Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதை சிலர் மறந்து செயற்படுகின்றமை கவலையளிக்கின்றது

Featured Replies

வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதை சிலர் மறந்து செயற்படுகின்றமை கவலையளிக்கின்றது

DSC6646-ff8deb49a2b76a019b2f2a997bd665d17bdfb8d8.jpg

(ப.பன்­னீர்­செல்வம், எம்.எம். மின்ஹாஜ்)

யாழ்ப்­பா­ணத்­தி­லி­ருந்து முஸ்­லிம்கள் வெளி­யேற்­றப்­பட்­டதை இன்று பலர் மறந்து செயற்­ப­டு­கின்­றனர். இது பெரும் கவ­லையை ஏற் ப­டுத்­து­கி­றது என சபையில் நேற்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார். 

இவ்­வா­றா­னதோர் நிலை­யிலும் மறைந்த எம்.எச்.மொஹமட் இலங்­கை­ய­ராக வாழ்ந்­த­தோடு பிரி­வி­னையை எதிர்த்தார் என்றும் பிர­தமர் குறிப்பிட்டார். மறைந்த முன்னாள் அமைச்­சரும் சபா­நா­ய­க­ரு­மாக பதவி வகித்த எம்.எச். மொஹமட் தொடர்­பான  அனு­தாபப் பிரே­ரணை நேற்று வெள்­ளிக்­கி­ழமை இடம்பெற்றது.  

இதில் கலந்து கொண்டு உரையாற்றுகை யிலேயே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இவ் அனு­தாபப் பிரே­ர­ணையில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க உரையாற்றுகையில்  யாழ்ப்­பா­ணத்­தி­லி­ருந்து முஸ்­லிம்கள் வெளி­யேற்­றப்­பட்­டாலும் முஸ்­லிம்கள் ஒரு போதும் தனி நாடு கேட்­க­வில்லை. தாம் அனை­வ­ரு­டனும் இணைந்து ஒன்­று­பட்ட இலங்­கைக்குள் வாழ்­வதை விரும்­பு­வ­தாக முஸ்­லிம்கள் அறி­வித்­தனர். 

இவ்­வா­றா­னதோர் நிலை­மையை ஏற்­ப­டுத்த முக்­கிய பங்கு வகித்­தவர் எம்.எச்.மொஹமட் ஆவார். அவர் முஸ்லிம் ஆக மட்­டு­மல்ல இலங்­கை­ய­ரா­கவும் வாழ்ந்து நாட்­டுக்கு புகழ் சேர்த்தார். யாழ்ப்­பா­ணத்­தி­லி­ருந்து முஸ்­லிம்கள் வெளி­யேற்­றப்­பட்­டதை இன்று பலர் மறந்து செயற்­ப­டு­கின்­றனர். இது கவ­லை­ய­ளிக்­கின்­றது என்றார். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-01-28#page-1

  • கருத்துக்கள உறவுகள்

அம்பாறையை முஸ்லிம் பிரதேசமாக அரசுக்குள்ளே இருப்பவர்கள் கேட்டார்களே? அது? நிறைய ஞாபக மறதி வசதிக்கு ஏற்ப வருகிறதே, நரி.

On 1/28/2017 at 0:29 PM, நவீனன் said:

யாழ்ப்­பா­ணத்­தி­லி­ருந்து முஸ்­லிம்கள் வெளி­யேற்­றப்­பட்­டதை இன்று பலர் மறந்து செயற்­ப­டு­கின்­றனர்

இதுதான் கேள்வி 

விடை தவறு 

On 1/28/2017 at 11:10 PM, nunavilan said:

அம்பாறையை முஸ்லிம் பிரதேசமாக அரசுக்குள்ளே இருப்பவர்கள் கேட்டார்களே? அது? நிறைய ஞாபக மறதி வசதிக்கு ஏற்ப வருகிறதே, நரி.

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, ஜீவன் சிவா said:

இதுதான் கேள்வி 

விடை தவறு 

அடுத்த கேள்வி அவருக்கு.  யாழ்ப்பாணத்தை பற்றி கதைக்கும் போது  அம்பாறையை  பற்றி சிந்தித்து இருக்க வேண்டும்  ஒரு நாட்டின் பிறதமர் என்ற வகையில். யாழ்ப்பாணத்தில் இருந்து முஸ்லிம்கள் அகற்றப்பட்டது  பிழை என்றும் மன்னிப்பும் கேட்கப்பட்டது உரியவர்களால் உரிய நேரத்தில். நாட்டின் பிரதமர் பொறுப்பாக பதில் கூறவேண்டும்.

2 minutes ago, nunavilan said:

நம்பீட்டன்

ஆனா மற்றவர்கள் மன்னிப்பு கேட்க்கும்போதுநீங்கள் நம்பவில்லையே - அங்குதான் பிரச்சனையே  

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ஜீவன் சிவா said:

நம்பீட்டன்

ஆனா மற்றவர்கள் மன்னிப்பு கேட்க்கும்போதுநீங்கள் நம்பவில்லையே - அங்குதான் பிரச்சனையே  

சிலருக்கு வெத்திலை பாக்கு வைக்க வேண்டும் என்று  எனக்கு தெரியாமல் போய்விட்டது.

என்ன பிரச்சனை??

3 minutes ago, nunavilan said:

சிலருக்கு வெத்திலை பாக்கு வைக்க வேண்டும் என்று  எனக்கு தெரியாமல் போய்விட்டது.

என்ன பிரச்சனை??

எனக்கும் தெரியாம போனது எனது குற்றம் இல்லையே

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ஜீவன் சிவா said:

எனக்கும் தெரியாம போனது எனது குற்றம் இல்லையே

அப்போ தெய்வ குற்றமோ??

Just now, nunavilan said:

அப்போ தெய்வ குற்றமோ??

இருக்கலாம் 

தெய்வம் இருந்தால் :grin:

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ஜீவன் சிவா said:

இருக்கலாம் 

தெய்வம் இருந்தால் :grin:

ஓ சிவப்பு சட்டை காரராக்கும்.tw_blush:

1 minute ago, nunavilan said:

ஓ சிவப்பு சட்டை காரராக்கும்.tw_blush:

இல்லை 

கருப்புச்சட்டை

  • கருத்துக்கள உறவுகள்
Quote

யாழ்ப்­பா­ணத்­தி­லி­ருந்து முஸ்­லிம்கள் வெளி­யேற்­றப்­பட்­டாலும் முஸ்­லிம்கள் ஒரு போதும் தனி நாடு கேட்­க­வில்லை. தாம் அனை­வ­ரு­டனும் இணைந்து ஒன்­று­பட்ட இலங்­கைக்குள் வாழ்­வதை விரும்­பு­வ­தாக முஸ்­லிம்கள் அறி­வித்­தனர். 

 விடை

அம்பாறையை முஸ்லிம் பிரதேசமாக அரசுக்குள்ளே இருப்பவர்கள் கேட்டார்களே? அது? நிறைய ஞாபக மறதி வசதிக்கு ஏற்ப வருகிறதே, நரி.

Just now, ஜீவன் சிவா said:

இல்லை 

கருப்புச்சட்டை

சிவாஜி தான் நல்ல நடிகன் என்று கேள்விப்பட்டேன். அவரை மிஞ்சியவர்களும் இருக்கிறார்கள் போல.tw_yum:

On 1/28/2017 at 0:29 PM, நவீனன் said:

யாழ்ப்­பா­ணத்­தி­லி­ருந்து முஸ்­லிம்கள் வெளி­யேற்­றப்­பட்­டாலும் முஸ்­லிம்கள் ஒரு போதும் தனி நாடு கேட்­க­வில்லை. தாம் அனை­வ­ரு­டனும் இணைந்து ஒன்­று­பட்ட இலங்­கைக்குள் வாழ்­வதை விரும்­பு­வ­தாக முஸ்­லிம்கள் அறி­வித்­தனர். 

கீழே உள்ள உங்கள் பதிவுதான் பிரச்சனையே 

On 1/28/2017 at 11:10 PM, nunavilan said:

அம்பாறையை முஸ்லிம் பிரதேசமாக அரசுக்குள்ளே இருப்பவர்கள் கேட்டார்களே? அது? நிறைய ஞாபக மறதி வசதிக்கு ஏற்ப வருகிறதே, நரி.

44 minutes ago, ஜீவன் சிவா said:

இதுதான் கேள்வி 

விடை தவறு 

மறுபடியும் ஆரம்பத்தில் இருந்தா?

ஆளை விடு சாமி 
 
  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம்கள் தனி அலகு கேட்டார்கள். அது பிசுபிசுத்துப்போய் விட்டதி. ரனில் கூறியது முஸ்லிம்கள் தனி அலகு கேட்கவில்லை என்பது பிழையான கூற்று.

14 minutes ago, ஜீவன் சிவா said:

மறுபடியும் ஆரம்பத்தில் இருந்தா?

ஆளை விடு சாமி 
 
17 minutes ago, nunavilan said:

சிவாஜி தான் நல்ல நடிகன் என்று கேள்விப்பட்டேன். அவரை மிஞ்சியவர்களும் இருக்கிறார்கள் போல.tw_yum:

ஆளை விடு சாமி 

11 minutes ago, nunavilan said:

முஸ்லிம்கள் தனி அலகு கேட்டார்கள். அது பிசுபிசுத்துப்போய் விட்டதி. ரனில் கூறியது முஸ்லிம்கள் தனி அலகு கேட்கவில்லை என்பது பிழையான கூற்று.

மறுபடியும் ஆரம்பத்தில் இருந்தா?

உங்கள் கருத்துக்களை யாழ் களத்தின் கருத்த்துக்களாக நான் ஏற்றுக்கொள்ளலாமா?

அப்படியாயின் இனிமேலும் நான் இங்கிருக்க விரும்பவில்லை

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்

Quote

வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதை சிலர் மறந்து செயற்படுகின்றமை கவலையளிக்கின்றது

யார்  அந்த சிலர்??

எனது கேள்வி : சிறையில் வாடும் இளைஞர்களின் விடுதலை தொடர்பில் ரனிலின் அரசை சேர்ந்த சிலர் மறந்து செயற்படுவது ஏன்??

2 minutes ago, nunavilan said:

எனது கேள்வி : சிறையில் வாடும் இளைஞர்களின் விடுதலை தொடர்பில் ரனிலின் அரசை சேர்ந்த சிலர் மறந்து செயற்படுவது ஏன்??

சும்மா பொழுது போகாமல்

இது உங்களின் மேற்குறிப்பிட்ட கேள்விக்கு பதில் 

ஆமா எனது கேள்விக்கும் உங்கள் பதிலுக்கும் என்ன தொடர்பு என்று நீங்களா ஒரு முடிவுக்கு வாங்கோ

நாளை நான் நித்திரையால் எழும்பி பொழுது போகாவிட்டால் பதில் தருகின்றேன்..
 
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஜீவன் சிவா said:

சும்மா பொழுது போகாமல்

இது உங்களின் மேற்குறிப்பிட்ட கேள்விக்கு பதில் 

ஆமா எனது கேள்விக்கும் உங்கள் பதிலுக்கும் என்ன தொடர்பு என்று நீங்களா ஒரு முடிவுக்கு வாங்கோ

நாளை நான் நித்திரையால் எழும்பி பொழுது போகாவிட்டால் பதில் தருகின்றேன்..
 
பொழுது போகாவிட்டால் பண்ணை கடல் பக்கம் போகலாமே?

  • கருத்துக்கள உறவுகள்
On 28.1.2017 at 7:59 AM, நவீனன் said:

வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதை சிலர் மறந்து செயற்படுகின்றமை கவலையளிக்கின்றது

DSC6646-ff8deb49a2b76a019b2f2a997bd665d17bdfb8d8.jpg

ப.பன்­னீர்­செல்வம்

இவ் அனு­தாபப் பிரே­ர­ணையில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க உரையாற்றுகையில்  யாழ்ப்­பா­ணத்­தி­லி­ருந்து முஸ்­லிம்கள் வெளி­யேற்­றப்­பட்­டாலும் முஸ்­லிம்கள் ஒரு போதும் தனி நாடு கேட்­க­வில்லை. தாம் அனை­வ­ரு­டனும் இணைந்து ஒன்­று­பட்ட இலங்­கைக்குள் வாழ்­வதை விரும்­பு­வ­தாக முஸ்­லிம்கள் அறி­வித்­தனர். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-01-28#page-1

முஸ்லிம்கள் தனி நாடு கேட்கவில்லை
மலையகத்தமிழர்கள் தனி நாடு கேட்கவில்லை
ஏன் இலங்கையில் வசிக்கும் பறங்கியர்களும் தனி நாடு கேட்கவில்லை
இலங்கையில் வசிக்கும் ஆதி காலத்து வேடர்களும் தனி நாடு கேட்கவில்லை
ஆனால் தமிழர்கள் தனி நாடு கேட்டார்கள் இப்போதும் கேட்கின்றார்கள்

காரணம் இலங்கைத் தமிழர்கள் தங்களைத் தாங்களே ஆண்ட பரம்பரையினர் அவர்கள் தனி நாட்டைக்  கேட்டுக்கொண்டேயிருப்பார்கள் கிடைக்கும் வரை .....
ஒரு நாள் தமிழர்களுக்கான நாடு இலங்கையில் கிடைக்கும் என்பது உறுதி. 

இந்த ரணில் விக்ரமசிங்கவுக்கு,

1956 முதல் தமிழர்களுக்கு எதிராக நடந்த 20 க்கு மேற்பட்ட இனக்கலவரங்களில் இலட்சக்கணக்கான  தமிழர்கள் பாதிக்கப்பட்டது ஞாபகம் இருக்கா?

பல இனக்கலவரங்களில் சிங்கள-பௌத்தர்களும் முஸ்லிம்களும் தமிழர்களின் பெருமளவு சொத்துக்களைக் கொள்ளையடித்தது  நினைவில் இருக்கா?

பல இனக்கலவரங்களில் பல தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது ஞாபகம் இருக்கா?

பல இனக்கலவரங்களில் பல தமிழர்கள் சிங்களப் பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டது மறந்து போய்விட்டதா?

பல தமிழர்களின் காணிகளை இந்த முஸ்லீம் கும்பல்கள் கொள்ளையடித்துள்ளது மறந்து போய்விட்டதா?

தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சிங்கள-பௌத்த அரச பயங்கரவாத இயந்திரத்தின் நீதிமன்றுகள் எந்தவொரு நியாயமான தீர்வையும் வழங்கவில்லை என்பதும் ஞாபகம் இருக்கா?

இப்படியே இன்னும் நிறைய அடுக்கிக்கொண்டே போகலாம்,,,,,,

Edited by போல்

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஜீவன் சிவா said:

ஆளை விடு சாமி 

மறுபடியும் ஆரம்பத்தில் இருந்தா?

உங்கள் கருத்துக்களை யாழ் களத்தின் கருத்த்துக்களாக நான் ஏற்றுக்கொள்ளலாமா?

அப்படியாயின் இனிமேலும் நான் இங்கிருக்க விரும்பவில்லை

எப்படி என்னுடைய கருத்து யாழ் களத்தின் கருத்தாகும்?? என்னுடைய கருத்து என்னுடைய கருத்து தான். நான் யாருடனும் கலந்துரையாடி என்னுடைய கருத்தை எழுதுவதில்லை.முதலில் எனது கருத்து. பின்பு தான் நிர்வாகம்.மிக நீண்டகாலமாக கருத்தாளனாகவே இருந்துள்ளேன். சில காலமாக நிர்வாகத்துடன் இணைந்து செயற்படுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, nunavilan said:

எப்படி என்னுடைய கருத்து யாழ் களத்தின் கருத்தாகும்?? என்னுடைய கருத்து என்னுடைய கருத்து தான். நான் யாருடனும் கலந்துரையாடி என்னுடைய கருத்தை எழுதுவதில்லை.முதலில் எனது கருத்து. பின்பு தான் நிர்வாகம்.மிக நீண்டகாலமாக கருத்தாளனாகவே இருந்துள்ளேன். சில காலமாக நிர்வாகத்துடன் இணைந்து செயற்படுகிறேன்.

ம(வெ)ருண்டவன் கண்ணிற்கு இருண்டதெல்லாம் பேய் என்ற மாதிரி ஜீவனுக்கு நிர்வாக உறுப்பினரின் கருத்துக்கள் யாழ் களத்தின் கருத்துக்களாக தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி ஒன்று நடைபெற்றது சிலருக்கு தெரியவில்லை.

IMG_4510.jpg

https://www.tamilnet.com/art.html?catid=13&artid=6845

Edited by MEERA

கிழக்கு மாகாணததில் பல தமிழ் கிராமங்களில் இருந்து சிங்கள அரச ஆதரவுடன் முஸ்லீம்களால் தமிழர்கள் வெளியேற்றபட்டதையும் நாம் மறக்கவிலலை.

தமிழ் மககள் தமது உரிமைககாக போராடும் போதோ அதனால் சிங்கள அரசினால் சொல்லொணா துயரங்களை அனுபவிக்கும் தருணங்களில் முஸ்லீம்கள் உரிமை, தனி அலகு என்று எந்த தமக்கான உரிமைகளையோ முஸ்லீம் தலைவர்கள்  கேட்க மாட்டார்கள். தமிழ் மககளின் போராட்டததால் ஒரு சிறிய பலன் கிடைதது பேச்சு வார்ததை மேசைககு போனால் உடனடியாக முஸ்லீம் உரிமை, தனி அலகு என்று முன்னுககு வந்து விடுவார்கள் முஸ்லீம் தலைவர்கள். இது தான் இலங்கை தீவின் சரிததிரம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஊர் இரண்டு படடால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்னும் பழமொழி எங்கு பொருந்தாவிடிலும், இலங்கைத் தீவுக்கு பொருந்தும்.

சிங்களவர்களும், தமிழர்களும் மோதிய போது, பாம்புக்கு வாலையும், மீனுக்கு தலையையும் காட்டி தமது நிலைமைகளை உறுதி படுத்திக் கொண்டது முஸ்லீம் தலைமை.

இன்று யுத்தம் இல்லாத நிலையில், சிங்களவர்களின் கவனம் அவர்கள் மீது திரும்பி உள்ளது.

வில்பத்து ஒரு உதாரணம்.

யாழ்ப்பாணத்தில், வில்பத்துவில் மற்றும் முல்லைத்தீவில், வன்னியில் இருந்து வந்து, முஸ்லீம் காங்கிரசுக்கு எதிரான தனது அரசியலுக்காக, அடாவடி அரசியல் செய்ய முயலும் றிசாடினால், ஈகோ பிரச்சனையில் சிக்கி முஸ்லீம் குடியேட்டம் சிக்கலாகி உள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து முஸ்லீம் மக்கள் வெளியேறினார் என்பதை மறந்து முஸ்லீம் அரசியல் வாதிகள் தங்களுக்குள், இரகசியமாக, அடி படுகிறார்கள் என்பதே ரணில் சொல்லும் கதையின் சாராம்சம்.

அதாவது, மக்களுக்கு மூக்குப் போனாலும் பரவாயில்லை, றிசாட் களத்தில் இருக்கும் வரை அரசு ஒரு உதவியும் செய்யக் கூடாது என்பதே முஸ்லீம் காங்கிரஸ் நிலை.

றிசார்ட், சகல முஸ்லீம் கட்சிகளையும் கூப்பிட்டு மாநாடு போட்டும் பார்த்தார். வேலைக்கு ஆகவில்லை. இவரை வளர விடுவது தமக்கு நல்லதல்ல என்ற அரசியல் நிலை.

அது புரியாமல் இங்கே சிலர், தமக்கு புரிந்த அரசியல் பேசுகிறார்கள்.

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.