Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒன்றுசேர்ந்து போரிட்டிருந்தால் ‘நாட்டைப் பிடித்திருக்கலாம்’

Featured Replies


ஒன்றுசேர்ந்து போரிட்டிருந்தால் ‘நாட்டைப் பிடித்திருக்கலாம்’
 

வா.கிருஸ்ணா

“ஆரம்பத்தில் ஒன்றாகச் சேர்ந்து போரிட்டிருந்தால், வடக்கு, கிழக்கை அல்ல, முழு இலங்கையையுமே பிடித்திருக்க முடியும். ஆனால், அவ்வாறு செயற்பட்டு, தனிநாடு எடுப்பதை இந்தியா விரும்பவில்லை. அதேபோன்று தமிழர்கள் ஒன்றாகுவதையும் இந்தியா விரும்பவில்லை” என, மீள்குடியேற்ற முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.  

“எங்கள் தமிழுக்காக, தமிழ் மண்ணுக்காக மடிந்தவர்களை நினைவுகூரவேண்டியது, தமிழ் மக்களின் தலையாய கடமையாகும்” என மாவீரர் தின நினைவேந்தல் தொடர்பாக தனது முகநூலில் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார். 

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,  

“மாவீரன் சிவகுமாரன், தொடக்கிய பணியில் பல்லாயிரக்கணக்கான மைந்தர்கள் இந்த மண்ணுக்காக மடிந்து போனார்கள். என்னைப் பொறுத்தவரையில், எந்த இயக்கத்திலிருந்து மடிந்தாலும், அவர்களை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். இதில் வேறுபாடு காட்டுவதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. 

1983ஆம் ஆண்டு அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டபோது உணர்வு மிக்க இளையோர் தங்களை போராட்டத்தில் இணைத்துக்கொண்டார்கள். அவர்கள் இணையும்பொழுது மேலோங்கிய உணர்வும், வெறியும் இருந்ததே ஒழிய, அவர்களால் போராட்ட இயக்கங்களை பகுத்துணரும் அறிவு அவர்களிடம் இருக்கவில்லை. 

ஆரார் முந்தி ஏற்றினார்களோ அவர்களுடன் அணி திரண்டார்கள். அனைவரையும் வரவேற்ற இந்திய அரசாங்கம், அனைவரையும் தனது கைப்பொம்மைகளாக வைத்துக்கொண்டு பிரித்தாளும் தந்திரத்தை கச்சிதமாக செயற்படுத்தியது. அனைவருக்கும் ஆளாள் தெரியாமல் பயிற்சியை வழங்கியதும் இல்லாமல், ஆயுதங்களையும் வழங்கியது. 

இதுபோன்ற சதி வலைக்குள் சிக்குண்ட தலைமைகள், தங்களுக்குள்ளையே குரோதங்களை வளர்த்துக்கொண்டு தேவையற்ற பகைமைகளை வளர்த்துக்கொண்டார்கள். அதிகாரப்போட்டி தலைமைத்துவத்தை தக்க வைத்தல், தனித்துவத்தைப் பேணுதல் என்ற அகங்கார போக்கில் தேவையற்ற சதி வலைக்குள் சிக்குண்டு தங்களுக்குள்ளையே அழிவுகளை ஏற்படுத்தினார்கள். 

இதன் விளைவாக, பல கனவுகளுடன் எதிரியை அழிக்க வேண்டும் என்று உலா வந்த ஏதும் அறியாத பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள், வீணாக மடிந்து போனார்கள். ஆனால், அவர்கள் யாராக இருந்தாலும், அவர்களின் இலட்சியம் ஒன்றாகவே இருந்தது. இதனால்தான் நாம் அனைவரும் சேர்ந்து அனைத்து வீரச்செல்வங்களையும் நினைவுகூரவேண்டும். இதில் வெற்றி பெற்றவர்கள் இந்திய அரசே தவிர, எமது தலைவர்கள் அல்ல. 

ஆனால், அதன் விளைவு எம்மிடையே பிளவுகளும் வீண் குரோதங்களும் ஆளாளை துரோகி என்பதும் மிஞ்சியதே தவிர வேறொன்றுமில்லை.” என்று குறிப்பிட்டுள்ளார். 

- See more at: http://www.tamilmirror.lk/187019/ஒன-ற-ச-ர-ந-த-ப-ர-ட-ட-ர-ந-த-ல-ந-ட-ட-ப-ப-ட-த-த-ர-க-கல-ம-#sthash.IHFj6SLF.dpuf
  • கருத்துக்கள உறவுகள்

இவரே.... புலிகள் இயக்கத்திலிருந்து   விலகி, காட்டிக் கொடுத்து விட்டு...
கதைக்கிற, கதையை.... பாருங்களேன். 

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கு இப்ப  அண்ட ஒரு இடம் தேவைபடுகுது.
முழு   நாட்டையும்   பிடிக்கேலை, தனி நாட்டை  இந்தியா விரும்பேல்லை  எண்ட கோவத்திலதானாம் காட்டிக்குடுத்தவராம். தன்ர துரோகம் தெரியேல்ல, இந்தியாவைச் சுட்டுறார். நேரத்துக்கு ஒரு கதை. புலிகள் யதார்த்தத்தை ஏற்றுக்கொளாதபடியால் தான் யனநாயக வழியில் வந்தனான் எண்டார், இந்தியாவின்ர முடிவை தலைவர் ஏற்றிருக்கலாம் எண்டார், சமஷடியை தலைவர்தான் குழப்பினவர் எண்டார். இப்ப முழு நாட்டையும்  பிடித்திருக்கலாம் எண்ணுறார். பாவம் முடிவு நெருங்குது எண்டு தெரியுது. இவரை இனி யாரும் நம்பப் போவதில்லை. உளறிப்போட்டு, உள்ளுக்கை போகவேண்டியதுதான். கண்டிப்பாய் இப்ப தலைவரின் அன்பையும், அருமையையும் உணருவார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, நவீனன் said:

 


ஒன்றுசேர்ந்து போரிட்டிருந்தால் ‘நாட்டைப் பிடித்திருக்கலாம்’

 

ஒண்டுமே சரியில்லை....சனங்கள் பாவம்....நான் இப்ப திருந்தீட்டன் எண்டு போட்டு....இப்ப ஏன் கூவுது???

  • கருத்துக்கள உறவுகள்

காட்டி கொடுப்பவர்களுடன் துரோகம் செய்பவர்களுடனும்  எப்படி ஒன்று சேர்ந்து போராடமுடியும் ........ ? காலம்கடந்து அவருக்கு எங்கேயோ வலிக்கிறதாக்கும் பாவம்

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, நவீனன் said:



ஒன்றுசேர்ந்து போரிட்டிருந்தால் ‘நாட்டைப் பிடித்திருக்கலாம்’
 

என, மீள்குடியேற்ற முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.  

யாருடன்??????????

  • கருத்துக்கள உறவுகள்

இவர் சும்மா இருந்திருந்தாலே பாதி அழிவு குறைந்திருக்கும் .கிழக்கை காப்பாத்துரன் எண்டு சவுண்டு விட்டு அங்கும் இரத்த ஆறு .

  • கருத்துக்கள உறவுகள்

கருணா  இந்த பெயரை பிரிபிக்ஸ் ஆக வைப்பதை தமிழகத்தில் இப்போ எல்லாரும் தவிர்த்து வருகிறார்கள் ..அதில் வரும் 'ரு' உச்சரிப்பு ஓநாயை குறிப்பதாகும்  அதனுடன்  சேர்ந்து வரும் இன் + ஆ அதன் உச்ச கட்ட செயல்பாட்டை குறிப்பதாகும் ஆது போக  நம்மின்ட குழந்தைக்கு பெயர் வைக்கும் போது 'எ' என்ற எழுத்தின் பின்னால் வரும் அடுத்த சொல் பற்றியும் கவனித்தில் கொள்ளவேண்டும்

டிஸ்கி :

பட்சி ஜோதிடம் சொல்வது என்ன  ? மிதுனராசி திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவரகளுக்கு  'க' சீரியலில் பெயர் வைக்க சொல்கிறது .. கட்டயாம் நாம் பெயர் வைப்பம் . ஒரு கவிதபிரியன் அல்லது கவியரசு இப்படி வைப்பம் .. துரோகிகளின் பெயரை வைத்து அவர்களின் பெயரை மீண்டும் நம் குழந்தைகள் பெயரின் வாயிலாக வரலாற்றில் பதிவு செய்யவேண்டாம் .. நல்ல விடயத்தில் கன்புயூஸ் வரலாம்.. எடுத்து காட்டாக திருவள்ளுவர் ஒருவர் அல்ல பல பேர் அந்த பெயரில் பலர் எழுதிய தொகுப்பே  திருக்குறள்..  சரி ஓக்கே.. குலோத்துங்க சோழன் 1 .2. 3 அதுவும் ஓக்கே.. வரலாறு அவர்களோடு நிறுத்தபட வேண்டும். ஆயிரக்கணக்கான உயிர்களை பலியெடுத்த முஸ்லீம் பேரரசன் அவுரங்கசீப்பின் பெயரை எந்த முஸ்லீம்களும் வைப்பது இல்லை . இயேசு பிரானை காட்டி கொடுத்த யூதாஸின் பெயரை யாரும் வைப்பது இல்லை .. வரலாற்றில் துரோகத்தை தனித்து அடையாளம் காட்ட இது முக்கியமானதாகும்...இவர்கள் தனிமை படுத்தபட வேண்டும்

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.