Jump to content

சேலையை விழுங்கிய பஞ்சாபி!!


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கோயில், தமிழ் விழாக்கள், திருமணங்களிலாவது இந்தப் பஞ்சாபி உடையை விட்டு தமிழ்ப்பெண்கள் எல்லாம் சேலை அல்லது பாவாடை, தாவணி அணிந்து வந்தால் என்ன?

பஞ்சாபி அல்லது சல்வார் கமிஸ் எனப்படும் வட இந்திய உடை தமிழ்நாட்டை மட்டுமல்ல, உலகத்தமிழ்ப் பெண்கள் அனைவரையும் ஆக்கிரமித்து விட்டது. இதில் வேடிக்கை என்னவென்றால் வடநாட்டுப் பெண்கள் விழாக்கள், திருமணம் போன்றவற்றுக்கு சேலை தான் அணிவார்களாம், இந்த பஞ்சாபி உடை வெறும் அன்றாட (Casaual) வாழ்க்கையில், இலகுவாக நடமாடுவதற்கான உடை தானாம். அப்படியென்றால் இலங்கையில் தமிழ்ப்பெண்கள் சேலையுடன், அந்தக் குளிரில் ஏறாத மலையெல்லாம் ஏறித் தேயிலைக் கொழுந்தைப் பிடுங்கியிருக்கிறார்களே, அது எப்படி? இப்ப என்னடாவென்றால் எங்கும் பஞ்சாபி எதிலும் பஞ்சாபி, எட்டப் பார்த்தால் பஞ்சாபி, கிட்டப் பார்த்தால் தமிழ் மூஞ்சி என்றாகி விட்டது.

இஸ்லாமிய உடை எனச் சிலர் உரிமை கொண்டாடினாலும் உண்மையில் வட இந்திய மாநிலமான பஞ்சாப்பில் உருவாகிய இந்த உடை தமிழர்களை மட்டுமல்ல தென்னிந்தியாவையும், இலங்கையையும் கூட அடிமைப்படுத்தி விட்டது. அரசியல்வாதிகளாலும், பலம் வாய்ந்த மன்னர்களாலும் முடியாததை, இந்த உடை செய்து முடித்து விட்டதென்றால் மிகையல்ல. இதற்குக் காரணம் என்னவாக இருக்கும், வட இந்திய மோகமா, தமிழர்களுக்கென தேசிய உடை இல்லையா? அல்லது வெறும் வசதிக்காக, தமிழர்கள் மற்றவர்களின் உடைகளை அணிந்து கொள்கிறார்களா?

இலங்கை ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா, தன்னுடைய ஆட்சிக்காலத்தில் ஒருமுறை இந்த பஞ்சாபி உடையை அணிந்தார், அவ்வளவு தான் இலங்கைப்பத்திரிகைகள் எல்லாம் தலையங்கமும், கட்டுரைகளுமாக எழுதி அவரை இல்லை, உண்டென்றாக்கி விட்டார்கள். எப்படி ஒரு சிங்களப் பெண், அதுவும் கண்டி அரசின் பிரபுக்கள் குடும்பத்தைச் சேர்ந்த பெண், சிங்களக் கலாச்சாரத்துக்கு எடுத்துக் காட்டாக இருக்க வேண்டிய பெண், விசிறி வைத்துக் கட்டும் கண்டிய முறைச் சேலையை விட்டு வட இந்திய உடையை அணியலாம், அவர் சிங்கள இனத்தை அவமதித்து விட்டார் என அலறத் தொடங்கி விட்டார்கள்.

ஆனால் தமிழ்ப் பெண்கள் அனைவரும் சும்மா அன்றாட தேவைக்காக அணியத் தொடங்கிய பஞ்சாபி உடை, இப்பொழுது தமிழர்களின் சேலை, பாவாடை தாவணி எல்லாவற்றுக்கும் விடை கொடுத்து விட்டு, கோயில்களில், தமிழ் விழாக்களில் ஏன் திருமணங்களில் கூட, நான் தான் "கத்தரித் தோட்டத்து மத்தியிலே நின்று காவல் புரிகின்ற சேவகன், நன்கு காவல் புரிகின்ற சேவகன்" என்றது போல வந்து நிற்கிறார்கள். தமிழர்களின் உடை, தமிழ்ப்பண்பாடெல்லாம் என்னாச்சு?

அண்மையில் தமிழ்நாட்டு முதல்வரின் மகள் கனிமொழி ஈழத்தமிழருக்காக உண்ணாவிரதமிருந்தார், நோக்கம் என்னவாகவிருந்தாலும், அப்படியொரு வெளிப்படையான ஆதரவைக் கண்டு பூரித்துப் போன உலகத்தமிழர்கள், அவரது படத்தை இணையத்தளத்தில் ஆவலுடன் பார்த்தால் அவரும் சேலையை விட்டு, பெரிய உரச்சாக்கு ஒன்றுக்குள் ஒளித்திருந்தார். ஐயோ கடவுளே, இது என்ன சோதனை, உலகமுழுவதுமுள்ள தமிழர்கள் எல்லாம் பார்க்கப் போகிற, அந்த நிகழ்ச்சிக்காவது ஒரு பருத்திச் சேலையை அணிந்து கொண்டு போயிருக்கக் கூடாதா என்று என்னையறியாமலே கேட்டு விட்டேன்.

உண்மையான சம்பவம் ஒன்றைச் சொல்கிறேன்,

கனடாவிலை பள்ளிக்கூடமொன்றிலை பல்கலாச்சார நாளுக்கு (Multi cultural day) கொஞ்சத் தமிழ்ப் பொண்ணுங்க பஞ்சாபி போட்டுக்கொண்டு வந்திருந்தனர்.

உடனே அவர்கள் கண்ணில் பான்ஸ் போட்டிருந்த இரண்டு மூன்று தமிழ் மாணவிகள் தென்பட. அவர்களை நோக்கி கைவீசிக்கொண்டு நகர்ந்தனர் பஞ்சாபி அணிந்த தமிழச்சிகள்.

அவர்களை நெருங்கியவுடன் பஞ்சாபி போட்டிருந்த மறத் தமிழச்சி, இடுப்பில இரண்டு கைகளையும் வைத்த படி சுருக்கென்று ஒரு கேள்வியை வீசினா...

என்ன நாள் இண்டைக்கு?

பதில் "பல்கலாச்சார நாள் (Multi Cultural Day) என்று வந்தது"

உடனே, பல்கலாச்சார நாளில் இப்படி பான்ற்ஸ் சட்டை போட்டுக்கொண்டா வருவதா... நம்ம தமிழ்ப் பண்பாட்டை மறக்கலாமா என பஞ்சாபி போட்டிருந்தவர்கள் கேட்டு, பஞ்சாபி உடை போடாத தமிழ் மாணவிகளை அடிக்குமளவிற்குச் சென்றுவிட்டனர்

உடனே பஞ்சாபி போடாத நம்ம தமிழ் மாணவிகள் சொன்னார்களாம், நாங்கள் தமிழ் ஆடை போட்டுவரேலை என்று சண்டைபோடுறியளே, நீங்க மட்டும் தமிழ் உடுப்பு என்று பஞ்சாபியளைப் போட்டுக் கொண்டு வந்து நிக்கிறியள், அதென்ன என்று...

அதற்கு அவர்கள் உமக்குக் கனக்கத் தெரியுமே "பஞ்சாபி" உடுப்பு தமிழர்களின் உடுப்பு தானே என்றார்களாம்

இதில் வேடிக்கை என்னவென்றால் .. பஞ்சாபி போட்டிருந்தவர்களின் எண்ணத்தில் சேலையைவிட, தாவணியைவிட, முழுப்பாவாடையயைவிட பஞ்சாபி தமிழ் உடுப்பெனுமளவுக்கு கருத்து நிலைத்துவிட்டது...

இங்கு சிலர் உடையில் என்ன இருக்கிறது, ஒவ்வொருவருக்கும் தேசிய உடை என்றெல்லாம் கிடையாது என்று கூறலாம், ஆனால் உண்மையில் உடை ஒரு நாட்டினது மட்டுமல்ல, இனத்தினது கலாச்சாரத்தையும் எடுத்துக் காட்டுவதாகும், உதாரணமாக முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி வீட்டில் இருக்கும் போது பஞ்சாபி உடையை அணிந்து கொள்வார் ஆனால் எந்த வெளிநாட்டுப் பயணத்திலும், அயல் நாட்டுத் தலைவர்களைச் சந்திக்கும் போதும் சேலையணிவாரே தவிர பஞ்சாபி உடையை அணிய மாட்டார், இதற்கு மாறாக பாகிஸ்தான் பிரதமர் பெனாசிர் பூட்டோ வீட்டிற்குச் சேலை அணிந்தாலும், வெளிநாட்டுத் தலைவர்களைச் சந்திக்கும் போது பஞ்சாபி உடையணிவார். ஏனென்றால் சேலை இந்தியாவின் தேசிய உடை என்பது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்தாகும்.

அன்றாட இலகுவான வாழ்க்கைக்காக அணியத் தொடங்கிய பஞ்சாபி உடை அந்தளவுடன் நின்று விட்டால் பரவாயில்லை, ஆனால் அது தமிழர்களின் கலாச்சார, சம்பிரதாய விழாக்களிலும் இடம் பெறுவது தான் கவலைப்பட வேண்டிய அறிகுறி. சல்வார் கமீஸ் அல்லது பஞ்சாபி உடை இந்தளவுக்குப் பிரபலமடைந்தமைக்கு முக்கிய காரணம், திரைப்படங்களும், தொலைக்காட்சி நாடகங்களும், பஞ்சாபி உடையணியும் பெண்களைத் துணிச்சலான, படித்த, முற்போக்கான, பாரதி கண்ட புதுமைப் பெண் போன்று சித்தரித்தமை தான்.

முன்பெல்லாம் மேற்கத்திய நாடுகளின் உடைகளை இலங்கைத் தமிழ் ஆண்களும், பெண்களும் அணிந்தாலும், கலாச்சார விழாக்களிலும் கோயிலுக்கும், திருமணம் போன்றவற்றுக்கும் இலங்கைத் தமிழர்களின் தேசிய உடையாகிய வேட்டி, சால்வை என்பவற்றை அணிவார்கள் இப்பொழுது என்னடாவென்றால் அவர்களும் பஞ்சாபி தான். அதிலும் பார்க்க சகிக்க முடியாதது என்னவென்றால், சில தமிழர்கள், பந்தத்துக்கு துணிசுத்தின மாதிரி, சர்வாணியோ என்ன இழவையோ, நிறையக் காசு கொடுத்து வாங்கி, நல்ல மஞ்சள் நிறத்தில் அணிந்து கொண்டு, அதற்கு கறுப்பு நிறத்தில் சப்பாத்தும் போட்டு அவர்களின் மேலணி கணுக்கால் அளவுக்கு நிற்க, மன்மதன் என்ற நினைப்பில் நிற்கும் கண்ராவி, அந்தக் காசுக்கு ஒரு நாலுமுழ வேட்டியைக் கட்டிக் கொண்டு நின்றால் எவ்வளவு ஆண்மையான தோற்றத்துடன் அழகாக இருக்கும் என நினைத்துக் கொள்வேன்.

வேறு ஒன்றுமில்லை எல்லாம், அன்னிய மோகம், எது தமிழர்களுடையதல்லவோ அதிலெல்லாம் ஆசை, அதை விடத் தமிழர்களுடையது எதுவோ அதுவெல்லாம் குறைவானதென்ற தாழ்வு மனப்பான்மை தான் இதற்கெல்லாம் காரணம்.

நான் இப்படி எழுதுவதைப் பார்த்து விட்டுக் கனடாவில் குளிர்காலத்தில் நாலு முழ வேட்டியுடன் ஓடித்திரிகிறேனா என விதண்டா வாதம் பண்ண வேண்டாம், நான் கூறுவதெல்லாம் தமிழ் பண்பாடு, கலாச்சாரமென பம்மாத்து விட்டுக் கொண்டு நாங்கள் வேற்று இன மக்களை அழைக்கும் விழாக்களிலாவது படங்களில் நடிகர், நடிகைகள் போட்டார்கள் என்பதற்காக இந்த பஞ்சாபி, சர்வாணியை மாட்டிக் கொண்டு நாலு புசல் நெல்லுமூட்டை போல நிற்பது தமிழ்க் கலாச்சாரம் அல்ல என்பது தான்.

http://unarvukal-unarvukal.blogspot.com/20...og-post_23.html

Link to comment
Share on other sites

  • Replies 59
  • Created
  • Last Reply

அன்றாட உபயோகத்தை பொறுத்தவரையில் சேலையை விட பஞ்சாபி பெண்களுக்கு வசதியானது என்று நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்றாட உபயோகத்தை பொறுத்தவரையில் சேலையை விட பஞ்சாபி பெண்களுக்கு வசதியானது என்று நினைக்கின்றேன்.

பஞ்சாபியைவிட அம்மணமாப் போறது இன்னும் வசதி என்று நான் நினைக்கிறேன். :lol::unsure:

சேலை மட்டுமல்ல வேட்டி கட்டத் தெரியாது.. வேட்டி என்றால் என்ன என்று சொல்லுறதெல்லாம் நம்ம தமிழர்களுக்கு பெருமையப்பா...! கலாசாரம் பெண்களுக்கு மட்டும் தானா சேலை கட்டு என்பது ஆணாதிக்கம் பொட்டு வை என்பது ஆணாதிக்கம் என்று..நல்ல ஒரு ஆதிக்கம்..அதுவும் இல்லை என்றால் நம்ம பெண்கள் பாடு திண்டாட்டம் தான். இந்த ஆணாதிக்கத்தைச் சொல்லிச் சொல்லியே கடைசில பஞ்சாபி ஆதிக்கத்துக்க போயாச்சு...இன்னும் என்னென்ன நடக்கப் போகுதோ..பொறுத்திருந்து பார்ப்பம்..! :lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சேலைகட்ட எவ்வளவு மணித்தியாலம் செலவழிக்க வேண்டும்.. இதெல்லாம் பம்பர வாழ்வில் சரிவராது.. பெண்களே வந்து தங்கள் கருத்துக்களை வைக்கட்டும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் ஒரு நிகழ்வுக்கு தாய் மகள் பேத்தி என்று மூன்று பேர் வந்திருந்தார்கள். கடும் குளிர் வேறு. காற்றும் வீசியது.

வயதான தாய் சேலை கட்டி இருந்தார். ஒரு நடுத்தர வயது மகள் பஞ்சாபி போட்டிருந்தார். இளம் வயது பேத்தி ஜீன்ஸ் போட்டிருந்தார். வயதான தாய் தூய தமிழில் பேசினார். மகள் தமிழ் ஆங்கிலம் கலந்து பேசினார். பேத்தி ஆங்கிலம் மட்டும் பேசினார்.

ஆக... எங்கே எமது கலாசார விழுமியங்கள் தொலையத் தொடங்குகிறது என்பதை இந்த உதாரணம் தெளிவாகக் காட்டுகிறது.

அதற்கேற்றாற் போல குரல் கொடுக்கவும் ஒரு கூட்டம் இருக்கிறது. கலாசாரம் என்பது காலத்தோடு மாறுபடுவது என்று சொல்லவும் ஒரு குழாம் இருக்கிறது. அவர்களே அடுத்த வினாடி வந்து மரபு வாழ்வியல் அறம் காப்பதே மொழி பேசுவதை விட தமிழர்கள் என்று காட்டும் என்று புதிய கோட்பாடும் எழுதுவார்கள்.

இப்படி குழம்பிய மனிதர்களால் தான் மனங்களும் குழப்பபட்டு விழுமியங்களும் அழிந்தொழிந்து போகின்றன. விழுமிய அழிவுகளுக்குள் ஆண் பெண் என்ற ஆதிக்க எண்ணங்களின் பரப்புரைகளும் சேர்ந்து கொண்டுள்ளதால் எல்லாம் புரட்சி என்ற மாயைக்குள் கால மாற்றம் என்ற சுயதேவைக்குள் அடங்கிப் போய் விடுகின்றன..!

கலாசாரம் என்பது வேறு கலாசார விழுமியம் என்பது வேறு. கலாசாரம் மாறு பட்டாலும் கலாசார விழுமியங்கள் காக்கப்பட வேண்டும். அப்போதுதான் கலாசாரத்தின் தொண்மை நிலைக்கும்..! புரிய வேண்டியவர்கள் புரிந்து கொண்டால் சரி. எமது நலனையே தனித்து நோக்குவோம் என்றால் பஞ்சாபியும் அவசியமில்ல..சேலையும் அவசியமில்ல..எதையோ விரும்பின படிக்குப் போட்டிட்டுப் போங்கள் என்று சொல்லிவிட்டு போய்க்கிட்டிருக்க வேண்டியதுதான். அப்படியான நிலையில் கதைத்து விளக்கிப் பிரயோசனமில்லை. :P :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சேலைகட்ட எவ்வளவு மணித்தியாலம் செலவழிக்க வேண்டும்.. இதெல்லாம் பம்பர வாழ்வில் சரிவராது.. பெண்களே வந்து தங்கள் கருத்துக்களை வைக்கட்டும்..

இப்படியான கருத்துக்கள் தான் மக்களைச் சோம்பேறியாக்குகின்றன. ஒன்றைத் தினந்தோறும் செய்து வந்தால் அது பழக்கப்பட்டுவிடும். அதற்கான கால அளவும் குறுகியதாகி நின்று கொள்ளும்.

ஊரில் இப்பவும் பல தாய்மார் மற்றும் பெண்கள் காலையில் எழுந்து உணவு செய்து தயார்படுத்தி பாடசாலைகளில் ஆசிரியர் தொழிலுக்காக சேலை கட்டிக் கொண்டு போய்விடுகிறார்கள். அவர்களைக் கேட்டால் அது பழக்கத்தில வந்திட்டால் சுமையாத் தெரியாது.

பத்தியும் பத்தாமலும் சட்டை போட்டு அதைப் பொத்திப் பிடிச்சுக் கொண்டு திரியுற நேரத்துக்கு சேலையை கட்ட செலவழிக்கும் நேரம் அதிகமா..?!

அநேக பெண்கள் துவாரங்கள் வைத்து சின்னதா உடுப்பும் போடுவார்கள். யாரும் பார்க்கிறார்கள் என்றால் பொத்தியும் பிடிப்பார்கள். கடையும் வைத்துக் காட்சியும் காட்டிக் கொண்டு காட்டாதது போல நடிப்பு. போடேக்கையே தெரியும் சின்னதாப் போடுறன் வில்லங்கம் வரும் என்று. தெரிந்தும் செய்கிறர்கள்.ஏன் தான் இந்தப் பெண்களுக்கு இப்படி அர்ப்பத்தனமான சிந்தனையோ யாம் அறியோம். பார்த்தா பார்த்திட்டுப் போகட்டன். கற்பா கெட்டிடும். அல்லது போடுறதை ஒழுங்காப் போடுறது. இரண்டும் கெட்டால் நிலைக்குப் பெண்களைத் தள்ளியது இப்படியான...சோம்பேறிக் கருத்துக்களும் தான். :lol::unsure:

Link to comment
Share on other sites

அது என்னவோ தமிழ் கலாச்சாரம் என்றால் உடனே பெண்களைப் பற்றித்தான் கதைக்கிறார்கள். பெண்கள் போடும் உடை..நடை..சமையல்..என்று கலாச்சாரம் பெண்களுக்கு மட்டும் தான் என்பது போல் இருக்கிறது.இங்கே திருவிழாக்களில் சுவாமி தூக்கும் ஆண்களை தவிர மற்றவர்கள் வேட்டி அணிவது குறைவே! அதுவே ஊரில் என்றால் ஆண்கள் சேர்ட் போடாமல் சந்தனம் வேறு பூசிக்கொண்டு வேட்டி கட்டிக்கொண்டு வருவார்கள்.

............

பெண்கள் பஞ்சாபி போடுவது அதிகம். இல்லை என்று நான் சொல்லவில்லை.நானும் பல இடங்களில் பார்த்திருக்கேன் திருமணமான பெண்கள் பஞ்சாபி தான் கூட போடுவார்கள். அது அவசரத்திற்க்கு இலகுவானது. (விதண்டாவாதமாக கதைப்பவர்கள் இதற்கு பதில் சொல்ல வேண்டியதில்லை!)

கோயில்களில், திருமண வீடுகளில் பார்த்தால் பெண்கள் சாறியும் கட்டிக்கொண்டு, குழந்தைகளையும் வைத்துக் கொண்டு கஷ்டப்படுவார்கள். குழந்தைகள் ?#8220;ட..பின்னால் சாறியோடு ?#8220;டணும். அதற்குள் சிலர் நகைகள் வேறு..அது கஷ்டம் தான். அதனால் தான் பெண்கள் கூடுதலாக பஞ்சாபி அணிகிறார்கள். சிலர் ஸ்டைலுக்கு செய்கிறார்கள் இல்லை என்று சொல்லல. ஆனால் பலர் இலகு என்பதற்காக தான் செய்கிறார்கள்.

இயல்பு வாழ்க்கைக்கு ஏற்ப உடைகளை மாற்றிக்கொண்டால்

கலாச்சாரமும் மாறி விட்டது என்று அர்த்தமில்லை என்பது எனது கருத்து.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனை தமிழ் இளைஞர்களுக்கு வேட்டி கட்டத் தெரியும்? தற்போதெல்லாம் குர்தாதான் எல்லோரும் உடுத்துகின்றார்கள்.. அதெல்லாம் சிலருக்கு பிரச்சினையில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது என்னவோ தமிழ் கலாச்சாரம் என்றால் உடனே பெண்களைப் பற்றித்தான் கதைக்கிறார்கள். பெண்கள் போடும் உடை..நடை..சமையல்..என்று கலாச்சாரம் பெண்களுக்கு மட்டும் தான் என்பது போல் இருக்கிறது.இங்கே திருவிழாக்களில் சுவாமி தூக்கும் ஆண்களை தவிர மற்றவர்கள் வேட்டி அணிவது குறைவே!

............

பெண்கள் பஞ்சாபி போடுவது அதிகம். இல்லை என்று நான் சொல்லவில்லை.நானும் பல இடங்களில் பார்த்திருக்கேன் திருமணமான பெண்கள் பஞ்சாபி தான் கூட போடுவார்கள். அது அவசரத்திற்க்கு இலகுவானது. (விதண்டாவாதமாக கதைப்பவர்கள் இதற்கு பதில் சொல்ல வேண்டியதில்லை!)

கோயில்களில், திருமண வீடுகளில் பார்த்தால் பெண்கள் சாறியும் கட்டிக்கொண்டு, குழந்தைகளையும் வைத்துக் கொண்டு கஷ்டப்படுவார்கள். குழந்தைகள் ஓட..பின்னால் சாறியோடு ஓடணும். அதற்குள் சிலர் நகைகள் வேறு..அது கஷ்டம் தான். அதனால் தான் பெண்கள் கூடுதலாக பஞ்சாபி அணிகிறார்கள். இயல்பு வாழ்க்கைக்கு ஏற்ப உடைகளை மாற்றிக்கொண்டால்

கலாச்சாரமும் மாறி விட்டது என்று அர்த்தமில்லை என்பது எனது கருத்து.

சாறி கட்டுற விதத்தில இருக்குது அது குழந்தை ஓட ஓடுறதும் ஓடாமல் விடுறதும். பாடசாலைகளில் எல்லாம் ஆசிரியைகள் சேலை கட்டித்தான் வருவார்கள். ஒரு போதும் சேலையோட அவர்கள் ஓடினதாக் கண்டதே இல்லை. ஒரு நாலு சேவ்ரி பின் அதைத் தடுத்திடும். பஞ்சாபியைப் போட்டு அதுக்கு ஒரு சால்வையைப் போட்டு அது பறந்து அடுத்தவைட மூஞ்சில அடிக்க...அது போதென்று துப்பட்டா அடிக்கடி சரிய அதை தூக்கி நிமித்தி..குழந்தை ஓட..குனிய நிமிர பொத்திப் பிடிக்க.. சினிமாவில காட்டுறது பார்க்கல்லையா... துப்பட்டாவும் பஞ்சாபியும் படுறபாடுகள்.. எவ்வளவோ கரைச்சல்...! :lol::unsure:

எத்தனை தமிழ் இளைஞர்களுக்கு வேட்டி கட்டத் தெரியும்? தற்போதெல்லாம் குர்தாதான் எல்லோரும் உடுத்துகின்றார்கள்.. அதெல்லாம் சிலருக்கு பிரச்சினையில்லை.

இதில ஆண் பெண் என்று கொண்டு நிற்க அல்ல கருத்து. கலாசார விழுமியங்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இருவருக்கும் உண்டு. ஆண்கள் செய்வது சரியென்று யாரும் சொல்லேல்ல. ஆண்களை விட பெண்கள் தான் துரிதகதியில பஷன் சோவில வாறது போல.. அடிக்கடி மாறிக்கிட்டு இருக்காங்க. அவங்க மனசும் அப்படித்தான் எண்டதால அப்படிப் போல. :P :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் ஆண்கள் கலாச்சாரத்தையும் அடையாளத்தையும் காக்க என்ன செய்கின்றார்கள் (மீசையை வளர்ப்பதைத் தவிர)?? விரும்பினால் ஜீன்ஸ்க்குள் கோமணத்தைப் பாச்சவேண்டியதுதானே..

பெண்கள்தான் கலாச்சாரத்கையும் அடையாளத்தையும் காப்பாற்றவேண்டும் என்ற சிந்தனை இருக்குமட்டும் சிலர் காவேலையில் நாய் ***ரம் போன மாதிரி ஏதாவது உளறுவார்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் ஆண்கள் கலாச்சாரத்தையும் அடையாளத்தையும் காக்க என்ன செய்கின்றார்கள் (மீசையை வளர்ப்பதைத் தவிர)?? விரும்பினால் ஜீன்ஸ்க்குள் கோமணத்தைப் பாச்சவேண்டியதுதானே..

பெண்கள்தான் கலாச்சாரத்கையும் அடையாளத்தையும் காப்பாற்றவேண்டும் என்ற சிந்தனை இருக்குமட்டும் சிலர் காவேலையில் நாய் ***ரம் போன மாதிரி ஏதாவது உளறுவார்கள்..

இதுதான் வழமையான உங்கள் கூச்சல். ஏற்கனவே அதை இங்கு சொல்லிட்டினம்.

கலாசார விழுமியங்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஆண்களுக்கும் உண்டு பெண்களுக்கும் உண்டு.

எந்தக் கலாசாரத்திலும் குறிப்பாக ஆடை அணிகலங்களில் பெண்களின் ஆதிக்கமே அதிகம். ஆண்களின் பசன் சோவில நாலு பேர் வந்தால் பெண்களின் பசன் சோவில 40 பேர் வருவார்கள். அணிகலங்கள் அணிவதும் பெண்கள் தான் அதிகம். பொதுவாக பெண்களின் மென்ராலிற்றி அப்படி. ஆண்கள் வேட்டி சட்டை என்றால் இப்போ பாண்டு சட்டை. இதைவிட்டு வேறைக்குப் போகல்ல. ஆனால் பெண்களின் நிலை அப்படியாகவா இருக்கிறது.

ஆண்கள் இப்பவும் வேட்டியை மடிச்சுக் கட்டுறாங்க இல்லை என்றில்லை. இடைல வேட்டியை கிழிச்சுக் கட்டல்ல..ஆனால் பெண்கள் சேலையைக் கிழிச்சு துப்பட்டாவாப் போடுறாங்க..!

இப்ப பஞ்சாபி போடுறதிலும் ஒரு ஸ்ரைல் இருக்கு. கீழ ஜீன்ஸைப் போட்டிட்டு மேல போடுறது பஞ்சாபி போல. அதுக்கு மேல துப்பட்டா...! தேவையா இந்தக் கூத்துக்கள். ஆண்கள் ஒன்றில் தமிழன் போல இல்ல வெள்ளைக்காரன் போல. பெண்கள் இடைல கணக்க...! அதுதான் கேட்கினம்..இதுகள் தேவையா. கட்டினா சாறி..இல்ல ஜீன்சைப் போடுங்க...! உங்க மனசு போல உடுப்பையும் மாத்திட்டு இருக்காதேங்க என்றாங்க..! :P :unsure:

Link to comment
Share on other sites

வெளிநாடுகளில் எங்கள் ஆண்களும் கலாச்சாரத்தை மறந்து காப்பிலி போல் உடை அணிந்து குரங்கு நடையும் நடந்து செல்கிறார்கள். வீடியோவில் பார்த்தேன். குளிர்நாடுகளில் அதற்கேற்ப உடைகளை தான் அணியணும், அதற்காக இரண்டு பேருக்கு முழு நீளக்காற்சட்டை தைக்கும் துணியில் ஒருவரே தைத்தால் அது எப்படி இருக்கும். அத்தோடு குரங்கு நடை. என்ன இது?

Link to comment
Share on other sites

ஐயா நெடுக்கால போவார்,

நீர் மாத்திரம் ஆணாக இருந்து எல்லா உரிமைகளையும் அனுபவித்துக் கொண்டு, தமிழ்ப் பெண்களை அய்யங்காரத்து அம்மாவின் சேலையை கட்டச்சொல்லி கட்டாயப்படுத்துவது சுத்த அபத்தம். விரும்பினால் சேலையை நீங்களே கட்டிக்கொள்ளுங்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாடுகளில் எங்கள் ஆண்களும் கலாச்சாரத்தை மறந்து காப்பிலி போல் உடை அணிந்து குரங்கு நடையும் நடந்து செல்கிறார்கள். வீடியோவில் பார்த்தேன். குளிர்நாடுகளில் அதற்கேற்ப உடைகளை தான் அணியணும், அதற்காக இரண்டு பேருக்கு முழு நீளக்காற்சட்டை தைக்கும் துணியில் ஒருவரே தைத்தால் அது எப்படி இருக்கும். அத்தோடு குரங்கு நடை. என்ன இது?

அதுவா.. துணி மிஞ்சிட்டாம் ஏன் வீணாக்குவான் என்றிட்டு அப்படிச் செய்யுறாங்க போல. நடையா.. அது குளிருக்கு மூட்டு வாதம். அதுதான் சரியாக நடக்க முடியுறதில்ல. ராப் வேற பாடுவினம். பெரிய நாய்ச் சங்கிலியை கழுத்தில மாட்டுவினம். அடேய் தம்பி இதுகள ஏண்டா செய்யுறியள் வாங்கடா வன்னிக்குப் போய் கோல்சரும் எல் எம் ஜி செயினும் போடுவம் எண்டால் ஆக்கள் பி எம் டபிள்யூவில பறந்திடுறாங்கள்..! :P :lol:

மதுக்கா நீங்கள் சொல்லுறது சரி..அதுவும் எங்கட கலாசார விழுமியத்தைப் பிரதிபலிக்கல்ல. பெண்கள் செய்யுறதும் பிரதிபலிக்கல்ல. இரண்டு பேரின்ர மென்றாலிற்றியும் அப்படிப் போய்க் கிட்டு இருக்கு. அதையேதான் சுட்டிக்காட்டினம்..! :lol::unsure:

Link to comment
Share on other sites

இதுதான் வழமையான உங்கள் கூச்சல். ஏற்கனவே அதை இங்கு சொல்லிட்டினம்.

கலாசார விழுமியங்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஆண்களுக்கும் உண்டு பெண்களுக்கும் உண்டு.

எந்தக் கலாசாரத்திலும் குறிப்பாக ஆடை அணிகலங்களில் பெண்களின் ஆதிக்கமே அதிகம். ஆண்களின் பசன் சோவில நாலு பேர் வந்தால் பெண்களின் பசன் சோவில 40 பேர் வருவார்கள். அணிகலங்கள் அணிவதும் பெண்கள் தான் அதிகம். பொதுவாக பெண்களின் மென்ராலிற்றி அப்படி. ஆண்கள் வேட்டி சட்டை என்றால் இப்போ பாண்டு சட்டை. இதைவிட்டு வேறைக்குப் போகல்ல. ஆனால் பெண்களின் நிலை அப்படியாகவா இருக்கிறது.

ஆண்கள் இப்பவும் வேட்டியை மடிச்சுக் கட்டுறாங்க இல்லை என்றில்லை. இடைல வேட்டியை கிழிச்சுக் கட்டல்ல..ஆனால் பெண்கள் சேலையைக் கிழிச்சு துப்பட்டாவாப் போடுறாங்க..!

இப்ப பஞ்சாபி போடுறதிலும் ஒரு ஸ்ரைல் இருக்கு. கீழ ஜீன்ஸைப் போட்டிட்டு மேல போடுறது பஞ்சாபி போல. அதுக்கு மேல துப்பட்டா...! தேவையா இந்தக் கூத்துக்கள். ஆண்கள் ஒன்றில் தமிழன் போல இல்ல வெள்ளைக்காரன் போல. பெண்கள் இடைல கணக்க...! அதுதான் கேட்கினம்..இதுகள் தேவையா. கட்டினா சாறி..இல்ல ஜீன்சைப் போடுங்க...! உங்க மனசு போல உடுப்பையும் மாத்திட்டு இருக்காதேங்க என்றாங்க..! :P :lol:

என்ன? வம்புக்கு இழுக்கிற மாதிரி இருக்கு? :unsure: :angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா நெடுக்கால போவார்,

நீர் மாத்திரம் ஆணாக இருந்து எல்லா உரிமைகளையும் அனுபவித்துக் கொண்டு, தமிழ்ப் பெண்களை அய்யங்காரத்து அம்மாவின் சேலையை கட்டச்சொல்லி கட்டாயப்படுத்துவது சுத்த அபத்தம். விரும்பினால் சேலையை நீங்களே கட்டிக்கொள்ளுங்கள்!

அப்ப எனிக் தமிழர் கலாசாரம் என்று பினாத்திறதை நிறுத்துங்கோ. நாங்கள் சொல்லேல்ல சேலை கட்டு என்று. ஜீன்ஸ் போடுறது என்றால் போடுங்க. பஞ்சாபி போடுறது என்றால் போடுங்க. தமிழர் பண்பாடு கலாசாரம் கட்டிக்காக்கிறம் என்று கதையளந்தியள்..அதைக் கேட்டு ஏமாற இங்க ஆக்களில்லை..! :P :lol:

என்ன? வம்புக்கு இழுக்கிற மாதிரி இருக்கு? :unsure: :angry:

பெண்களின் மென்ராலிற்றி அதுவேதான். பெண்கள் ஒரு ஆடையைத் தேர்வு செய்யவே ஆயிரம் ஆடை பார்ப்பார்கள்..ஏன் என்று விளக்குங்கோ பாப்பம். இப்படி கோவப்படுறனீங்கள்..! :P :lol:

Link to comment
Share on other sites

சேலை கட்டுவதுதான் தமிழ்க்கலாச்சாரமென்று எனக்கு இன்றைக்குத்தான் தெரியும். தகவலுக்கு நன்றி. நானும் தமிழ்க் கலாச்சாரத்தைக் காப்பாற்றுவதற்கு இன்றிலிருந்து வீட்டுக்கு சேலை கட்டப்போறன். உங்களிட்ட இருக்கும் பழைய சாரிகளை எனக்கு அனுப்பி வைத்தால் தமிழ் கலாச்சாரத்தை காப்பாற்ற பாடுபட்ட உத்தமன் என்று உங்களுக்கும் என்னுடன் சேர்த்து டாக்டர் பட்டம் தருவார்கள். சந்தோசம் தானே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சேலை கட்டுவதுதான் தமிழ்க்கலாச்சாரமென்று எனக்கு இன்றைக்குத்தான் தெரியும். தகவலுக்கு நன்றி. நானும் தமிழ்க் கலாச்சாரத்தைக் காப்பாற்றுவதற்கு இன்றிலிருந்து வீட்டுக்கு சேலை கட்டப்போறன். உங்களிட்ட இருக்கும் பழைய சாரிகளை எனக்கு அனுப்பி வைத்தால் தமிழ் கலாச்சாரத்தை காப்பாற்ற பாடுபட்ட உத்தமன் என்று உங்களுக்கும் என்னுடன் சேர்த்து டாக்டர் பட்டம் தருவார்கள். சந்தோசம் தானே?

ரெம்ப சந்தோசம். கலாசாரச் சமத்துவம் காத்த மாப்பிள்ளை..! :unsure::lol::lol:

Link to comment
Share on other sites

அப்ப எனிக் தமிழர் கலாசாரம் என்று பினாத்திறதை நிறுத்துங்கோ. நாங்கள் சொல்லேல்ல சேலை கட்டு என்று. ஜீன்ஸ் போடுறது என்றால் போடுங்க. பஞ்சாபி போடுறது என்றால் போடுங்க. தமிழர் பண்பாடு கலாசாரம் கட்டிக்காக்கிறம் என்று கதையளந்தியள்..அதைக் கேட்டு ஏமாற இங்க ஆக்களில்லை..! :P :unsure:

பெண்களின் மென்ராலிற்றி அதுவேதான். பெண்கள் ஒரு ஆடையைத் தேர்வு செய்யவே ஆயிரம் ஆடை பார்ப்பார்கள்..ஏன் என்று விளக்குங்கோ பாப்பம். இப்படி கோவப்படுறனீங்கள்..! :P :lol:

நான் அப்படியில்லை..போனமா, வந்தமா என்று கண்ணில் பட்டதை எடுத்து கொண்டு வந்திருவேன்... ஒரு பஞ்சாபி வாங்கும் காசுக்கு, நான் எனது உடை இரண்டு சோடியாவது வாங்கிடலாம். :P :P

அப்புறம், உடை வாங்க நிறைய நேரம் செலவழிப்பவர்கள், அனேகமானவர்கள், திருமணமானவர்கள்..அதாவது, ஏற்க்கனவே அவசரபட்டு ஒரு தப்பான selection செய்திட்டோமே, இனியாவது, இதையாவது,ஜாகிரதையா, சரியானதை தெரிவு செய்வோமே என்டு தான் மணிக்கணக்கா கடையில் மினக்கடுறவை போல! :P :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் அப்படியில்லை..போனமா, வந்தமா என்று கண்ணில் பட்டதை எடுத்து கொண்டு வந்திருவேன்... ஒரு பஞ்சாபி வாங்கும் காசுக்கு, நான் எனது உடை இரண்டு சோடியாவது வாங்கிடலாம். :P :P

அப்புறம், உடை வாங்க நிறைய நேரம் செலவழிப்பவர்கள், அனேகமானவர்கள், திருமணமானவர்கள்..அதாவது, ஏற்க்கனவே அவசரபட்டு ஒரு தப்பான selection செய்திட்டோமே, இனியாவது, இதையாவது,ஜாகிரதையா, சரியானதை தெரிவு செய்வோமே என்டு தான் மணிக்கணக்கா கடையில் மினக்கடுறவை போல! :P :P

இல்லையே நாங்கள் பார்த்த அளவில ஜென்சுக்கு உள்ள உடைகளின் அளவும் குறைவு உடைகளும் குறைவு. பெண்கள் பகுதிகளில் மட்டும் அதிகம். ஆட்களும் அதிகம். எப்ப பார் கிளறிக் கொண்டே நிற்பினம். இதில திருமணம் ஆனது ஆகாது என்று பெரிய வேறுபாடில்லை.

இருந்தாலும் நீங்கள் சொன்னபடி பார்த்தாலும் கூட திருமணம் ஆன பின்னர் கூட செலக்சன் சரியில்லை என்றால் ஆன பிறகும் கூட இன்னொன்றைப் பற்றி நினைக்கினம் ஒப்பிடீனம் என்றீங்கள்.இதைத் தான் சொன்னோம் பெண்களின் மனசு நிலையில்லாதது. ஆண்களினதை விட அடிக்கடி மாறுவது என்று..! அது அவர்களின் மென்ராலிற்றி. அதை வியாபார நிறுவனங்களும் தெரிந்து கொண்டுதான் பெண்களுக்கான தேர்வுகளை அதிகமாக்கி வைத்துள்ளன. அலங்காரப் பொருட்களிலும் பெண்களுக்கானவையே மிக மிக அதிகம்...! ஆக பெண்கள் தங்கள் இயல்பான அழகில் கூட திருப்திப்படக் கூடியவர்கள் அல்ல. மேலும் மேலும் போலி அழகால் தங்களை மெருகூட்ட வேண்டும் அல்லது மாற்றிக் கொண்டிருக்க வேண்டும் என்ற எண்ணப்பாட்டில் இருக்கிறார்கள் என்பதையே இது காட்டுகிறது.

அதேபோல் தான் அவர்களின் ஆடைத் தெரிவுகளும் மிக அடிக்கடி மாறிக் கொண்டே இருக்கிறது..! பெண்களோடு கலாசார விழுமியங்கள் நிலைக்கும் என்பது குறைவான சாத்தியப்பாடாகவே இருக்கிறது..! :P :lol:

Link to comment
Share on other sites

இப்ப எல்லாம் சாறியில் தான் பஞ்சாபி தைக்கிறது அப்ப எதுவும் ஓகே. :D :P :P

சாறி எங்களுடைய கலாச்சார உடை தான் ஆனால் பஞ்சாபியை விட சாறி தான் கவர்ச்சியான உடை எனவே சில முக்கிய நிகழ்வுகள் தவிர்த்து மற்றய இடங்களுக்கு பஞ்சாபி அணிவதில் தப்பில்லை. :lol:

Link to comment
Share on other sites

தலைப்பை பாத்திட்டு நானும் யாரோ பஞ்சாபி காரர் சேலையை விழுங்கிட்டாராக்கும் எண்டு ஒடிவந்து பாத்தன் உள்ளை என்னவெண்டா ஏதோ பிரச்சனை போகுது :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்பார்ந்த பொதுமக்களே!கொஞ்சம் யோசிச்சுபாருங்கோ?எங்கடை பொம்புளையள் பஞ்சாபியோடை நிக்கிறது எவ்வளவோ நல்ல விசயம்.இதையும் மிஞ்சி எங்கடை தாய்மார்கள் வெள்ளைக்காறியள் உடுத்துகின்ற உடுப்புகளை இவையும் உடுத்த வெளிக்கிட்டால் நிலமை மோசமாகிவிடும்.எல்லாம் சோத்து உடம்புகளப்பா.எங்கடை தாய்க்குலங்கள் வெள்ளையளுன்ரை உடுப்புகளோடை கோயில் குளங்களுக்கு வந்தால் ..........................??????????????????? என்ரை சிவனே.பஞ்சாபி நூறு மடங்கு நல்லதப்பா!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு ஜீன்ஸ் ஒரு top விசயம் முடிஞ்சுது..

பஞ்சாபியும் பாவாடையும்..

இனத்தின் பெருமைகளை அறிவியலில் பொருளாதாரத்தில் அரசியலில் அவற்றின் உயர்வில் காட்டுங்கோ...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்த அமைப்பு இன்னும் தற்பொழுது உள்ள (கரண்ட் ரென்ட்) நிலைமைகளை அறிந்து கொள்ள வில்லை என நினைக்கிறேன் '''' எங்கன்ட ஆட்களும் எலன் மாஸ்க் உடன் தொடர்பில் இருக்கினம் ...யூ ரியூப்பில் தான் நாங்கள் பிரச்சாரம் செய்கின்றோம் நாலு மைக் இருந்தால் போதும் அத்துடன் சந்தையில் நாலு சனத்திட்ட பேட்டி கண்டு அதை போட்டா காணும் என்ற நிலையில் இருக்கிறோம்...  அந்த காலத்திலயே வேலியில் நின்று விடுப்பு கேட்டு வாக்கு போடுற சன‌ம் .....இப்ப குசினிக்குள்ள விடுப்பு வருகிறது சும்மாவா இருப்பினம் .... இனி வரும் காலங்களில் வாக்குசாவடிக்கு போகாமல் அடிச்ச ஆட்டிறைச்சி கறி சமைச்சு கொண்டு வீட்டிலிருந்து வொட்டு போடும் நிலை வந்தாலும் வரும் 
    • தமிழ்த் தேசியம் உயிர்ப்புடன் இருக்க, முதலில்,  தமிழனின் குடிப்பரம்பல்  வடக்கு கிழக்கில் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். அது உந்தப் புலி வால்களுக்குப் புரிவதில்லை.  ☹️
    • தமிழ் தேசியத்துக்கு அர்த்தம் தெரியாத சாணக்கியன் நான் ஒரு முன்னாள் போராளி . விடுதலைப்புலிகள் அமைப்பில் துப்பாக்கி தூக்கிய ஒரு நபர் என்று எல்லோருக்கும் தெரியும். துப்பாக்கி தூக்குவது என்பது ஒயில் போட்டுவிட்டு துப்பாக்கி சாத்திவைப்பது அல்ல. துப்பாக்கி என்றால் சுடும். எவரை சுடுவது என்பது ஒரு தர்மம். இவ்வாறான துப்பாக்கிகளை எமக்கு யார் கொடுத்தார்கள் என்பது இவ்விடத்தில் முக்கியம்.யார் இவ்வாறான துப்பாக்கிகளை தூக்குவதற்கு எமக்கு சந்தர்ப்பத்தை உருவாக்கியவர்கள். இவ்வாறான விடயங்கள் எல்லாம் மறந்துபோய் தமிழ் தேசியத்துக்கு அர்த்தம் தெரியாத சாணக்கியன் எல்லாம் வந்து எமது மக்களுக்கு தேசியத்தை கற்பிக்கின்ற சந்தர்ப்பத்தை கொடுத்திருக்கிறார்கள் என்பதை அறிந்து நாங்கள் வெட்கப்படுகின்றோம்.   என தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன்(பிள்ளையான்) தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி வேப்பையடி 15 ஆம் கிராமம் பகுதியில் விக்னேஸ்வரன் ஆதரவணி தலைமையில் நாவிதன்வெளி கிராம பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் ஆதரவாளர்களுடனான சந்திப்பு நாவிதன்வெளி பிரதேச ஆலயங்களின் நிர்வாகிகள் விளையாட்டு கழகங்கள் கட்சியின் பிரதேச மற்றும் கிராமிய குழுக்களின் ஒருமித்த ஒழுங்குபடுத்தலில் ஆசிரியர் மு.விக்னேஸ்வரனை ஆதரித்து நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும், முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது, ஜேவிபி அரசுடன் இணைந்து அமைச்சரவையில் அங்கம் வைப்பது பற்றி சுமந்திரன் சாணக்கியனும் இன்று சொல்கிறார்கள்.இவ்வாறான தடம் புரள்வு இவர்களுக்கு எவ்வாறு வந்தது. இந்த மக்களை அழித்த ஒரு கட்சி அது. இவ்வாறு இருந்த அக்கட்சி எம்மைப் பார்த்து முன்னாள் ஆயுதக் குழுக்கள் என அவர்கள் கூறுகின்றார்கள். அமைச்சரவையில் ஆயுதக் குழுவை சேர்க்க மாட்டார்களாம் சேர்க்கவும் விடமாட்டார்களாம்.நான் முன்பே கூறியிருக்கின்றேன் அரசியலில் நிரந்தரம் ஒன்றுமில்லை அதாவது நண்பனும் இல்லை எதிரியும் இல்லை.அதே போன்று இவர்களுக்கு சொல்ல வேண்டிய விடயம் ஒன்று இருக்கிறது. நான் ஒரு முன்னாள் போராளி . விடுதலைப்புலிகள் அமைப்பில் துப்பாக்கி தூக்கிய ஒரு நபர் என்று எல்லோருக்கும் தெரியும். துப்பாக்கி தூக்குவது என்பது ஒயில் போட்டுவிட்டு துப்பாக்கி சாத்தி வைப்பது அல்ல. துப்பாக்கி என்றால் சுடும். எவரை சுடுவது என்பது ஒரு தர்மம்.இவ்வாறான துப்பாக்கிகளை எமக்கு யார் கொடுத்தார்கள் என்பது இவ்விடத்தில் முக்கியம்.யார் இவ்வாறான துப்பாக்கிகளை தூக்குவதற்கு எமக்கு சந்தர்ப்பத்தை உருவாக்கியவர்கள். இவ்வாறான விடயங்கள் எல்லாம் மறந்து போய் தமிழ் தேசியத்துக்கு அர்த்தம் தெரியாத சாணக்கியன் எல்லாம் வந்து எமது மக்களுக்கு தேசியத்தை கற்பிக்கின்ற சந்தர்ப்பத்தை கொடுத்திருக்கிறார்கள் என்பதை அறிந்து நாங்கள் வெட்கப் படுகின்றோம். ஆகவே எமது அன்பு மக்களே இவர்கள் காலத்துக்கு காலம் தேவைக் கேற்றால் போல் பல்வேறு புரளிகளை எழுப்புவார்கள். இது தவிர பிள்ளையானுக்கும் ஈஸ்டர் குண்டு தாக்குதலுக்கும் சம்பந்தமாம். சாணக்கியன் சொல்கின்றார். ஒரு இஸ்லாமிய மகன் சொல்லியிருந்தால் பரவாயில்லை. உங்களுக்கு தெரியும்.தெமட்டகொட என்ற இடத்தில் உள்ள ஒரு தொழிலதிபர் ஒருவர் ஒரு ஹோட்டலில் இறந்த இடம்பெற்ற குண்டு தாக்குதலில் சம்பந்தப்பட்டிருக்கின்றார். அவர் கடந்த கால பாராளுமன்ற தேர்தலில் ஜேவிபி கட்சி சார்பாக தேசிய பட்டியலில் இருந்திருக்கின்றார்.பெயரை மறந்துவிட்டேன்.அவர் ஒரு பெரிய வியாபாரி.அவரது இரு மகன்களும் அச்சம்பவத்தில் இறந்து விடுகின்றார்கள். இவ்வாறு இறந்தவர்களில் ஒருவரான இன்ஷாப் என்பவரின் தெமடகொட வீட்டுக்கு காவல் அதிகாரிகள் வருகின்ற போது அந்த வீட்டில் இருந்த பெண்மணி இரண்டு குழந்தைகளோடு தனது வயிற்றில் உள்ள மற்றுமொரு குழந்தையுடன் வெடித்து சிதறுகிறார். எவ்வாறு இந்த சம்பவம் நடக்கின்றது. நன்றாக படித்த ஒரு பொறியியலாளரின் மனைவி . பணத்தில் உயர்வான குடும்பம். இவ்வாறு இறந்த போகின்றது என்றால் இந்த குடும்பத்தினரை பிள்ளையான் மூளைச்சலவை செய்வாரா. விடுதலைப் புலிகளுக்கு கரும்புலியாகி வெடிப்பதற்கு 30 ஆண்டுகள் சென்றிருக்கின்றது.இந்த முப்பது ஆண்டுகளுக்கு பின்னர் போர்க் என்பவர் மாங்குளத்தில் முதலாவது கரும்புலி தாக்குதல் மேற்கொண்டார்கள். இவ்விடத்தில் இந்த விடயத்தை ஏன் சொல்கின்றேன் . இவ்வாறான வரலாறுகள் தெரியாத சாணக்கியன் போன்றவர்கள் பசப்பு வார்த்தைகளை தொடர்ச்சியாக கூறி வருகிறார்கள். அதற்கு ஊதுகுழலாக எம்மோடு இருந்த நாங்கள் நம்பி இருந்த மருதமுனை பகுதியைச் சேர்ந்த முன்னாள் ஒரு அமைப்பின் தலைவர் பத்மநாபாவுடன் இந்தியாவில் மரணித்த ஒருவரின் மகன் ஆசாத் மௌலானா இருந்தார். அவரை நம்பிக்கையானவர் என்று நான் நன்றாக பார்த்தேன். இந்த உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலின் பின்னர் அவர் உயிர் வாழ்வதற்காக இலங்கையில் சில பெண்களோடு பிரச்சனை என்று வெளிநாட்டிற்கு சென்றார். அவர் அங்கு சென்று அரசியல் தஞ்சம் பெறுவதற்கு எடுத்த ஆயுதம் ஈஸ்டர் குண்டு தாக்குதலில் பிள்ளையானுக்கு தொடர்பு உள்ளது என ஒரு பொய்யை உருவாக்கினார். அதனை சர்வதேச ரீதியாக இயங்கும் சனல் 4 என்ற ஒரு ஊடகமும் என்னை அரசியல் ரீதியாக அழிக்க துடிக்கின்ற சில சக்திகளும் விடயத்தை தூக்கிப் பிடித்தார்கள். இதனால் சனல் 4 என்ற ஊடகம் இதனால் பிரபல்யம் அடைந்தது.மிக அண்மையில் ஊடகவியலாளர் சந்திப்பில் உதய கன்வன்வில என்பவர் சொல்லியிருக்கின்றார். ஜனாதிபதி ஆணைகுழு அறிக்கை சொல்லி இருக்கின்றது. எல்லாம் பச்சப்பொய். இதனை விசாரிக்க முடியாது . அதே போன்று குறித்து சம்பவத்தை வெளியிட்ட சனல் 4 என்ற ஊடகம் அந்த செய்தியினை முற்றாக நீக்கி இருக்கின்றது. இவ்வாறான விடயத்தை யாருமே வெளியில் சொல்வது கிடையாது.ஏனென்றால் அரசியலுக்காக சகல பிரச்சினைகளை எல்லாம் இழுத்து விடுவார்கள். கோடீஸ்வரன் என்பார்கள் துவக்கு வைத்திருந்தவர் என்பார்கள்.   பிள்ளையானை சிறைச்சாலையில் அடைக்கப்படுவார் என்பார்கள். மட்டக்களப்பில் சில அம்மாமார் கூறியிருக்கிறார்கள். பிள்ளையான் உங்களை சிறையில் அடைத்திருக்கின்ற போது தான் வாக்குகள் நாங்கள் இட்டு வெளியே எடுத்து இருக்கின்றோம். இனியாவது அடைக்கப் போகிறார்கள்? ஏனெனில் உளவியல் ரீதியாக எம்மை யாழ்ப்பாண சக்திகளும் சவால் விடுகின்றோம் என்பதற்காககிழக்கு மாகாணத்தில் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்காத சில அரசியல்வாதிகளும் எம்மை அழிக்க நினைக்கின்றார்கள். அந்த சக்திகள் எல்லாம் எமது மக்களுக்கு எதிரானவர்கள். நாம் இந்த மக்களுக்கு உண்மையாக நேர்மையாக 16 வயதில் இருந்து இன்று 50 வயது வரைக்கும் எமது பணிகளை சிறப்பாக செய்து வந்திருக்கின்றோம் அதில் நாங்கள் எங்கும் பிழை விட்டது கிடையாது. யாருக்கும் அநியாயம் செய்தது கிடையாது எவரையும் ஏமாற்றியது கிடையாது ஆனாலும் இந்த அரசியல் சூழலில் எதிர்பார்ப்புடன் இருக்கின்ற மக்களுக்கு ஆங்காங்கே இருக்கின்ற சிறு சிறு பிழைகளை வைத்துக்கொண்டு பெரிதாக உருவாக்குகின்றார்கள். ஆனால் இக்காலத்தில் பொறுப்பு மிக்க அரசியல் கட்சி ஒன்றை தலைவராக எமது பணி கிழக்கு மாகாணம் பூராகவும் விஸ்தரிக்கப்படும். அதில் ஒரு அங்கமாக இந்த தேர்தலை நான் பார்க்கின்றேன். இந்த தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் வெற்றி என்பது கிழக்கு தமிழர்களின் வெற்றியாகும். ஆதித்தமிழன் உறுதியாக வாழ வேண்டும் என்றால் நாங்கள் எல்லோரும் ஒன்று பட்டு கிழக்கு மாகாணத்திற்கான தனித்துவமான அரசியலை முன்னெடுக்கின்ற தமிழ் மக்கள் விடுதலை புலிக் கட்சியை பாதுகாத்து தூக்கிப் பிடித்து அதனை வெற்றி பெறச் செய்ய வேண்டும் அந்த ஆணையிலிருந்து அதிகாரத்துடன் நாங்கள் பேரம் பேச வேண்டும். அதற்கான ஒரு சந்தர்ப்பத்தை அம்பாறை வாழ் மக்கள் எமக்கு அளியுங்கள் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.   https://akkinikkunchu.com/?p=298338   முதலாவது கரும்புலி கப்டன் மில்லர் என்று தெரியாத அளவுக்கு பிள்ளையான் இருக்கின்றார்!
    • "தாய்மை"  "காதல் உணர்வில் இருவரும் இணைய  காதோரம் மூன்றெழுத்து வார்த்தை கூற காதலன் காதலி இல்லம் அமைக்க காமப் பசியை மகிழ்ந்து உண்ண காலம் கனிந்து கருணை கட்டிட   காணிக்கை கொடுத்தாள் 'தாய்மை' அடைந்து!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்] 
    • அவங்கள் விரும்பினால் வைரம் கொடுப்பாங்கள், அவையளின்ட அரசியலுக்கு விருப்பமில்லையென்றால் பித்தளை ,வெண்கலம் கொடுப்பாங்கள் .... மாலைதீவுடன் பகைத்து கொண்டு இந்தியா லட்சதீவில் சுற்றுலா துறையை விரிவு படுத்திய மாதிரி இதுவும் அரசியல் தான்...
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.