Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவை சேனாதிராஜாவே வடமாகாண முதலமைச்சராக வந்திருக்க வேண்டியவர்!

Featured Replies

5375_1473195318_PhototasticCollage-2016-09-06-22-54-50.jpg

எமது தமிழினத்திற்கு காலாகாலமாக தன்னை அர்ப்பணித்துள்ள மாவை.சேனாதிராஜாதான் வட மாகாண முதலமைச்சராக வந்திருக்க வேண்டியவர்.

ஆனால் உலகத்திற்கு ஒரு பெறுமதியான செய்தியைக் காட்ட வேண்டும் என்பதற்காகத்தான் ஒருவரை அழைத்து வந்தோம். தற்போது அவர் மெத்தப் படித்த மேலாவித் தனத்தினால் அரசியலமைப்பை எழுதுகின்றாராம்.

அரசியலமைப்பை யாரும் எழுத முடியாது அரசியலமைப்பு நாடாளுமன்றிலே ஆக்கப்படல் வேண்டும்.

அதனை நாடாளுமன்றம் அங்கீகரிக்க வேண்டும். இதனை விடுத்து புள்ளி இடுவதற்காக அரசியலமைப்பை உருவாக்க முடியாது.

என கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சிறுவர் நன்னடத்தைத் திணைக்களத்தினால் 9 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிருமாணிக்கப்பட்ட சிறுவர் நன்னடத்தைக் காரியாலயம் செவ்வாய்க் கிழமை (06) மட்டக்களப்பு - பட்டிருப்பில் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

இதன்போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும்

இதன்போது மேலும் குறிப்பிடுகையில்….

தமிழ் மக்கள் 1948 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை தேடிக்கொண்டிருந்த நிகழ்வுகள் தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தில் நடைபெற்றிருகின்றன.

இந்த நாட்டினுடைய சிறுபான்மை மக்களுடைய பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டுமாக இருந்தால் இங்குள்ள பெரும்பான்மைக் கட்சிகள் இரண்டும் ஒன்றுபட வேண்டும்.

எமது பிரச்சினைகளை அனுதாபத்துடன் நோக்கக் கூடிய உலக சூழ்நிலை உருவாக வேண்டும், தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும். இவற்றுள் 2 நிகழ்வுகள் நடந்தேறிவிட்டன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் 2 பெரும்பான்மைக் கட்சிகளும் ஒன்றிணைந்து நல்லாட்சியை உருவாக்கியுள்ளது.

எமது பிரச்சினைகளுக்கு சாதகமான பதில்கள் வரவேண்டுமாயின், மேற்படி 3 விடையங்களும் கைகூட வேண்டும் என்று தந்தை செல்வா, வன்னியசிங்கம், அமிர்தலிங்கம், சிவசிதம்பரம், போன்றோர் அப்போதே கூறியிருந்தார்கள் அவை தற்போது சம்பந்தன் ஐயாவின் காலத்தில் உருவாகியிருக்கின்றது.

நாம் பல சந்தர்ப்பங்களிலே எமது பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக நெருங்கி, நெருங்கி வந்திருந்தோம். அவற்றை மிகவும் நிதானமாகக் கையாளாததன் காரணமாகத்தான் மீண்டும் நாம் போர்ச் சூழலுக்குள்ளும், உரிமை மறுப்புக்குள்ளும் ஆளாக்கப்பட்டிருந்தோம்.

அரசியலமைப்பில் வரிகளினால் ஆக்கப்பட்டால்தால் எமது உரிமைகளைப் பெற்றுக் கொள்ள முடியும். அவற்றை அந்த அரசியலமைப்புக்குள் எவ்வாறு போடுவது என்பதை நன்கு தெரிய வேண்டும்.

சில மெத்தப் படித்த மேதாவிகள் எமது கூட்டமைப்புக்குள் தற்போது வந்துள்ளார்கள். அவர்களை எதற்கோ அழைத்து வந்தோம் அவர்கள் எங்கோ போய்விட்டார்கள். அவர்களின் அறிவையும் ஆற்றலையும் பயன்படுத்தலாம் என்று நினைத்தோம் அவர்களுக்கு வந்தவுடன் பதவி வெறிவந்துவிட்டது.
 

எமது தமிழினத்திற்கு காலாகாலமாக தன்னை அர்ப்பணித்துள்ள மாவை.சேனாதிராஜாதான் வட மாகாண முதலமைச்சராக வந்திருக்க வேண்டியவர்.

ஆனால் உலகத்திற்கு ஒரு பெறுமதியான செய்தியைக் காட்ட வேண்டும் என்பதற்காகத்தான் ஒருவரை அழைத்து வந்தோம்.

தற்போது அவர் மெத்தப் படித்த மேலாவித் தனத்தினால் அரசியலமைப்பை எழுதுகின்றாராம்.

அரசியலமைப்பை யாரும் எழுத முடியாது அரசியலமைப்பு நாடாளுமன்றிலே ஆக்கப்படல் வேண்டும்.

அதனை நாடாளுமன்றம் அங்கீகரிக்க வேண்டும். இதனை விடுத்து புள்ளி இடுவதற்காக அரசியலமைப்பை உருவாக்க முடியாது.

நாம் நுணுக்கமுள்ள தலைவரைக் கொண்டுள்ளோம். அவரின் செயற்பாட்டின் பின்னால் நாம் நிக்கின்றோம்.

கடந்த வாரம் வடக்கிற்குச் சென்றிருந்த ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம், பான்கீன்மூனை எமது தலைவர் இரா.சம்மந்தன் உள்ளிட்ட தலைவர்கள் சந்தித்துவிட்டு வந்த பின்னர் அவர்களின் பின்னால் நின்று அங்கிருந்தவர்கள் கூக்குரல் போட்டுள்ளனர்.

மிகச் சிறந்த தலைவர்களைப் பார்த்து கூக்குரல் இட்டு ஏளனம் செய்துள்ளார்கள்.

காந்தியைச் சுட்டுக் கொன்றான் கோட்சே, நாம் தீர்மானிக்க வேண்டியது கோட்சேயா, காந்தியா?

அதுபோல் சம்பந்தனா அல்லது சம்பந்தனை எதிர்த்து நின்று தேசியத்தை நேசிப்பதாகச் சொல்லிக் கொண்டிருப்பவர்களா? என்று தீர்மானிக்க வேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், அதனுடைய தலைமைத்துவமும் தமிழர்களை காட்டிக் கொடுக்க நினைக்கின்றது என சிலர் தெரிவித்து மக்களைத் திசை திருப்பப் பார்க்கின்றார்கள்.

முஸ்லிம்கள் எடுத்த எடுப்பிலே வடகிழக்கு இணைப்பு வேண்டாம் என அவர்கள் தெரிவிப்பது ஏன் எதற்கு என்றெல்லாம் பற்றிச் சிந்திக்க வேண்டும். அவர்களுடன் கலந்துரையாட வேண்டும் என தெரிவித்தார்.

http://battinaatham.com/description.php?art=5375

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Athavan CH said:

உலகத்திற்கு ஒரு பெறுமதியான செய்தியைக் காட்ட வேண்டும் என்பதற்காகத்தான் ஒருவரை அழைத்து வந்தோம்.

 உங்களுக்கு உலகத்தில  பெறுமதி இல்லை என்பதை தெரிந்தபடியாற்தான் அவரை அழைத்துவந்து உங்கள் பெறுமதியை உயர்த்தினீர்கள். அவரின் செயற்படுகள் உங்கள் வயிற்றில் புளியைக்கரைக்கிறது என்பது என்னவோ உண்மைதான். உங்கள் அயோக்கியத்தனங்கள் வெளிவருவது, பேரன், பீட்டன், கொப்பாட்டனுகளுக்கெல்லாம் சொத்து சேர்க்கிற எண்ணத்தில மண் விழப்போகுதெண்டு தவிப்பது தெரியுது. 

 

2 hours ago, Athavan CH said:

அவை தற்போது சம்பந்தன் ஐயாவின் காலத்தில் உருவாகியிருக்கின்றது.

தற்போதுதான் சம்மந்தர் ஐயா அரசியலில்தலைமை ஏற்றிருக்கிறார்.    இவ்வளவு நாளும் யாரோ பாடுபட்டு முடியேல இப்ப ஐயாவின் காலத்தில உருவாகி இருக்கு. கடந்த 60 வருடமாய் நடக்காதது இனி  நடந்தேறப்போகுது.  

 

2 hours ago, Athavan CH said:

சில மெத்தப் படித்த மேதாவிகள் எமது கூட்டமைப்புக்குள் தற்போது வந்துள்ளார்கள்.

அவர் ஒன்றும் தானாக வரவில்லை. நீங்கள் தான் உங்கள் இருப்பை தக்க வைப்பதற்காக இழுத்து வந்தீர்கள். கரையேறுமட்டும் தெப்பம், கரையேறிய பின் தூக்கி ஏறிய அவர் ஒன்றும் தென்னை மட்டை கிடையாது மரமண்டயளே. கூக்குரல்    யார்போட்டது  மக்களின் குமுறல் உங்களுக்கு கூக்குரலாகப் படுகுது. அதுக்கு ஏன் தேவையில்லாமல் முதலமைச்சரை காய்கிறீர்கள். நீங்கள் செய்யத் தவறியதை  அவர் செய்துவிட்டார் என்கின்ற ஆதங்கம் உங்களை  அப்படிப்பேச வைக்கிறது. 

 

2 hours ago, Athavan CH said:

எமது தமிழினத்திற்கு காலாகாலமாக தன்னை அர்ப்பணித்துள்ள மாவை.சேனாதிராஜாதான்

அப்படி என்னதான் அர்ப்பணிச்சு முறிஞ்சு போனார் மாவையர். அந்தத் தியாகியை      ஏன் கைவிட்டனீங்கள். அவரை நிறுத்தியிருந்தால் இப்ப நீங்கள் பேச வேண்டிய தேவையே இருந்திருக்காது. பான்கிமூனை சந்திக்கும் தகைமையை சம்மந்தனுக்கு யார் கொடுத்தது? தன் திறமையால் போகிறவர் ஜெனீவாவுக்கு போயிருக்கலாமே?  நடந்த இன அழிப்பை சர்வதேசத்துக்கு எடுத்துச் செல்ல, சொல்ல வக்கில்லாதவர், நொண்டிச் சாட்டுச் சொல்லிக்கொண்டு சிங்களவனோடை கூடிக் கொட்டமடிக்கத்தான்  சரி. வெள்ளை வேட்டியோடே வந்தவைக்கு, குடை பிடிச்சு, ஆராத்தி எடுத்து, பொய், புளுகை கேக்கேல எண்டு குமுறுக்கினம். 

  • கருத்துக்கள உறவுகள்

வந்து???

 

 

(என்னத்தை கிழித்திருப்பார்)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 hours ago, Athavan CH said:

எமது தமிழினத்திற்கு காலாகாலமாக தன்னை அர்ப்பணித்துள்ள மாவை.சேனாதிராஜாதான் வட மாகாண முதலமைச்சராக வந்திருக்க வேண்டியவர்

அரைச்ச மாவையே அரைச்சுக்கொண்டிருப்பவர்...:cool:

  • கருத்துக்கள உறவுகள்

மாவையர் நீண்ட கால உறுப்பினர் என்பதில் சந்தேகமில்லை. அவர் முதலமைச்சர் பதவிக்கு தகுதியானவரா  என தெரியவில்லை. கூட்டமைப்பின்  பெரிய காய்களுக்கு தங்களை விமர்சிப்பது பிடிப்பதில்லை. விமர்சித்த பலரை கட்சியை விட்டு வெளியேற்றியுள்ளனர். குறிப்பாக புலிகள் இயக்கத்தவர்கள் ஓரம் கட்டப்பட்டுள்ளார்கள்.இளைஞர்களை கட்சிக்குள் உள்வாங்குவதே இல்லை.இவை சம்பந்தரின் சில நுணுக்கங்கள். மேலும் தேவை எனில் இராசதுரையில் இருந்து தொடங்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

மாவைக்கு .... "சம்சும் கும்பலுக்கு" பின்னாலை   இழுபட்டு திரியத்தான்... லாயக்கே தவிர,
முதலமைச்சராக இருக்கக் கூடிய தகுதி, எள்ளளவும் இல்லை.
நல்ல காலம்.... இந்த அவமானம், மாவை மூலம் வட மாகாண சபைக்கு ஏற்படாமல் காப்பாற்றியதற்கு, அந்த நல்லூர் கந்தனுக்கு நன்றி.  praying-to-god-smiley-emoticon.gif :grin:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

மாவை சேனாதிராஜாவே வடமாகாண முதலமைச்சராக வந்திருக்க வேண்டியவர்! -  கி.துரைராசசிங்கம்.-

14141914_295913234117683_9005653681052933276_n.jpg?oh=3061b2ff89059de042350603afdafbb6&oe=583F3DCC

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, nunavilan said:

மாவையர் நீண்ட கால உறுப்பினர் என்பதில் சந்தேகமில்லை. அவர் முதலமைச்சர் பதவிக்கு தகுதியானவரா  என தெரியவில்லை. கூட்டமைப்பின்  பெரிய காய்களுக்கு தங்களை விமர்சிப்பது பிடிப்பதில்லை. விமர்சித்த பலரை கட்சியை விட்டு வெளியேற்றியுள்ளனர். குறிப்பாக புலிகள் இயக்கத்தவர்கள் ஓரம் கட்டப்பட்டுள்ளார்கள்.இளைஞர்களை கட்சிக்குள் உள்வாங்குவதே இல்லை.இவை சம்பந்தரின் சில நுணுக்கங்கள். மேலும் தேவை எனில் இராசதுரையில் இருந்து தொடங்கலாம்.

இதுக்குத்தான் சொல்லுறது ஈழத்தமிழர்களுக்குள் சோரம்போகாத வலிமையான எதிர்க்கட்சி  வேணுமெண்டு......
அண்டு தொடக்கம் தமிழரசுக்கட்சி...தமிழர்விடுதலைக்கூட்டணி....தமிழர் கூத்தமைப்பு எண்ட புதுப்புது பெயரிலை வந்து ஒரு கோஷ்டி அரைச்சமாவையே அரைச்சுக்கொண்டு திரியுதுகள்....இதாலை ஈழத்தமிழனுக்கு அழிவும் அவலமும்தான் மிச்சம்.
சரியோ பிழையோ தாங்கள் நினைச்சதை அகங்கார ஆணவத்துடன் மேட்டுக்குடி திமிருடன் செய்கின்றார்கள்.

கீரைக்கடைக்கும் எதிர்க்கடை வேணுமெண்டு சும்மாவா சொன்னார்கள்.

Edited by குமாரசாமி
எழுத்துப்பிழை.... 17.13

On 7/9/2016 at 0:13 PM, Athavan CH said:

ஆனால் உலகத்திற்கு ஒரு பெறுமதியான செய்தியைக் காட்ட வேண்டும் என்பதற்காகத்தான் ஒருவரை அழைத்து வந்தோம். தற்போது அவர் மெத்தப் படித்த மேலாவித் தனத்தினால் அரசியலமைப்பை எழுதுகின்றாராம்.

அரசியலமைப்பை யாரும் எழுத முடியாது அரசியலமைப்பு நாடாளுமன்றிலே ஆக்கப்படல் வேண்டும்.

அதனை நாடாளுமன்றம் அங்கீகரிக்க வேண்டும். இதனை விடுத்து புள்ளி இடுவதற்காக அரசியலமைப்பை உருவாக்க முடியாது.

என கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம் தெரிவித்தார்.

கி.துரைராசசிங்கம் என்பவர் முழு முட்டாள் என்பதை தனது அரைவேக்காட்டு உளறல்கள் மூலம் சந்தேகத்துக்கு அப்பால் நிரூபித்துள்ளார்.

சம்பந்தன், மாவை கும்பல் இதுபோன்ற முட்டாள்கள் பலரை தான் தமிழரசுக் கட்சியில் வைத்துள்ளார்கள். மாவை, சுமந்திரன் இருவரும் தேர்தலில் தோற்று, கூட்டமைப்பு விருப்பு வாக்கு சீட்டுக்களை மாற்றி வென்றவர்கள் என்பது ஊர் அறிந்த இரகசியம். இந்த நிலையில் அரைவேக்காட்டு அரசியல்வாதி மாவைக்கு முதலமைச்சர் பதவி ஒரு கேடா?

மாவை எப்படியாது கொஞ்ச காலம் தனது தகுதிக்கு கொஞ்சமும் பொருத்தமில்லாத முதலமைச்சராக இருக்க பேராசைப்படுவதும் தமிழ் மக்கள் அறிந்த செய்திதான்.

  • கருத்துக்கள உறவுகள்

image.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
17 hours ago, MEERA said:

image.jpg

நாட்டு நிலவரம் இப்பிடி இருக்க......இஞ்சை உள்ளதுகள் அங்கை தேனும் பாலும் ஆறாய் ஓடிக்கொண்டிருக்கு எண்டு கதை விடுதுகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.