Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமறைவு, நாட்டுக்கு அவமானம்!

Featured Replies

சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமறைவு, நாட்டுக்கு அவமானம்!

 

 
AIADMK-leaders2

 

மக்களால் தேர்வு செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் யாருக்கு வேண்டுமானாலும் ஆதரவு தெரிவிக்கலாம். ஆனால் அவர்கள் மக்கள்மன்றத்தில் தங்கள் கருத்துக்களை வெளிப்படையாகப் பேசுபவர்களாக இருக்க வேண்டும்.  அவர்கள் எங்கே இருக்கிறார்கள்? என்று மக்கள் தேடுகிற நிலையில் இருக்கக் கூடாது. பேருந்துகளில் இருக்கிறார்கள். ஆடம்பர விடுதிகளில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள் போன்ற செய்திகள் யாவும் இந்த நாட்டிற்கு அவமானத்தைப் பெற்றுத் தருவதாகும்.

சட்டமன்ற உறுப்பினர்கள் என்பவர்கள் ஆயுதங்கள் அல்லர். அவர்களை மறைவாக வைத்துக் கொண்டு தாக்குதலைத் தொடுப்பதற்கு. பெரியார் சொன்னது போல் முட்டாள்களால் தேர்வு செய்யப்பட்ட அயோக்கியர்களே அரசியல்வாதிகள் என்ற இழிச் சொல்லைத் தொடர்ந்து சுமக்காதீர்கள்.

ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் தத்தமது தலைமையிலான கூட்டம் முடிந்தததும் தங்கள் தொகுதி மக்களின் கருத்துக்களைச் செவிமடுத்துக் கேட்க வேண்டும். உங்களுக்குத் தொகுதியை ஒதுக்கியது வேண்டுமானால் கட்சித் தலைமையாக இருக்கலாம். ஆனால் உங்களுக்கு மதிப்பளித்துச் சட்டப் பேரவைக்கு அனுப்பியவர்கள் இந்த மக்கள் தான். அந்த மக்களின் கருத்துக்களைக் கேட்டு அதன்படிதான் நீங்கள் செயல்பட வேண்டும்.

உங்கள் கட்சித் தலைமையின் காலடிகளில் நீங்கள் மண்டியிடுகிற காரணத்தால் தான் உங்களைத் தேர்வு செய்த மக்களின் கருத்துக்களை மதிக்க மறுக்கிறீர்கள். தலைமையில் பிளவு என்ற நிலைபாடுகளின் போது அறிவுக் கூர்மைக்கும் சுயமரியாதைக்கும் இடம் தந்து சிந்திக்கிற பகுத்தறிவு மிகுந்தவர்களாகத் திகழ வேண்டும். தன்னலத்துடனும், குதிரைபேரத்துக்கு இடம் தருகிற வகையிலும் செயல்படுவது என்பது இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு வஞ்சகம் செய்கிற செயலாகும்.

தமிழகத்தைப் பொருத்தவரை இரண்டு திராவிடத் தலைமைகளும் இதுநாள் வரை தங்களுக்கான வேட்பாளர்களைத் தேர்வு செய்யும்போது, மண்டியிடும் குணம் மிகுந்தவர்களையே விரும்பியுள்ளனர். கால்களில் விழக் கூடாது என்று சொன்ன பெரியாரின் கொள்கையை மதித்ததே இல்லை.

நன்றிக்கடன் என்ற சொல்லுக்கு அஞ்சிய கர்ணன் என்ற கதாபாத்திரம் மகாபாரதத்தில் இறப்பையே சந்தித்தது. எனவே இங்கு நன்றிக் கடன் என்ற சொல்லைவிட நேர்மை, கடமை, மக்கள்நலன் அகியவற்றைக் கவனமாகச் சீர்தூக்கிப் பார்க்கிற கதாபாத்திரங்கள் தேவை. மேற்படி நற்பண்புகள் நிறைந்த வேட்பாளர்களைத் தேர்வு செய்ய மறுத்ததால் தமிழக வாக்காளர்கள் வருத்தத்தையும் புலம்பலையும் வெளிபடுத்துவதைத் தவிர வேறு வழியில்லாமல் தத்தளிக்கிறார்கள்.

சென்னைக் கடற்கரைப் போராட்டத்தின் போது நடத்தப்பட்ட காவல் துறையின் தாக்குதலைத் தொலைக்காட்சிகளில் பார்த்துக் கொண்டிருந்த மக்கள் துடிதுடித்தார்கள். இளைஞர்களும் மாணவர்களும் மீனவர்களும் கொதித்தெழுந்து கடற்கரையை நோக்கிப் படையெடுத்தார்கள். ஆனால் அந்த நேரத்தில் சட்டப் பேரவைக்குச் சென்ற மக்கள் பிரதிநிதிகள் கடற்கரை பக்கம் வரவேயில்லை.

எதிர்க்கட்சிப் பொறுப்பிலிருந்தவர்கள் சட்டமன்றத்திற்குச் சென்று வழக்கமான அறிக்கையைத் தயாரித்து வைத்துக் கொண்டு ஆளுநர் உரை புறக்கணிப்பு என்ற ஒன்றை வார்த்தையைச் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டார்கள். அவர்களால் ஏன் கடற்கரைக்கு வரமுடியவில்லை. கடற்கரைக்கும் கடலுக்கும் நடுவே ஆயிரம் மாணவர்கள் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த சூழலில் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் வேலை என்ன? பக்கத்துத் தெருவில் இருக்கும் சட்டப்பேரவைக்குச் செல்லாமல்,  காலை 8 மணிக்கெல்லாம் கடற்கரையை நோக்கி ஓடி வந்திருக்க வேண்டாமா?  காவல்துறையின் தடியடிகள் எதிர்க்கட்சிகள் மீது விழுந்திருக்குமா? காவல் துறைக்கு அச்சம் வந்திருக்காதா? 98 சட்டமன்ற உறுப்பினர்கள் அப்போது சட்டமன்றத்திற்குள் நுழைந்திருக்கவே கூடாது. அவர்கள் கடற்கரைக்குத்தான் விரைந்திருக்க வேண்டும். ஆனால் தாக்குதல் முடியட்டும் அதற்குப் பிறகு அறிக்கை விடலாம் என்ற மோசமான செயல்முறை வெறுப்பைத் தான் தந்தது.

எதிர்க்கட்சிச் சட்டமன்ற உறுப்பினர்களே இப்படியிருக்கும் போது ஆளுங்கட்சி உறுப்பினர்களைப் பற்றிச் சொல்லவும் வேண்டாமா?

ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் பரிதாபத்துக்கு உரியவர்களாகத் தற்போது இல்லை. வாய்ப்பைப் பயன்படுத்தித் தங்களுக்கான துரோகச் சிந்தனைகளை நிறைவேற்றிக் கொள்ளத் தயாராகிவிட்டார்கள்.

திராவிடக் கட்சிகள் பெரியாரின் கொள்கைகளின் வெளிப்பாடு என்று சொல்கிறார்கள். ஆனால் பெரியார் சொன்ன சுயமரியாதையும் பகுத்தறிவும் எங்கே?

இந்துத்துவா சக்திகளை முறியடிக்கவும் பாஜக காலூன்றுவதைத் தடுக்கவும், பெண் என்பதாலும் சசிகலாவை ஆதரிப்பதாகக் கி. வீரமணி அறிவிக்கிறார். இந்நிலையில் சுப்பிரமணியன்சுவாமியும் சசிகலாவை ஆதரிக்கிறார். இரண்டு பேரும் வெவ்வேறு துருவங்களாகச் செயல்படுகிற நிலையில் இந்த ஆதரவு நிலைப்பாடு எதைச் சுட்டிக் காட்டுகிறது?

சில நேரங்களில் திராவிடரா? ஆரியரா? என்ற கேள்வியை எழுப்புவார்கள். சில நேரங்களில் திராவிடரா? தமிழரா? என்ற கேள்வியை எழுப்புவார்கள், இப்போதோ ஆணா? பெண்ணா? என்ற கேள்வியை எழுப்புகிறார்கள். இந்தக் கேள்விகளில் எத்தகைய தத்துவங்கள்தான் இடம் பெற்றுள்ளன? பெரியார் தத்துவமா? இந்துத்துவா தத்துவமா?

தமிழக முதலமைச்சர் தான் மிரட்டப்பட்டு விலகல் கடிதம் கொடுத்ததாக அறிவித்திருப்பது தமிழ்நாட்டிற்கே அவமானத்தைப் பெற்றுத் தந்திருக்கிறது. முதலமைச்சரால் குறிப்பிடுகிறப்படுகிற திவாகரன் என்ற பெயர் யாரைக் குறிப்பிடுகிறது? தமிழ்நாட்டுச் சட்டமன்ற உறுப்பினர்கள் தற்போது யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள்?

காவல்துறையின் உயர்பாதுகாப்பு வளையத்தில் இருக்கும்போதே ஓ.பன்னீர்செல்வம் மிரட்டப்பட்டிருக்கிறார் என்றால் மற்ற சட்டமன்ற உறுப்பினர்களும் மிரட்டப்பட்டிருக்கலாம் அல்லவா?

இந்த நேரத்தில் ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் யாருடைய கண்களிலும் சிக்கிக் கொள்ளாமல் மறைந்திருப்பதன் காரணம் என்ன? ஆளுநர் முன்னர் தான் அணிவகுப்போம், குடியரசுத் தலைவரைத் தான் சந்திப்போம் என்று சொல்லிக் கொள்வது என்பது அடிமைத்தனத்தின் உச்சகட்டமாகும். தங்கள் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்குச் சென்று மக்களுடன் கலந்துபேச வேண்டாமா? வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் சிவாஜிகணேசன் பேசுகிற ‘பொருட்கள் அல்ல, புருசர்கள்’ என்ற அடையாளத்தோடு சட்டமன்ற உறுப்பினர்கள் செயல்பட வேண்டாமா?

இந்த அவலநிலைக்கு யார் காரணம்? நிச்சயமாகத் திராவிடக் கட்சிகள் தான். தங்களுக்கான வேட்பாளர்களைத் தேர்வு செய்யும்போது பெரியார் கொள்கையுள்ளவர்களைத் தேடிப்பார்த்து அடையாளம் காண்பதில்லை. பெரியார் கொள்கைகளுக்கு எதிரானவர்களைத் தேர்வு செய்வார்கள். உட்ஜாதிப் பெயரில் வலிமை கொண்டவர்களையும், தங்கள் சொல் பேச்சைக் கேட்கிற ஏவலாட்களாகவுமே இவர்கள் தேர்வு செய்வார்கள்.

தனித்தொகுதி வேட்பாளர்களைத் தேர்வு செய்யும்போது அம்பேத்கர் கொள்கைகள் நிறைந்தவர்களையும், அம்பேத்கர் கொள்கைகளைப் பரப்புகிறவர்களையும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கான நற்பணி செய்பவர்களையும் தேர்வு செய்து விட மாட்டார்கள். தமக்கு யார் விசுவாசமாக இருப்பார்களோ அவர்களை அடையாளம் கண்டறிந்து தேர்வு செய்வார்கள்.

அண்ணல் அம்பேத்கர் அவர்களால் பெற்றுத் தரப்பட்ட தனித் தொகுதி இடஒதுக்கீடு காரணமாகச் சட்டமன்ற உறுப்பினர் பொறுப்பைப் பெற்றிருப்பவர்கள் அறிவுக்கூர்மையுடன் செயல்பட வேண்டிய நேரமிது. நீங்கள் எடுக்கும் முடிவு உங்கள் சுயமரியாதைக்கும் பகுத்தறிவுக்கும் ஏற்றதாக இருக்க வேண்டும். உங்கள் மனசாட்சிக்கு யார் குற்றவாளி? என்று தோன்றுகிறதோ அவர்களைப் புறக்கணியுங்கள். தமிழக அரசியல் வரலாற்றில் எத்தனையோ மாற்றங்கள் நிகழ்வுகள் ஏற்பட்டுள்ளன. ஒவ்வொரு நிகழ்வுகள் மற்றும் மாற்றங்களின் போதும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் ஒரே முடிவை எடுத்ததில்லை.

தத்தம் தலைமைக்கு மண்டியிட வேண்டிய சூழலில் இருந்தனர். தற்போது தன்மானத்திற்கும் அறிவுக்கூர்மைக்கும் வேலை கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தித் தமிழக அரசியலில் நன்மை தரும் திருப்பத்தை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பை ஏற்க வேண்டும். அம்பேத்கர் அறிவுறுத்திய 'யாரின் காலிலும் மண்டியிடாதே, உனக்குள்ள தகுதியையும் வாய்ப்பையும் பயன்படுத்தக் கற்றுக்கொள்" என்ற தத்துவத்தின் அடிப்படையில் செயல்பட வேண்டும்.

நீங்கள் தற்போது எடுக்கும் முடிவு எதிர்காலத் தலைமுறைக்கு மகிழ்வைத் தரக்கூடியதாகவும், சுயமரியாதையை உணர்த்துவதாகவும் அமைய வேண்டும். இதுநாள் வரை உங்களைப் பகடைக் காய்களாகப் பயன்படுத்தி அடிமைகளாக வைத்திருந்தார்கள். உங்கள் வலிமையை உணர வேண்டிய நேரமிது. “கோயில்யானை குட்டியாக இருக்கும்போது கால்களில் விலங்கிட்டு வைத்திருப்பார்கள். யானை வளர்ந்த பிறகும் தன்னால் அந்த விலங்கை உடைத்தெறிய முடியும் என்பது தெரியாமல் அச்சத்துடனேயே வாழ்ந்து கொண்டிருக்கும். அப்படிப்பட்ட கோயில் யானையாக வாழ்ந்திடாமல் காட்டுயானையாகப் பிளிறிட வேண்டிய நேரமிது. நமக்கான கதவுகளை யாரும் திறக்க மாட்டார்கள். நாமாகத் தான் உடைத்து நொறுக்கி உள்ளே நுழைய வேண்டும். உங்கள் முடிவைத் தமிழகமே எதிர்பார்க்கிறது. அடிமையாக இருந்துவிடாதீர்கள். “ என்று அறிவுறுத்திய அம்பேத்கரின் உழைப்பையும் தியாகத்தையும் நினைத்துப் பாருங்கள். அவருக்கு இருந்த நாட்டுப் பற்றையும் சமுதாயப் பற்றையும்  ஒரு துளியையாவது மனதில் வைத்திடுங்கள். துணிந்து முடிவெடுங்கள். உங்கள் கைகளை யாராவது கட்டியிருந்தால் திமிறிக் கட்டுடையுங்கள்.

ஏறுதழுவுதல் சிக்கலின் போது தமிழர்கள் ஒருங்கிணைந்த அந்த வியப்புக்குரிய சூழலில் தமிழ் மண்ணின் இயற்கையை மீட்டெடுக்கவே களம் புகுந்தார்கள். அவர்களின் இரத்தம் உங்களின் குருதிகளிலும் ஓடுகிறது என்று நம்புகிறோம். வாய்ப்பை நழுவ விடாதீர்கள். யாருடைய மிரட்டலுக்கும் அஞ்சாதீர்கள். தன்மானத்துடன் முடிவெடுங்கள்.

இந்த நேரத்தில் வாக்காளர்களும் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டியது என்ன தெரியுமா?

“தட்டிக் கேட்கத் தலைவன் இல்லை. இழிவைச் சுமக்கிறது தமிழ்நாடு.”

 ஓட்டுக்குப் பணம் என்ற அயோக்கியத் தனத்தின் வெளிபாடு தானே இது? தந்தை பெரியார் சொன்னார். முட்டாள்கள் உள்ள வரை அயோக்கியர்கள் ஆட்சி செய்வார்கள் என்று. ஆனால் உண்மை அதுவல்ல. அயோக்கியர்களால் தான் ஆட்சியாளர்கள் உருவாகுகிறார்கள். சுயமரியாதை, பகுத்தறிவு இவை எவைகளுக்கும் பொருத்தமே இல்லாதவை திராவிடக் காட்சிகள்? மண்டியிடுபவர்களால் தான் ஆட்சி அதிகாரம் ஏற்படுகிறது என்றால் இது பெரியார் கொள்கையா?

ஓட்டுக்குப் பணம் வாங்கி ஜனநாயகத்திற்குத் துரோகம் செய்தவர்களுக்குத் துரோகம் தான் பரிசாகக் கிடைக்கும். துரோகம் என்னவென்றும் துரோகிகள் யார் என்பதும் ஓட்டுக்குப் பணம் வாங்காமல் வாக்களித்த நன்மக்களுக்குப் புரியும்.

சி.சரவணன்  - 9976252800 - senthamizhsaravanan@gmail.com

http://www.dinamani.com/lifestyle/lifestyle-news/2017/feb/09/சட்டமன்ற-உறுப்பினர்கள்-தலைமறைவு-நாட்டுக்கு-அவமானம்-2646563.html

எம்.எல்.ஏ.,வை காணவில்லை : குன்னம் தொகுதி வாக்காளர் வழக்கு
 
எம்.எல்.ஏ.,க்கள் விடுதியில் சுதந்திரமாக உள்ளனர்: அரசு தரப்பு பதில் Share on Facebook Share on Twitter
  • தொடங்கியவர்

ஓ.பன்னீர்செல்வத்தின் பக்கம் சாயாமல் இருக்க உல்லாச ‘சிறை’யில் அ.தி.மு.க. சட்டசபை உறுப்பினர்கள்

Published by Kumaran on 2017-02-09 11:49:15

 

சசிகலா-பன்னீர்செல்வம் இடையே தோன்றியிருக்கும் அதிகாரத்தைக் கைப்பற்றும் போட்டியில், அ.தி.மு.க. சட்டசபை உறுப்பினர்களின் பலத்தைத் தக்கவைத்துக்கொள்ள, அவர்களை உல்லாச  விடுதிகளில் சசிகலா ‘சிறை’ வைத்திருப்பதாகவும், அவர்களில் ஒருவர் தப்பிச் சென்றுவிட்டதாகவும் தகவல்கள் கசிகின்றன. 

2_Golden_Bay.jpg

தான் முதலமைச்சராவதற்குத் தேவையான எம்.எல்.ஏ.க்கள் பலத்தைக் காட்டவும், சட்டமன்ற உறுப்பினர்கள் சென்னையில் இருந்தால், ஓ.பன்னீர்செல்வத்தின் பக்கம் அவர்கள் சாய்ந்துவிடக் கூடும் என்ற பயத்திலும், கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களை அனைவரையும் நான்கு குழுக்களாகப் பிரித்து வெவ்வேறு பகுதிகளுக்கு உல்லாசப் பயணம் அனுப்பி வைத்திருக்கிறார் சசிகலா.

அதில் ஒரு குழுவினர், சென்னையில் இருந்து சுமார் 80 கிலோமீற்றர் தொலைவில் உள்ள மகாபலிபுரத்தின் உல்லாச விடுதியொன்றில் தங்கியிருப்பதாகத் தெரியவந்துள்ளது.

அதிசொகுசுப் பேருந்தில் நேற்று (8) மாலை கிளம்பிய சட்டமன்ற உறுப்பினர்கள் மேற்படி விடுதியில் ‘சகல’ வசதிகளுடனும் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தங்கவைக்கப்பட்டிருப்பதாகவும் தெரியவருகிறது. 

எனினும், அந்தப் பாதுகாப்பு வளையத்தையும் தாண்டி எஸ்.பி.சண்முகநாதன் என்ற எம்.எல்.ஏ., தப்பிச் சென்றிருப்பதாகத் தெரிகிறது. ஓ.பன்னீர்செல்வத்திடம் பலவந்தமாக ராஜினாமா கடிதத்தை வாங்க சசிகலா முயற்சித்தபோது, அதற்கு சண்முகநாதன் எதிர்ப்புத் தெரிவித்தார் என்றும், தப்பிச் சென்றிருக்கும் அவர் ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

http://www.virakesari.lk/

  • தொடங்கியவர்

பிணைக் கைதிகளாக எம்.எல்.ஏ.க்கள்! ஆளுநருக்கு, மு.க.ஸ்டாலின் முக்கிய வேண்டுகோள்!

governar-_stalin_long_11350.jpg

பிணைக் கைதிகளாகச் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள ஆளுங்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் பலரின் உண்மையான ஆதரவு யாருக்கு என்பது வெளிப்படையாகத் தெரியாத நிலை நிலவுகிறது என்று தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர், மாநிலத்தில் சட்டபூர்வமான ஆட்சியை நிலைநாட்ட வேண்டிய கடமைப் பொறுப்பில் இருக்கிறார் என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தின் அரசியல் சூழல் நிலையற்ற தன்மையுடனும் ஜனநாயக மாண்புகளுக்கு எதிராகவும் உள்ள நிலையில், பொறுப்பு ஆளுநரின் வருகையும் அவர் மேற்கொள்ளப் போகும் நடவடிக்கைகளும் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கின்றன.

காபந்து முதலமைச்சராக நீடிக்கும் ஓ.பன்னீர்செல்வம், தன்னிடம் கட்டாயப்படுத்தி ராஜினாமாக் கடிதம் வாங்கினார்கள் என தனது கட்சித்தலைமையின் மீது பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளனார். ஆனால் அவர் ராஜினாமா ஆளுநரால் ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டது. இந்நிலையில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வின் சட்டமன்ற உறுப்பினர்கள் தற்போது எந்தத் தலைமையின் கீழ் இருக்கிறார்கள் என்பது உறுதிப்படுத்தப்படாத நிலையில், அவர்களை சொகுசு பேருந்துகளில் ஏற்றிச் சென்று, நட்சத்திர விடுதிகளில் தங்க வைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சுதந்திர ஜனநாயக நாட்டின் மக்கள் பிரதிநிதிகள் இப்படி ‘பிணைக் கைதி’கள் போல சிறைப்படுத்தப்பட்டிருப்பது மக்களாட்சியின் மாண்பை சிதைக்கின்ற செயலாக இருக்கிறது. ஆளுங்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்ற ஸ்ரீவைகுண்டம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் சண்முகநாதன், பின்னர் காபந்து முதலமைச்சரை சந்தித்து அவருக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார். அப்படியானால், உண்மையாகவே இவர்கள் யாரை ஆதரிக்கிறார்கள் என்பது சந்தேகத்திற்குரியதாக இருக்கிறது. பிணைக் கைதிகளாக சிறைப்பிடிக்கப்பட்டுள்ள ஆளுங்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் பலரின் உண்மையான ஆதரவு யாருக்கு என்பது வெளிப்படையாகத் தெரியாத நிலை நிலவுகிறது.

இத்தகைய சூழலில், தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் மாநிலத்தில் நிலையான-சுதந்திரமான-சட்டபூர்வமான வழியில் ஆட்சியை நிலைநாட்ட வேண்டிய கடமைப் பொறுப்பில் இருக்கிறார். மக்களின் பிரதிநிதிகளான சட்டமன்ற உறுப்பினர்கள், சட்டத்திற்குப் புறம்பான நிர்பந்தங்களாலும் மிரட்டல்களாலும் ஏதேனும் ஒரு பக்கத்திற்கு செல்கிறார்களா, இதற்கான பலன்கள்-வாக்குறுதிகள் தரப்பட்டுள்ளனவா என்பது குறித்தும் பல்வேறு செய்திகள் உலா வருகின்றன. ஆகவே ஆளுநர், அரசியல் சட்டம் மற்றும் எஸ்.ஆர் பொம்மை வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின் வழிகாட்டுதல் அடிப்படையிலும் உரிய முடிவுகளை எடுத்து சுதந்திரமான சட்டமன்ற வாக்கெடுப்பை உறுதி செய்து ஜனநாயக மாண்புகளைக் காத்திடுமாறு தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

http://www.vikatan.com/news/tamilnadu/80235-stalin-insists-tn-governor-to-take-action-to-release-admk-mlas.art

 

 

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

இனோவா கார், ஆச்சர்ய பரிசுகள்...! எம்.எல்.ஏக்களுக்கு குதிரை பேரம் ஆரம்பம் #OPSvsSasikala, #VikatanExclusive

mlas_bus_4_11235.jpg

அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள சூழ்நிலை காரணமாக எம்.எல்.ஏ.க்களிடம் குதிரை பேரம் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கார், நிலம், பணம் எனப் பரிசுகளை அள்ளிக் கொடுக்க கட்சியில் ஏற்பட்டுள்ள இரண்டு அதிகார மையங்கள் தரப்பிலிருந்து தூது விடப்பட்டுள்ளது. 

முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலா மீது பகிரங்கமான குற்றச்சாட்டைத் தெரிவித்துள்ளார். இதையடுத்து கட்சியில் இரண்டு அதிகார மையங்கள் ஏற்பட்டுள்ளன. முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரிப்பதாக மாணிக்கம், சண்முகநாதன், மனோ ரஞ்சிதம், ஆறுக்குட்டி, மனோகரன், மைத்ரேயன் எம்.பி ஆகியோர் பகிரங்கமாக அறிவித்துள்ளனர். இதற்கிடையில் முன்னாள் சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியன், அவரது மகன் மனோஜ் பாண்டியன், முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, நடிகர் பாக்யராஜ் என ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு ஆதரவு பட்டியல் நீள்கிறது.

ops_new_2_12380.jpg

அதே நேரத்தில் சசிகலாவுக்கு  அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் ஆதரவு இருப்பதை நிரூபிக்கும் வகையில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடத்தப்பட்டது. அடுத்து கூட்டத்தில் பங்கேற்ற எம்.எல்.ஏ.க்கள் சொகுசு வேனில் அழைத்துச் செல்லப்பட்டனர். கட்சியின் முன்னணி நிர்வாகிகள் மட்டும் சசிகலாவுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.  தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று மதியம் சென்னைக்கு வர உள்ளார். இந்தப் பரபரப்பான சூழ்நிலையில்  ஆளுநரின் வருகை முக்கியத்துவம் பெற்றுள்ளது. அவரை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா தரப்பினர் சந்திக்க உள்ளனர். இந்தச் சூழ்நிலையில் சொகுசு வேனில் அழைத்துச் செல்லப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் காட்டில் அதிர்ஷ்டக் காற்று வீசத் தொடங்கியிருக்கிறது.

இதுகுறித்து கட்சி வட்டாரங்கள் கூறுகையில், "எம்.எல்.ஏ.க்களுக்கு நெருக்கமானவர்களிடம் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா ஆகிய இரண்டு தரப்பிலிருந்தும் பேரம் பேசும் படலம் தொடங்கியிருக்கிறது. தென்மாவட்ட அ.தி.மு.க.வில் ஒருகாலத்தில் கோலோச்சிய வி.வி.ஐ.பி. ஒருவர் மூலம் இந்தப் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவிப்பவர்களுக்கு கார், நிலம், பணம் எனப் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. இதற்காக இனோவா கிரிஸ்டா மற்றும் பார்ச்சூனர் கார்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. அதற்கு இதுவரை 42 எம்.எல்.ஏ.க்கள் கிரீன் சிக்னல் காட்டிவிட்டனர்.

9_12140.jpg

சசிகலா தரப்பு கட்டுப்பாட்டில் அவர்கள் இருந்தாலும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவிக்க உள்ளனர். இதுபோல சசிகலா தரப்பிலும் எம்.எல்.ஏ.க்களிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. சொகுசு பஸ்களில் அழைத்துச் செல்லப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் விரும்புவதை கட்சித் தலைமை செய்து கொடுத்துள்ளது. அங்கேயும் விட்டமின் 'சி' தாராளமாக கொடுப்பதாகவும் சசிகலா தரப்பு உறுதி அளித்துள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் சின்னம்மாவுக்கு ஆதரவு கொடுக்கும்படி எம்.எல்.ஏ.க்களிடம் வாக்குறுதி பெற்ற சசிகலா தரப்பு, ஆளுநரை சந்திக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.  ஓ.பன்னீர்செல்வம், சசிகலா ஆகிய இரண்டு தரப்பிடமிருந்தும் குதிரை பேரத்துக்கான தூதுகள் வரத் தொடங்கி இருப்பதால் எம்.எல்.ஏ.க்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்" என்றனர்.

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ரகசிய இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகிய நிலையில் அதை சசிகலா தரப்பு முற்றிலும் மறுத்துள்ளது. இதுகுறித்து அரசு வழக்கறிஞர் ராஜேந்திரன், எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சுதந்திரமாக அங்கு இருக்கின்றனர் என்று தெரிவித்துள்ளார். 

ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் பேசியவர்கள், "மக்களின் ஆதரவும், எம்.எல்.ஏ.க்களின் ஆதரவும் எங்களுக்கு இருக்கிறது. நாங்கள் எந்த எம்.எல்.ஏ.க்களிடமும் பேரம் பேசவில்லை. கட்சித் தலைமை எம்.எல்.ஏ.க்களை ரகசிய இடத்தில் மறைத்து வைத்துள்ளது. எம்.எல்.ஏ.க்களை சுதந்திரமாக செயல்படவிட்டால் நிச்சயம் அவர்களது ஆதரவு எங்களுக்குக் கிடைக்கும். சிறை வைக்கப்பட்டாலும் பெரும்பாலான எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு எங்களுக்கு உள்ளது. தற்போது ஆளுநரை சந்திப்பது, அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஆலோசனை நடந்து வருகிறது" என்றனர்.

மதில் மேல் பூனையாக எம்.எல்.ஏ.க்களின் நிலைப்பாடு இருப்பதாக உள்விவரம் தெரிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.  

http://www.vikatan.com/news/tamilnadu/80232-innova-car-land-and-much-more-horse-trading-for-admk-mla-begins.art

  • தொடங்கியவர்

பீச் ரிசார்ட்டில் என்ன செய்கிறார்கள் எம்.எல்.ஏக்கள்? - ஈ.சி.ஆரை வளைத்த மன்னார்குடி

கோல்டன் பீச் ரிசார்ட்

மிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை இன்று மாலை 5 மணிக்கு சந்திக்க இருக்கின்றனர் ஆளும்கட்சி எம்.எல்.ஏக்கள். 'எம்.எல்.ஏக்கள் எங்கும் சென்றுவிடாதபடி, மன்னார்குடி ஆட்களில் ஆதிக்கம் ஈ.சி.ஆரில் தலைதூக்கியுள்ளது. சுற்றுவட்டார பொதுமக்களையும் அவர்கள் நிம்மதியாக இருக்கவிடவில்லை' என்கின்றனர் ரிசார்ட்டைச் சுற்றியுள்ள பொதுமக்கள்.

தமிழக அரசியல் சூழல் குறித்து நாடாளுமன்றத்தில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்திருக்கிறார் அ.தி.மு.க எம்.பி. வேணுகோபால். 'ஜனநாயக முறைப்படி செயல்பட ஆளுநர் மறுக்கிறார்' எனக் குற்றம் சுமத்தி, தேசிய அளவில் கவனத்தை திசை திருப்பினார். 'எம்.எல்.ஏக்கள் என் பக்கம் உள்ளனர் என்பதை நிரூபிப்பேன்' எனப் பேசி வருகிறார் முதலமைச்சர் பன்னீர்செல்வம். நேற்று அ.தி.மு.க தலைமைக் கழகத்தில் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நிறைவடைந்த நிலையில், அனைவரையும் இரண்டு சொகுசு பஸ்களில் ஏற்றிக் கொண்டு பறந்தது மன்னார்குடி டீம். மாமல்லபுரம் சாலையில் உள்ள கூவத்தூரில் தேனி மாவட்ட அ.தி.மு.க பிரமுகருக்குச் சொந்தமான கோல்டன் பே ரிசார்ட்டில் அவர்கள் தங்க வைக்கப்பட்டனர். எம்.எல்.ஏக்கள் சிறை வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின், 'தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் மாநிலத்தில் நிலையான, சுதந்திரமான, சட்டபூர்வமான வழியில் ஆட்சியை நிலைநாட்ட வேண்டிய கடமைப் பொறுப்பில் இருக்கிறார். மக்களின் பிரதிநிதிகளான சட்டமன்ற உறுப்பினர்கள், சட்டத்துக்குப் புறம்பான நிர்பந்தங்களாலும் மிரட்டல்களாலும் ஏதேனும் ஒரு பக்கத்துக்கு செல்கிறார்களா, இதற்கான பலன்கள், வாக்குறுதிகள் தரப்பட்டுள்ளனவா என்பது குறித்தும் பல்வேறு செய்திகள் உலா வருகின்றன. சுதந்திரமான சட்டமன்ற வாக்கெடுப்பை உறுதி செய்து ஜனநாயக மாண்புகளைக் காத்திடுமாறு தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்' என ஆளுநருக்குக் கடிதம் எழுதினார். உயர் நீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கிலும், 'சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் எம்.எல்.ஏக்கள் சுதந்திரமாக உள்ளனர்' என அதிர வைத்தார் அரசுத் தரப்பு வழக்கறிஞர்.

sasi200_13552.jpg"எம்.எல்.ஏக்கள் தங்கியிருப்பது மூன்று நட்சத்திர அந்தஸ்து உள்ள நட்சித்திர விடுதியில். இந்த விடுதியில் இல்லாத வசதிகளே இல்லை. ஈ.சி.ஆர் ரோட்டில் இருந்து ஒரு கிலோமீட்டர் உள்ளே சென்றால், பீச்சை ஒட்டி இந்த ரிசார்ட் அமைந்திருக்கிறது. நேற்று இரவு 10.30 மணியளவில் இரண்டு சொகுசு பேருந்துகள் ஓட்டலுக்குள் நுழைந்தன. பேருந்துகளின் முன்புறம் 7 கார்களும் பின்புறம் 5 கார்களும் அணிவகுத்து வந்தன. அந்தக் கார்களில் கட்சிக்காரர்கள் யாரும் இல்லை. அனைவரும் மன்னார்குடியைச் சேர்ந்தவர்கள். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கட்டுப்பாட்டில்தான் அனைவரும் உள்ளனர்" என விவரித்த, ஈ.சி.ஆரைச் சேர்ந்த அரசியல் கட்சிப் பிரமுகர் ஒருவர், "விடுதியில் தங்கியிருந்த எம்.எல்.ஏக்கள் யாருக்கும், தங்களது வீட்டுக்குப் போன் செய்வதற்குக்கூட அனுமதி வழங்கப்படவில்லை.

ஒவ்வொருவரும் தனித்தனியாக கண்காணிக்கப்படுகின்றனர். ஸ்பீக்கர் போட்டுவிட்டுத்தான் செல்போனில் பேச வேண்டும் எனக் கூறியுள்ளனர். மற்ற நேரங்களில் செல்போன் அணைத்து வைத்துவிடுங்கள் எனக் கூறியுள்ளனர். இதில், பல எம்.எல்.ஏக்கள் சர்க்கரை குறைபாடு உள்பட பலவித வியாதிகளுக்கு ஆளானாவர்கள். இவர்களுக்குத் தேவையான மருந்து மாத்திரைகளும் தேடி வந்தன. சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு, சில வாக்குறுதிகள் எம்.எல்.ஏக்களுக்கு வழங்கப்பட்டன. 'இப்போது முதல்கட்ட தொகையும் சின்னம்மா பதவியேற்ற பிறகு அடுத்தகட்ட தொகையும் வழங்கப்படும்' என உறுதி கொடுக்கப்பட்டன. 

vijayabhaskar_13156.jpgஅதன்பிறகு, சரியாக 11 மணியளவில் மீண்டும் இரண்டு பஸ்கள் உள்ளே வந்தன. அதில் இருந்து சில பொருட்களும் கட்சிக்கு சம்பந்தமில்லாத சிலரும் இறங்கினர். ஒரு மணிநேரத்துக்குப் பிறகு, 12 மணியளவில் 20 எம்.எல்.ஏக்களை அழைத்துக் கொண்டு கல்பாக்கத்தை நோக்கி ஒரு பஸ் சென்றது. பூந்தண்டலத்தில் உள்ள வில்லேஜ் ரிசார்ட்டில் இவர்கள் தங்க வைக்கப்பட்டனர். 'பீச் ரிசார்ட்டில் போதிய வசதிகள் இல்லை' என்ற காரணம் சொல்லப்பட்டது. ஆனால், 'அந்த எம்.எல்.ஏக்களுக்கு சில சிறப்பு வசதிகள் செய்து கொடுப்பதற்காகத்தான் அழைத்துச் சென்றனர்' என ஓட்டல் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்" என நடக்கும் காட்சிகளை விவரித்தவர், "ரிசார்ட்டைச் சுற்றிலும் ஒரு போலீஸ்காரர்கூட இல்லை. ஆள் பலத்தை மன்னார்குடி உறவுகள் தயார் செய்துள்ளனர்.

கூவத்தூரைச் சுற்றிலும் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் பலர் கூலித் தொழிலாளிகள். வேலை முடித்துவிட்டு, வருகிறவர்களையும் மன்னார்குடி ஆட்கள் கடுமையாக மிரட்டுகின்றனர். 'இங்க என்ன பார்வை வேண்டியிருக்கு? யார் நீ? இங்க எதுக்கு சுத்திட்டு இருக்க. ஓடிப் போயிருங்க...தொலைத்துவிடுவோம்' என அச்சுறுத்துகின்றனர். அவர்களை எதிர்த்து எதையும் பேச முடியாமல், அங்கிருந்து செல்கின்றனர் கூவத்தூர் மக்கள். மன்னார்குடி டீம் எப்போது வெளியேறும் எனக் காத்திருக்கிறார்கள்" என்றார் விரிவாக. 

"எம்.எல்.ஏக்களுக்கு மிகப் பெரிய அளவில் எந்தத் தொகையும் வழங்கப்படவில்லை. 'நான்கு ஆண்டுகள் பதவி நீடிக்க வேண்டும்' என்ற கவலைதான் அமைச்சர்களுக்கும் எம்.எல்.ஏக்களும் உள்ளது. ஓரிரு கோடிகள் மட்டுமே முதல் கட்டமாக வழங்கப்பட்டுள்ளன. இன்று மாலை ஆளுநர் சந்திப்புக்குப் பிறகு, சசிகலா முதல்வர் ஆவார் என உறுதியாக நம்புகிறோம். அதன்பிறகு அதிரடிகள் தொடங்கும்" என நம்பிக்கையோடு பேசுகிறார் கார்டன் ஊழியர் ஒருவர். 

ஆளுநர் பதிலுக்காக காத்திருக்கின்றனர் அரசியல் கட்சித் தலைவர்கள். 

http://www.vikatan.com/news/tamilnadu/80248-what-our-mlas-are-doing-at-golden-bay-beach-resort.art

  • தொடங்கியவர்
பொறந்தா சசி ஆதரவு எம்.எல்.ஏ.,வா பொறக்கனும்

 

சென்னை: அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத அபார கவனிப்பால் பொறந்தா சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.,வாக பொறக்கணும் என்பதே தமிழக அரசியல் மற்றும் பொதுமக்கள் இடையே முக்கிய பேச்சாக உள்ளது. முதல்வர் நாற்காலியில் யார் அமர்வார் என்ற குழப்பத்தில் தமிழகம் திசை இல்லா படகு போல் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. கவர்னர் யாரை ஆட்சி அமைக்க அழைப்பார் என்றும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டிய நிலை இருப்பதால், எம்.எல்.ஏ.,க்கள் யாரும் எங்கும் செல்ல முடியாத அளவிற்கு சசி தரப்பினர் லாக் செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் கூவத்தூரில் உள்ள பிரபல கோல்டன் பே நட்சத்திர ரிசார்ட்சில் 129 எம்.எல்.ஏ.,க்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

 

gallerye_15062383_1707545.jpg
next.png

 


 

தப்பி வருவது இயலாத காரியமே!

 

ரிசார்ட்டில் இருந்து யாரும் தப்பிக்க முடியாத அளவிற்கு ஓட்டலை சுற்றிலும் மப்டியில் பல குண்டர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். இந்த ஓட்டலில் என்ன நடக்கிறது என்பது வெளியே தெரியக்கூடாது என்பதற்கு நிருபர்கள் மாற்று நபர்கள் யாரும் நெருங்க முடியாத அளவிற்கு ஆங்காங்கே அடியாட்களும் நிறுத்தப்பட்டுள்ளனர். யாரும் உள்ளே செல்ல முடியாது. அருகில் நெருங்க முடியாமல் பொறுமை காத்த நமது நிருபர்கள் எப்படியாவது தகவல் சேகரிக்க முயன்றனர். இத்தனையும் மீறி ஒரு வழியாக அங்கிருந்து வெளியே வந்த ரிசார்ட் ஊழியர்களிடம் பேசுகையில் கிடைத்த தகவல்கள் :

 


 

இளம் காற்று வீசுதே !

 

நூற்றுக்கணக்கான தென்னை மரங்கள், இளம் காற்று வீச இங்கு உள்ள பப்பளா, பள, பளா , குளு, குளு அறைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். குளிர், சூடு என பல தரப்பு நீர், விரும்பிய பானங்கள், சுடச்சுட, சுவையான உணவு வகைகள் என இந்த ஓட்டலே கமகமக்கிறதாம்.உள்ளம் குளிர வைக்க வாயில் பெயர் நுழையாத ஐஸ் கிரீம்கள், ரக, ரகமான சைவ, அசைவ உணவு வகைகள் என மெனுவில் இல்லாததே இல்லையாம் ! விருந்தோம்பலில் எம்.எல்.ஏ,.,க்கள் சொக்கிபோய் கிடக்கின்றனராம் ! மொத்தத்ததில் சொல்ல வேண்டுமானால் எம்.எல்.ஏ.,க்கள் அனைவருக்கும் (தனிக்கவனிப்பு!!! ).


இங்கு தங்க வைக்கப்பட்டிருக்கும் எம்.எல்.ஏ.,க்கள் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் திளைத்து போய் இருக்கின்றனர். இது வரை இப்படி ஒரு உபசரிப்பை வாழ்நாளில் பார்த்ததில்லை என எம்.எல்.,க்கள் பெருமிதப்படுகின்றனர்.பொறந்தா சசி ஆதரவு எம்.எல்.ஏ.,வா பொறக்கனும்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1707545

பதிவு செய்த நாள் : 9, பிப்ரவரி 2017 (16:0 IST) 
மாற்றம் செய்த நாள் :9, பிப்ரவரி 2017 (16:35 IST)

 
மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் எங்கே? 
சசிகலா கோஷ்டி அதிர்ச்சி
 
காஞ்சிபுரம் மாவட்டம், கூவத்தூரில் உள்ள கோல்டன் பே ரிசார்ட்டில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு மீன்வளத்துறை அமைச்சர்  ஜெயக்குமாரும் இருந்துள்ளார். இந்நிலையில் இன்று மதியம் 2 மணியளவில் ரிசார்ட்டை விட்டு வெளியேறிய ஜெயக்குமார், காரில் சென்றார். அவர் எங்கு சென்றார் என்ற விவரம் தெரியவில்லை. இது சசிகலா தரப்புக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது மேலும் சிலர் வெளியேற தவித்து வருவதாக தகவல்.
 
                                      - அரவிந்த்

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=184000

  • தொடங்கியவர்

ரிசார்ட்டில் ஓபிஎஸ்க்கு ஆதரவாக எம்.எல்.ஏக்களிடம் கையெழுத்து வாங்கினார் ஜெயக்குமார்?

கிழக்கு கடற்கரை ரிசார்ட்டுக்கு சென்ற அமைச்சர் ஜெயக்குமார், முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக எம்.எல்.ஏக்களிடம் கையெழுத்து வாங்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


 

சென்னை: சென்னை கிழக்கு கடற்கரை சாலை கூவாத்தூர் ரிசார்ட்டுக்கு சென்ற மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அங்கு அதிமுக எம்.எல்.ஏ.க்களிடம் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக கையெழுத்து வாங்கியதாக தகவல்கள் வெளியாக மன்னார்குடி கோஷ்டி அதிர்ந்து போயுள்ளதாம்.

அதிமுக எம்.எல்.ஏ.க்களில் ஒரு பகுதியின் கூவாத்தூர் ரிசார்ட் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இன்று இந்த எம்.எல்.ஏக்களை சந்திக்க அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் சென்றனர்.

Minister Jeyakumar to support CM OPS?
 

 

 

சிறிதுநேர சந்திப்புக்குப் பின்னர் அங்கிருந்து புறப்பட்ட ஜெயக்குமார் எங்கே சென்றார் என தெரியவில்லையாம். அவரை தொடர்பு கொள்ள முடியாமல் மன்னார்குடி கோஷ்டி முழிக்கிறதாம்.

இதனிடையே ரிசார்ட்டில் எம்.எல்.ஏக்கள் சிலரிடம் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக ஜெயக்குமார் கையெழுத்தி வாங்கியதாகவும் உரிய நேரத்தில் முதல்வர் ஓபிஎஸ்ஸை அவர் சந்திப்பார் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.

 

http://tamil.oneindia.com/news/tamilnadu/minister-jeyakumar-support-cm-ops-273692.html

  • தொடங்கியவர்

அ.தி.மு.க., எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள மாமல்லபுரம் அருகே கூவத்தூர் கோல்டன் பே ரிசார்ட்ஸ் அருகே சசியின் ஆதரவாளர்கள் .

WR_20170209165607.jpeg

WR_20170209164256.jpeg

அ.தி.மு.க., எம்எல்ஏக்கள் தங்கியுள்ள மாமல்லபுரம் அருகே கூவத்தூர் கோல்டன் பே ரிசார்ட்ஸ் அருகே சசியின் ஆதரவாளர்கள் காரில் சுற்றியபடி இருந்தனர்

  • தொடங்கியவர்

எங்கே தேடுவதோ எங்கள் தமிழ்நாட்டு எம்.எல்.ஏ.க்களை? #OPSVsSasikala #WhereIsMyMLA

                    எம்.எல்.ஏ ஹாஸ்டல்

பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க. உள்ளது. சசிகலா, முதல்வர் ஓ.பி.எஸ். என்று  இரண்டு பிரிவுகளாகி  முஸ்டியை மடக்கிக் கொண்டிருப்பதால் கட்சியிலும், ஆட்சியிலும்  நெருக்கடி ஏற்பட்டுள்ளது.  
மூன்று பேருந்துகளில் ஆதரவு  எம்.எல்.ஏ.க்கள்,  130 பேரையும் அடைத்து சசிகலா தரப்பு சுற்றுலா அனுப்பி விட்டதாக குற்றச்சாட்டும் எழுந்தது. அது தொடர்பான வீடியோ காட்சிகளும், ஸ்டில்களும் சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் வெளியாகின. அந்தக் காட்சிகளில், எம்.எல்.ஏ.க்கள் சொகுசு பேருந்துகளில் ஏறிப்போவதும், பேருந்தில் இருந்து தலையை வெளியே நீட்டி கைகளை காட்டுவதும் தெளிவாக இருந்தது. குறிப்பிடத்தக்க அம்சம் எதுவென்றால், அத்தனை பேருந்துகளும் சென்னை ஓமந்தூரார் அரசினர் எம்.எல்.ஏ. விடுதி வாசலில் இருந்துதான் தங்களின் சொகுசுப்பயணத்தை தொடங்கியன. 

 'சசிகலா தரப்பினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 130 பேரையும் மீட்கவேண்டும்' என்று இதன் தொடர்ச்சியாக  சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உள்ளிட்ட பலர் சென்னை ஐகோர்ட்டில் முறையீடு செய்திருந்தனர்.டிராபிக் ராமசாமி, 'தனது வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்' என்றும் அவர் கேட்டுக் கொண்டிருந்தார். கோர்ட்டும், 'இதுகுறித்து மனுவாக தாக்கல் செய்யும்படி' உத்தரவிடவே டிராபிக் ராமசாமி உள்ளிட்டோர்  ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தனர். 'சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் உறவினர்கள்தான் இதுபோன்ற வழக்குகளை தாக்கல் செய்ய வேண்டும்' என்று கூறிய நீதிபதிகள், 'மனுதாரர்கள் வேண்டுமானால் பொதுநல வழக்கினை' தொடரலாம் என்றும் கூறினர்.  மேலும் இந்த வழக்கு பட்டியலிடப்பட்டு  (லிஸ்ட்) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்தனர்.

 தமிழக அரசு தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் ராஜேந்திரன், 'அ.தி.மு.க.வைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் தற்போது சட்டமன்ற உறுப்பினர்களுக்கான விடுதியில் சுதந்திரமாக உள்ளனர்' என்று கோர்ட்டில் தெரிவித்தார். தமிழக அரசு வழக்கறிஞர் இப்படி கோர்ட்டில் சொன்னது மீண்டும் மக்கள் மத்தியிலும், சமூக வலைதளங்களில் ஏகப்பட்ட கேள்விகளை எழுப்பியது, மீண்டும் இந்த விவகாரம் பரபரப்பில் சிக்கியது....சென்னை எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் பாதுகாப்பாக, சுதந்திரமாக கோர்ட்டில் சொன்னது அரசு வழக்கறிஞராயிற்றே? அந்த சுதந்திரக் காட்சிகளை நாமும் பார்த்து வருவோம்... என்று அங்கே சென்றோம்.பலகட்ட கெடுபிடி, மிரட்டல்களை எம்.எல்.ஏ. க்கள் விடுதிப் பொறுப்பில் இருந்த அதிகாரிகள், ஊழியர்கள் நமக்குக் கொடுத்தனர். ஒரு கட்டத்தில் தாக்குவதற்கும் முற்பட்டனர். அனைத்தையும் பொறுத்துக் கொண்டு நம்முடைய காமிராவை அங்கே சுழல விட்டோம்.


எம் எல் ஏ ஹாஸ்டல்

வெறிச்சோடிக் கிடந்தது, தமிழகத்தின் மொத்த மனசாட்சியும் தங்கியுள்ளதாக சொல்லப்படும் அந்த வளாகம் முழுவதும்... கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் ஒருவரும் இல்லை... நாம் வெளியே வந்த போது ஏராளமான செய்தியாளர்கள், காட்சி ஊடகத்தினர் தங்களின் காமிராக்களுடன் வாயிலில் நிறுத்தப் பட்டிருந்த காட்சியினைக் காணமுடிந்தது..."மெரினாவில் போட்டிருந்த 144-ஐயே வாபஸ் வாங்கி விட்டார்கள், இங்கே நுழைய அப்படி ஏதேனும் தடை போடப் பட்டுள்ளதா? ஏன் எங்களைத் தடுக்கிறீர்கள்" என்று செய்தியாளர்கள்  கேள்வி எழுப்பினர்.பாதுகாப்பு என்ற பேரில் அங்கே நின்றிருந்த போலீசார், 'எங்கள் கடமையைச் செய்கிறோம் சார்... மேலே இருந்து உத்தரவு' என்றனர். அப்போது ஒரு செய்தியாளர் 'மேலேதான் யாருமே இல்லையே' என்றார்.

http://www.vikatan.com/news/tamilnadu/80283-mlas-are-not-in-hostel-where-are-they-opsvssasikala-whereismymla.art

1 hour ago, நவீனன் said:

ஏன் எங்களைத் தடுக்கிறீர்கள்" என்று செய்தியாளர்கள்  கேள்வி எழுப்பினர்.பாதுகாப்பு என்ற பேரில் அங்கே நின்றிருந்த போலீசார், 'எங்கள் கடமையைச் செய்கிறோம் சார்... மேலே இருந்து உத்தரவு' என்றனர். அப்போது ஒரு செய்தியாளர் 'மேலேதான் யாருமே இல்லையே' என்றார்.

Image may contain: text

ஆமா இந்தாள் வேற சசி அக்காவோட இப்ப கவனர் மாளிகையில் இருக்கிறாராம் - என்னப்பா நடக்குது இங்க?  i'm confused smiley

 

  • தொடங்கியவர்

சசிகலா படங்கள் நீக்கம்... அ.தி.மு.க.வினரிடையே மீண்டும் ஜெயலலிதா படங்கள்! #OPSVsSasikala

ஜெயலலிதா சசிகலா

.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள குழப்பத்தால் தங்களது சட்டை பாக்கெட் மற்றும் ப்ரொஃபைல்களில் உள்ள சசிகலாவின் படத்தை நிர்வாகிகள் மாற்றியுள்ளனர். அதற்கு பதில் மீண்டும் ஜெயலலிதாவின் படத்தை ப்ரொஃபைல் படமாக வைத்துள்ளனர்.

ஜெயலலிதாவுக்கு பின்னர் முதல்வர் பதவி யாருக்கு என்பதில் ஏற்பட்ட அதிகார மோதல் அ.தி.மு.க.வில் உச்சத்தில் உள்ளது. ஓ.பன்னீர்செல்வத்துக்கு கட்சியின் அவைத்தலைவர் மதுசூதனன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும், எம்.பி. ஒருவரும், எம்.எல்.ஏ.க்கள் 5 பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பொறுப்பேற்றாலும் கட்சி சசிகலாவின் கட்டுப்பாட்டில் இருந்தது. மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பினாலும், கட்சியின் நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ., எம்.பிக்கள் என கட்சியிலும், ஆட்சியிலும் பதவியில் இருந்தவர்கள் சசிகலாவை ஆதரித்து வந்தனர். ஜெயலலிதாவைப்போல தனது நடை, உடை, பாவானைகளை மாற்றிக்கொண்டார் சசிகலா. இதையடுத்து, ஜெயலலிதாவின் புகழ் பாடி வந்த அ.தி.மு.க. மேடைகள் 'சின்னம்மா' என சசிகலாவின் புகழ் பாடத்துவங்கியது.

ஜெயலலிதா சசிகலா

சட்டைப்பாக்கெட்டில் வைக்கப்படும் படத்தில் துவங்கி, வாட்ஸ் அப், பேஸ்புக் வரை ப்ரொஃபைல் படங்களாக ஜெயலலிதாவின் படத்துக்கு பதில் அம்மாவின் படத்தை அ.தி.மு.க. நிர்வாகிகள் மாற்றினர். இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தின் எதிர்ப்பு காரணமாக அ.தி.மு.க.வில் குழப்பமான சூழல் நிலவி வருகிறது. கட்சியின் அவைத்தலைவர் துவங்கி பலர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்து வருவதும், சசிகலாவுக்கு எழுந்துள்ள எதிர்ப்பும் அ.தி.மு.க. நிர்வாகிகளை குழப்பமடையச் செய்துள்ளது.

அ.தி.மு.க.வில் அடுத்து என்ன நடக்கும் என்ற குழப்பமான சூழல் நிலவி வரும் நிலையில், சசிகலாவின் படங்களை ப்ரொஃபைல் படங்களாக வைத்திருந்தவர்கள் அதை மாற்றி ஜெயலிதாவின் படங்களை வைக்கத்துவங்கியுள்ளனர். சசிகலாவின் படங்களை முன்னிறுத்துவது குறையத்துவங்கியுள்ளது.

இது பற்றி கட்சியின் முன்னணி நிர்வாகிகள் சிலரிடம் பேசியபோது, "கட்சியில் தற்போது அசாதாரண சூழல் நிலவுகிறது. எங்களுக்கு, அம்மா வளர்த்த இந்தக் கட்சியும் எம்.ஜி.ஆர் கண்ட இரட்டை இலைச் சின்னமும் முக்கியம். அது யாரிடம் இருக்கிறதோ அவர்களுடன் மட்டுமே நாங்கள் இருப்போம். இப்போது கட்சியும் ஆட்சியும் யாருக்கு என்பது தெரியாத நிலைமை உள்ளது. இதுவரை நாங்கள் சின்னம்மாவுக்கு ஆதரவாக இருந்தோம். ஆனால், அவருக்கு கட்சியிலும் பொதுவெளியிலும் ஏற்பட்டு வரும் எதிர்ப்பு கவலை அளிப்பதாக உள்ளது. இந்த நிலையில், எங்களது நிலைமை மிகவும் சிக்கலான கட்டத்தில் இருக்கிறது. நாங்கள் என்ன முடிவை எடுப்பது எனத் தெரியாமல் குழம்பித் தவிக்கிறோம். எங்களில் பலரும் புரொஃபைல் படங்களில் சின்னம்மா படத்தை வைத்து இருந்தோம்.

ஆனால், இப்போது கட்சி யாரிடம் இருக்கிறது என்பதே புரியாத நிலையில் எங்களது நடுநிலையை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது. அதனால் தான் எங்களில் பலரும் வாட்ஸ் ஆப் மற்றும் ஃபேஸ்புக் ஆகியவற்றின் புரொஃபைல் படங்களை அவசரமாக மாற்றி வருகிறோம்," என்றனர்.
நிர்வாகிகளின் நிலைமையே இப்படி என்றால், தொண்டர்களின் நிலையை கேட்கவா வேண்டும்..?

http://www.vikatan.com/news/ops-vs-sasi/80278-admk-party-functionaries-have-started-to-replace-sasikalas-picture-with-jayalalithaa.art

  • தொடங்கியவர்

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஹாஸ்டலில்தான் உள்ளனர்: உயர் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர்

 
அதிமுக எம்.எல்.ஏ. எம்.சக்ரபாணியின் பி-பிளாக்கில் உள்ள அறை பூட்டப்பட்டுள்ளது. | படம். வி.கணேசன்.
அதிமுக எம்.எல்.ஏ. எம்.சக்ரபாணியின் பி-பிளாக்கில் உள்ள அறை பூட்டப்பட்டுள்ளது. | படம். வி.கணேசன்.
 
 

சசிகலாவை ஆதரிக்கும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அவர்களது ஹாஸ்டலில்தான் உள்ளனர் என்று உயர் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் வி.எம்.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். ஆனால் தி இந்து (ஆங்கிலம்) நாளிதழ் நிருபர் ஹாஸ்டலில் சென்று பார்த்த போது எம்.எல்.ஏ.க்கள் அறை பூட்டியே கிடந்தது தெரிய வந்துள்ளது.

சிவானந்தா சாலையில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் ஹாஸ்டல் வளாகம் வெறிச்சோடிக் கிடந்தது. எம்.எல்.ஏ.க்களின் கார்கள் அங்கு நிறுத்தப்பட்டுள்ளன. ஆனால் அறைகள் பூட்டியே கிடக்கின்றன.

மெய்க்காவலர்கள், பராமரிப்பு ஊழியர்கள் தவிர ஒருசிலரே ஹாஸ்டல் வளாகத்தில் உள்ளனர். ஹாஸ்டலின் பி-பிளாக்கில் அனைத்து அறைகளிலும் பூட்டுகளே தொங்கின. கேண்டீனில் கூட பராமரிப்பு ஊழியர்களே இருந்தனர்.

வழக்கறிஞர் கே.பாலு, சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் செய்திருந்த ஆட்கொணர்வு மனுவில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டவிரோதமாக பிடித்து வைக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஓ.பன்னீர்செல்வத்துக்கான இவர்களது ஆதரவை முறியடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டிருந்தனர்.

இந்த மனு இன்று (வியாழன்) விசாரணைக்கு வந்த போது அரசு வழக்கறிஞர் வி.எம்.ராஜேந்திரன், “அனைத்து எம்.எல்.ஏ.க்களும் ஹாஸ்டலில் சுதந்திரமாக பாதுகாப்பாக உள்ளனர்” என்றார்.

ஆனால் மனுதாரர்களோ, கிழக்குக் கடற்கரைச் சாலை ரிசார்ட் ஒன்றில் எம்.எல்.ஏ.க்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று புகார் எழுப்பினர்.

ஆனால் அமர்வு நீதிபதிகள் எம்.ஜெயச்சந்திரன், டி. மதிவாணன் ஆகியோர் மனுதாரர்களின் அடிப்படையைக் கேள்விக்குட்படுத்தி, ஆட்கொணர்வு மனுவை அவசரமாக பரிசீலிக்க இயலாது என்று கூறிவிட்டனர்.

http://tamil.thehindu.com/tamilnadu/அதிமுக-எம்எல்ஏக்கள்-ஹாஸ்டலில்தான்-உள்ளனர்-உயர்-நீதிமன்றத்தில்-அரசு-வழக்கறிஞர்/article9532235.ece?homepage=true

  • கருத்துக்கள உறவுகள்

16602934_555284318001561_778164796834271

:D:

  • தொடங்கியவர்
பதவி தந்தால் ஆதரவு;எம்.எல்.ஏ.,க்கள் மிரட்டலால் சசிகலா பரிதவிப்பு

 

அமைச்சர் பதவி தந்தால் தான் ஆதரவு; இல்லையேல், முதல்வர் பன்னீர்செல்வம் பக்கம் செல்வோம்' என, எம்.எல்.ஏ.,க்கள் பலர் மிரட்டுவதால் சசிகலாவும், அவரது குடும்பத்தினரும் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர்.

சசிகலாவுக்கு எதிராக, முதல்வர் பன்னீர்செல்வம் திடீரென போர்க்கொடி துாக்கியதால், அவரின் பின்னால், எம்.எல்.ஏ.,க்கள் செல்வதை தடுக்க, சசிகலா குடும்பத்தினர், அவர்களை நட்சத்திர ஓட்டலில் தங்க வைத்து, நன்கு கவனித்து வருகின்றனர்.

எனினும் சசிகலாவிற்கு ஆதரவு தெரிவித்த, எம்.எல்.ஏ.,க்களில் பெரும்பாலானோர், 'அமைச்சர் பதவி தர வேண்டும்; இல்லாவிட்டால், முதல்வர் பன்னீர்செல்வம் பின் சென்று விடுவோம்' என, சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை மிரட்ட துவங்கி உள்ளனர். இதனால், அவர்கள் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர்.

மேலும் சசிகலா வசமுள்ள, எம்.எல்.ஏ.,க்களில் பெரும்பாலானோர், முதல்வர் பன்னீர்செல்வத்திடமும் தொடர்பு கொண்டுள்ளனர். இதனால், சசிகலாவுக்கு சிக்கல் அதிகரித்துள்ளது.
 

 

மாற்று ஏற்பாடு


அதே நேரத்தில், கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள், அனைவரின் எதிர்ப்பையும் மீறி, முதல்வராக சசிகலா முயற்சித்து வருகிறார். அவரது கனவுக்கு இடையூறாக, தலை மேல் தொங்கும் கத்தி போல் சொத்து குவிப்பு வழக்கு உள்ளது.

இதில், தனக்கு பாதகமாக தீர்ப்பு வந்தால், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தற்போதைய அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஆகியோரில் ஒருவரை முதல்வராக நியமிக்கவும், சசிகலா பரிசீலிப்பதாக கூறப்படுகிறது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1707574

 
எம்.எல்.ஏ.,க்களை காணோம்; போலீசில் குவியும் புகார்

 

 

 
Tamil_News_large_1707794_318_219.jpg
 

 

 

'ஆரணி தொகுதி எம்.எல்.ஏ.,வும், இந்து அறநிலையத்துறை அமைச்சருமான சேவூர் ராமச்சந்திரனை காணவில்லை' என, ஆரணி டவுன் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அம்பேத்கர் நகர் பகுதி மக்கள், நேற்று மதியம், 2:00 மணிக்கு, ஆரணி எம்.எல்.ஏ.,வும், அமைச்சருமான சேவூர் ராமச்சந்திரன் அலுவலகத்திற்கு மனு கொடுக்கச் சென்றனர். அங்கு அவர் இல்லாததால், ஆரணி டவுன் காவல் நிலையத்திற்கு சென்று, 'அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனை காணவில்லை; அவரை கண்டுபிடித்து தர வேண்டும்' என, புகார் அளித்தனர். போலீசார், புகாரை பெற்று, அதற்கான ரசீது மட்டும் கொடுத்து அனுப்பினர்.
 

 

மதுரை :


மதுரை, அவனியாபுரம் அ.தி.மு.க., மாணவரணி பகுதி செயலர் தினேஷ் போஸ், போலீஸ் கமிஷனர் சைலேஷ் குமார் யாதவிடம், நேற்று புகார் அளித்தார்.

பின், தினேஷ் போஸ் கூறியதாவது: திருப்பரங்குன்றம் தொகுதி, மதுரை மாநகராட்சி, 61வது வார்டில் உள்ளது. அ.தி.மு.க.,வில் பொறுப்பில் இருப்பதால், என்னிடம் பொதுமக்கள், பல்வேறு பிரச்னைகளை தெரிவிப்பர். நான் அவற்றை, எம்.எல்.ஏ., போஸிடம் கொண்டு செல்வேன். ஆனால், 10 நாட்களாக அவரை காண முடியவில்லை; எங்கு சென்றார் எனவும் தெரியவில்லை. எனவே, அவரை கண்டுபிடித்து தரக்கோரி மனு கொடுத்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
 

 

பெரம்பலுார்:


பெரம்பலுார் மாவட்டம், குன்னம் தொகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் அருள் என்பவர், ஏ.டி.எஸ்.பி.,யிடம் அளித்த புகார்: குன்னம் எம்.எல்.ஏ., ராமச்சந்திரன் எங்கு இருக்கிறார் என தெரியவில்லை. தமிழகத்தில், சட்டசபை உறுப்பினர்கள் கடத்தப்பட்டுள்ளதாக, செய்திகள் வருவதை பார்த்த போது, எங்களுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.

ஒருவேளை, எங்கள் தொகுதி உறுப்பினரையும், சமூக விரோதிகள் கடத்தியிருப்பரோ என்ற சந்தேகம் எழுகிறது. மேலும், அவரை காணவில்லை என, நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், செய்திகள் வருகின்றன. எனவே, அவரை கண்டுபிடித்து கொடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

- நமது நிருபர் குழு -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1707794

  • கருத்துக்கள உறவுகள்

அட எல்லா எம்.எல்.ஏ க்களையும் உதவியாளர்களும் மக்களும்தான் தேடித் புகார் குடுக்கினம்....! பொண்டாட்டி , பிள்ளைகள் தேடித் புகார் கொடுத்த மாதிரித் தெரியேல்ல ..... ஏழரை கழிஞ்சுட்டுது எண்டு இருக்கினமோ என்னமோ....! 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்திய அரசியலும் சரி தமிழ்நாட்டு அரசியலும் சரி கிட்டத்தட்ட தாயக்கட்டை உருட்டுற மாதிரித்தான். அந்தநாட்டு அரசியல்லை  ஒன்றயும் எதிர்பார்க்கேலாது.....:cool:

  • கருத்துக்கள உறவுகள்

நான் இவ்வளவு நாளும் இந்தியக் கலியாணங்கள் தான் சேர்க்கஸ் எண்டு நினைச்சுப் போட்டன்!

இப்ப பாத்தா....இந்தியாவில எல்லாமே சேர்க்கஸ் போலத் தான் கிடக்கு!

கோமாளிகளின் தேசம் ....!:unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

சும்மா பொழுது போக்க......:cool:

8 hours ago, suvy said:

அட எல்லா எம்.எல்.ஏ க்களையும் உதவியாளர்களும் மக்களும்தான் தேடித் புகார் குடுக்கினம்....! பொண்டாட்டி , பிள்ளைகள் தேடித் புகார் கொடுத்த மாதிரித் தெரியேல்ல ..... ஏழரை கழிஞ்சுட்டுது எண்டு இருக்கினமோ என்னமோ....! 

எங்கே என் மனைவி? ஆட்கொணர்வு மனு போட்ட எம்.எல்.ஏ.வின் கணவர் 
 
கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. கீதாவின் கணவர் மணிவண்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்.
 
சட்டப்பேரவை கட்சித் தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் முதல்வராக பொறுப்பேற்க தயாராகி வருகிறார். இதற்கிடையே, சசிகலாவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் அளித்த திடீர் பேட்டியால் கட்சியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தை சசிகலா நேற்று கூட்டியிருந்தார். இதில் பேசிய சசிகலா, "நம்மைப் பிரிக்கும் ஆற்றல் யாருக்கும் இல்லை. ஒற்றுமையுடன் இருப்போம்" என அறிவுறுத்தினார். 
 
வழக்கமாக கூட்டம் முடிந்து எம்எல்ஏக்கள் விடுதிக்கோ, தங்கள் வீடுகளுக்கோ செல்வார்கள். ஆனால், நேற்று கூட்டம் முடிந்ததும் எம்எல்ஏக்கள் யாரையும் அதிமுக தலைமை வெளியில் விடவில்லை. கல்பாக்கத்தில் உள்ள அரசு விடுதியில் சசிகலாவுக்கு ஆதரவான 130 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கரூர் செந்தில்பாலாஜியை பொறுப்பாளர்களாக நியமித்து அவர்களுடைய சகாக்களை அடி ஆட்களை அந்த பகுதி பகுதி முழுவதும் நிறுத்தி எல்லோரையும்  தங்கள் கட்டுப்பாட்டிலேயே இருக்கும்படி செய்திருக்கிறார். அதன்பின், மதிய உணவு முடித்து பிற்பகல் 3.20 மணிக்கு மூன்று சொகுசுப் பேருந்துகளில் ஏற்றி அழைத்துச் சென்றனர். 
 
geetha.jpg
 
இந்நிலையில், தனது மனைவியைக் காணவில்லை கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. கீதாவின் கணவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். 
 
தன் உறவினர் வழக்கறிஞர் ப்ரீதா என்பவர் மூலம் புகார் கொடுத்த மனுவில் என் மனைவியின் தந்தை உடல்நலம் சரியில்லாம் வீட்டில் இருக்கிறார் அவருடைய உடல் நலம் குறித்த தகவல் தெரிவிப்பதற்கா அவருடைய செல்போனில் தொடர்பு கொண்ட போது தொடர்ந்து சுவிச் ஆப் செய்திருப்பதாக சொல்லிக்கொண்டே இருக்கிறது. 
 
எங்கள் அவசர விசயத்தை கூட சொல்ல முடியாமல் தவிக்கிறோம் என்றும். இப்போது உள்ள அரசியல் சூழ்நிலை காரணமா என்பதும் தெரியவில்லை. என் மனைவியை காணவில்லை என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.   முன்னதாக, இன்று காலை சென்னை உயர் நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி, வழக்கறிஞர் கே.பாலு ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர். அதில், 130-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்களை காணவில்லை எனக் குறிப்பிட்டிருந்தனர். ஆனால், அரசு தரப்பு வழக்கறிஞர் ராஜேந்திரன் விளக்கத்தையடுத்து அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 ஜெ.டி.ஆர்

பாவம் இவருக்கு மட்டும் என்ன பிரச்சனையோ!!!

  • கருத்துக்கள உறவுகள்

16641117_10202666576663461_3919062308261

  • தொடங்கியவர்

அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் எங்கே? டி.ஜி.பி.யிடம் கேட்ட ஆளுநர்

தமிழக சட்டம்- ஒழுங்கு குறித்து ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் டி.ஜி.பி. விளக்கம் அளித்தார். அப்போது, அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் எங்கிருக்கிறார்கள் என்பது பற்றி ஆளுநர் கேட்டறிந்ததாகக் கூறப்படுகிறது.

தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் நேற்று சென்னை வந்தார். இதையடுத்து முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா ஆகியோர் தனித்தனியாக ஆளுநரை சந்தித்தனர். அப்போது இருவரும் ஆட்சியமைப்பது குறித்து ஆளுநரிடம் உரிமை கோரினர்.

DGP meets Governor

இந்நிலையில், ஆளுநர் வித்யாசாகர் ராவை, தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் இன்று சந்தித்து பேசினர். கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இந்த சந்திப்பு நடந்து வருகிறது.

தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலை மற்றும் சட்டம்-ஒழுங்கு பிரச்னை குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. மேலும், அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் எங்கிருக்கிறார்கள் என்பது பற்றி ஆளுநர் கேட்டறிந்ததாகக் தெரிகிறது.

http://www.vikatan.com/news/tamilnadu/80342-tn-dgp-meets-governor-at-raj-bhavan.art

  • தொடங்கியவர்

அணி மாறத் தயாராகும் 30 எம்.எல்.ஏ.க்கள்

பதிவு: பிப்ரவரி 10, 2017 11:42

 
 

சொகுசு விடுதியில் வைக்கப்பட்டுள்ள 30 எம்.எல்.ஏ.க்கள் அணி மாறத்தயாராக உள்ளதாகவும் அத்தகைய எம்.எல்.ஏ.க்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வளையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

 
 
 
 
அணி மாறத் தயாராகும் 30 எம்.எல்.ஏ.க்கள்
 
சென்னை:

அ.தி.மு.க.வில் தற்போது மொத்தம் 135 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.

இவர்களில் ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான அணியில் 6 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். சசிகலா தரப்பில் தங்களிடம் 129 எம்.எல்.ஏ.க்கள் இருப்பதாக சொல்கிறார்கள்.

சசிகலாவை ஆதரிக்கும் அந்த 129 எம்.எல்.ஏ.க்களில் 127 பேர் மகாபலிபுரம் அருகே கூவத்தூர் கிராமத்தில் இருக்கும் தனியார் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மூன்றாவது நாளாக அவர்கள் அங்கு இருக்கிறார்கள்.

இந்த நிலையில் சொகுசு விடுதியில் இருக்கும் எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கையில் மாறுபட்ட தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. சுமார் 110 எம்.எல்.ஏ.க்கள்தான் அங்கு தங்க வைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சசிகலா தரப்பினர் கட்டுப்பாட்டில் இருக்கும் 127 எம்.எல்.ஏ.க்களில் 22 பேர் முதல் 30 பேர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்கள் என்று தெரிய வந்துள்ளது. அவர்கள் எந்த நேரத்திலும் ஓ.பன்னீர்செல்வம் அணி பக்கம் சாய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே அ.தி.மு.க.வில் மொத்தம் 30 தலித் எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இந்த எம்.எல்.ஏ.க்களில் கணிசமானவர்களை பிரித்து ஓ.பன்னீர்செல்வம் பக்கம் அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.

ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரிக்கும் நத்தம் விசுவநாதன் இந்த முயற்சிகளில் இறங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

கூவத்தூர் சொகுசு விடுதியில் வைக்கப்பட்டுள்ள அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சுதந்திரமாக விடுவிக்கப்பட்டால் பலரும் ஓ.பன்னீர்செல்வம் பக்கம் ஓடி விடும் சூழ்நிலை உள்ளது. இது சசிகலா தரப்பை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

இதன் காரணமாக கூவத்தூரில் தங்க வைக்கப்பட்டுள்ள அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை சசிகலா தரப்பினர் சந்தேகக் கண்களுடன் கண்காணித்து வருகிறார்கள். சில எம்.எல்.ஏ.க்கள் மீது அவர்களுக்கு சந்தேகம் வலுத்துள்ளது.

அத்தகைய எம்.எல்.ஏ.க்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வளையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 30 எம்.எல்.ஏ.க்கள் தாவும் பட்சத்தில் யாருமே ஆட்சி அமைக்க முடியாத சூழ்நிலை உருவாகும்.

அத்தகைய சூழ்நிலை உருவாகாமல் தடுப்பதற்காக சசிகலா தரப்பினர் கடுமையாக போராடி வருகிறார்கள்.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/02/10114207/1067424/ADMK-30-MLAs-ready-to-Team-change.vpf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.