Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

467003763_536584979268579_90796714659269

2 வயதுப் பையன் அவரிடம்  : நான் எவ்வளவு அழகாக காற்சட்டை அணிந்திருக்கிறேன் பார் . ........ நீ விரும்பினால் உனக்கும் அதைக் கற்றுத் தருகிறேன் . .........!   😂

  • Replies 2.6k
  • Views 227.5k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • புங்கையூரன்
    புங்கையூரன்

    உன்னை வரைந்தவன், எங்கிருந்து தான்..., வண்ணங்களை எடுத்தானோ? உன்னைப்  படைத்தவன்.., எந்தப் பல்கலைக் கழகத்தில், பொறியியல் படித்தானோ? அழகுக்காக.., அரசை இழந்த மன்னர்கள்.., ஏராளம்!

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

  • நந்தன்
    நந்தன்

    இந்த இஞ்சினியரை வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்.. :p

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

sinthika.jpg

  • கருத்துக்கள உறவுகள்

ரகுமானின் டைவேர்ஸ் எனக்கு இந்த கதை நினைவுக்கு வந்தது .

 

இந்தக் கதையை படித்துவிட்டு முடிவில் உங்களில் ஒருவர் கைதட்டினால் கூட நமக்கு வெற்றி தான். மிக மிக பொறுமையாக கதையை படித்து அர்த்தத்தை உள்வாங்கிக்கொள்ளவும். சரியான வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்க விரும்புகிறவர்களுக்கு இது ஒரு வழிகாட்டி!

மிகப் பெரிய சாம்ராஜ்ஜியத்தை கட்டியாளும் அரசன் அவன். அவன் மகள் பட்டத்து இளவரசி திருமணம் செய்துகொள்வதில் நாட்டமில்லாமல் இருந்தாள். தனது குலகுருவின் ஆலோசனையை அடுத்து பல ஆலய திருப்பணிகளை செய்தான் அரசன். இதையடுத்து அரச குடும்பத்தினர் யாவரும் வியக்கும் வண்ணம், இளவரசிக்கு திருமணம் செய்துகொள்ளும் ஆசை எழுந்தது. தனக்குரியவனை தானே தேர்ந்தெடுக்க வேண்டும். அவன் அனைத்திலும் சிறந்தவனாக இருக்கவேண்டும்' என்று கருதினாள். தன் தந்தையிடம் தனது விருப்பத்தை தெரிவித்து, "அப்பா... அழகோ, பணமோ, பட்டமோ, பதவியோ இவைகள் மட்டுமே என்னை மணப்பவரின் தகுதியாக இருக்கக் கூடாது. அதற்கு மேலும் நான் அவரிடம் சில விஷயங்களை எதிர்பார்க்கிறேன். எனவே எனக்கேற்றவரை தேர்ந்தெடுக்க நீங்கள் உதவவேண்டும் அப்பா" என்றாள்.

'மகள் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டாளே அதுவே சந்தோஷம். மேலும் தனது கணவனை தேர்ந்தெடுக்க நம்மையும் ஆலோசனை கேட்கிறாளே.. அது அதைவிட ''சந்தோஷம்' என்று மகிழ்ந்த மன்னன் தனது மகளுக்கு திருமணம் செய்துவைக்கும் திட்டத்தை பற்றி குறிப்பிட்டு தகுதியுடையவர்கள் சுயம்வரத்துக்கு விண்ணப்பிக்கலாம் நாலாபுறமும் செய்தி அனுப்பினான்.

பல விண்ணப்பங்கள் வந்தன. அவற்றை மிக கவனமாக பரிசீலித்து ஐந்து விண்ணப்பங்களை மட்டும் இறுதி செய்தான் மன்னன். அவர்களை தனது அரண்மனைக்கு வரச் சொல்லி தகவல் அனுப்பினான்.

இதைக் கேள்விப்பட்ட இளவரசி, மிகவும் குழப்பமடைந்தாள். “அப்பா இது எனக்கு உண்மையில் சவாலான ஒன்று தான். ஐந்து பேரில் யாரை தேர்ந்தெடுப்பது என்று எனக்கு புரியவில்லை. நீங்களே இவர்களுள் மிகச் சிறந்த ஒருவரை தேர்ந்தெடுத்துவிடுங்கள்" என்றாள். பந்து தன் பக்கமே திரும்பியதையடுத்து மன்னன் மீண்டும் குழப்பமடைந்தான். தனது குலகுருவை அரண்மனைக்கு வரவழைத்து அவரது பாதங்கள் பணிந்து, தனக்கு முன்னுள்ள சவாலை குறிப்பிட்டான். அனைத்தையும் நன்கு கேட்ட குரு, மன்னனுக்கு சில ஆ லோசனைகள் வழங்கினார். அதைக் கேட்டு முகம் மலர்ந்த மன்னன், "அப்படியே செய்கிறேன் குருவே!" என்றான். அரண்மனை குதிரைப் பயிற்சியாளர்களை அழைத்து, “நம்மிடம் பழக்குவதற்கு கடினமான குதிரை எதாவது இருக்கிறதா?" என்று கேட்டான். சற்று யோசித்த பயிற்சியாளர்கள் “ஆம்... அரசே அரேபியாவிலிருந்து வந்த சில குதிரைகள் இருக்கின்றன. மிகவும் அஜானுபாகவான குதிரைகள் அவை. பழக்குவதற்கு மிகவும் கடினமாக முரட்டுத் தனமாக இருக்கின்றன. எதற்கும் கட்டுப்படாத அக்குதிரைகள் பல பயிற்சியாளர்களை உதைத்து கீழே தள்ளி காயப்படுத்தியிருக்கின்றன. அவற்றை என்ன செய்வதென்றே எங்களுக்கு தெரியவில்லை" என்றார்கள். விபரத்தை குறித்துக்கொண்டான் மன்னன்.

மறுநாள் தான் இறுதி செய்த ஐந்து பேரையும் வரவழைத்து குதிரைகள் பற்றி சொல்லி, "உங்களுக்கு தரப்படும் முரட்டுக் குதிரையை யார் அடக்கி அதில் என் மகளையும் ஏற்றிக்கொண்டு சவாரி. செய்கிறீர்களோ அவரே என் மகளை மணக்கமுடியும்” என்று அறிவித்தான்.

இந்த போட்டியை பற்றி கேள்விப்பட்டவுடன் இளவரசி மிகவும் குழப்பமடைந்தாள். ஏனெனில் சிறு வயதில் குதிரை மீது அமர்ந்து, அது மிரண்டு ஓடி, கீழே விழுந்து அடிப்பட்டதிலிருந்து தனக்கு குதிரையின் கனைப்பு சத்தமோ குதிரையில் ஏறி அமர்ந்து சவாரி செய்வதோ பிடிக்காது என்பது தந்தைக்கு தெரியும். அப்படியிருக்க ஏன் இந்தப் போட்டியை அறிவித்தார் என்று குழப்பமடைந்தாள்.

ஆனாலும் தனது தந்தையின் முடிவின் பின்னணியில் நிச்சயம் ஏதாவது அர்த்தமிருக்கும் என்று மனதை சமாதானப்படுத்திக்கொண்டு போட்டிக்கு ஒப்புக்கொண்டாள். குறிப்பிட்ட நாளன்று அரண்மனை மைதானத்தில் ஒரு குதிரை கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. மணமகன்கள் ஐந்து பேரும் விருந்தினர் மாளிகைக்கு வரவழைக்கப்பட்டார்கள். இளவரசியை மணம் புரிய அவர்கள் செய்யவேண்டிய சிலவற்றை குறிப்பிட்டு இறுதியில் குதிரையை அடக்கி அதில் இளவரசியுடன் சவாரி செய்யவேண்டியதை பற்றியும் விவரிக்கப்பட்டது.'

மகளை நோக்கி, "போட்டியின் போது இவர்களுடன் நீ கூட இருக்கவேண்டும்" என்றும் கூறினார். போட்டியாளர்கள் யாருக்குமே இளவரசிக்கு குதிரை மீது இருந்த பயம் பற்றி மூச்சு கூட விடவில்லை. தனித்தனியே பந்தய மைதானத்திற்கு அனைவரும் வெவ்வேறு நேரங்களில் வருவதற்கு மருட்சியுடன் அவனுடன் ஏறினாள். வெற்றிக் களிப்பில் மைதானத்தை கண்களை மூடியபடியே இருந்தாள். இரண்டாமவன் வந்தான். அவன் தான் இந்த நாட்டிலேயே மிகப் பெரிய செல்வந்தனின் ஒரே மகன் அவன். திடீரென்று கைகளை தட்டினான்... எங்கிருந்தோ ஒரு கட்டுமஸ்தான ஆசாமி வர, அவனிடம், "இந்த குதிரையை அடக்கு" என்று கூற, அவன் சில வினாடிகளில் குதிரையை அடக்கிவிட, அவன் துணையுடன் இளவரசியை குதிரை மீது ஏற்றிக்கொண்டவன் அந்த ஆசாமிக்கு ஏற்பாடானது.

முதலாமவன் வந்தான். பார்க்க கட்டுமஸ்தாக இருந்தான். இளவரசியை பார்த்தான். குதிரையை சுற்றி சுற்றி வந்தான். குதிரையின் பிடரியை பிடித்து இழுத்தான். குதிரை பலமாக கனைத்தது. இளவரசி பயந்து நடுங்கினாள். அடுத்த சில வினாடிகளில் எப்படியோ குதிரையை அடக்கிவிட்டான். இளவரசியின் கையை பற்றி அனைத்து மேலே ஏற்றினான். இளவரசி மருட்சியுடன் அவனுடன் ஏறினாள். வெற்றிக் களிப்பில் மைதானத்தை சுற்றி சுற்றி வந்தான். ஆனால், இளவரசியோ அச்சம் நீங்காதவளாக கண்களை மூடியபடியே இருந்தாள். இரண்டாமவன் வந்தான். அவன் தான் இந்த நாட்டிலேயே மிகப் பெரிய செல்வந்தனின் ஒரே மகன் அவன். திடீரென்று கைகளை தட்டினான்... எங்கிருந்தோ ஒரு கட்டுமஸ்தான ஆசாமி வர, அவனிடம், "இந்த குதிரையை அடக்கு” என்று கூற, அவன் சில வினாடிகளில் குதிரையை அடக்கிவிட, அவன் துணையுடன் இளவரசியை குதிரை மீது ஏற்றிக்கொண்டவன் அந்த ஆசாமிக்கு பணமுடிப்பை தந்து அனுப்பினான். "கையை சொடுக்கினால் நாம் இட்ட வேலையை செய்து முடிக்க பலர் இருக்கும்போது, நாம் ஏன் நமக்கு தெரியாத வேலைகளை செய்ய ரிஸ்க எடுக்கவேண்டும்.. இது தான் என்னோட பாலிஸி" என்றான் இளவரசியை பார்த்து புன்னகைத்து. ஒரு வகையில் இவன் சொல்வது வாஸ்தவம் தான் என்று தோன்றியது இளவரசிக்கு.. மூன்றாமவன் வந்தான். பார்க்க மன்மதன் போல இருந்தான். மிக நேர்த்தியாக அழகாக ஆடையுடுத்தியிருந்தான். பந்தயத்தை பற்றி கேள்விப்பட்டதும், “எனக்கு குதிரையேற்றமெல்லாம் தெரியாது. ஆனால், நீ என்னுடன் இருக்கும் நேரத்தை உன்னால் மறக்க முடியாததாக செய்யமுடியும்" என்று கூறி, இளவரசியை பல்லக்கில் ஏற்றி தானும் ஏறி மலைப்பாங்கான இடத்திற்கு சென்றான். அங்கு அருவிகளையும் இயற்கை காட்சிகளையும் அவளுக்கு காண்பித்தான். அரைமணி நேரம் கழித்து மீண்டும் திரும்பினார்கள். சொன்னது போல இளவரசிக்கு மனதுக்கு இதமாக இருந்தது. நான்காமவன் வந்தான். பந்தயத்தை பற்றி கூறியதும், இளவரசியை பார்த்தான். இளவரசி இவனை மருட்சியுடன் பார்த்தாள். குதிரை மீது ஏறுவது என்றால் அவளுக்கு பயம் என்று அவனுக்கு புரிந்துவிட்டது. உடனே எனக்கு ஒரு பலகையும், தூரிகையும், வண்ணப் பொடிகளும் வேண்டும் என்று கூறினான். அடுத்த சில நொடிகளில் அவை வந்துவிட சுமார் ஒரு மணிநேரம் செலவிட்டு அந்த இடத்திலேயே, அந்த குதிரை மீது இளவரசி அமர்ந்திருப்பதைப் போல ஒரு தத்ரூபமான அழகான ஓவியத்தை வரைந்துவிட்டான். ஓவியத்தில் தன் அழகை பார்த்து தானே வியந்து வெட்கப்பட்டாள் இளவரசி. அவளுக்கு நெகிழ்ச்சியில் கண்ணீரே வந்துவிட்டது. கடைசியாக ஐந்தாமவன் வந்தான். அவனிடம் பந்தயத்தை பற்றி சொல்லப்பட்டது குதிரையை சுற்றி வந்து தடவிக்கொடுத்தான். குதிரை பலமாக கனைத்தது. இளவரசி அச்சத்தில் கண்களை மூடிக்கொள்வதை கவனித்தான். குதிரையை மீண்டும் தடவிக்கொடுத்தான். இந்த முறை குதிரை விட்டது ஒரு உதை. தூரப்போய் விழுந்தான். உடைகளை துடைத்துக்கொண்டு எழுந்தான். நேரே இளவரசியிடம் சென்று "வா நாம் இரண்டு பேரும் தானே ஏறப்போகிறோம். இரண்டு பேரும் குதிரையிடம் செல்வோம்” என்றான். இளவரசி மறுத்தாள். "வேண்டாம்... எனக்கு குதிரைகள் என்றாலே அலர்ஜி. குதிரைகளுக்கும் என்னைக் கண்டால் அலர்ஜி. என்னால் நீங்கள் தோற்றுவிடுவீர்கள்...." “பரவாயில்லை... அதனால் என்ன? ஏற்கனவே கீழே தள்ளிவிட்டுடுச்சு. இதுக்கும் மேல என்ன இருக்கு? பரவாயில்லே வா.." என்று கூறி குதிரையிடம் இளவரசியை அழைத்துக் கொண்டு தானும் சென்று, அதைத் தடவிக்கொடுத்து இருவருமே அதன் மீது ஏறப்போவதால், இருவரையும் அதற்கு பரிச்சயமாக்க முயற்சிகள் செய்தான். குதிரை அந்நியோன்யமாகி ஓரளவு தெரிந்தவுடன்,

தைரியமாக அதன் மீது தானும் ஏறி இளவரசியையும் ஏற்ற முயற்சித்தான். இளவரசி... "வேண்டாம் எனக்கு பயமாயிருக்கு... வேண்டாம் எனக்கு பயமாயிருக்கு" என்று அச்சத்தில் தயங்கினாள்.

main-qimg-144ca2951be687dec8a2f9432195742e-lq

"பயப்படாதே... நான் விழுந்தாலும் உன்னை விழ விட மாட்டேன்" என்றபடி அவளை ஆசுவாசப்படுத்தி தான் ஏறி இளவரசியையும் ஏற்ற முயற்சிதான். அவன் கொடுத்த உத்வேகத்தில் இளவரசி எப்படியோ குதிரை மீது ஏறிவிட்டாள். பந்தயப்படி இன்னும் குதிரை ஒரு அடி கூட எடுத்து வைக்காத நிலையில் யாரும் எதிர்பாராத வண்ணம், குதிரை கனைத்தது. கனைப்பு சத்தத்தை கேட்ட இளவரசி பயத்தில் "வீல்" என்று அலறிவிட்டாள். குதிரை மிரண்டு போய் திமிறியதில் இருவரும் கீழே விழுந்தார்கள். இருவரையும் ஒரு உதை விட்டுவிட்டு குதிரை சில அடிகள் தள்ளிப் போய் நின்றது. இருவருக்குமே லேசான அடி. சிராய்ப்புக்கள். காவலர்கள் ஓடி வந்தார்கள். குதிரை அப்புறப்படுத்தப்பட்டு, இருவருக்கும் முதலுதவி அளிக்கப்பட்டது. கீழே விழுந்து குதிரையிடம் உதையும் வாங்கியதில் இளவரசிக்கு கோபம் + சோகம் என்றாலும் போட்டியின் விதிப்படி தோற்றுவிட்ட அவனுக்காக சிறிது பரிதாபப்பட்டாள். அனைத்தும் முடிந்த பின்னர் மாளிகைக்கு திரும்பினாள் இளவரசி. "எப்படியம்மா போட்டி நடந்தது? உனக்கு ஏற்ற மணமகனை தேர்ந்தேடுத்துவிட்டாயா?"

"அப்பா... எனக்கு சற்று குழப்பமாக இருக்கிறது. போட்டியில் வெற்றி பெற்றவர்கள் என்னைக் கவரவில்லை. ஒரு வகையில் சிறந்தவர்களாக தெரிகிறார்கள்." என்றாள். என்னைக் கவர்ந்தவர்கள் போட்டியில் வெற்றிபெறவில்லை. ஒவ்வொருவரும் "என்ன செய்யலாம்? நீயே சொல். "எனக்கு குழப்பமாக இருக்கிறது அப்பா. நீங்களே எனக்குரியவரை தேர்ந்தேடுத்துவிடுங்கள். உங்கள் முடிவு மீது நான் முழு நம்பிக்கை வைக்கிறேன்". "சரியம்மா... உனக்கு பொருத்தமானவரை நான் தேர்ந்தெடுத்து அனுப்புகிறேன்." என்றான்.

தனது மாளிகையில் இளவரசி காத்திருந்த வேளையில், மன்னர் தேர்ந்தெடுத்த நபர் வந்திருப்பதாக காவலாளி கூற, இவள் ஆர்வமுடன் வாயில் சென்று பார்த்தாள். அங்கு ஐந்தாவதாக வந்த இளைஞன் நின்றுகொண்டிருந்தான். போட்டியின் நிபந்தனைப்படி இவர் வெற்றி பெறவில்லையே... எப்படி தந்தை இவரை தேர்ந்தெடுத்தார்? குழப்பமடைந்தவள், அப்பாவிடம் சென்றாள்.

"என் முடிவை நீ ஏற்றுக்கொள்ளவில்லையா அம்மா?" என்றான் மகளை நோக்கிய அரசன். "இல்லை இல்லை அப்பா. நான் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், இவரை நீங்கள் இறுதி செய்ததன் காரணத்தை அறிய ஆவலாய் இருக்கிறேன்". அரசன் சொன்னான்... "முதலாவதாக வந்தவன் மிக சிறந்த குதிரையேற்ற வீரன் திறமைசாலி, ஆனால் அது அவனைப் பொருத்தவரை நல்லது. ஆனால் உனக்கு நல்லதில்லை. உன்னை முதன் முதலில் பார்த்தவன், யோசிக்கவில்லை. அவனிடம் உனக்கு கொடுப்பதற்கு அன்போ அக்கறையோ தனது திறமையை நிரூபிப்பதில் தான் கவனம் செலுத்தினானே தவிர, உனக்கு அது பிடிக்குமா பிடிக்காதா என்பதை பற்றியெல்லாம் அவன் எதுவும் இல்லை". இரண்டாமவன் மிகப் பெரிய பணக்காரன். அவனிடம் உள்ள செல்வம் காலத்தால் அழியக்கூடியது. பணத்தால் எதையும் வாங்க முடியும் என்கிற மனப்பான்மை அவனிடம் இருக்கிறது. பணத்தால் உனக்கு வசதியான வாழ்க்கை கிடைக்குமே தவிர மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு, மனநிறைவான வாழ்க்கைக்கு அதையும் தாண்டி சில விஷயங்கள் தேவை. அதை அவனால் அளிக்க முடியாது." மூன்றாமவன் உன்னை சற்று களிப்புடன் வைத்திருந்தான். ஆனால் உன் தோழிகளுடனும் நண்பர்களுடனும் செல்லும்போது கூட உனக்கு அந்த களிப்பும் மகிழ்ச்சியும் கிடைக்காதா என்ன? மேலும் இவன் கடமையை மறந்துவிட்டான். நம் கண் முன்னே உள்ள சவால்களையும் கடமைகளையும் இப்படி புறக்கணிப்பது சரியல்ல. காரணம், நமது மகிழ்ச்சியான தருணங்கள் முடிந்தவுடன் அவை மீண்டும் நம் முன்னே வரும். மைதானத்தில் குதிரை எப்படி அடக்கப்படுவதற்கு காத்திருந்ததோ அதே போல பிரச்னைகளும் வாழ்க்கையில் காத்திருக்கும். அவற்றை சந்தித்தே தீரவேண்டும்! "நான்காம் நபர் மிக பெரிய கலைஞன். திறமைசாலி என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவனிடம் உனக்கோ எதிர்காலத்தில் அவன் உன்னிடம் கொள்ளக் கூடிய பந்தத்திற்கோ கொடுப்பதற்கு ஒன்றுமில்லை." "ஆனால், ஐந்தாவதாக வந்தானே அவன் தான் உன் உணர்வுகளை புரிந்துகொண்டான். குதிரை மீது நீ கொண்டிருந்த அச்சத்தை கவனித்து அதை போக்குவதற்கு முயற்சித்தவன் அவன் மட்டுமே. அவன் போட்டியில் ஜெயித்தானா இல்லையா என்பது பிரச்னையல்ல. ஆனால் குதிரையை அடக்க முயற்சித்த போராட்டத்தில் நீங்கள் இருவரும் ஒன்றாக இருந்தீர்கள். ஒன்றாக விழுந்தீர்கள். கற்றுக்கொண்டீர்கள். இது தான் வாழ்க்கை துணை என்பதற்கு சரியான அர்த்தம் மகளே!" என்றார். “வாழ்க்கை துணை' என்ற சொல்லுக்கு தகுதியானவர் அழகும் செல்வமும் செல்வாக்கும் திறமையும் கலைத்திறனும் நகைச்சுவை உணர்வும் கொண்டவர் அல்ல. உங்கள் பலத்தையும் பலவீனத்தையும் புரிந்துகொண்டு கடினமான காலகட்டங்களில் உங்களுடன் இருந்து உங்கள் ஆற்றலை வெளியே கொண்டு வரக்கூடியவர் எவரோ அவரே 'வாழ்க்கைத் துணை' என்ற பதத்திற்கு உண்மையான அர்த்தம் கொண்டவர். புறத்தோற்றம், பணம், உத்தியோகம், வசதி வாய்ப்புக்கள் இதெயெல்லாம் அளவுகோலாக வைத்து வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுத்தவர்கள் பலர் ஒன்று உதை வாங்கி கொண்டிருக்கிறார்கள் ,

அல்லது கோர்ட் படியேறிக்கொண்டிருக்கிறார்கள்..

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல படிப்பினையாக உள்ள குறுங்கதை . .........!  😂

நன்றி பெருமாள் .......!

  • கருத்துக்கள உறவுகள்

468524123_587308613955356_34653203960485

  • கருத்துக்கள உறவுகள்

468402018_1771118380381313_8543928957685

  • கருத்துக்கள உறவுகள்

செத்தும் பழி வாங்கும் சத்தியவதி !!!!

main-qimg-ce662a6edf8174425dd2813fbdee9aeb-lq

ஒரு பெண் கணிப்பொறி நிலையத்திற்கு வந்து தன் புகை படத்தை சிறிது மாற்றம் செய்து கொடுக்க சொன்னார்.
கடைக்காரர் சொல்லுங்க உங்களுக்கு என்ன மாறுதல் செய்ய வேண்டும்.
பெண் -ஒன்றும் இல்லைப்பா!! இந்த படத்தோட ஒரு வைர கம்மல், ஒரு சவரன்ல நெத்தி சுட்டி, கழுத்துல ஒரு அஞ்சு பவனுக்கு ஒரு ஆரம்,
ரெண்டு கைகளிலும் அஞ்சு அஞ்சு தங்க வளவி, அப்புறம் ஒரு பத்து பவுனுக்கு ஒரு ஒட்டியாணம், இத எல்லாம் சேர்த்து ஒரு ஆளுயர புகைப்படம் ஒன்னு வேண்டும் வீட்டில் வைக்க,!!!
கடைக்காரன். - என்னம்மா !! உங்க சங்கதி புதிதாக உள்ளதே!! கொஞ்சம் புரியரமாதிரி சொல்லுங்களேன்,
பெண் - அது ஒண்ணும் இல்லைப்பா !!

மருத்துவர் நான் ரொம்ப நாள் உயிரோடு இருக்க மாட்டேன் என்று சொல்லிட்டாரு,
எப்படியும் எங்க வீட்டுக்காரர் அவரோட வேலை செய்யும் பெண்ணை கல்யாணம் கட்டிக்க போகிறார்.
வீட்டுக்கு வந்தா அந்த மகராசி இந்த புகை படத்தை பார்த்து இல்லாத இந்த நகையெல்லாம் எங்கே என்று கேட்டு என் கணவனை கொன்று விட வேண்டும்!!
அப்பொழுதுதான் என் ஆத்மா சாந்தியடைய வேண்டும்!!

  • கருத்துக்கள உறவுகள்

468856175_3759093044342369_8029919221849

  • கருத்துக்கள உறவுகள்

sinthikka.jpg

  • கருத்துக்கள உறவுகள்

469163310_4337534179806459_4090360221730

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of bicycle and text

  • கருத்துக்கள உறவுகள்

469320784_28529545293299197_780996845661

  • கருத்துக்கள உறவுகள்

469407129_1015217603983858_4610766713581

புரியுதா . .......!  😂

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 8 people and text

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, தமிழ் சிறி said:

May be an image of 8 people and text

 பாட்டி இருந்தாலும் எங்கே பேச வருகிறார்கள் ஒரு  Hi ஒரு Bye...அவ்வளவே தான் அவர்களுக்கு  அவர்களது   பிராக்கு.  

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, நிலாமதி said:

 பாட்டி இருந்தாலும் எங்கே பேச வருகிறார்கள் ஒரு  Hi ஒரு Bye...அவ்வளவே தான் அவர்களுக்கு  அவர்களது   பிராக்கு.  

கைத்தொலைபேசி வந்த பின் தான்... இந்த மாற்றம், நிலாமதி அக்கா.
சென்ற தலைமுறையின்... பாட்டி - பேரன் / பேத்தி உறவு மிகவும் உணர்வு பூர்வமானது. ❤️

  • கருத்துக்கள உறவுகள்

May be a graphic of crowd and text

அர்த்தம் உள்ள கருத்தோவியம்.

  • கருத்துக்கள உறவுகள்

sinthika.jpg

  • கருத்துக்கள உறவுகள்

470178701_1003511701794216_6999235376340

470184842_1003511758460877_7649243218026

470145789_1003511788460874_7995865138538

வைத்தியர் Mp அர்ச்சுனா பல்வேறுபட்ட திணைக்கள ரீதியாக செய்யற்படுகளை சரியான விதத்தில் திணைக்களத் தலைவர்களிடம் கேள்விகளை தொடுத்த வண்ணமே காணப்பட்டார் 🤔🤔🤔👍🏼.
விமர்சன ரீதியான பார்வை......
ஒரு கட்டத்தில் அரசாங்க உத்தியோகத்தர்கள் கணக்கு வழக்கில் திண்டாடிக் கொண்டிருந்த தருணங்களில் வைத்தியர் Mp அர்ச்சுனா சரியான கணக்கு வழக்கினை தெரிவித்துக் கொண்டிருந்தார்.
அமைச்சர் சந்திரசேகரன் சிறப்பான குண இயல்பு ஆளுமை அனைவரது பார்வையையும் பெற்றது ❤️.மாவட்ட ஒருங்இணைப்புக் குழுவின் தலைவர் என்ற வகையில் அவரது செயற்பாடுகள் மிகவும் சிறப்பானதாக இருந்தது🙏🏼.
இடத்தில் அமைச்சர் சந்திரசேகரன் சொன்னார் இவரைப்போல பல கேள்விகளைக் கேட்கின்ற பொழுது தான் அரசாங்க நிறுவனங்களை சரியாக நெறிப்படுத்த முடியும் எனவே இவ்வாறானவர் தேவை எனவும் கருத்துரைத்தார்.
இந்த கூட்டத்தில் ஊழல் தொடர்பான முறைகேடுகள், முறைப்படுகள் தொடர்பில் பல்வேறுபட்ட விடயங்கள் ஆளுநருக்கு தெரியும் என்பதால் பல்வேறு பட்ட விடயங்களை உற்று நோக்கிய வண்ணமே வட மாகாண ஆளுநர் காணப்பட்டார். இந்த விடயத்தில் வடக்கு மாகாண ஆளுநர் பல்வேறுபட்ட விடயங்களில் திறம்பட செயல்பட கூடியவர் எனவே எதிர்வரும் காலங்களில் அவரது நிர்வாக ரீதியான பல திறமையான செயற்பாடுகளை எதிர்பார்க்கலாம்.
அத்துடன் சில இடங்களில் வைத்தியர் சத்தியமூர்த்தி தொடர்புடைய செயற்பாடுகளை நேரடியாக வைத்தியர்Mp Ramanathan Archchuna விமர்சித்தார்.
அங்கிருந்தவர்கள் பலர் வைத்தியர் சத்தியமூர்த்தி தொடர்பான ஏதோ ஒரு கண்ணோட்டத்தில் அவரை அவதானித்தவாறும் காணப்பட்டனர். இது தொடர்பில் அமைச்சர் சந்திரசேகர் அவர்கள் நிறுவன ரீதியான பிரச்சினைகளை தனிப்பட்ட ரீதியில் குறிப்பிட்ட நபர்கள் மீது தாக்குதல் வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் இடம்பெறுகின்ற இந்த மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் முக்கியத்துவத்தை பொதுமக்கள் அனைவருக்கும் வைத்தியர் Mp அர்ச்சுனா என்று உணர்த்திவிட்டார்🙏🏼.
அதன் செயற்பாடுகள் அபிவிருத்தி சார்ந்ததாக இருக்கவேண்டும் எனவும் ஒவ்வொரு திணைக்களங்களையும் அதன் செயற்பாடுகளையும் சரியான விதத்தில் இயங்குகின்றதா??? என மேற்பார்வை செய்வது கேள்வி கேட்கின்ற உரிமை மக்களின் பிரதிநிதிகளுக்கு உண்டு என்பதை இன்று உணர்த்தினார்👍🏼.
இவ்வளவு காலமும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தை எவ்வாறு பயன்படுத்தினார்கள் என்பதற்கும் இன்று NPP அரசாங்கம் மற்றும் வைத்தியர் Mp அர்ச்சுனா கூட்டத்தை எவ்வாறு சிறந்த முறையில் பயன்படுத்தினார்கள் என்பதற்கு உதாரணமாகும் 🙏🏼.
இங்கே இடம்பெறுகின்ற அபிவிருத்தியை செய்யாமல் பாராளுமன்ற போய் கதைத்து பிரயோசனம் இல்லை என்பதை தெளிவாக தெரியப்படுத்தினார்.
எனவே அபிவிருத்தி தொடர்பான முன்மொழிவுகள் ஒரு வரைவை கொண்டு வருவதற்கு வைத்தியர்Mp அர்ச்சுனா முன்மொழிய அதனை சந்திரசேகர் தலைமையில் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் ஏற்றுக்கொண்டனர். இதில் என்ன விடயம் சிறப்பானது என்றால் அரசியல் தலையீடுகள் இல்லாமல் வீதிகள் அபிவிருத்தி செய்யப்படுவதே அதேபோல் அனைத்து விடயங்களும் இவ்வாறு கவனத்தில் கொண்டு செயல்பட்டால் எமது பிரதிநிதித்து முன்னேற்ற முடியும் என அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.
இந்த விடயம் இவ்வளவு காலமும் ஏன் இடம்பெறவில்லை???
உண்மையிலேயே NPP அரசாங்கம் ஒரு சிறந்த அரசாங்கம் என்பதை இந்த இடத்தில் பொது மக்களாகிய நாங்கள் பார்க்கின்றோம்.
அதேபோல் வைத்தியர் அர்ச்சுனாவின் கோரிக்கை மருத்துவ ரீதியாக இடம்பெற்ற பிழைகள் ஊழலை உரிய தண்டனை பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்பதே பொதுமக்களில் எதிர்பார்ப்பாக உள்ளது. அதனை நிறைவேற்றுகின்ற சந்தர்ப்பத்தில் இந்த நாடு அனைத்து துறைகளிலும் முன்னேறும் என் இதன் மூலம் ஊழல் ஒழிக்கப்படுவதற்கு முதலாவது மணி ஆக இதனை அடிக்க வேண்டும் 🙏🏼.
அத்துடன் ஊழல்வாதிகள் வைத்திய துறையில் இருக்கின்ற ஊழல்வாதிகள் களையப்பட வேண்டும் உண்மையில் யாழ்ப்பாணத்தில் வைத்திய மாபியா என்று சொல்லப்படுகின்றது இதனை முற்றாக ஒழிக்க வேண்டும் இதற்கு நிர்வாகத்தை மாற்றி அமைத்து கட்டமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாண போதனை வைத்தியசாலையில் தற்பொழுது கடமையில் இருக்கின்ற பனிப்பாளர் உரிய தகைமைகள் இன்றி வந்தவர் என்பதையும் சபையில் சுட்டிக்காட்டிய Archchuna Ramanathan என் போஸ்ட் என்று சொல்லப்படுகிற முறையில் மஹிந்தவின் காலத்தில் கொண்டுவரப்பட்டவர் என்பதையும் அனைவருக்கும் தெளிவுபடுத்தினார்😍.
இதனைத் தெளிவு படுத்தியதன் மூலம் இது ஒரு அரசியல் சார்ந்த நியமனம் என்பதையும் சபையில் ஒரு வகையில் மறைமுகமாக தெரியப்படுத்தினார்.
உண்மையில் ஒவ்வொரு பொதுமகனும் செலுத்துகின்ற வரி பணத்தின் அதன் பெறுமதியை உணர்ந்தால் போல வைத்திய அர்ச்சுனா அனைத்து திணைக்கள ரீதியான கணக்கு வழக்குகளையும் மிகவும் துல்லியமாக சிறிய நேரங்களில் பார்த்து செலவழித்த பணம் எவ்வளவு செலவழிக்காத பணமும் எவ்வளவு என விழாவாரியாக கேள்விகளை கேட்டார். ஒரு கட்டத்தில் பத்து நாட்களுக்கு இவ்வளவு மில்லியன் பணத்தை நீங்கள் செலவழிப்பீர்களா எனவும் கேட்டார்😂.
அந்த இடத்தில் தான் அனைவரது எதிர்ப்பும் கிளம்பியது என்று கூறலாம் உண்மையில் அரச அதிகாரிகள் மக்களின் வரிப்பணத்தை சரியாக செலவழிக்க வேண்டும் அவசரப்பட்டு திட்டங்களை நிறைவேற்றி வேண்டும் என்பதற்காக 10 நாட்களில் வருடம் முடிகின்றது என்று திட்டங்களை அரைகுறையாக நிறைவேற்றாமல் பூரணமாக செவ்வனே அந்த வேலை இடம்பெறாது என்ற உண்மையாயின் சபையில் போட்டு உடைத்தார் 👍🏼.
பணத்தை செலவழிக்க வேண்டும் என்பதற்காக செலவழித்து 100 நிறைவைக் காட்டுகின்றார்கள் என்பதை இன்று பொதுமக்கள் அனைவருக்கும் வைத்தியர் உணர்த்தினார் 👍🏼.
இங்கே அமைச்சர் சந்திரசேகரன் அவர்களின் செயல்பாடுகள் ஊழலுக்கு எதிரானதாக இருந்தது. என்பதை அனைவரும் உணர்ந்து கொண்டனர் பலர் டக்ளஸ் DCC தலைவராக இருந்த காலத்தில் இவ்வாறு கதைத்தால் எம்பி அர்ச்சனாவை பிடித்து வெளியில் விட்டிருப்பார் என்று முன்பு இருந்த அரசாங்க காலத்தில் கருத்து சுதந்திரம் இல்லாமை தொடர்பாக கதைத்துக் கொண்டனர்👍🏼.
இருந்த பொழுதிலும் அமைச்சர் சந்திரசேகரன் சிறப்பான முறையில் அனைத்து அரசாங்க நிறுவனங்களையும் சரியான விதத்தில் அதன் செயற்பாடுகள் ஆராயப்பட வேண்டும் என்ற ஒரு எண்ணத்தோடு அதன் மூலமாக பிழையான விதத்தில் வீண் செலவு செய்யாமல் பணத்தினை உரிய பெறுமதியோடு காத்திரமான செயற்பாடுகளை செய்வதை விரும்புவதாக காணப்பட்டார் என்பது அனைவரது பாராட்டுகளையும் பெற்றது ❤️. பல ஊழல்வாதிகளை தூக்கி வாரி போட்டது.
சிறந்த ஒரு முன்மாதிரியான மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டமாக கருதலாம் இனிவரும் காலங்களில் அரச உத்தியோகஸ்தர்கள் அரசு அதிகாரிகள் பலர் சிறப்பாக வேலை செய்ய ஆரம்பிக்க போகின்றார்கள் என்பதை உணர்த்துகின்றது ❤️❤️❤️❤️❤️.....
உண்மையில் வேலை செய்யாமல் பணத்தினை பெறுவது இதன் மூலம் தான் நமது நாடு அகல பாதாளத்திற்கு சென்றது எங்கும் ஊழல் எதிலும் ஊழல் இனி வரும் காலங்களில் எதுவும் சரிவராது என்பதை கட்டியம் கூறுவதாக அமைந்துள்ளது 🙏🏼.
இப்படிக்கு ஏழை தமிழ் மகன் நீலன்.
முடிந்தவரை இதனை பகிருங்கள் இதன் மூலம் பல ஊழல்வாதிவாதிகளுக்கு இன்றைய செய்தியானது இறுதி மணியாக ஒலிக்கட்டும்😡😡.
  • கருத்துக்கள உறவுகள்

8-n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

470076036_612047688035483_80952481568589

வியாபாரம் . .........!  😴

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

470076036_612047688035483_80952481568589

வியாபாரம் . .........!  😴

கோவிட்டுக்குப் பின்பு சகல சாமான்களும் இதே நிலை தான்.

விலையையும் கூட்டி அளவையும் குறைத்து விட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, ஈழப்பிரியன் said:

கோவிட்டுக்குப் பின்பு சகல சாமான்களும் இதே நிலை தான்.

விலையையும் கூட்டி அளவையும் குறைத்து விட்டார்கள்.

இங்கும் இதே நிலைதான்.
முன்பு… போஞ்சி, காளான், தக்காளி போன்ற மரக்கறி வகைகளை
500 கிராம் பைகளில் பொதி செய்து கடைகளுக்கு அனுப்புவார்கள்.
கோவிட்டுக்குப் பிறகு 400 கிராம் பொதி ஆக்கி, விலையையும் கூட்டி விட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

mk.jpg

  • கருத்துக்கள உறவுகள்

470874967_1115345183566612_7750314607729

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.