Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்தில் வருகிறது கிரிக்கெட் மைதானம்

Featured Replies

யாழ்ப்பாணத்தில் வருகிறது கிரிக்கெட் மைதானம்
 
article_1473169480-Inar3guhj2.jpg

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் புதிதாக இரண்டு கிரிக்கெட் மைதானங்களை அமைக்கவுள்ள இலங்கை கிரிக்கெட் சபை, கிரிக்கெட் அதிகம் பரவியிருக்காத இலங்கையின் பகுதிகளில், கிரிக்கெட்டை வளர்ப்பதற்கு முதலீடுகளை மேற்கொண்டுள்ளது.

மேற்கூறப்பட்ட இரண்டு மைதானங்களும் அமைக்கப்படுவதற்கான அனுமதியை, இலங்கை கிரிக்கெட் சபையின் நிறைவேற்றுச் செயற்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அண்மைய எதிர்காலத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள மேற்படித் திட்டங்களுக்கு, 200 மில்லியன் ரூபாய் செலவிடும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கருத்துத் தெரிவித்துள்ள இலங்கை கிரிக்கெட் சபையின் செயலாளர் மொஹான் டி சில்வா, யாழ்ப்பாணத்திலும் பொலன்னறுவையிலும் கிரிக்கெட் அரங்கை அமைப்பதற்கு, தலா 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளதோடு, இத்திட்டங்கள் மிக விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.

இதேவேளை, பொலன்னறுவை அரங்குக்கான திட்டங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், யாழ்ப்பாணத்தில், இலகுவாக மக்கள் அரங்குக்கு செல்லக் கூடியவாறு, பிரதான வீதிக்கு அண்மையில் பொருத்தமான இடத்தை தேடி வருவதாக டி சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.

வடக்கில் கிரிக்கெட் அரங்கு அமைவதற்காக, புலம்பெயர் தமிழர்களினால் பெரும் உற்சாகம் ஏற்படுத்தப்படுவதாக தெரிவித்த டி சில்வா, இதை நிஜமாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் யாழ்ப்பாண கிரிக்கெட் சங்கம் எடுத்து வருவதாக டி சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.

முதலில், முதற்தர கிரிக்கெட் போட்டிகளை நடாத்தக்கூடியவாறே, இரண்டு அரங்குகளும் அமைக்கப்படவுள்ளதுடன், பின்னர், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடாத்தக் கூடிய மைதானங்களாக மேம்படுத்தப்படவுள்ளதாக டி சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.

- See more at: http://www.tamilmirror.lk/181303/ய-ழ-ப-ப-ணத-த-ல-வர-க-றத-க-ர-க-க-ட-ம-த-னம-#sthash.SQIBa4mk.dpuf
  • கருத்துக்கள உறவுகள்

விமானநிலையம் அமைத்து (மேம்படுத்தி) முடிந்து விட்டது. இனி கிறிக்கட் மைதானம் அமைக்கப்படும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நவீனன் said:

வடக்கில் கிரிக்கெட் அரங்கு அமைவதற்காக, புலம்பெயர் தமிழர்களினால் பெரும் உற்சாகம் ஏற்படுத்தப்படுவதாக தெரிவித்த டி சில்வா, இதை நிஜமாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் யாழ்ப்பாண கிரிக்கெட் சங்கம் எடுத்து வருவதாக டி சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.

அப்ப இனி நாங்கள் நல்லூரானை பார்ப்பதை விட இந்த கிரிக்கட்டை  பார்க்க போகலாம் என்று சொல்லுறீயள்

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கில் பல்கலைக்கழகம் ஒன்று உருவாகி அது இப்போ சிங்களவருக்கு உரியதாக மாறிவிட்டது.

வடக்கில் பல்கலைக்கழகம் ஒன்று உருவாகி அது இப்போ சிங்களவருக்கு உரியதாக மாறிவருகிறது.

தற்போது கிரிகெட் மைதானம் உருவாகிறது, யாருக்காக........ ????????????

யாழ்ப்பாணத்தில் சர்வதேசமட்ட கிரிக்கெட் போட்டிகளை கண்டுகளிக்கலாம் என்றால் நல்லதுதானே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 hours ago, nunavilan said:

விமானநிலையம் அமைத்து (மேம்படுத்தி) முடிந்து விட்டது. இனி கிறிக்கட் மைதானம் அமைக்கப்படும்.

11 hours ago, putthan said:

அப்ப இனி நாங்கள் நல்லூரானை பார்ப்பதை விட இந்த கிரிக்கட்டை  பார்க்க போகலாம் என்று சொல்லுறீயள்

8 hours ago, Paanch said:

கிழக்கில் பல்கலைக்கழகம் ஒன்று உருவாகி அது இப்போ சிங்களவருக்கு உரியதாக மாறிவிட்டது.

வடக்கில் பல்கலைக்கழகம் ஒன்று உருவாகி அது இப்போ சிங்களவருக்கு உரியதாக மாறிவருகிறது.

தற்போது கிரிகெட் மைதானம் உருவாகிறது, யாருக்காக........ ????????????

உங்கள் மூன்று பேருக்கும் நாடு,எங்கடை சனம் நல்லாயிருக்கிறது பிடிக்கேல்லை என்ன??tw_tounge:
நாங்கள் இப்பதானே உரிமையளை கொஞ்சம் கொஞ்சமாய் வெண்டு கொண்டு வாறம்....tw_yum:

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Paanch said:

கிழக்கில் பல்கலைக்கழகம் ஒன்று உருவாகி அது இப்போ சிங்களவருக்கு உரியதாக மாறிவிட்டது.

வடக்கில் பல்கலைக்கழகம் ஒன்று உருவாகி அது இப்போ சிங்களவருக்கு உரியதாக மாறிவருகிறது.

தற்போது கிரிகெட் மைதானம் உருவாகிறது, யாருக்காக........ ????????????

 எங்கட சுமந்திரனும், மைத்திரியும் விளையாடவாம்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, satan said:

 எங்கட சுமந்திரனும், மைத்திரியும் விளையாடவாம்.

அம்பயரும் ரெடி சாத்தான். ஆனாலும் ஒரு சந்தேகம்....! எங்கள் மூன்றுபேருக்கு அநியாயமாக அவுட் கொடுத்த அந்த அம்பயர், இவர்களை விளையாட்டை விட்டே தூக்கிவிடமாட்டாரா....???  Bild in Originalgröße anzeigen

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.