Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகின் நீளமான கண்ணாடி பாலம் இந்த வாரம் திறப்பு:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

china-bridge0180816-380-seithy-world.jpg

சீனாவில் கட்டப்பட்டுள்ள உலகின் நீளமான கண்ணாடி பாலத்தின் பணிகள் முடிவடைந்த நிலையில் இந்த வாரம் திறந்து விடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே நீளமான கண்ணாடி பாலம் சீனாவில் உள்ள ஹுனான் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. 2 மலைகளுக்கு இடையே 300 மீட்டர் உயரத்தில் இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது. 2 மலைகளிலும் தூண்கள் அமைக்கப்பட்டு அதை இரும்பு கம்பியால் ஒன்றாக இணைத்து பாலத்தை உருவாக்கி உள்ளனர். அதன் நடுப்பகுதியில் முழுக்க முழுக்க கண்ணாடிகள் பொறுத்தப்பட்டுள்ளன.

   

அந்த கண்ணாடியில் நடந்து சென்றால் கீழே உள்ள காட்சிகள் நன்றாக தெரியும். அந்த கண்ணாடி உடைந்து விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தும். ஆனாலும், அது உடைந்து விடாதபடி வலுவாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் மொத்த நீளம் 430 மீட்டர். 6 மீட்டர் அகலத்தில் பாலம் இருக்கிறது. இந்த வாரத்தில் பாலம் பொதுமக்கள் நடந்து செல்ல திறந்து விடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமும் 8 ஆயிரம் பேர் மட்டும் பாலத்தில் நடந்து செல்ல அனுமதிக்கப்படுவார்கள். இதற்கு ஒரு நாள் முன் கூட்டியே உரிய அனுமதி பெற வேண்டும். சமீபத்தில் இந்த பாலத்தில் 2 டன் எடை கொண்ட மின் லாரி ஒன்றை இயக்கி சோதனை செய்யப்பட்டது. அவ்வளவு எடையையும் அந்த பாலம் தாங்கியது குறிப்பிடத்தக்கது.

http://www.seithy.com/breifNews.php?newsID=163750&category=WorldNews&language=tamil

உலகின் நீளமான, உயரமான கண்ணாடி பாலம் திறப்பு

சீனா, உலகின் நீளமான மற்றும் உயரமான கண்ணாடி பாலத்தை சுற்றுலா பயணிகளுக்காக திறந்துவைத்துள்ளது.இரண்டு மலைக் குன்றுகளை இணைக்கும்படியான இந்த கட்டமைப்பு, ஹுனான் மாநிலத்தில் ஜான்ஜாஜி பள்ளத்தாக்கிற்கு மேல், சுமார் 300 அடி உயரத்தில் உள்ளது.

பார்வையாளர்கள் பள்ளத்தை, 99 மூன்றடுக்கு கண்ணாடி பேனல்கள் வழியாக பார்க்கலாம்.ஒரு வண்டி செல்லும் அளவிற்கு பலமானதாக உள்ள இந்த பாலத்தில் பாதசாரிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ஒரு நாளில் 8 ஆயிரம் பேர் சென்று வர முடியும்.

கண்ணாடி பாலங்களும், மலைப் பாதைகளும் சீனாவில் மிக பிரபலம். வித்தியாசமான புகைப்படம் எடுப்பதற்கான, குறிப்பாக திருமண புகைப் படங்கள் எடுக்க வாய்ப்புகளை இந்த பாலம் வழங்குகின்றன.
 

http://www.bbc.com/tamil/global/2016/08/160820_china_glassbridge

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

14064135_10157454339525637_2819493527741

14063862_10157454341875637_8297450522026

14089081_10157454342805637_8733748625891

13996042_10157454343525637_1649899752309

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படத்தை பார்க்கவே கைகாலெல்லாம் நடுங்குது.....tw_dizzy:

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணாடி தகடுகளின் திண்மையை பரிசோதித்தல்

_90842334_hi033706107.jpg

_90842196_hi033705932.jpg

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

படத்தை பார்க்கவே கைகாலெல்லாம் நடுங்குது.....tw_dizzy:

வயது போட்டுது என்னவோ  ??:221_see_no_evil:

  • கருத்துக்கள உறவுகள்

நீண்ட காலத்திற்கு முன்னர் கனடா சி என் ரவர் பார்க்க போயிருந்த போது ஒரு இடத்தில் கண்ணாடி வைத்திருந்தார்கள்.அதில் கால் வைப்பதற்கு மிக மிக நீண்ட நேரம் எடுத்தது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
16 minutes ago, முனிவர் ஜீ said:

வயது போட்டுது என்னவோ  ??:221_see_no_evil:

வயது போனாலும் வைரம் வைரம் தான்....கருங்காலி கருங்காலிதான்..bharat.gif

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, குமாரசாமி said:

வயது போனாலும் வைரம் வைரம் தான்....கருங்காலி கருங்காலிதான்..bharat.gif

நீங்கள் மரம் இல்லைதானே மனிதன் தானே  அகையால் மனித கட்டை மரக்கட்டையல்ல  இதுக்குள்ள கருங்காலியாம் 
வெறும் முருங்கை என்பது தெரியாதா என்ன:11_blush::11_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.