Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழருடன் முஸ்லிம்கள் இணைந்து வாழ முடியாவிடின் கிழக்கு பறிபோவது திண்ணம்-சம்பந்தன் எச்சரிக்கை

Featured Replies

தமிழருடன் முஸ்லிம்கள் இணைந்து வாழ முடியாவிடின் கிழக்கு பறிபோவது திண்ணம்-சம்பந்தன் எச்சரிக்கை
 
 
தமிழருடன் முஸ்லிம்கள் இணைந்து வாழ முடியாவிடின் கிழக்கு பறிபோவது திண்ணம்-சம்பந்தன் எச்சரிக்கை
தமிழ் மக்களுடன் இணைந்து வாழ முஸ்லிம் மக்கள் முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ள சம்பந்தன் இது நிறைவேறாவிட்டால், கிழக்கு மாகாணம் தமிழ் பேசும் மக்களிடமிருந்து பறிபோவதை யாராலும் தடுக்க முடியாது போய்விடும் என  எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 
ஏற்கனவே தமிழ் பேசும் மக்களின் ஏராளமான காணிகள் அபகரிக்கப்பட்டு சிங்களக் குடி யேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் திருகோணமலைத் துறைமுகத்தை மைய ப்படுத்தி அரசாங்கம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள பாரிய அபிவிருத்திக்காக பல்லா யிரக்கணக்கான சிங்கள மக்கள் திருகோணமலையில் குடியமர்த்தப்படவுள்ளதாகவும் அவர்  தெரிவித்துள்ளார். 
 
வடக்கு முஸ்லிம் சிவில் சமூகத்தின் ஏற்பாட்டில்  தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் விசேட கலந்துரையாடலொன்று இன்று கொழும்பிலுள்ள ஹெக்டர் கொப்பேகடுவ ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெற்றது. 
 
இதில் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த பல தரப்பினர் கலந்துகொண்டு வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் உட்பட பல பிரச்சனைகள் தொடர்பில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவருடன் விரிவாக ஆராய்ந்தனர். 
 
இதன்போது தமிழ் மக்கள் தமது உரிரிமைக்காக மேற்கொண்ட சாத்வீகப் போராட்டம் முதல் ஆயுதப் போராட்டம் வரை, முஸ்லிம்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்யாது ஒதுங்கியிருந்ததையும் பகிரங்கமாக சுட்டிக்காட்டிய சம்பந்தன், அதற்காக தொடர்ந்தும் அவ்வாறு பிரிந்து செயற்பட முடியாது என்றும் தெரிவித்துள்ளார். 

http://onlineuthayan.com/news/19556

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம்கள், தமிழர்கள் சிங்களவர்களுடன் இணையப் போவதில்லை என்ற எண்ணத்தில் அடாவடித்தனம் பண்ணுகின்றனர்.

ஆனால் உலகளாவிய ரீதியாக முஸ்லீம்கள் எதிர்கொள்ளும் சவால்களால், தமிழர்களுடன் இணைந்து தமிழ் பேசும் மக்களாக அடையாளம் காணமறுத்தால் பாதிப்பு அவர்களுக்கே.

தமிழர்களுக்கு இனி இழக்க எதுவும் இல்லை. அவர்களுக்கோ... இழக்க பல உண்டே.

  • கருத்துக்கள உறவுகள்

மத்திய கீழக்கின் எண்ணை வளமும், அதனால் குவிந்த செல்வமும் இருக்கும்வரையில், முசுலீம்கள் எங்கே அவலப்பட்டாலும், பாதுகாப்பும் அவர்களைத் தேடிவரும்.    

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Paanch said:

மத்திய கீழக்கின் எண்ணை வளமும், அதனால் குவிந்த செல்வமும் இருக்கும்வரையில், முசுலீம்கள் எங்கே அவலப்பட்டாலும், பாதுகாப்பும் அவர்களைத் தேடிவரும்.    

பான்ஜர்,

அதெல்லாம் பழம் கதை. சவூதியான சவூதியே பொருளாதாரப் பிரச்சணையால் திணறுகிறது. 

மேலும் மத்திய கிழக்கில் இருந்து பணம் அனுப்பினால்... சாம் மாமாவில் இருந்து லோக்கல் உளவு வரை ஏன் எதற்கு என்று கேட்டுத் துளைப்பதால், பிச்சையே வேண்டாம், நாயை பிடி நிலை.

அதனால் தான் சொன்னேன், உலகளாவிய ரீதியாக முஸ்லீம்கள் எதிர்கொள்ளும் சவால்களால், அவர்களது நியாயமான கோரிக்கைகள் கூட மறுக்கப்படும் நிலையில்... தமிழருக்கு ஆப்பிறுக்கலாம் என்று றிசாட் போன்ற 'படித்த' வர்கள் நினைப்பது புத்திசாலித்தனம் இல்லை.

  • தொடங்கியவர்
தமிழ்பேசும் மக்களிடையே ஒற்றுமை இல்லாவிடின் ‘கிழக்கு பறிபோகும்’
 
 

article_1477888067-aa.jpgபேரின்பராஜா திபான்

“அரசியல் தீர்வைக்காண, நாம் முயல்கிறோம். பிரச்சினைகளைத் தீர்க்க, நிறைவேற்று அதிகாரங்கள் எமது கைகளுக்குக் கிடைக்கவேண்டும். அதைப் பெறவே, அரசியல் தீர்வு சம்பந்தமான ஆக்கபூர்வமான பேச்சுக்களில் நாம் ஈடுபடுகிறோம். அதிகாரங்கள் இருந்தாலேயே பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் கிட்டும்” என, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான
இரா. சம்பந்தன் தெரிவித்தார். 

“வடக்கு, கிழக்கில், தமிழ் பேசும் மக்கள் ஆட்சிபுரிய வேண்டும். ஒற்றுமை இல்லாவிடின், கிழக்கு மாகாணம் விரைவில் பறிபோகும்” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.  

“வடக்கு முஸ்லிம்களுக்கும் தீர்வு அவசியம்” எனும் கருப்பொருளில், வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 26ஆவது ஆண்டு நிறைவின் நினைவாக, நேற்று ஞாயிற்றுக்கிழமை (30) நடத்தப்பட்ட விசேட சந்திப்பில், விசேட விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், மேலும் கூறியதாவது, “யாரால் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டனரோ, அவர்களால், தமிழர்களும் வெளியேற்றப்பட்டனர். அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுக்கும் எல்.ரீ.ரீ.ஈ அமைப்புக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தம், 1995ஆம் ஆண்டு ஏப்ரல் 18ஆம் திகதி முடிவுக்கு வந்தது. அப்போது, குடாநாட்டிலிருந்த தமிழர்கள், வன்னிக்கு வெளியேற்றப்பட்டனர். இதேபோன்று, யுத்தத்தின் போதும், வடக்கின் ஏனைய மாவட்டங்களிலிருந்து தமிழ் மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

தமிழர்களும் திருப்தியற்ற நிலையிலேயே வாழ்கின்றனர். வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில், வடக்கு முதலமைச்சருடனும் புனர்வாழ்வு அமைச்சருடனும் கலந்துரையாடி, ஒழுங்குகளை மேற்கொள்ளவேண்டும். 

ராஜபக்ஷவின் ஆட்சியிலும் தற்போதைய ஆட்சியிலும், ஐந்து - ஆறு முஸ்லிம் அமைச்சர்கள் இருந்தும் ஏன், பல விடயங்களைச் செய்ய முடியாதுள்ளது. இதற்குத்தான், ஆட்சியதிகார முறை மாற்றப்பட்டு, சமஷ்டி முறை வரவேண்டும் என, தந்தை செல்வா, 70 ஆண்டுகளுக்கு முன்னரே கூறினார். 

நாம், சாத்வீக ரீதியாக அரசியல் ரீதியாக, ஜனநாயக ரீதியாக, ஆயுத ரீதியாகப் போராடினோம். தற்போது, இராஜதந்திர ரீதியாகப் போராடுகிறோம். இந்தப் போராட்டங்களில் முஸ்லிம் தலைவர்களின் பங்களிப்பு குறைவாகவே உள்ளது.  

முஸ்லிம்களை நாங்கள் குறைகூறவில்லை. அவர்கள், வடக்கு, கிழக்கிலும், நாட்டின் எப்பாகத்திலும் வாழ உரித்துடையவர்கள். எனினும், முஸ்லிம் தலைவர்கள், போராட்டங்களுக்கு ஒத்துழைப்புத் தரவில்லை. 

ஜெனீவாத் தீர்மானங்கள் காரணமாக, இலங்கை அரசுக்கு அழுத்தங்கள் காணப்பட்டன. 2012ஆம் ஆண்டு தீர்மானத்துக்கு நாங்கள் உழைத்துக்கொண்டிருக்க, ராஜபக்ஷவுக்கு ஆதரவான முஸ்லிம் தலைமைகள், எங்களுக்கு எதிராகப் பிரசாரம் செய்தனர். 

வடக்கிலும் கிழக்கிலும், தமிழர்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாகச் செயற்படவேண்டும். வடக்கு, கிழக்கில் தமிழ் மொழி முக்கியமான மொழியாக இருக்கவேண்டும். இந்தத் தீவில், அங்கிகரிக்கப்பட்ட மொழியாக தமிழ் மொழி இருக்க வேண்டும். இதைச் சிங்களத் தலைவர்களும் ஏற்றுள்ளனர்.  

தமிழ்பேசும் பிராந்தியம், தமிழ் பேசும் பிராந்தியமாகவே தொடர வேண்டும். மதம், மொழி, கலாசாரம், பண்பாடுக்கு முன்னுரிமை வேண்டும்.  வடக்கு, கிழக்கில் தமிழ் பேசும் மக்கள் ஆட்சிபுரிய வேண்டும். ஒற்றுமை இல்லாவிடின், கிழக்கு மாகாணம் விரைவில் பறிபோகும்.  

அரசியலமைப்பின் உள்ளடக்கங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, கணிசமான வளங்களை, ஏனைய மக்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்திசெய்ய, அதிகாரம் பங்கீடு செய்யப்பட்டு, ஆட்சியமைக்கப்படவேண்டும். 

முஸ்லிம்கள், தமிழர்களையோ தமிழர்கள், முஸ்லிம்களையோ ஏமாற்ற முடியாது என்பதைச் சிந்தியுங்கள், அதேநேரத்தில், எம்முடன் வாழும் சிங்களவர்களும் அநீதி செய்யாது வாழவேண்டும்.

நான், யாழ். கட்டளைத் தளபதியுடன், இன்று (நேற்று) மீள்குடியேற்றம் சம்பந்தமாகப் பேசினேன். நாளை (இன்று) யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி, காணிகளை விடுவிக்கவுள்ளார்” என்றார். 

வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பிலான நாளாந்தப் பிரச்சினைகளுக்கான தீர்வு மற்றும் நீண்டகால அரசியல் பிரச்சினைகளுக்கான தீர்வு தொடர்பில், வடக்கு முஸ்லிம் சிவில் சமூகத்தால் வினவப்பட்டபோது, 

“முதலமைச்சர் அலுவலகத்தில் பிரதம செயலாளர் ஒருவரையும் புனர்வாழ்வு அமைச்சில் உதவிச் செயலாளர் ஒருவரையும் நியமித்து, செய்ய வேண்டிய கருமங்கள் தொடர்பில், அவர்களுக்குத் தெரிவிக்க முடியும். உங்களுடைய தரப்பிலிருந்து 3 பேரைத் தெரிவுசெய்யுங்கள்” என சம்பந்தன் எம்.பி கூறினார். 

அதற்குப் பதிலளித்த முன்னாள் எம்.பியான ஹுனைஸ் பாரூக், மாவட்டத்துக்கு ஒருவர் என்ற அடிப்படையில், 5 பேரை நியமிக்குமாறு கோரியதற்கிணங்க, சம்பந்தனும் ஒத்துக்கொண்டார். 

http://www.tamilmirror.lk/185017/தம-ழ-ப-ச-ம-மக-கள-ட-ய-ஒற-ற-ம-இல-ல-வ-ட-ன-க-ழக-க-பற-ப-க-ம-

  • தொடங்கியவர்

வடக்­குடன் இணை­யா­விடின் கிழக்கு பறி­போய்­விடும்

p13-76001bc025b416cd71719a93465eabc423100bd1.jpg

 

இரண்டு சமூ­கத்­தி­னரும் ஏற்­றுக்­கொள்ளும் வகையில் தீர்வை அடை­ய­வேண்டும் என்­கிறார் சம்­பந்தன்  

(எம்.சி.நஜி­முதீன்)

வடக்கும் கிழக்கும் இணை­யாது பிரிந்து செயற்­ப­டு­மாயின் கிழக்கு மாகாணம் விரைவில் பறி­போய்­விடும். அம்­மா­கா­ணத்தில் தமிழ், முஸ்­லிம்­க­ளுக்கு உரிமை இல்­லாத நிலை ஏற்­பட்­டு­விடும். எனவே அது பறி­போ­வ­தற்கு விடக்­கூ­டாது. ஆகவே வடக்கு, கிழக்கு இணைக்­கப்­பட வேண்டும் என்ற நிலைப்­பாட்டில் நாம் உள்ளோம். பேச்­சு­வார்த்  

­தையின் மூலம் இரு சமூ­கத்­தி­னரும் ஏற்­றுக்­கொள்ளும் வகையில் தீர்வை முன்­னெ­டுக்க வேண்டும் என எதிர்க்­கட்சித் தலை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் தெரி­வித்தார்.

வட மாகாண முஸ்­லிம்கள் வெளியேற்­றப்­பட்ட நினைவு நாள் நிகழ்வு  வடக்கு முஸ்லிம் சிவில் சமூ­கத்தின் ஏற்­பாட்டில் நேற்று கொழும்பில் நடை­பெற்­றது. அதில் கலந்­த­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே சம்­பந்தன் இதனைத் தெரி­வித்தார்,  

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

வடக்கு மாகா­ணத்­தி­லி­ருந்து 1990 ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாதம் 10 திகதி முஸ்­லிம்கள் வெ ளியேற்­றப்­பட்­ட­மை­யா­னது ஒரு­போதும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாத விட­ய­மாகும். அது ஒரு பார­தூ­ர­மான விடயம். அவ்­வி­த­மான கருமம் இடம்­பெற்­றி­ருக்­கக்­கூ­டாது. அதனை ஒரு துன்­பியல் சம்­பவம் என்று கூறு­வதன் மூலம் மாத்­திரம் அதற்­கான தீர்வு காண முடி­யாது.

எனினும் மீள்­கு­டி­யேற்­றத்­திற்­கான நடை­மு­றைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன.. இருந்­த­போ­திலும் அதில் உறு­தி­யான நிலை பின்­பற்­றப்­ப­டு­வ­தாகக் தெரி­ய­வில்லை. எவ்­வா­றி­ருந்­த­போதும் அம்­மக்கள் மீள்­கு­டி­யேற்­றப்­பட வேண்டும். அதில் மாற்று கருத்து இருக்க முடி­யாது.

மேலும் யாரால் முஸ்­லிம்கள் வெளி­யேற்­றப்­பட்­டார்­களோ அவர்கள் தமிழ் மக்­க­ளையும் வெளி­யேற்­றி­னார்கள். 1995 ஆம் ஆண்டு முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்­கவின் அர­சுக்கும் விடு­த­லைப்­பு­லி­க­ளுக்­கு­மி­டையில் ஏற்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த யுத்த நிறுத்த ஒப்­பந்தம் 1995 ஆம் ஆண்டு சித்­திரை மாதம் 18 ஆம் திகதி முடி­வுக்கு வந்­தது. அதைத்­தொ­டர்ந்து சில இரா­ணுவ முயற்­சிகள் குடா­நாட்டில் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்­த­போது அங்கு வாழ்ந்த சகல மக்­களும் வெளி­யேற்­றப்­பட்­டார்கள் .எனவே யுத்த காலத்தில் வெ ளியேற்­றப்­பட்ட மக்­களின் மீள்­கு­டி­யேற்ற விடயம் திருப்­தி­யற்ற நிலை­யில்தான் உள்­ளது.

இது தொடர்பில் நாம் பாரா­ளு­மன்றில் பேசிய போதிலும் இன்னும் உறு­தி­யான தீர்­மா­னத்­தற்கு வர­வில்லை. யாழ். இரா­ணுவத் தள­ப­தி­யுடன் இன்று காலை­யிலும் பேசினேன். மக்கள் தமது காணி­களை மீளப்­பெ­றா­ததன் கார­ண­மாக கஷ்­டங்­களை எதிர்­நோக்­கு­வ­தனை அவரும் ஏற்­றுக்­கொண்டார். எனவே நாளை (இன்று) ஜனா­தி­பதி யாழ்ப்­பாணம் செல்­கின்­ற­போது சில கரு­மங்கள் நடை­பெறும் என எதிர்­பார்க்­கிறேன்.

மீள்­கு­டி­யேற்ற விட­யத்தில் நாம் அனை­வரும் இணைந்து செயற்­பட வேண்டும். எனவே வட­மா­கண முத­ல­மைச்சர், மீள்­கு­டி­யேற்றம் மற்றும் புனர்­வாழ்வு அமைச்­ச­ருடன் பேசி வட மாகா­ணத்­தி­லி­ருந்து வெளி­யேற்­றப்­பட்ட முஸ்­லம்­களின் பிரச்­சி­னை­களை தீர்ப்­ப­தற்கு முயற்­சிக்க வேண்டும். அத்­துடன் சகல அர­சாங்­கங்­க­ளிலும் பல முஸ்லிம் அமைச்­சர்கள் அங்கம் வகித்து வந்­துள்­ளனர். வகிக்­கின்­றனர். அவ்­வா­றெனில் அவர்­களல் ஏன் முஸ்­லிம்­களின் மீள்­கு­டி­யேற்­றத்தை செய்ய முடி­யாமல் உள்­ளது?

 1949 ஆம்­ஆண்டு தந்தை செல்­வ­நா­யகம் இந்த நாட்டின் ஆட்சி அதி­கார முறைமை மாற்­றப்­பட வேண்டும். சமஷ்டி முறை ஏற்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்ற கோரிக்­கையை முன்­வைத்தார். அக்­கா­லப்­ப­கு­தியில் முஸ்லிம் தலை­வர்கள் தமி­ழ­ரசுக் கட்­சியில் போட்­டி­யிட்டு வெற்­றி­பெற்­றனர். எனவே அப்­போது நாட்டில் சமஷ்டி முறைமை ஏற்­பட்­டி­ருந்தால் தமிழ் முஸ்­லிம்கள் ஒற்­று­மை­யாகி வடக்கு கிழக்கை தமது ஆட்­சியின் கீழ் வைத்­தி­ருந்­தி­ருப்­பார்கள்.

எனினும் நீண்ட கால­மாக அதனைப் பெறு­வ­தற்கு நாம் போரா­டி­யுள்ளோம். சாத்­வீ­க­ரி­தியில், அர­சியில் ரீதியில், ஜன­நா­யக ரீதியில், ஆயுத ரீதியில் தற்­போது இரா­ஜ­தந்­திர ரீதி­யாகப் போரா­டிக்­கொண்­டி­ருக்­கிறோம். ஆயினும் இந்தப் போராட்­டங்­களில் முஸ்லிம் தலை­வர்­களின் பங்­க­ளிப்பு குறை­வா­கத்தான் இருந்­தது. அதனை நாம் மறந்து விட முடி­யாது.

எனினும் எக்­கா­ர­ண­தா­திற்­கா­கவும் முஸ­லிம்­களை குறை­கூற முடி­யாது. அவர்­களை ஒரு­போதும் புறக்­க­ணிக்க முடி­யாது. அவர்கள் கிழக்கில் மாத்­தி­ர­மல்ல நாடு­பூ­ரா­கவும் வாழ்­வ­தற்கு உரித்­து­டை­ய­வர்கள். ஆனாலும் நாம் சமஷ்­டிக்­கான போராட்­டத்தை நடத்­து­கின்ற போது முஸ்லிம் தலை­மைகள் அதிகம் ஒத்­து­ழைப்புத் தர­வில்லை.

மேலும் ஜெனீவா தீர்­மா­னங்­களின் கார­ண­மா­கவே இலங்கை அர­சாங்­கத்திற் கூடு­த­லான அழுத்தம் வரு­கி­றது. ஆனாலும் 2012 ஆம் ஆண்டு ஜெனீ­வாவில் முதல் தீர்­மானம் நிறை­வேற்­றிக்­கொள்­வ­தற்கு நாம் கடு­மை­யாக உழைத்­த­போது அத்­தீர்­மானம் நிறை­வேற்­றப்­ப­டு­வதை தடுப்­ப­தற்­காக முஸ்லிம் தலை­வர்கள் வெவ்­வேறு நாடு­க­ளுக்குச் சென்று முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ அர­சாங்­கத்­திற்கு சார்­பாக பிர­சாரம் செய்­தனர்.

அதற்­காக முஸ்­லிம்­களை உதா­சீனம் செய்ய முடி­யாது. எனினும் இன்று நாம் அர­சியல் தீர்­வொன்றை பெறு­வ­தற்கு முயற்­சிக்­கிறோம். ஏனெனில் நீங்கள் பல உளப்­பி­ரச்­சி­னை­க­ளுக்கு உள்­ளா­கி­யுள்­ளீர்கள். இப்­பி­ரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காண வேண்­டு­மாயின் நிறை­வேற்று அதி­காரம் எங்­க­ளு­டைய கைகளில் இருக்க வேண்டும். எங்­களின் மக்­களால் தெரி­வு­செய்­யப்­பட்ட பிர­தி­நி­திகள் ஊடாக அந்த அதி­கா­ரத்தை நாங்கள் பயன்­ப­டுத்தும் நிலை இருக்க வேண்டும். அதைப் பெறு­வ­தற்­காகத் தான் நாம் தற்­போது மிகவும் ஆக்­க­பூர்­வ­மான பேச்­சு­வார்­த­தையில் ஈடு­பட்­டுக்­கொண்­டி­ருக்­கிறோம்.

எனவே கல்வி, உயர்­கல்வி, காணி, பொலிஸ், சட்டம், ஒழுங்கு, கைத்­தொழில், கடற்­றொழில், கால்­நடை வளர்ப்பு, விவ­சாயம், கலா­சாரம், சமயம் போன்ற விட­யங்கள் மீதான அதி­காரம் எம்­மிடம் இருக்க வேண்டும். அவ்­வா­றி­ருந்தால் எமது பல பிரச்­சி­னைகள் தீர்க்­கப்­படும்.

எனவே அதனை முழு­மை­யாக அடை­வ­தாக இருந்தால் விசே­ட­மக வடக்கு கிழக்கில் தமிழ் முஸ்லிம் மக்­களும் ஒரு­மித்து செயற்­பட வேண்டும். யார் முத­ல­மைச்சர் என்­கின்ற கேள்வி முக்­கி­ய­மான கேள்­வி­யல்ல. இன்று கிழக்கு மாகா­ணத்தில் முஸ்லிம் முத­ல­மைச்சர் ஒருவர் உள்ளார். அவர் எமது ஆத­ர­வுடன் பத­வியில் உள்ளார். அவர் முத­ல­மைச்­சா­ராக பத­வி­யேற்ற பின்னர் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவின் அணி­யினர் என்னைச் சந்­தித்து "உங்­க­ளுக்கு முத­ல­மைச்சர் பத­வியை வழங்­கு­கிறோம். முஸ்லிம் காங்­கி­ர­ஸுக்கு வழங்­கு­கின்ற ஆத­ரவை வாபஸ்­பெ­றுங்கள்"" என்று வேண்­டினர். முஸ்லிம் உறுப்­பி­னர்கள் , சிங்­கள உறுப்­பி­னர்கள் உட்­பட கிழக்கு மாகா­ணத்தின் முன்னாள் முத­ல­மைச்சர் பிள்­ளை­யானும் வந்து என்­னோடு பேசினார்.

எனினும் அவர்­களின் வேண்­டு­தலை மறு­த­லித்தோம். ஏனெனில் நாம் ஒரு பொறுப்­பு­வாய்ந்த கட்சி என்ற வகையில் அவ்­வாறு செயற்­பட முடி­யாது. பத­விக்­காக நாம் சோரம் போக மாட்டோம். மேலும் நாம் சிங்­கள மக்­க­ளுக்கு எதி­ரா­ன­வர்­க­ளு­மல்ல. சிங்­கள மக்­களை நாம் நேசிக்­கிறோம். அம்­மக்­க­ளுக்கும் எனக்­கு­மி­டையில் நீண்ட காலத் தொடர்பு இருந்து வரு­கி­றது. அவர்­க­ளுடன் மிகவும் ஒற்­று­மை­யா­கவும் வாழ வேண்டும்.

எனினும் சுதந்­தி­ரத்­திற்குப் பின்னர் சிங்­கள மக்கள் இந்த நாட்டில் இயற்கை ரீதி­யாக 2.38 வீதம் அதி­க­ரித்­துள்­ளனர். அதே­வேளை கிழக்கு மாகா­ணத்தில் 8.88 வீதம் அதி­க­ரித்­துள்­ளனர். அதன் கார­ண­மாக கிழக்கு மாகா­ணத்தில் தமிழ் முஸ்­லிம்­களின் விகி­தா­சாரம் பல­மாகப் பாதிக்­கப்­பட்­டுள்­ளது. மேலும் அபி­வி­ருத்தித் திட்­டங்கள் ஊடாக இன்னும் எவ்­வ­ளவு சிங்­கள மக்கள் கிழக்கு மாகா­ணத்­திற்குள் வரப்­போ­கி­றார்கள். அதற்கு நாம் எவ்­வாறு தாக்கு பிடிப்­பது.?

நாட்டில் சிங்­கள மக்கள் கூடு­த­லாக வாழ்­கின்ற பிர­தே­சங்­களில் சிங்­கள மொழி உள்­ளது. தமிழ் பேசு­கின்ற மக்கள் கூடு­த­லாக வாழ்­கின்ற வடக்கு கிழக்­கி­லா­வது தமிழ் மொழி தொடர்ந்து பிர­தான மொழி­யாக இருக்க வேண்டும் என்­பது எமது கருத்து. அதற்­கா­கத்தான் நாம் சில கோரிக்­கை­களை முன்­வைக்­கின்றோம்.

மேலும் டட்லி சேன­நா­யக்க - செல்­வ­நா­யகம் ஒப்­பந்­தத்தில் வடக்கு கிழக்­கி­லுள்ள ஒவ்­வொரு மாவட்­டத்­திலும் காணிப் பங்­கீட்­டைப்­பொ­றுத்த மட்டில் முதல் உரிமை அந்த மாவாட்­டத்தில் காணி அற்­ற­வர்­க­ளுக்கு இருக்­க­வேண்டும். அது சிங்­க­ள­வர்­க­ளா­னாலும் தமி­ழர்­க­ளா­னாலும் முஸ்­லிம்­க­ளா­னாலும் பர­வா­யில்லை. இரண்­டா­வது உரிமை இம்­மா­கா­ணங்­களில் வாழ்­கின்ற தமிழ் பேசும் மக்­க­ளுக்­காகும். மூன்­றா­வது உரிமை இம்­மா­கா­ணங்­க­ளுக்­காப்பால் நாட்டின் ஏனைய பகு­தி­க­ளி­லி­ருந்து தெரிவு செய்­யப்­பட்டால் அதில் முன்­னு­ரிமை தமிழ் பேசும் பிர­ஜை­க­ளுகே வழங்­கப்­பட வேண்டும் எனக்­கு­றிப்­பி­டப்­பட்­டுள்­ளது. எனவே டட்லி சேன­நா­யக்­கவும் வடக்கு கிழக்கில் தமிழ் பேசும் மக்­களின் முக்­கி­யத்­து­வத்தை அவர்­களின் பெரும்­பான்மை பாதுகாக் வேண்­டிய அவ­சி­யத்தை ஏற்­றுக்­கொண்டார்.

இந்­திய இலங்கை ஒப்­பந்­தத்தின் கீழ் வடக்கு கிழக்கு இணைக்­கப்­பட்­டன. எனினும் தற்­பொ­ழுது அந்த இணைப்பு துண்­டிக்­கப்­பட்­டுள்­ளது. உச்­ச­நீ­தி­மன்றத் தீர்ப்பின் மூலம் அது துண்­டிக்­க­பட்­டுள்­ளது. அந்த தீர்வை நாம் ஏற்­றுக்­கொள்­ள­வில்லை. இணைப்பு பிழை என்று குறிப்­பி­டாமல் இணைப்பு ஏற்­ப­டுத்­திய முறையில் பிழை உள்­ள­தாகக் குறிப்­பிட்டே இணைப்பு துண்­டிக்­கப்­பட்­டுள்­ளது.

மாகா­ண­சபை சட்­டத்தின் கீழ் அயல் மாகா­ணங்கள் இணை­யலாம். அவற்றை ஜனா­தி­பதி இணைக்­கலாம். ஆனால் இணைப்­ப­தாக இருந்தால் அந்த மாகா­ணங்­களில் ஆயு­தங்கள் களை­யப்­பட வேண்டும் என்ற விதி இருந்­தது. அப்­போது தமி­ழீழ விடு­த­லைப்­பு­லிகள் ஆயு­தங்­களை கைவி­ட­வில்லை. எனினும் ஜே.ஆர்.ஜய­வர்­தன அத­னையும் மாற்­றினார். அதா­வது அவ­சர காலச் சட்­டத்தின் ஊடாக களை­யப்­பட்­டி­ருக்க வேண்டும் அல்­லது களை­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டி­ருக்க வேண்டும்.

எனவே அக்­கா­லப்­ப­கு­தியில் இந்­திய அமை­திப்­படை விடு­த­லைப்­பு­லி­க­ளி­ட­மி­ருந்து ஆயு­தங்­களைப் பறிப்­ப­தற்­கான நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டி­ருந்­தது. அந்த பிழையை வைத்­துதான் வடக்கு கிழக்கு இணைப்பு துண்­டிக்­கப்­பட்­டது. அதனை நாம் ஏற்­றுக்­கொள்­ள­வில்லை. மீண்டும் இணைப்பு ஏற்­ப­டலாம். இணைப்பு ஏற்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்ற நிலைப்­பாட்டில் நாம் உள்ளோம். எனவே எமக்குள் பிணக்கை ஏற்­ப­டுத்­திக்­கொள்­ளாமல் தமிழ் முஸ்லிம்களுடன் பேசி இக்கருமத்தை தீர்க்க நாம் எதிர்பார்க்கிறோம்.

 இணைந்த வடகிழக்கில் பண்பான கல்வி ஆளுமையுள்ள முதலமைச்சரை ஏற்றுக்கொள்ள நாம் தயாராக இருக்கிறோம். முதலமைச்சர் பதவி ஒரு பிரச்சினையல்ல. தமிழ் பேசும் பிராந்தியம் தொடர்ந்தும் தமிழ் பேசும் பிராந்தியாக செயற்பட வேண்டும். 1977 ஆம் ஆண்டு நான் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவுசெய்யப்பட்டபோது அப்போதைய ஜனதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன என்னை அவருடைய அமைச்சரைவையில் இணைந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். நாம் பதவிக்காச் செல்லவில்லை. ஏனெனில் அதிகாரம் எமது மக்கள் கையில் வரவேண்டும். வடக்கு கிழக்கில் தமிழ் பேசும் மக்கள் ஆட்சி புரிய வேண்டும் என்பதற்காகவாகும்.

எனவே வடக்கும் கிழக்கும் இணையாது பிரிந்து இருக்குமாயின் கிழக்கு மாகாணம் விரைவில் பறிபோகும். அம்மாகாணம் தமிழ் முஸ்லிம்களுக்கு உரிமை இல்லாத நிலை ஏற்படும். அது பறிபோவதற்கு விடக்கூடாது. பேச்சுவார்த்தையின் மூலம் இரு சமூகத்தினரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் தீர்வை முன்னெடுக்க வேண்டும் எனவும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-10-31#page-1

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நவீனன் said:

வடக்­குடன் இணை­யா­விடின் கிழக்கு பறி­போய்­விடும்

p13-76001bc025b416cd71719a93465eabc423100bd1.jpg

 

வடக்கு மாகா­ணத்­தி­லி­ருந்து 1990 ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாதம் 10 திகதி முஸ்­லிம்கள் வெ ளியேற்­றப்­பட்­ட­மை­யா­னது ஒரு­போதும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாத விட­ய­மாகும். அது ஒரு பார­தூ­ர­மான விடயம். அவ்­வி­த­மான கருமம் இடம்­பெற்­றி­ருக்­கக்­கூ­டாது. அதனை ஒரு துன்­பியல் சம்­பவம் என்று கூறு­வதன் மூலம் மாத்­திரம் அதற்­கான தீர்வு காண முடி­யாது.

எனினும் மீள்­கு­டி­யேற்­றத்­திற்­கான நடை­மு­றைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன.. இருந்­த­போ­திலும் அதில் உறு­தி­யான நிலை பின்­பற்­றப்­ப­டு­வ­தாகக் தெரி­ய­வில்லை. எவ்­வா­றி­ருந்­த­போதும் அம்­மக்கள் மீள்­கு­டி­யேற்­றப்­பட வேண்டும். அதில் மாற்று கருத்து இருக்க முடி­யாது.

முசுவீம்களுடைய உயிருக்குப் பங்கம் ஏற்படுத்தாது அவர்கள் வெளியேற்றப்பட்டனர். இன்றும் அவர்கள் உயிருடன் உள்ளனர். இது ஒரு துன்பியல் சம்பவம் என்று தலைவர் சம்பந்தன் அவர்களாகளால் ஒதுக்க முடியாவிட்டால்...... வெளியேற்ப்பட்ட தமிழர்களை, முசுலீம்களும் உடந்தையாக இருந்து ஆயிர ஆயிரமாகக் கொன்றொழித்த செயலை எந்த இயலுக்குள் ஒதுக்குவது. புலிகளின் ஆட்சி வருவதற்கு முன்பாக முசுலீம்களே வாழ்ந்திராத பகுதிகளும் இன்று அவர்களுடைய நகரங்களாக, வாழ்விடங்களாக மாறியுள்ளதே இதனை எந்த இயலுக்குள் ஒதுக்குவது?? 

11 hours ago, Paanch said:

முசுவீம்களுடைய உயிருக்குப் பங்கம் ஏற்படுத்தாது அவர்கள் வெளியேற்றப்பட்டனர். இன்றும் அவர்கள் உயிருடன் உள்ளனர். இது ஒரு துன்பியல் சம்பவம் என்று தலைவர் சம்பந்தன் அவர்களாகளால் ஒதுக்க முடியாவிட்டால்...... வெளியேற்ப்பட்ட தமிழர்களை, முசுலீம்களும் உடந்தையாக இருந்து ஆயிர ஆயிரமாகக் கொன்றொழித்த செயலை எந்த இயலுக்குள் ஒதுக்குவது. புலிகளின் ஆட்சி வருவதற்கு முன்பாக முசுலீம்களே வாழ்ந்திராத பகுதிகளும் இன்று அவர்களுடைய நகரங்களாக, வாழ்விடங்களாக மாறியுள்ளதே இதனை எந்த இயலுக்குள் ஒதுக்குவது?? 

எந்த ஊர்கள் அப்படி முஸ்லீம் ஊர்களாக மாற்றப்பட்டுள்ளன ?? தகவல் அறிந்தால் தான் நான் திட்டமிட்டு எமது மண்ணை இஸ்லாமியரிடம் இருந்து காப்பாற்ற முடியும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனி வரும் காலங்களில் கிழக்குமாகாணம் என்பதை விட முஸ்லீம்மாகாணம் என்பதே சரியாக வரும்.

  • கருத்துக்கள உறவுகள்

2006 வரை தெந்தமிழீழமாக மிளிர்ந்த பூமி இன்று... ஒரு ஆக்கிரமிப்பாளனை மிரட்ட இன்னொரு ஆக்கிரமிப்பாளன் காலைப் பிடித்துக் கெஞ்சும் அரசியல் சாணியத்தில் கொண்டு வந்து சம் சும் கும்பலை நிறுத்தி உள்ளது. இதற்கு எந்த ஒரு இன தேசப் பற்றுமற்று ஒரு இன விடுதலைப் போராட்டத்தை அற்பத்தனமான சுகங்களுக்காக காட்டிக்கொடுத்த கருணா உட்பட்ட காக்கவன்னியர்களும் காரணமாவர். 

இவங்க எல்லாம் உயிரோடு இருக்க.. மண்ணை மக்களை நேசித்தவர்கள்.. மாண்டவர்கள் ஆகிவிட்டது தான்.. மகா கொடுமை. :rolleyes:tw_angry:

1 hour ago, குமாரசாமி said:

இனி வரும் காலங்களில் கிழக்குமாகாணம் என்பதை விட முஸ்லீம்மாகாணம் என்பதே சரியாக வரும்.

 

57 minutes ago, nedukkalapoovan said:

2006 வரை தெந்தமிழீழமாக மிளிர்ந்த பூமி இன்று... ஒரு ஆக்கிரமிப்பாளனை மிரட்ட இன்னொரு ஆக்கிரமிப்பாளன் காலைப் பிடித்துக் கெஞ்சும் அரசியல் சாணியத்தில் கொண்டு வந்து சம் சும் கும்பலை நிறுத்தி உள்ளது. இதற்கு எந்த ஒரு இன தேசப் பற்றுமற்று ஒரு இன விடுதலைப் போராட்டத்தை அற்பத்தனமான சுகங்களுக்காக காட்டிக்கொடுத்த கருணா உட்பட்ட காக்கவன்னியர்களும் காரணமாவர். 

இவங்க எல்லாம் உயிரோடு இருக்க.. மண்ணை மக்களை நேசித்தவர்கள்.. மாண்டவர்கள் ஆகிவிட்டது தான்.. மகா கொடுமை. :rolleyes:tw_angry:

விரைவில் வடக்கு மாகாணமும் அதே நிலை தான் !பி மன்னாரும் முல்லைத்தீ வும் போய் விட்டது.
 இப்பொழுது யாழ்ப்பாணத்தில் மௌல்வி மிரட்டும் நிலைக்கு வந்து விட்டது. நான் முன்னர் குறிப்பிட்டது போல் மிக விரைவில் நல்லுர்  கந்தன் மீது புல்டோசர் பாயும்.

ஆனால் கொடுமை என்னவென்றால் புலம்பெயர் நாட்டில் நல்லுர் கந்தனுக்கு கிளை அமைக்க ஒரு குயூட்டம் காசு சேர்க்கும் 

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, Dash said:

 

விரைவில் வடக்கு மாகாணமும் அதே நிலை தான் !பி மன்னாரும் முல்லைத்தீ வும் போய் விட்டது.
 இப்பொழுது யாழ்ப்பாணத்தில் மௌல்வி மிரட்டும் நிலைக்கு வந்து விட்டது. நான் முன்னர் குறிப்பிட்டது போல் மிக விரைவில் நல்லுர்  கந்தன் மீது புல்டோசர் பாயும்.

ஆனால் கொடுமை என்னவென்றால் புலம்பெயர் நாட்டில் நல்லுர் கந்தனுக்கு கிளை அமைக்க ஒரு குயூட்டம் காசு சேர்க்கும் 

இந்திய துணி(ணை)தூதரகமும் ,ஆஞ்ஞநேய /ராம‌ பக்தர்களும் சும்மா பார்த்து கொண்டே இருப்பினம்....tw_tounge_wink:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.