Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போயஸ் கார்டனுக்கு நெருக்கமான சேகர்ரெட்டி வீட்டில் ரூ70 கோடி ரூ2000 நோட்டுகள், 100கி.தங்கம் சிக்கியது

Featured Replies

போயஸ் கார்டனுக்கு நெருக்கமான சேகர்ரெட்டி வீட்டில் ரூ70 கோடி ரூ2000 நோட்டுகள், 100கி.தங்கம் சிக்கியது

 

 

சென்னையில் போயஸ் கார்டனுக்கு நெருக்கமான சேகர் ரெட்டி வீட்டில் ஐடி அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தினர்

. இச்சோதனையில் ரூ70 கோடி ரூ2000 நோட்டுகள், 100 கிலோ தங்கம் சிக்கியது.

 சென்னை: போயஸ் கார்டனுக்கு மிக நெருக்கமான கான்டிராக்டர் சேகர் ரெட்டி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தினர். இச்சோதனையில் ரூ90 கோடி ரொக்கம், 100 கிலோ தங்கம் பிடிபட்டது. இதில் ரூ70 கோடி ரூ2,000 நோட்டுகளும் சிக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

சென்னையில் இன்று காலை முதல் 8 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். போயஸ் கார்டனுக்கு நெருக்கமான கான்டிராக்டர் சேகர் ரெட்டி, அவரது உறவினர் சீனுவாச ரெட்டி ஆகியோரது வீடு, அலுவலகங்களில் இந்த சோதனை நடைபெற்றது.

 

இச்சோதனையில் ரூ90 கோடி ரொக்கம் மற்றும் 100 கிலோ தங்கம் சிக்கியது. இதில் ரூ70 கோடிக்கு புதிய ரூ2,000 நோட்டுகளும் பிடிபட்டன.

வேலூர் பூர்வீகம்

வேலூர் பூர்வீகம்

இந்த சேகர் ரெட்டியின் பூர்வீகம் வேலூர் காட்பாடி அருகே உள்ள தொண்டான்துளசி கிராமம். தொடக்கத்தில் சென்னையில் ரயில்வே கான்டிராக்ட் பணிகளை செய்து வந்தார் சேகர் ரெட்டி.

அதிமுக உறுப்பினர்..

அதிமுக உறுப்பினர்.. பின்னர் தொகுதி எம்.எல்.ஏ.க்கள் மேம்பாட்டு நிதியின் கீழான கான்டிராக்ட்டுகளைப் பெறத் தொடங்கினார் சேகர் ரெட்டி. அத்துடன் 1998-ம் ஆண்டு அதிமுகவின் உறுப்பினரானார்.

 

லஞ்சமாக திருப்பதி பிரசாதம்

லஞ்சமாக திருப்பதி பிரசாதம் திருப்பதி கோவில் உயர் அதிகாரிகளுடன் நெருக்கமாக இருந்தவர் ரெட்டி. இதனால் திருப்பதி கோவில் பிரசாதத்துடன் சென்னையில் விவிஐபிக்களை சேகர் ரெட்டி சந்தித்து நட்பாக்கிக் கொண்டார்.

போயஸ் கார்டன் டாக்டர் விஜயபாஸ்கர் மூலமாக சசிகலா குடும்பத்தின் டாக்டர் வெங்கடேஷூடன் அறிமுகமானார் சேகர் ரெட்டி. இதைத் தொடர்ந்து போயஸ் கார்டனுக்கும் நெருக்கமானார் ரெட்டி. கடந்த ஆண்டு அதிமுகவின் புதிய கஜானா என்று ஜூனியர் விகடன் வார இதழ் சேகர் ரெட்டியை குறிப்பிட்டிருந்தது நினைவுகூறத்தக்கது.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/it-raid-chennai-100-kg-gold-seized-269319.html

  • தொடங்கியவர்

ஆளுங்கட்சி புள்ளிகள் மீது பாய்ந்த ஐ.டி ரெய்டு!  -திணறடிக்கும் ‘திடீர்’ வியூகம்

 

IT_Raid_sekar_reddy_16049.jpg

ளுங்கட்சிக்கு நெருக்கமான புள்ளிகள் மீது வருமான வரித்துறையின் நடவடிக்கைகள் பாய ஆரம்பித்துவிட்டன. ' பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிய பின்னணியிலேயே தொழிலதிபர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டன' என்கின்றனர் வருமான வரித்துறை அதிகாரிகள். 

சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள ஆயக்கர் பவனில் கடந்த சில நாட்களாக தீவிர விவாதம் நடந்து வந்தது. ' திங்கள்கிழமையன்று நடவடிக்கையில் இறங்கலாம்' என முடிவு செய்தனர். ' எத்தனை கார்கள் தேவைப்படும்' என்பதையும் முடிவு செய்து, தனியார் ட்ராவல் ஏஜென்சிக்குத் தகவல் கொடுத்தனர். சுமார் 15 லட்ச ரூபாய் வரையில் செலவாகலாம் என்பதைக் கணக்கிட்டுள்ளனர். இன்று நடந்த சோதனையில் புதிய ரூபாய் நோட்டுகளாக 70 கோடி ரூபாய்கள் பிடிபட்டுள்ளன. ' சென்னையில் எட்டு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 100 கிலோ தங்கம் உள்பட 90 கோடி ரூபாய் வரையில் பிடிபட்டுள்ளது. தொழிலதிபர்கள் சேகர் செட்டி, சீனிவாச ரெட்டி, பிரேம் ஆகியோரை குறிவைத்து சோதனை நடத்தப்பட்டது' என்கின்றனர் அதிகாரிகள்.

"பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்குப் பிறகு, புதிய ரூபாய் நோட்டுகளைப் பெறுவதற்காக வங்கி நிர்வாகிகளை அணுகியுள்ளனர் தமிழக அமைச்சர் ஒருவருக்கு நெருக்கமான தொழிலதிபர்கள் சிலர். அண்மையில் கர்நாடக அரசு அதிகாரிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 5 கோடி ரூபாய் புதிய நோட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. முடிவில், 1,100 கோடி ரூபாய் அளவுக்கு புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளாக மாற்றப்பட்ட தகவலை அறிந்தனர். இந்தக் காரியத்தில் 27 வங்கிகள் ஈடுபட்டிருப்பதை அறிந்து மத்திய அரசு அதிர்ச்சியில் ஆழ்ந்தது. இதையடுத்து, பணத்தை மாற்றியவர்கள்; தங்கமாக மாற்றியவர்கள் குறித்த விவரங்களை சேகரிக்கத் தொடங்கினர். தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த அறிவிப்பு வெளியானதால், திங்கள்கிழமை அன்று ரெய்டு நடத்த முடியவில்லை. இன்றும் நாளையும் ரெய்டு நடவடிக்கைகள் பாயும்" என்கின்றனர் வருமான வரித்துறையினர். 

IT_Raid_srinevasa_reddy_16589.jpg

“தமிழக சீனியர் அமைச்சர் ஒருவரின் சம்பந்தி உள்பட மூன்று பேர் வீடுகளில் நேற்று அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இதில் கணக்கில் காட்டப்படாத ஆவணங்களும் பணமும் பிடிபட்டன. இன்று ரெய்டில் சிக்கியவர்களில் ஒருவர், மாநில அரசில் கோலோச்சும் அரசு செயலர் ஒருவருக்கு மிகவும் வேண்டியவர். மணல் வியாபாரத்தில் கொடி கட்டிப் பறக்கிறார். சீனியர் அமைச்சர்களோடு நெருங்கிய உறவில் இருப்பவர். இவர்களுடைய அண்ணா நகர், தி.நகர் வீடுகளில் சோதனை நடந்துள்ளது. பழைய நோட்டுகளை மாற்றியது குறித்து, விரிவான விசாரணை நடத்தப்பட உள்ளது. பணத்தை மாற்றிய சீனியர் அமைச்சர்கள் குறித்த தகவலையும் சேகரித்துள்ளனர். மத்திய அரசின் அறிவிப்புக்குப் பிறகான இவர்களின் செயல்பாடுகளையும் தீவிரமாக கண்காணித்து வந்தனர். வருமான வரித்துறையின் வலையில் எளிதாகவே சிக்கினர். மாநில அமைச்சர் ஒருவரின் உறவினர்களை வளைத்தது; அரசின் உயர் செயலர் பொறுப்பில் உள்ளவரின் நண்பர் வீட்டில் ரெய்டு நடத்தியது என ‘எதையோ’ மனதில் வைத்து மத்திய அரசு களமிறங்கியுள்ளது. ஆட்சி அதிகாரத்தில் கோலோச்சுபவர்களை குறிவைத்துத் தாக்குவதாக உணர்ந்து கொள்ளத் தோன்றுகிறது” என்கிறார் தலைமைச் செயலக அதிகாரி ஒருவர். 

‘புதிய ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு வந்தபோது, சென்னை பாரிமுனை உள்பட சில இடங்களில் மார்வாடிகளை குறிவைத்துக் களமிறங்கியது வருமான வரித்துறை. ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகு ஆளுங்கட்சிக்கு நெருக்கமான புள்ளிகள் குறிவைக்கப்படுவதை அவ்வளவு எளிதாகப் பார்க்க முடியவில்லை’ என்கின்றனர் அ.தி.மு.கவினர். 

http://www.vikatan.com/news/tamilnadu/74482-reason-behind-it-raid-on-admk-supporters.art

  • தொடங்கியவர்

சசிகலாவை வளைக்கத்தான் இந்த ரெய்டா...? : முழுப் பின்னணி

 

சசிகலா

மிழக அரசியல் களத்தைத் தங்கள் கையில் கொண்டுவர நினைக்கிறது பி.ஜே.பி. இதற்கான ஆட்டத்தை முதலில் சேகர் ரெட்டியிடம் இருந்து தொடங்கி உள்ளது. யார் இந்த சேகர் ரெட்டி? சசிகலா குடும்பத்தினரைக்  குறிவைக்கத் தொடங்கி உள்ளதா மத்திய அரசு? தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகின்ற வருமானவரித் துறையின் அதிரடிச் சோதனை மூலம் எதை உணர்த்த விரும்புகிறது? 

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள தொண்டான்துளசி என்ற ஊர்தான் சேகர் ரெட்டியின் சொந்த ஊர். வயது 45. மத்தியதரக் குடும்பம். மனைவி, ஆந்திரா சித்தூரைச் சேர்ந்தவர். ஆரம்பத்தில் சேகர் ரெட்டி, சிறிய கான்ட்ராக்டராக இருந்து சிமென்ட் ரோடு, கிராமச் சாலைகள் போடுவது; டெலிபோன் கேபிள் அமைப்பது என சிறுசிறு வேலைகளை எடுத்துச் செய்துவந்தார். தொடக்கத்தில் காட்பாடியில் இருந்து சென்னைக்கு வந்தபோது எழும்பூர் ரயில் நிலையம் அருகில் உள்ள ஒரு ஹோட்டலில்தான் தங்குவார். ரயில்வே தொழிற்சங்கத் தலைவர் ஒருவரின் தொடர்பு மூலம் ரயில்வேயில் சிறுசிறு கான்ட்ராக்ட்களை எடுத்துச் செய்தார்.

அப்படித்தான் சேகர் ரெட்டி சென்னையில் கால்பதித்தார். சென்னை அண்ணா சாலையில் உள்ள தன் நண்பர் பிரேம் என்பவருக்குச் சொந்தமான விடுதியில் தங்கி, கான்ட்ராக்ட் மற்றும் டெண்டர் விஷயங்கள் தொடர்பாக அதிகாரிகளைச் சந்தித்து வந்தார். 

எம்.எல்.ஏ-க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியில் நிறையப் பணிகள் நடைபெறும். அது தொடர்பான கான்ட்ராக்ட்களைப் பெற, சட்டமன்ற விடுதியில் எம்.எல்.ஏ-க்களைச் சந்தித்துப் பேசுவார். டெண்டர் சிபாரிசுக்காக எம்.எல்.ஏ-க்களைச் சந்திக்க ஆரம்பித்தபோது, ‘அரசியல் தொடர்புகள்’ ஏற்பட்டன. அதன்மூலம், 1998-ல் அ.தி.மு.க-வில் உறுப்பினர் ஆனார்.

திருப்பதி செல்வாக்கு!

திருப்பதி கோயிலில் அவருக்கு செல்வாக்கு இருந்தது. திருப்பதி கோயில் உயர் அதிகாரிகள் தமிழகம் வரும்போதெல்லாம் அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்வது சேகர் ரெட்டிதான். திருப்பதி கோயில் பிரசாதம் மற்றும் லட்டுகளை வாராவாரம் வாங்கித் தந்து, பல வி.ஐ.பி-க்களுடன் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டார். வேலூர் கலெக்டராக இருந்த ஒருவருக்கு, திருப்பதியில் வேண்டிய உதவிகளைச் செய்தார் சேகர் ரெட்டி. அதன்மூலம் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் வட்டாரத்திலும் நுழைந்தார்.

sasikala_01_18291.png‘நம்பிக்கை’ என்றால் ரெட்டி!

அரசியல் வட்டாரத்தில் நெருங்கியபோதுதான் டாக்டர் விஜயபாஸ்கரின் நட்பு கிடைத்தது. இருவரும் சென்னையில் ஒரே அறையில் தங்கியிருந்தார்கள். தனியார் மருத்துவமனையில் விஜயபாஸ்கர் டாக்டராகப் பணியாற்றிய நேரத்தில், சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த டாக்டர் வெங்கடேஷின் நட்பு கிடைத்தது. அந்த நட்பை சேகர் ரெட்டிக்கும் அறிமுகம் செய்துவைத்தார் விஜயபாஸ்கர். யாருடன் பழகினாலும் அவர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகிவிடுவது சேகர் ரெட்டியின் ப்ளஸ். இது, எல்லோருக்கும் பிடித்துவிட வி.ஐ.பி-க்கள் வட்டாரத்தில் உலவ ஆரம்பித்தார்.

தி.மு.க ஆட்சியின்போதும் அதிகாரிகள் துணையுடன் சகல காரியங்களையும் செய்து வந்தார். அந்த ஆட்சியில் பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தங்களை எடுத்து கைமாற்றிவிட்டு, பணம் சம்பாதித்து வந்தார். அ.தி.மு.க ஆட்சி வந்ததும், அவருக்கு மீண்டும் ராஜயோகம் அடித்தது.

அதிகாரி ஆசி!

கான்ட்ராக்ட் வேலைகளை எடுத்துச் செய்ய ஆரம்பித்தபோது, காஞ்சிபுரம் மாவட்டத்தில் கலெக்டராக இருந்தவருடன் சேகர் ரெட்டிக்கு நெருக்கம் அதிகம் ஆனது. இருவரும் ஒரே மொழி பேசக்கூடியவர்கள். இப்போது, அந்த அதிகாரி... அதிகார மையத்தில் முக்கியப் புள்ளியாக இருக்கிறார். அந்த அதிகாரியின் ஆசி இப்போதும் அவருக்கு உண்டு. அவருடைய மகள் திருமணம் நடந்தபோது அதற்கான ஏற்பாடுகளை எல்லாம் சேகர் ரெட்டிதான் பார்த்தார். அவரின் ஆதரவோடு அரசின் பெரிய கான்ட்ராக்ட்கள் எல்லாம் கிடைக்க ஆரம்பித்தன. அவருக்குப் போகத்தான், மற்றவர்களுக்கு கான்டராக்ட்கள் கிடைக்கும் என்கிற நிலை உருவானது. ஒரு கட்டத்தில், ஆறுமுகசாமியிடம் இருந்து மணல் கான்ட்ராக்ட் பறிபோனதற்கு... அந்த அதிகாரிகளும் சில அமைச்சர்கர்களும் சேர்ந்த கூட்டணிதான் காரணம்! புதுக்கோட்டை ராமச்சந்திரன், சேகர் ரெட்டி வசம் இன்று மணல் பிசினஸ் போய்விட்டது!

செல்வாக்கு!

ஜெயலலிதா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தபோது, திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழு உறுப்பினர் பதவிக்கு தமிழகத்தின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார் சேகர் ரெட்டி. மொத்த கேபினெட்டும் அம்மாவுக்காக பூஜை புனஷ்காரங்களில் இருந்தபோது... இந்த ஃபைல் மட்டும் மூவ் ஆனது என்றால், சேகர் செல்வாக்கைக் கவனியுங்கள். திருப்பதியில் மொட்டை போட போனபோது, ஓ.பன்னீர்செல்வத்துடன் போகும் அளவுக்கு நெருக்கம். பன்னீர்செல்வத்தின் அந்தப் பயண ஏற்பாட்டைச் செய்தவர் அவர்தான்.

கார்டனில் ஒலிக்கும் பெயர்!

அமைச்சர்கள், அதிகாரிகள் எனப் பல வளையங்களைத் தாண்டி கார்டனுக்கு நெருக்கமானவராக மாறிவிட்டார் சேகர் ரெட்டி. காலப்போக்கில் டாக்டர் வெங்கடேஷ் உள்ளிட்டோர் கார்டனைவிட்டு வெளியேற்றப்பட்டபோதும் விசுவாசத்தின் விளைவாக கார்டனுக்குள் நிலைத்து நின்றார். கார்டனில் அதிகமாக ஒலிக்கும் பெயர்களில் ஒன்றாக மாறிவிட்டது சேகர் ரெட்டியின் பெயர். கார்டனுக்குத் தேவையான எதையுமே இவர்தான் செய்து முடிக்கிறார். இப்போது, அ.தி.மு.க-வில் சேகர் ரெட்டி அசைக்க முடியாத ஆள். தினகரன், டாக்டர் வெங்கடேஷ், ராவணன், கலியமூர்த்தி, ‘மிடாஸ்’ மோகன் போன்றவர்கள் கண் அசைவுக்கு அ.தி.மு.க-வினர் தவம் கிடந்ததுபோல, சேகர் ரெட்டியைப் பார்க்கக் காத்துக் கிடப்பதாகச் சொல்கிறார்கள். சேகர் ரெட்டி போன் என்றால், அமைச்சர்கள் பலர் எழுந்து நின்றுதான் பேசுவதாகக் கிண்டல் அடிக்கிறார்கள். இவ்வளவு அதிகாரத்தோடு வலம் வந்தாலும்... அவர், அ.தி.மு.க-வில் வெறும் உறுப்பினர் மட்டுமே!

வளைக்கும் பி.ஜே.பி.! 

sasikala_18042.pngஇன்று (8-12-16), சேகர் ரெட்டியின் தி.நகர், அண்ணா நகர் அலுவலகங்களில் வருமானவரித் துறையினர் அதிரடிச் சோதனை நடத்தினர். இதன் பின்னணி பற்றி விசாரித்தபோது பி.ஜே.பி பிரமுகர் ஒருவர், பல திடுக்கிடும் தகவல்களைத் தெரிவித்தார். ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு, தமிழக அரசியல் களத்தைக் கைப்பற்ற முயற்சி செய்யும் பி.ஜே.பி அதற்கான முதல்கட்ட வேட்டையை தொடங்கிவிட்டதாகக் கூறிய அவர், மேலும் பல செய்திகளை நம்மிடம் கொட்டினார். சசிகலாவை, கட்சியின் பொதுச் செயலாளர் ஆக்குவதற்கு பி.ஜே.பி கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. பொதுச் செயலாளர் பதவிக்கு, பி.ஹெச்.பாண்டியனையோ அல்லது செங்கோட்டையனையோ நியமிக்க வேண்டும் என்றும், தம்பித்துரையை மத்திய அமைச்சர் ஆக்கும் யோசனையும் இருப்பதாக சசிகலாவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போலோ மருத்துமனையில், சசிகலாவுக்கு ஆதரவாக எம்.எல்.ஏ-க்கள் கையெழுத்துப் போட்டுள்ளனர். அந்த ஃபைலை எல்லாம் கிழித்துப் போட்டுவிட்டனர். அ.தி.மு.க தலைமைக் கழகத்துக்கு நேரில் வந்த வெங்கய்ய நாயுடு, அவர் தயார் செய்து கொண்டு வந்திருந்த பைலில்... எம்.எல்.ஏ-க்கள் அனைவரையும் கையெழுத்துப் போடவைத்து கவர்னர் மாளிகைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அத்துடன், அன்று இரவே அவர்களைப் பதவி ஏற்கவைத்தது வரை  எல்லாமே வெங்கய்ய நாயுடு உத்தரவின் கீழ்தான் நடந்தது. 

ஜெயலலிதா மறைவுக்கு அஞ்சலி செலுத்த தமிழகம் வந்த பிரதமர் மோடி, விமானத்தைவிட்டு 20 நிமிடங்கள்  கழித்தே வெளியே வந்தார். விமானத்தில்... அவர், ஆளுநர் மற்றும் தமிழக பி.ஜே.பி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திவிட்டுத்தான் வந்தார். வரும் காலங்களில் யாரிடம் பேசுவது, என்ன செய்வது என்கிற உத்தரவுகளை பிரதமர், அவர்களுக்கு சில குறிப்புகளைக் கொடுத்துவிட்டுத்தான் சென்று இருக்கிறார். அதன்படி, தமிழகத்தில்   ஆளுநர் அனுமதி இல்லாமல் எந்த ஃபைலும் நகரக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், மத்திய அரசுக்கு தமிழகத்தின் சார்பில்... தம்பித்துரை மட்டுமே தொடர்பாக இருப்பார் என்று கூறப்பட்டு உள்ளது. இன்னும் 10 நாட்களுக்குள் அமித்ஷா தமிழகம் வர இருக்கிறார். அப்போது, இன்னும் பல விஷயங்கள் நடக்கும். அதற்குள், சசிகலா குடும்பத்தை தங்கள் வளையத்துக்குள் கொண்டுவரவே இன்று சேகர் ரெட்டி வீடுகளிலும், ஜாஸ் சினிமாஸ் அலுவலகத்திலும் வருமானவரித் துறையினர் அதிரடிச் சோதனையை இன்று நடத்தியுள்ளனர். இது, சசிகலா தரப்புக்குக் கொடுக்கப்பட்ட எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.   

திடீர் தாக்குதல்! 

இவ்வளவு அறிவுரைக்குப் பிறகும், சசிகலா சார்பில் வேறு சிலரிடம் உதவி கேட்கப்பட்டு இருக்கிறது. இதுவே  இந்தத் திடீர் ரெய்டுக்கு காரணம். மேலும்,  நேற்று போயஸ்  கார்டன் இல்லத்தில் நடராஜனும் சசிகலாவும் சந்தித்து பேசி உள்ளனர். இது, டெல்லிக்கு கடும் கோபத்தை  ஏற்படுத்தி உள்ளது. சேகர் ரெட்டியிடம், சசிகலா மற்றும் அ.தி.மு.க முக்கியப் புள்ளிகளின் பணம் இருப்பதால்  அவரை வளைத்தால், பொருளாதார ரீதியாக மிகப்பெரிய இழப்பு இருக்கும் என்பதால்... முதலில் அவரை, தேர்ந்து எடுத்துள்ளனர்.  

http://www.vikatan.com/news/coverstory/74507-is-this-raid-to-trap-sasikala--a-detail-report.art

  • தொடங்கியவர்

ரெட்டிக்காக வேலை பார்த்த ரிசர்வ் வங்கி!  -120 கிலோ தங்கமும் 'அந்த' 2 நாட்களும்

 

sekar_reddy_14236.jpg

தொழிலதிபர் சேகர் ரெட்டியின் வீடுகளில் வருமான வரித்துறை நடத்திய அதிரடி ரெய்டால், அதிர்ந்து போய் இருக்கிறார்கள் அ.தி.மு.கவின் சீனியர் அமைச்சர்கள். ' அவரது வீட்டில் கைப்பற்றப்பட்ட 70 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய நோட்டுக்கள் அனைத்தும் வங்கிகளில் இருந்து வாங்கப்படவில்லை. ரிசர்வ் வங்கி அதிகாரிகளே மாற்றிக் கொடுத்துள்ளனர்' என அதிர வைக்கின்றனர் அதிகாரிகள். 

சென்னை, நுங்கம்பாக்கத்தில் இருந்து நேற்று காலையில் தனியார் ட்ராவல்ஸ் வாகனத்தில் கிளம்பிய வருமான வரித்துறையின் புலனாய்வு அதிகாரிகள், தொழிலதிபர் சேகர் ரெட்டியின் தி.நகர் அலுவலகம், காட்பாடியில் உள்ள வீடு ஆகியவற்றில் அதிரடியாக சோதனை நடத்தினர். இதில், 100 கோடி ரூபாய் பணம் மற்றும் 120 கிலோ தங்கம் ஆகியவை பிடிபட்டதாக தகவல்கள் வெளியானது. " தமிழக அரசில் கோலோச்சும் அமைச்சர்களுக்கும் உயர் பொறுப்பில் உள்ள அதிகாரி ஒருவருக்கும் மிகவும் நெருக்கமானவராக வலம் வந்தவர் சேகர் ரெட்டி. அவரிடம் வருமான வரித்துறை பாய்ந்ததன் பின்னணியில் பல விஷயங்கள் உள்ளன" என விவரித்தார் வருமான வரித்துறை அதிகாரி ஒருவர். அவர் நம்மிடம், " தமிழகத்தில் வரி ஏய்ப்பில் ஈடுபடும் தொழிலதிபர்கள் யார் என்ற பட்டியலை தயார் செய்வோம். அதில் சந்தேகப்படும் வகையில் செயல்படுபவர்களை முழுமையாக வலைக்குள் கொண்டு வருவோம். அப்படித்தான் சேகர் ரெட்டியின் தொடர்புகளும் அவர் மூலம் ஆதாயம் அடைந்த அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் பட்டியலை தயாரித்தோம். அவர்களுக்குத் தெரியாமலேயே செல்போன் தொடர்புகள், பணத்தை பதுக்கும் இடம் பற்றிய விவரங்களை முழுமையாகப் பட்டியலிட்டோம். ஆளுங்கட்சி புள்ளிகளோடு அவருக்குள்ள நெருக்கம் பற்றிய தகவல்களை, சி.பி.டி.டி(நேரடி வரிகள் விதிப்பு வாரியம்)க்கு தெரியப்படுத்தினோம். அவர்களிடம் இருந்து எந்தத் தகவலும் வரவில்லை. 

reddy_raid_14396.jpg

' எதற்கோ காத்திருக்கிறார்கள்' என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. முதல்வர் இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னால், ரெய்டுக்கான ஆயத்தப் பணிகளில் இறங்கினோம். சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் ரெய்டு என்பதால், அதிகப்படியான செலவு ஏற்படவில்லை. திடீரென நேரடி வரிகள் விதிப்பு வாரியத்தில் இருந்து, 'இரண்டு நாட்கள் காத்திருக்குமாறு' தகவல் வந்தது. அதன்பிறகு, முதல்வர் இறப்பு பற்றிய தகவல் வெளியானது. உடனே, ' 2 நாட்களுக்குப் பிறகு களத்தில் இறங்குங்கள்' எனத் தகவல் கொடுத்தனர். அதன்படியே நேற்று சேகர் ரெட்டி உள்பட இரண்டு பேர் வீடுகளில் அதிரடியாக களமிறங்கினோம். ரெட்டி மூலம் நடத்தப்பட்ட வர்த்தகம், பரிவர்த்தனைகள் என அனைத்து விவரங்களும் சேகரிக்கப்பட்டுவிட்டன. வருமான வரித்துறையின் துணை இயக்குனர் ராய் ஜோஸ் தலைமையில், 150 பேர் கொண்ட குழுவினர் ஆய்வில் ஈடுபட்டனர். எதற்காக இந்த அதிரடி ரெய்டு? யாரை வளைப்பதற்காக நடத்தப்பட்டது என்பதெல்லாம் வாரியத்தின் உயர் அதிகாரிகளுக்கு மட்டுமே தெரியும். மாநில அரசில் கோலோச்சும் சிலரை வழிக்குக் கொண்டு வரும் முயற்சியாகவும் பார்க்கலாம்" என்றார் விரிவாக. 

" சேகர் ரெட்டியின் வீடுகளில் பணம் வைக்கப்பட்டிருந்த காட்சிகளைப் பார்த்து அதிர்ந்துவிட்டார்கள் ஊழியர்கள் சிலர். அண்மையில் வெளியான 2 ஆயிரம் ரூபாய் புதிய நோட்டுக் கட்டுக்கள், சீல் பிரிக்கப்படாமல் அட்டைப் பெட்டிகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. வங்கிகளுக்குச் செல்லக் கூடிய நோட்டுக்களாக இருந்தால், பிரித்து வைக்கப்பட்டிருக்கும். இவை நேரடியாக ரிசர்வ் வங்கியில் இருந்து வந்தவை. அங்குள்ள அதிகாரிகள் துணையோடு கறுப்பு பணத்தை மாற்றியிருக்கிறார்கள். ஒரு பெட்டியில் எத்தனை கட்டுக்கள் உள்ளன என்பதைக் கணக்கிட்டு, மொத்தமாக புதிய ரூபாய் நோட்டுக்கள் எவ்வளவு உள்ளது என்ற கணக்கிற்கு வந்துள்ளனர். தனித்தனியாக எண்ண ஆரம்பித்திருந்தால் நீண்ட நேரம் ஆகியிருக்கும். அதனால்தான், ரெய்டு முடிந்த சில மணி நேரங்களில் 70 கோடி ரூபாய்க்குப் புதிய நோட்டுக்கள் சிக்கின என்ற தகவலை வெளியிட முடிந்தது. மூட்டை, மூட்டையாக பணத்தைக் கட்டிக் கொண்டு வந்துள்ளனர். கணக்கில் காட்டப்படாத 120 கிலோ தங்கமும் பிடிபட்டது. ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பிற்குப் பிறகான ரெய்டு என்பதாக இதை எடுத்துக் கொள்ள முடியாது. ரெட்டியின் மூலம் ஆளுங்கட்சி புள்ளிகளை வலைக்குள் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளனர். வரக் கூடிய நாட்களில் நடக்கப் போகும் காட்சிகளில் இருந்தே, ரெட்டி விவகாரத்தில் என்ன நடந்தது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்" என்கிறார் வருமான வரித்துறையின் புலனாய்வுப் பிரிவு ஊழியர் ஒருவர். 

ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து நடத்தப்படும் வருமான வரித்துறையின் வேட்டைக்கு, என்ன விலை கொடுக்கப்பட இருக்கிறது என்ற கேள்விகளும் அ.தி.மு.க வட்டாரத்தில் எழாமல் இல்லை. 

http://www.vikatan.com/news/tamilnadu/74554-reason-behind-it-raid-on-contractor-sekar-reddy.art

  • தொடங்கியவர்
gallerye_23295336_1665811.jpg

அ.தி.மு.க., பிரமுகரும் கான்ட்ராக்டருமான சேகர் ரெட்டி, அவரது உறவினர், நண்பர்களின்
வீடுகளில், இரண்டாவது நாளாக நேற்றும், வருமான வரி, 'ரெய்டு' தொடர்ந்தது.

 

Tamil_News_large_166581120161209232900_318_219.jpg

நேற்று மட்டும், ஏழு கோடி ரூபாய் ரொக்கம், ஏழு கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இந்த சோதனையால், தமிழக அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பீதி அடைந்துள்ளனர்.

இதற்கிடையில், வங்கி ஏ.டி.எம்.,களில், மக்கள் நீண்ட வரிசையில் நிற்கும் நிலையில், சேகர் ரெட்டி, 10 கோடி ரூபாய்க்கு, புதிய நோட்டுகள் பெற்றது குறித்தும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கறுப்புப் பணத்தை வெளியே கொண்டு வர, பதுக்கல்காரர்களுக்கு, செப்டம்பர் வரை, மத்திய அரசு அவகாசம் தந்தது. அப்போது, தானாக முன்வந்து கணக்கு காட்டாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரித்தது.அதன்பின், வருமான வரி ஏய்ப்பு செய்தவர்கள் மீது தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில், தமிழகத்தைச் சேர்ந்த, கல்வி மற்றும் தொழில் நிறுவனங்களின் அதிபர்களும் தப்பவில்லை.

கள்ள நோட்டு ஒழிப்பிற்காக, நவ., 8ல், செல் லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு வெளியானது. அதன்பின்,வங்கிகளில் முறைகேடாகபணத்தை மாற்றுவதும், தங்கத்தை வாங்கி குவிப்பதும் அதிகரித்திருப்பது தெரிய வந்தது.

அதனால், நாடு முழுவதும் வருமான வரித்துறை அதிகாரிகள், அதிரடி ரெய்டு நடத்தி

வருகின்றனர். சென்னையிலும், நகைக் கடை களில் அதிரடி சோதனை நடத்தினர்; வாடிக்கை யாளர்களிடமும் விசாரித்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, அ.தி.மு.க., பிரமுகரும், அரசு பணி கான்ட்ராக்டருமான சேகர் ரெட்டி, அவரது ஒன்றுவிட்ட சகோதரர் சீனுவாச ரெட்டி மற்றும் நண்பர்கள் பிரேம், ராகவேந்திரா ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்க ளில், நேற்று முன்தினம் காலையில் இருந்து, வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை,தி.நகர்,யோகநாதன் தெருவில் உள்ள சேகர் ரெட்டி வீடு, விஜயராகவா சாலையில் உள்ள அலுவலகம், வேலுார், காட்பாடி வீடுகள், பெங்களூரில் உள்ள அலுவலகம், சென்னை, அண்ணா நகரில் உள்ள நண்பர் பிரேமின் வீடு என, ஒன்பது இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

நேற்று முன்தினம் பகலில்90 கோடி ரூபாய் ரொக்கம், 120 கிலோ தங்க கட்டிகளை, அதிகாரி கள் பறிமுதல் செய்தனர். பின், ரொக்கம் பறி முதல்,நள்ளிரவில், 100 கோடி ரூபாயாக உயர்ந் தது. நேற்றும் அந்த இடங்களில், சோதனை தொடர்ந்தது.
 

100 அதிகாரிகள்


இதுகுறித்து, வருமான வரி அதிகாரிகள் கூறிய தாவது:சேகர் ரெட்டி தொடர்பான சோதனை யில், 100 பேர் ஈடுபட்டுள்ளனர். இரவு பகலாக சோதனை நடந்து வருகிறது. நேற்று மாலை வரை, 127 கிலோ தங்க நகைகள், 107 கோடி ரூபாய் பணம் சிக்கியுள்ளது. அதில், 10 கோடி ரூபாய் அளவுக்கு, புதிய, 2,000 ரூபாய் நோட்டுகள் சிக்கின.

அதனால்,வங்கிகளில் கறுப்பு பணத்தை முறை கேடாக மாற்றினாரா என, சந்தேகம் எழுந்தது. அந்த கோணத்திலும்,விசாரணை நடத்தினோம். இந்த சோதனையின் போது, நிலம் தொடர்பான ஆவணங்கள் சிக்கியுள்ளன; அவற்றையும்

 

ஆய்வு செய்து வருகிறோம். தமிழகத்தில் இது வரை நடந்த சோதனைகளில், இதுவே மிக அதிகம். செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப் புக்கு பின், நாட்டில் சிக்கிய மிகப் பெரிய தொகை இது.
 

அமைச்சர்கள் பீதி


சேகர் ரெட்டியின் அரசியல் தொடர்புகள் அதிகம்; அது பற்றியும் விசாரித்து வருகிறோம். சேகர் ரெட்டி, முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில், அரசு துறைகளில் கான்ட்ராக்ட் பணிகளை நேர டியாக எடுத்து செய்துள்ளார். அதனால், அந்த துறை அமைச்சர்களுடன் அவருக்கு நெருங்கிய தொடர்புள்ளது.
மேலும் அந்ததுறைகள் தொடர்பான, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், ஒரு ஐ.பி.எஸ்., அதிகாரி ஆகியோ ருடனும், அவருக்கு நெருங்கிய உறவு இருக்கி றது. இதுதவிர, ஜெயலலிதாவின் தோழி சசிகலா குடும்பத்தினர் சிலருடன், நெருங்கி பழகியுள்ளார். தமிழக அரசின் உயர் பதவியில் இருப்பவருக்கும், அவருக்கும் நெருக்கம் இருந்ததற்கான ஆதாரம் சிக்கியுள்ளது. எனவே, அந்த அமைச்சர்களும், அதிகாரிகளும் துாக் கத்தை தொலைத்து, பீதி அடைந்து ள்ளனர். இவ்வாறு வருமான வரி அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

ரூ.2,000 நோட்டு: பரபரப்பு தகவல்!


பெங்களூரில், சில தினங்களுக்கு முன் நடந்த சோதனையில், ஆறு கோடி ரூபாய்க்கு, புதிய, 2,000 ரூபாய் நோட்டுகள் சிக்கின. அது, தனியார் வங்கியில் பெறப்பட்டது தெரியவந்தது. ஆனால், சேகர் ரெட்டி வீட்டில் சிக்கியுள்ள, 2,000 ரூபாய் நோட்டுகள்,வரிசைப்படி இல்லை. அவர், மணல் கான்ட்ராக்ட் பணியில் ஈடு பட்டுள்ளதால், அதில் வந்த தொகையாக இருக்கக் கூடும்.எனினும் அவருடைய வங்கிக் கணக்குகள், உறவினர்களின் வங்கிக் கணக்கு பரிவர்த்தனை களை ஆய்வு செய்து வருகிறோம் என, வருமானவரிதுறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
- நமது சிறப்பு நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1665811

  • தொடங்கியவர்

சேகர் ரெட்டியிடம் மேலும் 40 கிலோ தங்கம் பறிமுதல்

 

TTD-J_Sekhar_5735_14418.jpg

சென்னையில் சேகர் ரெட்டிக்கு சொந்தமான இடத்தில் மேலும் 40 கிலோ தங்கம் இன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 8 ஆம் தேதி சேகர் ரெட்டி, ஸ்ரீனிவாசன், பிரேம் ரெட்டி வீடுகள் உட்பட 8 இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடந்தது.

அதில், 96.89 கோடி மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகளும், 9.63 கோடி புதிய 2000 ரூபாய் நோட்டுகளும், 36.29 கோடி ரூபாய் மதிப்புள்ள 127 கிலோ தங்கம் ஆகியவை  பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சகம் நேற்று அறிவித்திருந்தது.

இந்நிலையில் சேகர் ரெட்டிக்கு சொந்தமான இடத்தில் மேலும் 40 கிலோ தங்கம் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மொத்தம் 167 கிலோ தங்கம் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் சோதனை தொடரும் என நேற்று நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியது குறிப்பிடத்தக்கது. 

http://www.vikatan.com/news/tamilnadu/74614-chennai-it-raid--40-kg-gold-seized-from-sekar-reddys-place.art

  • தொடங்கியவர்

சேகர் ரெட்டியின் காரில் மேலும் ரூ.24 கோடி புதிய நோட்டுகள் சிக்கியது

 

சேகர் ரெட்டியின் சொந்த ஊரான காட்பாடி தொண்டான் துளசியில் நடத்தப்பட்ட சோதனையின் போது சேகர்ரெட்டிக்கு சொந்தமான காரில் பதுக்கிய மேலும் ரூ.24 கோடி புதிய நோட்டுகளை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.

 
 
சேகர் ரெட்டியின் காரில் மேலும் ரூ.24 கோடி புதிய நோட்டுகள் சிக்கியது
 
சென்னை:

சென்னையை சேர்ந்த தொழில் அதிபர் சேகர் ரெட்டி, அவரது உறவினர் சீனிவாசரெட்டி, நண்பர் பிரேம் ஆகியோரது வீடுகளில் வருமானவரி துறை அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக சோதனை நடத்தினர்.

கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக மத்திய அரசு 500, 1000 ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதித்ததை தொடர்ந்து நாடு முழுவதும் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை வெளியில் கொண்டு வருவதற்கு, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இப்படி பதுக்கி வைக்கப்பட்டிருந்த கருப்பு பணத்தை பெரும் பணக்காரர்கள் பலர், தங்கமாக மாற்றி வைத்துள்ளனர். இதனை பறிமுதல் செய்யவும் வருமான வரித்துறையினர் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

இந்நிலையில்தான், தமிழகத்தில் மணல் விற்பனையில் கோலோச்சியுள்ள தொழில் அதிபர் சேகர் ரெட்டி கோடிக்கணக்கான ரூபாயை பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

நேற்று முன்தினம் நடத்தப்பட்ட சோதனையில், ரூ.106 கோடி ரொக்கப் பணமும், 127 கிலோ தங்கமும் சிக்கியது. நேற்றைய சோதனையில் கூடுதலாக 32 கோடி ரூபாயும், 30 கிலோ தங்கமும் பிடிபட்டது. இதன் மூலம் மொத்தம் ரூ.138 கோடியும், 157 கிலோ தங்கமும் சிக்கி இருக்கிறது. இதனை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

சேகர்ரெட்டி வங்கிகளில் பணம் முதலீடு செய்ததற்கான ஆவணங்களும், ஒப்பந்தங்கள் பெற்றது தொடர்பான ஆவணங்களும் மூட்டை மூட்டையாக சிக்கி உள்ளன.

நாடு முழுவதும் மக்கள் 2 ஆயிரம் ரூபாயை எடுக்க வங்கிகளில் மணிக்கணக்கில் காத்திருக்கும் நிலையில், சேகர்ரெட்டியின் வீட்டில் ரூ.10 கோடிக்கு ரூ.2 ஆயிரம் புதிய நோட்டுகள் இருந்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இவ்வளவு பணம் புதிய ரூபாய் நோட்டுகளாக சேகர் ரெட்டிக்கு கிடைத்தது எப்படி? என்பது பற்றிய விசாரணையும் முடுக்கி விடப்பட்டுள்ளது.

சேகர் ரெட்டியின் வங்கி கணக்குகளை வைத்து, வங்கி அதிகாரிகள் மட்டத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் இதுவே மிகப்பெரிய வேட்டையாகும். இதற்கு முன்னர் நடத்தப்பட்ட எந்த சோதனைகளின் போதும் இதுபோன்று நகை-பணம் சிக்கியது இல்லை.

இதனை தொடர்ந்து சேகர்ரெட்டியிடம் பறிமுதல் செய்யப்பட்ட நகை-பணம் குறித்து விரைவில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்று தெரிகிறது. சி.பி.ஐ. அதிகாரிகளின் விசாரணை வளையத்துக்குள் சேகர்ரெட்டி கொண்டு வரப்படும்போது இந்த விவகாரத்தில் மேலும் பல புதிய தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே சேகர் ரெட்டியுடன் சென்னை பாரிமுனையை சேர்ந்த பைனான்சியர்கள் 3 பேர் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளனர். அவர்களிட மும் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 3 பேருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சேகர்ரெட்டியின் அரசியல் பின்னணி பற்றியும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே சேகர் ரெட்டிக்கு சொந்தமான காரில் பதுக்கிய மேலும் ரூ.24 கோடி புதிய நோட்டுகள் வேலூர் அருகே இன்று சிக்கியது.

வேலூர் காட்பாடி அருகே சேகர் ரெட்டியின் சொந்த ஊரான தொண்டான் துளசி கிராமத்தில் உள்ள அவரது வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் 3-வது நாளாக இன்று சல்லடை போட்டு சோதனை நடத்தினர்.

தொண்டான் துளசி மற்றும் காட்பாடி, வேலூர் பகுதிகளில் சேகர் ரெட்டி யார் யாருடன் தொடர்பு வைத்திருந்தார்? அவருக்கு நெருக்கமானவர்கள் யார்? என்ற பட்டியலையும் சேகரித்து தீவிர சோதனை நடந்தது.

சேகர்ரெட்டியின் உறவினர்கள் மற்றும் ஊர்காரர்களிடமும் வருமான வரித்துறை அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

இதையடுத்து, வாலாஜா, பள்ளிகொண்டாவில் சேகர்ரெட்டிக்கு சொந்தமான மணல் குவாரிகளிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

காட்பாடி தொண்டான் துளசியில் நடத்தப்பட்ட சோதனையின் போது சேகர்ரெட்டிக்கு சொந்தமான காரை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.

06DECD54-229D-4E2B-9784-9E819F51F2F8_L_s

கார் டிக்கியை திறந்து பார்த்தபோது, கட்டு கட்டாக ரூபாய் நோட்டுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. எல்லாம் புதிய ரூ.500, ரூ.2000 நோட்டுகளாகவே இருந்தன. அவற்றின் மதிப்பு ரூ.24 கோடியாகும்.

2 நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் சேகர் ரெட்டிக்கு சொந்தமான ரூ.200 கோடிக்கு மேலான சொத்துக்களை பறிமுதல் செய்துள்ளனர்.

இந்த நிலையில் மேலும் 24 கோடிக்கு புதிய ரூபாய் நோட்டுகள் சிக்கியது வருமான வரித்துறை அதிகாரிகளை அதிர்ச்சியடைய செய்தது.

வருமான வரித்துறை அதிகாரிகளின் வளையத்துக்குள் சேகர்ரெட்டி சிக்கி உள்ளதால் அவரது பினாமிகள் மூலம் பதுக்கி வைத்துள்ள மேலும் பல கோடி ரூபாயை மறைத்து வைக்க ஏற்பாடுகள் நடப்பதாக தெரிகிறது.

இவ்வளவு கோடிக்கு புதிய ரூபாய் நோட்டுகளை சேகர்ரெட்டி மாற்றியதில் வேலூரில் உள்ள வங்கி அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என வருமான வரித்துறை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

அடுத்ததாக சேகர் ரெட்டிக்கு உதவிய வங்கி அதிகாரிகள் மற்றும் சேகர் ரெட்டியின் பினாமிகளின் பட்டியலையும் வருமான வரித்துறை அதிகாரிகள் தயாரித்து விசாரணை நடத்த உள்ளனர்.

ரூ.24 கோடி பணத்துடன் காரை வருமான வரித்துறை அதிகாரிகள் சென்னை கொண்டு வருகிறார்கள்.

http://www.maalaimalar.com/News/TopNews/2016/12/10153725/1055457/Sekhar-reddy-rs-24-crore-new-currency-seized-in-car.vpf

  • தொடங்கியவர்
gallerye_235851622_1666369.jpg

அ.தி.மு.க., கான்ட்ராக்டர் சேகர் ரெட்டியிடம் இருந்து, இதுவரை 131 கோடி ரூபாய் பணம், 177 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

 

Tamil_News_large_1666369_318_219.jpg

'அடேங்கப்பா, திருப்பதி ஏழுமலையானுக்கே சவால் விடுவாரோ' என, மக்கள் வியக்கும் அளவுக்கு அவரது வீடு, அலுவலகம் மற்றும் காரில் இருந்து பணம் மற்றும் தங்கக் கட்டிகளை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர். இந்த சோதனையை அடுத்து சி.பி.ஐ., அதிகாரிகளின் விசாரணை வளையத்திலும் சேகர் ரெட்டி சிக்கியுள்ளார்.

வேலுார் மாவட்டம், தொண்டான் துளசி கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர் ரெட்டி; 'ஜே.எஸ்.ஆர்., இன்ப்ராடெக்' என்ற நிறுவனத்தை நடத்துகிறார். அதன் மூலம் நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணித் துறையில், 'கான்ட்ராக்ட்' எடுத்து வந்தார். 'எஸ்.ஆர்.எஸ்., மைனிங்' என்ற பெயரில், தமிழகம் முழுவதும், மணல் குவாரிகளை நடத்தும் உரிமையை பெற்றுள்ளார்.

அவரது உறவினர் சீனுவாசலு ரெட்டியுடன் சேர்ந்து பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள சேகர் ரெட்டி, திருமலை தேவஸ்தான உறுப்பினராகவும் இருந்தார். ஜெயலலிதா, சசிகலாவுக்கு நெருக்கமானதன் காரணமாக, அமைச்சர்கள், அதிகாரிகள் மத்தியிலும், செல்வாக்கு மிக்கவராக வலம் வந்தார்.

ஜெயலலிதா மறைந்து சில நாட்களே ஆன நிலையில், சேகர் ரெட்டி, அவரது உறவினர் சீனுவாசலு ரெட்டி, நண்பர்கள், பிரேம் ரெட்டி, ராகவேந்திரன் ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் என, எட்டு இடங்களில், 8ம் தேதி முதல், வருமான வரி சோதனை நடந்து வருகிறது. அதில், நேற்று முன்தினம் வரை, 107 கோடி ரூபாய் பணம், 127 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு பின், நாட்டிலேயே மிகப் பெரிய பறிமுதல் நடவடிக்கை என, கூறும் அளவுக்கு தோண்ட ,தோண்ட, அவரது வீடுகளில் இருந்து பணமும் தங்கமும் சிக்கி வருகின்றன. அவரிடம் பறி முதல் செய்யப்பட்ட தொகையில், 10 கோடி

ரூபாய் அளவிற்கு, புதிய, 2,000 ரூபாய் நோட்டுகள் இருந்தன.

ஆனால், அவற்றின் எண்கள் வரிசைப்படி இல்லை. அதனால், வங்கிகளில் இருந்து,முறை கேடாக பெறப்படவில்லை என, அதிகாரிகள் கருதினர். தொழில் ரீதியாக, சென்னை, சவுகார் பேட்டை, பாரிமுனை போன்ற சில இடங்களில், கமிஷனுக்கு மாற்றப்பட்டு இருக்கலாம் என, நினைத்தனர்.

புதிய ரூபாய் நோட்டுகள்கட்டுக்கட்டாக கிடைத் திருப்பதால், இதில் வங்கி அதிகாரிகளுக்கு தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தது. அதனால், சி.பி.ஐ., அதிகாரிகளும் களத்தில் குதித்துள்ளனர். சேகர் ரெட்டி பற்றிய விசார ணையை, நேற்று துவங்கினர்.

இதற்கிடையே, சென்னையில் நேற்று, சேகர் ரெட்டிக்கு சொந்தமான மேலும் சில இடங்க ளில், 'ரெய்டு' நடந்தது; அதில், மேலும், தங்கம், பணம் கிடைத்தது.
 

வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது


சேகர் ரெட்டி தொடர்பாக, சென்னையில், கூடுத லாக, ஐந்து இடங்களில் சோதனை நடந்தது. நுாற்றுக்கும் அதிகமான அலுவலர்கள், சோத னையில் ஈடுபட்டனர். இதில், கட்டுக் கட்டாக முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன; அவற்றை, லாரியில் ஏற்றிக் கொண்டு வந்துள்ளோம். வேலுாரில், சேகர் ரெட்டி வீட்டில் இருந்து, காரில் கடத்திச் செல்ல முயன்ற 24 கோடி ரூபாயும் சிக்கியது.

இது தவிர, சென்னையில் இரு இடங்களில் இருந்து 37 கிலோ மற்றும் 13 கிலோ என 50 கிலோ தங்கம் சிக்கியுள்ளது. இதுவரை 131 கோடி ரொக்கப் பணம், 177 கிலோ தங்கக் கட்டி கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. செல்லாத நோட்டுகளுக்கு பதிலாக, 2,000 ரூபாய் நோட்டு களை மாற்றியது தொடர்பாக, சில பைனான்சி யர்களிடம் விசாரணை நடந்து வருகிறது, என்றனர்.
 

சி.பி.ஐ., விசாரணை!


வருமான வரித்துறையினர், சேகர் ரெட்டி தொடர்பான சோதனை தகவல்களை, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கப் பிரிவுஅதிகாரிகளிடம் பகிர்ந்துள்ளனர். வெளிநாட்டு பணப் பரிவர்த் தனை எதுவும் இருப்பதாக, இப்போதைக்கு தெரியவில்லை. அதனால் அமலாக்கப் பிரிவு தரப்பில், எந்த விசாரணையும் இல்லை. புதிய

 

 

 

 

spaceplay / pause

qunload | stop

ffullscreen

shift + slower / faster

volume

mmute

seek

 . seek to previous

126 seek to 10%, 20% … 60%

 

ரூபாய் நோட்டுகள் சிக்கியிருப்பதால், வங்கி களின் தொடர்பு பற்றி சி.பி.ஐ., விசாரணை நடக்கிறது.
 

தனியார் வங்கிகள் தப்பாது!


சி.பி.ஐ., அதிகாரிகள் கூறியதாவது:வழக்கமாக, அரசு வங்கிகளின் பண மோசடிகளை மட்டுமே கையாள்வோம்.தனியார் வங்கிகளில், சோத னையிட மாட்டோம். சேகர் ரெட்டி வழக்கில், தனியார் வங்கிகளுக்கும் தொடர்பு இருக்க வாய்ப்பு உள்ளது. இது ரிசர்வ் வங்கி வெளியிட்ட 2,000 ரூபாய் நோட்டு பற்றிய விவகாரம் என்பதால் தனியார் வங்கியிலும் சோதனை நடத்த திட்டமிட்டுள் ளோம். அதற் காகவே சேகர் ரெட்டி பரிவர்த்தனை வைத்தி ருந்த வங்கிகளின் பட்டியலை பெற்றுள்ளோம், என்றனர்.
 

காரில் சிக்கிய ரூ.24 கோடி!


வேலுார் மாவட்டத்தில் உள்ள சேகர் ரெட்டி யின் பூர்வீக வீட்டுக்கு நேற்று காலை 5:00 மணிக்கு அதிகாரிகள் சென்றனர். அதை பார்த் ததும் அங்கிருந்து இரண்டு கார்கள் படுவேக மாக கிளம்பின; வருமான வரி அதிகாரிகள் விரட்டி பிடிக்க முயன்றனர். ரெட்டி கார்கள் ஆந்திர மாநிலம், சித்துார் நோக்கி பறந்தன. அதில் ஒரு காரை அதிகாரிகள் மடக்கிய போது டிரைவர் தப்பியோடி விட்டார். அந்த காரில் கட்டுக்கட்டாக புதிய, 2,000 ரூபாய் நோட்டு களாக 24 கோடி ரூபாய் இருந்தது.
 

திருப்பதி தேவஸ்தானம்: சேகர் ரெட்டி நீக்கம்


திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவ லர் குழு உறுப்பினராக தமிழகத்தை சேர்ந்த தொழிலதிபர் சேகர் ரெட்டி 2014ல் ஆந்திர அரசால் நியமிக்கப்பட்டார். அவரின் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து பல கோடி ரூபாய் ரொக்க பணம், தங்க கட்டி களை பறிமுதல் செய்து வருகின்றனர். இத னால் அறங்காவலர் குழு உறுப்பினர் பதவியில் இருந்து சேகர் ரெட்டியை ஆந்திர அரசு நீக்கி நேற்று உத்தரவிட்டது.

- நமது சிறப்பு நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1666369

  • தொடங்கியவர்

3-வது நாள் சோதனை: சேகர்ரெட்டி வீட்டில் 6 மூட்டைகளில் பணக்குவியல்- சுவர் அறைகளில் நகைகள் சிக்கியது

பதிவு: டிசம்பர் 11, 2016 12:45

 
 

மூன்று நாட்கள் நடத்திய சோதனையில் சேகர்ரெட்டிக்கு சொந்தமான ரூ.166 கோடி ரொக்கம், 181 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.

 
 
 
 
3-வது நாள் சோதனை: சேகர்ரெட்டி வீட்டில் 6 மூட்டைகளில் பணக்குவியல்- சுவர் அறைகளில் நகைகள் சிக்கியது
 

சென்னை:

தொழில்அதிபர் சேகர் ரெட்டி வீடுகளில் சிக்கிய பணம் மற்றும் நகைகள் தலையை கிறுகிறுக்க வைக்கும் வகையில் உள்ளது.

இவ்வளவு பணம், நகைகள் அவர் எப்படி வாங்கிக் குவித்தார் என்று அதிகாரிகளும் பொதுமக்களும் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர். கருப்புப் பணத்தை ஒழிக்க மத்திய அரசு மேற்கொண்டுள்ள அதிரடி நடவடிக்கையின் காரணமாகவே சேகர்ரெட்டி சிக்கியுள்ளார்.

ரூ.500, ரூ.1000 நோட்டுகள் ஒழிக்கும் நடவடிக்கைகளில் இந்தியாவில் அதிகாரிகளில் அதிக தொகையுடன் சிக்கியவர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

தொழில்அதிபர் சேகர் ரெட்டியின் பூர்வீகம் வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள தொண்டான் துளசி எனும் கிராமம் ஆகும். முதலில் இவர் பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரராக இருந்தார். பிறகு சென்னை தி.நகர் பசுல்லா சாலையில் உள்ள வணிக வளாகத்தில் 3-வது தளத்தில் “ஜெ.எஸ்.ஆர். இன்ப்ரா டெக்”, எனும் கட்டுமான நிறுவனத்தை தொடங்கிய பிறகு மிகப்பெரிய கோடீசுவரராக மாறினார்.

காட்பாடி காந்திநகர் கிழக்கு 10-வது குறுக்குத் தெருவில் “ப” வடிவில் பிரமாண்ட பங்களா கட்டி குடியேறினார். இந்த நிலையில் “எஸ்.ஆர்.எஸ்.மைனிங்” என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் மணல் குவாரிகளை நடத்தத் தொடங்கிய பிறகு அவர் எட்டிப்பிடிக்க முடியாத பணக்காரராக உயர்ந்தார்.

ரியல் எஸ்டேட், கட்டு மானம், மணல் குவாரி, நீர் மேலாண்மை, பொதுப்பணித்துறை ஒப்பந்தங்கள், நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்கள் என பல்வேறு தொழில்கள் மூலம் சேகர்ரெட்டிக்கு கோடிக்கணக்கில் பணம் குவிந்தது. அந்த பணத்தில் கணிசமான தொகைக்கு தங்க நகைகள் வாங்கினார். கிலோ கணக்கில் நகைகள் சேர்ந்த நிலையில் மீதமுள்ள ரூபாய் நோட்டுகளை கட்டுக் கட்டாக கட்டி பெட்டிகளில் வைத்தார்.

சென்னை, காட்பாடியில் உள்ள வீடுகள், அலுவலகங்களில் நகை, பணத்தை அவர் வைத்திருந்தார். இந்த நிலையில் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் அவர் தன்னிடம் இருந்த பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற திணறினார். வங்கி மேலாளர்கள் மற்றும் பைனான்சியர்கள் மூலம் சுமார் ரூ.40 கோடிக்கு பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிவிட்டார்.

அந்த 40 கோடி ரூபாய் புதிய பணக்கட்டுக்களை தனது வீடுகளில் வைத்திருந்தார். இதுபற்றி யாரோ ஒருவர் வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு ஆதாரங்களுடன் தகவல்களை அனுப்பினார். இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த சில தினங்களாக தொழில்அதிபர் சேகர் ரெட்டியின் நடவடிக்கைகளை கண்காணித்து வந்தனர்.

கடந்த 8-ந்தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் சுமார் 100 பேர் சேகர் ரெட்டியின் சென்னை, காட்பாடி வீடுகள், அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தினார்கள். சேகர்ரெட்டியின் உறவினர் சீனுவாசலுரெட்டி, நண்பர்கள், பிரேம்ரெட்டி, ராகவேந்திரன் ஆகியோரின் வீடுகளிலும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் வருமான வரித்துறை அதிகாரிகள் மயக்கம் போட்டு விழும் அளவுக்கு எடுக்க, எடுக்க பணக்கட்டுகள், நகைகள், ஆவணங்கள் கிடைத்தன.

கடந்த 3 நாட்களில் சேகர் ரெட்டிக்கு சொந்தமான 5 இடங்களில் சோதனை நடந்தது. சென்னை நுங்கம் பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் நடந்த சோதனையில் 50 கிலோ தங்க நகைகள் சிக்கியது. காட்பாடியில் உள்ள இரு வீடுகளில் ஒரு வீடு ‘சீல்’ வைக்கப்பட்ட நிலையில் மற்றொரு வீட்டில் இருந்து 100 கிலோவுக்கும் மேல் நகைகள் கிடைத்தது. நகைகளை பொறுத்தவரை நேற்று மதியம் வரை சேகர்ரெட்டி வீடுகள், அலுவலகங்களில் இருந்து சுமார் 181 கிலோ தங்க நகைகள் அதிகாரிகள் வேட்டையில் கிடைத்தது.

பணமும் கட்டுக்கட்டாக சிக்கியது. நேற்று மாலை வரை ரூ.166 கோடி ரொக்கப் பணம் கிடைத்தது. இதில் சுமார் ரூ.40 கோடி அளவுக்கு புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருந்தன.

வேலூரில் நேற்று காலை அதிகாரிகள் சோதனை நடத்த சென்றபோது சேகர்ரெட்டி வீட்டில் இருந்து 2 கார்கள் தப்பிச் சென்றன. வருமான வரித்துறை அதிகாரிகள் விரட்டியதில் ஒரு கார் மட்டும் சிக்கியது. மற்றொரு கார் தப்பிச் சென்று விட்டது.

பிடிபட்ட காரில் சோதனையிட்டபோது ரூ.24 கோடி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தப்பிச் சென்ற காரில் பல கோடி ரூபாய் கொண்டு செல்லப்பட்டு இருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள்.

சென்னை, காட்பாடியில் கடந்த 3 நாட்களாக நடந்த சோதனை ஓரளவுக்கு நிறைவு பெற்ற நிலையில் 8-ந்தேதி காட்பாடியில் ‘சீல்’ வைக்கப்பட்ட சேகர் ரெட்டியின் பிரதான வீட்டில் சோதனை நடத்த அதிகாரிகள் முடிவு செய்தனர். வேலூர்- திருவண்ணாமலை மண்டல வருமான வரித்துறை இயக்குனர் முருகபூபதி தலைமையில் 5 கார்களில் 12 அதிகாரிகள் நேற்று மாலை 5.45 மணிக்கு வந்தனர். அவர்களுடன் பணம், நகைகளை மதிப்பீடு செய்வதற்காக 2 வங்கி அதிகாரிகளும் உடன் வந்திருந்தனர்.

சேகர்ரெட்டியின் மனைவி ஜெயஸ்ரீயை அதிகாரிகள் சென்னையில் இருந்து காட்பாடிக்கு வரவழைத்திருந்தனர். ஜெயஸ்ரீ முன்னிலையில் ஒவ்வொரு ‘சீல்’ உடைக்கப்பட்டு பணம், நகைகள் எடுக்கப்பட்டன.

8-ந்தேதி இரவு அந்த வீட்டில் சந்தேகத்துக்குரிய 198 இடங்களில் அதிகாரிகள் சீல் வைத்திருந்தனர். அந்த சீல்கள் ஒவ்வொன்றாக அகற்றப்பட்டு விடிய, விடிய அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

நேற்றிரவு 7.20 மணிக்கு தொடங்கிய சோதனை இன்று (ஞாயிறு) அதிகாலை 5 மணி வரை நீடித்தது. மொத்தம் 14 மணி நேரம் வருமான வரித்துறை அதிகாரிகள் காட்பாடி வீட்டில் துருவி, துருவி சோதனையிட்டு நகை, பணம், ஆவணங்களை கைப்பற்றினார்கள்.

வங்கி அதிகாரிகள் பணத்தை கணக்கிடுவதற்காக ரூபாய் நோட்டு எண்ணும் 2 எந்திரங்கள் கொண்டு சென்றிருந்தனர். குவியல், குவியலாக கண்டுபிடிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகள் உடனுக்குடன் எந்திரங்கள் மூலம் எண்ணப்பட்டன.

பிறகு அந்த ரூபாய் நோட்டுகள் கட்டு கட்டாக கட்டப்பட்டு டிராவல் ‘பேக்’கு களில் அடைக்கப்பட்டன. அப்படி 6 மூட்டைகள் நிறைய பணம் கட்டுக் கட்டுகளாக அடைக்கப்பட்டது. இதில் பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளும், புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகளும் இருந்தன. இதன் மதிப்பு பல கோடிகள் இருக்கும் என்று தெரிகிறது.

வருமான வரித்துறை அதிகாரிகளின் நேற்றிரவு சோதனையில் ரூபாய் நோட்டுகளை விட அதிக நகைள் கிடைத்தது. அதிகாரிகளை இது மிகவும் ஆச்சரியப்படுத்தியது. எனவே காட்பாடி வீட்டுக்குள் ரகசியமாக தங்கம் பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் என்று அவர்களுக்கு சந்தேகம் நிலவியது.

எனவே சேகர்ரெட்டியின் வீட்டை அவர்கள் அங்குலம், அங்குலமாக ஆய்வு செய்தனர். அவர் குடும்பத்தினரின் படுக்கை அறைகள், கழிவறைகளிலும் தீவிர சோதனை நடந்தது. இதன் மூலம் குவியல், குவியலாக நகைகள் கிடைத்தது.

நகைகள் கிடைத்த விதம் வருமான வரித்துறையினருக்கு மேலும் சந்தேகத்தை அளித்தது. எனவே சேகர்ரெட்டி வீட்டுக்குள் சுரங்க அறைகள் எங்காவது உள்ளதா என்று ஜெயஸ்ரீயிடம் விசாரித்தனர். அதற்கு பலன் கிடைத்தது.

வீட்டு சுவரில் பல ரகசிய அறைகள் இருப்பது தெரிந்தது. லாக்கர்கள் போல அந்த சுவர் அறைகள் இருந்தன. அந்த லாக்கர்களில் ஏராளமான நகைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது.

அந்த நகைகள் அனைத்தையும் வங்கி அதிகாரிகள் ஆய்வு செய்து கணக்கிட்டனர். பிறகு அவை 2 சூட்கேஸ்களில் அடுக்கப்பட்டன. இதற்கிடையே நிறைய சொத்து ஆவணங்களும் விடிய, விடிய நடந்த சோதனையில் சிக்கின. அந்த சொத்து ஆவணங்கள் மட்டும் 3 பெரிய டிராவல் பேக்குகளில் அடைக்கப்பட்டது.

இன்று காலை 7.20 மணிக்கு அதிகாரிகள் நடத்திய வேட்டை முடிவுக்கு வந்தது. அதிகாரிகள் பணக்கட்டுகளை 6 மூட்டைகளிலும், நகைகளை 2 சூட்கேஸ்களிலும், ஆவணங்களை 3 டிராவல் ‘பேக்’குகளில் வைத்து வெளியில் எடுத்து வந்தனர். அவைகள் 2 கார்களில் ஏற்றி பலத்த பாதுகாப்புடன் சென்னை வருமான வரித்துறை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

நகைகள் கொண்ட சூட்கேசை காரில் ஏற்றும் போது, ஒரு அதிகாரியிடம் நிருபர்கள் ‘‘எவ்வளவு நகைகள் உள்ளது?’’ என்று கேட்டனர். அதற்கு அந்த அதிகாரி 2 விரலை காட்டி சென்றார். எனவே 20 கிலோ நகைகள் அல்லது 200 கிலோ நகைகள் அந்த சூட்கேசில் இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

நேற்று மாலை வரை சேகர்ரெட்டிக்கு சொந்தமான ரூ.166 கோடி ரொக்கம், 181 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில் விடிய, விடிய நடந்த சோதனையில் சிக்கிய நகைகள், பணத்தையும் கணக்கிட்டால் மொத்தம் ரூ.500 கோடிக்கு மேல் பணம், நகைகள் பிடிபட்டு இருக்கும் என்று கூறப்படுகிறது. வருமான வரித்துறை அதிகாரிகள் தற்போது அந்த பணம், நகைகளை கணக்கிட்டு வருகிறார்கள். அவை முடிந்த பிறகுதான் சேகர்ரெட்டி வீட்டில் எவ்வளவு பணம், நகை சிக்கியது என்ற தகவல் அதிகாரப்பூர்வமாக தெரியவரும்.

சேகர்ரெட்டியின் மற்ற அலுவலகங்களில் தொடங்கிய சோதனை இன்னும் முடியவில்லை. மணல் குவாரிகள் தொடர்பான கணக்குகளை சரிபார்க்க இன்னும் சில தினங்கள் தேவைப்படும்.

எனவே சேகர் ரெட்டியிடம் இருந்து மேலும் பணம், நகைகள் சிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பணம், நகைகள் மற்றும் சொத்துக்களை முடக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

http://www.maalaimalar.com/News/TopNews/2016/12/11124555/1055568/3rd-day-raid-sekhar-reddy-house-cash-jewellery-found.vpf

  • தொடங்கியவர்

சேகர் ரெட்டியிடம் வருமான வரித்துறை, சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை

சேகர்ரெட்டியிடம் குவியல் குவியலாக சிக்கி இருக்கும் நகை-பணம் குறித்து, சி.பி.ஐ அதிகாரிகளும் அதிரடியாக விசாரித்து வருகின்றனர்.

 
 
 
 
சேகர் ரெட்டியிடம் வருமான வரித்துறை, சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை
 
சென்னை:

கருப்பு பண ஒழிப்பின் உச்சக்கட்ட நடவடிக்கையாக மத்திய அரசு, 500, 1000 ரூபாய் நோட்டுகளுக்கு அதிரடியாக தடை விதித்த பின்னர், வருமான வரித்துறை அதிகாரிகள் நாடு முழுவதும் சோதனை நடத்தி வருகிறார்கள்.

பெரும் பணக்காரர்களும், தொழில் அதிபர்களும் தங்களது வீடுகளில் பதுக்கி வைத்துள்ள கருப்பு பணத்தை மீட்கும் முயற்சியாக, இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

சென்னையை சேர்ந்த பிரபல மணல் வியாபாரியும், தொழில் அதிபருமான சேகர் ரெட்டியின் வீட்டிலும் கணக்கில் வராத பல கோடி ரூபாய் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 8-ந் தேதி அன்று விசாரணையை தொடங்கினர்.

தி.நகர் காட்பாடியில் உள்ள சேகர் ரெட்டியின் வீடு மற்றும் அலுவலகத்திலும், அவரது உறவினரான சீனிவாச ரெட்டி, நண்பர் பிரேம் ஆகியோரது வீடுகளிலும் சோதனை நடந்தது. 3 நாட்களாக நடத்தப்பட்ட இந்த சோதனை நேற்று காலை வரையில் நீடித்தது.

கடந்த 8-ந் தேதி காலை அன்று தொடங்கிய வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனை, நேற்று காலை வரையில் தொடர்ச்சியாக நடந்தது. கிட்டத்தட்ட 80-மணி நேரத்துக்கும் மேலாக நடத்தப்பட்ட சோதனையில் , 179 கிலோ, தங்கம், ரூ.166 கோடி ரொக்கப்பணம் ஆகியவை சிக்கிஇருப்பது நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

500,1000 ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்ட பின்னர், அனைத்து மாநிலங்களிலுமே பணத்தட்டுப்பாடு நிலவிவருகிறது.

தமிழகத்திலும் சில்லரை தட்டுப்பாடு மற்றும் பண பிரச்சினையால் ஏழை மற்றும் நடுத்தரமக்கள் திண்டாடி வருகிறார்கள். தங்களிடம் உள்ள ரூபாய் நோட்டுகளை தினமும் அவர்கள் எண்ணி எண்ணியே செலவழித்து வருகிறார்கள். கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக இதே நிலையே நீடித்து வருகிறது.

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் தங்களது சம்பள பணத்தை கூட எடுக்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். ஒரு நாளைக்கு ரூ. 2 ஆயிரம் மட்டுமே எடுக்க முடியும் என்ற அறிவிப்பு இன்னும் தளர்த்தப்படாமலேயே இருப்பதும், இந்த ரூபாய் கூட சில்லரையாக கிடைக்காமல், 2 ஆயிரம் ரூபாய் நோட்டாகவே கிடைப்பதும் மக்களின் அவதியை அதிகரித்துள்ளது. இதனால் வட மாநிலங்கள் பலவற்றில் வங்கிகள் சூறையாடப்படும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.

இப்படி நாடு முழுவதும் ரூபாய் நோட்டு பிரச்சினை பூதாகரமாக தலைதூக்கி இருக்கும் நிலையில் சேகர் ரெட்டியிடம் மட்டும் இவ்வளவு பெரிய தொகையை பதுக்கியது எப்படி? என்கிற கேள்வி எழுந்துள்ளது. அதிலும் ரூ. 34 கோடிக்கு புதிய ரூபாய் நோட்டுகள் கிடைத்தது எப்படி? என்பதும் மிகப் பெரிய கேள்வியாக உருவெடுத்துள்ளது.

2 ஆயிரம் ரூபாய் நோட்டை எடுப்பதற்கு நாடு முழுவதும் மக்கள் மணிக்கணக்கில் காத்துக்கிடக்கும் நிலையில் ரூ. 34 கோடிக்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் சேகர் ரெட்டிக்கு மட்டும் கிடைத் தது பற்றிய விசாரணையை வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிரப்படுத்தி உள்ளனர்.

சேகர்ரெட்டியிடம் குவியல் குவியலாக சிக்கி இருக்கும் நகை-பணம் குறித்து, சி.பி.ஐ அதிகாரிகளும் அதிரடியாக விசாரித்து வருகின்றனர்.

அவரது வங்கி கணக்குகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. ரூ. 34 கோடி புதிய ரூபாய் நோட்டுகளும் முறைகேடாக மாற்றப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

வங்கி அதிகாரிகள் பலர் இதற்கு உடந்தையாக இருந்துள்ளனர். அவர்களும் சேகர் ரெட்டியுடன் சேர்ந்து விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்படுகின்றனர்.

அதே நேரத்தில் சேகர் ரெட்டியின் பணப் பரிமாற்றம் குறித்து அமலாக்க பிரிவு அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இப்படி 3 துறை அதிகாரிகளும் சேகர் ரெட்டியிடம் விசாரணையை முடுக்கி விட்டிருப்பதால் அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

4 நாளாக நடத்தப்பட்ட சோதனை முடிந்திருக்கும் நிலையில் இன்று 5-வது நாளாக சேகர் ரெட்டியிடம் விசாரணை முடுக்கி விடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

http://www.maalaimalar.com/News/TopNews/2016/12/12115822/1055678/income-tax-CBI-officials-investigation-in-Sekhar-reddy.vpf

  • தொடங்கியவர்

சேகர் ரெட்டி காட்டி கொடுக்கப்போவது யாரை?

107 கோடி பணம்... 127 கிலோ தங்கம்

 

‘ஆளும் கட்சியின் புதிய கஜானா’ என்ற தலைப்பில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் 19-ம் தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில் அட்டைப்பட கட்டுரை வெளியிட்டிருந்தோம். அதில், அ.தி.மு.க அமைச்சர்களின் துணையோடு கார்டன் வட்டாரத்தின் நெருங்கிய நட்பில் சேகர் ரெட்டி இணைந்ததைப் பற்றி விரிவாக செய்தி வெளியிட்டிருந்தோம். தற்போது மத்திய அரசின் வருமான வரித்துறை, சேகர் ரெட்டியின் வீடுகளில் ரெய்டை நடத்தி முடித்திருக்கிறது. இதைத் தொடர்ந்து திருப்பதி தேவஸ்தான உறுப்பினர் பொறுப்பில் இருந்து அவரை நீக்கியிருக்கிறது ஆந்திர அரசு. அவரது வீட்டில் பெட்டி, பெட்டியாகக் கைப்பற்றப்பட்ட பணமும் மூட்டைகளில் அள்ளப்பட்ட தங்கமும் ஆளும்கட்சி வட்டாரத்தை அதிர வைத்திருக்கிறது.

p30.jpg

திவாகரன் நட்பும் கார்டன் தொடர்பும்

வேலூர், காட்பாடியைப் பூர்விகமாகக் கொண்ட சேகர் ரெட்டியின் வளர்ச்சி கடந்த ஐந்தாண்டுகளில்தான் உச்சத்தைத் தொட்டது என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். ‘‘சசிகலாவின் தம்பி திவாகரனின் உதவியாளர் சிவராஜ் மூலமாகத்தான், அதிகாரத்தில் உள்ளவர்களுடன் சேகர் ரெட்டி நெருக்கமானார். தஞ்சாவூரைச் சேர்ந்த அமைச்சர் ஒருவருடன் நல்ல நட்பில் இருந்தார். கார்டன் வட்டாரத்தில் நுழைந்ததும், பொதுப்பணித் துறையில் அவருடைய வளர்ச்சி, யாரும் அவரை நெருங்க முடியாத அளவுக்குச் சென்றுவிட்டது. யாருக்கு என்ன வேண்டும் என்பதைக் கண்டறிந்து கரன்சிகளை வாரி இறைப்பதில் ரெட்டியைப் போல் ஒருவரைப் பார்க்க முடியாது. வருமான வரித்துறையின் வலையில் ரெட்டி சிக்குவதற்கு மிக முக்கியக் காரணமே, அரசுச் செயலர் ஒருவர்தான். பணப் பரிமாற்றத்திலும் வர்த்தகத்திலும் இருவருக்கும் உள்ள தொடர்புகள், அதன் மூலம் ஆந்திராவில் நடந்துவரும் வர்த்தகம் ஆகியவை வருமான வரித்துறையின் கண்களை உறுத்திக்கொண்டே இருந்தது. மேலும், டெல்லியில் ஜெயலலிதா தொடர்பான வழக்கு விவகாரங்களைக் கையாள்வதில் அரசுச் செயலரும் ரெட்டியும் சேர்ந்து செயல்பட்ட விவரங்கள் அனைத்தையும் கண்காணித்து வந்தனர். பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் ஜெயலலிதா இருந்தபோது, திருப்பதி தேவஸ்தான போர்டு உறுப்பினர் குழுவில் இடம் பெற்றார் சேகர் ரெட்டி.

கஜானாவைக் காட்டிக் கொடுத்த ‘புள்ளி’!

சிறையில் இருந்து ஜெயலலிதா வந்ததும் திருப்பதியில் மொட்டை போட்டார் ஓ.பி.எஸ். அப்போது அவருடன் ரெட்டியும் சேர்ந்து இருக்கும் படங்கள் வெளியாகின. அந்தக் காலகட்டத்தில், பொதுப்பணித் துறைக்கும் அமைச்சராக இருந்தார் ஓ.பன்னீர்செல்வம். 2016 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, நிதித்துறைக்கு மட்டும் அமைச்சராக நியமிக்கப்பட்டார் ஓ.பி.எஸ். தற்போது சசிகலாவின் நம்பிக்கைக்குரிய அமைச்சர் ஒருவரோடு வலம் வந்தார் ரெட்டி. இவர்கள் மூலம், ஆட்சி அதிகாரத்தின் பரிவர்த்தனைகளை முழுமையாக வளையத்துக்குள் கொண்டு வந்துவிடலாம் என்பதற்காகவே ரெய்டு நடத்தியுள்ளனர். இந்த ரெய்டு விவகாரத்தால், அ.தி.மு.க-வின் சீனியர் அமைச்சர்கள் வருத்தத்தில் உள்ளனர். ஏனென்றால், ‘திருப்பதிக்குச் செல்கிறோம்’ என ஒற்றை வார்த்தை சொன்னால்போதும். தங்கும் இடம் முதல், வேண்டிய லட்டுகளை வாங்கித் தருவது வரையில் ரெட்டி ஆட்களின் உபசரிப்பு சிறப்பாக இருக்கும். கடந்த 3 நாட்களாக நடக்கும் ரெய்டால் மன்னார்குடி தரப்பினர் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். இதுகுறித்து ‘முக்கிய’ அமைச்சரை நேரில் வரவழைத்துப் பேசியிருக்கிறார் சசிகலா. அவரிடம், ஏற்கெனவே தாங்கள் ரெட்டியோடு இணைந்து மேற்கொண்ட வர்த்தகம் பற்றியும் தற்போது எந்தத் தொடர்பும் இல்லை என்பதைப் பற்றியும் விவரித்திருக்கிறார். ஆனால், ரெட்டியின் பணமும் தங்கமும் இருக்கும் இடத்தை இவ்வளவு துல்லியமாகக் காட்டிக் கொடுத்தது யார் என்ற கேள்வி, கார்டன் வட்டாரத்தில் கிளம்பியுள்ளது” என்கின்றனர் அ.தி.மு.க-வினர்.

“வருமான வரித்துறையின் சோதனையால், தலைமைச் செயலகத்தில் உள்ள அதிகாரிகள் சிலர் அச்சத்தில் உறைந்துள்ளனர். ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்குப்பின், ரெட்டி தொடர்பில் உள்ள நிறுவனங்கள் மூலம்தான் பணப் பரிமாற்றத்தை நடத்தியுள்ளனர் இவர்கள். பொதுப் பணித்துறை, நெடுஞ்சாலைத் துறை மட்டுமல்லாமல், அரசின் முக்கிய முடிவுகளை எடுக்கும் உயர் அதிகாரிகள் பலரும், ரெட்டியின் குட்புக்கில் இருந்துள்ளனர். குறிப்பாக, ‘உயர்’ அதிகாரியின் வட்டத்தில் உள்ளவர்கள்தான் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். ரெட்டி தரப்பில் இருந்து என்ன மாதிரியான தகவல்கள் பெறப்பட்டன என்பது பற்றி, டெல்லியில் உள்ள சிலரிடம் கேட்டு வருகின்றனர். மாநில அரசின் உயர் அதிகாரி களையும் தங்கள் பக்கம் திருப்பும் வேலையில் மத்தியில் உள்ளவர்கள் ஈடுபடுகிறார்களோ என்ற சந்தேகம்தான் வலுத்துள்ளது” என்கிறார் தலைமைச் செயலக அதிகாரி ஒருவர்.

p30a.jpg

காக்க வைத்த ‘அந்த’ 2 நாட்கள்!

மத்திய நிதியமைச்சகம் கட்டுப்பாட்டின்கீழ் வரும் வருமான வரித்துறை புலனாய்வுப் பிரிவில், கடந்த சில வாரங்களாகவே தீவிர ஆலோசனை நடந்து வந்துள்ளது. ஆனால், யாரைக் குறிவைத்து ரெய்டு நடத்தப்பட இருக்கிறது என்ற தகவல் மிகுந்த ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது.

‘‘ ‘சேகர் ரெட்டி மற்றும் சீனிவாச ரெட்டி, பிரேம் உள்ளிட்டவர்களைக் குறிவைத்து ரெய்டு நடத்தப்பட இருக்கிறது’ என்ற தகவல், வருமான வரித்துறையின் புலனாய்வுத்துறை துணை இயக்குனர் ராய் ஜோஸ் மற்றும் டெல்லியில் உள்ள நேரடி வரிகள் விதிப்பு வாரியத்தின் தலைவர் ஆகியோருக்கு மட்டுமே தெரியும். அவருடைய வீடு, அலுவலகம், ஆந்திரா தொடர்புகள் ஆகியவற்றைக் குறிவைத்து, கடந்த இரண்டு மாதங்களாக தகவல் சேகரித்து வந்தனர். இந்த நிலையில், ‘ரெட்டியின் பணப் பரிவர்த்தனைகள் எந்த வகையில் நடத்தப்படுகின்றன’ என்ற தகவலை ஆளும் கட்சியில் உள்ள சிலரது மூலமாகத் தெரிந்துகொண்டுள்ளனர். அதனால்தான், ரெட்டி வீட்டில் இருந்து ரூ.107 கோடி பணமும் 127 கிலோ தங்கமும் பிடிபட்டன’’ என்று விளக்கிய வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் தொடர்ந்து, “முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்றுவந்த காலத்திலேயே சேகர் ரெட்டி உள்ளிட்ட சிலருக்கு செக் வைக்கும் வேலைகள் நடந்துவந்தன. ஜெயலலிதா மரணமடைவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, ரெய்டுக்குச் செல்லத் தயாரானது 150 பேர் கொண்ட அதிகாரிகள் குழு. அதற்குள் டெல்லியில் உள்ள நேரடி வரிகள் விதிப்பு வாரியத்தில் இருந்து அவசர போன்கால் வந்துள்ளது.

p30b.jpg

‘இரண்டு நாட்களுக்குப் பிறகு சென்னையிலும் வேலூரிலும் ஆய்வை நடத்துங்கள்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘முதல்வர் குறித்த அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம்’ என்பதால்தான், இவ்வாறு சொல்லப்பட்டது என்பதை பின்னர்தான் புரிந்துகொண்டோம். தற்போது கணக்குக் காட்டப்பட்டுள்ளது குறைவான தொகைதான். ரெட்டி மூலமாக ஆளும் கட்சியின் அனைத்து பரிவர்த்தனைகளும் சேகரிக்கப்பட்டுவிட்டன. அவரது வீட்டில் கைப்பற்றப்பட்ட 9.63 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக் கட்டுகள் ஆச்சர்யத்தை ஏற்படுத்தின. வங்கிகள் மூலமாக அவை பெறப்பட்டிருக்கலாம் என்பதை நம்ப முடியவில்லை. ரெட்டியின் திருப்பதி தேவஸ்தான தொடர்புகள் மூலம், புதிய பணக்கட்டுகள் பெறப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. அதனால்தான் தேவஸ்தான பொறுப்பிலிருந்தும் ரெட்டியை நீக்கியிருக்கிறார்கள். மேலும், ரிசர்வ் வங்கி அதிகாரிகளும் ரெட்டிக்கு உதவியிருக்கலாம் எனத் தெரிய வந்துள்ளது. ஏனென்றால், அவர் வீட்டில் பிடிபட்ட அட்டைப் பெட்டிகளில் இருந்த பணக்கட்டுகள் சீல் பிரிக்கப்படாமலே இருந்தன. அவர் வீட்டிலும் அலுவலகத்திலும் கைப்பற்றப்பட்ட பொருட்களையும் ஆவணங்களையும் காட்சிப்படுத்திவிட்டோம். அவருடைய வாக்குமூலத்தில் இருந்து அடுத்தகட்ட நடவடிக்கையை டெல்லியில் உள்ளவர்கள் தீர்மானிப்பார்கள்” என்றார் விரிவாக.

சேகர் ரெட்டி, ஸ்ரீனிவாச ரெட்டி, பிரேம் ரெட்டி ஆகியோரது வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனையில், என்னென்ன பிடிபட்டன என்பதை அறிவித்திருக்கிறது நிதித்துறை அமைச்சகம். அரசியல் ஆட்டத்தின் அடுத்தகட்ட காட்சிக்காக காத்திருக்கிறார்கள் சசிகலாவுக்கு எதிர் அணியினர்.

http://www.vikatan.com/juniorvikatan

  • தொடங்கியவர்

ரூ.131 கோடி பறிமுதல் வழக்கில் சேகர் ரெட்டி கைது

 

sekar_reddy_1a_16262.jpg

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் தொழிலதிபர்கள் சேகர் ரெட்டி, சீனிவாசலு ஆகியோரை சிபிஐ கைது செய்துள்ளது.

சமீபத்தில் தொழிலதிபர் சேகர் ரெட்டிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதில், 171 கிலோ தங்கம், 131 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதில், 30 கோடி புதிய 2000 நோட்டு ஆகும்.

இந்த நிலையில், தொழிலதிபர் சேகர் ரெட்டி மற்றும் அவரது நண்பர்களின் மேல் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிபிஐ விசாரணை நடத்தினர். இந்த விசாரணை முடிவில் அவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இருவரும் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்துள்ளது சிபிஐ.

இதைத் தொடர்ந்து, இரண்டு பேரும் சென்னையில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை ஜனவரி 3ஆம் தேதி வரை காவல் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனிடையே, இருவரையும் 15 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிபிஐ சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, இருவரும் ஜாமீன் கேட்டு மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை வரும் 23ஆம் தேதிக்கு வருகிறது.

மேலும், சேகர் ரெட்டிக்கு உதவிய வங்கிகள், முக்கிய அதிகாரிகள் பற்றியும் சிபிஐ விசாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

http://www.vikatan.com/news/tamilnadu/75560-cbi--arrests--sekar-reddy.art

  • கருத்துக்கள உறவுகள்

சாதாரண அப்பாவி தமிழன் குப்பனும் சுப்பனும் பஸ் ஸ்டாண்டில் பஞ்சி மிட்டாயும் .  வடையும் வித்திட்டு திரியுறான் .. ஆனா இந்த ராவு . ரெட்டி இந்த மாறி கோஸ்டிகளிடம் மட்டும் துட்டு கொட்டி கிடக்கிறதே ?

டிஸ்கி:
உங்களுக்கு ஏதாவது காரணம் தெரியுமா ? ரெல்மீ ! :cool:

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

சாதாரண அப்பாவி தமிழன் குப்பனும் சுப்பனும் பஸ் ஸ்டாண்டில் பஞ்சி மிட்டாயும் .  வடையும் வித்திட்டு திரியுறான் .. ஆனா இந்த ராவு . ரெட்டி இந்த மாறி கோஸ்டிகளிடம் மட்டும் துட்டு கொட்டி கிடக்கிறதே ?

டிஸ்கி:
உங்களுக்கு ஏதாவது காரணம் தெரியுமா ? ரெல்மீ ! :cool:

தமிழனுக்கு, குவார்டர் சாரயமும், பாக்கெட் புரியாணியும் கொடுத்தால் போதும்...தன்னைச்சார்ந்த அனைத்தையும் மற்றவர்களுக்கு இலவசமாக விட்டுவிடுவான்..

  • கருத்துக்கள உறவுகள்

இனியாவது

இந்த கொள்ளைக்கூட்டத்திடமிருந்து தப்பி

தமிழகம் தமிழனிடம் வருமா??

  • கருத்துக்கள உறவுகள்

குட்டி தெய்வத்திடமே இப்படியென்றால் பெரிய தெய்வங்களிடம் .....?

  • கருத்துக்கள உறவுகள்

அள்ள,அள்ள குறையாமல் பணம் வந்து கொண்டு இருக்கிறது...ஆனால் தமிழ்நாட்டில் பெரும்பாலோனார் வறுமைக் கோட்டுக்கு கீழே!...பதுக்கியவர்களும் சரி,பதுக்கியவர்களை வோட்டுப் போட்டு தேர்ந்தெடுத்தவர்களும் சரி சுய நலமிக்கவர்கள்

  • தொடங்கியவர்

ரூ.147 கோடி பணம், 178 கிலோ தங்கம் சிக்கிய விவகாரம்: சேகர் ரெட்டி, உறவினர் கைது: வங்கி அதிகாரிகளும் சிக்குகின்றனர்

 

 
சேகர் ரெட்டியை, சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர் செய்தபின் அழைத்துச் செல்லும் போலீஸ் அதிகாரிகள்.
சேகர் ரெட்டியை, சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர் செய்தபின் அழைத்துச் செல்லும் போலீஸ் அதிகாரிகள்.
 
 

புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை முறைகேடாக பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் தொழிலதிபர் சேகர் ரெட்டியும், அவரது நண்பரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

தமிழக அரசின் பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரரும் தொழிலதிபருமான சேகர் ரெட்டி, அவரது உறவினர் சீனிவாச ரெட்டி, நண்பர் பிரேம் ஆகியோர் வீடுகளில் கடந்த 7-ம் தேதி முதல் தொடர்ந்து 4 நாட்கள் வருமான வரித்துறை அதிகாரிகளும், அமலாக் கத்துறை அதிகாரிகளும் சோதனை நடத்தினர். சென்னை, வேலூரில் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.147 கோடி பணம், 178 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டன. கைப்பற்றப்பட்ட பணத்தில் ரூ.34 கோடிக்கு புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருந்தன. இந்த புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை 24 நாட்களில் இவர்கள் மாற்றியுள்ளனர்.

ஒரேயொரு 2 ஆயிரம் ரூபாய் நோட்டை பெறுவதற்கு பொதுமக்கள் கால்கடுக்க, நாள் முழுவதும் வங்கிகள், ஏடிஎம்கள் முன்பு காத்திருக்கின்றனர். ஆனால், ஒருசிலர் மட்டும் கோடி கோடியாக புதிய ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பது பொதுமக்களை அதிர்ச்சியடைய வைத்தது.

சேகர் ரெட்டி வீட்டில் புதிய ரூபாய் நோட்டுகள் சிக்கியது குறித்து சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. இதில் சேகர் ரெட்டி, சீனிவாச ரெட்டி, பிரேம் ஆகியோர் வங்கி அதிகாரிகளின் துணையுடன் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை முறைகேடாக பெற்றது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து இந்திய தண்டனைச் சட்டம் 120பி, 409, 420 மற்றும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் 13(2), 13(1) ஆகிய பிரிவுகளின் கீழ் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ டிஎஸ்பி சோமையா, ஆய்வாளர் நாகேஸ்வரன் ஆகியோர் சேகர் ரெட்டி உட்பட 3 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதில் 3 பேரும் முறைகேடாக பணம் பெற்றது உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து நேற்று மதியம் 12.30 மணியளவில் சேகர் ரெட்டி, சீனிவாச ரெட்டி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பிரேம் தலைமறைவாகிவிட்டார். அவரை தேடி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட சேகர் ரெட்டி, சீனிவாச ரெட்டி இருவரையும் நேற்று மாலை சென்னை உயர் நீதிமன்ற வளா கத்தில் உள்ள சிபிஐ முதன்மை நீதிமன் றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை ஜனவரி 3-ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி ஜி.விஜயலட்சுமி உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து இருவரும் புழல் சிறையில் அடைக் கப்பட்டனர்.

ஜாமீன் மனு தாக்கல்

சேகர் ரெட்டி, சீனிவாச ரெட்டி ஆகி யோர் தரப்பில் ஜாமீன் கேட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு சிபிஐ வழக்கறிஞர்கள் என்.நாகேந்திரன், சித்தார்த்தன் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை நாளை (23-ம் தேதி) ஒத்திவைக்கப்பட்டது. அதே நேரத்தில் இருவரையும் 15 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி சிபிஐ சார்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 24 நாட்களில் சேகர் ரெட்டி உள்ளிட்டோர் ரூ.34 கோடிக்கு புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பெறு வதற்கு வங்கி அதிகாரிகள் உதவி செய்திருப்பது உறுதி செய்யப்பட்டுள் ளது. மோசடிக்கு உடந்தையாக இருந்த வங்கி அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க சிபிஐ முடிவு செய்துள்ளது.

http://tamil.thehindu.com/tamilnadu/ரூ147-கோடி-பணம்-178-கிலோ-தங்கம்-சிக்கிய-விவகாரம்-சேகர்-ரெட்டி-உறவினர்-கைது-வங்கி-அதிகாரிகளும்-சிக்குகின்றனர்/article9438941.ece?homepage=true

  • தொடங்கியவர்

சேகர் ரெட்டி விவகாரம்... சென்னை டூ டெல்லி இறுகும் விசாரணை!

 

சேகர் ரெட்டி

சேகர் ரெட்டி கைதானதைத் தொடர்ந்து அவர் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் மற்றும் அவர் கொடுத்த தகவல்களை வைத்து சி.பி.ஐ தனது கைதுபடலத்தைத் தொடர்ந்தது. நேற்று தமிழக முன்னாள் முதன்மைச் செயலாளர் ராமமோகன ராவ் வீட்டிலும், தலைமைச் செயலகத்தின் அவரது அலுவலகத்திலும் சோதனை நடந்தது. சேகர் ரெட்டி விவகாரத்தில் பிரேம் குமார், ரத்னம், ராமச்சந்திரன் ஆகிய மூவரை சி.பி.ஐ இன்று கைதுசெய்துள்ளது. இந்தநிலையில் சேகர் ரெட்டிக்கு புதிய ருபாய் நோட்டுகளை சட்ட விரோதமாக மாற்றிக் கொடுத்த கொல்கத்தாவைச் சேர்ந்த தொழிலதிபர் பரஸ்மல் லோதா கைதுசெய்யப்பட்டு டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். 

கடந்த 10-ம் தேதி டெல்லியைச் சேர்ந்த வழக்குரைஞர் ரோஹித் தான்டன் என்பவர் வீட்டில் வருமானவரித் துறையினர் மற்றும் டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் நடத்திய சோதனையின்போது சுமார் 13.62 கோடி ரூபாய் மதிப்புள்ள பணம் சிக்கியது. அதில், 2.62 கோடி ரூபாய் புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் ஆகும். இந்தப் பணம், சட்ட விரோதமாக பழைய ரூபாய் நோட்டுகளைப் புதிய கரன்சியாக மாற்றும் ஒரு பெரிய ஹவாலா கும்பலுடையது எனத் தெரியவந்தது. மேலும், அந்தச் சோதனையின்போது... அதே ஹவாலா கும்பல் மூலம் சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை செய்தவர்களின் தகவல்கள் சிக்கின. அதில், ஒருவர்தான் இன்று கைதுசெய்யப்பட்ட பரஸ்மல் லோதா.  இதனையடுத்து மத்திய அமலாக்கத் துறைக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில், நேற்று மும்பைக்கு விமானம் மூலம் வந்த லோதாவை அமலாக்கத் துறையினர் கைதுசெய்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவர் ஹவாலா ஆபரேட்டராகச் செயல்பட்டு வந்ததாக ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், அவர் சென்னையைச் சேர்ந்த சேகர் ரெட்டி மற்றும் ஸ்ரீநிவாஸ் என்பவருக்கு சுமார் 6 - 7 கோடி ரூபாய் சட்ட விரோதமாக புதிய கரன்சியாக மாற்றிக் கொடுத்ததாக ஒப்புக்கொண்டுள்ளார். 

இன்று காலை, அவர் டெல்லியிலுள்ள சாகேத் நீதிமன்றத்தில்... கூடுதல் செசன்ஸ் நீதிபதி சஞ்சீவ் ஜெயின் முன் ஆஜர்படுத்தப்பட்டார். அமலாக்கத் துறையினர், லோதாவை  14 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரினர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, லோதாவை 7 நாட்கள் அமலாக்கத் துறையின் காவலுக்கு அனுப்ப உத்தரவிட்டார்.

‘கைது செய்யப்பட்ட லோதாவுக்கு தேசிய மற்றும் சர்வதேச அளவில் நடைபெறும் சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை தொடர்பாக தகவல்கள் தெரியும்’ என அமலாக்கத் துறையினர் தெரிவித்தனர். மேலும், இந்த வழக்கின்  ஒரு முக்கியக் குற்றவாளியான ரோஹித் தான்டனை, கைது செய்ய முயற்சிகள் எடுத்து வருவதாகவும் தெரிவித்தனர். 

http://www.vikatan.com/news/india/75679-sekar-reddy-case-the-rope-gets-tightened.art

  • தொடங்கியவர்

யார் இந்த சேகர் ரெட்டி...? #Infograph

 

சேகர் ரெட்டி

சேகர் ரெட்டி

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் தொழிலதிபர்கள் சேகர் ரெட்டி, சீனிவாசலு ஆகியோரை சிபிஐ கைது செய்துள்ளது. சேகர் ரெட்டி குறித்து ‘அ’ முதல் ‘ஃ’ வரை முழு விவரங்களையும் தெரிந்துக் கொள்ள கீழுள்ள படத்தை காணுங்கள். 

பிறப்பு: வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள ‘தொண்டான் துளசி’ என்ற கிராமம்.

வேலை: வேலூரில் இருந்து சென்னை ஐ.சி.எஃப்-புக்கு ரயிலில் தினக்கூலியாக பயணம். 

sekar_reddy_timeline_10547.jpg

முதல்படி: ரயில்வே கான்ட்ராக்ட் வேலைக்கு... கமிஷன் அடிப்படையில் ஆட்களை பிடித்துக் கொடுப்பது.

இரண்டாவது படி: ரயில்வே யூனியன் தேர்தலின்போது, ‘பலமான’ அணிக்கு ஆட்களைத் திரட்டிக்கொடுத்து தேர்தல் வேலை பார்த்தது.

மூன்றாவது படி: யூனியன் தலைவர் மூலம் ரயில்வே கான்ட்ராக்ட் வேலைகள் கைக்கு வந்தன.

 நான்காவது படி: ரயில்வே யூனியன் தலைவர் மூலமாக, வில்லிவாக்கம் (அப்போது ஆசியாவிலேயே பெரிய தொகுதி அதுதான்) தொகுதி எம்.எல்.ஏ. மேம்பாட்டு நிதியிலான வேலைகளைச் செய்யும் கான்ட்ராக்ட்.

 ஐந்தாம்படி: அ.தி.மு.க. (1994) உறுப்பினர் அட்டை பெறுதல். 

ஆறாவது படி (இறங்குபடி) : தேர்தலில், (1996 - 2001) அ.தி.மு.க. தோல்வி. அதனால், கொஞ்ச காலம் சைலன்ட். 

ஏழாவது படி: அ.தி.மு.க-வில் மீண்டும் (2001 - 2006) தீவிரமாக வலம் வருதல். 

எட்டாவது படி: திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளுடன் நெருக்கம். 

ஒன்பதாவது படி: ஜெ. ஆட்சி மற்றும் ஆயுள் நிலைக்க திருப்பதியில் சிறப்புப் பூஜை, அன்னதானம், மருத்துவ முகாம்.

பத்தாவது படி: மருத்துவ முகாம், திருப்பதி லட்டு மூலம் மருத்துவர்கள் விஜயபாஸ்கர், வெங்கடேஷ் வழியாக கார்டனுக்குள் நுழையும் வாய்ப்பு.

 11-வது படி: வாரத்தின் ஒவ்வொரு விஷேச நாட்களிலும் போயஸ் கார்டனுக்கு, திருப்பதியில் இருந்தே ரெட்டி கார் மூலம் லட்டு வரவழைக்கப்பட்டு சப்ளை.

12-வது படி: அ.தி.மு.க-வின் சக்தி மையமான போயஸ் கார்டனுக்குள் எளிதில் நுழைந்து திரும்பும் வல்லமையால், மந்திரிகள் சரண்டர்.

13-வது படி: தமிழகம் முழுவதும் ஒப்பந்தப் பணிகளுக்கு ஆர்டர் எடுக்கும் வாய்ப்பு.

14-வது படி: பி.ஆர்.பி.ஆறுமுகச்சாமி உள்ளிட்ட பிரதான ‘கனிமவள’ பிரமுகர்களின் நட்பும்... சப்-கான்ட்ராக்ட் பணியும்.

15-வது படி: ஐ.ஏ.எஸ். ராமமோகன ராவின் ஆலோசனையால், ‘மணல் குவாரிகள்’ அரசுடைமையானது. ராமமோகன ராவ், சேகர் ரெட்டியின் நண்பரானார்.

16-வது படி: திருப்பதி தேவஸ்தான தேவசம் போர்டு உறுப்பினர்.

17-வது படி: தமிழக முதல்வர் ஜெ. உடல்நலம்பெற மந்திரி ஓ.பி.எஸ்ஸை திருப்பதிக்கு அழைத்துப் போய் மொட்டை அடித்தார்.

18-வது படி: ஜெ. விரைந்து குணம்பெற அப்போலோவில் அன்னதானம், பூஜை, கோயில்களில் நேர்த்திக்கடன்.

19-வது படி (இறங்குபடி): டிசம்பர்-5 முதல்வர் ஜெ. இறப்பு. டிசம்பர்-6 அன்று மாலை முதலே, ரெட்டி மீது ஐ.டி. கண்காணிப்பு ஆரம்பம்.

20-வது படி (இறங்குபடி): டிசம்பர்-7 ரெய்டில் சிக்கினார் ரெட்டி. வேலூர், காட்பாடி, காந்தி நகர் வீடுகளில், ரெய்டு. அண்ணா நகர், தி.நகர் அலுவலகங்களிலும் ரெய்டு. தொழில் பங்குதாரர்கள் சீனிவாசலு, பிரேம் ஆகியோரது வீடு மற்றும் அலுவலகங்களில் ரெய்டு.

 21-வது படி (இறங்குபடி): 96 கோடியே 89 லட்சம் மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகளும், 9 கோடியே 63 லட்சம் மதிப்புள்ள புதிய 2,000 ரூபாய் நோட்டுகளும் ரெய்டில் பறிமுதல் என முதற்கட்டத் தகவல்.ரூ.36 கோடியே 29 லட்சம் மதிப்புள்ள 127 கிலோ தங்கமும் பறிமுதல். கைப்பற்றப்பட்ட மொத்தச் சொத்துக்களின் மதிப்பு ரூ.142 கோடியே 81 லட்சம் என வருமானவரித் துறை அறிக்கை.

 22-வது இறங்குபடி: தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவின் வீடு மற்றும் அலுவலகங்களில் ரெய்டு. டிசம்பர்-21 சேகர் ரெட்டியும், அவருடைய கூட்டாளி சீனிவாசலுவும் கைது.

23-வது இறங்குபடி: சி.பிஐ. கோர்ட்டில் சேகர் ரெட்டி - சீனிவாசலு ஆஜர். ஜனவரி-3 வரை நீதிமன்றக் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட் உத்தரவு.

http://www.vikatan.com/news/coverstory/75715-who-is-this-sand-baron-shekar-reddy-infograph.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.