Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐரோப்பாவில் குடியேறியுள்ள இலங்கையர்கள் நாடு திரும்ப வேண்டும் – பிரதமர்

Featured Replies

ஐரோப்பாவில் குடியேறியுள்ள இலங்கையர்கள் நாடு திரும்ப வேண்டும் – பிரதமர்

ranil-wickramasinghe_ci
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு

ஐரோப்பாவில் குடியேறியுள்ள இலங்கையர்கள் நாடு திரும்ப வேண்டுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரியுள்ளார்.யுத்தத்தின் பின்னர் இலங்கையில் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தி பொருளாதாரத்தை கட்டியெழுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் ஐரோப்பாவில் குடிபெயர்ந்துள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து பொருளாதாரத்தை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்திலும் வன்னியிலும் பாதைகளை அமைப்பது மட்டும் நாட்டின் அபிவிருத்தியாக கருதப்பட முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

http://globaltamilnews.net/archives/7238

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, நவீனன் said:

ஐரோப்பாவில் குடியேறியுள்ள இலங்கையர்கள் நாடு திரும்ப வேண்டும் – பிரதமர்

இராணுவத்தை  மீள அழைக்க வக்கில்லை. இதற்குள் மற்றவர்களுக்கு அழைப்பு விடுகின்றார்.
 

  • கருத்துக்கள உறவுகள்

நாடு திரும்பி...?

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா முதலில் இலங்கையில் அகதிகளாக உள்ளவர்களை அவர்கள் சொந்த இடங்களில் குடியமர்த்துங்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, Nathamuni said:

நாடு திரும்பி...?

உங்கடை நிலங்களை காப்பாத்துங்கோ.பின்பு அவன் பிடிக்கிறான் இவன் பிடிக்கிறான் என்று புலம்பாதையுங்கோ.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
20 minutes ago, சுவைப்பிரியன் said:

உங்கடை நிலங்களை காப்பாத்துங்கோ.பின்பு அவன் பிடிக்கிறான் இவன் பிடிக்கிறான் என்று புலம்பாதையுங்கோ.

அங்கை ஆமியள் தோட்டம் செய்து எங்கடை சனத்தின்ரை உழைப்பிலை மண் அள்ளி போடுறாங்களாம்......குளக்கரை காணியள் எல்லாத்தையும் ஆமியள் புடிச்சு வைச்சிருக்கிறாங்களாம்.....அதை ஏனெண்டு ஒருக்கால் உங்கடை அவையிட்டை கேட்டு சொல்லுறியளே? அதுக்கு பிறகு போறதை பற்றி கதைப்பம் என்ன :grin:

அங்கை இருக்கிற சனத்துக்கே வழி விடக்காணேல்லை.......இதுக்கை இலங்கையர் வரவேணுமாம் :cool:

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, சுவைப்பிரியன் said:

உங்கடை நிலங்களை காப்பாத்துங்கோ.பின்பு அவன் பிடிக்கிறான் இவன் பிடிக்கிறான் என்று புலம்பாதையுங்கோ.

 

2 hours ago, குமாரசாமி said:

அங்கை ஆமியள் தோட்டம் செய்து எங்கடை சனத்தின்ரை உழைப்பிலை மண் அள்ளி போடுறாங்களாம்......குளக்கரை காணியள் எல்லாத்தையும் ஆமியள் புடிச்சு வைச்சிருக்கிறாங்களாம்.....அதை ஏனெண்டு ஒருக்கால் உங்கடை அவையிட்டை கேட்டு சொல்லுறியளே? அதுக்கு பிறகு போறதை பற்றி கதைப்பம் என்ன :grin:

அங்கை இருக்கிற சனத்துக்கே வழி விடக்காணேல்லை.......இதுக்கை இலங்கையர் வரவேணுமாம் :cool:

வரட்டே என்று கேட்டால், மெதுவா காதுக்கில வந்து, 'கையில, மடியில, எவ்வளவு வைச்சிருக்கிறியள்' எண்டெல்லே கேக்கினம்.

காசில்லை எண்டால், பைலை, மெதுவா கீழ போடுவினம். :grin: 

  • கருத்துக்கள உறவுகள்

மேற்குலகில் தமிழன் தமிழனாக உள்ள வரை தமிழீழமும் புலியும் வாழும் என்பது சிங்களவனுக்கு நல்லாத் தெரியும். அதுதான் உந்த அழைப்பு. கூப்பிட்டு வைச்சு சிலதுகளுக்கு எலும்பைப் பொறுக்கிப் போட்டு மிச்சத்தை இராணுவத்தை காடைகளைக் கொண்டு அடக்கி சுட்டு ஆண்டால்..  தமிழீழமும்.. புலியும் பூண்டோடு அழிஞ்சிடும் என்று ஜே ஆர் கண்ட கனவை இவர் காண வெளிக்கிட்டிருக்கிறார். 

ஜே ஆர் நாட்டை விட்டு தமிழரை கலைச்சால்.. தமிழீழமும்.. புலியும் அழியும் என்று நினைச்சார். இவர் திரும்பி கூப்பிட்டால் அழிச்சிடலாம் என்று நினைக்கிறார். மருமோனும்.. மாமனும் சிந்தனையில் வேறுபடவில்லை. காலத்துக்கு ஏற்ப வழிமுறைகளை மாற்றி யோசிக்கின்றனர். அவ்வளவே. :rolleyes:tw_angry:

  • தொடங்கியவர்
தமிழ் டயஸ்போராக்களை மீளவும் வரவழைக்கவே வடக்கிற்கு அதிக நிதி ஒதுக்கீடு-பிரதமர்
தமிழ் டயஸ்போராக்களை மீளவும் வரவழைக்கவே வடக்கிற்கு அதிக நிதி ஒதுக்கீடு-பிரதமர்
யாழ்ப்பாணத்தின் பொருளாதாரத்தை தரமுயர்த்துவதன் மூலம் அங்கிருந்து மேற்குலகு நோக்கிச் சென்றோ ரை மீண்டும் வரவழைக்க முடியுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
 
அதற்கமைய வடக்கிற்காக வரவு செலவு திட்டத்தில் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
 
ஆட்கடத்தல் மற்றும் நாடு கடந்த குற்றம் தொடர்பில் ஆராயும் பாளி மாநாட்டின் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொள்ளும் 11 ஆவது உயர்மட்ட மாநாடு நேற்று கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் நடைபெற்ற போது அதில கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
 
யுத்தத்தினால் சீர்குலைக்கப்பட்ட பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கில் இம்முறை கடந்த வருடத்திலும் பார்க்க இரண்டு மடங்கு நிதி யாழ்ப்பாணத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
 
இப்பணிக்கு வலுசேர்க்கும் வகையில் மேற்குலகில் வசிக்கும் தமிழ் டயஸ்போராக்கள் யாழ்ப்பாணத்துக்கு நிதியுதவி செய்ய வேண்டும்.
 
உள்நாட்டு யுத்தத்தை காரணமாக வைத்து தமிழர்களும் சிறந்த வாழ்க்கை முறையை எதிர்பார்த்து அனைத்து இனங்களைச் சேர்ந்தவர்களும் நாட்டை விட்டு தப்பிச் சென்றிருந்தனர்.
 
நாட்டின் பொருளாதாரம் பலப்படுத்தப்படுமாயின் இவர்கள் மீண்டும் நாட்டிற்கு திரும்பி வருவதில் எவ்வித ஐயமும் இல்லை.
 
யுத்தத்திற்கு அஞ்சி நாட்டை விட்டுச் சென்றவர்களை மீண்டும் அழைக்கும் அடிப்படையில் அரசாங்கம் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.
 
ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 2009 ஆம் ஆண்டில் முன்வைக்கப்பட்ட பிரேரணையில் சிபாரிசு செய்யப்பட்டுள்ள பரிந்துரைகள் வெளிவிவகார அமைச்சர் மற்றும் அதிகாரிகளால் நடைமுறைப்படுத்த ப்பட்டுவரும் அதேநேரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தேசிய நல்லிணக்கச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
 
இலங்கையைப் பொறுத்தவரை உள்நாட்டுப் பிரச்சினை காரணமாக பல தமிழர்கள் நாட்டை விட்டுச் சென்றனர். அதேநேரம் சிங்களவர்,தமிழர், முஸ்லிம்கள் என அனைத்து இனங்களைச் சேர்ந்தோரும் சிறந்த வாழ்க்கை   முறையை தேடி மேற்கு நாடுகளுக்குச் சென்றனர்.
 
ஐரோப்பா மற்றும் அமெரிக்காவுக்கு ஆட்கடத்தல் வேறுவிதமான பிரச்சினையாக இருக்கலாம். ஆனால் இலங்கையைப் பொறுத்தவரை எமக்கு நாட்டை விட்டுச் சென்றவர்களை மீண்டும் எவ்வாறு நாட்டுக்கு வரவழைப்பது என்பதிலேயே எமது முழுக் கவனமும் அமைந்துள்ளது.
 
ஐ.நா வின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. மனித உரிமைகள் மற்றும் அதற்கான சட்ட நடவடிக்கைகள் செயல்வடிவம் பெறத் தொடங்கியுள்ளன.
 
ஒரு இலங்கையை கட்டியெழுப்பும் நோக்கில் ஜனாதிபதி தலைமையில் நல்லிணக்கச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.onlineuthayan.com/news/20262

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, நவீனன் said:

தமிழ் டயஸ்போராக்களை மீளவும் வரவழைக்கவே வடக்கிற்கு அதிக நிதி ஒதுக்கீடு-பிரதமர்

 

55 minutes ago, நவீனன் said:

இப்பணிக்கு வலுசேர்க்கும் வகையில் மேற்குலகில் வசிக்கும் தமிழ் டயஸ்போராக்கள் யாழ்ப்பாணத்துக்கு நிதியுதவி செய்ய வேண்டும்

இப்படி வார்த்தை ஜாலம் பண்ணுவதை விட நேரடியா ஐயா பிச்சை அம்மா பிச்சை என்று சொறிலன்காவின் ரணில் கேட்க்கலாம் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.