Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐபிஎல் 2017 சீசன்!

Featured Replies

  • தொடங்கியவர்

புனேயை வீழ்த்தி குஜராத் முதல் வெற்றி: மேக்குல்லம், சுமித்துக்கு ரெய்னா பாராட்டு

 

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் புனேயை வீழ்த்தி குஜராத் முதல் வெற்றி பெற்றது. மேக்குல்லம், சுமித்துக்கு ரெய்னா பாராட்டு தெரிவித்துள்ளார்.

 
 
புனேயை வீழ்த்தி குஜராத் முதல் வெற்றி: மேக்குல்லம், சுமித்துக்கு ரெய்னா பாராட்டு
 

ராஜ்கோட்:

ஐ.பி.எல் போட்டியில் நேற்று ராஜ்கோர்ட் மைதானத்தில் நடந்த ஆட்டத்தில் புனே அணியை வீழ்த்தி குஜராத் லயன்ஸ் தனது முதல் வெற்றி பதிவு செய்தது.

இந்த வெற்றி குறித்து குஜராத் லயன்ஸ் கேப்டன் ரெய்னா கூறியதாவது:-

இரண்டு தோல்விக்கு பிறகு மீண்டும் நல்ல நிலைக்கு திரும்புவது கடினம். நாங்கள் மிகவும் பலமாக முன்னேறி பெற்ற இந்த வெற்றியால் மகிழ்ச்சி அடைகிறோம். அறிமுக பவுலர் ஆண்ட்ரூ டை அபாரமாக பந்து வீசினார். குறிப்பாக அவர் கடைசி நேரத்தில் மிகவும் நேர்த்தியாக பந்து வீசினார்.

எங்களது தொடக்க வீரர்கள் மேக்குல்லம், வெயின் சுமித் சிறந்த அதிரடியை வெளிப்படுத்தினார்கள். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அவர்கள் எப்படி தொடக்க வரிசையில் சிறப்பாக செயல்பட்டார்களோ அது போல் செயல்பட்டனர்.

இவ்வாறு ரெய்னா கூறியுள்ளார்.

தோல்வி குறித்து புனே அணி கேப்டன் ஸ்டீவன் சுமித் கூறும் போது ஆடுகளத்தின் தன்மை மாறியதாக நான் கருதவில்லை. நாங்கள் நல்ல நிலையில் தான் இருந்தோம். விக்கெட்டுகள் சரிந்ததால் தான் ரன் குவிக்க முடியவில்லை. மேக்குல்லம்-சுமித்தின் அதிரடியால் ஒன்றும் செய்ய முடியாமல் போனது என்றார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/04/15132316/1080074/IPL-cricket-match-Gujarat-win-Reina-and-Smith-Mekkullam.vpf

  • Replies 368
  • Views 44.3k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

ஐ.பி.எல்.: கொல்கத்தாவிற்கு எதிராக சன்ரைசர்ஸ் டாஸ் வென்று பீ்ல்டிங் தேர்வு- முஷ்டாபிஜூர் ரஹ்மான் அவுட்

ஐ.பி.எல். 10 சீசனின் 14-வது லீக் போட்டி கொல்கத்தாவில் 4 மணிக்கு தொடங்குகிறது. இதில் கொல்கத்தாவிற்கு எதிராக டாஸ் வென்று ஐதராபாத் பீல்டிங் தேர்வு செய்துள்ளது.

 
 
ஐ.பி.எல்.: கொல்கத்தாவிற்கு எதிராக சன்ரைசர்ஸ் டாஸ் வென்று பீ்ல்டிங் தேர்வு- முஷ்டாபிஜூர் ரஹ்மான் அவுட்
 
ஐ.பி.எல். 2010 சீசன் டி20 லீக் தொடரின் 14-வது போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நான்கு மணிக்கு தொடங்குகிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் வார்னர் டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தார்.

ஐதராபாத் அணியில் ஹென்றிக்ஸ், பிபுல் ஷர்மா சேர்க்கப்பட்டுள்ளனர். முஷ்டாபிஜூர் ரஹ்மான், விஜய் சங்கர் நீக்கப்பட்டுள்னர். கொல்கத்தா அணியில் பியூஸ் சாவ்லாவிற்குப் பதிலாக குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார்.

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி:-

1. காம்பீர், 2. உத்தப்பா, 3. மணீஷ் பாண்டே, 4. யூசுப் பதான், 5. சூர்யகுமார் யாதவ், 6. கொலின் டி கிராண்ட்ஹோம், 7. கிறிஸ் வோக்ஸ், 8. சுனில் நரைன், 9. குல்தீப் யாதவ், 10. உமேஷ் யாதவ், 11. டிரென்ட் போல்ட்.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி:-

1. டேவிட் வார்னர், 2. தவான், 3. ஹென்றிக்ஸ், 4. யுவராஜ் சிங், 5. ஹூடா, 6. கட்டிங், 7. நமன் ஓஜா, 8. புவனேஸ்வர் குமார், 9. பிபுல் ஷர்மா, 10. ரஷித் கான், 11. நெஹ்ரா.

http://www.maalaimalar.com/News/Sports/2017/04/15154604/1080112/IPL-2017-15th-match-sunrisers-hyderabad-won-toss-select.vpf

  • தொடங்கியவர்

34 போட்டிகள் காத்திருப்புக்குப் பிறகு ஹாட்ரிக்: குஜராத் அணி சாதனையாளர் ஆண்ட்ரூ ஜேம்ஸ் டை நெகிழ்ச்சி

 

 
ஹாட்ரிக் சாதனை புரிந்த குஜராத் அணியின் ஆஸி.வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் டை. | படம்| ஏ.எப்.பி.
ஹாட்ரிக் சாதனை புரிந்த குஜராத் அணியின் ஆஸி.வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் டை. | படம்| ஏ.எப்.பி.
 
 

ஐபிஎல் கிரிக்கெட்டில் இரண்டு அணிகளில் சுமார் 34 போட்டிகள் பெஞ்சில் அமர்ந்திருந்த ஆண்ட்ரூ ஜேம்ஸ் டை, நேற்று குஜராத் அணிக்காக புனே அணி தோல்விக்கு தனது ஹாட்ரிக் மூலம் பங்களிப்பு செய்தது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

நேற்று ராஜ்கோட்டில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் லயன்ஸ் கேப்டன் சுரேஷ் ரெய்னா முதலில் புனே அணியை பேட் செய்ய அழைத்தார். ஸ்மித் அதிகபட்சமாக 43 ரன்கள் எடுக்க புனே அணி முதலில் பேட் செய்து 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 171 ரன்கள் என்ற ஸ்கோரை எட்டியது. இதில் ஆண்ட்ரூ ஜேம்ஸ் டை என்ற ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் கடைசி ஓவரில் அன்கிட் ஷர்மா, திவாரி, தாக்குர் ஆகியோரை வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தியதோடு 5 விக்கெட்டுகளை 17 ரன்களுக்கு கைப்பற்றினார். தோனி மீண்டும் சோபிக்காமல் 5 ரன்களில் ஜடேஜாவிடம் எல்.பி.ஆகி வெளியேறினார்.

தொடர்ந்து ஆடிய குஜராத் லயன்ஸ் அணி, 18 ஓவர்களில் 178/3 என்று வெற்றி பெற்று முதல் வெற்றியைப் பதிவு செய்தது. டிவைன் ஸ்மித் 30 பந்துகளில் 8 பவுண்டரி 1 சிக்சருடன் 47 ரன்களையும் பிரெண்டன் மெக்கல்லம் 32 பந்துகளில் 5 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 49 ரன்களையும் விளாசி 8.5 ஓவர்களில் முதல் விக்கெட்டுக்காக 94 ரன்கள் கூட்டணி அமைத்தனர். பிறகு ரெய்னா (35), பிஞ்ச் (33) ஆகியோர் 6 ஓவர்களில் 61 ரன்களை ஆட்டமிழக்காமல் சேர்த்து 172/3 என்று வெற்றி பெறச் செய்தனர். முதல் போட்டியிலேயே ஹாட்ரிக் சாதனை, 5 விக்கெட் என்று அசத்திய வேகப்பந்து வீச்சாளர் ஆண்ட்ரூ ஜேம்ஸ் டை ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

“நான் 34 போட்டிகள் காத்திருந்தேன். முதல் வாய்ப்பைப் பெற்றவுடன் எனக்கு அழுத்தம் எதுவும் இல்லை, நான் சில விக்கெட்டுகளைக் கைப்பற்றினேன், இதைவிட சிறந்த அறிமுக போட்டி எனக்கு கிடைக்காது.

பல பெரிய பயிற்சியாளர்களிடன் நம் ஆட்டத்திறனை வளர்த்துக் கொள்ள ஐபிஎல் போட்டிகள் ஒரு சிறந்த மேடை. இவ்வளவு நாட்களாக எனக்கு வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் நிச்சயம் வாய்ப்பு கிட்டும் என்றே நம்பிக்கையுடன் காத்திருந்தேன். வாய்ப்பு கிடைத்தவுடன் அழுத்தமின்றி என்னை நான் வெளிப்படுத்தினேன்.

வேகம் குறைத்து வீசும் பந்துகள் எனது சிறப்பான பந்தாகும், இந்த பிட்சில் இது சரியாகக் கைகூடியது மகிழ்ச்சியளிக்கிறது.

வேகம் குறைந்த பந்துகள் பிட்சில் நின்று வருவதை உடனடியாக உணர்ந்தேன், பேட்ஸ்மென்களுக்கு மேலும் கஷ்டத்தை ஏற்படுத்தினேன்.

குறிப்பாக பென் ஸ்டோக்ஸ் விக்கெட் எனக்கு திருப்தி அளித்தது, ஏனெனில் அவர் நன்றாக ஆடிவந்தார், அபாயகரமாகத் திகழ்ந்தார். சரியான நேரத்தில் அவரை வீழ்த்தியது எனக்கு நல்ல விஷயமானது.

ஒரே நாளில் இருவேறு போட்டிகளில் இரு பவுலர்கள் ஹாட்ரிக் எடுத்தது (சாமுவேல் பத்ரி, ஜேம்ஸ் டை) அரிதானதே. எனவே டி20 போட்டிகள் பேட்ஸ்மென்களுக்கானதே என்ற பார்வையை இரு ஹாட்ரிக்குகள் கேள்விக்குட்படுத்துகிறது” இவ்வாறு கூறினார் ஜேம்ஸ் டை.

http://tamil.thehindu.com/sports/34-போட்டிகள்-காத்திருப்புக்குப்-பிறகு-ஹாட்ரிக்-குஜராத்-அணி-சாதனையாளர்-ஆண்ட்ரூ-ஜேம்ஸ்-டை-நெகிழ்ச்சி/article9641782.ece?homepage=true

  • தொடங்கியவர்

டுவிட்டரில் டோனிக்கு எதிராக ஹேஸ்டேக் உருவாக்கியவர்களுக்கு சேவாக் கடும் கண்டனம்

 

டுவிட்டரில் DhoniDropped என்ற ஹேஸ்டேக் உருவாக்கி டோனியை வசைபாடுபவர்களுக்கு இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் சேவாக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 
 
டுவிட்டரில் டோனிக்கு எதிராக ஹேஸ்டேக் உருவாக்கியவர்களுக்கு சேவாக் கடும் கண்டனம்
 
இந்திய கிரிக்கெட் அணியின் சாதனைக் கேப்டனாக விளங்கிய டோனிக்கு, இந்த ஐ.பி.எல். தொடரின் தொடக்கம் சரியாக அமையவில்லை. இதுவரை புனே அணி நான்கு போட்டியில் விளையாடி ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்த நான்கு போட்டியிலும் டோனி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. நேற்றைய குஜராத் அணிக்கெதிரான போட்டியில் ஐந்து ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

இதனால் சமூக வலைத்தளமான டுவிட்டரில் டோனிக்கு எதிராக #DhoniDropped என்ற ஹேஸ்டேக் உருவாக்கி ட்ரென்டில் இருந்தது. இதில் ஏராளமானோர் டோனிக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்தனர். அதேவேளையில் டோனியின் ரசிகர்கள் #WeStandByDhoni ஹேஸ்டேக் உருவாக்கி ஆதரவான கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.

டோனிக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளதற்கு சேவாக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சேவாக் கூறுகையில் ‘‘டி20 கிரிக்கெட்டில் 6-வது வீரராக டோனி களமிறங்கி பேட்டிங் செய்வது மிகவும் கடினமானது. இன்னும் 5-வது அல்லது 6-வது இடத்தில் களமிறங்கி அதிரடியாக விளையாடுவதில் டோனி மிகச் சிறந்தவர். விரைவில் டோனி தனது பாஃர்முக்கு வருவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஐ.பி.எல். தொடரில் இன்னும் ஏராளமான போட்டிகள் உள்ளன. நான்கு அல்லது ஐந்து போட்டிகளை வைத்து டோனியின் தகுதியை எடைபோடக்கூடாது.

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சதம் அடித்து இந்திய அணியை வெற்றிபெற வைத்தவர். இதனால் அவர் பாஃர்ம் இல்லாமல் இருக்கிறார் என்று நான் நினைக்கவில்லை. சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு டோனி இல்லாமல் இந்திய அணி செல்லும் என்று உங்களால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. ஐ.பி.எல். தொடரில் இதுபோன்ற மோசமான நிலை ஏற்படும்.

டோனியை போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்களின் தரத்தை பார்ப்பதற்கு ஐ.பி.எல். ஒரு பிளாட்பாரமாக இருக்கக்கூடாது. அதிக அளவு ரசிகர்களுக்கு மத்தியில் இளம் வீரர்களின் ஆட்டத்தை தரம்பார்ப்பதற்கு என்றால் சரியாக இருக்கும்’’ என்றார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/04/15171239/1080133/Virender-Sehwag-destroys-MS-Dhoni-detractors-after.vpf

  • தொடங்கியவர்

ஐ.பி.எல்.: ஐதராபாத் அணிக்கு 173 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் ஐதராபாத் அணியின் வெற்றிக்கு 173 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.

 
 
ஐ.பி.எல்.: ஐதராபாத் அணிக்கு 173 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
 
ஐ.பி.எல். 10 சீசனின் 14-வது லீக் போட்டி கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது. இதில் கொல்கத்தாவிற்கு எதிராக டாஸ் வென்று ஐதராபாத் பீல்டிங் தேர்வு செய்தது. ஐதராபாத் அணியில் ஹென்றிக்ஸ், பிபுல் ஷர்மா சேர்க்கப்பட்டுள்ளனர். முஷ்டாபிஜூர் ரஹ்மான், விஜய் சங்கர் நீக்கப்பட்டனர். கொல்கத்தா அணியில் பியூஸ் சாவ்லாவிற்குப் பதிலாக குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டார்.

கொல்கத்தா அணியின் சுனில் நரைன், காம்பீர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். நரைன் 6 ரன்கள் எடுத்த நிலையில் புவனேஸ்வர் குமார் க்ளீன் போல்டானார். அடுத்து களம் இறங்கிய உத்தப்பா முதல் பந்திலேயே விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்தார். ஆனால் நடுவர் அவுட் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் கோல்டன் டக்கில் இருந்து உத்தப்பா தப்பினார். அதன்பின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

காம்பீர் 15 ரன்கள் எடுத்த நிலையில் ரஷித் கான் பந்தில் வெளியேறினார். அடுத்து உத்தப்பா உடன் மணீஷ் பாண்டே ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடியாக விளையாடியது. உத்தப்பா 39 பந்தில் 5 பவுண்டரி, 4 சிக்சருடன் 68 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். மணீஷ் பாண்டே 35 பந்தில் 46 ரன்கள் சேர்த்தார்.

இருவரின் ஆட்டத்தால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் சேர்த்துள்ளது. ஐதராபாத் அணி சார்பில் அதிகபட்சமாக புவனேஸ்வர் குமார் 4 ஓவரில் 20 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

பின்னர் 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி களம் இறங்கி விளையாடி வருகிறது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/04/15175740/1080140/IPL-2017-17th-match-KKR-173-runs-target-to-SRH.vpf

  • தொடங்கியவர்

ஐ.பி.எல்.: ஐதராபாத்தை 17 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா

கொல்கத்தாவில் நடைபெற்ற போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை 17 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. உத்தப்பா ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

 
 
ஐ.பி.எல்.: ஐதராபாத்தை 17 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா
 
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற ஐதராபாத் அணி பீ்ல்டிங் தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி உத்தப்பா (68), மணீஷ் பாண்டே (46) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் குவித்தது.

பின்னர் 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் டேவிட் வார்னர், தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். கொல்கத்தா அணியின் நேர்த்தியான பந்து வீச்சால் வார்னர், தவானால் அதிரடியாக விளையாட முடியவில்லை.

தவான் 22 பந்தில் பவுண்டரியுடன் 23 ரன்கள் எடுத்த நிலையிலும், வார்னர் 30 பந்தில் நான்கு பவுண்டரியுடன் 26 ரன்கள் எடுத்த நிலையிலும் ஆட்டம் இழந்தனர். அதன்பின் ஐதராபாத் அணியால் அதிரடியாக ஆட முடியவில்லை. ஹென்றிக்ஸ் (13), யுவராஜ் சிங் (26), ஹூடா (13), கட்டிங் (15), நமன் ஓஜா (11) மற்றும் பிபுல் ஷர்மா (21) ஆகியோர் ஓரளவிற்கு ரன்கள் எடுக்க ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது.

இதனால் கொல்கத்தா 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. உத்தப்பா ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/04/15201502/1080151/IPL-2017-KKR-Beats-Hyderabad-by-17-runs.vpf

  • தொடங்கியவர்

அம்பயர் தயவால் டக்கில் இருந்து தப்பி 39 பந்தில் 68 ரன்கள் குவித்த உத்தப்பா

 

அம்பயர் அவுட் கொடுக்காததால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உத்தப்பா டக் அவுட்டில் இருந்து தப்பி 39 பந்தில் 68 ரன்கள் குவித்து அணியை பெற்றி பெற வைத்தார்.

அம்பயர் தயவால் டக்கில் இருந்து தப்பி 39 பந்தில் 68 ரன்கள் குவித்த உத்தப்பா
 

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற ஐதராபாத் அணி பீல்டிங் தேர்வு செய்தது.

அதன்படி கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி புவனேஸ்வர் குமார் வீசிய 3-வது ஓவரின் 2-வது பந்தில் முதல் விக்கெட்டாக சுனில் நரைனை இழந்தது. அடுத்து ராபின் உத்தப்பா களம் இறங்கினார். அந்த ஓவரின் 3-வது பந்தை புவனேஸ்வர் குமார் வீசினார். ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே பவுன்சராக வீசப்பட்ட பந்து உத்தப்பாவின் பேட்டில் உரசிச் சென்றது. விக்கெட் கீப்பர் ஓஜா மற்றும் கேப்டன் வார்னர் அப்பீல் கேட்டனர். ஆனால் அம்பயர் அவுட் கொடுக்க மறுத்துவிட்டார்.

தொடர்ந்து விளையாடிய உத்தப்பா 39 பந்தில் 5 பவுண்டரி, 4 சிக்சருடன் 68 ரன்கள் குவித்து, கொல்கத்தா அணி 172 ரன்கள் குவிக்க முக்கிய காரணமாக இருந்தார். இவரது ரன்குவிப்பால் கொல்கத்தா அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

அம்பயர் தயவால் டக் அவுட்டில் இருந்து தப்பிய உத்தப்பா, 68 ரன்கள் குவித்ததுடன், ஆட்ட நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/04/15222149/1080154/Umpire-falls-uthappa-escape-from-duck-then-smash-68.vpf

  • தொடங்கியவர்

ஐ.பி.எல்: 51 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது டெல்லி டேர்டெவில்ஸ்

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 
ஐ.பி.எல்: 51 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது டெல்லி டேர்டெவில்ஸ்
 

ஐ.பி.எல். தொடரில் டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டெல்லி, பஞ்சாப் அணிகள் மோதின. டாஸ்வென்ற டெல்லி டேர்டெவில்ஸ் அனி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. சன்சு சாம்சான், சாம் பில்லிங்க்ஸ் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 6.5 ஓவர்களில் 53 ரன்கள் எடுத்திருந்த போது சன்சு 19(18) ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய கருண் நாயர் டக் அவுட் ஆகி வெளியேறினார். பின்னர் சாம், ஷிரேயாஸ் ஐயர் இருவரும் ஜோடி சேர்ந்து ரன்களை சேர்த்தனர். ஷிரேயாஸ் நாயர் 22(17) ரன்களில் ஆட்டமிழக்க சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்த சாம் பில்லிங்ஸ் 55(40) ரன்களை வெளியேறினார். இறுதியாக கோரி ஆண்டர்சன் 22 பந்துகளில் 39 ரன்கள் எடுக்க டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து 189 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 31 ரன்கள் எடுப்பதற்குள் வோஹ்ரா, சாகா, ஆம்லா ஆகியோரது விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் களமிறங்கிய மோர்கன்(22), டேவிட் மில்லர்(24) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் மேக்ஸ்வெல் 2 பந்துகளில் டக்-அவுட் ஆகி வெளியேறினார். இதனால் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. கடைசி வரை போராடிய அக்ஸர் பட்டேல் 29 பந்துகளில் 44 ரன்கள் விளாசி கடைசி பந்தில் ஆட்டமிழந்தார்.

டெல்லி அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லி அணி தரப்பில் மோரிஸ் 3 விக்கெட்டுக்களை சாய்த்தார். நதீம் அபாரமாக பந்துவீசி முக்கியமான இரண்டு விக்கெட்டுகளை சாய்த்தார். கம்மின்ஸ் 2 விக்கெட்டுகள் எடுத்தார். கோரி ஆண்டர்சன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/04/16000149/1080162/IPL-Delhi-Daredevils-beats-punjab-by-51-runs.vpf

  • தொடங்கியவர்

பெங்களூர் - புனே இன்று மோதல்: தோல்வியில் இருந்து மீள்வது யார்?

ஐ.பி.எல். தொடரில் இன்று விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- ஸ்டீவன் சுமித் தலைமையிலான ரைசிங்புனே சூப்பர் ஜெய்ன்ட் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்க போராடும்.

 
பெங்களூர் - புனே இன்று மோதல்: தோல்வியில் இருந்து மீள்வது யார்?
 
பெங்களூர்:

10-வது ஐ.பி.எல். போட்டியின் 12-வது நாளான இன்று இரண்டு ஆட்டங்கள் நடக்கிறது. மாலை 4 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ்- ரெய்னா தலைமையிலான குஜராத் லயன்ஸ் மோதுகின்றன.

மும்பை அணி தொடக்க ஆட்டத்தில் புனேயிடம் (7 விக்கெட்) தோற்றது. அதைத் தொடர்ந்து 3 ஆட்டங்களில் (கொல்கத்தா, ஐதராபாத், பெங்களூர்) வென்றது. குஜராத் லயன்சை வீழ்த்தி 4-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் மும்பை இந்தியன்ஸ் உள்ளது.

குஜராத் லயன்ஸ் முதல் 2 ஆட்டங்களில் கொல்கத்தா, ஐதராபாத் அணிகளிடம் தோற்றது. 3-வது போட்டியில் புனேயை எளிதாக வென்றது. மும்பையின் ஆதிக்கத்தை தகர்த்து 2-வது வெற்றியை பெறும் வேட்கையில் குஜராத் உள்ளது.

கடந்த ஆண்டு அந்த அணியுடன் மோதிய 2 ஆட்டத்திலும் வென்று இருந்ததால் குஜராத் லயன்ஸ் நம்பிக்கையுடன் உள்ளது.

201704161005209479_VRP__1376._L_styvpf.g

பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- ஸ்டீவன் சுமித் தலைமையிலான ரைசிங்புனே சூப்பர் ஜெய்ன்ட் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்க போராடும்.

பெங்களூர் அணி தொடக்க ஆட்டத்தில் ஐதராபாத்திடம் தோற்றது. 2-வது ஆட்டத்தில் டெல்லியை வீழ்த்தியது. அதைத் தொடர்ந்து பஞ்சாப், மும்பையிடம் தோற்றது. ஹாட்ரிக் தோல்வியை தவிர்த்து 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் பெங்களூர் அணி உள்ளது.

புனே அணி தொடக்க ஆட்டத்தில் மும்பையை வீழ்த்தியது. அதைத் தொடர்ந்து 3 ஆட்டங்களில் (பஞ்சாப், டெல்லி, குஜராத்) தோற்றது. தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்க புனே அணி கடுமையாக போராட வேண்டும்.

இரு அணிகளும் மோதி இருந்த 2 ஆட்டங்களில் பெங்களூர் அணியே வெற்றி பெற்று இருந்தது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/04/16100517/1080181/IPL-2017-Banglore-vs-Pune-collide-today.vpf

  • தொடங்கியவர்

ஸ்பின் பவுலிங் பலவீனமா? : நிருபர் கேள்விக்கு எரிச்சலான மெக்ஸ்வெல் வெளியேற்றம்

 

 
கிளென் மேக்ஸ்வெல், கம்பீர். | படம்.| ஏ.எஃப்.பி.
கிளென் மேக்ஸ்வெல், கம்பீர். | படம்.| ஏ.எஃப்.பி.
 
 

ஐபிஎல் கிரிக்கெட்டில் அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்து எரிச்சலில் இருக்கும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் கேப்டன் மேக்ஸ்வெலை மேலும் வெறுப்பேற்றும் விதமாக பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்ப கடும் கோபமடைந்து வெளியேறினார் மேக்ஸ்வெல்.

நேற்று டெல்லி டேர் டெவில்ஸ் அணியின் 188 ரன்களை விரட்டும் போது 137 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து தோல்வி தழுவியதையடுத்து மேக்ஸ்வெல் செய்தியாளர்கள் சந்திப்புக்கு வந்தார்.

அப்போது ஸ்பின் பவுலிங்கிற்கு எதிராக மேக்ஸ்வெலின் பலவீனம் குறித்து பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்ப கடுப்பான மேக்ஸ்வெல், “இது அதிர்ச்சியளிக்கும் கேள்வி.

கடந்த 3 போட்டிகளில் நான் லெக் ஸ்பின்னர்களை சிக்சர்கள் விளாசியதை நீங்கள் புரிந்து கொள்ளவில்லையா?” என்று ஆத்திரத்துடன் கூறி ஒரு வசை வார்த்தையுடன் சந்திப்பிலிருந்து வெளியேறினார்.

4 போட்டிகளில் மேக்ஸ்வெல் 44, 43, 25 மற்றும் 0 என்ற ஸ்கோர்களை மேக்ஸ்வெல் எடுத்துள்ளார்.

http://tamil.thehindu.com/sports/ஸ்பின்-பவுலிங்-பலவீனமா-நிருபர்-கேள்விக்கு-எரிச்சலான-மெக்ஸ்வெல்-வெளியேற்றம்/article9642209.ece?homepage=true

  • தொடங்கியவர்

ஐ.பி.எல்.: குஜராத்தை வீழ்த்தி நான்காவது வெற்றியை பதிவு செய்தது மும்பை இந்தியன்ஸ்

வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் குஜராத் லயன்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி நான்காவது வெற்றியை பதிவு செய்தது மும்பை இந்தியன்ஸ்.

 
 
 
 
ஐ.பி.எல்.: குஜராத்தை வீழ்த்தி நான்காவது வெற்றியை பதிவு செய்தது மும்பை இந்தியன்ஸ்
 
மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் - குஜராத் லயன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா பீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்தது. மெக்கல்லம் (66), தினேஷ் கார்த்திக் (48 அவுட் இல்லை) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் சேர்த்தது.

பின்னர் 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணியின் பார்தீப் பட்டேல், பட்லர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஆட்டத்தின் 2-வது பந்தில் பட்டேல் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார்.

அடுத்து பட்லர் உடன் ராணா ஜோடி சேர்ந்தார். இந்த தொடரில் அசத்தி வரும் ராணா இந்த போட்டியிலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 36 பந்தில் 53 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த பொல்லார்டு அதிரடியாக விளையாடி 23 பந்தில் 39 ரன்கள் சேர்த்தார். இதற்கிடையே பட்லர் 26 ரன்னில் வெளியேறினார்.

கேப்டன் ரோகித் சர்மா அவுட்டாகாமல் 29 பந்தில் 40 ரன்கள் சேர்க்க மும்பை இந்தியன்ஸ் 19.3 ஓவரில் 177 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த சீசனில் ஐந்து போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணிக்கு, இது நான்காவது வெற்றியாகும். முதல் போட்டியில் தோல்வியடைந்தபின் தொடர்ச்சியாக நான்கு வெற்றிகளை பெற்றுள்ளது.
 

http://www.maalaimalar.com/News/Sports/2017/04/16200300/1080251/IPL-mumbai-indians-beats-gujarat-lions-by-6-wickets.vpf

  • தொடங்கியவர்

ஐ.பி.எல்: பெங்களூர் அணிக்கு 162 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது புனே வாரியர்ஸ்

 

ஐ.பி.எல். தொடரில் பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் புனே வாரியர்ஸ் அணி 162 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

ஐ.பி.எல்: பெங்களூர் அணிக்கு 162 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது புனே வாரியர்ஸ்
 
பெங்களூர்:
 
பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் புனே வாரியர்ஸ் அணிக்களுக்கு இடையிலான லீக் போட்டி பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி முதலில் பந்து வீச தீர்மானத்தார். 
 
புனே அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரகானே மற்றும் திரிபாதி இருவரும் முதல் விக்கெட்டுக்கு 63 ரன்கள் சேர்த்தனர். ரகானே 30(25), திரிபாதி 31(23) ரன்கள் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 
 
பின்னர் கேப்டன் ஸ்மித் உடன் தோனி ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். நிதானமாக விளையாடிய தோனி 28(25) ரன்களில் நடையை கட்டினார். அவரை தொடர்ந்து ஸ்மித் 27(24) ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். 
 
201704162217041343_Cricket2._L_styvpf.gi
 
தோனி அவுட்டாகும் போது இந்திய அணி 16 ஓவர்களில் 127 ரன்கள் எடுத்திருந்தது. 130 ரன்கள் சேர்ப்பதற்கு புனே அணி 7 விக்கெட்டுகளை இழந்தது. இதனால் 150 ரன்கள் எட்டுமா என்பது கேள்விக்குறியாக இருந்தது. 
 
இருப்பினும் கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாடிய மனோஜ் திவாரி 11 பந்துகளில் 27 ரன்கள் சேர்த்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் புனே அணி 8 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்தது. 
 
பெங்களூர் அணி தரப்பில் ஸ்ரீநாத் அரவிந்த் மற்றும் மில்னே தலா இரண்டு விக்கெட்டுக்களை சாய்த்தனர். 162 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் பெங்களூர் அணி விளையாடி வருகிறது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/04/16221700/1080261/IPL-Pune-set-target-for-Bengaluru-as162.vpf

Rising Pune Supergiant 161/8 (20/20 ov)
RCB 101/4 (15.4/20 ov)
Royal Challengers Bangalore require another 61 runs with 6 wickets and 26 balls remaining
  • தொடங்கியவர்
ஐ.பி.எல்., கிரிக்கெட்: புனே அணி வெற்றி (27 ரன்கள் வித்தியாசம்)

Bild könnte enthalten: 1 Person, machen Sport und im Freien

Bild könnte enthalten: 5 Personen, Sportler und im Freien

Bild könnte enthalten: 1 Person, machen Sport und im Freien

  • தொடங்கியவர்

#IPL10- வெற்றிப் பாதைக்குத் திரும்பிய புனே... கடைசி இடத்தில் பெங்களூர்!

 
 

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் பெங்களூர் அணிக்கும் புனே அணிக்கும் ஐபிஎல் 10-வது சீசினின் 17-வது போட்டி நடைபெற்றது.

இரண்டு அணிகளும் இந்த ஐபிஎல் தொடரில், தலா நான்கு போட்டிகளில் விளையாடி ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. எனவே, இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் தான் தொடர்ந்து ஐபிஎல் தொடரில் நீடிக்க முடியும் என்ற முனைப்போடு இரு அணிகளும் களம் இறங்கின.

Ko_1_400_23204.jpg

பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பவுலிங் செய்ய தீர்மானித்தார். முதலில் பேட்டிங் செய்த புனே அணி, நிர்ணயிக்கப்பட்ட இருபது ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழந்து 161 ரன்கள் எடுத்தது. புனே அணியின் தோனி அதிகபட்சமாக 25 பந்துகளில் 28 ரன்கள் எடுத்தார். 

பின்னர், 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கியது பெங்களூர் அணி. ஃபார்மில் இல்லாத கிறிஸ் கெய்லுக்கு பதிலாக மந்தீப் சிங் கேப்டன் விராட் கோலியுடன்  சேசிஙை தொடங்கினார். இருந்தும் தான் சந்தித்த மூன்றாவது பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார் மந்தீப் சிங். இதையடுத்து, ஒன்-டவுனில் டிவில்லியர்ஸ் இறங்கினார். சர்வதேச அளவில் அனுபவம் பெற்ற கோலியும் டிவில்லியர்ஸும் இணைந்து நிதானமாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ஆயினும் இருவரும் வெகு நேரம் நிலைத்து ஆடாமல், கோலி 28 ரன்களுக்கும் டிவில்லியர்ஸ் 29 ரன்களுக்கும் ஆவுட் ஆகவே பெங்களூர் அணி ரன்கள் எடுக்கத் திணறியது. இதையடுத்து, அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், புனே அணி பெங்களூர் அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. புனே அணி சார்பில் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஷார்துல் தாக்குர் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Ko_2_400_23512.jpg

இந்தப் போட்டியின் முடிவையடுத்து, பெங்களூர் அணி ஐபிஎல் 10-வது சீசனுக்கான தரவிரிசைப் பட்டியலில் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது. புனே அணி மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பியுள்ளது. 
 

நன்றி: IPL

http://www.vikatan.com/news/sports/86654-pune-won-the-match-number-17-of-ipl-10-against-bangalore.html

  • தொடங்கியவர்

பந்தை மைதான கூரைக்கு மேலே பறக்கவிட்டு ரசிகர்களை மகிழ்வித்த தோனி

பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியான சிக்ஸர் மூலம் பந்தை மைதான கூரைக்கே பறக்கவிட்டு மகேந்திர சிங் தோனி தனது ரசிகர்களை மகிழ்வித்தார்.

 
பந்தை மைதான கூரைக்கு மேலே பறக்கவிட்டு ரசிகர்களை மகிழ்வித்த தோனி
 
பெங்களூர்:

ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற இரண்டாவது லீக் ஆட்டத்தில் பெங்களூர் அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் புனே அணி தோற்கடித்தது.

இந்த தொடரில் முந்தைய ஆட்டங்களில் சொதப்பி வந்த மகேந்திர சிங் தோனி, இந்தப் போட்டியில் 28 ரன்கள் சேர்த்தார். இதில் 14-வது ஓவரில் சாகல் பந்துவீச்சில் அபாரமாக சிக்ஸர் ஒன்றை விளாசினார். தோனி விளாசிய அந்த பந்து மைதானத்தின் கூரைக்கு மேலே சிக்கிக் கொண்டது. இந்த சீசனில் விளாசப்பட்ட பெரிய சிக்ஸர் இது என்று தெரிகிறது.

மேலும் தோனி 23 ரன்கள் எடுத்திருந்த போது சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்து விதமான போட்டிகளிலும் சேர்த்து 24 ஆயிரம் ரன்கள் எடுத்து சாதனை புரிந்தார்.
201704170401436097_otbec2la._L_styvpf.gi
இந்தப் போட்டில் பந்துவீச்சிலும் அபாரமாக செயல்பட்டு டிவில்லியர்சின் விக்கெட்டை கைப்பற்றினார். இம்ராம் தாஹிர் வீசிய அற்புதமான பந்தை வெளியே இறங்கி அடிக்க முற்பட்ட டிவில்லியர்சை தாண்டி பந்து பின்னே சென்றுவிட்டது. கண் இமைக்கும் நேரத்தில் தோனி அதனை பிடித்து ஸ்டம்பிங் செய்தார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/04/17040138/1080273/Dhoni-Super-Amazing-Six-Out-of-Stadium.vpf

  • தொடங்கியவர்

தோனியை உற்சாகப்படுத்திய ராயல் சேலஞ்சர்ஸ் ரசிகர்கள்

 

 
பெங்களூரு சேலஞ்சர்ஸுக்கு எதிரான போட்டியில் பந்தை விரட்டும் தோனி | படம்: ஏஎஃப்பி
பெங்களூரு சேலஞ்சர்ஸுக்கு எதிரான போட்டியில் பந்தை விரட்டும் தோனி | படம்: ஏஎஃப்பி
 
 

புனே சூப்பர்ஜெயன்ட் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் இடையே பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் ரசிகர்கள் தொடர்ந்து தோனிக்கு ஆதரவாக குரல் எழுப்பி உற்சாகப்படுத்தினர்.

நடப்பு ஐபிஎல் தொடரில் புனே அணியின் கேப்டன் பொறுப்பை இழந்த தோனி பேட்டிங்கிலும் சொதப்பி வருவதாக அவருக்கு எதிராக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் அதிகரித்து வந்தன.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணியுடன் மோதியது.

முதலில் களம் இறங்கிய புனே அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகள் இழந்து 161 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து அடுத்து களமிறங்கிய பெங்களுரு அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் புனே அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பெங்களூரு ரசிகர்கள் அளித்த உற்சாகமும், தோனியின் இமாலாய சிக்சரும்,

புனே அணி முதலில் பேட்டிங் செய்தபோது நான்காவது வீரராக தோனி களமிறங்கியபோது தோனிக்கு முன் தோனிக்கு பின் என ரசிகர்களின் வரவேற்பு மாறியது. தோனி களமிறங்குவதற்கு முன்னர்வரை "ஆர்.சி.பி..... ஆர்.சி.பி" என்ற உற்சாத்தில் குரல் எழுப்பிக் கொண்டிருந்த பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் ரசிகர்கள் தோனி களத்தில் இறங்கிய முதல் தொடர்ந்து "தோனி... தோனி" என்று குரல் எழுப்பி தோனிக்கு உற்சாகமளித்தனர்.

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி வீரர்களே தாங்கள் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில்தான் ஆடுகிறோமா? என்று குழப்பும்படி ரசிகர்கள் தொடர்ந்து தோனிக்கு ஆதரவாக குரல் எழுப்பினர்.

ரசிகர்களின் தொடர் உற்சாகத்துக்கு தோனி அடித்த இமாலய சிக்சர் சின்னசாமி மைதானத்தின் கூரையை தாண்டி விழுந்தது மைதானத்தில் ஆரவாரக் குரல்கள் அதிகரிக்க காரணமாக அமைந்தன.

தொடர்ந்து ட்விட்டரில் தோனிக்கு ஆதரவாக அவரது ரசிகர்கள் #வீ ஸ்டேண்ட்பைதோனி என்று தங்களது ஆதரவை தொடர்ந்து வெளிபடுத்தி வருகின்றன.

http://tamil.thehindu.com/sports/தோனியை-உற்சாகப்படுத்திய-ராயல்-சேலஞ்சர்ஸ்-ரசிகர்கள்/article9643707.ece?homepage=true

  • தொடங்கியவர்

பரபரப்பான ஆட்டத்தில் மணீஷ் பாண்டே சிக்சரால் டெல்லியை வீழ்த்தியது கொல்கத்தா நைட்ரைடர்ஸ்

 

டெல்லியில் நடைபெற்ற பரபரப்பான போட்டியில் கடைசி ஓவரில் சிக்ஸ் அடித்து கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை வெற்றி பெற வைத்தார் மணீஷ் பாண்டே.

 
பரபரப்பான ஆட்டத்தில் மணீஷ் பாண்டே சிக்சரால் டெல்லியை வீழ்த்தியது கொல்கத்தா நைட்ரைடர்ஸ்
 
ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் - கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய டெல்லி டேர்டெவில்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் சேர்த்தது. தொடக்க வீரர் சாம்சன் 39 ரன்னும், ரிஷாப் பந்த் 38 ரன்னும் சேர்த்தனர்.

பின்னர் 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்களாக காம்பீர், கிராண்ட்ஹோம் ஆகியோர் களம் இறங்கினார்கள். கிராண்ட்ஹோம் 1 ரன்னிலும், காம்பீர் 14 ரன்னிலும், அடுத்து வந்த உத்தப்பா 4 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

இதனால் கொல்கத்தா அணி 21 ரன்கள் எடுப்பதற்குள் மூன்று விக்கெட்டுக்களை இழந்தது. 4-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மணீஷ் பாண்டே - யூசுப் பதான் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருவரும் அரைசதம் அடித்தனர். இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 110 ரன்கள் குவித்தது. யூசுப் பதான் 39 பந்தில் 6 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 59 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 7 ரன்னில் வெளியேறினார்.

கொல்கத்தா அணியின் வெற்றிக்கு கடைசி இரண்டு ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது. கிறிஸ் மோரிஸ் வீசிய 19-வது ஓவரில் கொல்கத்தா அணி 7 ரன்கள் எடுத்தது. இதனால் கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்டது.

மொகமது ஷமி மற்றும் மேத்யூஸ் ஆகியோருக்கு ஓவர் இருக்கும் நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் கடைசி ஓவரை சுழற்பந்து வீச்சாளர் மிஸ்ரா வீசினார். முதல் பந்தை தவற விட்ட கிறிஸ் வோக்ஸ் 2-வது பந்தில் ஸ்டம்பிங் ஆனார். இதனால் கடைசி நான்கு பந்தில் 9 ரன்கள் தேவைப்பட்டது. சுனில் நரைன் களம் இறங்கினார்.

3-வது பந்தில் ஒரு ரன் அடித்தார். கடைசி 3 பந்தில் 8 ரன்கள் தேவைப்பட்டது. 4-வது பந்தை மணீஷ் பாண்டே எதிர்கொண்டார். ஆஃப் ஸ்டம்பிற்கு மிகவும் வெளியே வீசிய பந்தை, அபாரமாக லாங் மிட்ஆன் திசையில் தூக்கி அடித்தார்.

201704172000061673_pandy-s._L_styvpf.gif

பேட் கம்மின்ஸ் பவுண்டரி லைனில் கேட்ச் பிடிக்க தயாராக இருந்தார். ஆனால் பந்து அவரையும் தாண்டி சிக்சருக்கு பறந்தது. அடுத்த பந்தில் இரண்டு ரன்கள் அடிக்க கொல்கத்தா அணி 1 பந்து மீதமுள்ள நிலையில் 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

மணீஷ் பாண்டே 49 பந்தில் 4 பவுண்டரி, 3 சிக்சருடன் 69 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/04/17195959/1080454/Manish-pandey-star-KKR-beats-DD-by-4-wickets.vpf

  • தொடங்கியவர்

பயிற்சியில் ஈடுபட்ட வெயின் பிராவோ: குஜராத் அணிக்காக விரைவில் திரும்புகிறார்?

காயத்தில் இருந்து மீண்டுள்ள ஆல்ரவுண்டர் வெயின் பிராவோ பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஐ.பி.எல். தொடரில் குஜராத் அணியில் விரைவில் இடம்பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 
பயிற்சியில் ஈடுபட்ட வெயின் பிராவோ: குஜராத் அணிக்காக விரைவில் திரும்புகிறார்?
 
ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவின் 10-வது சீசன் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் தொடங்குவதற்கு முன் ஏராளமான வீரர்கள் காயத்தால் அவதிப்பட்டார்கள். சில வீரர்கள் ஓய்வில் இருந்தார்கள். விராட் கோலி, உமேஷ் யாதவ், மொகமது ஷமி, ஜடேஜா போன்ற வீரர்கள் அணிக்கு திரும்பிவிட்டார்கள்.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னணி ஆல்ரவுண்டர் வெயின் பிராவோ. இவர் குஜராத் லயன்ஸ் அணியில் இடம்பிடித்துள்ளார். பேட்டிங், பந்து வீச்சு மற்றும் பீல்டிங் என மூன்று துறையிலும் முத்திரை பதிக்கக்கூடியவர்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் பிக்பாஷ் டி20 லீக் தொடர் நடைபெற்றது. மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணிக்காக விளையாடும்போது பிராவோவின் தொடைப்பகுதியில் காயம் ஏற்பட்டது.

201704171904028475_Bravo-s._L_styvpf.gif


அதன்பிறகு கிரிக்கெட்டில் இடம்பெறாமல் இருந்தார். தற்போது பிராவோ பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். தன்னுடைய முதல் பயிற்சி வீடியோவை டுவிட்டரில் பதிவேற்றம் செய்து ‘‘முதல் பயிற்சி சிறப்பாக அமைந்துள்ளது, விரைவில் கிரிக்கெட் களத்திற்கு திரும்புவதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.

இதனால் பிராவோ குஜாராத் லயன்ஸ் அணியில் விரைவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த தொடரில் புள்ளிகள் பட்டியலில் முதல் இடம் பிடித்த குஜராத் லயன்ஸ் அணி, இந்த சீசனில் 5 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

பிராவோ அணிக்கு திரும்பினால் குஜராத் அணியின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு மேலும் வலிமைபெறும்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/04/17190355/1080450/Dwayne-Bravo-gives-Gujarat-Lions-hope-uploads-video.vpf

  • தொடங்கியவர்

இதேபோல் விளையாடினால் வெற்றிக்கு தகுதியானவர்கள் அல்ல: புனே தோல்வி குறித்து கோலி கருத்து

 

புனே அணிக்கெதிராக விளையாடியதுபோல் விளையாடினால் நாங்கள் வெற்றி பெறுவதற்கு தகுதியான அணி இல்லை என, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.

 
 
 
 
இதேபோல் விளையாடினால் வெற்றிக்கு தகுதியானவர்கள் அல்ல: புனே தோல்வி குறித்து கோலி கருத்து
 
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணிகளுக்கு இடையிலான ஐ.பி.எல். லீக் போட்டி நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் களமிறங்கிய புனே அணி 8 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது.

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் 162 ரன்கள் என்பது கடினமான இலக்கு அல்ல. இதனால் ராயல் சேலஞ்சர்ஸ் அணி வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த அணியால் 5 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 27 ரன்கள் வித்தியாசத்தில் புனே அணி வெற்றி பெற்றது.

பெங்களூரு அணி இதுவரை ஐந்து போட்டிகளில் விளையாடி ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. சொந்த மைதானத்தில் நடைபெற்ற மூன்றில் இரண்டில் தோல்வியை சந்தித்துள்ளது. இன்னும் 9 போட்டிகள் உள்ளன. ஏறக்குறைய அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற்றால்தான் அந்த அணியால் ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற நிலை உள்ளது.

இந்நிலையில் புனேவிற்கு எதிரான தோல்வி குறித்து விராட் கோலி கூறுகையில், இதுபோன்று ஆடினால் பெங்களூரு அணிக்கு வெற்றி பெறுவதற்கான தகுதியில்லை என்று கூறியுள்ளார்.

மேலும் இதுகுறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘புனே அணிக்கெதிராக விளையாடியதுபோல் ஆடினால், நாங்கள் வெற்றிக்கு தகுதியான அணியாக இருக்க முடியாது. மும்பைக்கெதிரான நான்காவது போட்டியில் கடுமையாக போராடினோம். ஆனால், புனே அணிக்கெதிரான போட்டியில் எங்கள் கண்முன்னே, ஆட்டம் எங்களை விட்டு விலகிச்சென்றது. சில விஷயங்களை நாங்கள் ஆராய வேண்டியுள்ளது.

201704171709098662_watson-s._L_styvpf.gi
வாட்சன் போல்டாகிய காட்சி

கடந்த தொடரில் நான்கு போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் நான்கிலும் வெற்றி பெற்றோம். ஆனால், எப்பொழுதும் இதுபோன்று நிகழாது. தொழில்முறை கிரிக்கெட்டர்களாக, அணி உரிமையாளர்களுக்காகவும், அதிக ரசிகர்களுக்கு மத்தியிலும் விளையாடி கொண்டிருக்கும் நிலையில் இதுபோன்று தொடர்ந்து செயல்பட இயலாது. இதுபோன்ற சிக்கலில் இருந்து மீள முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. அதேவேளையில் வீரர்கள் பொறுப்புகளை எடுத்துக்கொள்ள வேண்டும்’’ என்றார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/04/17170903/1080427/Virat-Kohli-If-we-play-like-this-we-do-not-deserve.vpf

  • தொடங்கியவர்

ஐ.பி.எல்: கிங்ஸ் லெவன் பஞ்சாப்புக்கு 160 ரன்கள் வெற்றி இலக்கு

ஐ.பி.எல். 10-வது சீசனின் இன்றைய போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்புக்கு 160 ரன்களை ஐதரபாத் அணி வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

 
ஐ.பி.எல்: கிங்ஸ் லெவன் பஞ்சாப்புக்கு 160 ரன்கள் வெற்றி இலக்கு
 
ஐதராபாத்:

ஐ.பி.எல். சீசன் 10-ன் 19 லீக் ஆட்டம் ஐதராபாத் ராஜுவ் காந்தி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து தொடக்க வீரர்களாக வார்னர், தவான் களமிறங்கினர். இதில் அணியின் ஸ்கோர் 25 -ஆக இருக்கும் போது மோகித் ஷர்மா பந்துவீச்சில் தவான் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து வந்த ஹென்ட்ரிக்ஸ் 9 (16) ரன்னும், யுவராஜ் ரன் ஏதும் இல்லாமலும் வெளியேற ஐதராபாத் அணி தடுமாறியது.

இதையடுத்து வார்னர் - நமன் ஓஜா ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ரன் உயரத் தொடங்கியது. 20 பந்துகளில் 2 பவுண்டரி, 1 சிக்சர் என 34 ரன்கள் எடுத்திருந்த போது கரியப்பா பந்தில் சாஹாவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

201704172200480196_IPL2._L_styvpf.gif

மறுபக்கம் உறுதியாக நின்று போராடிய கேப்டன் வார்னர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 54 பந்துகளில் 7 பவுண்டரி, 2 சிக்சர் என 70 ரன்களை குவித்தார். இறுதியில் ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்களை சேர்த்தது.

பஞ்சாப் அணி சார்பில் மோகித் சர்மா, அக்சர் படேல் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என கிங்ஸ் லெவன் பஞ்சாப் களமிறங்கி விளையாடி வருகிறது. 

http://www.maalaimalar.com/News/Sports/2017/04/17220041/1080462/IPL-SRH-set-160-runs-target-to-KXIP.vpf

Sunrisers Hyderabad 159/6 (20/20 ov)
Kings XI Punjab 125/6 (16/20 ov)
Kings XI Punjab require another 35 runs with 4 wickets and 24 balls remaining
  • தொடங்கியவர்

ஐ.பி.எல்: 5 ரன்கள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை வீழ்த்தியது சன்ரைசர்ஸ் ஐதராபாத்

 

ஐ.பி.எல். சீசன் 10-ன் 19 லீக் ஆட்டம் ஐதராபாத் ராஜுவ் காந்தி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஐதராபாத் வெற்றி பெற்றது.

 
 
 
 
ஐ.பி.எல்: 5 ரன்கள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை வீழ்த்தியது சன்ரைசர்ஸ் ஐதராபாத்
 
ஐதராபாத்:

ஐ.பி.எல். சீசன் 10-ன் 19 லீக் ஆட்டம் ஐதராபாத் ராஜுவ் காந்தி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஐதராபாத் வெற்றி பெற்றது.

முன்னதாக டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்களை எடுத்தது. ஐதராபாத் அணியில் கேப்டன் வார்னர் 54 பந்துகளில் 7 பவுண்டரி, 2 சிக்சர் என 70 ரன்களை குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். நமன் ஓஜா 20 பந்துகளில் 2 பவுண்டரி, 1 சிக்சர் என 34 ரன்கள் எடுத்திருந்த போது கரியப்பா பந்தில் சாஹாவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
201704172358022181_53dn028c._L_styvpf.gi
160 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக அம்லா, மனன் வோஹ்ரா களமிங்கினர். இதில் புவனேஸ்வர் குமார் வீசிய முதல் பந்தில் அம்லா எல்.பி.டபிள்யூ ஆனார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் மேக்ஸ்வெல் 10 (12) ரன்களும், மோர்கன் 13 (17) ரன்களும், டேவிட் மில்லர் 1 (6) ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க பஞ்சாப் அணி தடுமாறியது. பின்னர் வந்த அனைவருமே சொற்ப ரன்களில் வெளியேற, தொடக்க வீரராக களமிங்கிய மனன் வோஹ்ரா மட்டும் அணியின் வெற்றிக்காக போராடிய நிலையில், 18.3 வது ஓவரில் புவனேஷ்வர் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ ஆனார். அவர் 50 பந்துகளில் 9 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 95 ரன்களை வினாசினார். ஐதராபாத் அணியில் புவனேஸ்வர் குமார் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
201704172358022181_oyno7ojj._L_styvpf.gi
இறுதியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 154 ரன்களை எடுத்தது. இதையடுத்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

http://www.maalaimalar.com/News/Sports/2017/04/17235754/1080470/IPL-SRH-won-against-KXIP-by-5-runs.vpf

  • தொடங்கியவர்

வெற்றிப் பாதைக்கு திரும்புவது யார்?- குஜராத் - பெங்களூரு இன்று மோதல்

 

 
 
 
சுரேஷ் ரெய்னா | விராட் கோலி
சுரேஷ் ரெய்னா | விராட் கோலி
 
 

ஐபிஎல் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு ராஜ்கோட்டில் நடைபெறும் ஆட்டத்தில் குஜராத் லயன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

குஜராத் அணி கடந்த சீசனில் அறிமுகமான போதிலும், முதல் தொடரிலேயே 3-வது இடத்தை பிடித்து ஆச்சர்யம் அளித்தது. ஆனால் இந்த சீசனில் கடுமையாக திணறி வருகிறது. அந்த அணி 4 ஆட்டத்தில் 3 தோல்விகளை சந்தித்துள்ளது.

முதல் இரு ஆட்டங்களிலும் தோல்வியை சந்தித்த நிலையில் புனே அணிக்கு எதிராக வெற்றி பெற்றது. ஆனால் அடுத்த ஆட்டத்தில் வலுவான மும்பையிடம் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது.

புள்ளிகள் பட்டியலில் 7-வது இடத்தில் இருக்கும் குஜராத் இன்று சொந்த மைதானத்தில்பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் பெங் களூரு அணியை எதிர்கொள்கிறது. குஜராத் அணி பேட்டிங்கில் வலுவா கவே உள்ளது. பிரண்டன் மெக்கலம், டுவைன் ஸ்மித், ஆரோன் பின்ச், ரெய்னா, தினேஷ் கார்த்திக் ஆகி யோர் அதிரடி வீரர்களாகஉள்ளனர்.

ஆனால் இவர்கள் ஆட்டத்தின் போது ஒட்டுமொத்தமாக திறனை வெளிப்படுத்த தவறுகின்றனர். ஒரு வீரர் சிறப்பாக விளையாடினால் மற்றொருவர் பந்துகளை வீணடிப்பது சற்று பலவீனமாக உள்ளது. கடந்த ஆட்டத்தில் ஸ்மித் சோபிக்க தவறினார்.

ஆனால் அதேவேளையில் மெக்கலம் 64 ரன்கள் விளாசினார். இதேபோல் தினேஷ் கார்த்திக் (26 பந்துகளில் 48 ரன்) அதிரடியாக விளையாடிய நிலையில் ரெய்னா பந்துகளுக்கு நிகராக 28 ரன்கள் சேர்த்தார். பின்ச் தனது கிரிக்கெட் உபகரணங்களை தொலைத்ததால் மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் களமிறங்க முடியாத நிலை ஏற்பட்டது.

இன்றைய ஆட்டத்தில் அவர் களமிறங்கக்கூடும். பேட்டிங்கில் முன்னணி வீரர்கள் அனைவரும் ஒருசேர சிறப்பாக விளையாடும் பட்சத்தில் பெரிய அளவில் ரன்கள் குவிக்கலாம். பந்து வீச்சில் குஜராத் அணி இன்னும் முன்னேற்றம் காணாமலேயே உள்ளது.

முதல் இரு ஆட்டங்களிலும் ஒரு விக்கெட் மட்டுமே அந்த அணி வீழ்த் திய நிலையில் புனே அணிக்கு எதிராக ஆன்ட்ரூ டை ஹாட்ரிக் உட்பட 5 விக்கெட்கள் வீழ்த்தி நம்பிக்கை அளித்தார். கடந்த ஆட்டத் தில் மும்பைக்கு எதிராகவும் அவர் 2 விக்கெட்கள் கைப்பற்றினார்.

ஆனால் மற்ற பந்து வீச்சாளர்கள் அவருக்கு உறுதுணையாக செயல் படாதது பின்னடைவை ஏற்படுத்தி யது. பிரவீண்குமார் ஆரம்ப கட்டத் தில் சிறப்பாக செயல்பட்டாலும் கடைசி கட்டத்தில் ரன்குவிப்பை கட்டுப்படுத்த தவறுகிறார். இன்றைய ஆட்டத்தில் அவர் நீக்கப்படக்கூடும்.

மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் முனாப் படேல், பாசில் தம்பி ஆகியோர் ஓரளவு தாக்கத்தை ஏற்படுத்தினர். இதனால் இவர்கள் மேலும் சிறந்த திறனை வெளிப்படுத்தக்கூடும். சுழற்பந்து வீச்சில் ரவீந்திர ஜடேஜாவை தவிர ஜகதி, கவுசிக் ஆகியோர் அதிக ரன்களை தாரைவார்க்கின்றனர். ஒட்டுமொத்தமாக பந்து வீச்சை சரிசெய்தால் மட்டுமே குஜராத் அணி வெற்றிப்பாதைக்கு திரும்ப முடியும்.

5 ஆட்டத்தில் 4 தோல்விகளை சந்தித்துள்ள பெங்களூரு அணி புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத் தில் உள்ளது. கடந்த சீசனில் பெரிய அளவில் ரன்குவித்த பெங்களூரு அணி இம்முறை சொந்த மைதானத்தில் கூட ரன்சேர்க்க திணறி வருகிறது. கெய்ல் பார்மின்றி தவிப்பது அந்த அணிக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

2 ஆட்டத்தில் நீக்கப்பட்ட அவர் இதுவரை இந்த சீசனில் 60 ரன்களே சேர்த்துள்ளார். காயம் காரணமாக முதல் 3 ஆட்டங்களில் விளையாடாத கோலி, மும்பைக்கு எதிராக தோல்வியடைந்த ஆட்டத்தில் 62 ரன்கள் எடுத்தார். ஆனால் புனே அணிக்கு எதிரான ஆட்டத்தில் 28 ரன்களே சேர்த்தார்.

டி வில்லியர்ஸ், வாட்சன், கேதார் ஜாதவ் போன்ற அதிரடி வீரர்கள் அணியில் இருப்பினும் இவர்கள் தொடர்ச்சியாகவும் அதேவேளையில் ஒட்டுமொத்தமாக சிறந்த திறனை வெளிப்படுத்தாதது பலவீனமாக உள்ளது.

பந்து வீச்சு குஜராத் அணியைவிட சற்று பலமாகவே உள்ளது. டைமல் மில்ஸ், பில்லி ஸ்டேன்லேக், யுவேந்திரா சாஹல், நாத் அர்விந்த், சாமுவேல் பத்ரி ஆகியோர் பந்து வீச்சில் பலம் சேர்ப்பவர்களாக திகழ்கின்றனர்.

அணிகள் விவரம்

குஜராத் லயன்ஸ்:

சுரேஷ் ரெய்னா (கேப்டன்), பிரண்டன் மெக்கலம், டுவைன் ஸ்மித், ஆகாஷ்தீப் நாத், சுபர் அகர்வால், பாசில் தம்பி, டுவைன் பிராவோ, சிராக் சூரி, ஜேம்ஸ் பாக்னர், ஆரோன் பின்ச், மன்பிரித் கோனி, இஷான் கிஷன், ரவீந்திர ஜடேஜா, ஷதாப் ஜகதி, தினேஷ் கார்த்திக், ஷிவில் கவுசிக், தவால் குல்கர்னி, பிரவீன் குமார், முனாப் படேல், பிரதாம் சிங், ஜேசன் ராய், பிரதீப் சங்வான், ஜெயதேவ் ஷா, ஷேல்லே சவுர்யா, நது சிங், தேஜாஸ் பரோகா, ஆன்ட்ரூ டை.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:

விராட் கோலி (கேப்டன்), டிவில்லியர்ஸ், ஷான் வாட்சன், கிறிஸ் கெய்ல், நாத் அர்விந்த், அவேஷ் கான், சாமுவேல் பத்ரி, ஸ்டூவர்ட் பின்னி, யுவேந்திரா சாஹல், அனிகெட் சவுத்ரி, பிரவீன் துபே, டிரெவிஸ் ஹெட், இக்பால் அப்துல்லா, கேதார் ஜாதவ், சர்ப்ராஸ் கான், மன்தீப் சிங், டைமல் மில்ஸ், ஆடம் மில்னே, பவன் நெகி, ஹர்ஷால் படேல், சச்சின் பேபி, தப்ராசி ஷம்சி, பில்லி ஸ்டான்லேக்.

இடம்: ராஜ்கோட்

நேரம்: இரவு 8

நேரடி ஒளிபரப்பு: சோனி சிக்ஸ்

http://tamil.thehindu.com/sports/வெற்றிப்-பாதைக்கு-திரும்புவது-யார்-குஜராத்-பெங்களூரு-இன்று-மோதல்/article9645314.ece?homepage=true&relartwiz=true

  • தொடங்கியவர்

கம்பீர் 'டாப்', விராட் கோலி 'பரிதாபம்' - பிளே ஆஃப் தகுதி பெறப்போவது யார்?

 
 

எந்த அணி ஜெயிக்கும், எந்த அணி தோற்கும் என அறுதியிட்டு சொல்ல முடியாத அளவுக்கு பரபரப்பாக நடந்து வருகிறது ஐபிஎல் பத்தாவது சீசன். ஒவ்வொரு அணியும் வெற்றிக்காக போராடுகின்றன. இரண்டு போட்டிகளில் ஜெயித்தால், அடுத்த இரண்டு போட்டியில் தோற்கின்றன. உள்ளூரில் வென்றால் வெளியூரில் தடுமாறுகின்றனர். இதனால் எந்த அணி பிளே ஆஃப் செல்லும் என்பதையே கணிக்க முடியவில்லை. தினம் தினம் ரசிகர்களுக்கு தீனி போடும் ஐபிஎல்லில் ஒவ்வொரு அணிகளும்  எப்படி விளையாடி வருகின்றன என்பதை பற்றி விரிவாக பார்ப்போமா? 

குஜராத் மற்றும் டெல்லியைத் தவிர அனைத்து அணிகளும் தலா 5 போட்டிகள் ஆடி முடித்து விட்டன. புள்ளிப்பட்டியலில் கம்பீர் தலைமையிலான கொல்கத்தா அணி கெத்தாக முதல் இடத்தில் இருக்கிறது. அடுத்த இடத்தில் மும்பை உள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் இதுவரை ஒரே ஒரு போட்டியில் மட்டுமே தோற்றுள்ளன. இந்த இரண்டு அணிகளும் இன்னும் 9 போட்டிகளில் ஆட வேண்டியதிருக்கிறது. ஏற்கனவே நான்கு வெற்றிகளை பெற்றுவிட்டதால், இன்னும் ஐந்து போட்டியில் வென்றாலே ஃபிளே ஆஃப்க்கு தகுதி பெற்று விட முடியும் என்ற நிலையில் உள்ளன . 

கம்பீர் மற்றும் கோலி

மூன்றாவது இடத்தில் ஹைதராபாத் இருக்கிறது. இந்த அணி இதுவரை நடந்த ஐந்து போட்டிகளில் மூன்றில் வென்று ஆறு புள்ளிகளை பெற்றுள்ளது. உள்ளூரில் மட்டுமே இதுவரை ஹைதராபாத் ஜெயித்திருக்கிறது. மும்பை, கொல்கத்தா ஆகிய அணிகளுடன் விளையாடுவதற்கு அந்தந்த அணிகளின் சொந்த ஊருக்குச் சென்று தோல்வியுடனேயே திரும்பி வந்திருக்கிறது. நேற்றைய தினம்  நடந்த பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் மனன் வோஹ்ராவின் மரண விளாசலில் தோல்வியை நோக்கி பயணித்தபோது, புவனேஸ்வர் குமார் புண்ணியத்தால் தப்பியது. ஹைதராபாத் அணிக்கு இன்னமும் நான்கு போட்டிகள் மட்டுமே சொந்த ஊரில். மீதி 5 போட்டிகள் அயல்மண்ணில் ஆட வேண்டும். நடுவரிசை பலமாக இல்லாததால் தடுமாறுகிறது சன் ரைஸர்ஸ். ஹென்றிக்ஸ், யுவராஜ், தீபக் ஹூடா போன்றோர் இன்னமும் நன்றாக விளையாட வேண்டியது அவசியம். இல்லையேல் பிளே ஆஃப் நூலிழையில் மிஸ் ஆகலாம். 

டெல்லி அணி, கணிக்கவே முடியாத வகையில் விளையாடி வருகிறது. இதுவரை ஆடிய நான்கு போட்டிகளில் இரண்டில் வெற்றி, இரண்டில் தோல்வி அடைந்திருக்கிறது. டெல்லி அணியில் ஒரே ஒரு ஆறுதல் என்னவெனில் பல வீரர்கள் ஃபார்மில் இருக்கிறார்கள். பில்லிங்ஸ், சஞ்சு சாம்சன், ஷ்ரேயஸ் அய்யர், ரிஷப் பன்ட், கிறிஸ் மோரிஸ், கோரே ஆண்டர்சன், ஜாகீர் கான் ஆகியோர் பக்கா பார்மில் இருக்கிறார்கள். கருண் நாயர் மட்டுமே கவலையளிக்கும் விதமாக ஆடி வருகிறார். அணிச் சேர்க்கையில் தான் டெல்லி தடுமாறி வருகிறது. இன்னும் கொஞ்சம் கவனமும் ஆடினால் டெல்லி அணி பிளே ஆஃப்க்கு தகுதி பெற முடியும். 

கிங்ஸ் லெவன் பஞ்சாப், முதலிரண்டு போட்டிகளில் அதிரடியாக வென்றது. ஆனால் அதன் பின்னர் ஹாட்ரிக் தோல்வி. பஞ்சாப் அணி முழுக்க முழுக்க இந்திய பவுலர்களையே நம்பி இருக்கிறது. ஓரளவு நம்பிக்கையளிக்கும் வகையில் அவர்களும் பந்து வீசுகிறார்கள். நான்கு அயல்நாட்டு பிளேயர்களை தேர்ந்தெடுப்பதில் தான் சொதப்புகிறது பஞ்சாப். மில்லர் நீண்ட காலமாக ஐபிஎல்லில் சொதப்பல் ஆட்டம் ஆடி வருகிறார். அவரது ஸ்ட்ரைக் ரேட், சராசரி எல்லாமே கடந்த ஆண்டில் இருந்து மிகவும் சுமார் தான். ஆம்லா நல்ல டச்சில் இருக்கிறார். மேக்ஸ்வெல் ஓரளவு நல்ல ஃபார்மில் இருக்கிறார். மோர்கன், மில்லர், குப்தில், ஸ்டோனிஸ், மேட் ஹென்றி, ஷான் மார்ஷ் ஆகியோரில் எந்த இருவரை தேர்வு செய்வது என்பதில் பஞ்சாபி  அணி இன்னமும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். அவசரம். 

மிகவும் சுமாராகவே ஆடி வருகிறது புனே அணி. பந்து வீச்சு படு மோசம். கடைசி போட்டியைத் தவிர தோனி பெரிய அளவில் சோபிக்க வில்லை. ஸ்மித் அதிரடி ஆட்டம் ஆட திணறுகிறார். ரஹானே இயல்பான ஆட்டத்தில் இருந்து அதிரடி ஆட்டம் ஆட முயற்சிப்பதால் அவரது சீரான பெர்ஃபார்மென்ஸ் பாதிக்கப்பட்டிருக்கிறது. பென் ஸ்டோக்ஸ் அரிதாகவே நல்ல பந்துகளை வீசுகிறார், சிறந்த சிக்ஸர்களை விளாசுகிறார். இம்ரான் தாஹீர் மட்டுமே பவுலிங்கில் தனியாக கம்பு சுத்திக்கொண்டிருக்கிறார். மற்ற பவுலர்கள் ஊஹூம்!   இந்த நிலை தொடர்ந்தால் பிளே ஆஃப் பற்றியெல்லாம் எண்ணிப் பார்க்க முடியாது, வேண்டுமானால் கடைசி இடத்துக்கு வருவதை  தவிர்க்க போராடிப் பார்க்கலாம். உத்திகளை மாற்றி, அணிச் சேர்க்கையை உறுதிப்படுத்தி, மிரட்டல் ஆட்டம் ஆடினால் மட்டுமே புனேவுக்கு  பிளே ஆஃப் சாத்தியம்.

குஜராத் அணி சமீபத்தில் பார்முக்கு திரும்ப ஆரம்பித்திருக்கிறது. ஆண்ட்ரூ டை மற்றும் ஜடேஜா வரவுக்கு பின்னர் நிமிர்ந்திருக்கிறது. பேட்டிங்கில் எந்த குறையும் இல்லாமல் ஆடுகிறார்கள், பவுலிங் தான் சற்றே கவலைக்கிடமாக உள்ளது. இந்திய இளம் வீரர்கள் கூடுதல் உழைப்பைத் தந்து ஆடினால் மட்டுமே குஜராத் பிளே ஆஃப் செல்ல முடியும். 

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் இப்படி மோசமாக ஆடும் என கனவிலும் யாரும் நினைத்துப்பார்த்திருக்க மாட்டார்கள். கடந்த சீசன்களை போல அல்லாமல், இந்த முறை பெங்களூரு பிட்ச் மாறியிருக்கிறது. பிட்ச் ஸ்லோ என்பதால் ரன்கள் எடுக்க பேட்ஸ்மேன்கள் திணறுகின்றனர். இதனால் பெங்களூரு பேட்ஸ்மேன்களால் அதிக ரன்கள் குவிக்க முடிவதில்லை. பெங்களூரு அணியின் பவுலிங் முன்பை விட இப்போது பரவாயில்லை என்றாலும் கூட, பவுலிங்குக்கு சாதகமான பிட்சில் ஆடி வருவதால் நன்றாக வீசுகிறார்கள் எனச் சொல்ல முடியாது. கோலி, டிவில்லியர்ஸ் தவிர எல்லாரும் சொதப்புகிறார்கள். கெயில் தடவல் ஆட்டம் ஆடுகிறார். அவர் அதிரடிக்கு திரும்ப வேண்டும். வாட்சன் அணிக்கு பாரமாக அமைந்து வருகிறார். டிராவிஸ் ஹெட்டும் சுமாராகவே ஆடுகிறார். அயல் நாட்டு பேட்ஸ்மேன்கள் உடனடியாக பார்முக்கு திரும்ப வேண்டும். அதே சமயம் உள்ளூர் இளம் வீரர்கள் அணிக்கு பக்கபலமாக ஆட வேண்டும். மன்தீப் சிங்,  கேதர் ஜாதவ் ஆகியோர் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்த வேண்டியது கட்டாயம். கடந்த சீசனிலும் இதே போல மோசமான சூழ்நிலையில் தான் இருந்தது பெங்களூரு. முதல் ஏழு போட்டிகளில் ஐந்தில் தோல்வி. இந்த சீசனில் முதல் ஐந்து போட்டிகளில் நான்கில் தோல்வி. இனி வரும் போட்டிகள் ஒவ்வொன்றையும் நாக்- அவுட் போட்டியாக கருதி ஆடி ஜெயிக்க வேண்டும். பெங்களூரு அதைச் செய்யக் கூடிய அணி தான். எனவே மீண்டுவருமா என பொறுத்திருந்து பார்ப்போம். 

 

17.04.17 வரை நடந்த போட்டிகளின் அடிப்படையில், பிளே ஆஃப் செல்ல ஒவ்வொரு அணிக்கும் எவ்வளவு வாய்ப்புகள் இருக்கின்றன?

பிளே ஆஃப் வாய்ப்பு

 

                                                       

http://www.vikatan.com/news/sports/86796-which-teams-will-qualify-for-the-playoff-in-this-ipl-season.html

  • தொடங்கியவர்

ஐ.பி.எல். தொடரில் அதிக அரைசதம்: காம்பீர் சாதனையை முறியடித்தார் டேவிட் வார்னர்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 34 அரைசதங்கள் மூலம் அதிக அரைசதம் அடித்த வீரர் என்ற பெருமையை காம்பீரிடம் இருந்து தட்டிப்பறித்துள்ளார் டேவிட் வார்னர்.

 
ஐ.பி.எல். தொடரில் அதிக அரைசதம்: காம்பீர் சாதனையை முறியடித்தார் டேவிட் வார்னர்
 
ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 2008-ம் இந்திய கிரிக்கெட் வாரியத்தால் தொடங்கப்பட்டது. தற்போது 10-வது சீசன் நடைபெற்று வருகிறது. நேற்று ஐதராபாத்தில் நடைபெற்ற போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின.

முதலில் விளையாடிய ஐதராபாத் அணி 20 ஒவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் சேர்த்தது. பின்னர் 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி களம் இறங்கியது. பஞ்சாப் அணி 154 ரன்கள் எடுத்து 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்த போட்டியில் வார்னர் 54 பந்தில் 7 பவுண்டரி, 2 சிக்சருடன் 70 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இந்த அரைசதம் மூலம் வார்னர் ஐ.பி.எல். தொடரில் 34 அரைசதங்கள் அடித்துள்ளார். இதற்கு முன்னர் காம்பீர் 33 அரைசதங்கள் அடித்து ஐ.பி.எல். தொடரில் அதிக அரைசதங்கள் அடித்த வீரர்கள் என்ற பெருமையை பெற்றிருந்தார்.

நேற்றைய போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம் வார்னர் முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.
 

http://www.maalaimalar.com/News/Sports/2017/04/18163419/1080575/David-Warner-hits-record-34th-fifty-in-Sunrisers-Hyderabad.vpf

  • தொடங்கியவர்

ஐ.பி.எல்.லில் 100 விக்கெட் வீழ்த்திய புவனேஷ்வர் குமார்

 

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட் எடுத்ததன் மூலம் புவனேஷ்வர் குமார் ஐ.பி.எல்.லில் 100-வது விக்கெட்டை வீழ்த்தினார்.

 
 
ஐ.பி.எல்.லில் 100 விக்கெட் வீழ்த்திய புவனேஷ்வர் குமார்
 
பஞ்சாப் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் ஐதராபாத் வீரர் புவனேஷ்வர் குமார் 19 ரன் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார். ஐ.பி.எல். போட்டியில் அவரது சிறந்த பந்துவீச்சு இதுவாகும்.

மேலும் 5 விக்கெட் எடுத்ததன் மூலம் புவனேஷ்வர் குமார் ஐ.பி.எல்.லில் 100-வது விக்கெட்டை தொட்டார். 81 ஆட்டத்தில் 297.5 ஓவர்கள் வீசி 2078 ரன்கள் கொடுத்து 100 விக்கெட் வீழ்த்தினார்.

100 விக்கெட்டை எடுத்த 9-வது வீரர் புவனேஷ்வர் குமார் ஆவார். மலிங்கா (147 விக்கெட்), அமித் மிஸ்ரா (129), பிராவோ (122), பியூஸ் சாவ்லா (122), ஹர்பஜன் சிங் (122), ஆசிஷ் நெக்ரா (103), வினய்குமார் (101), அஸ்வின் (100) ஆகியோருக்கு அடுத்து நிலையில் புவனேஷ்வர்குமார் உள்ளார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/04/18124037/1080522/Bhuvneshwar-Kumar-100-wicket-take-in-IPL.vpf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.