Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குமார் குணரட்னம் இன்றைய தினம் விடுதலை

Featured Replies

குமார் குணரட்னம் இன்றைய தினம் விடுதலை

kumar-gunaratnam
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

முன்னிலை சோசலிச கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் குமார் குணரட்னம் இன்றைய தினம் விடுதலை செய்யப்பட உள்ளார். சிறைத்தண்டனையை பூர்த்தி செய்து அவர் இன்றைய தினம் விடுதலை செய்யப்படுவார் என சிறைச்சாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வீசா சட்டங்ளை மீறி நாட்டில் தங்கியிருந்த குற்றத்திற்காக அவுஸ்திரேலிய பிரஜையான குமார் குணரட்னத்திற்கு ஓராண்டு கால சிறைத்தண்டனையும், 50,000 ரூபாஅபராதத்தையும் கேகாலை நீதிமன்றம் விதித்திருந்தது.

எதிர்வரும் 9ம் திகதியே குமார் குணரட்னத்தின் தண்டனைக்காலம் பூர்த்தியாக உள்ள நிலையில், கைதிகளுக்கு வழங்கப்படும் பொதுச் சலுகை அடிப்படையில் இன்றே விடுதலை செய்யப்படுவார் என தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, குமார் குணரட்னம் பிரஜாவுரிமை கோரி முறையாக விண்ணப்பம் செய்தால் அது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட முடியும் என உள்துறை அமைச்சர் எஸ்.பி.நாவீன்ன தெரிவித்துள்ளார்.

குமார் குணரட்னத்திற்கு தற்காலிக அடிப்படையில் நாட்டில் தங்கியிருக்க வீசா வழங்கப்பட்டுள்ளதாக கட்சியின் பிரச்சார செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்துள்ளார்.

http://globaltamilnews.net/archives/8996

  • தொடங்கியவர்
குமார் குணரட்ண விடுதலை
 
02-12-2016 12:38 PM
Comments - 0       Views - 2

article_1480662729-aaaa.jpgமுன்னிலை சோஷலிசக் கட்சியின் அரசியல் குழு தலைவர் குமார் குணரட்ண சற்றுமுன்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அநுராதபுர சிறைச்சாலையில் இருந்து வந்த நிலையிலேயே அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

- See more at: http://www.tamilmirror.lk/187336/க-ம-ர-க-ணரட-ண-வ-ட-தல-#sthash.quytOLkg.dpuf
  • தொடங்கியவர்
விடுதலையின் சந்தோஷம்...
 
article_1480671028-IMG_4392.png

சுமார் ஒரு வருடகால சிறைத் தண்டனை அனுபவித்த நிலையில், இன்று விடுதலை பெற்ற முன்னிலை சோஷலிசக் கட்சியின் அரசியல் குழு தலைவர் குமார் குணரட்னம்இ சிறைச்சாலையை விட்டு வெளியேறிய பின்னர் எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம்.

article_1480671055-IMG_4393.png

article_1480671082-IMG_4395.png

- See more at: http://www.tamilmirror.lk/187359/வ-ட-தல-ய-ன-சந-த-ஷம-#sthash.4CHHSslX.dpuf

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே.... குழப்பமாயிருக்கு. மண்டை காயுது......  confused shrug smiley
இவர்.... குமார்  குண இரத்தினமா,  குமார் குண ரத்தினமா.  குமார் குண ரட்ணமா. குமார் குண ரட்னவாவா....tw_dizzy:
அதாவது.. இவர் தமிழரா, சிங்களவரா.....?

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

ஆளைப் பார்த்தால் தமிழ்ப் ப்ட வில்லன் மாதிரி இருக்கிறார்

10 hours ago, தமிழ் சிறி said:

ஒரே.... குழப்பமாயிருக்கு. மண்டை காயுது......  confused shrug smiley
இவர்.... குமார்  குண இரத்தினமா,  குமார் குண ரத்தினமா.  குமார் குண ரட்ணமா. குமார் குண ரட்னவாவா....tw_dizzy:
அதாவது.. இவர் தமிழரா, சிங்களவரா.....?

அப்பா தமிழ் அம்மா சிங்களம், இப்படியாக அமைந்த கலவை இந்த தமிழ் கொஞ்சம் கொஞ்சம் கதைக்க மட்டும் தெரிந்த குமார் குணரத்தினம்.   

உண்மையான பெயர் பிரேம்குமார் குணரத்தினம். 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, போல் said:

அப்பா தமிழ் அம்மா சிங்களம், இப்படியாக அமைந்த கலவை இந்த தமிழ் கொஞ்சம் கொஞ்சம் கதைக்க மட்டும் தெரிந்த குமார் குணரத்தினம்.   

உண்மையான பெயர் பிரேம்குமார் குணரத்தினம். 

இவருக்கு... தமிழ்ப்  பெயர் வைத்தமைக்காக 
அவரின்......    அம்மா , அப்பா அவர்களுக்கு பாராட்டுக்கள்.

அவுஸ்திரேலிய  குடியுரிமை உள்ளவர், ஸ்ரீ லங்காவில் ...  ஒரு வருசம், மறியலில் இருந்தை பார்க்க...
மண்டை....கழண்ட,   சோசலிசம் கதைக்கும் ஆள் போல் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, போல் said:

அப்பா தமிழ் அம்மா சிங்களம், இப்படியாக அமைந்த கலவை இந்த தமிழ் கொஞ்சம் கொஞ்சம் கதைக்க மட்டும் தெரிந்த குமார் குணரத்தினம்.   

உண்மையான பெயர் பிரேம்குமார் குணரத்தினம். 

 இவருடைய அம்மா ஒரு தமிழாசிரியர். அப்பா சிங்களவரோ தெரியாது. மனைவி சிங்கள இனத்தைச் சேர்ந்தவர் எனக் கேள்விப்பட்டேன். இவர் தமிழர் என்பதற்காக கைது செய்யப்படவில்லை. கட்சி முரண்பாட்டினால் கோத்தபாயவினால் முன்பு   கடத்தப்பட்டவர். பிற்பாடு தேர்தல் நேரம் மகிந்தவுக்கு சார்பாக இயங்கியவர் போல்  செய்திகள் வந்தது.

12 hours ago, satan said:

அப்பா தமிழ் அம்மா சிங்களம் - உறுதி செய்யப்பட்ட தகவல்.  உங்கள் கருத்து தவறு.

  • தொடங்கியவர்

குமார் குணரட்னம் அரசியலில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளார்

kumar-gunaratnam

முன்னிலை சோசலிச கட்சியின் அரசியல்சபை உறுப்பினர் குமார் குணரட்னம் அரசியலில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளார். நாட்டின் வீசா சட்டங்களை மீறித் தங்கியிருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டிருந்த குமார் குணரட்னம் கடந்த வெள்ளிக்கிழமை விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

அவுஸ்திரேலிய பிரஜையான குமார் குணரட்னத்திற்கு இரண்டு மாத கால தற்காலிக வீசா வழங்கப்பட்டுள்ள நிலையில் தற்பொழுது அவர் பிரஜாவுரிமைக்காக விண்ணப்பம் செய்துள்ளார். குடியுரிமை கிடைத்தால் ஜனநாயக ரீதியான முறையில் அரசியலில் ஈடுபட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

http://globaltamilnews.net/archives/9183

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, போல் said:

அப்பா தமிழ் அம்மா சிங்களம் - உறுதி செய்யப்பட்ட தகவல்.  உங்கள் கருத்து தவறு.

 குமார் குணரட்ணம் கோத்தபாயவினால் கடத்தப்பட்டபோது, பத்திரிகையாளருக்கு  கண்ணீரோடு பேட்டி கொடுத்தபோது, ஏற்கெனவே தான் ஒரு மகனை இழந்து விட்டதாகவும், தான் ஒரு தமிழ் ஆசிரியர் என்றும்  கொடுத்திருந்ததாக நினைப்பு . ஒருவேளை நான் தவறாக விளங்கிக் கொண்டேனோ தெரியவில்லை. தவறாயின் மன்னித்தருள்க .

3 hours ago, satan said:

நண்பரே! எனது பதிவு கருத்தை / தகவலை உறுதிப்படுத்த மட்டுமே. அபூர்வமாக தவறான கருத்துக்களை அறிந்தோ அறியாமலோ பதிவது மனித இயல்பு தானே. இதற்கெல்லாம் மன்னிப்பு கோருவது அவசியமில்லை என்பது என் கருத்து. 

  • தொடங்கியவர்
5 hours ago, satan said:

 குமார் குணரட்ணம் கோத்தபாயவினால் கடத்தப்பட்டபோது, பத்திரிகையாளருக்கு  கண்ணீரோடு பேட்டி கொடுத்தபோது, ஏற்கெனவே தான் ஒரு மகனை இழந்து விட்டதாகவும், தான் ஒரு தமிழ் ஆசிரியர் என்றும்  கொடுத்திருந்ததாக நினைப்பு . ஒருவேளை நான் தவறாக விளங்கிக் கொண்டேனோ தெரியவில்லை. தவறாயின் மன்னித்தருள்க .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.