Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் படையினரும் குறைக்கப்படாது, எழுக தமிழைக் கண்டு அரசாங்கம் அஞ்சவும் மாட்டாது! - பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

Featured Replies

வடக்கில் படையினரும் குறைக்கப்படாது, எழுக தமிழைக் கண்டு அரசாங்கம் அஞ்சவும் மாட்டாது!

வடக்கிலிருந்து படையினரை வெளியேற்றுமாறு நேற்று(சனிக்கிழமை) நடைபெற்ற எழுக தமிழ் பேரணியில் தெரிவிக்கப்பட்டது. வடக்கிலிருந்து படையினரை அரசாங்கம் ஒருபோதும் அகற்றமாட்டாது என சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று(சனிக்கிழமை) நடைபெற்ற எழுக தமிழ் தொடர்பாக கருத்துக் கேட்டபோதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

இனங்கள் மற்றும் மதங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் முயற்சித்துவரும் வேளையில், இத்தகைய கடும்போக்குவாத செயற்பாடுகளை ஏற்றுக்கொள்ளமுடியாது.

படைமுகாம்களை அகற்றுமாறு நேற்றையதினம் (சனிக்கிழமை) வடக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் இனவாதப்போக்குடையவர்களால் பேரணி நடாத்தப்பட்டது. அத்துடன் அங்கு ஆலயங்களைக் கட்டவேண்டாம், வெளியிடத்தவர்களை குடியேற்றவேண்டாம் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

இருப்பினும் அரசாங்கம் படைமுகாம்களை அகற்றாது. இவர்களின் சவால்களைக் கண்டு நாங்கள் ஒருபோதும் பயப்படப்போவதுமில்லை.

http://thuliyam.com/?p=42553

  • கருத்துக்கள உறவுகள்

இருப்பினும் அரசாங்கம் படைமுகாம்களை அகற்றாது. இவர்களின் சவால்களைக் கண்டு நாங்கள் ஒருபோதும் பயப்படப்போவதுமில்லை.

 

இதற்கு தானே ஆசைப்பட்டோம்

  • கருத்துக்கள உறவுகள்

எழுக தமிழ் நடக்கவில்லை என்றால்  எடுத்துப் போடுவினமோ?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, முனிவர் ஜீ said:

இருப்பினும் அரசாங்கம் படைமுகாம்களை அகற்றாது. இவர்களின் சவால்களைக் கண்டு நாங்கள் ஒருபோதும் பயப்படப்போவதுமில்லை.

இதற்கு தானே ஆசைப்பட்டோம்

இது எல்லாம் மகிந்த அன் கம்பனிக்கு விடுற கதை. கண்டு கொள்ளக் கூடாது. :grin:

இப்ப எந்தக் காம்ப் இருக்கோனும், எது குளோஸ் பண்ணவேணும் எண்டத, வாசிங்டனில பிஸ்வால் அம்மா தான் முடிவு செய்யிறா.. :unsure:

விக்கியர் என்ன செய்யவேணும் எண்டதயும் அவ தான் முடிவும் செய்யுறா...

 

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பொருத்தமான சோடி(ப்பு)

Edited by alvayan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 25.9.2016 at 6:47 PM, Nathamuni said:

இது எல்லாம் மகிந்த அன் கம்பனிக்கு விடுற கதை. கண்டு கொள்ளக் கூடாது. :grin:

இப்ப எந்தக் காம்ப் இருக்கோனும், எது குளோஸ் பண்ணவேணும் எண்டத, வாசிங்டனில பிஸ்வால் அம்மா தான் முடிவு செய்யிறா.. :unsure:

விக்கியர் என்ன செய்யவேணும் எண்டதயும் அவ தான் முடிவும் செய்யுறா...

 

அப்ப எங்கடை இவைக்கு பிஸ்வால் என்னத்தை சொல்லிக்குடுத்துட்டு போயிருப்பா????? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, குமாரசாமி said:

அப்ப எங்கடை இவைக்கு பிஸ்வால் என்னத்தை சொல்லிக்குடுத்துட்டு போயிருப்பா????? :rolleyes:

இருமெண்டா, இருமவேணும், தும்மெண்டா, தும்மவேணும்....

டெல்லிக்காரர் ஏதும் சொன்னா, 32 பல்லையும் காட்டி மேலையும் கீழயும் தலை ஆட்டிப்போட்டு வரனும்.

மிச்சத்தை நாம வெட்டியாடுவோம்...

இது தான் சொல்லியிருப்பா.....

ஏதாவது மாறிச்சாறி நடந்தா, மனிசி வந்திறங்கீடும். :cool:

  • கருத்துக்கள உறவுகள்

ஐநாவுக்கு ஒன்று சொல்லுறது.. அமெரிக்காவுக்கு ஒன்று சொல்லுறது.. இந்தியாவுக்கு ஒன்று சொல்லுறது.. சீனாவுக்கு ஒன்று சொல்லுறது.. தமிழர்களுக்கு ஒன்று சொல்லுறது.. இப்படியே எல்லார் தலையிலும் மிளகாய் அரைக்கிறது.. இதுவே சிங்கள ஆட்சியாளர்களின் பொது வேலைத்திட்டமாய்ப் போச்சு. 

புலிகள் பலமாக இருந்த போதே தமிழர்களுக்கு எதையும் கொடுக்காத சிங்களம்.. எனி தரும்.. என்று எதிர்பார்த்தால்.. அதுபோல் முட்டாள் தனம் எதுவுமில்லை.

ஆனால்... சர்வதேச நலன்களை தமிழர்கள்.. பூர்த்தி செய்யும் தனியான இராஜதந்திரம் ஒன்றின் மூலம் சர்வதேச தலையீடு ஒன்றை எமக்கு சாதகமாகக் கொண்டு வந்து சிங்களவனின் ஏக கொட்டத்தை அடக்கினால்.. ஒழிய.. நமக்கு எனி விடிவில்லை. :rolleyes:

எழுக தமிழ்.. சர்வதேசத்துக்கு ஒன்றைச் சொல்லி இருக்கும்.. தமிழர்களின் விருப்பு என்பது இலங்கைத் தீவில் வேறானது என்பதை. அதனை அவர்களை கையாளும் வகையில்.. தான் மிச்சம் எல்லாம். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

அப்ப எங்கடை இவைக்கு பிஸ்வால் என்னத்தை சொல்லிக்குடுத்துட்டு போயிருப்பா????? :rolleyes:

மக்கள் எழுச்சி  காட்டி கொஞ்சம்  அவையளை வெறுட்டுங்கோ   ,அப்ப நான் (பிஸ்வால்)சொல்லுவன் தமிழ்சனம் பாவம் எதாவது கொடுங்கோ என்று....உடனே அவையள் உங்களுக்கு சம்திங் தருவினம்.....tw_tounge_wink:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.