா டாக்டர்….?”

“தெரியுமே…ஏன் கேட்கறீங்க….. ?” “இல்ல…பார்வை நேரம் மாலை ஆறிலிருந்து எட்டுவரைன்னு போர்டு வெச்சிருக்கீங்களே… அதான் கேட்டேன்.!”

12. முதலாளி: டேய் முனியா, நான் கொஞ்சம் வீட்டுக்குப்‌போய் ஓய்வு

எடுத்துக்கிட்டு வர்றேன்… நீ கடையைப் பார்த்துக்க…

முனியன்: உங்களுக்கு எதுக்கு சிரமம் முதலாளி? நானே போய் ஓய்வை எடுத்துக்கிட்டு வந்துடறேனே!

13. டீச்சர் கேட்டார்... பார்வதி ஏன் சிவபெருமானை மணந்தார் ?

குறும்புக்கார மாணவனின் பதில்... எப்பவும் தலையில் சந்திரன் இருப்பதால் வெளிச்சமாக இருக்கும்... EB பில் வராது..!!

ஜடாமுடியிலிருந்து கங்கை நதி கொட்டுவதால் மோட்டார் போட்டு டேங்க்கில் தண்ணீர் ஏற்ற வேண்டாம்..!

சிவன் பச்சை காய்கறி சாப்பிடுவதால் சமைத்து கொட்ட வேண்டாம்..!

சிவனுக்கு அம்மா அப்பா இல்லாததால் மாமியார் தொல்லை இல்லை...

மாணவனின் பதிலை கேட்டு மயங்கி விழுந்த டீச்சர் எழுந்திருக்கவேயில்லை.

14. ஜட்ஜ் : நீங்க ரொம்ப வேகமா வண்டி ஓட்டியதா போலீஸ் சொல்லுறாங்க?‌‌ நீங்க இல்லேன்னு சொல்லுறேங்க! இதுக்கு ஆதாரம் ஏதாவது உண்டா? ஐயா நான் என் பொண்டாட்டிய கூட்டிட்டு வர மாமனாரு வீட்டுக்கு போய்கிட்டு இருந்தேன்யா! நீங்களே சொல்லுங்கய்யா எவனாவது பொண்டாட்டிய வீட்டுக்கு கூட்டிட்டு வர வேகமா போவானா... ?

ஜட்ஜ் : கேஸ் டிஸ்மிஸ்ட்...!

முதல்ல அவரை விடுதலை செய்ங்க...!

படித்ததில் ரசித்தது...

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்

469957969_8714185652011827_1215043308342

  • கருத்துக்கள உறவுகள்

470099898_18477894976023620_806446570864

நம்பகூட இருக்கிறவங்கள் நம்பளை விட்டுப் போயிட்டால் நாங்களும் போகணும் என்று அவசியமில்லை .....!  😂

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவருக்கு தேதி குறித்துவிட்டால், அந்த தேதியில் உயிரை எமன் எடுத்துவிடுவார் என்று சொல்லுவார்கள். அப்படி ஒரு சிற்பிக்கு தேதி குறித்துவிட்டார் எமன். அந்த தேதி பற்றி சிற்பிக்கும் எப்படியோ தெரியவந்துவிட்டது. சிற்பிக்கு இறக்க விருப்பமில்லை. எமன் ஒருமுறைதான் பாசக்கயிற்றை வீசுவார். அதில் தவறிவிட்டால், மீண்டும் வீசி உயிரைப் பறிக்கும் அதிகாரம் எமனுக்கு இல்லை என்பதும் சிற்பிக்கு தெரியும்.

அதனைப் பயன்படுத்திக்கொள்ள ஒரு யுக்தி செய்தார்.

தன் திறமை எல்லாம் காட்டி தன்னைப்போலவே அச்சு அசலாக இரண்டு சிலைகள் செய்தார். எமன் வரும் நேரம் அவற்றை தரையில் சாய்த்து படுக்கவைத்துவிட்டு, நடுவில் தானும் படுத்து கண்ணை மூடிக்கொண்டுவிட்டார். எமன் வந்தார். பார்த்தார், திகைத்துப் போனார். மூன்றும் சிலைகளா? இல்லை இரண்டுதான் என்பதை யூகித்துவிட்டார்.

ஆனால் எவை சிலைகள், எது சிற்பி என்பதைத்தான் அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவ்வளவு நேர்த்தி. தவறாக சிலையின் மீது கயிற்றை வீசிவிடக்கூடாதே! நேரம் ஓடிக்கொண்டிருந்தது. யோசித்தார். ஒரு யோசனை வந்தது.

 

சத்தமாக வாய்விட்டுச் சொன்னார், ‘அட என்ன தத்ரூபமாக இருக்கிறது! இவற்றைச் செய்த சிற்பியை என்னால் பாராட்டாமல் இருக்கவே முடியாது. என்னாலேயே எது சிலை எது ஆள் என்று கண்டுபிடிக்க முடியவில்லையே! ’ இப்படி சொல்லிவிட்டு மூன்று சிலைகளையும் உன்னிப்பாக கவனித்தார். அவர் எதிர்பார்த்தது நடந்தது. நடுவில் படுத்திருந்த சிலையின் உதட்டில் லேசான முறுவல் தெரிந்தது. தற்பெருமைதான், வேறென்ன! சடாரென வீசினார் கயிற்றை.

கெடுத்தது எது? தான் என்கிற ஈகோ. ஆக பலருடைய பிரச்சனைகளுக்கு, மனவருத்தங்கள், மற்றும் சோர்வுகளுக்கு காரணம், நான் தான் தனது நான் தான் பெரியவன் என்கின்ற எண்ணங்களை ஒழித்தோம் என்றால் நாம் மிகப்பெரிய வெற்றியாளர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text

 

மாப்பிள்ளை...  எவ்வளவு சம்பாதிக்கிறாரு.

தோராயமா பத்தாயிரம்.

மாசத்துக்கு எவ்வளவு செலவழிக்கிறாரு.

சாராயமா ஒன்பதாயிரம்... 😂 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, தமிழ் சிறி said:

May be an image of text

 

மாப்பிள்ளை...  எவ்வளவு சம்பாதிக்கிறாரு.

தோராயமா பத்தாயிரம்.

மாசத்துக்கு எவ்வளவு செலவழிக்கிறாரு.

சாராயமா ஒன்பதாயிரம்... 😂 🤣

மிகுதி ஓராயிரம் மனைவிக்கு கசிப்படிக்க.

  • கருத்துக்கள உறவுகள்

மெளனம் சம்மதம்! மட்டும் இல்ல! பொருளும் கூட !

ஒரு அரசனின் அவையில், அறிவுக் கூர்மையும் திறமையும் மிகுந்த அமைச்சர் ஒருவர் இருந்தார். அவரை எல்லோரும் புகழ்வது கண்டு, மன்னர் சினந்து கொண்டார்.

அவரை எப்படியாவது கீழ்மைப்படுத்த வேண்டும் என்று முடிவு செய்தார். ஒருநாள் அவையில், மன்ன்ர் அறிவாளியான அந்த அமைச்சரைப் பார்த்து, “முட்டாள்களிடம் பழக வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார். அதற்கு அந்த அமைச்சர் எவ்வித பதிலும் கூறாமல் மெளனமாக இருந்தார்.

அவர் பதில் தெரியாமல் இருக்கிறார் போலும் என்று நினைத்த மன்னர், “என்ன அமைச்சரே! நான் கேட்ட கேள்வி உமது செவிகளில் விழவில்லையா? “முட்டாள்களுடன் பழக வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?” என்று மீண்டும் கேட்டார். அதற்கும் பதில் கூறாமல் மெளனமாகவே அமைச்சர் இருந்தார்.

இதனால் கோபமடைந்த மன்னர், “என்ன, நான் கேட்டுக் கொண்டே இருக்கிறேன். எதுவும் கூறாமல் விழிக்கிறீரே! நான் கேட்டது உங்கள் செவிகளில் விழவில்லையா? அல்லது என் கேள்விக்குப் பதில் தெரியவில்லையா?” என்று கேட்டார்.

அமைச்சர், மன்னருக்கு வணக்கம் தெரிவித்து விட்டு, “மன்னர் பெருமானே! உங்கள் கேள்விக்கு உடனே பதிலளித்து விட்டேனே! நீங்கள் தான் அதைப் புரிந்து கொள்ளவில்லை!” என்றார்.

உடனே மன்னன், “மூன்று முறை நான் கேட்டும் பதில் ஏதும் கூறாமல் மெளனமாக அல்லவா இருந்தீர்!” என்றான்.

அதற்கு அமைச்சர், “ஆம், அரசே! அதுதான் என் பதில். முட்டாள்களுடன் பேச வேண்டுமென்றால் மெளனம் தான் சாதிக்க வேண்டும்!” என்றார். மன்னர் வாயடைத்துப் போனார்.

main-qimg-2b560992814b58c20438b92b2d961bd5

ஒரு மனிதனைத் தாக்கும் மிகப்பெரிய ஆயுதம், அவனுக்குப் பிடித்தவரின் மௌனம் தான். பல நேரங்களில் மௌனம் நிறைய செய்திகளை எளிதாகச் சொல்லி விடுகிறது!

  • கருத்துக்கள உறவுகள்

 

நாட்டின் பிரதமர் யார் . .......!  😂

  • கருத்துக்கள உறவுகள்

  ஆங்கில மீடியம்  இல் படிக்கும் ஒரு கல்லூரியில் எல்லோரையும் பார்த்து கேள்வி கேட்டுக் கொண்டே வந்தார் ஆசிரியர் .பத்து வயதானமானவன் ஜோசப் .அவனது முறை வந்தது 

ரீச்சர்  : ஜோசப்  how  old  are  யு ? 
ஜோசப் ": 10  years  old  
 ரீச்சர் : who  is  your  family  ?
ஜோசப் :   My  wife  and  My children . 
ரீச்சர் :  ?????  😄

பையன் வருங்காலத்தை    யோசித்து விடடான் போல 

  • கருத்துக்கள உறவுகள்

470592645_122164331186280663_35331535973

  • கருத்துக்கள உறவுகள்

471509920_978437990984339_74269021619320

  • கருத்துக்கள உறவுகள்

471506390_1366614304306299_5758679150174

பாலின் தூய்மை பரிசோதிக்கப் படுகின்றது . .......!   😂

  • கருத்துக்கள உறவுகள்

குட்டிப்பிள்ளையின் அறிவுரை .........!  😂

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, suvy said:

குட்டிப்பிள்ளையின் அறிவுரை .........!  😂

தற்போது ச  ரி  க ம இல் பாடுகிறாள் இந்த குட்டி. நல்ல வாயாடி  

  • கருத்துக்கள உறவுகள்

471920079_1129020871929533_1964358916229

  • கருத்துக்கள உறவுகள்

472437343_908395334799087_34452301171195

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 7 people and text

  • கருத்துக்கள உறவுகள்

473376109_2544294849109471_2876831248725

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and text

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.