Jump to content

மட்டன் யாழ்ப்பாண வறுவல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. சரஸ்வதி அவர்களின் மட்டன் யாழ்பாண வறுவல் குறிப்பு சில மாற்றங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய சரஸ்வதி அவர்களுக்கு நன்றிகள்.

 

  • மட்டன் - 500 கிராம்
  • சின்ன வெங்காயம் - 20
  • தக்காளி - 2
  • பச்சை மிளகாய் - 2
  • கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
  • எண்ணெய் - 50 கிராம்
  • தனியா தூள் - ஒரு தேக்கரண்டி
  • உப்பு - தேவையான அளவு
  • தாளிக்க:
  • பட்டை - ஒன்று
  • கிராம்பு - ஒன்று
  • சோம்பு - அரை தேக்கரண்டி
  • சீரகம் - அரை தேக்கரண்டி
  • அரைக்க:
  • மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
  • சோம்பு - அரை தேக்கரண்டி
  • சீரகம் - அரை தேக்கரண்டி
  • கசகசா - ஒரு தேக்கரண்டி
  • இஞ்சி - சிறிது
  • பூண்டு - 8 பற்கள்
  • வறுத்து தூள் செய்ய:
  • மிளகாய் - 10
  • சீரகம் - அரை தேக்கரண்டி
  • சோம்பு - அரை தேக்கரண்டி
  • பட்டை - ஒன்று
  • ஏலக்காய் - ஒன்று

 

A12235_01.jpg

அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை அரைத்து கறியுடன் சேர்த்துப் பிசறி வைக்கவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, வறுத்துத் தூள் செய்ய வேண்டிய பொருட்களை வறுத்துத் தூள் செய்து கொள்ளவும். சின்ன வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.

 
A12235_02.jpg

கடாயில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, சோம்பு, சீரகம் ஆகியவற்றைத் தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

 
A12235_03.jpg

வதக்கியவற்றுடன் பிசறி வைத்திருக்கும் கறிக் கலவையைச் சேர்க்கவும்.

 
A12235_04.jpg

பிறகு உப்பு, தனியா தூள், சிறிது தண்ணீர் சேர்த்து வேகவிடவும். கறியில் உள்ள நீர் வற்றியவுடன் தூள் செய்தவற்றைச் சேர்த்து தீயைக் குறைத்து வைத்து 10 நிமிடங்கள் கிளறி இறக்கவும்.

 
A12235_05.jpg

சுவையான மட்டன் யாழ்ப்பாண வறுவல் தயார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது சுவையாக இருக்கும் , உதிரிகளாக இருந்தால் சுவையோ சுவையாக இருக்கும் .....!  tw_blush:

பகிர்வுக்கு நன்றி  கொழும்பான்....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/2/2017 at 8:41 PM, suvy said:

உதிரிகளாக இருந்தால் சுவையோ சுவையாக இருக்கும் .....!  tw_blush:

அது என்ன??  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, முனிவர் ஜீ said:

அது என்ன??  

Afficher l'image d'origine

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேவையான பொருட்களையும் செய்முறையையும் பார்க்கும்போது எப்படி யாழ்ப்பாணம் வந்தது என்பது தெரியவில்லை . குறிப்பாக கொத்தமல்லி, கசகசா போன்ற பொருட்கள் யாழ்ப்பாணத்தில் நாம் அங்கு இருந்த காலத்தில் பாவிப்பது இல்லை .

பகிர்வுக்கு நன்றி  கொழும்பான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழரசு said:

தேவையான பொருட்களையும் செய்முறையையும் பார்க்கும்போது எப்படி யாழ்ப்பாணம் வந்தது என்பது தெரியவில்லை . குறிப்பாக கொத்தமல்லி, கசகசா போன்ற பொருட்கள் யாழ்ப்பாணத்தில் நாம் அங்கு இருந்த காலத்தில் பாவிப்பது இல்லை .

பகிர்வுக்கு நன்றி  கொழும்பான்.

இனிமேல் அப்பிடித்தான்....... இந்த நூற்றாண்டிலை கண்டுபிடிப்புகள் எக்கச்சக்கம்........

"அலஸ்கா ஒடியல்புட்டு" செய்முறை எண்டு ரீல் விட்டாலும்....நீங்கள் நம்பித்தான் ஆகணும் :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, suvy said:

Afficher l'image d'origine

இதுக்கு கள்ளு சரிவருமா அல்ல சப்பட்டை அல்லது வேற ஏதாவது 
நம்மாளால முடிஞ்சது tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது கள்ளுக்கு ....! கணவாய் வறுவல் .....!  tw_blush:

Afficher l'image d'origine

 

Link to comment
Share on other sites

2 hours ago, suvy said:

இது கள்ளுக்கு ....! கணவாய் வறுவல் .....!  tw_blush:

Afficher l'image d'origine

 

இங்கு பிடித்தது அந்த முதல் 20 செக்கனில் இருந்து 40  செக்கன் வரையான விடியோதான்  - அப்புறம் என்ன நடந்திருக்குமென்பது உங்கள் கற்பனைக்கு:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2.2.2017 at 3:10 PM, colomban said:

கிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. சரஸ்வதி அவர்களின் மட்டன் யாழ்பாண வறுவல் குறிப்பு சில மாற்றங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய சரஸ்வதி அவர்களுக்கு நன்றிகள்.

 

  • மட்டன் - 500 கிராம்
  • சின்ன வெங்காயம் - 20
  • தக்காளி - 2
  • பச்சை மிளகாய் - 2
  • கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
  • எண்ணெய் - 50 கிராம்
  • தனியா தூள் - ஒரு தேக்கரண்டி
  • உப்பு - தேவையான அளவு
  • தாளிக்க:
  • பட்டை - ஒன்று
  • கிராம்பு - ஒன்று
  • சோம்பு - அரை தேக்கரண்டி
  • சீரகம் - அரை தேக்கரண்டி
  • அரைக்க:
  • மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
  • சோம்பு - அரை தேக்கரண்டி
  • சீரகம் - அரை தேக்கரண்டி
  • கசகசா - ஒரு தேக்கரண்டி
  • இஞ்சி - சிறிது
  • பூண்டு - 8 பற்கள்
  • வறுத்து தூள் செய்ய:
  • மிளகாய் - 10
  • சீரகம் - அரை தேக்கரண்டி
  • சோம்பு - அரை தேக்கரண்டி
  • பட்டை - ஒன்று
  • ஏலக்காய் - ஒன்று

யாழ்ப்பாணத்தான்.... ஆட்டு இறைச்சி கறிக்குள், தக்காளிப்  பழம்  போட்டு சமைக்கவே மாட்டான்.
இதில்... வெட்டப்  உள்ள  பல பொருட்களை  நீக்கி  விட்டு, இன்னும்  4 கரண்டி மிளகாய்த்தூள்  போட்டு சமைத்தால் தான்... ஒரிஜினல் யாழ்ப்பாண  ஆட்டுக்கறி வாசம் வரும்.  :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெருஞ்சிரகத்தைத்தான் சோம்பு என்றும் சொல்வார்கள்....! நற்சிரகம் வேறு....! பொதுவாய் இறைச்சிக்கு மஞ்சள் சேர்ப்பது வழமை ....! tw_blush: 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.