Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஈபிடிபி கட்சி உறுப்பினர்கள் இருவரையும் நாடுகடத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதிக்கு யாழ் மேல் நீதிமன்றம் பரிந்துரை

Featured Replies

தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஈபிடிபி கட்சி உறுப்பினர்கள் இருவரையும் நாடுகடத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதிக்கு யாழ் மேல் நீதிமன்றம் பரிந்துரை

Elanchelian_CI.jpg

ஊர்காவற்றுறை தேர்தல் பரப்புரை இரட்டைக் கொலை வழக்கில் தமைறைவாகியுள்ள நிலையில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஈபிடிபி கட்சியைச் சேர்ந்த நபர்கள் இருவரையும் இங்கிலாந்தில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்த ஏற்பாடுகள் செய்யுமாறு யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் ஜனாதிபதிக்குப் பரிந்துரை செய்துள்ளார்.

தூக்குத் தண்டனை தீர்ப்புக்களில், தீர்ப்பளிக்கின்ற நீதிபதி ஜனாதிபதிக்குத் தமது தனிப்பட்ட அபிப்பிராயத்தை அனுப்பிவைக்க வேண்டும், என்ற நடைமுறையின்படி, இந்த வழக்கில் இவர்கள் இருவருக்கும் நீதிமன்றத் தீர்ப்பில் அளிக்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனையை, ஆயுட்கால சிறைத் தண்டனையாகக் குறைக்குமாறும் குற்ற நடவடி கோவை ஏற்பாடுகளின் கீழ் யாழ் மேல் நீதிமன்றம் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள பரிந்துரையில் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்துடனான நாடுகடத்தல் உடன்படிக்கையின் மூலம் அல்லது இருநாடுகளுக்கிடையில், பரஸ்பரம் குற்றவாளிகளைப் பரிமாற்றிற்கொள்ளும் நடைமுறையின் மூலம் இந்த நாடு கடத்தல் ஏற்பாட்டைச் செய்யுமாறு யாழ் மேல் நீதிமன்றம் நீதிபதி இளஞ்செழியன் தனது பரிந்துரையில் குறப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஈபிடிபி கட்சியைச் சேர்ந்த இவர்கள் இருவரும், வவுனியா மேல் நீதிமன்றத்தினால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்த போது, பிணையில் சென்றதன் பின்னர், வழக்கு நடவடிக்கைக்கு நீதிமன்றத்திற்கு வருகை தராமல் இங்கிலாந்துக்குத் தப்பிச் சென்றுவிட்டதாக தகவல்கள் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டிருந்தன.

இதனால், இவர்கள் இருவரும் தலைமறைவாகியிருந்த நிலையில், இவர்கள் இல்லாமலேயே, வழக்கு விசாரணைகள் நடைபெற்றன. விசாரணையின் முடிவில் அளிக்கப்பட்ட தீர்ப்பில் இருவருக்கும் இரட்டை தூக்குத் தண்டனையும், 20 வருட கடூழியச் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.

இவர்கள் இருவரும் தலைமறைவாகியுள்ள இங்கிலாந்தில் மரண தண்டனை இல்லாது ஒழிக்கப்பட்டிருப்பதனால், அவர்களை அங்கிருந்து இலங்கைக்கு நாடு கடத்துவதற்கு ஏதுவாக, அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனையை ஆயட்காலச் சிறைத் தண்டனையாகக் குறைக்குமாறு ஜனாதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் இருந்து இவர்களை இலங்கைக்கு நாடு கடத்தும் ஏற்பாடுகள் தொடர்பில் எடுக்கப்படுகின்ற நடவடிக்கைகள் பற்றிய நீதிமன்றத்திற்கான அறிக்கையை ஜனாதிபதியின் செயலாளர் அல்லது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் அல்லது அங்கீகாரம் அளிக்கப்பட்ட அதிகாரி ஒருவரின் ஊடாக எதிர்வரும் மார்ச் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் யாழ் மேல் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்குமாறும் அந்த பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது,

அதேபோன்று, வெளிநாட்டு அமைச்சர், நீதியமைச்சர், சட்டமா அதிபருக்கும் இவர்கள் இருவரையும் இங்கிலாந்தில் இருந்து நாடு கடத்தல் சம்பந்தமான சட்டரீதியான நடவடிக்கைகளை எடுத்து, எதிர்வரும் மார்ச் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் யாழ் மேல் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் யாhழ் மேல் நீதிமன்றத்தினால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2001 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28 ஆம் திகதி ஊர்காவற்றுறை நாரந்தனையில் தேர்தல் பரப்புரைக்காகச் சென்றிருந்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் மது நடத்தப்பட்ட தாக்குதலில் கூட்டமைப்பின் ஆதராளர்கள் இருவர் கொல்லப்பட்டனர்.

அத்துடன், கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களான மாவைசேனாதிராஜா, எம்.கே.சிவாஜிலிங்கம் உட்பட பலர் காயமடைந்தனர்.

இந்த வழக்கில் ஈபிடிபி கட்சியைச் சேர்ந்த நெப்போலியன் அல்லது ரமேஷ்,  மதனராஜா அல்லது மதன், அன்ரன் ஜீவராஜா அல்லது ஜீவன் ஆகிய மூவருக்கும் இரட்டை மரண தண்டனையும் 20 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனையும் விதித்து, யாழ் மேல் நீதிமன்றத்தினால் தீர்ப்பளிக்கப்பட்டது,

இந்த மூவரில் தலைமறைவாகியுள்ள இருவரையும் நாடு கடத்துவதற்குரிய சட்ட ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக நீதிமன்றத்தின் தூக்குத் தண்டனை விதித்துள்ள தீர்ப்பின் பிரதியும் ஜனாதிபதி உள்ளிட்ட அனைவருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

http://globaltamilnews.net/archives/13663

  • கருத்துக்கள உறவுகள்

அதாகப்பட்டது சிறிலங்காவில் கொலை செய்து விட்டு தூக்கு தணடனை இல்லாத நாட்டுக்கு தப்பி விட்டால் தூக்கு தண்டனையில் இருந்து தப்பி விடலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் டிசம்பர் 20-ஆம் திகதி எழுதிய கருத்து 

Trial in absentia விடயத்தில் நீதிமன்றம் சிறிது அவசரபட்டுவிட்டதோ என்றே எண்ணத்தோன்றுகிறது. மரணதண்டனை விதிக்கப்பட்ட குற்றவாழிகள் தற்சமயம் வெளிநாடுகளில் மறைந்தது வாழ்வதாக தெரிகிறது. அத்துடன் சர்வதேச பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்னிலையில் மரணதண்டனை தடைசெய்யப்பட்டுள்ள நாடுகளில் அவர்கள் தற்சமயம் இருந்தால் அந்த நாடுகளில் உள்ள மனிதாபிமான அமைப்புகள் அவர்களை வெளியேற்ற வேண்டாம் என்று அரசுக்கு அழுத்தம் கொடுக்கலாம். 

Edited by vanangaamudi

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, vanangaamudi said:

நான் டிசம்பர் 20-ஆம் திகதி எழுதிய கருத்து 

Trial in absentia விடயத்தில் நீதிமன்றம் சிறிது அவசரபட்டுவிட்டதோ என்றே எண்ணத்தோன்றுகிறது. மரணதண்டனை விதிக்கப்பட்ட குற்றவாழிகள் தற்சமயம் வெளிநாடுகளில் மறைந்தது வாழ்வதாக தெரிகிறது. அத்துடன் சர்வதேச பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்னிலையில் மரணதண்டனை தடைசெய்யப்பட்டுள்ள நாடுகளில் அவர்கள் தற்சமயம் இருந்தால் அந்த நாடுகளில் உள்ள மனிதாபிமான அமைப்புகள் அவர்களை வெளியேற்ற வேண்டாம் என்று அரசுக்கு அழுத்தம் கொடுக்கலாம். 

விடயம் என்னெண்டா, உலகம் சின்னதாப் போட்டுது. மறைந்து வாழ முடியாது.

இவயள் இரண்டு பேரும், தீவிரவாதம் இல்லா, அரசியல் கொலையாளிகள்.

இலங்கையில் கடசீத் தூக்கு 1974 - மறுசிறா.

ஆகவே, தூக்கு தண்டணை நிறைவேற்றப்படும் என அனுப்பாமல் இருக்காகினம்.

பொட்டா, பூவா என்று கேட்டு வெடிவைத்தவயள் பாடு சிக்கல் தான்.

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு பேரும் வெளிநாட்டிலை பாதுகாப்பா இருக்கினம் ஏலுமென்டா புடிச்சு கூட்டிக்கொண்டுவந்து தண்டனையை நிறைவேற்றுங்கோ பார்ப்பம் என்று டக்கி **** சொல்லிப்போட்டுது. அதனாலை செழியன் உள்ளடங்கலா நீதித்துறைக்கு டக்கி விடும் சவாலாக இதை எடுத்து செயல்படவேணும் என்பது என்னுடைய கருத்து.

Edited by நியானி
தணிக்கை

  • கருத்துக்கள உறவுகள்

ஈபிடிபி 

ஈபிடிபி......  காரன்  என்றால்,  
என்ன அர்த்தம்? அந்த... ****  இவ்வளவு நாளும்..... லண்டனிலையா......  ஒளிச்சு,  இருந்தவர் ?

Edited by நியானி
தணிக்கை

  • கருத்துக்கள உறவுகள்

சிலபேர் கத்திரியும் (தணிக்)கையுமா அலையிறாங்களேப்பா ? இல்லென்னா சொல்லிடுவமல்ல.

Edited by vanangaamudi

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.