Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கீரிமலை கடற்கரைப்பகுதியில் கலாசார சீர்கேடுகள் -தடுக்குமாறு ஆர்வலர்கள் கோரிக்கை

Featured Replies

கீரிமலை கடற்கரைப்பகுதியில் கலாசார சீர்கேடுகள் -தடுக்குமாறு ஆர்வலர்கள் கோரிக்கை
 
கீரிமலை கடற்கரைப்பகுதியில் கலாசார சீர்கேடுகள் -தடுக்குமாறு ஆர்வலர்கள் கோரிக்கை
யாழ்ப்பாணம் - கீரிமலை கடற்கரைப் பகுதியில் பல கலாச்சாரச் சீரழிவுகள் இடம்பெறுகின்றன, பட்டப்பகலில் பாலியல் செயற்பா டுகள் தாராளமாக இடம்பெறுகின்றன, அவர்களைக் கட்டுப்படுத்துவது சிரமமாகவுள்ளது, மேலும் மாணவ, மாணவிகளும் இதில் உள்ளடங்குவதாகவும், இது குறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அந்தப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
 
கீரிமலை கடற்பகுதி இறந்தவர்களுக்கு பிதிர்க்கடன் செய்யும் ஒரு புனித பிரதேசமாகும். கடற்கரையை அண்மித்து வரலாற்றுச் சிற ப்பு மிக்க ஆலயங்களில் ஒன்றான நகுலேஸ்வரர் ஆலயமும் அமைந்துள்ளது. இங்கு நாளாந்தம் உள்ளூரிலிருந்தும் வெளியூரிலி ருந்தும் பெருமளவான மக்கள் வந்து செல்கின்றனர்.
 
இவ்வாறு பொதுமக்கள் கூடும் பிரதேசங்களில் இளம் வயதைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் அநாகரிகமாக முகம் சுழிக்கும் வகையில் பல செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர். அங்கு வரும் பெண்கள், சிறுவர்கள் இதனால் பெரும் அசெளகரியங்களைச் சந்தி க்கின்றனர் என்று கூறப்பட்டது.
 
அந்தப் பிரதேசத்துக்கு அண்மையில் வசிக்கும் ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,
 
"இந்த பிரதேசத்துக்கு வரும் ஜோடிகள் கடற்கரையோரங்களில் செய்யத்தகாத செயல்களில் ஈடுபடுகின்றனர். குறிப்பாக தனியார் கல்வி நிறுவனங்களுக்குச் செல்லும் இளம் வயதினரே அங்கு வருகின்றனர். அவர்கள் இங்கு வரும்போது புத்தகங்களுடன் வருகின்றனர். இவர்கள் காலை 8 மணியளவில் எல்லாம் இங்கு வந்து விடுவார்கள். முதலில் கடற்கரையில் அமைந்துள்ள மண்டபத்தில் மிக நெருக்கமாக உட்கார்ந்து சில்மிசத்தில் ஈடுபடுவார்கள். பொது மக்கள் வந்தாலும் அவர்கள் அதை பொருட்ப டு த்துவது இல்லை.
 
சிலவேளைகளில் இவற்றை பொறுக்க முடியாத சில பொதுமக்கள் அவர்களை அகற்ற முற்படும்போது பெண்களுடன் வரும் இளை ஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுவதுடன் அவர்களை தாக்கவும் முற்படுகின்றனர். சில இளம் ஜோடிகள் கடற்கரைக்கு அண்மையில் உள்ள பாழடைந்த கட்டடங்களுக்குள் சென்று பாலியல் நடவடிக்கையிலும் ஈடுபடுகின்றனர்.
 
காலையில் வரும் ஜோடிகள் மாலை நேரம் வரை அவர்களின் பொழுதை இங்கேயே செலவழிக்கின்றனர். இவர்களில் சிலர் பொழுது சாய்ந்து இரவு 8 மணிக்கு கூடச் செல்வார்கள். கல்வி கற்பவர்கள் அதிகம் வருகிறார்கள்.
 
எமது மண்ணுக்கு இருந்த கலாச்சாரம், பண்பு, கெளரவம் எல்லாம் போர் முடி வடைந்த பின்னர் அழிவுப் பாதையை நோக்கிச் செல்கின்றது. இனிவரும் காலங்களில் எமது முன்னோர்களால் கட்டிக் காப்பாற்றி வந்த பாரம்பரியம் எல்லாம் அழிந்துவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது" என்றார்.
 
சமூகச் சீரழிவுகள் தொடர்வதை தடுத்து நிறுத்த வேண்டும். எமது கலாச்சாரம் பாதுகாக்கப்பட வேண்டும். இது தொடர்பில் சம்ப ந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தப் பிரதேச மக்களும் அங்கு வருகை தருபவர்களும் கோரி க்கை விடுத்துள்ளனர்.
 
பெற்றோர்களும் தமது பிள்ளைகளின் கல்வியில் அக்கறை கொள்வதுடன் அவர்கள் எங்கு செல்கிறார்கள் அவர்களின் செயற்பா டுகள் பற்றி அக்கறை எடுக்கவேண்டும் என்றும் சுட்டிக்காட்டினர்.

http://onlineuthayan.com/news/17202

காதல் ஜோடிகள் சந்திப்பதும்  தனிமையில் இருந்து பேசுவது உலகில் சகஜமான விடயம்.  அதுவும் கால ஒட்டத்தில் இது சற்றே அதிகமாவதும் இயற்கையே. எமது யாழ்பபாணத்தில் மட்டும் எப்போது பாரத்தாலும் இதை கலாச்சார சீர்கேடு என்று வியாக்கியானம் கொடுக்கும் பத்தாம் பசலி சமூக ஆரவலர் என்று கூறுபவரகளும் சில ஊடகர்களும்  உள்ளர். சுற்றாடலைச் சுத்தமாக வைத்திருப்பபதும் பாவிக்கும் தனிப்பட்ட பொதுக் கழிப்பறைகளை சுத்தமாக வைத்திருப்பபதும் மனித கலாச்சாரம்.ஆனால் இது குறித்து யாழப்பாணத்து சமூக ஆரவலர்களுக்கு எந்தக் கவலையும்  இல்லை.

ஏற்கனவே திருமணமான முருகன். திருட்டுத்தனமாக வள்ளியை தேடி காதல் செய்தால் அது கலாச்சாரமாம். அதற்கொரு பூங்காவன திருவிழா.  இதையே நம்ம இளவட்டங்கள் செய்தால் கலாச்சார சீர்கேடாம். 

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, tulpen said:

அது என்னவோ இலங்கையில் எது செய்தாலும் கலாச்சார சீர்கேடாகவே பார்க்கப்படுகிறது  குறிப்பா யாழ்ப்பாணம்

ஊடகக்காரன் கூட அப்படித்தால்  சும்மா நிற்கிறவனை பார்த்தால் உரிஞ்சு போட்டு திரியுறான் என்று செய்தி போடுறான் 

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, tulpen said:

காதல் ஜோடிகள் சந்திப்பதும்  தனிமையில் இருந்து பேசுவது உலகில் சகஜமான விடயம்.  அதுவும் கால ஒட்டத்தில் இது சற்றே அதிகமாவதும் இயற்கையே. எமது யாழ்பபாணத்தில் மட்டும் எப்போது பாரத்தாலும் இதை கலாச்சார சீர்கேடு என்று வியாக்கியானம் கொடுக்கும் பத்தாம் பசலி சமூக ஆரவலர் என்று கூறுபவரகளும் சில ஊடகர்களும்  உள்ளர். சுற்றாடலைச் சுத்தமாக வைத்திருப்பபதும் பாவிக்கும் தனிப்பட்ட பொதுக் கழிப்பறைகளை சுத்தமாக வைத்திருப்பபதும் மனித கலாச்சாரம்.ஆனால் இது குறித்து யாழப்பாணத்து சமூக ஆரவலர்களுக்கு எந்தக் கவலையும்  இல்லை.

ஏற்கனவே திருமணமான முருகன். திருட்டுத்தனமாக வள்ளியை தேடி காதல் செய்தால் அது கலாச்சாரமாம். அதற்கொரு பூங்காவன திருவிழா.  இதையே நம்ம இளவட்டங்கள் செய்தால் கலாச்சார சீர்கேடாம். 

இல்லை ஐயா

அவர்கள் தெளிவாகவே எழுதியுள்ளார்கள்

பாடசாலைப்பிள்ளைகள் பொழுது படும்வரை ஒதுங்குகின்றன என.

இது பின்னர் பெரும் குழப்பங்களுக்கும்

பிழையான சமூகம் உருவாகவும் காரணமாகலாம் என்ற எச்சரிக்கையை புறங்தள்ளல் தகுமா??

  • கருத்துக்கள உறவுகள்

பிரச்சனை கொஞ்சம் சிக்கல்தான்.ஆனால் விடையம் என்னவென்றால் இங்கு எம்வரின் பிள்ளைகள் சர்வ சாதாரனமாக செய்வதைத்  கூட அங்கு உள்ளவர்கள் செய்தால்ஆ ஊ என்று கத்திறது தான் எனக்கு விளங்க வில்லை.:unsure:

1 hour ago, சுவைப்பிரியன் said:

பிரச்சனை கொஞ்சம் சிக்கல்தான்.ஆனால் விடையம் என்னவென்றால் இங்கு எம்வரின் பிள்ளைகள் சர்வ சாதாரனமாக செய்வதைத்  கூட அங்கு உள்ளவர்கள் செய்தால்ஆ ஊ என்று கத்திறது தான் எனக்கு விளங்க வில்லை.:unsure:

உங்களுக்காவது விளங்கவில்லை

எனக்கு சுத்தமா இது புரியவேயில்லை.

புலம்பெயர்ந்தவர்கள் என்ன ஆட்டமும் போடலாம், நாட்டில் அது நடந்தால் கலாச்சார சீர்கெழிவு  - அட போங்கடா நீங்களும் உங்கள் கலாச்சாரமும்.

16 minutes ago, ஜீவன் சிவா said:

உங்களுக்காவது விளங்கவில்லை

எனக்கு சுத்தமா இது புரியவேயில்லை.

புலம்பெயர்ந்தவர்கள் என்ன ஆட்டமும் போடலாம், நாட்டில் அது நடந்தால் கலாச்சார சீர்கெழிவு  - அட போங்கடா நீங்களும் உங்கள் கலாச்சாரமும்.

ஜூவன் இங்கு கவனிக்கப்பட வேண்டிய விடயம் இதை சொல்வது புலம் பெயர்ந்தவர்கள் இல்லை. இன்றும் யாழப்பாண பழமைவாத்த்துக்குள் கிடந்து உழலுபவர்களே. புலம்பெயரந்தவர்களிடமும் இந்த பழமைவாதம் இருக்குறது. தாயகவாசிகளிடமும் மிக பரவலான அதிகமான அளவில் நிறைந்திருக்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
On 06/09/2016 at 1:35 AM, tulpen said:

ஜூவன் இங்கு கவனிக்கப்பட வேண்டிய விடயம் இதை சொல்வது புலம் பெயர்ந்தவர்கள் இல்லை. இன்றும் யாழப்பாண பழமைவாத்த்துக்குள் கிடந்து உழலுபவர்களே. புலம்பெயரந்தவர்களிடமும் இந்த பழமைவாதம் இருக்குறது. தாயகவாசிகளிடமும் மிக பரவலான அதிகமான அளவில் நிறைந்திருக்கிறது. 

இது தான் உன்மை ஆனால் இதைச் சொல்ல கொஞ்சம் தயக்கம் அவ்வளவுதான்

  • கருத்துக்கள உறவுகள்

 எங்கட குடும்ப பழக்க, வழக்கங்களை எமது பிள்ளைகளுக்குத்தான் நாங்கள் சொல்லிக்கொடுக்க முடியும், திருத்த முடியும். மற்றவர் பிள்ளைகளை தட்டிக்கேட்கவோ, திருத்தவோ எங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. இங்கு வந்து வாதிடும் நீங்கள் உங்கள் பிள்ளைகள் இப்படி நடந்தால் பேசாமல் கண்ணை மூடிக்கொண்டு போவீர்களா? நாளைக்கு சீரழியும் பிள்ளைகளை இன்றே திருத்துவது பிழையா?

19 hours ago, satan said:

உண்மை சாத்தான்.  தாராளமாக  மனிதக் கலாச்சாரத்தை சொல்லிக் கொடுங்கள். சுற்றாடலை சுத்தமாக வைத்திருக்க சொல்லிக் கொடுங்கள். மது அருந்தினாலும் எப்படி பொது இடத்தில் பொது மக்களுக்கு இடைஞ்சல் செய்யாமல் மரியாதையாக நடந்து கொள்வது என்பதை முதலில் வளர்ந்த பெரியோருக்கும் பின்னர் இளையோருக்கும்  சொல்லிக் கொடுங்கள். ஊருக்கு ஊர் கோவில் குளம் கோபுரம் கட்டல்   என்று வருடம் முழுவதும் காலத்தை வீணாக்காமல் புதிய வர்ததக, தொழில் முயற்சிகளை ஆரம்பிக்க ஊக்கம் கொடுங்கள். இளையோர் காதலர்களை சந்திப்பது உலக வழமை என்பதைப் புரிந்து கொண்டு அதை வைத்து தேவையில்லாத வீண் கதைகளை கட்டாமல் இருக்க கற்றுக்கொடுங்கள்.  காலத்திற்கு ஒவ்வாத பழைய பத்தாம்பசலி மூடப்பழக்கங்களை அர்தமற்ற சடங்குகளையும் வளர்ககாது இருக்க பெரியவர்களுக்கு சொல்லிக்கொடுங்கள். புகை பிடிப்பதும் மது அருந்துவதும்  கலாச்சார பிரச்சனை இல்லை  அது உடல்நலத்திற்கு கேடானது என்ற அறிவியலை சொல்லிக் கொடுங்கள்.  

  • கருத்துக்கள உறவுகள்
On 9/7/2016 at 6:58 AM, satan said:

 எங்கட குடும்ப பழக்க, வழக்கங்களை எமது பிள்ளைகளுக்குத்தான் நாங்கள் சொல்லிக்கொடுக்க முடியும், திருத்த முடியும். மற்றவர் பிள்ளைகளை தட்டிக்கேட்கவோ, திருத்தவோ எங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. இங்கு வந்து வாதிடும் நீங்கள் உங்கள் பிள்ளைகள் இப்படி நடந்தால் பேசாமல் கண்ணை மூடிக்கொண்டு போவீர்களா? நாளைக்கு சீரழியும் பிள்ளைகளை இன்றே திருத்துவது பிழையா?

இங்கே ஒரு பிள்ளைக்கு கூட வகுப்பெடுக்க முடியாது முடியுமானால் இலங்கை வந்து பார்த்தால் அனுபவபடுவீர்கள் இங்கே ஒவ்வொரு பெற்றோரும் தங்கள்பிள்ளைகளை எப்படி நம்புகிறார்கள் ஆனால் அந்த பிள்ளைகள் எப்படி தங்கள் பெற்றோர்களையும் சமுதாயத்தையும் ஏமாற்றுகிறது என்பதை கண்கொள்ளாகாட்சியாக கடற்கறை இன்னும் பல பொது இடங்களில் காண்கிறோம்  இதைப்பற்றி சொன்னால் தங்கள் பிள்ளைகள் அப்படி செய்யாது என்று அந்த பிள்ளைகளின் பெற்றோரே தெரிவித்த அனுபவம் எனக்கு அகையால் இது பிரபாகரன் காலம் அல்ல அவர்களை திருத்துவதற்கு அவர்களே உணர்ந்து திருந்தினால்தான் ஆனால் அது சாத்தியமில்லை 

இன்னும் கனபேர் பழைய நினைப்பிலே இருக்குறீர்களே ??

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, முனிவர் ஜீ said:

தப்பு  என்று தெரிகிறது

தவறைக்கண்டு காணாமல் போகின்றவன் தான் அதீத குற்றவாளி.

முயற்ச்சிப்பது தவறல்லவே....

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விசுகு said:

தப்பு  என்று தெரிகிறது

தவறைக்கண்டு காணாமல் போகின்றவன் தான் அதீத குற்றவாளி.

முயற்ச்சிப்பது தவறல்லவே....

அண்ணனுக்கு உதாரணம் ஒன்று ஒரு பாடசாலையில் மாணவன் தவறு செய்யதான் ஆசிரியர் அவன் செய்த தவறுக்கு அடிக்க பிரச்சினை முடிந்து போனது ஒரு மாதம் முடிந்த பிறகு  பெற்றோர் சங்க கூட்டம் நடைபெற்றது அதில் அந்த பெற்றோர் எழும்பி கேல்வி கேட்டார் ஏன் என் பிள்ளைக்கு அடித்தது  என்று அதற்கு அதிபரும் விளக்கம் கொடுத்தார் அந்த பெற்றோர் அதிபரிடம்  சொன்னது

மாணவன் ஆசிரியருக்கு அடிக்க இயலாது ஆனால் நான் அடிக்கலாம் தானே என்று சொல்ல வாய்தகறாறு ஏற்பட்டது இதுவும் ஒரு பாடசாலையில் 
இங்கே இப்போ தவறை கண்டு கொள்ளாமல் திரிவதுவே நமக்கு நல்லது 
 
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, முனிவர் ஜீ said:

இது  எப்பொழுதும் நடப்பது தான்

எனது அண்ணருக்கு அதிபர் அடித்ததற்கே

எனது தகப்பனார் அதிபரை வெளியில் வா என்று கூப்பிட்டதாக சொல்வார்கள்..

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, விசுகு said:

இது  எப்பொழுதும் நடப்பது தான்

எனது அண்ணருக்கு அதிபர் அடித்ததற்கே

எனது தகப்பனார் அதிபரை வெளியில் வா என்று கூப்பிட்டதாக சொல்வார்கள்..

அப்போ எப்படி ஒரு பிள்ளையை சமுதாயத்திற்கு நல்ல பிள்ளையாக கொடுக்கும் பாடசாலை நிர்வாகம் 

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, முனிவர் ஜீ said:

அப்போ எப்படி ஒரு பிள்ளையை சமுதாயத்திற்கு நல்ல பிள்ளையாக கொடுக்கும் பாடசாலை நிர்வாகம் 

ஏன்  ராசா நாமெல்லாம் கெட்டா போய்விட்டோம்

அது ஒரு கூட்டுமுயற்ச்சி

தன் பிள்ளையை வேற எவரும் அடிக்கப்படாது என்பது ஒரு தகப்பனின் ஆதங்கமாக இருக்கலாம்

நானும் அப்படித்தான்

ஆனால் என் தகப்பன் என்னை கடும் கண்டிப்புக்குள் தான் வளர்த்தார்

என் பிள்ளைகளையும் நான் அப்படித்தான் வளர்த்தேன்..

 புலம் பெயர் தேசத்திலும் பள்ளிக்கூடத்துக்கு கட்  அடித்துவிட்டு எல்லாம ஊர் சுற்றமுடியாது

8 மணிக்கு பாடசாலை ஆரம்பமாகுது என்றால்

8.05க்கு எனக்கு குறும் செய்தி வரும்

ஆள் வரவில்லை என.

  • கருத்துக்கள உறவுகள்

நாம் சரி அண்ணே சரி அண்ணே இங்கே நமது சமுதாயமே பிழையான வழியில் செல்கிறதே 

வடக்கு கிழக்கிலே மது பாவனை அதிகம் புள்ளி விபரம் இங்கே யார் யாரை திருத்துவது  ஒரு இளைஞனிடமோ யுவதிய்டமோ கதைக்க இயலாத காரியம் இங்கே கேட்டால் தனிமனித சுதந்திரம் கதைப்பார்கள் 
அதை விட பேசாமல் நமது .................மூடித்து போகலாம் 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, முனிவர் ஜீ said:

 உண்மைதான் முனிவர்ஜீ , இது பாடசாலையில் மட்டுமல்ல சாதாரண பெரிய மனிதர்களின் திருமண வாழ்க்கையிலும் இன்னும் நடக்கிறது. அண்மையில் தொழில் அற்ற, பொறுப்பற்ற,ஊரசுற்றும் ஒரு வாலிபனுக்கு என் உறவுப்பெண்னை சம்மந்தம் பேசினார்கள். அதை தடுப்பதற்கு நான் எவ்வளவோ முயற்சி பண்ணினேன். ஆனால் என்னை ஒரு பொறாமைக்காரனாக வர்ணித்தார்கள். கடைசியில் அவன் திருமணமான சில மாதங்களிலே அந்தப்பெண்ணை விலக்கி விட்டான். இப்ப அழுது, புலம்பி என்ன பலன்? சில பெற்றோருக்கு உண்மையிலே சில சம்பவங்கள் தெரியாமல்ப் போகலாம். எல்லாம் நடந்து முடிந்தபின் எனக்கு முன்னமே தெரியும் ஆனால் சொல்லேலை என்று நான் சொல்வேனாகில் , நீங்கள்  இதை முதலில் சொல்லியிருந்தால் நான் அதை கவனித்திருப்பேனே? என்று அந்தப் பெற்றோர் சொல்லவும் கூடும். ஏனென்றால் அந்த அனுபவம் கண்டிப்பாக அப்படித்தான் சொல்வார்கள். சொல்லியிருந்தால் கேட்டிருப்பார்களா என்பதற்கு பதில் முதலே எழுதிவிடடேன். ஒருவேளை இதை என்னால் தடுத்திருக்கலாம், என்று  எனது மனச்சாட்சி என்னைக் கொல்லும். நான் ஒரு குற்றவாளியும் கூட. அப்படியும் சொல்வார்கள், இப்படியும் சொல்வார்கள். நமக்கு சரியானதை, தெரிந்ததை  செல்வதில் தப்பில்லை.  முடிந்ததை செய்தோம் என்கின்ற திருப்தியும் கூட. கேட்ப்பதும், விடுவதும், பின்னர் கண்ணீர் விடுவதும் அவரவர் விருப்பம். விதியும் கூட. விதியை மதியால் வெல்லலாம் என்றும் சொல்வார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, satan said:

உன்மைதான் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.