Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை பல பாடங்களை புகட்டியுள்ளது-பான்கீமூன்

Featured Replies

இலங்கை பல பாடங்களை புகட்டியுள்ளது-பான்கீமூன்
 
 
இலங்கை பல பாடங்களை புகட்டியுள்ளது-பான்கீமூன்
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான பிரதிநிதிகள் முறையாக செயற்பட்டிருந்தால் அதிகமான மனித உயிர்களை யுத்த களத்தில் பாதுகாத்திருக்க முடியும் என ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.
 
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பான் கீ மூன் சர்வதேச உறவுகள் மூலோபாய கற்கைகளுக்கான லக்ஸ்மன் கதிர்காமர் கல்வி நிலையத்தின் ஏற்பாட்டில் கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் ‘நிலைபேறான சமாதானம்-நிலை பேறுள்ள அபிவிருத்தி இலக்குகளை எட்டுதல்’ எனும் தலைப்பில் உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்.
 
தொடர்ந்து அவர் கருத்துத் தெரிவிக்கையில் ‘ இலங்கை எமக்கு பல பாடங்களை புகட்டியுள்ளது. மிகவும் கடினமான பாடங்கள் பலவற்றை நாம் இலங்கையிலிருந்து படித்திருக்கிறோம். நீங்கள் உங்களது மக்களுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளீர்கள். கட ந்த பல தசாப்தங்களாக பிரச்சினை நீடித்துவந்துள்ளது. மேலும் கடந்த காலங்களில் ஏற்பட்ட பிரச்சினைகளில் ஐ.நாவின் பணி யா ளர்கள் சிறப்பாக செயற்பட்டிருந்தால் இன்னும் அதிகமான உயிர்களைக் காப்பாற்றியிருக்கலாம்.
 
ஐ.நாவின் இலங்கைக்கான அதிகாரிகளின் செயற்பாடுகள், அவர்களினால் விடப்பட்ட தவறுகள் மற்றும் அவர்களின் பணிக்கு இடையூறாகக் காணப்பட்ட விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு விசேட குழு ஒன்றினை அமைத்துள்ளேன். மனித உரிமை பாது காப்பின் அடிப்படையில் இக்குழு அமையப் பெற்றுள்ளது’ என்று அவர் மேலும் தெரிவித்தார்.

http://onlineuthayan.com/news/17087

ஐ.நாவின் தவறுதலால் மனித உயிர்கள் காவு கொள்ளப்பட்டன - பான் கீ மூன்

ஐக்கிய நாடுகள் அமைப்பு இலங்கையிடம் இருந்து பல பாடங்களை கற்றுக்கொண்டதாக இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.

ருவாண்டா, இலங்கை, பொஸ்னியா நாடுகளில் நடந்த யுத்தத்தின் போது, ஐக்கிய நாடுகளின் தவறுதலால் பல மனித உயிர்கள் காவு கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

எதிர்காலத்தில் இப்படி தவறுகள் செய்யாமல், மனித உயிர்களை காக்க அர்ப்பணிப்புடன் செயற்பட போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இன்று நடைபெற்ற கருத்தரங்கொன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இலங்கை அடைந்துள்ள முன்னேற்றங்கள் தொடர்பில் அரசாங்கத்திற்கு மாத்திரமல்லாது, சிவில் சமூகத்திற்கும் அதன் கௌரவம் கிடைக்க வேண்டும் எனவும் பான் கீ மூன் மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.tamilwin.com/politics/01/116229

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த இல்லை என்ற துணீவும்......பாவ மன்னிப்பு கேட்கிறாரோ...

  • கருத்துக்கள உறவுகள்

பாடம் படிச்ச பின்னும்.. தவறுகளுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நீதி தேடாமல்.. பாதிப்பை கொணர்ந்தவனோடு சேர்ந்து நின்று நல்லிணக்கம் பேசுவதும் ஏனோ...?! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

பாலித கோகனவை குற்றம் சொல்லுறார். விஜய் நம்பியாரின் தம்பியை இவரது மகள் கல்யாணம் செய்தபடியால் இந்தியாவை குறை சொல்ல முடியாது.. :D:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 hours ago, போல் said:

எதிர்காலத்தில் இப்படி தவறுகள் செய்யாமல், மனித உயிர்களை காக்க அர்ப்பணிப்புடன் செயற்பட போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பான் கீ மூன்

உனக்கே இனி எதிர்காலமில்லை. இதுக்கை அரிப்பன் அர்ப்பணிப்பு எண்டு பீலா விட்டுக்கொண்டு...tw_angry:tw_blush:

Edited by குமாரசாமி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.