Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் நடத்தப்பட்ட ஊர்வலம் அரசியல் பதவி கதிரைகளுக்கானதே! நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் தெரிவிப்பு

Featured Replies

யாழில் நடத்தப்பட்ட ஊர்வலம் அரசியல் பதவி கதிரைகளுக்கானதே! நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் தெரிவிப்பு
 
யாழில் நடத்தப்பட்ட ஊர்வலம் அரசியல் பதவி கதிரைகளுக்கானதே! நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் தெரிவிப்பு
அரசியல் பதவிக் கதிரைகளுக்காக மக்களை அணிதிரட்டும் ஊர்வலமே கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்டது. சிவில் சமூகம்,மக்களின் பிரச்சினைகளை வெளிக் கொண்டுவரும் வகையில் ஊர்வலத்தை நடத்தியிருந்தால் நாங்கள் பேராதரவை வழங்கியிருப்போம். இவ்வாறு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார். 
 
நாடாளுமன்ற உறுப்பினரின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டில் மக்களுக்கான உதவித் திட்டங்கள் வழங்கும் நிகழ்வு, பருத்தித்துறை மற்றும் கரவெட்டி பிரதேச செயலகங்களில் நேற்று  முன்தினம் ( 28_09_2016) இடம்பெற்றன. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன் அவர்கள் தெரிவித்ததாவது: 
14518287_1149369708509886_1725596696_n.jpg
புதிய அரசமைப்பு உருவாக்கத்திற்கான  முயற்சி நடந்துகொண்டிருக்கின்றது. இதனால் நாம் பொறுமையை கூடுதலான வரையில் கடைப்பிடித்துக் கொண்டிருக்கின்றோம்.  நாடாளுமன்றத்திற்கு புதிய அரசமைப்பு வரைவு விரைவில் சமர்ப்பிக்கப்பட இருக்கின்றது. அதனை எதிர்பார்த்திருக்கின்றோம். 
 
தமிழ் மக்களது பாதை ஒவ்வொரு கட்டமாக நகர்ந்து வருகின்றது. ஆரம்ப காலத்தில் சாத்வீகப் போராட்டம் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தின் போதும் எமது கட்சியின் தலைவர் மாவை. சேனாதிராசா தாக்கப்பட்டார். சாத்வீகப் போராட்டம் மறைந்து ஆயுதப் போராட்டம் பரிணமித்தது. ஆயுதப் போராட்டத்தின் போதும் அவர் தாக்குதலுக்கு இலக்கானார். 
14518353_1149369705176553_1802489691_n.jpg
இப்போது நடப்பது இராஜதந்திரப் போராட்டம். 60 வருட காலம் போராடிய நாம் இராஜதந்திரப் போரட்டத்தின் வெற்றிக்காக சில காலம் பொறுமையாக இருக்கக் கூடாதா? ஒவ்வொருவருக்கும் நேரம் இருக்கின்றது. அந்தத் தருணங்கள் வரும்போதுதான் அவை வெற்றி பெறும். நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெறவில்லை என்பதற்காக ஊர்வலங்கள் நடத்தக்கூடாது. அன்றைய ஊர்வலத்தில் அரசியல்வாதிகள்தான் மேடையில் இருந்தார்கள். சிவில் சமூகத்தைக் காணவில்லை. சிவில் சமூகம் மக்கள் நலன்களை மாத்திரம் முன்னிறுத்தி ஊர்வலத்தை நடத்தியிருந்தால், எங்களது பேராதரவு அவர்களுக்கு கிடைத்திருக்கும். சிவில் சமூகம் சிவில் சமூகமாகச் செயற்பட வேண்டும். அப்படி செயற்பட்டால் அவர்களுக்கு சகலரிடமிருந்தும் பேராதரவு கிடைக்கும். 
சில விடையங்களைச் சொல்ல வேண்டும் என்று எண்ணியிருந்தேன். அதனைப் பொருத்தமான மண்ணில் நின்று கொண்டுதான் சொல்லியிருக்கின்றேன். - என்றார்.

http://onlineuthayan.com/news/18319

  • கருத்துக்கள உறவுகள்

 ராஜதந்திர போராட்டம் நடத்த 60 வருடம் காத்திருந்தவைக்கு, அடுத்த தேர்தலோடு பாயை சுருட்டிக்கொண்டு நடையைக்கட்ட வேணுமெண்டது தெளிவாய்த்த தெரிஞசு போச்சு. இயலாமையை கொட்டித் தீர்க்கினம். முதலமைச்சரை தொடர்ந்து இருக்கவிட்டால் அடுத்தமுறை தில்லுமுல்லுப் பண்ணியும் வரேலாது. எனவே அவரை தள்ளி, மாவையரை முதலமைச்சர்  கதிரையில் அமர்த்த திட்டங்கள்  நடக்குது. அதன் கட்டியம்தான் சரவணன் எம்பியின் மாவைப்புகழ். அதுக்கு ஒரு சகுனி, சம்பந்தரை கை, கால் எடுக்க விடாமல் ஒட்டிக்கொண்டு, பதவிக்காக காவல்  இருக்குது. மாவையரோ அறைகூவல் விடவும், சம்பந்தரோட தொங்கிக்கொண்டு, கண்ணை மூடிக்கொண்டு அவர் காட்டிற குழியிலே விழத்தான் லாயக்கு.

 சிங்களவனோ, நல்லிணக்கம் எண்ட படம் காட்டிக்கொண்டு, தமிழர் பகுதிகளில், சிங்களக் குடியேற்றங்களும், விகாரைகளும் கட்டிக்கொண்டு தட்டிக்கேட்டால் இனவாதம் என்கிற பூதத்தை காட்டி சர்வதேசத்தில் தனக்கு நியாயம் தேடுகிறான்.
நீங்களோ அவன்ர சலுகைகளுக்கு வாலாட்டிக்கொண்டு, சத்தம் போடாதேங்கோ, இனவாதியள் நித்திரை கொள்ளுகினம். எழுப்பிப் போடாதேங்கோ எண்டு பயங்காட்டிக்கொண்டு, இனவாதியளுக்கு உசார் ஏத்துறீங்கள். சிங்களவன் சர்வதேச அரங்கில் துணிவாய்  சொல்லுறான். தமிழருக்கு சம உரிமை கொடுத்தால், நாட்டில பிரச்னை உருவாகுமெண்டு. சர்வதேசமும் வாயை மூடிக்கொண்டிருக்குது. நீங்களும் சொல்லலாமே, நாங்கள் உங்களை நம்புகிறோம்,ஆனால் எங்களுக்கு, உங்களுக்கு வாக்குப்போட்ட மக்கள் உங்கள் செயலால் நம்பிக்கை இழந்து விட்டார்கள். ஆகவே உங்கள் அடாத்தான செயற்பாடுகளை நிறுத்துங்கள், நல்லிணக்கத்தை செயலில் காட்டுங்கள் என்று. உங்களால் சொல்லமுடியாது. ஏனெனில் நீங்கள் நியாயமான, நேர்வழி வந்த தலைவர்கள் அல்ல. உங்கள் ராசதந்திரமெல்லாம், தமிழினத்துக்கு ஒரு நல்லதலைமை  வந்து விடக்கூடாது என்பதே. உங்களை விட மோசமான ஒரு அயோக்கியன் வந்தால் கம்பளம் விரிப்பீர்கள். ஏனெண்டால் அந்த அயோக்யத்தனத்தில் உங்கள் அயோக்கியங்கள்  மறைந்து போகும்.  

கதிரைக்காக அங்கும், இங்கும் ஓடித்திரியிற இன்னொன்று சொல்லுது விக்கினேஸ்வரனை மக்கள் ஏற்றுக்  கொள்ளெலயாம், அவரோடு மக்கள் இல்லையாம். பிறகேன் இவை எல்லாரும் குத்தி முறியினம்? மக்கள் ஏற்றுக் கொள்ளாமலே அவர் முதலமைச்சரானார்? மக்கள் இல்லாமல் முதலமைச்சர் மட்டுமா பேரணியில் போனார்? அறிவிலிகளின் ஊளை தாங்க முடியவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தில் கட்சி நடத்துகிறவர்கள் சொந்தமா ரீவி.. வேணாம் அது ரொம்ப செலவு .. அட்லீஸ்ட் கட்சி சார்பில் தினசரி பத்திரிகையாவது நடாத்த வேண்டும்.. மாறி மாறி  பேசுவர்களின் முகத்திரையை அது கிழிக்க உதவும்.. தமிழனுக்கு உள்ள மிக பெரிய வியாதி "மறதி" ... அதை வைத்து கொண்டுதான் தமிழ்நாட்டில் பல அரசியல்கட்சிகள் சைக்கிள் கேப்பில் வண்டி ஓட்டி கொண்டுள்ளார்கள்.. அதே போல ஈழ தோழர்களும்  சென்றுவிடுவதுதான் சோகம் .. இங்கு உணவுக்காக புரியாணி..அப்புறம் சில்லறை காசு 1000 2000 .. மற்றும் குவாட்டர் சரக்கு இதற்காக வாக்களிக்கிறான் .. ஆனால் அங்கிட்டு அந்த செலவு கூட இல்லை  .. !!என்றே படுகிறது ..

இன்று வரை சிங்களத்திற்கு சொம்பு அடித்துவிட்டு அங்கு தேர்தல் சமயத்தில் .. தேசியதலைவர் பிரபாகரன் ..!!  ஒரு மாவீரன் ..!! (இது உலக தமிழர் அனைவருக்கும் தெரியாத ரகசியம் தயவு செய்து நீங்க யாரின்டயும் சொல்லிடாதிங்க பிளீஸ்!!,,) என்று அந்த நேரத்தில் ஊளை இடுவதாலே பல பேர் உணர்ச்சிவசபட்டு தங்கள் வாக்குகளை செலுத்தி விடுகிறார்கள்.. !!  பிறகு அரசியல் வியாதிகள் அவனவன் அவன் வேலைய பார்க்க போய்விடுகிறார்கள் .. கேட்டால் அதை நான் சொன்னது போன மாசம் ..இப்ப சொல்வது இந்த மாசம் என்று கதை விடுகிறார்கள் .. ( ராசதந்திரம்.. வின்சட் சர்சில் இவர்களது வீட்டுக்கு எதிர்வீட்டில்தான் குடியிருந்தாக அ(ரி)றிய முடிகிறது) மறுபடி ஓட்டு பொறுக்க வரும் போது கடந்த கால பேச்சுக்களை யுரீபில் இருந்து தரவிறக்கம் செய்து வசதியுள்ளவரகள் அவர்களுக்கு போட்டு காண்பிக்க வேண்டும் ..

வசதி இல்லாதவர்கள் பழைய செய்திதாள்களில் இருந்து கட் பண்ணி அவர்கள் முகத்திற்கு எதிராக நீட்ட வேண்டும் .. பச்சோந்திகளை காலில் இருப்பதை கழட்டி அடிக்க வேண்டும்...கீரை கடைக்கும் எதிர் கடை வேண்டும் என்பது ஈழ தமிழர் பழமொழி .. இங்காவது பரவாயில்லை திமுக vs அதிமுக என்று  இருக்கிறது .. மக்கள் உணர்வுகள் மீது அவர்கள் ஏதாவது ஒரு நிலைப்பாடு அவர்கள் சக்திக்கு உட்பட்டு வந்தேதான் ஆகவேண்டும்  வேறு வழி இல்லை.. (அவர்களின் மேல் வெறுப்பு என்பது தனி விவாதம்)  ஆனால் அங்கு அப்படியா ..? தமிழர் வாக்குகள் சிதற  கூடாது கூடாது .. நம் ஒற்றுமைய உலகிற்கே காட்ட வேண்டும் அதற்கு .. நாலு பேர் உண்மையாக தமிழினதிற்காக  உழைத்தவனை கூப்பிட்டு கட்சியில் சேர்த்த்து கொள்வது ஓட்டு பொறுக்கிய பின் கழட்டி விடுவது (பூவோடு சேர்ந்த நாறும் மணக்கும் என்பது அந்தகாலம்.. நாறோடு சேர்ந்த பூவும் நாறும் என்பது இந்த காலம் ) கூவி கூவியே ஒட்டு அரசியல் பல கில்மாக்களை அரங்கெற்றுகிறது ..

டிஸ்கி:

நமக்கு ஈழத்தில் எந்த கட்சி எது என்று எனக்கு தெரியாது .. அதனுடைய பொறுப்பளர்கள் யார் என்று தெரியாது ..பல காலங்களில் எங்களின்ட அரசியல் வியாதிகளை  கழுவி கழுவி ஊற்றி இருப்பீர்கள்.. இது உண்மை இல்லாத பட்சத்தில் இது ஒரு மாறுதலா இருக்கட்டும் ..இது  நமக்கு ஒட்டு மொத்த அரசியல் வியாதிகளின் மீது உள்ள கோபம் !!

 

33 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

டிஸ்கி:

நமக்கு ஈழத்தில் எந்த கட்சி எது என்று எனக்கு தெரியாது .. அதனுடைய பொறுப்பளர்கள் யார் என்று தெரியாது ..பல காலங்களில் எங்களின்ட அரசியல் வியாதிகளை  கழுவி கழுவி ஊற்றி இருப்பீர்கள்.. இது உண்மை இல்லாத பட்சத்தில் இது ஒரு மாறுதலா இருக்கட்டும் ..இது  நமக்கு ஒட்டு மொத்த அரசியல் வியாதிகளின் மீது உள்ள கோபம் !!

இல்லை இது வேற வியாதி + காய்ச்சல்.

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, ஜீவன் சிவா said:

இல்லை இது வேற வியாதி + காய்ச்சல்.

நல்லது தோழர் ..! வரும் தேர்தல்களில் பார்போம் ..!

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, ஜீவன் சிவா said:

இல்லை இது வேற வியாதி + காய்ச்சல்.

உண்மை

  • கருத்துக்கள உறவுகள்

சரவண பவன்.... என்பவர் தான், 
யாழ்ப்பாணத்துக்கு, ஜனாதிபதி  மைத்திரி வந்திருந்த போது... தனது மகளுக்கு பிறந்த நாள் கேக் வெட்டி கொண்டாடினவர்.
அவரின்... பத்திரிகை, உதயன் தான்...  சென்ற சனிக்கிழமை  நடந்த  "எழுக தமிழ்"  நிகழ்ச்சியின்   அன்று,  
எள்ளெண்ணை  எரிக்க...  முதல் பக்கத்தில், செய்தி வெளியிட்டு.... தமிழரை அவமானப் படுத்திய  விளக்கெண்ணெய்.

இதுகள் ... எல்லாம், தமிழ் அரசியல் வாதிகள், என்று கருத்து சொல்லுதுகள். 
இவர்களை... தேர்ந்து எடுத்த,  தமிழன் தான்....  ஒரிஜினல் யாழ்ப்பாண  பனங் கொட்டைகள்.

  • கருத்துக்கள உறவுகள்
நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் ஒரு அரசியல்வாதி.
வடமாகாண முதலமைச்சர் சீ. வீ. விக்கினேசுவரன் ஒரு தலைவர்.
 
பதவியைத் தேடிச்சென்று அணைப்பவர் யாரோ..... அவர் மக்களை ஏமாற்ற முயலும் ஒரு அரசியல்வாதி.:cool:
பதவி தேடிச்சென்று அணைப்பது யாரையோ..... அவர் மக்களை வாழவைக்க முயலும் ஒரு தலைவர்.:)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.