Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மாறுகின்ற தளங்களும் மாறாத இலக்கும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா வளவளன்னு பேசுவதுதான் ஈழத்தமிழர்களுக்கு கைவந்த களை. இரண்டே வரியில் புரியும்படி எழுந்துங்கள்

அய்யா உமக்கு யாரிடமோ உள்ள கோபத்தால் மொத்தமாக ஈழதமிழர் என்று இழுக்க வேண்டாம் நீர் ஒரு ஈழத்தமிழர் தான் என்று உமது எழுத்துகளிலேயே புரிகிறது ஆனாலும் நீர் இங்கு செய்கிற வேலையை தொர்ந்து செய்யும் முதலில் தமிழை பிழையற எழுத பழகி விட்டு பின்னர் ஈழ தமிழர் இந்திய தமிழர் பற்றி கதைக்கலாமே நன்றி

--------------------

-----------------------

மேலே இரண்டு வரி எழுதியுள்ளேன் இப்ப புரிந்திருக்குமே புரியா விட்டால் உங்களிற்கு தமிழ் படிப்பித்த வாத்தியாரிடம் போய் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் அன்பரே

  • Replies 54
  • Views 10.4k
  • Created
  • Last Reply

சும்மா வளவளன்னு பேசுவதுதான் ஈழத்தமிழர்களுக்கு கைவந்த களை. இரண்டே வரியில் புரியும்படி எழுந்துங்கள்

சரி... இதோ நான் எழுதுகிறேன் புரிகிறதா பார்ப்போம்!

1) தூங்குகிறவனை எழுப்பலாம், தூங்குவது போல் நடிப்பவனை எழுப்பவே முடியாது.

2) தமிழன் என்பதால் பெருமை அடைபவனாலேயே தமிழனின் உணர்வுகளை புரிந்துகொள்ள முடியும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சும்மா வளவளன்னு பேசுவதுதான் ஈழத்தமிழர்களுக்கு கைவந்த களை. இரண்டே வரியில் புரியும்படி எழுந்துங்கள்

சார், இது ஒரு அடிமைப்பட்டுள்ள இனம் விடுதலை அடைவதைப் பற்றி எழுதி இருக்கிறார்கள். இதை இரண்டு வரி என்ன ஓரே நிமிடத்தில் வாசித்து தெளிவாகப்புரிந்து கொண்ட இந்திய நண்பர்கள் எனக்கு இருக்கிறார்காள்.

அத்த வுடுங்க சார். என்னா நம்ம தலைவரு படம் இந்த பொங்கலுக்கும் ரிலீசாக மாட்டாது போலருக்குங்களே? போங்க சார் காத்திருந்து காத்திருந்து எனக்கு கவலையில அழுகையே வரும் போல இருக்கு. நான் முடிவு எடுத்திட்டேன் சார், இந்த தீபாவளிக்கும் வராவிட்டால் நான் ஜெமினி தியேட்டர் வாசலில் தீக்குளிக்கப் போகிறேன். யாருக்கும் சொல்லிடாதீங்க சார். தலைவருக்குத்தெரிந்தால் ரொம்ப feel பண்ணுவார். ஆனாலும் சாகிறதுக்கு முன்னம் எனக்கு சி்வாஜி பாத்துரனும் போலருக்கு சார். ரொம்ம்ப நல்லாப் பண்ணிருக்காங்களாம். சங்கர், ரகுமான், தலவர் காம்பினேஷனில இதுக்கு முன்னதா எப்பவுமே பாண்ணினதில்ல சார். இது பழைய ரெக்கார்டு எல்லாத்தையுமே முந்திடும்னு நினைக்கிறேன். இந்திய அளவிலை புது ரெக்கார்டு பண்ணலாம். பண்ணணும்!

  • கருத்துக்கள உறவுகள்

:P :P

[size="3"]மாறுகின்ற தளங்களும் மாறாத இலக்கும்[/size]

:P :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கட்டுரை நன்றாக உள்ளது. ஆனாலும், "சாதாரண மக்களுக்கு இருக்க கூடிய இந்த சந்தேகங்கள் அல்லது கேள்விகள் அடிப்படையிலேயே தவறானவை" என்ற உங்கள் முக்கிய கருத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. புலம் பெயர்ந்த மக்கள் இந்தப் போராட்டத்தை நன்றாகப் புரிந்து உள்ளார்கள். அதனால் தான் அவர்கள் இன்றும், பல உலக நாடுகள் (தாங்கள் வசிக்கும்) புலிகளைத் தடை செய்த பின்பும், இந்தப் போராட்டத்தை நேசித்து, போராளிகட்குப் பின்னால் உள்ளார்கள். அண்மையில் கிழக்கில் ஏற்பட்டவை இழப்புக்க்களே. இதில் எத்தனையோ மக்கள் பலியாகி விட்டார்கள். இப்படிப் பலியாகியவர்களின் தாய் தந்தைக்கோ, கணவனுக்கோ, மனைவிக்கோ, பிள்ளைகட்கோ அல்லது உறவினர்கட்கோ, உங்களது சந்தேகங்கள் தவறானவை என யாரும் கூற முடியாது. அதே போலத்தான் மற்றைய புலம் பெயர்ந்த மக்களும். இந்த மக்களைப் பொறுத்த வரை, புலிகளின் போக்கும் அவர்களின் அமைதியும் பல கேள்விகளை உருவாக்குவது தவிர்க்க முடியாதது.

ஒரு விடயம் உண்மை, ஒரு போராட்டத்தில் வெற்றி, தோல்விகள் வருவது இயல்பு. கள நிலமைகள் மாறும் போது, களக் கட்டுப் பாடும் மாறு படலாம். அந்த வகையில் கிழக்கில் தற்போது உள்ளது தமிழர்கட்கு சாதகம் அல்ல. இந்த நிலை மாறு பட்டால் அல்லது வேறு சம்பவங்கள் நடந்து கள நிலைமகள் மாறினாலே தவிர, மக்கள் மத்தியில் இந்தக் குழப்பங்கள், கேள்விகள் இருந்து கொண்டு தான் இருக்கும். அதை நான் பிழை என ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை என்பது எனது பணிவான கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் உங்களுக்கு அரீவிக்கவில்லை தாம் 23/2/07 விலகப்பொகிறோம் என்றோ தாக்கபோகிறோம் என்றோ அவ்வாறு நடக்கா விட்டால் இனி சனம் வசை பாட தொடங்கீடும் தயவு செய்து காத்திருபோமே அதுவரையும் எம் கடமையை செய்து கொண்டு!!!

KUGATHASAN

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சும்மா வளவளன்னு பேசுவதுதான் ஈழத்தமிழர்களுக்கு கைவந்த களை. இரண்டே வரியில் புரியும்படி எழுந்துங்கள்

இந்தியனாக இருப்பதில் மகிழ்கிறேன்

ஆம் நீங்கள் சொல்வதை வரவேற்றுக்கொள்கிறேன்.ஆனால் உங்களிடம் ஒரு வேண்டுகோள்.உதவி செய்யாவிட்டாலும் பராவாயில்லை உபத்திரவம் செய்யாமலிருப்பீர்களா?
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கட்டுரை நன்றாக உள்ளது. ஆனாலும், "சாதாரண மக்களுக்கு இருக்க கூடிய இந்த சந்தேகங்கள் அல்லது கேள்விகள் அடிப்படையிலேயே தவறானவை" என்ற உங்கள் முக்கிய கருத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. புலம் பெயர்ந்த மக்கள் இந்தப் போராட்டத்தை நன்றாகப் புரிந்து உள்ளார்கள். அதனால் தான் அவர்கள் இன்றும், பல உலக நாடுகள் (தாங்கள் வசிக்கும்) புலிகளைத் தடை செய்த பின்பும், இந்தப் போராட்டத்தை நேசித்து, போராளிகட்குப் பின்னால் உள்ளார்கள். அண்மையில் கிழக்கில் ஏற்பட்டவை இழப்புக்க்களே. இதில் எத்தனையோ மக்கள் பலியாகி விட்டார்கள். இப்படிப் பலியாகியவர்களின் தாய் தந்தைக்கோ, கணவனுக்கோ, மனைவிக்கோ, பிள்ளைகட்கோ அல்லது உறவினர்கட்கோ, உங்களது சந்தேகங்கள் தவறானவை என யாரும் கூற முடியாது. அதே போலத்தான் மற்றைய புலம் பெயர்ந்த மக்களும். இந்த மக்களைப் பொறுத்த வரை, புலிகளின் போக்கும் அவர்களின் அமைதியும் பல கேள்விகளை உருவாக்குவது தவிர்க்க முடியாதது.

ஒரு விடயம் உண்மை, ஒரு போராட்டத்தில் வெற்றி, தோல்விகள் வருவது இயல்பு. கள நிலமைகள் மாறும் போது, களக் கட்டுப் பாடும் மாறு படலாம். அந்த வகையில் கிழக்கில் தற்போது உள்ளது தமிழர்கட்கு சாதகம் அல்ல. இந்த நிலை மாறு பட்டால் அல்லது வேறு சம்பவங்கள் நடந்து கள நிலைமகள் மாறினாலே தவிர, மக்கள் மத்தியில் இந்தக் குழப்பங்கள், கேள்விகள் இருந்து கொண்டு தான் இருக்கும். அதை நான் பிழை என ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை என்பது எனது பணிவான கருத்து.

உங்கள் கேள்விகளிற்கு பதில்களை ஊடகங்களில் எதிர்பார்க்காதீர்கள் (அதாவது popcorn சாப்பிட்டுக்கொண்டே உங்கள் கேள்விகளிற்குப் பதிலும் கிடைக்கவேண்டும் என்று நீங்கள் எதிர் பார்க்கிறீர்கள், ஏனென்றால் நீங்கள் தான் "உதவி" செய்தவராயிற்றே). உங்களிற்கு மிகவும் அவசரமாக அறியத்தான் வேண்டுமென்றால் ஒரு நடை போய்வாருங்கள், வன்னிக்கான பாதை இன்னும் திறந்து தான் உள்ளது.

எங்களிற்கும் சொல்லி அனுப்புங்கோ!

"சாதாரண மக்களுக்கு இருக்க கூடிய இந்த சந்தேகங்கள் அல்லது கேள்விகள் அடிப்படையிலேயே தவறானவை" என்ற உங்கள் முக்கிய கருத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

புலம்பெயர்ந்த மக்கள் போராட்டத்தின் பங்காளிகளாக இருப்பார்களேயானால் அவர்களுக்கு இப்படிச்சந்தேகப்படவோ அல்லது கேள்வி கேட்கவோ நேரமிருக்காது. அவர்கள் தங்களின் பங்களிப்பில் பிசி யாக இருப்ப்பார்கள்.

விடுதலை என்பது கலியாணவீட்டில் வீடியோப்படம் எடுப்பிப்பது போல ஆக்களைக் கொன்றாக் எடுத்து, காசு கொடுத்து வாங்குவது அல்ல. நாமனைவரும் சேர்ந்து போராடிப்பெறுவது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் கேள்விகளிற்கு பதில்களை ஊடகங்களில் எதிர்பார்க்காதீர்கள் (அதாவது popcorn சாப்பிட்டுக்கொண்டே உங்கள் கேள்விகளிற்குப் பதிலும் கிடைக்கவேண்டும் என்று நீங்கள் எதிர் பார்க்கிறீர்கள், ஏனென்றால் நீங்கள் தான் "உதவி" செய்தவராயிற்றே). உங்களிற்கு மிகவும் அவசரமாக அறியத்தான் வேண்டுமென்றால் ஒரு நடை போய்வாருங்கள், வன்னிக்கான பாதை இன்னும் திறந்து தான் உள்ளது.

ஏன் ஊடகங்களில் எதிர் பார்க்கக் கூடாது? அப்படி எதிர் பார்ப்பதில் என்ன தவறு? நிலைமைகளை அறிவதற்கு வன்னிக்குத் தான் போக வேண்டுமென யாரும் நினைத்தால், அது வெறும் முட்டாள்த் தனமேயன்றி வேறெதுவுமில்லை!

எங்களிற்கும் சொல்லி அனுப்புங்கோ!

புலம்பெயர்ந்த மக்கள் போராட்டத்தின் பங்காளிகளாக இருப்பார்களேயானால் அவர்களுக்கு இப்படிச்சந்தேகப்படவோ அல்லது கேள்வி கேட்கவோ நேரமிருக்காது. அவர்கள் தங்களின் பங்களிப்பில் பிசி யாக இருப்ப்பார்கள்.

அப்படியானால், 'பங்காளிகளாக' இருப்பவர்கள் கேள்வி கேட்க முடியாது/கூடாது? நல்ல சிந்தனை!

"குறுகிய பார்வை உள்ளவர்களும், முரட்டுச் சிந்தனையாளர்களும் என்கேயும் இருக்கத் தான் செய்வார்கள்" - எங்கோ வாசித்தது நினைவில் உள்ளது!

விடுதலை என்பது கலியாணவீட்டில் வீடியோப்படம் எடுப்பிப்பது போல ஆக்களைக் கொன்றாக் எடுத்து, காசு கொடுத்து வாங்குவது அல்ல. நாமனைவரும் சேர்ந்து போராடிப்பெறுவது.

அப்படியா? அருமையான கண்டு பிடிப்பு! ஓகே சார், நான் எனது அகராதியில் குறித்துக் கொள்ளுகிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் ஊடகங்களில் எதிர் பார்க்கக் கூடாது? அப்படி எதிர் பார்ப்பதில் என்ன தவறு? நிலைமைகளை அறிவதற்கு வன்னிக்குத் தான் போக வேண்டுமென யாரும் நினைத்தால், அது வெறும் முட்டாள்த் தனமேயன்றி வேறெதுவுமில்லை!

மன்னிக்கவேண்டும். எனது பதிலை தவறாகப்புரிந்துள்ளீர்கள். நான் உங்களிற்கு மிகவும் அவசரமாக அறியத்தான் வேண்டுமென்றால் ஒரு நடை போய்வாருங்கள என்றுதான் சொன்னேன். மற்றபடி ஊடகங்களில் கட்டாயம் கிடைக்கும். என்ன கொஞ்ச நாள் எடுக்கும். அதனால், இப்போதக்கு வாங்கின popcorn எல்லவற்றையும் திருப்பிக்கொடுத்து full refund பெற்றுக்கொள்ளுங்கள்.

சாருமதி அக்கா நீங்கள் புலம்பெயர்ந்த ஊடகங்களில் என்னத்தை எதிர்பார்க்கிறீர்கள்? தாயகத்தில் நடக்கும் மனித அவலங்கள் பற்றியா அல்லது விறுவிறுப்பான இராணுவ சின்னத்திரை தொடர் வருணனைகளா? புலம்பெயர்ந்த தமிழ் ஊடகங்கள் எதுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதாக உங்களுக்கு தெரிகிறது?

தாயகத்தில் நடக்கும் மனித அவலங்கள் பற்றி எந்தளவிற்கு எமது புலம்பெயர்ந்த ஊடகங்கள் அக்கறையோடு தமது தொடர்புகளை பயன்படுத்தி செய்தியை வெளிக் கொண்டு வருகிறார்கள்?

பொருளாதார தடையால் யாழ்குடாவில் பொருட்களின் விலை எந்தளவிற்கு ஏறிவிட்டது என்ற ஒப்பீடு அட்டவணை கூட பசியால் ஒரு முதியவர் இறக்கும் அளவிற்கு அவலமாக மாறிய பின்னர் தான் வந்தது. அந்தளவிற்கு அக்கறை புலம்பெயர்ந்தவர்களிற்கு. தாயகத்திலுள்ளவர்கள் எதிர்கொள்ளும் மனித அவலங்கள் பற்றி.

தமிழ்த் தேசியத்திற்கு எதிராக எழுதுவதாக (நான் உட்பட) எல்லோரும் திட்டும் டி பி எஸ் ஜெயராஜ் எழுதும் வரை கடத்தி விடுவிக்கப்படாது மிகுதியாக இருந்த 5 தமிழர் புனர்வாழ்வுக் கழக உறுப்பினர்களிற்கு என்ன நடந்தது என்று தெரிய வந்ததா? எமது அக்கறையுள்ள புலம் பெயர்ந்த ஊடகர்கள் ஆய்வாளர்களால் தமது தொடர்புகளை பயன் படுத்தி இது போன்ற மனித அவலங்களை அறிந்து நமது கவனத்திற்கு கொண்டுவர முற்படுகிறார்களா?

எதாவது இராணுவ நகர்வுகள் தாக்குதல்கள் என்றால் களமுனைச் செய்தியாளர் தாயகத்து செய்தியாளர்கள் என்று எத்தனையை விதம் விதமாக அவிச்சுத்தள்ளுகிறார்கள் போட்டி போட்டுக் கொண்டு. காலித் தாகுதலில் சிங்களத்திற்கு எந்தளவு இழப்பு என்பதை கற்பனையில் ஆய்வு செய்வதில் இருக்கும் ஆர்வம் எம்மவர்கள் எதிர்கொள்ளும் அவலங்கள் பற்றி ஆதாரபுhர்வமாக எழுதுவதில் உண்டா? கடந்த மாதம் மன்னாரில் நடந்த வான் தாக்குதலில் உடன் 15 பேர் இறந்தது என்றால் அது 19. என்று எழுதுவது தான் நாம் போராட்டத்திற்கு செய்யும் பங்களிப்பு. அடுத்த நாள் காயமடைந்தவர் இறந்தால் அது 20 ஆகிவிடும். பிறகு உத்தியோகபுhர்வமாக வேறு தகவல்கள் வரும் பொழுது தமது தவறுகளை ஒத்துக் கொண்டு மன்னிப்பு கேக்கிறார்களா? இதே கூத்துத்தான் கடந்த வருடம் முல்லைத் தீவில் பாடசாலை விமானத் தாக்குதலில் இறந்த மாணவிகளின் தொகை 80, 90 என்று அடுக்கியிருந்தார்கள். பிறகு அதிகாரபுhர்வமாக தகவல்கள் வந்த பின்னர் தவறை திருத்தினார்களா?

இந்தக் கேவலத்தில் நீங்கள் அங்கு நடப்பவற்றை அறிய ஆவலாகி இருக்கிறீர்கள் உங்களுக்கு உறவுகள் அங்கு இருக்கு முதலைக் கண்ணீர் வேறை.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள ஊடகங்கள் ஒரு போதும், தமிழர் தரப்புச் செய்திகளச் சொன்னது கிடையாது. தங்களின் சிந்தனைகளுக்கு ஏற்ப மறைத்தோ, அல்லது திரித்தோ தான் வெளியிடுகின்றன. ஆனால் தமிழ் ஊடகங்கள் இவ்வாறு செயற்பட முடியாமைக்கு பல காரணங்கள் உண்டு.

1. அவ்வாறு செய்தால், நமக்குள் உள்ளவர்கள், நடுநிலமை, உண்மைத்தன்மை பற்றி அதிகம் அலட்டிக் கொள்வார்கள்.

2. கொழும்பில் உள்ள ஊடகங்கள், சிங்கள அரசின் செய்திகளையும் சொல்ல வேண்டிய அழுத்ததில் உள்ளார்கள்.

3. துரோகக் கும்பல்களின் ஊடுருவல்.

உண்மையில் செய்திகளை மறைக்க வேண்டியதில்லை. ஆனால் அச் செய்தியோடு தமிழர தரப்பின் நியாயங்களையும் சேர்த்து, மக்களுக்கு கொண்டு சென்றால் அப்பணி சிறப்பாக இருக்கும்.

மேலும், இன்று வடக்கு கிழக்கில் கொல்லப்படுகின்ற மக்களை, சிங்களப் புலனாய்வாளர்களும், இராணுவத் துணைக்குழுக்களுமே செய்கின்றன என்று தெரியும். 50 அடிக்கு இராணுவ முகாம் என்ற நிலையில் ஊரடங்கு நிலையில், வெள்ளைவானில் கடத்திச் சென்று கொல்கின்ற அதிகாரம், இராணுவத்தை சார்ந்தவர்களுக்குத் தான் இருக்கின்றது என்பதை அறிவோம். அப்படியிருக்கின்ற நிலமையில் இனந்தெரியாதோரால் கடத்திச் செல்லப்பட்டார் என்று செய்தி எழுதுவது சரியல்ல. அது இராணுவத்தின் செயற்பாட்டை உலக மட்டத்தில் கொண்டு செல்லப் பொருத்தமானதல்ல. இராணுவம் தான் செய்தது என்று வெளிப்படுத்துவோமால், அது நிச்சயமாக ஒரு வித அழுத்தத்தை இலங்கையரசுக்கு ஏற்படுத்தும்.

அவ்வாறே, தங்களின் குடும்பத்தவர்கள் கடத்தப்படும் நிலமையில் மனித உரிமை நிலையங்களில் முறைப்பாடு செய்பவர்களும், இராணுவத்தின் பங்கை வெளிப்படுத்தினால், இராணுவத்திற்கான அழுத்தத்தை அதிகரிக்கலாம். வெறுமனே, இனந்தெரியாதோர் என்று சொன்னால் எவ்வித அழுத்தத்தையும், இராணுவத்திற்கு ஏற்படுத்த முடியாது.

இன்று வரை அதன் கடத்தல், கொலைகளைக் கட்டு்படுத்தமுடியாமையில் இருந்து அதைப் புரிந்து கொள்ளலாம்.

-------------------------

சமபலத்தோடு நாம் இருக்கின்றோம் என்பதில் எப்போதுமே நாம் திருப்தி கொள்ள முடியாது. ஒரு இடத்தை எதிரி பிடிப்பதும், பதிலுக்கு தமிழர் தரப்பு பிற இடத்தை எதிரியிடம் இருந்து விடுவிப்பதுமான செயலை எத்தனை காலத்திற்கு மேற்கொள்ள முடியும்? நாம் இறுதி வெற்றியைப் பெற வேண்டுமானால் நிச்சயம், எதிரியை விடப் பலமடைய வேண்டும். நண்பர் குறுக்ஸ்சும் அதைத் தான் வலியுறுத்துகின்றார் என்று நினைக்கின்றேன். ( அவர் சொல்கின்ற பாணி தான், மற்றவர்களை கோபத்துக்கு உள்ளாக்குகின்றது )

நாம் வெற்றியடைவோம் என்று பெருமிதமடைவதிலும் பார்க்க, வென்றாக வேண்டும் என்று சிந்திப்பது தான் காலத்தின் தேவை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பால பண்டிதர் அண்ணை என்ன ***********.

நினைத்ததை முடிப்பவன் அவர்களே,

நான் உங்களுக்கு என்னத்தைச்சொல்ல, "மீ்ண்டும் வருக" என்று வரவேற்பதைத்தவிர?. அத்துடன் இன்னொன்றையும் சொல்லுகிறேன், இதை நான் தான் கண்டு பிடிக்கவில்லை, எங்கடை மில்க்வைற் கனகராசா முந்தியே சொல்லித்திரிந்த matter தான். DO GOOD. அத்தோடை ஒரு சின்ன வேண்டுகோள், கொஞ்சம் ரைம் எடுத்து விளங்கக்கூடியதாக எழுதுங்கோ. preview post என்ற பட்டனைப் பாவியுங்கோ. சிலநேரம் நீங்கள் எழுதியது உங்களுக்கே பிடிக்காது. அந்த நேரம் இன்னும் பெட்டராக எழுத டிரை பண்ணுங்கோ. நீ

ங்கள் என்னத்தை நினைத்தீர்களோ அதை முடியுங்கள். ஆனால் நினைப்பதை நல்லதாக நினையுங்கள்.

Edited by மோகன்
*********** கருத்து நீக்கப்பட்டுள்ளது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாருமதி அக்கா நீங்கள் புலம்பெயர்ந்த ஊடகங்களில் என்னத்தை எதிர்பார்க்கிறீர்கள்? தாயகத்தில் நடக்கும் மனித அவலங்கள் பற்றியா அல்லது விறுவிறுப்பான இராணுவ சின்னத்திரை தொடர் வருணனைகளா? புலம்பெயர்ந்த தமிழ் ஊடகங்கள் எதுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதாக உங்களுக்கு தெரிகிறது?

குறுக்காலபோவான், இது ஒரு மிகவும் சிக்கலான, ஆனால், முக்கியமான விடயம்! இது பற்றி, நாங்கள் ஓர் நீண்ட விவாதம் நடத்த முடியும். முதலில், பொதுவாக ஊடகங்கள் என்று எடுத்துக் கொண்டால், 'பத்திரிகா தர்மம்' என்று ஒன்று உண்டு என்பதையே சில சிங்கள (ஏன் சில தமிழ் கூட) ஊடகங்கள் மறந்தே விடுகின்றன! தமிழ் ஊடகங்கள் என்று பார்த்தால், யாழ்ப்பாணம், கொழும்பிலிருந்து வரும் பத்திரிகைகள் பெரும்பாலனவை தமது உயிருக்கே போராடிக் கொண்டு, தம்மால் முடிந்தவற்ரைச் செய்து கொண்டு இருக்கின்றன (சுடர் ஒளி, தினக்குரல், வீரகேசரி, உதயன்).

புலம் பெயர் ஊடகங்கள், பொதுவாக தம்மால் முடிந்தவற்றை, இயலுமானவரை செய்கிறார்கள். தமிழில் வெளிவரும் வலைப் பக்கங்கள் பற்றி, ஒரு நீண்ட கட்டுரை வரைய முடியும். சில பக்கங்கள் என்ன செய்கிறார்கள் என்றோ, அல்லது பத்திரிகை/ஊடகம் பற்றிய அடிப்படை விளக்கங்கள் கூட இல்லாமல் இயங்குகிறார்களோ என்று கூட எண்ணத் தோன்றுகிறது! அவற்றில், சில பற்றி, நாம் சிறிது பார்க்கலாம்.

தமிழ்நெட், தளம் திறமையாகச் செய்கிறார்கள், அவர்களது சேவை நிட்சயமாகப் பாராட்டப் பட வேண்டியது. ஆனாலும், தராக்கி (சிவராம்) அவர்களின் இழப்பு நன்றாகத் தெரிகிறது! தமிழ்கனடியன் தம்மால் முடிந்ததைச் செய்கிறார்கள்.

தமிழ் வலையத் தளங்கள் பற்றிய, உங்களது கருத்தை ஏற்றுக் கொள்கிறேன்! சில சமயங்களில் தமது கற்பனைக்கு ஏற்றவாறு செய்திகளை எழுதுவதிலிருந்து, ஓரிடத்திலிருந்து செய்தி/கட்டுரை போன்றவற்ரை மற்றவை தரையிறக்கம் செய்வது மட்டுமல்ல, அவற்றுக்கான அங்கீகாரம் கூட வழங்கப் படுவதில்லை. இப்படிப் பல, குறைகளைச் சொல்லிக் கொண்டே போகலாம், ஆனாலும், அவர்கள் தமது நேரத்தைச் செலவழித்துச் செய்யும் சேவை பாராட்டப் பட வேண்டியதே.

புலத்திலுள்ள "பத்திரிகைகள்" பற்றி என்ன சொல்வதென்றே தெரியவில்லை. நான் தற்போது வாழும் இடத்தில் தமிழ் பத்திரிகைகள் கிடையாது, ஆனாலும் அவ்வப்போது, கனடாவில் வெளி வெரும் சிலவற்றைப் பார்ப்பதுண்டு! உலகத்தமிழர் தவிர, ஏனையவை "பத்திரிகை" என்ற பிரிவுக்குள் அடங்குமா என்றதோர் கேள்வி நீண்ட நாட்களாக என்னிடம் உள்ளது. பரவலாக, விளம்பரங்களும், நடிகைகளும் தான் பக்கங்களை நிறைத்துள்ளன (நிட்சயமாக, சில விதி விலக்குகள் இருக்கலாம்)! ஒரு, தரமான பத்திரிகை வெளி வராதா என்ற ஏக்கம் பலரிடம் உள்ளது!

தமிழ் ஊடகத்துறை, எத்தனையோ திறமையானவர்களை இழந்து விட்டது! அதில், குறிப்பாக, தராக்கி மற்றும் "தினமுரசு" அற்புதன் ஆகியோருடைய இழப்பு பேரிழப்பு! கள நிலைமைகளையும், இராணுவ ஆய்வுகளையும், மக்கள் துன்பங்களையும் அவர்கள் நேரடியாகயும், நாசூக்காகவும் சொல்லிக் கொண்டிருந்த விதம் அருமை! அவர்களது இழப்புக்கள் ஈடு செய்யப் படவில்லை, அண்ண்மைக் காலங்களில் முடியுமா என்பது கேள்விக்குறியே). டி.பி.எஸ். ஜெயராஜ் ஓர் சிறந்த எழுத்தாளர், ஆனால் அவரது திசை தான் மாறி விட்டதே (அத்தோடு, அவரை தராக்கி, அற்புதனோடு ஒப்பிட நான் தயாராகவில்லை!).

தமிழ் ஊடகத்துறை, எத்தனையோ திறமையானவர்களை இழந்து விட்டது! அதில், குறிப்பாக, தராக்கி மற்றும் "தினமுரசு" அற்புதன் ஆகியோருடைய இழப்பு பேரிழப்பு! கள நிலைமைகளையும், இராணுவ ஆய்வுகளையும், மக்கள் துன்பங்களையும் அவர்கள் நேரடியாகயும், நாசூக்காகவும் சொல்லிக் கொண்டிருந்த விதம் அருமை! அவர்களது இழப்புக்கள் ஈடு செய்யப் படவில்லை, அண்ண்மைக் காலங்களில் முடியுமா என்பது கேள்விக்குறியே). டி.பி.எஸ். ஜெயராஜ் �“ர் சிறந்த எழுத்தாளர், ஆனால் அவரது திசை தான் மாறி விட்டதே (அத்தோடு, அவரை தராக்கி, அற்புதனோடு ஒப்பிட நான் தயாராகவில்லை!).

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு செய்தி ஆசிரியராக இருப்பதற்கு பிறப்பினால் தகுதி வேண்டும் எனறு அவரைப் பார்த்துக் கேட்ட கூட்டமும் இங்கே புலம்பெயாந்த நாடுகளில் இருந்து கொண்டிருக்கிறது. நிலைமை இப்படி இருந்தால் புலம் பெயர்ந்த தமிழ் சமூகம் எப்படி உருப்படும்

சந்திரனைப் பார்த்து நாய்குரைத்ததாம்! அதனாலென்ன?

சிவா சின்னப்பொடி அவர்கள் ஒரு சிறந்த ஊடகவியலாளர் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. சிவராம் அவர்களை உருவாக்கியவரும் இவரே என்பது என்போன்ற பலருக்குப் புதிய செய்தி. எனது அங்கலாய்ப்பெல்லாம் சிவா சின்னப்பொடி அவர்கள் இன்னும் பல சிவராம்களை உருவாக்கி எமது புலம்பெயர் தமிழ் ஊடகத்துறைக்கு புத்துயிர் அளித்து புலம்பெயர்ந்த தேசங்களிலெல்லாம் நடக்கவிருக்கும் இறுதிப்போருக்கு மக்களைத் தயார்படுத்த வேண்டுமென்பதே!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த ஆபத்திலிருந்த மக்களை மீட்டு தாயகவிடுதலையை நோக்கி அவர்களை அணி திரட்ட வேண்டிய பொறுப்பு புலம்பெயர்ந்த ஊடகங்களுக்கே உள்ளது.

இதுவரை எந்த ஊடகம் இதை பற்றி சிந்தித்தது. எத்தனை ஊடகவியலாளர்கள் இது பற்றிய அக்கறை கொண்டிருக்கிறார்கள்.

நவம், பல புலம்பெயர்ந்த நாடுகலிலுள்ள ஊடகங்கள் இவை பற்றிக் கருத்திலெகுக்கவில்லை என்பது உண்மையே! ஆனால் சில விதி விலக்குகள் உள்ளன! பாரிசிலிரிந்து வெளிவரும் எரிமலை சஞசிகை ஓர் நல்ல உதாரணம்!

சாருமதி அவர்கள் திறமையான ஊடகவியலாளர்கள் பற்றி குறிப்பிட்டிருந்தார். புலம்பெயர்ந்த சமூகத்திலே திறமையான ஊடவியலாளர்கள் இல்லை என்ற சொல்ல முடியாது.பலர் இருக்கிறார்கள். ஏன் இந்தக் கட்டுரையை எழுதிய எனது நண்பர் சிவா சின்னப்பொடி அவர்கள் மிகச் சிறந்த ஊடகவியாலாளர். 30வருடங்களாக ஒரு போராளியாகவும் முறையாக ஊடகவியல் கற்கை நெறியை கற்ற ஊடகவியலாளராகவும் அவர் இருந்திருக்கிறார்;.
சிவா சின்னப்பொடி பற்றி எனக்குத் தெரியாது! ஆகவே, அவர் பற்றி, என்னால் எதுவும் கூற முடியாது, முன்பு குறிப்பிட்டது போல், அவருடைய இந்தக் கட்டுரையின் சில கருத்துக்களை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை, அவ்வளவு தான்!

தராகி சிவராமை ஊடகத்துறைக்க கொண்டு வந்தவர் அவர் தான் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

இது எனக்குச் செய்தி! ரிச்சார்ட் டி சொய்சா (Richard De Zoysa) தான் அவரை ஊடக உலகிற்கு அறிமுகப் படுத்தியவர் என்று தான் நான் எண்ணி இருந்தேன்! தராக்கி பற்றிய "Sivaram Dharmeratnam: A Journalist’s life" என்ற புத்தகம் எழுதிய, தராக்கியின் நண்பரும், ஆய்வாளருமான பேராசிரியர் Mark Whitaker அவர்களும், அதையே குறிப்பிட்டுள்ளார்கள் (http://www.tamilnation.org/hundredtamils/sivaram/witaker.htm)!

நேரடியாக விடயத்திற்கு வந்து பின்னர் வழமையான நீண்ட விரிவிற்குட்பட்டுவிட்டது இந்த ஆக்கம். இருப்பினும் கருத்துக்கள் ஏதோ ஒருவகையில் முன்னர் வெளிப்பட்டவையே!

வளர்ந்து வரும் தமிழ் ஊடகங்களின் பங்குபற்றியும் அதன் வளர்ச்சிக்கு உதவக்கூடிய ஆக்கபூர்வமான கருத்துக்களும் குறைவாக இருப்பதும் கவலைக்குரியதே. தற்போது என்றுமில்லாதவாறு ஊடகத்தேவை அதிகமாக இருப்பது உண்மை. ஒரு போராடும் இனம் தனது சக்திக்குட்பட்ட வரையறைகளிற்குள் ஆக்கபூர்வமான முறையில் செயற்பட்டிருப்பதை யாரும் மறுக்கமுடியாது. இது காலத்தால் பதியப்பட வேண்டியதும் தங்கள் போன்ற அனுபவமிக்க ஊடகவியலாளர்களால் மட்டுமே முடியும். இதற்கு ஏனைய விடுதலை வேண்டி போரிட்ட இனங்களில் ஊடகபணிபற்றி ஆய்விற்குட்படுத்தினால் இது தெளிவாகும்.

தற்போதைய தொழில் நுட்ப வளர்ச்சியில் கணப்பொழுதில் செய்திப் பரிமாற்றங்களை மேற்கொள்ளலாம். வராந்த-மாத-வருட பதிப்புகள் தமக்கென கணப்பொழுது செய்திகளையும் ஆய்வுகளையும் தாங்கி இணையத்தளத்தில் வெளிவருகின்றது.

மூத்த ஊடக நிலையங்களின் ஆலோசனைகளோ அல்லது போதுமான பொருளாதார உதவிகளும் இன்றி ஆரம்பிக்கப்பட்டவையே புலம்பெயர் தமிழ் ஊடகங்கள். குறுகிய வளர்ச்சியில் இணையத்தள தொழில்நுட்ப அறிமுகங்கள் தற்போதைய பெரும் வளர்ச்சிக்கு வித்திட்டது எனலாம்.

புலத்தில் பிறந்து வளர்ந்த எமது இளம் தலைமுறையினரின் ஆற்றலும் இணையத்தில் அச்சேற்றும் உதவியும் ஒதுங்கியிருந்தவர்களையும் தட்டி எழுப்பிவிட்டுள்ளது. இருப்பினும் முழுமையாக பயன்பெறவில்லை என்பது உண்மை. சகல துறை சார் இளம் தலைமுறை ஊடகப் பணிக்குள் உள்வாங்கப்பட வேண்டும்.

முழு நேர வானொலிஇ தொலைக்காட்சிஇ இணையத்தளங்களை எம்மகத்தே கொண்டு சர்வதேச சதி வலைப்பின்னலிற்குள் முடங்கிவிடாது துளிர்விட்டெழும் புலம்பெயர் தமிழ் ஊடக பணியை மதித்து ஆக்கபூர்வமான கருத்துக்களை முன்வைத்து இணைந்து செயற்படால் பயன் கூடுதலாக இருக்கும்.

அரச பிரச்சாரங்களையும் சர்வதேச ஊடக வளர்ச்சியையும் ஒப்பிட்டு நேரத்தை வீணடிக்காது தமிழ் சமூகத்தின் வளத்திற்கும் வரையறைகளிற்கும் உட்பட்ட முன்மொழிவுகளை எதிர்பார்க்கின்றேன். – நன்றி.

Edited by valentine

நவம், பல புலம்பெயர்ந்த நாடுகலிலுள்ள ஊடகங்கள் இவை பற்றிக் கருத்திலெகுக்கவில்லை என்பது உண்மையே! ஆனால் சில விதி விலக்குகள் உள்ளன! பாரிசிலிரிந்து வெளிவரும் எரிமலை சஞசிகை ஓர் நல்ல உதாரணம்!

சிவா சின்னப்பொடி பற்றி எனக்குத் தெரியாது! ஆகவே, அவர் பற்றி, என்னால் எதுவும் கூற முடியாது, முன்பு குறிப்பிட்டது போல், அவருடைய இந்தக் கட்டுரையின் சில கருத்துக்களை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை, அவ்வளவு தான்!

இது எனக்குச் செய்தி! ரிச்சார்ட் டி சொய்சா (Richard De Zoysa) தான் அவரை ஊடக உலகிற்கு அறிமுகப் படுத்தியவர் என்று தான் நான் எண்ணி இருந்தேன்! தராக்கி பற்றிய "Sivaram Dharmeratnam: A Journalist’s life" என்ற புத்தகம் எழுதிய, தராக்கியின் நண்பரும், ஆய்வாளருமான பேராசிரியர் Mark Whitaker அவர்களும், அதையே குறிப்பிட்டுள்ளார்கள் (http://www.tamilnation.org/hundredtamils/sivaram/witaker.htm)!

1983 ம் ஆண்டு சிவா சின்னப்பொடி நடத்திய தமிழீழத்தின் குரல் என்ற வானொலியில் தான் அரசியல் ஆய்வாளராக எஸ்ஆர் என்ற பேரில் அரசியல் விமாசகராக சிவராமை அறிமுகப்படுத்தினார்.1989 ம் ஆண்டளவில் தான் றிச்சாட் டி சொய்சா அவரை ஆங்கிலப் பத்திரிகைகளில் எழுதுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுத்தார். சிவராம் சிறந்த தமிழ் தேசிய உடகவியலாளராக உருவெடத்ததில் சிவா சின்னப்பொடியின் பங்கு மிக முக்கியமானது..

பாரிஸ் எரிமலை சஞ்சிகை சிறப்பாக வெளிவருவதிலும் சிவா சின்னப்பொடியின் பங்கு இருக்கிறது. இன்று எரிமலையின் ஆசிரியராக இருக்கும் சுபாஸை ஒன்றும் தெரியாதவர் என்று ஒரு கூட்டம் ஒதுக்கிய போது அவருக்கு உற்சாகம் கொடுத்து எரிமலை ஆசிரியர் பொறப்பை எடுக்க வைத்ததும் சிவா சின்ப்பொடி தான் என்பது நான் அறிந்த விடயம்

சிறீலங்கா அரசதரப்பினதும் அதன் ஒட்டுக் குழுக்களினதும் தகவல் தொடர்பு சாதனங்கள் விடுதலைப்புலிகளின் கதை முடிந்துவிட்டது.அவர்களின் போரிடும் அழிக்கப்பட்டுவிட்டது. அரசபடையினரில் படை வலிமைக்கும் நவீனரக ஆயுதங்களுக்கும் முன்னால் விடுதலைப்புலிகளின் படையணிகளால் தாக்குப் பிடிக்க முடியவில்லை என்று தாங்களே ஒரு தீர்ப்பை சொல்லி-அதை பிரகடனப்படுத்தி அதற்கு வியாக்கியானங்களும் செய்து கொண்டிருக்கின்றன.

மறு புறத்திலே தமிழ் தேசிய ஆதரவு ஊடகங்கள் என்று சொல்லிக்கொள்ளும் ஊடகங்களும் அவற்றிலே உலாவரும் ஆய்வாளர்களும் விமர்சகர்களும் பத்தி எழுத்தாளர்களும் 'விடுதலைப்புலிகள் தந்திரோபாயமாகவே பின்வாங்கி இருக்கிறார்கள். யாழ்ப்பாணத்திலும் இது தான் நடந்தது.முல்லைத்தீவில் அடி விழவில்லையா? மாங்குளம் வரை முன்னேறி வந்த படையினரை ஜெய்சிக்குறு சமரில் ஓட ஓட அடித்த விரட்டவில்லையா? புலி பதுங்குவது பாய்வதற்கே! வான் படையை அவர்கள் இன்னமும் களம் இறக்கவில்லை.அது களம் இறங்கும் போது சிங்களப்படை சிதறி ஓடும்' என்று கைதேர்ந்த சோதிடர்கள் போல ஆரூடம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

..........

ஆனால் சிறீலங்கா அரசு தன்னுடைய நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு ஊடகங்களை பயன்படுத்துவதில் மிகத் திறமையாகச் செயற்பட்டு வருகிறது.

சிறீலங்கா அரசைப் பொறுத்தவரை அது தமிழிழ தேசியவிடுதலைப் போராட்டத்தின் அச்சாணிகளாக . இருக்கும் புலம் பெயர்ந்த தமிழ் மக்களின் மனோபலத்தை சிதைப்பது, தமிழ் தேசிய ஆதரவு ஊடகங்களுக்கு ஊடாக தனக்குத் தேவையான உளவுத் தகவல்களை திரட்டுவது என்ற இரண்டு அடைப்படை நோக்கங்களுக்காக பெருந்தொகைப் பணத்தையும் ஆளணி நிபுணத்துவ வசதிகளையும் பயன்படுத்துகிறது.

-சிவா சின்னப்பொடி

மேற் சொன்ன விடயத்தோடு சிவா சின்னபொடி அவர்களின் பல கருத்துக்களுடன் ஒத்து போகின்றேன்.

ஆனாலும் சொல்லப்படும் விடயத்துக்கான மாற்றீட்டு நடவடிக்கையாக ஒண்றை சொல்ல வருவதுதான் சரியாகதா.? என்பது புரி படவில்லை..? இலங்கை அரசு பிரச்சாரம் செய்கின்றது என்பது ஏற்புடையானது. அதுவும் ஒரே விடயத்தை புலம் பெயர்ந்த தமிழர்களை நோக்கியதாக மட்டும்தான் என்பது கொஞ்சம் நெருடலானது.

இலங்கை அரசானது புலத்தமிழர்கள், புலம்பெயர்ந்த தமிழர்கள், சிங்கள மக்கள், சர்வதேசம் என எல்லாருக்குமான பிரச்சாரம் செய்கிறது. அரசானது எப்போதுமே ஒவ்வொருவருக்கும் ஒரு மாதிரியான பிரச்சாரங்களை முடக்கிவிடுவது இல்லை. தன்னுடைய நடவடிக்கைகளுக்கு சாதகமான சில கருத்துக்களை எல்லாருக்குமாக விதைக்கின்றது. ஆனால் சிவா அவர்களின் கருத்துப்படி பார்க்கும் போது புலிகள்(தமிழர் ஆதரவு ஊடகங்கள் மட்டும் புலம்பெயர் தமிழர்களுக்கு வேறு விதமான பிரச்சாரங்களையும் செய்ய வேண்டும் என்பது போண்ற தோற்ற்ம் இருக்கின்றது..

அதோடு சிங்களம் ஏன் இப்படியான பிரச்சாரங்களை செய்கின்றது என்பதை சரியாக சொல்லி விடும் சிவா அவர்கள் தமிழர் தரப்பு தாயகதமிழர், புலம்பெயர் தமிழர் எல்லாருக்குமான பிரச்சாரமாக சொல்லவருவது மக்களுக்கு அறிவுரை. அதோடு புலநாய்வு விழிப்புணர்வு... உண்மையிலேயே நல்ல விடயம்.

ஆனால் புலிகளை ஒடுக்கி தீர்வை திணித்துவிடலாம் என நம்பி ஆய்த முதலீடு செய்யும் வெளி நாடுகளுக்கும், இலங்கையை நம்பி ஆதரவு குடுக்கும் சிங்களவர்களுக்கும், எமது இன கூலிகளுக்கும் களைப்பையும் மன உழைச்சலையும் குடுக்க என்ன செய்யலாம் என்கிறீர்கள். ?

  • கருத்துக்கள உறவுகள்

குறித்த கட்டுரை பற்றிய விமர்சனங்களுக்கு அப்பால், சின்னப்போடி பற்றிய விமர்சனங்கள், அவர் மீதான தனிப்பட்ட வெறுப்பில் எழுந்தவையாகவே கருதமுடியும்.

------------------

அற்புதன் தமிழ் தேசியத்தை ஆதரித்த ஊடகவியளார் என்பதை முழுமையாக ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. அவசரகாலத்திற்கு கையைப் பாராளமன்றத்தில் தூக்கிப் பிடித்துக் கொண்டு, தன் பத்திரிகையில் அதை எதிர்த்து எழுதிய இரட்டைப் போக்கை கொண்டிருந்தார்.

தன்னை ரமேஸ் என்ற குறித்த பாத்திரத்தில் வைத்து, புலிகளுக்கு எதிராகச் செய்த விடயங்களை நியாயப்படுத்தி வந்தார். அவ்வாறே புலிகளுக்கு எதிராக ஈபிடிபி நடந்த சந்தர்ப்பங்களை மூடி மறைத்து, மற்றய இயக்கங்களோடு தான் புலிகளுக்கு பிரச்சனை என்ற கணக்கில் எழுதியும் வந்தார். இதனால் தான் அந்தக் காலத்தில் குறித்த வெற்றிகளை அந்தக் கட்சியால் பெற முடிந்தது.

அவ்வாறே பத்மநாபா, மூஸ்லீம் மக்கள் தொடர்பான கொலைகளுக்கு புலிகள் தான் பொறுப்பு என்று மக்களை நம்ப வைக்க அரும்பாடுபட்டார். அவரது எழுத்தை வைத்துக் கொண்டு தான், இன்றைக்கு பலர் புலிகள் மீது அவ்வாறு தவறாக நினைக்க காரணம் என்பதை மறக்க முடியாது.

புலிகளுக்கு ஆதரவு என்ற போர்வையில் தங்களின் வியாபாரத்தைப் பெருக்கவும, புலிகள் மீது அவப்பெயரை உண்டாக்கவும் செயற்பட்ட அவரை தேசிய ஆதரவாளர் என்று ஒத்துக் கொள்ள முடியாது.

ஆனால் பிற்காலத்தில் தமிழ தேசியத்தை ஆதரித்த, குமார் பொன்னம்பலத்தோடு அவர் கொண்டிருந்த நெருக்கம், அவரின் உயிரை டக்களஸ் தேவானந்தா எடுக்க வைத்து விட்டது. மரண வீட்டிற்கு போகக் கூட டக்ளஸ் மறுத்துவிட்டார்.

அன்று, அரசகைக்கூலியான மனோரஞ்சன் அவரின் மரணத்தை, அமுது என்ற அரசாங்கப் பத்திரிகையில் வரவேற்று எழுதியதன் மூலம், அற்புதனின் கொலைக்கு யார் காரணம் என்பதை அறிந்து கொள்ளலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குறித்த கட்டுரை பற்றிய விமர்சனங்களுக்கு அப்பால், சின்னப்போடி பற்றிய விமர்சனங்கள், அவர் மீதான தனிப்பட்ட வெறுப்பில் எழுந்தவையாகவே கருதமுடியும்.

இந்த தொடரில், யாரும் கட்டுரையாளரை விமர்சித்ததாக எனக்குப் புலப் படவில்லை, நான் சில கருத்துக்களைப் ப்டிக்காமல் தவற விட்டு விட்டேனோ தெரியவில்லை! அப்படிச் செய்திருந்தால் அது கண்டிக்கப் பட வேண்டியதே! கட்டுரை தொடர்பான விமர்சனங்களை முன் வைப்பதில் எந்தத் தவறும் இல்லை.

அற்புதன் தமிழ் தேசியத்தை ஆதரித்த ஊடகவியளார் என்பதை முழுமையாக ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. அவசரகாலத்திற்கு கையைப் பாராளமன்றத்தில் தூக்கிப் பிடித்துக் கொண்டு, தன் பத்திரிகையில் அதை எதிர்த்து எழுதிய இரட்டைப் போக்கை கொண்டிருந்தார்.

தன்னை ரமேஸ் என்ற குறித்த பாத்திரத்தில் வைத்து, புலிகளுக்கு எதிராகச் செய்த விடயங்களை நியாயப்படுத்தி வந்தார். அவ்வாறே புலிகளுக்கு எதிராக ஈபிடிபி நடந்த சந்தர்ப்பங்களை மூடி மறைத்து, மற்றய இயக்கங்களோடு தான் புலிகளுக்கு பிரச்சனை என்ற கணக்கில் எழுதியும் வந்தார். இதனால் தான் அந்தக் காலத்தில் குறித்த வெற்றிகளை அந்தக் கட்சியால் பெற முடிந்தது.

அற்புதன் அவர்களது 'இரு வேடங்கள்' ஓர் சர்ச்சைக்குரிய விடயமாகவே இருந்து வந்துள்ளது! அவருடைய ஈபிடிபி முகமும், பத்திரிகையாளன் முகமும் தமிழ் தேசியத்தை ஆதரிப்பவர்கள் மத்தியில் ஓர் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது என்பது மறுக்க முடியாத உண்மையே! ஆனாலும், பத்திரிகைத் துறையிலிருந்த அவருடைய திறமையை யாரும் மறுக்க முடியாது! பல சந்தர்ப்பங்களில், இலங்கை அரசின் அடாவடித் தனங்களையும், மனித உரிமை மீறல்களையும் வெளிக் கொணர்ந்தது மட்டுமல்லாமல் அதே நேரம், மற்றைய, நாட்டில் நடக்கும் இராணுவ, அரசியல் ஆய்வுகளை மிகவும் திறமையாக வெளிக் கொணர்ந்ததில், அந்த நேரத்தில், தினமுரசு மிக முக்கிய பங்காற்றியது என்பதை யாராலும் மறுக்க முடியாது! தனது ஓர் ஆங்கிலக் கட்டுரையில், தராகி அவர்கள், நாட்டின் உண்மை நிலையை அறிய வேண்டுமாயின், தமிழன் ஒவ்வொருவரும் தினமுரசு பத்திரிகையைப் படிக்க வேன்டும் என எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது!

அத்தோடு அவரது அரசியலுக்கப்பால், அற்புதன் (ரமேஷ்) ஓர் சிறந்த 'தமிழ் அறிவாளி'! அரசியல், இராணுவ ஆய்வுகட்கப்பால் அவரது இலக்கியப் பத்திகளும் அருமையானவை!

ஆக, தமிழினம் ஓர் சிறந்த பத்திரிகையாளனை, அறிவாளியை இழந்து விட்டது என்பதே எனது கருத்து! (அற்புதனை, நான் சந்த்தித்ததும் கிடையாது, அறிமுகமும் இல்லை - ஆனால் அவரது எழுத்துக்களால் மிகவும் ஈர்க்கப் பட்டவன்).

இங்கே இந்த கட்டுரைக்கு விளக்கமளிப்பதை விடுத்து

அவர் எங்கே பிறந்தார் எப்படி வளர்ந்தார்.. எத்தனை மணம் முடித்தார்...??

என்ன சப்படுறவர்..??

என்ன கலர் பிடிக்கும்....???

எவ்வளவு காலம் புலம் பெயர் நாட்டில் வாழுறார்...??

ஏன் வன்னிக்கு போய் வந்தவர்....??

அங்க யார் யாரை சந்தித்தவர்....???

எத்தனை பிள்ளைகள்....???

அவயள் திருமணம் முடிச்சிற்றினமோ....???

ஏன் இன்னும் செய்யாமா இருக்கினம்..எண்டு

அவை யாவற்றையும் கேட்டு எழுதுங்கோ...ஃ

உந்த பச்சை பத்திரிகைக்கு இங்க விளம்பரம் செய்யினம்...

நல்ல கூத்து நடத்துங்கோ....

ஐயா வன்னி மைந்தன் அவர்களே ஒருவர் ஒரு நல்லவிசயத்தை செய்யகிறார் எண்டால் அவற்றை சாதகத்தை ஆராயிறது தானே எங்களுடைய பாரம்பரியம். நாய்க்கு நடுக்கடலில போனாலும் நக்குத் தண்ணி எண்ட பழமொழி எங்கட ஆக்களுக்கும் பொருந்தும்.

....ஆனால் அவரது எழுத்துக்களால் மிகவும் ஈர்க்கப் பட்டவன்).

சாருமதி அக்கா,

உங்கள் கருத்தில் ஒரு மொழிப்பிழை உள்ளது. அல்லது நிங்கள் சாருமதி அண்ணாவா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.