Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐபிஎல் 2017 சீசன்!

Featured Replies

  • தொடங்கியவர்

“கிரிக்கெட் தலைசிறந்தவர்களின் விளையாட்டு” : உதாரணத்தை காட்டிய  டேவிட் வோர்னர் : நெகிழ்ச்சியடைந்த ரசிகர்கள் (காணொளி இணைப்பு)

 

ஐ.பி.எல். தொடரில் நேற்று ஹைதராபாத் மற்றும் குஜராத் அணிகள் மோதிய போட்டியில் வோர்னரின் செயல் ரசிகர்களை நெகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

 

இந்த போட்டியில் 9 ஆவது ஓவரை குஜராத் அணியின் பசில் தம்பி வீசினார்.

இதன் போது பசில் தம்பி வீசிய இறுதி பந்தை எதிர்கொண்ட ஹென்ரிக்கியுஸ் துடுப்பெடுத்தாடி ஒரு ஓட்டத்தை பெற முனைந்தார். இதன் போது பந்துவீச்சாளர் கீழே விழுந்ததும், அவரது பாதணி கழன்று சென்றது, இதன்போது மறுமுனையில் இருந்த வோர்னர் உடனடியாக பாதணியை தனது கையில் எடுத்து, பந்துவீச்சாளரிடம் கொடுத்துவிட்டு, தனது ஓட்டத்தை தொடர்ந்தார்.

இதன்போது மைதானத்தில் இருந்த ரசிகர்கள் கூச்சலிட்டு உற்சாகத்தை வெளிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

thumb_large_afafa.jpg

http://www.virakesari.lk/

  • Replies 368
  • Views 44.3k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

பெங்களூர் அணியுடன் இன்று மோதல்: 2-வது வெற்றி ஆர்வத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்

பதிவு: ஏப்ரல் 10, 2017 12:21

 
 

10-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பெங்களூர் அணிக்கு எதிராக இன்று மோதும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 2-வது வெற்றி பெறும் ஆர்வத்தில் உள்ளது.

 
 
 
 
பெங்களூர் அணியுடன் இன்று மோதல்: 2-வது வெற்றி ஆர்வத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்
 
இந்தூர்:

ஐ.பி.எல். போட்டியின் 8-வது ‘லீக்’ ஆட்டம் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது. இதில் மேக்ஸ்வெல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப்- வாட்சன் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.

பஞ்சாப் அணி தொடக்க ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் ரைசிங் புனேயை வீழ்த்தியது. சொந்த மண்ணில் தொடர்ந்து ஆடுவதால் அந்த அணி பெங்களூரை வீழ்த்தி 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

கேப்டன் மேக்ஸ்வெல் பஞ்சாப் அணி பேட்டிங்கில் கூடுதல் பலம் பொருந்தியவர். புனே அணிக்கு எதிரான அவரது அதிரடியான ஆட்டம் ரசிகர்களை நெகிழ வைத்தது. முதுகெலும்பாக இருக்கும் அவருடன் மில்லர், ஹசிம் அம்லா, வோரா, விருத்திமான் சகா, அக்‌ஷர் பட்டேல் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

201704101221526271_preview-rcbvsdd._L_st

விராட் கோலி, டி வில்லியர்ஸ் போன்ற அதிரடி வீரர்கள் இல்லாத ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தொடக்க ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்திடம் 35 ரன்னில் தோற்றது. 2-வது ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்சை 15 ரன்னில் வீழ்த்தியது. பஞ்சாப்பை வீழ்த்தி 2-வது வெற்றி பெறும் வேட்கையில் பெங்களூர் அணி இருக்கிறது.

பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சமபலத்துடன் அந்த அணி திகழ்கிறது. பேட்டிங்கில் கிறிஸ் கெய்ல் மீது தான் அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. ஜேதர் ஜாதவ், கேப்டன் வாட்சன், மில்ஸ் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர். டிவில்லியர்ஸ் உடல் தகுதி பெற்று அணிக்கு திரும்பினால் கூடுதல் பலமாக அமையும்.

இரு அணிகளும் இதுவரை 18 முறை மோதியுள்ளன. பஞ்சாப் 10 போட்டியிலும், பெங்களூர் 8 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன. இரு அணியிலும் சிறந்த அதிரடி வீரர்கள் இருப்பதால் இந்த ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

http://www.maalaimalar.com/News/Sports/2017/04/10122152/1079123/IPL-2017-Royal-challengers-vs-Kings-eleven-punjab.vpf

  • தொடங்கியவர்

மூன்றே ஓவரில் 50 ரன்... கம்பீருக்கு ஷாக் தந்த ராணா - பாண்டியா!

மும்பை இந்தியன்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் நேற்று  இரவு எட்டு மணிக்கு நடந்த ஐபிஎல் போட்டியில் மோதின. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நம்பமுடியாத வகையில் தோல்வி அடைந்தது. 

ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, இந்த ஐபிஎல் தொடரில் இரண்டாவது  ஆட்டத்தில் கொல்கத்தாவை எதிர்கொண்டது. முதல் ஆட்டத்தில் குஜராத் லயன்ஸை புரட்டி எடுத்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மெகா வெற்றி ருசித்த கையோடு மும்பைக்கு வந்தது கம்பீர் அணி. புனேவிடம் அடைந்த தோல்வியால் உற்சாகம் இழந்து காணப்பட்டது மும்பை அணி. நேற்று டாஸ் வென்ற ரோஹித்  சேஸிங் செய்வதாக அறிவித்தார். கம்பீரும், கிறிஸ் லின்னும் கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கினார்கள். நான்கு ஓவரில் 44 ரன்னுக்கு விர்ரென் ஸ்கோர் பறந்தது. இந்த இருவரையும் நிலைக்கவிட்டால் ஸ்கோர் 250 சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்ற நிலையில், ஐந்தாவது ஓவரில் அதிரடியாக க்ரூனால் பாண்டியாவை அறிமுகப்பத்தினார்  ரோகித் ஷர்மா. இதற்கு உடனடியாக பலன் கிடைத்தது. அந்த ஓவரின் இரண்டாவது பந்திலேயே மெக்லகனிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார் கவுதம் கம்பீர். 

மனிஷ் பாண்டே

உத்தப்பா வந்த வேகத்தில் ஒரு பவுண்டரி விளாசினார். அடுத்த பந்தையும் பெரிய  ஷாட் ஆட முயன்று ஹர்டிக் பாண்டியாவிடம் கேட்ச் கொடுத்து தோற்றுப்போன விரக்தியுடன் நடையைக் காட்டினார் உத்தப்பா. முதல் ஓவரிலேயே கம்பீர், உத்தப்பா என இரண்டு அதிரடி வீரர்களை பெவிலியனுக்கு அனுப்பிய கெத்துடன் ஓவரை முடித்தார் க்ரூனால் பாண்டியா. எட்டாவது ஓவரில்  வலது கை 'கிறிஸ் கெயில்' என செல்லமாக அழைக்கப்படும் கிறிஸ் லின் பும்ராவின் வீச்சில் எல்பி ஆனார். அப்போது ரன் ரேட் சுணங்கியது. ஹர்பஜன், ஹர்டிக் பாண்டியா பந்துகளில் பவுண்டரி அடிக்கவே திணறினர் யூசுப் பதானும், மனிஷ் பாண்டேவும்.

17 ஓவர் முடிவில் 136 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது கொல்கத்தா. கடைசி கட்ட ஓவர்களில் மனிஷ் பாண்டே வாணவேடிக்கை காட்டினார். கடைசி ஓவரில் மட்டும் 23 ரன்களைக் குவித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். இதையடுத்து மும்பை அணிக்கு வெற்றி இலக்காக 179 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது. 

மும்பை அணி கவனமுடன் இன்னிங்ஸை தொடங்கியது. ஓவருக்கு எட்டு ரன்கள் வீதத்தில் ஆடிக்கொண்டிருந்த மும்பைக்கு முதல் விக்கெட்டாக பார்த்தீவ் வீழ்ந்தார். அதற்கடுத்த ஓவரிலேயே ராஜ்புட் பந்துவீச்சில் நன்றாக ஆடிக்கொண்டிருந்த பட்லர் எல்பி முறையில் அவுட் ஆனார். அம்பயர் அவுட் கொடுத்த பிறகு ரீப்ளேயில் அது நாட் அவுட் என்பது தெளிவாக  தெரிந்தது. முதல் மேட்ச் போலவே, இதிலும் அம்பயரின் தவறான முடிவால் அவுட் ஆனா விரக்தியுடன் நடையைக் காட்டினார் பட்லர். அதற்கடுத்த ஓவரில் சுனில் நரேன் பந்துவீச்சில் ரோஹித் ஷர்மா எல்பி ஆனார். இந்த அவுட்டும் தவறாகவே தரப்பட்டது. அம்பயரிடம் கோபமாக விரக்தியை வெளிப்படுத்தி விட்டு வெளியேறினார் கேப்டன் ரோஹித் ஷர்மா. 

நிதிஷ் ராணா

இரண்டு அதிரடி வீரர்களுக்கு அடுத்தடுத்த ஓவர்களில் தவறான முறையில் அவுட் தரப்பட்டதால் அதிர்ச்சி அடைந்தனர் மும்பை அணியும் அதன் ரசிகர்களும். அதன் பிறகு க்ரூனால் பாண்டியா, பொல்லார்டு ஆகியோரும் பெரிய இன்னிங்ஸ் ஆடாமல் அவுட் ஆயினர். 17 ஓவரில் 130/5 என இருந்தது மும்பை ஸ்கோர். களத்தில் நிதிஷ் ராணாவும், ஹர்திக் பாண்டியாவும் இருந்தனர்.  இருவரும் இளம் வீரர்கள். கொல்கத்தா அணியைச் சேர்ந்த சிறந்த  ஃபீல்டர் கிறிஸ் லின் அப்போது காயம் காரணமாக பெவிலியனில் இருந்தார். கம்பீரும் சிறு உடல்நல பிரச்னையால் பெவிலியன் திரும்பினார். 

கேப்டனும் இல்லாமல் சிறந்த ஃபீல்டரும் இல்லாமல் மேட்ச்சைத் தொடர்ந்தது  கொல்கத்தா. பொறுப்பு கேப்டனாக சூர்ய குமார் யாதவ் செயல்பட்டார். அந்த ஓவரில் இருந்து தான் மேட்ச் தலைகீழாக மாறியது. வெற்றி தேவதை மும்பை பக்கம் நகரத் தொடங்கினாள். 18-வது ஓவரை உலகின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான  டிரென்ட் போல்ட் வீசினார். அந்த ஓவரில் ராணா ஒரு பவுண்டரி மற்றும் சிக்ஸர் விளாசினார். ஹர்திக் பாண்டியாவும் தன் பங்குக்கு ஒரு சிக்ஸர் அடித்தார். அந்த ஓவரில் மட்டும் 19 ரன்கள் வந்தது. 

இரண்டு ஓவரில் 30 ரன் அடிக்க வேண்டும் என்பது இப்போது மும்பைக்கு இலக்கு. 23 வயது அங்கித் ராஜ்புட் 19 வது ஓவரை வீசினார். முதல் பந்தை பார்வையாளர்களிடம் அனுப்பினார் ராணா.  இரண்டாவது பந்தை எக்ஸ்ட்ரா கவர் திசையில் ஒரு அட்டகாசமான பவுண்டரி அடித்தார். ஆனால் மூன்றாவது பந்தில் நரேனிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். வலுவான கொல்கத்தா பவுலிங்குக்கு எதிராக, அணிக்கு அவசியம் தேவைப்பட்ட சூழ்நிலையில் 29 பந்தில் 50  ரன்கள் எடுத்து அதிரடித்தார் ராணா. அவர் பெவிலியன் திரும்பியபோது ‛WHAT A PLAYER’ என கரகோஷம் தந்தனர் ரசிகர்கள். ராணா விட்ட இடத்தில் பாண்டியா தொடர, அந்த ஓவரில் ஐந்தாவது பந்து ஸ்கொயர் லெக் திசையில் இருந்த ரசிகர்களிடம் தஞ்சம் அடைந்தது. 

பாண்டியா சகோதரர்கள்

இறுதி ஓவரில் 11 ரன்கள் எடுத்தால் வெற்றி. முதல் பந்தில் இரண்டு ரன்கள் வந்தது. இரண்டாவது  பந்தை அற்புதமாக வீசினார் போல்ட். பாண்டியா விளாசிய அந்த பந்தை, கோட்டை விட்டார் பொறுப்பு கேப்டன் சூர்ய குமார் யாதவ். பந்தைத் தவறவிட்டது மட்டுமின்றி, பந்து பவுண்டரிக்கு  செல்வதை தடுக்கவும் செய்யாமல் தெனாவெட்டாக இருந்தார். அவரின் அலட்சியப் போக்கால், ஒரு ரன்னுக்கு பதிலாக நான்கு ரன்கள் கிடைத்தது மும்பைக்கு. மூன்றாவது பந்தில் ரன் இல்லை. நான்காவது பந்தை ஷார்ட் பாலாக வீசினார் போல்ட். எளிதான கேட்சை கோட்டை விட்டார் ரிஷி தவான். ஆகவே, இரண்டு ரன்கள் கிடைத்தது. ஐந்தாவது பந்தை பாண்டியா விளாச, சற்றே கடினமான கேட்சை அங்கித் ராஜ்புட் கோட்டை விட, பந்து எல்லைக்கோட்டைத் தொட்டது. அப்போது வெற்றிக்குத் தேவையான ரன்னையும் மும்பை தொட்டுவிட, ஸ்டேடியம் அதிர்ந்தது ரசிகர்களின் கோஷத்தால்! 

மூன்றே ஓவரில் 50 ரன் விளாசி மேஜிக் வெற்றியைச் சுவைத்தது மும்பை அணி. டெண்டுல்கர் உற்சாகமடைய, கம்பீர் கன்னத்தில் கை வைக்க, சில நிமிடங்களில் அத்தனை காட்சிகளும் மாறின. மும்பை வான்கடே தனது கோட்டை என மீண்டும் நிரூபித்தது ரோஹித் அணி. மும்பையுடன் இதுவரை ஆடிய 19 போட்டிகளில், நேற்று 14 வது முறையாக  தோற்றது கொல்கத்தா. வான்கடேவில் கடைசி ஏழு போட்டிகளில் இது ஆறாவது தோல்வி கொல்கத்தாவுக்கு! 

ஐபிஎல் சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. 

 

http://www.vikatan.com/news/sports/85958-mumbai-indians-young-players-give-amazing-performance-against-kolkata-knight-riders.html

  • தொடங்கியவர்

ஐ.பி.எல் போட்டியின் முதல் சர்ச்சை இதுதான்.!

மேற்கிந்திய வீரர் பொலார்டுக்கும் இந்திய வர்ணனையாளர் சஞ்சய் மஞ்சரேக்கருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. கொல்கத்தாவுடனான ஆட்டத்தில் போலார்டை மூளை இல்லாதவன் என சஞ்சய் மஞ்சரேக்கர் கூறியதாக எழுந்த சர்ச்சைக்கு பொலார்டு பதிலளித்துள்ளார். 

pollard

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருபவர் மேற்கிந்திய வீரர் பொல்லார்டு. நேற்று கொல்கத்தாவுடனான ஆட்டத்தில் களமிறங்கிய பொல்லார்டு தனது அதிரடி ஆட்டத்தை விடுத்து ஆமை வேகத்தில் விளையாடினார். 17 பந்துகளில் 17 ரன்கள் மட்டுமே எடுத்து அவர் ஆட்டமிழந்தார். இதையடுத்து வர்ணனையாளர் சஞ்சய் மஞ்சரேக்கர் ,'பொலார்டு கடைசி ஓவரின் ஆட்டக்காரர். அவர் முன்பே களமிறங்கி ஆட்டமிழந்தது மூளை இல்லாத செயல்' என விமர்சித்தார். எனினும் மும்பை இந்தியன்ஸ் ராணா, பாண்டியா உள்ளிட்டோரின் அதிரடி ஆட்டத்தால் வெற்றிபெற்றது.

இதையடுத்து, மஞ்சரேக்கரின் கருத்துக்கு பதிலளித்த பொல்லார்டு,' வார்த்தைகளைப் பார்த்து உபயோகப்படுத்தவும், ஒருமுறை வார்த்தைகளை விட்டபின் திருப்பி எடுக்கமுடியாது' என காட்டமாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், இளைஞர்கள் சிறப்பாக செயல்பட்டு வெற்றியை தேடி தந்துள்ளனர் எனவும் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் போலார்டு கருத்துக்கு ஆதரவாக மேற்கிந்திய வீரர் டினோ பெஸ்ட் கருத்து தெரிவித்துள்ளார். 'கறுப்பின மக்களை நீங்கள் குறைவாகவே மதிப்பிடுகின்றீர்கள்' என கெவி6ன் பீட்டர்சனை குறிப்பிட்டு அவர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஐ.பி.எல் போட்டிகளில் சர்ச்சைகளும் சண்டைகளும் புதிதல்ல. எனினும் வர்ணனையாளருக்கும் வீரருக்கும் இடையே எழுந்த வாக்குவாதம் ஐ.பி.எல் ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

http://www.vikatan.com/news/sports/85985-pollard-manjrekar-kicks-off-ipl-first-controversy.html

  • தொடங்கியவர்

20 ஓவர் போட்டியில் கெய்ல் 10 ஆயிரம் ரன்னை குவித்து சாதனை படைக்கிறார்

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் கிறில் கெய்ல் அனைத்து வகையான 20 ஓவர் போட்டியில் 10 ஆயிரம் ரன்னை குவித்து சாதனை படைக்க உள்ளார்.

 
20 ஓவர் போட்டியில் கெய்ல் 10 ஆயிரம் ரன்னை குவித்து சாதனை படைக்கிறார்
 
வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல். 20 ஓவர் போட்டியில் அவர் பவுண்டரி, சிக்சர்கள் அடித்து ரசிகர்களுக்கு எப்போதுமே விருந்து படைப்பார். ஐ.பி.எல். போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் விளையாடி வருகிறார். ஐ.பி.எல். போட்டியில் 200 சிக்சர்களுக்கு மேல் அடித்து ஒரே வீரர் ஆவார்.

இந்த நிலையில் அனைத்து வகையான 20 ஓவர் போட்டிகளையும் சேர்த்து கிறிஸ் கெய்ல் 10 ஆயிரம் ரன்களை குவித்து சாதனை படைக்கிறார். அதற்கு அவருக்கு இன்னும் 25 ரன்களே தேவை.

201704101431119865_fizxh3yg._L_styvpf.gi

இன்று நடைபெறும் பஞ்சாப் அணிக்கு எதிரான ஐ.பி.எல். ஆட்டத்தில் அவர் 10 ஆயிரம் ரன்னை எடுத்த முதல் வீரர் என்ற சாதனையை படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

37 வயதான கிறிஸ் கெய்ல் 20 ஓவர் போட்டியில் 288 ஆட்டத்தில் விளையாடி 9975 ரன் எடுத்துள்ளார். 37 ஆட்டத்தில் அவுட் ஆகாததால் சராசரி 40.54 ஆகும்.

அதிகபட்சமாக 175 ரன் குவித்து இருக்கிறார். 18 சதமும், 60 அரை சதமும் எடுத்துள்ளார். அவர் மொத்தம் 762 பவுண்டரிகளும், 735 சிக்சர்களும் அடித்துள்ளார்.

கெய்லுக்கு அடுத்தப்படியாக மெக்கல்லம் 7411 ரன்னுடன் 2-வது இடத்திலும், பிரட் ஹோட்ஜ்க் 7338 ரன்னுடன் 3-வது இடத்திலும், வார்னர் 7011 ரன்னுடன் 4-வது இடத்திலும், பொல்லார்ட் 6950 ரன்னுடன் 5-வது இடத்திலும் உள்ளனர்.
 
  • தொடங்கியவர்

பஞ்சாப் அணிக்கெதிராக பெங்களூரு பேட்டிங்: டி வில்லியர்ஸ் உள்ளே; கெய்ல் வெளியே

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது. டி வில்லியர்ஸ் அணியில் இடம்பிடித்துள்ளார். கெய்ல் இடம்பெறவில்லை.

 
 
 
 
பஞ்சாப் அணிக்கெதிராக பெங்களூரு பேட்டிங்: டி வில்லியர்ஸ் உள்ளே; கெய்ல் வெளியே
 
ஐ.பி.எல். சீசன் 2017-ன் 8-வது போட்டி இன்று பெங்களூருவில் நடக்கிறது. இதில் பஞ்சாப் - பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில் பெங்களூரு கேப்டன் வாட்சன் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

முதல் இரண்டு போட்டியில் விளையாடாத டி வில்லியர்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேசமயம் அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் நீக்கப்பட்டுள்ளார். பஞ்சாப் அணியில் ஸ்வாப்னில் சிங் நீக்கப்பட்டு வருண் ஆரோன் சேர்க்கப்பட்டுள்ளார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/04/10200532/1079250/IPL-RCB-won-toss-select-bating-de-villiers-in-gayle.vpf

  • தொடங்கியவர்

#IPL10: பெங்களூர்-பஞ்சாப் பலப்பரீட்சை!

ஐ.பி.எல் போட்டிகளின் 8-வது ஆட்டத்தில் இன்று பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் கிங்ஸ் லவன் பஞ்சாப் அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. 

rcb


ஐபிஎல் போட்டிகள் ஆரவாரமாய் ஆரம்பித்து அதிரடியாய் நடந்து கொண்டிருக்கிறது. இன்று 8-வது போட்டியில் பெங்களூரும் பஞ்சாபும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. தோல்பட்டை காயம் காரணமாக இப்போட்டியில் விராட் கோலி விளையாடவில்லை. மேலும் அதிரடி வீரர் கெயிலுக்குப் பதிலாக டி வில்லியர்ஸ் களமிறங்குகிறார். கிங்ஸ் லவன் பஞ்சாபில் ஸ்வப்னில் சிங்குக்குப் பதிலாக வருண் ஆரோன் களமிறங்குகிறார்.

அதிரடி வீரர்கள் நிறைந்திருக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் இம்முறை விராட் கோலி இல்லாததால் கொஞ்சம் தடுமாறி வருகிறது. இந்நிலையில் கிங்ஸ் லவன் பஞ்சாபை வெல்லும் நோக்கில் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்குகிறது பெங்களூர். கிங்ஸ் லவன் பஞ்சாபும் மில்லர், மேக்ஸ்வெல் என அதிரடி ஆட்டக்காரர்களைக் கொண்டுள்ளது .மேலும் முதல் போட்டியில் அசத்திய தமிழக வீரர் தங்கராசு நடராஜனும் இன்று விளையாடவுள்ளார். இதுவரை 18 முறை நேருக்குநேர் சந்தித்துள்ள போட்டிகளில் பஞ்சாப் 10 முறையும் பெங்களூர் 8 முறையும் வென்றுள்ளன. 

#UPDATES

பதினைந்து ஓவர்களின் முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 4 விக்கெட் இழப்புக்கு 71 ரன் எடுத்துள்ளது. டி வில்லியர்ஸ் 31 ரன்னுடனும் ஸ்டுவர்ட் பின்னி 2 ரன்னுடனும் களத்தில் இருக்கின்றனர். பஞ்சாப் தரப்பில் வருண் ஆரோன் இரண்டு விக்கெட்டும் அக்சர் பட்டேல், சந்திப் ஷர்மா தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர். 

RCB 109/4 (17.4/20 ov)

  • தொடங்கியவர்

ஐ.பி.எல்.: பஞ்சாப் வெற்றிக்கு 149 ரன்கள் இலக்கு வைத்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

 

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் பஞ்சாப் அணியின் வெற்றிக்கு 149 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு.

 
ஐ.பி.எல்.: பஞ்சாப் வெற்றிக்கு 149 ரன்கள் இலக்கு வைத்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
 
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஐ.பி.எல். லீக் போட்டி நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் வாட்சன் பேட்டிங் தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக வாட்சன், விஷ்ணு ஆகியோர் களம் இறங்கினார்கள். முதல் ஓவரை அக்சார் பட்டேல் வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தில் வாட்சன் 1 ரன் எடுத்த நிலையில் க்ளீன் போல்டானார். விஷ்ணு வினோத் 7 ரன்னில் வெளியேறினார். கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய கேதர் ஜாதவ் 1 ரன்னில் வெளியேற பெங்களூரு அணி 22 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டை இழந்து தடுமாறியது.

ஒருபக்கம் விக்கெட்டுக்கள் இழந்தாலும் மறுமுனையில் டி வில்லியர்ஸ் நிலைத்து நின்று விளையாடினார். இவருக்கு துணையாக நின்ற மந்தீப் சிங் 28 ரன்கள் எடுத்து வெளியேற, 16-வது ஓவரில் இருந்து வாணவேடிக்கையை ஆரம்பித்தார் டி வில்லியர்ஸ். பந்தை சிக்சருக்கு விரட்டிக் கொண்டே இருந்தார். இவரது அதிரடியால் பெங்களூரு 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் சேர்த்தது.

டி வில்லியர்ஸ் 46 பந்தில் 3 பவுண்டரி, 9 சிக்சருடன் 89 ரன்கள் குவித்தார். பின்னி 18 ரன்கள் சேர்த்தார். பெங்களூரு அணி கடைசி 4 ஓவரில் 68 ரன்கள் குவித்தது. பஞ்சாப் அணி சார்பில் மோகித் சர்மா 4 ஓவரில் 47 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.

இதையடுத்து 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பேட்டிங் செய்து வருகிறது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/04/10215752/1079260/IPL-RCB-149-runs-target-to-KXIP.vpf

  • தொடங்கியவர்
ஐ.பி.எல்., லீக் சுற்று: பெங்களூருவை வென்றது பஞ்சாப்
  • தொடங்கியவர்

ஐபிஎல்: பெங்களூரு அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் வெற்றி

 

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் பெங்களூரு அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி கிங்ஸ் லெவன் பஞ்சாப் வெற்றி பெற்றது.

 
ஐபிஎல்: பெங்களூரு அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் வெற்றி
 
பெங்களூரு:

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.

டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்களை குவித்தது. அந்த அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய வாட்சன், விஷ்ணு சொற்ப ரன்களில் வெளியேறினார்.

இதையடுத்து களமிறங்கிய டி வில்லியர்ஸ் ரசிகர்களுக்கு வாண வேடிக்கையை காட்டினார். அவர் களத்தில் இருந்த வரை அணியின் ஸ்கோர் மளமளெவன ஏறியது. டி வில்லியர்ஸ் அதிகபட்சமாக 46 பந்தில் 3 பவுண்டரி, 9 சிக்சருடன் 89 ரன்கள் குவித்தார். இறுதியில் பெங்களூரு அணி 4 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்களை குவித்தது. பஞ்சாப் அணி சார்பில் ஆரோன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
201704102316277895_ipl1._L_styvpf.gif
இதையடுத்து 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 14.3 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை எட்டியது. பஞ்சாப் அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய மனன் ஓஹ்ரா 21 பந்துகளில் 34 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். அம்லா 38 பந்துகளில் 4 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 58 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மறுபக்கத்தில் கேப்டன் மேக்ஸ்வெல் 22 பந்துகளில் 3 பவுண்டரி, 4 சிக்சர்களை விளாசி 43 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
201704102316277895_Copy%20of%20ipl2._L_s
இதையடுத்து பஞ்சாப் அணி 14.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 150 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 

http://www.maalaimalar.com/News/TopNews/2017/04/10231627/1079268/IPL-KIXP-won-aganist-RCB-by-8-wickets.vpf

  • தொடங்கியவர்

ரோகித் சர்மாவுக்கு போட்டி அமைப்பு குழு அதிகாரிகள் எச்சரிக்கை

கொல்கத்தா அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் நடுவர் அளித்த தீர்ப்பால் அதிருப்தி அடைந்த ரோகித் சர்மா நடுவரை நோக்கி திட்டியதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு போட்டி அமைப்பு குழு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

ரோகித் சர்மாவுக்கு போட்டி அமைப்பு குழு அதிகாரிகள் எச்சரிக்கை
 
மும்பை :

மும்பையில் நேற்று முன்தினம் இரவு நடந்த கொல்கத்தா அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா 2 ரன்னில் இருக்கையில் சுனில் நரின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார்.

மைதான நடுவர் நந்தன் அளித்த இந்த தீர்ப்பால் கடும் அதிருப்தி அடைந்த ரோகித் சர்மா நடுவரை நோக்கி திட்டியபடி பெவிலியன் திரும்பினார். இது குறித்து விசாரணை நடத்திய போட்டி அமைப்பு குழு அதிகாரிகள் ரோகித் சர்மாவின் செயலுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

அவருக்கு விதிக்கப்படும் தண்டனை குறித்து போட்டி நடுவர் முடிவு செய்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/04/11091441/1079295/Competition-Organizing-Committee-warned-to-Rohit-Sharma.vpf

  • தொடங்கியவர்

டெல்லி அணி வெற்றி கணக்கை தொடங்குமா?: புனேயுடன் இன்று மோதல்

 

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் புனே ரைசிங் சூப்பர் ஜெயன்ட்- டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதுகின்றன.

 
டெல்லி அணி வெற்றி கணக்கை தொடங்குமா?: புனேயுடன் இன்று மோதல்
 
புனே :

10-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஐதராபாத் சன் ரைசர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் லயன்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட், கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய 8 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்குள் அடியெடுத்து வைக்கும்.

இந்த நிலையில் புனேயில் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு நடைபெறும் 9-வது லீக் ஆட்டத்தில் ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்-டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதுகின்றன.

ஸ்டீவன் சுமித் தலைமையிலான புனே அணி முதலாவது லீக் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியது. 2-வது லீக் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியிடம் தோல்வி கண்டது. ஜாகீர்கான் தலைமையிலான டெல்லி அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் 15 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியிடம் வீழ்ந்தது.

201704110843519360_Rising-Pune-Supergian

புனே அணியில் ரஹானே, பென் ஸ்டோக்ஸ், டோனி, இம்ரான் தாஹிர், ரஜத் பாட்டியா, மனோஜ்திவாரி உள்ளிட்ட சிறந்த வீரர்கள் உள்ளனர். டெல்லி அணியில் ரிஷாப் பான்ட், கிறிஸ் மோரிஸ், பிராத்வெயிட், கம்மின்ஸ், அமித் மிஸ்ரா, கருண்நாயர் போன்ற எதிரணிக்கு சவால் அளிக்கும் வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.

இந்த போட்டி தொடரில் வெற்றி கணக்கை தொடங்க டெல்லி அணி எல்லா வகையிலும் முயற்சிக்கும். அதேநேரத்தில் புனே அணி 2-வது வெற்றியை ருசிக்க தீவிரம் காட்டும். இதனால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. ஐ.பி.எல். போட்டி தொடரில் இரு அணிகளும் இதுவரை 2 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் இரண்டு முறையும் புனே அணி தான் வெற்றி கண்டுள்ளது.
 
  • தொடங்கியவர்

பஞ்சாப்க்கு எதிரான தோல்விக்கு நானே பொறுப்பு: ஷேன் வாட்சன்

பதிவு: ஏப்ரல் 11, 2017 12:42

 
 

10-வது ஐ.பி.எல்.லில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்ததற்கு நானே பொறுப்பு என பெங்களூர் அணி கேப்டன் ஷேன் வாட்சன் வருத்தம் தெரிவித்தார்.

 
 
 
 
பஞ்சாப்க்கு எதிரான தோல்விக்கு நானே பொறுப்பு: ஷேன் வாட்சன்
 
இந்தூர்:

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த 8-வது ‘லீக்’ ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. முதலில் விளையாடிய பெங்களூர் 20 ஓவரில் 4 விக்கெட் 148 ரன் எடுத்தது. டிவில்லியர்ஸ் 46 பந்தில் 89 ரன் எடுத்தார். அவர் 9 சிக்சர், 3 பவுண்டரி அடித்தார்.

149 ரன் இலக்குடன் விளையாடிய பஞ்சாப் அணி 14.3 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 150 ரன் எடுத்து 8 விக்கெட்டில் வெற்றி பெற்றது. அந்த அணி 2-வது வெற்றியை பெற்றது. ஹசிம் அம்லா 58 ரன்னும், மேக்ஸ்வெல் 43 ரன்னும் எடுத்தனர்.

3-வது ஆட்டத்தில் விளையாடிய பெங்களூருக்கு 2-வது தோல்வியாகும். தோல்வி குறித்து பெங்களூர் அணி கேப்டன் வாட்சன் கூறியதாவது:-

201704111242299862__X4D2257._L_styvpf.gi

எங்களது தொடக்கம் நன்றாக அமையவில்லை. நான் முதல் ஓவரிலேயே அவுட் ஆகிவிட்டேன். நிச்சயமாக இது என்னுடைய தவறு தான். 170 ரன் முதல் 185 ரன் வரை எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

பந்துவீச்சிலும் திறமையை வெளிகாட்டவில்லை. நான் எதிர்பார்த்ததைவிட பனி தாக்கம் கொஞ்சம் அதிகமாக இருந்தது என்றார்.

பஞ்சாப் கேப்டன் மேக்ஸ்வெல் கூறுகையில், போட்டி தொடரை சிறப்பாக தொடங்கி இருக்கிறோம். வெற்றிக்கு பந்து வீச்சாளர்களே காரணம். பவர் பிளேவில் 23 ரன் மட்டுமே கொடுத்தது சிறந்த செயல்பாடாகும் என்றார்.

பஞ்சாப் அணி தனது அடுத்த ஆட்டத்தில் 13-ந்தேதி கொல்கத்தாவுடன் மோதுகிறது. பெங்களூர் அணி 14-ந்தேதி மும்பையை சந்திக்கிறது.
 

http://www.maalaimalar.com/News/Sports/2017/04/11124224/1079340/IPL-2017-RCB-captain-Watson-blames-himself-for-defeat.vpf

  • தொடங்கியவர்

ஐபிஎல்-லில் களம் இறங்குகிறார் கோலி!

 
 

Virat_1_15304.JPG

தற்போது நடந்துவரும் ஐபிஎல் போட்டிகளில், காயம் காரணமாக இந்திய கேப்டன் விராட் கோலி விளையாடாமல் இருக்கிறார். இந்த நிலையில், வரும் வெள்ளிக்கிழமை மும்பை அணிக்கு எதிராக பெங்களூருவில் நடக்க உள்ள போட்டியில், கோலி முழு உடற்தகுதி பெற்றுக் களம் இறங்க வாய்ப்புள்ளது.

ஐபிஎல் போட்டிகள் தொடங்குவதற்கு முன்னர், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியில், இந்திய கேப்டன் விராட் கோலிக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் நான்காவது டெஸ்ட் போட்டியிலும், இதுவரை ஐபிஎல் போட்டிகளிலும் விளையாடாமல் இருக்கிறார். இந்த நிலையில், பெங்களூரு அணி அடுத்து விளையாட உள்ள போட்டியில் களம் இறங்க வாய்ப்பு உள்ளதாக கோலி தெரிவித்தார்.

Virat_2_15439.JPG

இது குறித்து, விராட் கோலி தனது இன்ஸ்டாகிராமில், 'களத்தில் இறங்குவதற்கு என்னால் காத்திருக்க முடியவில்லை. கிட்டத்தட்ட முழு உடற்தகுதி பெற்றுவிட்டேன்' என்று பதிவுசெய்துள்ளார். 

http://www.vikatan.com/news/sports/86101-kohli-likely-to-play-by-this-week-in-ipl.html

  • தொடங்கியவர்

சி.எஸ்.கே. ஹெல்மெட் உடன் சாக்‌ஷி டோனி செல்பி: புனே உரிமையாளருக்கு பதிலடியா?

 

புனே அணி உரிமையாளரின் சகோதரர் ஹர்ஸ் ஹோயன்கே முதல் போட்டியின்போது டோனியை சிறுமைப்படுத்தும் வகையில் டுவிட் செய்திருந்தார். இதற்கு டோனியின் மனைவி பதிலடி கொடுத்துள்ளார்.

 
சி.எஸ்.கே. ஹெல்மெட் உடன் சாக்‌ஷி டோனி செல்பி: புனே உரிமையாளருக்கு பதிலடியா?
 
இந்திய அணியின் சாதனைக் கேப்டன் என்ற பெருமையுடன் விளங்கும் டோனி, கடந்த 9 ஐ.பி.எல். தொடரிலும் கேப்டனாக திகழ்ந்து வந்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இரண்டு ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டுள்ளதால் டோனி புனே அணியில் இடம்பிடித்துள்ளார். கடந்த ஆண்டு கேப்டனாக செயல்பட்ட டோனியை, அந்த அணி நிர்வாகம் அதிரடியாக கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது. ஆஸ்திரேலியாவின் ஸ்மித்தை கேப்டனாக நியமித்தது.

மும்பைக்கெதிரான முதல் போட்டியில் புனே அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு ஸ்மித் முக்கிய காரணமாக இருந்தார். இதுகுறித்து புனே அணி உரிமையாளரின் சகோதரரான ஹர்ஸ் கோயன்கே ஸ்மித்தை புகழ்ந்து டுவிட் செய்திருந்தார். அத்துடன் டோனியுடன் ஒப்பிட்டிருந்தார். இதற்கு ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்தநிலையில் ஹர்ஸ் ஹோயன்கே கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில், டோனியின் மனைவி சாக்‌ஷி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஹெல்மெட்டை அணிந்து செல்பி எடுத்து, அதை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

இந்த போஸ்ட் ஹர்ஸ் கோயன்கேவை பழிவாங்கும் விதத்தில் உள்ளது. அடுத்த வருடம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐ.பி.எல். தொடரில் இடம்பெறும். இதில் டோனி கேப்டனாக இருப்பார். புனே அணிக்கு என்னுடைய ஆதரவு கிடையாது என்ற வகையில் அந்த செய்தி உள்ளது.

சாக்‌ஷி படத்திற்கு ஆதரவாக டோனி ரசிகர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர். அடுத்த வருடம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக டோனி இருப்பார் என்று ஸ்ரீனிவாசன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/04/11174729/1079408/Did-Sakshi-Dhoni-post-a-selfie-with-CSK-helmet-to.vpf

  • தொடங்கியவர்

ரஷித் கானிடம் சிறப்பான ஏதோ ஒன்று உள்ளது: முரளீதரன் புகழாரம்

ஐ.பி.எல். தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடி வரும் ரஷித் கானிடம் சிறப்பான ஏதோ ஒன்று உள்ளது என்று முரளீதரன் புகழாரம் சூட்டியுள்ளார்.

 
ரஷித் கானிடம் சிறப்பான ஏதோ ஒன்று உள்ளது: முரளீதரன் புகழாரம்
 
ஐ.பி.எல். தொடர் 2017 விறுவிறுப்படைந்துள்ளது. நடப்பு சாம்பியன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. அந்த அணியில் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 18 வயதான லெக்ஸ்பின்னர் ரஷித் கான் இடம்பிடித்துள்ளார். இவரை அந்த அணி 4 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.

அவர் 4 கோடி ரூபாய்க்கு தகுதியானவாரா? என்ற கேள்வி எழுந்தது. ஆனால், இரண்டு போட்டிகளிலும் தனது லெக்ஸ்பின் மற்றும் கூக்ளி பந்தால் எதிரணி பேட்ஸ்மேன்களை கலங்கடித்துவிட்டார். இரண்டு போட்டியில் 5 விக்கெட்டுக்கள் வீழ்த்தி அசத்தியுள்ளார்.

சிறப்பாக பந்து வீசும் அவரை ஐதராபாத் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் முரளீதரன் வெகுவாக பாராட்டியுள்ளார். ரஷித் கான் குறித்து முரளீதரன் கூறுகையில் ‘‘நான் ரஷித் கானை இரண்டு முறைதான் பார்த்திருக்கிறேன். இருந்தாலும் நாங்கள் அவரைத் தேர்வு செய்தோம். ஏனென்றால் அவரது ஆட்டத்தை சர்வதேச போட்டியில் நாங்கள் பார்த்திருக்கிறோம்.

சிறந்த வீரர்களுக்கு எதிராக சிறப்பாக பந்து வீசினார். அவரிடம் ஏதோ ஒரு சிறப்புத் திறமை உள்ளது. மற்ற லெக்ஸ்பின்னரை விட சற்று மாறுபடுகிறார். வழக்கமான பந்து வீச்சாளரை விட பந்தை சற்று வேகமாக டெலிவரி செய்கிறார். அதுபோல் சில மாறுபட்ட அளவில் பந்து வீசும் திறமையும் அவரிடம் உள்ளது. முதல் இரண்டு போட்டியிலும் சிறப்பாக பந்து வீசினார். இது எங்கள் அணிக்கு சிறந்ததாக அமைந்தது. அவர் சிறப்பாக செயல்படுவார் என்று நினைத்தோம். எங்களது எதிர்பார்ப்பை நிறைவேற்றி விட்டார்” என்றார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/04/11200934/1079425/Rashid-Khan-something-special-says-SRH-bowling-coach.vpf

  • தொடங்கியவர்

டெல்லி அணிக்கெதிராக புனே பீல்டிங்: ஸ்மித் இல்லை- ரகானே கேப்டன்

ஐ.பி.எல். தொடரில் இன்றைய டெல்லிக்கெதிரான போட்டியில் புனே டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்துள்ளது. வயிற்று வலியால் ஸ்மித் அணியில் இடம்பெறவில்லை. ரகானே கேப்டனாக உள்ளார்.

 
டெல்லி அணிக்கெதிராக புனே பீல்டிங்: ஸ்மித் இல்லை- ரகானே கேப்டன்
 
ஐ.பி.எல். சீசன் 2017-ன் இன்றைய லீக் ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் - ரைசிங் புனே ஜெயன்ட் அணிகள் புனே மைதானத்தில் இரவு 8 மணிக்கு மோதுகின்றன. இதற்கான டாஸ் 7.30 மணிக்கு சுண்டப்பட்டது. புனே அணி சார்பில் கேப்டனாக ரகானே வந்தார். அவர் டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்துள்ளார்.

புனே அணியின் கேப்டன் ஸ்மித் வயிற்று வலி காரணமாக இன்று அவர் இடம்பெறவில்லை. இதனால் ரகானே கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார். அந்த அணியின் மனோஜ் திவாரியின் தந்தை இன்று காலை இயற்கை எய்தியதால் அவரும் அணியில் இடம்பெறவில்லை. ஸ்மித் மற்றும் கிறிஸ்டியன் ஆகியோருக்குப் பதிலாக டு பிளிசிஸ் மற்றும் ஆடம் சம்பா அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

டெல்லி அணியில் பிராத்வைட்டிற்குப் பதிலாக கோரி ஆண்டர்சன் சேர்க்கப்பட்டுள்ளார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/04/11195615/1079421/IPL-2017-pune-won-toss-select-field-first-smith-out.vpf

  • தொடங்கியவர்

கொல்கத்தா அணியுடன் இணைந்தார் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ்

இந்திய டெஸ்ட் அணியில் விளையாடியதற்காக ஓய்வு எடுத்த உமேஷ் யாதவ், தற்போது கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியுடன் இணைந்துள்ளார்.

கொல்கத்தா அணியுடன் இணைந்தார் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ்
 
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ். ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்திய அணி இந்த சீசனில் 13 டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடியது. இந்த சீசனில் உமேஷ் யாதவ் தொடர்ந்து விளையாடி அதிக அளவில் ஓவர்கள் வீசினார். இதனால் சில நாட்கள் ஓய்வு எடுத்துக் கொள்ளும்படி இந்திய கிரிக்கெட் வாரியம் கேட்டுக்கொண்டது.

அதன்படி கொல்கத்தா அணி விளையாடிய முதல் இரண்டு போட்டிகளிலும் உமேஷ் யாதவ் பங்கேற்கவில்லை. கொல்கத்தா அணி 3-வது போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வருகிற 13-ந்தேதி சந்திக்கிறது.

இந்த போட்டியில் விளையாடுவதற்காக உமேஷ் யாதவ் கொல்கத்தா சென்றுள்ளார். இதுகுறித்து கொல்கத்தா நைட்ரைடர்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் உமேஷ் யாதவ் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் படத்தை வெளியிட்டு ‘‘அணியுடன் உமேஷ் யாதவ் இணைந்து விட்டார்’’ என்று குறிப்பிட்டுள்ளது.

இதனால் கொல்கத்தா அணி மோதும் அடுத்த போட்டியில் உமேஷ் யாதவ் பங்கேற்பது உறுதியாகியுள்ளது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/04/11171320/1079399/Umesh-Yadav-joins-KKR-training-ahead-of-KXIP-game.vpf

  • தொடங்கியவர்

இந்த ஐபிஎல் சீசனின் முதல் சதத்தை விளாசினார் சஞ்சு சாம்சன்..!

 
 

இன்று புனேவுடனான ஆட்டத்தில் களமிறங்கிய டெல்லி அணி 20 ஒவர் முடிவில் 205 ரன்கள் எடுத்துள்ளது. டெல்லி அணியின் இளம் வீரர் சஞ்சு சாம்சன் 100 ரன்கள் குவித்தார். இந்த ஐபிஎல் தொடரின் முதலாவது சதம் இதுவாகும். தொடக்கத்தில் இருந்து அதிரடியாக விளையாடிய அவர் 63 பந்துகளில் 102 ரன்கள் எடுத்தார். இதில் 5 சிக்ஸர்களும் 8 பவுண்டரிகளும் அடங்கும்.

10_ok_21358.jpg

20 ஓவர்களில் முடிவில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி நான்கு விக்கெட்டுகள்  இழப்புக்கு 205 ரன்கள் குவித்துள்ளது. அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 102 ரன்கள் குவித்துள்ளார் .சாம் பில்லிங்ஸ் 24 ரன்களும் ரிஷப் பன்ட் 31 ரன்களும் கிரிஸ் மோரிஸ் 38 ரன்களும் குவித்தனர். புனே தரப்பில் தீபக் சஹர், இம்ரான் தாஹிர், ஆடம் சாம்பா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்குகிறது புனே அணி.

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
ஐ.பி.எல்., லீக் சுற்று: சஞ்சு சாம்சன் சதம் * 97 ரன்னில் டில்லி அணி வெற்றி
  • தொடங்கியவர்

ஐபிஎல்: புனே அணியை 97 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி டேர்டெவில்ஸ் வெற்ற

ஐபிஎல் சீசனின் இனறைய லீக் ஆட்டத்தில் புனே அணியை 97 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி டேர்டெவில்ஸ் வெற்றி பெற்றது.

ஐபிஎல்: புனே அணியை 97 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி டேர்டெவில்ஸ் வெற்றி
 
புனே:

ஐ.பி.எல் சீசனின் இன்றைய லீக் ஆட்டத்தில் புனே அணியை 97 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி அணி அபார வெற்றி பெற்றது. முன்னதாக டாஸ் வென்ற புனே அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, களமிறங்கிய டெல்லி அணி தொடக்கத்தில் தடுமாறினாலும் அந்த அணியின் சஞ்சு சாம்சனனின் ஆட்டத்தால் ரன் வேட்டை எகிறியது. அவர் 63 பந்தில் 8 பவுண்டரி, 5 சிக்சருடன் 100 ரன்கள் எடுத்து, தனது தனிப்பட்ட முதல் சதத்தை பூர்த்தி செய்தார்.

அவரைத் தொடர்ந்து கிறிஸ் மோரிஸ் 9 பந்தில் 4 பவுண்டரி, 3 சிக்சருடன் 38 ரன்கள் சேர்க்க, டெல்லி டேர்டெவில்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்தது.
201704112332386990_DD1._L_styvpf.gif
இதையடுத்து 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய புனே அணி, தொடக்கம் முதலே தடுமாறியது. அந்த அணியின் சார்பாக மயான்க் அகர்வால் அதிகபட்சமாக 18 பந்துகளில் 2 பவுண்டரிகள் உட்பட 20 ரன்களை சேர்த்தார். மளமளவென விக்கெட்டுகளை இழந்து வந்த புனே அணியில் மற்ற வீரர்கள் அனைவருமே சொற்ப ரன்களில் வெளியேறினர்.

இறுதியில் புனே அணி 16 ஓவர்களில் 108 ரன்கள் எடுத்திருந்த போது, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து டெல்லி அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

http://www.maalaimalar.com/News/TopNews/2017/04/11233232/1079438/IPL-DD-won-by-97-runs-against-RPS.vpf

  • தொடங்கியவர்

ஐதராபாத் அணியின் வெற்றிப் பயணம் தொடருமா? மும்பையுடன் இன்று பலப்பரீட்சை

 

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன் ரைசர்ஸ்-மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

 
 
 
 
ஐதராபாத் அணியின் வெற்றிப் பயணம் தொடருமா? மும்பையுடன் இன்று பலப்பரீட்சை
 
மும்பை ;

10-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஐதராபாத் சன் ரைசர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் லயன்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட், கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய 8 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்குள் அடியெடுத்து வைக்கும்.

இந்த நிலையில் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று (புதன்கிழமை) இரவு நடைபெறும் 10-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி, முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியை சந்திக்கிறது.
எழுச்சி பெற்ற மும்பை

டேவிட் வார்னர் தலைமையிலான ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் 35 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியையும், 2-வது லீக் ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் லயன்ஸ் அணியையும் வீழ்த்தி வலுவான நிலையில் உள்ளது.

ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி முதலாவது லீக் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் அணியிடம் தோல்வி கண்டாலும், அடுத்த லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 179 ரன் இலக்கை எட்டிப்பிடித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று எழுச்சி கண்டுள்ளது.

201704121018562270_Hyderabad-vs-Mumbai._

ஐதராபாத் அணியில் ஷிகர் தவான், யுவராஜ்சிங், தீபக் ஹூடா, பென் கட்டிங் ஆகியோர் பேட்டிங்கிலும், புவனேஷ்வர்குமார், நெஹரா, ரஷித் கான் ஆகியோர் பந்து வீச்சிலும் நல்ல நிலையில் இருக்கின்றனர். மும்பை அணியில் பார்த்தீவ் பட்டேல், ஜோஸ்பட்லர், நிதிஷ் ராணா, ஹர்திக் பாண்ட்யா, பொல்லார்ட் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும், குணால் பாண்ட்யா, டிம் சவுதி, மெக்லெனஹான், மலிங்கா, ஹர்பஜன்சிங் போன்ற நல்ல பவுலர்களும் உள்ளனர்.

இரு அணியிலும் அதிரடிக்கு பெயர் போன வீரர்கள் இடம் பெற்று இருப்பதால் இந்த போட்டியில் ரன் வேட்டை வேகத்தில் குறைவு இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐதராபாத் அணி ‘ஹாட்ரிக்’ வெற்றியை ருசிக்க முழு முயற்சி எடுக்கும். அதேநேரத்தில் ஐதராபாத் அணியின் வெற்றிப்பயணத்துக்கு முட்டுக்கட்டை போட்டு, சொந்த மண்ணில் 2-வது வெற்றியை சொந்தமாக்க மும்பை அணி முனைப்பு காட்டும். எனவே சமபலம் வாய்ந்த இரு அணிகளும் மல்லுக்கட்டும் இந்த ஆட்டம் பரபரப்பு நிறைந்ததாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
சமநிலை...

மும்பை-ஐதராபாத் அணிகள் இதுவரை 8 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் இரு அணிகளும் தலா 4 முறை வெற்றி கண்டு சமநிலை வகிக்கின்றன.

http://www.maalaimalar.com/News/Sports/2017/04/12101849/1079487/Hyderabad-vs-Mumbai-ipl-match.vpf

  • தொடங்கியவர்

என் வாழ்க்கையில் சிறப்பான நாள்: புனே பவுலிங்கை புரட்டி எடுத்த சதநாயகன் சஞ்சு சாம்சன் நெகிழ்ச்சி

 
 
சதம் கண்ட சஞ்சு சாம்சன். | படம்.| ஏ.எஃப்.பி.
சதம் கண்ட சஞ்சு சாம்சன். | படம்.| ஏ.எஃப்.பி.
 
 

புனேயில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் புனே அணியை டெல்லி அணி வீழ்த்தக் காரணமாயிருந்தது சஞ்சு சாம்சனின் அதிரடி சதம். இந்த முக்கியமான சதம் அடித்த நாள் தன் வாழ்நாளின் சிறப்பான நாள் என்று சஞ்சு சாம்சன் கூறியுள்ளார்.

சஞ்சு சாம்சன் 62 பந்துகளில் சதம் கண்டு 63 பந்துகளில் 8 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் 102 ரன்கள் விளாசி 19-வது ஓவர் 2-வது பந்தில்தான் ஆட்டமிழந்தார்.

ஆனால் அடுத்த 9 பந்துகளில் 4 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் கிறிஸ் மோரிஸ் 38 ரன்கள் விளாசித் தள்ள கடைசி 3 ஓவர்களில் 64 ரன்கள் பின்னி எடுத்த டெல்லி அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 205 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்கை எட்டியது. புனே அணியில் வழக்கம் போல் இம்ரான் தாஹிர் மட்டுமே சிறப்பாக வீசி 4 ஓவர்களில் 24 ரன்களை விட்டுக் கொடுத்து 1 விக்கெட்டைக் கைப்பற்றினார். லெக் ஸ்பின்னர் ஆடம் ஸாம்ப்பாவுக்கு சாத்துமுறை நடந்ததில் 4 ஓவர்களில் 45 ரன்களை விட்டுக் கொடுத்தார். அதிரடிக்கு வழக்கம் போல் மூலக்காரணமாக டிண்டா விளங்கினார் முதலில் இவர் ஓவர்தான் வெளுத்து வாங்கப்பட்டது.

தொடர்ந்து ஆடிய புனே அணியில் ஸ்மித் இல்லை, ரஹானே கேப்டன். புனே அணி படுமோசமான பேட்டிங் ஆடி 16.1 ஓவர்களில் 108 ரன்களுக்கு பரிதாபமாகச் சுருண்டது. ஜாகீர் கான் 20 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அமித் மிஸ்ரா மிகப்பிரமாதமாக வீசி 11 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

ஆதித்ய தாரே விக்கெட் விழுந்தவுடன் 2-வது ஓவரிலேயே இறங்கிய சஞ்சு சாம்சன், ரைசிங் புனே அணியின் வேகப்பந்து வீச்சை சிலபல பவுண்டரிகள் மூலம் புரட்டி எடுத்தார். டிரைவ்கள், பஞ்ச்கள் என்று களவியூகத்தை சிதறடித்தார். டிண்டா, தீபக் சாஹர் ஆகியோர் சரியாக வீசாததைப் பயன்படுத்தி 14 பந்துகளிலேயே 31 ரன்கள் என்று வேகம் காட்டினார். ஆனால் ஸாம்பா, தாஹிர், ரஜத் பாட்டியா அறிமுகம் ஆனவுடன் களவியூகமும் பரவலாக்கப்பட்டவுடன் சாம்சன் அதிரடி தொடக்கம் மந்தம் கண்டு 45 பந்துகளில் 54 என்று இருந்தார். அப்போது இவருடன் ஆடிய இளம் புலி ரிஷப் பந்த் 22 பந்துகளில் 31 ரன்கள் விளாசினார்.

அதன் பிறகு ஸாம்பாவை நேர் சிக்ஸ் அடித்த சாம்சன் அடுத்த 17 பந்துகளில் 48 ரன்கள் விளாசினார். இதில்தான் டிண்டா வள்ளல் ஒரு ஓவரில் 19 ரன்களை விட்டுக் கொடுத்து டெல்லி அதிரடியைத் தொடங்கி வைத்தார்.

இந்த இன்னிங்ஸ் குறித்து சஞ்சு கூறும்போது, “இந்த நாள் குறித்து மகிழ்ச்சியடைகிறேன், என் வாழ்நாளில் சிறந்த நாட்களில் இதுவும் ஒன்று. உலகின் சிறந்த அணியாக விளங்கும் இந்திய அணியில் ஆடுவதே ஒவ்வொரு இந்திய வீரரின் கனவும். எனவே அணிக்குள் நுழைய சிறப்பான இன்னிங்ஸை ஆட வேண்டும். இந்த வகையில் நான் மகிழ்ச்சியடைகிறேன், ஆனால் இன்னும் நீண்ட தொலைவு செல்ல வேண்டும்.

ராகுல் திராவிட், ஸுபின் பரூச்சா, பேடி அப்டன் ஆகியோருக்கு நன்றிக் கடன் பட்டிருக்கிறேன். கடந்த ஐபிஎல் தொடர் எனக்கு சரியாக அமையவில்லை, ஆனால் அப்போதும் எனக்கு இவர்கள் ஆதரவு தெரிவித்து தக்கவைத்தனர். எனவே இந்த சதத்தை அவர்களுக்கு அர்ப்பணிக்கிறேன்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்த போது எனக்கு வயது 17, அங்கிருந்து திராவிடுடன் பணியாற்றி வருகிறேன். அவரது வழிகாட்டுதலில் ஆட்டத்தை கற்றுக்கொள்வது எனக்கு கிடைத்த மிகப்பெரிய ஆசீர்வாதம். நிறைய வீரர்களுக்கு இந்த வாய்ப்பு கிட்டுவதில்லை. இந்தவகையில் நான் அதிர்ஷ்டம் செய்துள்ளேன்.

நாம் எப்பொதும் வெற்றியை ருசித்தால் கற்றுக் கொள்ள முடியாது. தவறுகளிலிருந்துதான் பாடம் கற்றுக் கொள்ள முடியும். என்னுடைய கடந்த காலம் நான் சிறந்த ஒரு கிரிக்கெட் வீரராக உருவாக வழிவகை செய்துள்ளது” என்றார்.

http://tamil.thehindu.com/sports/என்-வாழ்க்கையில்-சிறப்பான-நாள்-புனே-பவுலிங்கை-புரட்டி-எடுத்த-சதநாயகன்-சஞ்சு-சாம்சன்-நெகிழ்ச்சி/article9633220.ece

  • தொடங்கியவர்

ஐ.பி.எல்.லில் குறைந்த வயதில் சதம்: 2-வது வீரர் சாம்சன்

10-வது ஐ.பி.எல். போட்டியில் புனே அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் 63 பந்தில் 102 ரன் எடுத்தார். இதன்மூலம் குறைந்த வயதில் ஐ.பி.எல்.லில் சதம் அடித்த வீரர்களில் அவர் 2-வது இடத்தை பிடித்தார்.

 
ஐ.பி.எல்.லில் குறைந்த வயதில் சதம்: 2-வது வீரர் சாம்சன்
 
இந்த ஐ.பி.எல். போட்டியில் முதல் சதம் அடித்தவர் என்ற சாதனையை டெல்லி அணி வீரர் சாம்சன் பெற்றார். அவர் 63 பந்தில் 102 ரன் எடுத்தார். இதில் 8 பவுண்டரிகளும், 5 சிக்சர்களும் அடங்கும்.

சாம்சன் தனது 22 வயது 151 நாட்களில் சதத்தை பதிவு செய்தார். இதன்மூலம் குறைந்த வயதில் ஐ.பி.எல்.லில் சதம் அடித்த வீரர்களில் 2-வது இடத்தை பிடித்தார். மனிஷ் பாண்டே 19 வயது 253 நாட்களில் சதம் அடித்து இருந்தார். குயின்டன் டிகாக் (தென்னாப்பிரிக்கா) 23 வயது 122 நாட்களிலும், டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா) 23 வயது 153 நாட்களிலும் சதம் அடித்து இருந்தனர்.

ஐ.பி.எல். போட்டியில் சதம் அடித்த 28-வது வீரர் சாம்சன் ஆவார். மொத்தம் 43 சதம் பதிவாகி உள்ளது.

201704121306399055_ks._L_styvpf.gif

இந்தியர்களில் 12-வது வீரர் சாம்சன் ஆவார். விராட் கோலி (4 சதம்), ஷேவாக், முரளி விஜய் (தலா 2 செஞ்சூரி), தெண்டுல்கர், மனிஷ் பாண்டே, யூசுப் பதான், வல்தாட்டி, ரகானே, ரோகித் சர்மா, ரெய்னா, விருத்திமான் சகா ஆகிய இந்திய வீரர்கள் இதற்கு முன்பு ஐ.பி.எல்.லில் சதம் அடித்து இருந்தனர்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/04/12130632/1079545/Sanju-Samson-2nd-player-of-IPL-century-in-lower-age.vpf

  • தொடங்கியவர்

#IPL மும்பை இந்தியன்ஸ்க்கு 159 ரன்கள் இலக்கு

 
 

இந்த ஐபிஎல் சீஸனின் பத்தாவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற மும்பை பந்து வீச்சை தேர்ந்தெடுத்தது. இதையடுத்து களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 158 ரன்கள் குவித்துள்ளது.

10_ok_22312.jpg

ஐபிஎல் போட்டிகள் அட்டகாசமாய் ஆரம்பித்து அதிரடியாய் பயணிக்கத் தொடங்கிவிட்டன. இன்றைய போட்டியில் அதிரடிகளுக்கு பஞ்சம் வைக்காத சன்ரைசர்ஸ் அணியும், முன்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற மும்பை பந்து வீச, வார்னர்-தவான் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். கடந்த போட்டியில் குஜராத் அணியை அசால்டாக வீழ்த்திய சன்ரைசர்ஸ், மும்பையை வீழ்த்தும் வியூகங்களை வகுத்து களமிறங்கியுள்ளது. மேலும், தரவரிசையில் முதலிடத்தில் இருப்பதை இழந்துவிடக் கூடாது என்ற நோக்கத்தில் இருக்கும் சன்ரைசர்ஸை எப்படியாவது வென்றுவிட வேண்டுமென களமிறங்கியுள்ளது மும்பை இந்தியன்ஸ். முன்பை அணியில் எவ்வித மாற்றமும் இல்லை. சன்ரைசர்ஸ் தரப்பில் ஹென்ரிக்ஸ்க்கு பதிலாக கடந்த சீசனில் கலக்கிய முஷ்டபிஸுர் களமிறங்கினார்.

20 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் குவித்துள்ளது. அதிகபட்சமாக டேவிட் வார்னர் 49 ரன்கள் குவித்தார். ஷிகர் தவான் 48 ரன்கள் குவித்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் தரப்பில் பும்ரா 3 விக்கெட்டுகளும் ஹர்பஜன் சிங் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர். இதையடுத்து 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்குகிறது மும்பை இந்தியன்ஸ் அணி. தொடக்க ஆட்டக்காரர்களாக ஜோஸ் பட்லரும், பார்திவ் படேலும் களமிறங்குகின்றனர்.

http://www.vikatan.com/news/sports/86273-mumbai-indians-need-159-runs-to-win-srh.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.