Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்

Featured Replies

#Election2016 - ஹிலரி கிளின்டனைத் தேர்ந்தெடுத்தது 12 பேர் கொண்ட அமெரிக்க டவுன்

அமெரிக்காவின் நியூ ஹாம்ப்ஷையர் மாகாணத்தின் கீழ் வரும் டிக்ஸவில் நாட்ச் கிராமத்தில் 12 பேர்தான் உள்ளனர். எப்போது அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கெடுப்பை நள்ளிரவிலேயே நடத்தி முடிவை அறிவிக்கும் கிராமம் இது. இந்த முறை 12 பேரில் எட்டு பேர் வாக்களிக்க, நான்கு ஓட்டுகளுடன் ஹிலரி முதலிடத்திலும், இரண்டு ஓட்டுகளுடன் டொனால்ட் ட்ரம்ப் இரண்டாவது இடத்திலும், ஒரு ஓட்டுடன் கேரி ஜான்ஸன் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். 

400_11187.jpg

எப்போதும் இக்கிராமத்தில் அதிக ஓட்டுகளைப் பெறுபவர் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். 2000, 2004, 2008 தேர்தல்களில் அப்படித்தான் நடந்தது. இம்முறை ஹிலரி தேர்வாகியுள்ளார். நாளை காலை அமெரிக்காவின் முடிவு தெரியும்! 

http://www.vikatan.com/news/world/71726-election2016---dixville-notch-chooses-hillary-clinton.art

  • கருத்துக்கள உறவுகள்

சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த 2016 அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.இரவு 9 மணிக்கு கிழக்கு பாகத்திலும் 3 மணி நேரம் கழித்து மேற்கு பாகத்திலும் தேர்தல் முடிவடையும்.மற்றைய நாடுகளில் யார் கூடுதலாக வாக்குகள் எடுப்பாரோ அவர் தான் வெற்றியாளர்.ஆனால் அமெரிக்காவில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் சன தொகைக்கு ஏற்ப எலக்ரரோல் வோட் என்று இருக்கிறது. இந்த எலக்ரரோல் வாக்குகளில் 270 யார் எடுக்கிறார்களோ அவர் தான் வெற்றியாளர்.

கீழே உள்ள அட்டவணையில் 2000ம் ஆண்டு நடந்த தேர்தலில் நாடு தளுவிய ரீதியில் அல் கோர் தான் கூடுதலான வாக்குகள் பெற்றார்.ஆனால் அவரை விட குறைந்த வாக்குகள் பெற்ற ஜோர்ச் புஸ் தான் ஜனாதிபதியானார்.

அமெரிக்க தேர்தலில் இன்னொரு கூடுதல் அம்சம் என்னவென்றால் 38 மாநிலங்களில் பல கிழமைகளின் முன்பிருந்தே ஒவ்வொரு நாளும் வாக்களிக்கலாம்.

2016 இல் முன்னரே வாக்களிக்கும் முறையின் படி 42 மில்லியன் மக்கள் வாக்களித்துவிட்டனர்.கீழே உள்ள சுட்டியை அழுத்தி முழுமையாக பார்வையிடலாம்.

https://docs.google.com/spreadsheets/d/1fz_V3oAUL8XJMEudq5wm5hDT_f554uagt6sIm_sJDro/edit#gid=1996929977

 

  Presidential
Candidate
Vice Presidential
Candidate
Political
Party
Popular Vote Electoral Vote
Seal Map Key
 > 40% DG40.gif RG40.gif
 > 50% DG50.gif RG50.gif
 > 60% DG60.gif RG60.gif
 > 70% BLNK.gif BLNK.gif
 > 80% DG80.gif BLNK.gif
Turnout
Voter Turnout Graph
Popular Vote Pie Chart Electoral Vote Pie Chart
0000DD.gif George W. Bush Richard Cheney Republican 50,462,412 47.87% 271 50.4%
DD0000.gif Albert Gore Jr. Joseph Lieberman Democratic 51,009,810 48.38% 266 49.4%
00DD00.gif Ralph Nader Winona LaDuke Green 2,883,443 2.74% 0 0.0%
FFFF00.gif Patrick Buchanan Ezola Foster Reform 449,181 0.43% 0 0.0%
FFFF00.gif Harry Browne Art Olivier Libertarian 384,532 0.36% 0 0.0%
Y Other (+) - - 236,607 0.22% 0 0.0%
  Total 105,425,985   538  
  • கருத்துக்கள உறவுகள்

டொனால்ட் ரம்
இந்தியானா 11
கென்ரகி  8  மாநிலங்களில் வெற்றி
கில்லாரி வேர்மோன்  3

 

Edited by ஈழப்பிரியன்

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கு வேர்ஜினியா
டொனால்ட் ரம்  5

  • கருத்துக்கள உறவுகள்

  டொனால்ட் ரம்                                                                                                      கில்லாரி

இந்டியானா     11                                                                                                       வேர்மோன்  3

கென்ரகி           8                                                                                                        இலினோஸ்  20

மேற்கு வேர்ஜினியா 5    

 ஒக்லகோமா  7                                                                                                          மேரிலாண்ட் 10

  மிசுசிப்பி  6                                                                                                                  நியூயோர்சி  14

    ரெனிசி  11                                                                                                               றோடைலண்ட் 4

   அலபாமா 9                                                                                                                மாசசூசற்     11

   ரெக்சாஸ் 38                                                                                                              டிலவெயர்  3

  ஆர்கன்சா 6                                                                                                                கனரிக்கட் 7  

நெவாடா  3                                                                                                                டிஸ்ரிக் கொலம்பியா  3

தெற்கு டகோடா 3                                                                                                     நியூயோர்க் 29

வோமிங்    3                                                                                                                 நியூமொக்சிகோ 5

மொன்ரானா 3                                                                                                             கொலராடோ  9                                                                                                         

வட டகோடா  3                                                                                                                 கலிபோர்னியா 55                                                                                                  

நெபராஸ்கா 5                                                                                                                  கவாய்   4

கனசாஸ்   6

லூசியானா 8

மிசூரி     10

Edited by ஈழப்பிரியன்

  • கருத்துக்கள உறவுகள்

இது வரை நடந்த தேர்தல்களின் படி அதிபராவதற்கு 270 எலக்ரரோல் எடுக்க வேண்டும்.ஆனால்

கில்லாரி  190

டொனால்ட் ரம் 171

பல மாநிலங்களில் டொனால்ட் ரம் முன்னணியில் நிற்கிறார்

  • கருத்துக்கள உறவுகள்

hillary clinton im with her animated GIF  hillary clinton animated GIF

ஹிலாரி கிளின்ரன் வெற்றி பெற்ற செய்தியை.... கேட்க, ஆவலுடன்... இருக்கின்றேன்  ஈழப்பிரியன்.

  • தொடங்கியவர்

முக்கிய மாநிலங்களில் தொடர்ந்து முன்னிலை வகிக்கும் டொனால்ட் டிரம்ப்

 

மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமான ஃ புளோரிடாவில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெறுவார் என்று ஏபி செய்தி நிறுவனம் கணித்துள்ளது.

முக்கிய மாநிலங்களில் தொடர்ந்து முன்னிலை வகிக்கும் டொனால்ட் டிரம்ப்
முக்கிய மாநிலங்களில் தொடர்ந்து முன்னிலை வகிக்கும் டொனால்ட் டிரம்ப்

இந்த மாநிலத்தில் உள்ள 29 தேர்தல் அவை வாக்குகள் முக்கிய அதிபர் தேர்தல் வேட்பாளர்கள் இருவரின் வெற்றிக்கும் மிகவும் முக்கியமானதாக அமைய உள்ளது. ஹிலரி மற்றும் டிரம்ப் ஆகிய இரு வேட்பாளர்களுக்கும் தெளிவான ஆதரவில்லாமல் ஊசலாட்ட நிலை காணப்படும் இந்த மாநிலத்தில், கடந்த 2008, 2012 அதிபர் தேர்தல்களில் ஒபாமா வெற்றி பெற்றார்.

ஆனால், 2000-ஆம் ஆண்டில் நடந்த அதிபர் தேர்தலில் ஃ புளோரிடா மாநிலத்தில் வெறும் 537 வாக்குகளில் ஜார்ஜ் டபுள்யூ. புஷ் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் மேற்கு கரை மாநிலமான ஓரெகனில் ஹிலரி கிளிண்டன் வெற்றி பெறுவார் என்று ஏபிசி செய்தி முகமை கணித்துள்ளது.

அதே வேளையில், வடக்கு கரோலினா மாநிலத்தில் டொனால்ட் டிரம்பின் வெற்றியை இந்த செய்தி முகமை கணித்துள்ளது.

http://www.bbc.com/tamil/global-37918543

  • தொடங்கியவர்

வெற்றியினை நெருங்கிய நிலையில் டிரம்ப்

 

 

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்ற நிலையில் இன்னும் 32 தேர்தல் தொகுதிகளில் வெற்றி பெற்றால் அடுத்த ஜனாதிபதியாக மக்கள் வாக்கெடுப்பில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெறுவார்.

2016-11-09_at_10-35-02.png 

தற்போது வரை வெளியாகியுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் அடிப்படையில் குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் 238 தேர்தல் தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளார். 

இதேவேளையில் டொனால்ட் டிரம்பினை எதிர்த்து ஜனநாயகக் கட்சியின் சார்பாக போட்டியிடும் ஹிலாரி கிளின்டன் 209  தேர்தல் தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/13326

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

hillary clinton im with her animated GIF  hillary clinton animated GIF

ஹிலாரி கிளின்ரன் வெற்றி பெற்ற செய்தியை.... கேட்க, ஆவலுடன்... இருக்கின்றேன்  ஈழப்பிரியன்.

இது வரைடொனால்ட் ரம் 238 கில்லாரி 215.

இன்னும் சில் மாநிலங்களே முடிவை எதிர்பார்த்திருக்கிறோம்.அதிலும் ரம் தான் ஆதிக்கம் செலுத்துகிறார்.கில்லாரி அதிபராவதற்கு தேவையான எலக்ரரேல் வாக்கு கிடைக்காது போலவே இருக்கிறது.

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்பு.

  • கருத்துக்கள உறவுகள்
Hillary Clinton

Hillary Clinton (D)

215Total

Electoral Votes

 

52,245,914 Popular Votes

 

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த தலைவர் ரம்புக்கு வாழ்த்து சொல்லி குப்புற படுக்கப் போகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ரம் வெல்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உண்டு.

  • தொடங்கியவர்

மகிழ்ச்சிக் கடலில் டிரம்ப் ஆதரவாளர்கள்

 

தற்போது நடைபெற்று வரும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், பல கணிப்புகளையும் விட சிறப்பான முறையில் குடியரசு கட்சியின் வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் முன்னிலை பெற்றுள்ளார்.

டொனால்ட் டிரம்ப் ஆதரவாளர்கள் (கோப்புப் படம்)

 

 டொனால்ட் டிரம்ப் ஆதரவாளர்கள் (கோப்புப் படம்)

ஹிலரி கிளிண்டன் மற்றும் டொனால்ட் டிரம்ப் ஆகிய இரு வேட்பளர்களுக்கும் இடையிலான ஆதரவில் ஊசல் நிலையில் உள்ள முக்கிய மாநிலங்களான ஃ புளோரிடா மற்றும் ஒஹையோ ஆகிய மாநிலங்களில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெறும் நிலையில் உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

டொனால்ட் டிரம்ப் முன்னிலை தகவல்கள் குறித்து மேலும் படிக்க:

முக்கிய மாநிலங்களில் தொடர்ந்து முன்னிலை வகிக்கும் டொனால்ட் டிரம்ப்

தொடந்து வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், பென்சில்வேனியா உள்பட ஊசல் நிலையில் உள்ள பல முக்கிய மாநிலங்களில் ஹிலரி கிளிண்டன் மற்றும் டொனால்ட் டிரம்ப் ஆகிய இரு வேட்பளர்களுக்கும் இடையே குறைந்த வித்தியாசமே உள்ளது.

அதனால், டொனால்ட் டிரம்ப்பின் கட்சி தலைமையகத்தில் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் உற்சாகமான மனநிலை காணப்படுகிறது.

அதே வேளையில், ஹிலரி கிளிண்டனின் ஆதரவாளர்கள் மனச்சோர்வுடன் காணப்படுகிறார்கள்.

வருத்தத்துடன் காணப்படும் ஹிலரியின் ஆதரவாளர்கள்

வருத்தத்துடன் காணப்படும் ஹிலரியின் ஆதரவாளர்கள்

 

http://www.bbc.com/tamil/global-37918545

  • கருத்துக்கள உறவுகள்

Michigan

  1. Presidential Election, 

    84.7% Reporting   Electoral Votes: 16

     

    Polls Closing: 8:00 PM ET

    R D. Trump 48.4%
    D H. Clinton 46.4%
    L G. Johnson 3.7%
    G J. Stein 1.1%
    U D. Castle 0.3%
    N E. Soltysik 0.0%
    *
     
    Runoff

     

     

    Minnesota

     

    Presidential Election, 

    83.1% Reporting   Electoral Votes: 10

     

    Polls Closing: 9:00 PM ET

    D H. Clinton 47.5%
    R D. Trump 44.7%
    L G. Johnson 3.8%
    I E. McMullin 1.8%
    G J. Stein 1.3%
    L D. Vacek 0.4%
    C D. Castle 0.3%
    S A. Kennedy 0.1%
    A R. De La Fuente 0.0%

     


     

Pennsylvania

மேலே உள்ள 3 மாநிலங்களும் இறுதி வெற்றியை நிர்ணயிக்கும். ட்ரம்ப் மேற்கூறிய 3 மாநிலங்களிலும் முன்னணியில் நிற்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

இனி அதிசயம் ஆனால் உண்மை 
அப்படி ஏதும் நடந்தால்தான் கிளரிக்கு வாய்ப்பு !

  • தொடங்கியவர்

வெள்ளை மாளிகைக்கு குடியேறும் சர்ச்சை மன்னன்!

அமெரிக்காவின் அதிபர் தேர்தல் களத்தில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப்  வெற்றி பெற்றுள்ளார். ஆனால், இவர் நம்மூர் அரசியல்வாதிகள் மாதிரி சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசி அனைவரது கவனத்தையும் ஈர்த்து வந்தவர்; அமெரிக்காவின் ரியல் எஸ்டேட் துறையில் ஜாம்ப வானாகவும், ஊடகங்களில் பிரபலமானவராகவும் இருந்தவர் இன்று அமெரிக்காவின் அதிபராகி வெள்ளை மாளிகைக்கு குடியேற உள்ளார்.

டொனால்ட் டிரம்ப்

ரியல் எஸ்டேட் டு அரசியல்! 

டொனால்ட் ஜான் டிரம்ப்... இதுதான் ட்ரம்ப்-ன் முழுப் பெயர். 1946-ம் ஆண்டு ஜூன் 14-ம் தேதி பிறந்த டிரம்ப்-க்கு இப்போது 69 வயது. இவர் அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர், எழுத்தாளர் மற்றும் தொலைக்காட்சிப் பிரபலம், டிரம்ப் நிறுவனத்தின் தலைவராக உள்ளார். இவருடைய நிகர சொத்து மதிப்பு 4.5 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.30,000 கோடி.)
டொனால்ட் டிரம்ப், தனது தந்தையின் மூலம் ரியல் எஸ்டேட் தொழிலுக்கு வந்தவர். தந்தை எட்டடி பாய்ந்தால், மகன் பதினாரடி பாய்கிற மாதிரி அந்த ரியல் எஸ்டேட் நிறுவனத்தை மிகப் பெரிதாக வளர்த்தெடுத்தவர். இன்று அமெரிக்காவின் ரியல் எஸ்டேட் துறையில் ஜாம்ப வானாகவும், ஊடகங்களில் பிரபலமானவராகவும் இருந்து வருகிறார் ட்ரம்ப்.

ஹில்லாரி vs டிரம்ப்!

ஜனநாயக கட்சியைப் பொறுத்தவரை, முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் அந்தக் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டார். குடியரசு கட்சியில் மெகா கோடீஸ்வர தொழிலதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. மெரிக்க அதிபர் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட மூன்று அடிப்படை தகுதிகள் அவசியம். அந்த நாட்டின் சட்டபூர்வ குடிமகனாகப் பிறந்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 35 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். அமெரிக்காவில் 14 ஆண்டுகள் வசித்திருக்க வேண்டும். இவை அடிப்படை விதியாக இருந்தாலும், அவ்வளவு எளிதாக யாரும் அதிபர் வேட்பாளராக முடியாது.

சர்ச்சை மன்னன்!

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்பே அதிபராவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ள வேட்பாளராக பேசப்பட்டவர்  டொனால்ட் டிரம்ப். ஆனால், இவர் அவ்வப் போது, சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து விமர்சனங்களை தேடிக்கொள்வதிலும் நிகரில்லாதவராக விளங்கியவர்.

‘நான் அமெரிக்காவின் அதிபராக பதவி ஏற்றால் வெளிநாட்டில் இருந்துவந்து அமெரிக்காவில் சட்டத்துக்குப் புறம்பாக  குடியேறியுள்ளவர்களை வெளியேற்றுவேன். ஈரானுடன் அமெரிக்கா செய்துள்ள அணு ஒப்பந்தம் என்னும் பேரழிவை உடனடியாக ரத்து செய்வேன். ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் சண்டையிட சவுதி ராணுவ தரைப்படையை சவுதி அரேபியா அரசு அனுப்பி வைக்க வேண்டும். இல்லாவிட்டால், நான் அமெரிக்க அதிபரான பிறகு சவுதியில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்துவேன்’ என பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை கொஞ்சமும் தயங்காமலும் யோசிக்காமலும் தினமும் சொல்லி வந்தவர் ட்ரம்ப். 

இந்தியாவுக்கு எதிராக..!

இதுமட்டும் இல்லாமல் வேலைவாய்ப்பு பற்றிய பிரசாரம் அமெரிக்க மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதை தெரிந்துகொண்ட டொனால்ட் டிரம்ப் அது பற்றியும் பேசி மாட்டிக் கொண்டார்.  

“இந்தியா, சீனா, ஜப்பான், மெக்சிகோ போன்ற நாடுகள் அமெரிக்கர் களின் வேலை வாய்ப்பை தட்டிப் பறித்துள்ளன. இந்த வேலை வாய்ப்புகளை மீட்டு, அமெரிக்க மக்களுக்கு வழங்குவேன். மெக்சிகோவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே எல்லைச் சுவர் எழுப்புவேன்’’ என சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து பெரும் விமர்சனத்துக்கு உள்ளானார்.

காந்தியின் பொன்மொழி! 

பல இடங்களில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டங்களில் மக்களின் எதிர்ப்பை சந்தித்துவந்த டிரம்ப், யாரோ கூறிய ஒரு வாசகத்தை தனது பிரசாரத்துக்கு பயன்படுத்தும் நோக்கத்தில் காந்தியின் பொன்மொழி என்று குறிப்பிட்டு சர்ச்சையில் சிக்கினார்.

‘முதலில் உன்னைப் புறக்கணிப்பார்கள். பிறகு உன்னைப் பார்த்து சிரிப்பார்கள். பின்னர் உன்னோடு சண்டையிடு வார்கள். கடைசியாக நீதான் ஜெயிப்பாய்’ என்று காந்தியின் பொன்மொழி என்று தவறாக குறிப்பிட்டு பேசினார். யாரோ சொன்னதை எல்லாம் காந்தி சொன்னதாக டொனால்ட் டிரம்ப் உளறி வருகிறார் என இவரை கிண்டலடித்து, கேலி செய்து விட்டனர் நெட்டிசன்கள்.

சொந்தச் செலவில்..!

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுபவர்கள் தங்கள் தேர்தல் செலவுக்காகப் பெரும் தொகையைத் திரட்டி வந்தனர். இதில் தொழிலதிபர்கள் பலரும் பெரும் தொகையை நன்கொடையாக அளித்து வந்தனர். இந்த நிலையில், தமது சொந்தப் பணத்தையே தேர்தலில் செலவு செய்தவர்தான் டொனால்ட் டிரம்ப். 

நன்கொடை அளிப்பவர்கள், பிரதிபலனை எதிர்பார்ப்பார்கள். அதனால் சொந்த செலவிலேயே அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்தார் டொனால்ட் டிரம்ப். ஆண்டுக்கு ரூ.2,600 கோடி வருவாய் ஈட்டுகிறேன். தேர்தலில் ரூ.6,500 கோடி செலவானாலும் அதற்கு தாம் தயார் என கூறியவர்தான் டொனால்ட்  டிரம்ப்.

அமெரிக்க அதிபர்!

இந்த நிலையில் ஹில்லாரி கிளின்டனை விட அதிக வாக்குகளை பெற்று டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராகியுள்ளார். 'இந்தியா தட்டிப் பறித்துள்ள வேலைவாய்ப்புகளை அமெரிக்கர்களுக்கு மீண்டும் பெற்றுத் தருவேன்’ என்பது உள்பட அமெரிக்க குடிமகன்களுக்கு சாதகமான பல கருத்துக்களை தெரிவித்த டிரம்ப் ரியல் எஸ்டேட் ஜாம்பவனாக இருந்து, இப்போது அமெரிக்காவின் அதிபராகி வெள்ளை மாளிகையில் குடியேற உள்ளார். பொறுத்திருந்து பார்ப்போம்.

http://www.vikatan.com/news/miscellaneous/71882-controversy-king-moves-to-the-white-house.art

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாம் பிழைத்துவிட்டது.
தங்களை அரசியல் ஆய்வாளர்களாக காட்டிக்கொண்டவர்களின் வார்த்தைஜாலங்கள் பிழைத்துவிட்டது.
பொருளாதார விற்பன்னர்களாக வலம் வந்தவர்களின் ஆலோசனைகள் பிழைத்துவிட்டது.
கமராவுக்கு முன்னால் அமர்ந்திருந்து உலக  அரசியல் உள்நாட்டு அரசியல் என்று பந்தா காட்டியவர்களின் உதாரணங்கள் பிழைத்து விட்டது.
சுழல்கதிரையில் இருந்து சுழன்று சுழன்று பத்திரிகைகளுக்கு விமர்சனம் எழுதியவர்களின் எழுத்து பிழைத்து விட்டது.
ஒட்டுமொத்தத்தில் டொனால்ட் ரம்ப் ஏன் தேர்தலில் நிற்கின்றார் என்று விளங்கவில்லை என்று சொன்னவர்களும் உண்டு.
இவர் ஒரு மண்டைக்கிறுக்கன் என்று சொன்னவர்களும் உண்டு.அரசியல் அனுபவம் இல்லாதவர் என்றவர்களும் இருக்கிறர்கள்.
எல்லாவற்றையும் பொய்யாக்கி விட்டார்கள் இந்த அமெரிக்க மக்கள்.
சிலவேளை டொனாட் ரம்புக்கும் தான் வெல்லுவேனா என்ற சந்தேகமும் இருந்திருக்கலாம்.

டொனால்ட் ரம்பின் பாட்டனார் ஜேர்மனியில் பிறந்தவராம்.:cool:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.