Jump to content

சைவ மீன் குழம்பு ( புரட்டாசி மாத ஸ்பெசல் )


Recommended Posts

பதியப்பட்டது

சைவ மீன் குழம்பு ( புரட்டாசி மாத ஸ்பெசல் )

தேவையான பொருட்கள்

சைவ மீன் செய்ய
தட்டை பயறு / காராமணி 1 கப்
பூண்டு 7 பற்கள்
வரமிளகாய் தூள் 1 தேக்கரண்டி
கரம்மசாலா 1/2 தேக்கரண்டி
சோம்பு 1 தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு
வேர்கடலை எண்ணெய் பொரிப்பதற்கு தேவையான அளவு

மீன் குழம்பு செய்ய
சின்ன வெங்காயம் 20 ( பொடியாக நறுக்கியது )
தக்காளி 1 ( பொடியாக நறுக்கியது )
பூண்டு 20 பற்கள் ( விழுதாக அரைத்தது )
புளி - எலுமிச்சைபழ அளவு ( சுடு தண்ணீரில் ஊற வைக்கவும் )
பச்சை மிளகாய் 6 ( பொடியாக நறுக்கியது )
மஞ்சள்தூள் 1/4 தேக்கரண்டி
தேங்காய் பால் 1 கப்
சாம்பார் தூள் 2 தேக்கரண்டி
கொத்தமல்லி தூள் 2 தேக்கரண்டி
சோம்பு 1 தேக்கரண்டி
வெந்தயம் 1/2 தேக்கரண்டி
உப்புத்தூள் தேவையான அளவு
கடுகு 1 தேக்கரண்டி
கறிவேப்பில்ல 1 கொத்து
நல்லெண்ணெய் 3 மேஜைக்கரண்டி

செய்முறை
1. தட்டை பயறை  இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். பிறகு தண்ணிரை வடித்து விட்டு, மிக்ஸியில் போட்டு தண்ணீர் விடாமல் அதனுடன் பூண்டு பற்கள், வரமிளகாய் தூள், கரம்மசாலா தூள், சோம்பு மற்றும் தேவையான அளவு உப்புத்தூள் சேர்த்து நன்றாக கெட்டியாக கெட்டி சட்னி போல் அரைத்து கொள்ள வேண்டும்.

2. சதுர வடிவில் வெட்டிய வாழை இலையை எடுத்து கொண்டு, அதனுள் கெட்டியாக அரைத்து வைத்துள்ள இந்த கலவையை கொஞ்சம் வைத்து அதை வாழை இலை கொண்டு மூடி வைக்கவும். இது போல் அனைத்து தட்டை பயிர் கலவையையும் , வாழை இலையையும் வைத்து மடித்து எடுத்து கொள்ளவும்.

3. இப்பொழுது இட்லி பாத்திரத்துல தண்ணீர் ஊற்றி, இட்லி தட்டுகளில் காட்டன் துணியை விரித்து அதன்மேல் தட்டை பயிர் கலவையை கொண்டு மடித்து வைத்துள்ள வாழை இலையை இட்லி தட்டுக்களில் அடுக்கி வைத்து, அதன் பின் இட்லி பாத்திரத்து மூடியை மூடி 15 நிமிடங்கள் ஆவியில் வேக விடவும்.

4. பிறகு வெந்துவிட்டது என்று உறுதிபடுத்திய பின்னர், அந்த வாழை இலை மடிப்பை எடுத்து பிரித்து அதனுள் வைத்துள்ள தட்டை பயிர் வேகவைத்த வில்லைகளை எடுத்து தட்டுகளில் தனியாக வைக்கவும். பிறகு மீன் துண்டங்களை போல் வெட்டி கொள்ளவும்.

4. இப்பொழுது வடச்சட்டியில் பொறிப்பதற்கு தேவையான அளவிலான வேர்கடலை எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் அதில் வேகவைத்து மீன் துண்டங்களை போல் வெட்டி வைத்துள்ள தட்டை பயிர் வில்லைகளை வடச்சட்டியில் போட்டு பொன்னிறமாக நன்றாக வறுத்து முறுகலாக ஆனதும் எடுத்து வைத்து கொள்ளவும்.

5. புளியை சுடு தண்ணீரில் ஊற வைத்து நன்றாக கரைத்து பிழிந்து, புளி கரைசலை தயார் செய்து கொள்ளவும்.

6. இப்பொழுது வடைச்சட்டியில் நல்லெண்ணெய்யை ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு போட்டு வெடிக்க ஆரம்பித்ததும் , சோம்பு, வெந்தயம் மற்றும் கறிவேப்பிலை இலைகளை சேர்த்து நன்கு வதக்கவும்.

7. பிறகு அதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்றாக பொன்னிறமாக வதக்கவும். பின்பு அதில் பொடியாக நறுக்கிய பச்சைமிளகாயையும் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு அதில் பூண்டு விழுதையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

8. பின்பு அதில் அடுப்பை சிறுதீயில் வைத்து, பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு அதில் கரைத்து வைத்துள்ள புளி கரைசலை ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும்.

9. பிறகு அதில் மஞ்சள்தூள், கொத்தமல்லி தூள், சாம்பார் தூள் மற்றும் தேவையான அளவு உப்புத்தூளையும்சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். இந்த கிரேவி சிறுதீயில் குறைந்தது 5 நிமிடங்கள் வரை கொதிக்க வைக்கவும். தேவையான அளவு தண்ணீரூம் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்.

10. இப்பொழுது அடுப்பை சிறுதீயில் வைத்து 15 நிமிடங்கள் எண்ணெய் பிரியும் வரை கொதிக்க வைக்கவும். இச்சமயத்துல தேங்காய் பாலை ஊற்றி சிறுதீயில் நன்கு 10 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். குழம்பு கெட்டி ஆகும் வரை கொதிக்க வைக்கவும். அதன் பிறகு குழம்பில் உப்பு தன்மையையும், காரத்தன்மையையும் சரி பார்த்து கொள்ளவும். தேவையெனில் சேர்த்து கொள்ளவும்.

11. இப்பொழுது குழம்பில் வறுத்து வைத்துள்ள தட்டை பயிர் வில்லைகளை வடச்சட்டியில் போட்டு வில்லைகள் உடையாத வாறு ஒரே ஒரு கிளறு கிளறி, கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கவும்.

12. பிறகென்ன சுடச்சுட சுவையான பிரமாதமான பாரம்பரிய மிக்க சைவ மீன் குழம்பு ரெடி.

Bild zeigt Essen

https://www.facebook.com/TASTYSAMAYAL

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Afficher l'image d'origine

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த கறியில மீனை கண்டவர்கள் அறியத்தரவும் ரகசியமான முறையில் 

பரிசு அளிக்கப்படும் :unsure:

Posted
3 hours ago, நவீனன் said:

 

சைவ மீன் குழம்பு ( புரட்டாசி மாத ஸ்பெசல் )

 

Bild zeigt Essen

 

நவராத்திரி காலத்தில மீனை தின்னக்கூடாதெண்டு, மீனை மாதிரி ஒண்டை செய்து தின்னுவதை விட இந்த ஒரிஜினல் மீனே மேல். 

இதை பாத்துட்டு நாக்கால தண்ணி வடிய நாண்டுக்கிட்டு சாவுங்கடா.:grin:

Bilderesultat for மீன் குழம்பு

  • கருத்துக்கள உறவுகள்
Posted
24 minutes ago, முனிவர் ஜீ said:

இந்த கறியில மீனை கண்டவர்கள் அறியத்தரவும் ரகசியமான முறையில் 

பரிசு அளிக்கப்படும் :unsure:

பயற்றில் மறைந்தது பாரியமீன்  பாரை 

பாரையை மறைத்தது தட்டைப்  பயறு ....! :11_blush:

பரிசு எதுவாய் இருந்தாலும் ஜீவன் வாங்கிக்  கொள்வார்....! :11_blush:

Posted

சைவ மீன் குழம்பு / vegetarian fish curry

 

சைவ மீன் குழம்பு / வாழைப்பூ மீன் குழம்பு / Vegetarian fish curry:

 

சைவ மீன் குழம்பு / வாழைப்பூ மீன் குழம்பு
மீன் குழம்பின் அரிய சுவையை அனைவரும் உண்டு மகிழ அதே செய்முறையை வாழைப்பூ கொண்டு சமைக்கலாம் . வாழைப்பூ அற்புதமான மருத்துவ குணம் கொண்டது. முக்கியமாக இரும்புச்சத்து,  நார்ச்சத்து அதிகம் நிறைந்தது என்பதால் பெண்களுக்கு மாத விளக்கு சமயத்திலும் கர்ப்ப காலத்திலும் இது மிகச் சிறந்த உணவாக உட்கொள்ளுதல் நலம் என்று டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர்.
வாழைப்பூ தொவட்டல், வாழைப்பூ கூட்டு, போரியல் வடை என பல வகையுண்டு.
இங்கு வித்தியாசமான வாழைப்பூ மீன் குழம்பு செய்வது எப்படி என்று பார்ப்போம். இதற்கு வாழைப்பூவின் உட்பகுதி பூக்களே மிகவும் சிறந்தது , ஒவ்வொரு பூவின் உள்ளும் இருக்கும் நரம்புகளை (பிளாஸ்டிக் போன்ற) அகற்றி, மோர் கலந்த நீரில் போட்டு வைத்துக்கொள்ளவும் நிறம் மாறாமல் இருக்கும்.தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.

image courtesy google image

 

செய்யத்தேவையான பொருட்கள் :
வாழைப்பூ-1 கோப்பை
சின்ன வெங்காயம்-9 சிறிதாக வெட்டிக்கொள்ளவும்
பூண்டு-7 பல் வெட்டிக்கொள்ளவும்
பச்சை மிளகாய் -2
கறிவேப்பிலை-1 கொத்து
தக்காளி-1 சிறிதாக வெட்டிக்கொள்ளவும்
உப்பு-1 தே க
மிளகாய்த்தூள் -2 தே க (சாம்பார் மசாலாத்தூள் )
புளி கரைத்தது 1/4 கோப்பை (1 எலுமிச்சை அளவு )
மஞ்சள் த்தூள் -1/4தே க
தாளிக்க :
எண்ணெய் -2 மே .க
சோம்பு-1/4 தே க
வெந்தயம்-சீரகம்-1/4 தே க
அரைக்கத்தேவயான பொருட்கள்:
வெங்காயம்-1
தக்காளி-1
சோம்பு-1
சீரகம்-1/2
இவற்றை விழுதாக அறித்துக்கொள்ளவும். இவற்றை லேசாக வதக்கியும் அரைக்கலாம்
செய்முறை:
கடாயில் எண்ணெய் காய வைத்து “தளிக்க” பொருட்களைத் தாளித்துக்கொள்ளவும்.
வெட்டிய வெங்காயம், பச்சைமிளகாய், வாழைப்பூ, கறிவேப்பிலை சேர்த்து 1 நிமிடம் வதக்கவும். பின்னர் தக்காளி, உப்பு சேர்த்து வதக்கவும்.
மிளகாய்ப்பொடி, மஞ்சள்பொடி, புளித்தண்ணீர், தண்ணீர் 2 கோப்பைசேர்த்து 3 நிமிடம் வரை கொதிக்கவிடவும்.
அரைத்த விழுதை சேர்த்து நன்கு கொக்கவிடவும்.
சைவ மீன் குழம்பு ரெடி .

https://chettinadcookbooktamil.wordpress.com/2015/09/08/சைவ-மீன்-குழம்ப-vegetarian-fish-curry/

4 hours ago, suvy said:

Afficher l'image d'origine

 

1 hour ago, முனிவர் ஜீ said:

இந்த கறியில மீனை கண்டவர்கள் அறியத்தரவும் ரகசியமான முறையில் 

பரிசு அளிக்கப்படும் :unsure:

 

1 hour ago, suvy said:

பயற்றில் மறைந்தது பாரியமீன்  பாரை 

பாரையை மறைத்தது தட்டைப்  பயறு ....! :11_blush:

பரிசு எதுவாய் இருந்தாலும் ஜீவன் வாங்கிக்  கொள்வார்....! :11_blush:

படத்தில் ஏற்பட்ட தவறுக்கு மன்னித்து கொள்ளுங்கள் உறவுகளே..tw_blush:

1 hour ago, ஜீவன் சிவா said:

நவராத்திரி காலத்தில மீனை தின்னக்கூடாதெண்டு, மீனை மாதிரி ஒண்டை செய்து தின்னுவதை விட இந்த ஒரிஜினல் மீனே மேல். 

இதை பாத்துட்டு நாக்கால தண்ணி வடிய நாண்டுக்கிட்டு சாவுங்கடா.:grin:

Bilderesultat for மீன் குழம்பு

இதைவிட வேற நல்ல படம் கிடைக்கவில்லையா  ஜீவன்..:grin:

வேற ஒருதிரியில் புங்கையர் போட்டபடம் மாதிரி..:cool:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

செவ்வாய் வெள்ளி சனியிலை சோயாபீன்ஸ்  வதக்கல் கறி என்ரை வீட்டிலை கட்டாயம் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, குமாரசாமி said:

செவ்வாய் வெள்ளி சனியிலை சோயாபீன்ஸ்  வதக்கல் கறி என்ரை வீட்டிலை கட்டாயம் இருக்கும்.

உங்களுக்கு அது மீன் கறிபோல நாக்கு செத்து கன காலம்போலtw_blush:

 

18 hours ago, suvy said:

பயற்றில் மறைந்தது பாரியமீன்  பாரை 

பாரையை மறைத்தது தட்டைப்  பயறு ....! :11_blush:

பரிசு எதுவாய் இருந்தாலும் ஜீவன் வாங்கிக்  கொள்வார்....! :11_blush:

பயறு தான் பாரையாகிறதோ ம்கும் ஆனால் பாரைக்கும் பயறுக்கும் தூரம் tw_blush:

ஜீவண்ணைக்கு நெல் தின்ற பனையான் மீனை பரிசாக கொடுக்க இருக்கிறேன் :unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்கள் கருத்தை கவனித்தில் எடுக்கிறேன். எனக்கு அருச்சுனா மீது காழ்புணர்ச்சி ஏதும் இல்லை. ஆனால் ஆஸ்பத்திரி தமிழ் செக்கூரிட்டியை சி ஐ டி யிடம் பிடித்து கொடுப்பேன் என அவர் மிரட்டிய வீடியோ பார்த்தேன். அதில் அகங்காரத்தை தவிர வேறு எதையும் என்னால் காண முடியவில்லை.
    • காதலா கட்சியா என்று ஒரு முடிவுக்கு வரவேண்டிய நேரமிது. சுமந்திரனை பின்பற்றி சிங்கள சம்பந்தி என விக்கினேஸ்வரனை விளித்தவர்கள், இப்போ அவரொருவர் சிங்கள சம்பந்தியாகிவிட்டார், அதைப்பற்றி யாரும் மூச்சு விடுவதில்லை. இதைத்தான் சொல்வது, "பழிப்பு படலேக்கை, சிரிப்பு சேலேய்க்கை," என்று.
    • தன்னைப்பற்றிய சிவஸ்ரீ பிரசாத் அவர்களின் 20 நிமிட காணொளி. 
    • 14 DEC, 2024 | 01:47 PM (துரைநாயகம் சஞ்சீவன்) இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்கி, ஏற்றுக்கொண்ட சீடோ சமவாயத்தின் அடிப்படையில் புதிய சட்டமூலத்தினை கொண்டுவருவதன் ஊடாக பெண்களுக்கு எதிரான வன்முறைகளையும் பாரபட்சங்களையும் நிறுத்த உடனடியாக உதவுங்கள் என கிழக்கு மாகாண பெண் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் அமைப்பு ஜனாதிபதியிடம் கோரியுள்ளது.  இன்று சனிக்கிழமை (14) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இந்த அமைப்பினர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.  இதன்போது அவர்கள் மேலும் கூறுகையில், இலங்கையின் அனைத்துப் பெண்களும் இன, மத, சமூக வேறுபாடுகளைக் கடந்து ஆணாதிக்க அடக்குமுறைகளையும் வன்முறைகளையும் எதிர்கொண்டு வருகின்றனர். ஆணாதிக்க மயப்பட்ட குடும்ப, சமூக, வேலைத்தள, அரச அடக்குமுறைகளுக்கு இலங்கைப் பெண்கள் அனைவருமே உள்ளாகின்றனர். இணையவழிக் குற்றங்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக பாடசாலை மாணவிகள் மீதான பாலியல் இம்சைகள், வன்முறைகளால் சிறுமிகளே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். எனினும் காத்திரமான சட்ட ஏற்பாடுகள் இல்லாத காரணத்தினால் தவறு செய்கின்றவர்கள் தப்பித்துக் கொள்கின்ற நிலைதான் தற்போதும் இருக்கின்றது. இருந்த போதும், கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி தொடக்கம் மே மாதம் வரையான காலப்பகுதியில் திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் உள்ள 15 வயதுடைய சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய 41 வயதான நபருக்கு 30 வருட கடூழிய சிறை தண்டனை விதித்ததுடன், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு  3 இலட்சம் ரூபா நஸ்டஈடு வழங்குமாறும் திருகோணமலை  மேல் நீதிமன்றம்  கடந்த 11 ஆம் திகதி தீர்ப்பு வழங்கியதை எமது  கிழக்கு மாகாண பெண் மனித உரிமை பாதுகாவலர் அமைப்பு வரவேற்கிறது. இலங்கையில் இடம்பெறுகின்ற பெண்கள் மீதான வன்முறைகளை நிறுத்துவதற்கான சட்டங்களை விரிவுபடுத்துவதுடன், சட்டங்களில் சீர்திருத்தங்களை உடன் மேற்கொண்டுதவுமாறும், அத்துடன் ஏற்றுக்கொள்ளப்பட்ட பெண்களுக்கு எதிரான  எல்லா  விதமான பாராபட்சங்களையும்  இல்லாது ஒழிக்கும்  (சீடோ) சமவாயத்தில் குறிப்பிடப்பட்ட விடயங்களை முழுமையாக இலங்கையில்  நடைமுறைப்படுத்துவதற்காக புதியதொரு சட்ட மூலத்தை உருவாக்குமாறும், இலங்கையின்  வடக்கு  கிழக்கு பிரதேசங்களில் பெண் மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கு இடம்பெறும் விசாரணைகளை  உடன் நிறுத்த வேண்டும் எனவும், இலங்கையில் நடைமுறையில் இருக்கும் பயங்கரவாதத் தடை சட்டத்தை நீக்குமாறும், மேலும் அரசுக்கு எதிரான குற்ற செயல்களை கையாள்வதற்கு போதிய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்ற அடிப்படையில்  பயங்கரவாதத் தடை சட்டத்திற்கு பதிலாக புதிய பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கின்றோம் என தெரிவித்தனர்.  https://www.virakesari.lk/article/201251
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.