Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ட்ரம்ப் அரசின் முக்கிய அறிக்கை பெப்ரவரியில் வௌியாகிறது! - இலங்கை குறித்த நிலைப்பாடு மாற்றம்? 

Featured Replies

இலங்கைக்கு பாதகமாக அமையுமா? ட்ரம்ப் அரசின் அறிக்கை:

donald-trump.jpg

கடந்த 2015ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமை பேரவையில் அமெரிக்காவால் நிறைவேற்றப்பட்ட இலங்கை குறித்த தீர்மானம் தொடர்பில், அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான புதிய அரசு எதிர்வரும் பெப்ரவரி மாதம் தமது நிலைப்பாட்டை வெளியிடவுள்ளதாக இராஜதந்திர தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள யுத்தக் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பான சர்வதேச விசாரணைகளிலிருந்து விடுவிக்குமாறு ஜனாதிபதி மைத்திரி ஏற்கனவே அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தார். இது குறித்த கலந்துரையாடுவதற்கு இலங்கை ஜனாதிபதிக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளதாகவும் இதன் பிரகாரம் எதிர்வரும் ஜனவரி மாத பிற்பகுதியில் ஜனாதிபதி மைத்திரி அமெரிக்கா செல்லவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, முன்னைய அரசின் வெளிவிவகார கொள்கையை ட்ரம்ப் அரசு தவிர்த்து, முற்றிலும் மாறுபட்ட கொள்கையை பின்பற்றவுள்ளதால் இலங்கை குறித்த தீர்மானத்தை அமெரிக்கா மீள்பரிசீலனை செய்யுமென கூறப்படுகிறது.

இவ்வாறான நிலையில், இலங்கை தொடர்பான அறிக்கை குறித்து ட்ரம்ப் தலைமையிலான புதிய அரசு வெளியிடும் தீர்மானமானது தமிழ் மக்களுக்கு பாதகமாக அமையலாமென அச்சம் வெளியிடப்பட்டு வருகின்றது.

http://globaltamilnews.net/archives/11792

  • கருத்துக்கள உறவுகள்
ட்ரம்ப் அரசின் முக்கிய அறிக்கை பெப்ரவரியில் வௌியாகிறது! - இலங்கை குறித்த நிலைப்பாடு மாற்றம்? 
[Tuesday 2016-12-27 17:00]
ஐ.நா. மனித உரிமை பேரவையில் கடந்த ஆண்டு  நிறைவேற்றப்பட்ட இலங்கை குறித்த தீர்மானம் தொடர்பில், அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான புதிய அரசு எதிர்வரும் பெப்ரவரி மாதம் தமது நிலைப்பாட்டை வெளியிடவுள்ளதாக இராஜதந்திர தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐ.நா. மனித உரிமை பேரவையில் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட இலங்கை குறித்த தீர்மானம் தொடர்பில், அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான புதிய அரசு எதிர்வரும் பெப்ரவரி மாதம் தமது நிலைப்பாட்டை வெளியிடவுள்ளதாக இராஜதந்திர தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள யுத்தக் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பான சர்வதேச விசாரணைகளிலிருந்து விடுவிக்குமாறு ஜனாதிபதி மைத்திரி ஏற்கனவே அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தார். இது குறித்த கலந்துரையாடுவதற்கு இலங்கை ஜனாதிபதிக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளதாகவும் இதன் பிரகாரம் எதிர்வரும் ஜனவரி மாத பிற்பகுதியில் ஜனாதிபதி மைத்திரி அமெரிக்கா செல்லவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, முன்னைய அரசின் வெளிவிவகார கொள்கையை ட்ரம்ப் அரசு தவிர்த்து, முற்றிலும் மாறுபட்ட கொள்கையை பின்பற்றவுள்ளதால் இலங்கை குறித்த தீர்மானத்தை அமெரிக்கா மீள்பரிசீலனை செய்யுமென கூறப்படுகிறது. இவ்வாறான நிலையில், இலங்கை தொடர்பான அறிக்கை குறித்து ட்ரம்ப் தலைமையிலான புதிய அரசு வெளியிடும் தீர்மானமானது தமிழ் மக்களுக்கு பாதகமாக அமையலாமென அச்சம் வெளியிடப்பட்டு வருகின்றது.http://www.seithy.com/breifNews.php?newsID=172613&category=TamilNews&language=tamil

இதுவரை சாதகமாக கொள்கைகளைக் கொண்ட நாடுகள் எவை?  எழுதுகின்ற பத்திரிகைகள் சுத்த மோசமான விளம்பரத் தன்மையைக் கொண்டுள்ளன.

  • கருத்துக்கள உறவுகள்

டிரம்புக்கு இலங்கை எங்கு இருக்குது என்று தெரியுமோ என்று சொல்ல முடியாது.

இலங்கை தொடர்பான வெளியுறவு கொள்கைகளை வகுப்பது ராஜாங்க அமைச்சின் அதிகாரிகள். 

இலங்கை தொடர்பான கொள்கையினை மாத்து மாறு, அதிகாரிகள் மீது, அழுத்தம் பிரயோகிக்குமளவுக்கு, டிரம்புக்கு உடனடி தேவை இருப்பதாக தெரியவில்லை.

அவருக்கு, சிரியா, ருசியா போன்ற அதி முக்கிய பிரச்சனைகள் உள்ளன.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எத்தினையோ நாடுகள் எல்லாம் இந்தாளாலை என்ன நடக்குமோ......என்ன மாற்றங்கள் வருமோ எண்டு தடுமாறிக்கொண்டிருக்க்கேக்கை........எங்கடையளின்ரை துல்லிய கணிப்பு வெகு பிரமாதம் கண்டியளோ......tw_tounge_xd:.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nathamuni said:

டிரம்புக்கு இலங்கை எங்கு இருக்குது என்று தெரியுமோ என்று சொல்ல முடியாது.

இலங்கை தொடர்பான வெளியுறவு கொள்கைகளை வகுப்பது ராஜாங்க அமைச்சின் அதிகாரிகள். 

இலங்கை தொடர்பான கொள்கையினை மாத்து மாறு, அதிகாரிகள் மீது, அழுத்தம் பிரயோகிக்குமளவுக்கு, டிரம்புக்கு உடனடி தேவை இருப்பதாக தெரியவில்லை.

அவருக்கு, சிரியா, ருசியா போன்ற அதி முக்கிய பிரச்சனைகள் உள்ளன.

image.jpg

இப்ப தெரியும்

Edited by MEERA

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nathamuni said:

டிரம்புக்கு இலங்கை எங்கு இருக்குது என்று தெரியுமோ என்று சொல்ல முடியாது.

11 minutes ago, MEERA said:

image.jpg

இப்ப தெரியும்

காலங் காத்தாலை.... இவங்கட தொல்லை,  தாங்க முடியேல்லை.  laughing man smiley:grin:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.