Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் பிரபல தனியார் மருத்துவமனையிலிருந்து காலாவதியான மருந்துகள் கண்டுபிடிப்பு

Featured Replies

யாழில் பிரபல தனியார் மருத்துவமனையிலிருந்து காலாவதியான மருந்துகள் கண்டுபிடிப்பு
 
யாழில் பிரபல தனியார் மருத்துவமனையிலிருந்து காலாவதியான மருந்துகள் கண்டுபிடிப்பு
யாழ் நகரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் (கிளினிக்) காலாவதியான மருந்துகள் விற்பனைக்காக வைக்கப்பட்டிரு ந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. 
 
யாழ் நகரில் வைத்தியசாலை வீதியில்  உள்ள பிரபல்யமான தனியார் மருத்துவமனையில் உள்ள மருந்தகத்தில் காலாவதியான நிலையில் உள்ள மருந்துகளே நோயாளிகளுக்கு விற்பனை செய்வதாக யாழ்மாவட்ட பாவனையாளர் அதிகாரசபைக்கு கிடைத்த முறைப்பாட்டினை அடுத்து இடம்பெற்ற சோதனை நடவடிக்கையில் நூற்றுக்கு மேற்பட்ட மருந்துவில்லைகள் கண்டு பிடிக்கப்ப ட்டுள்ளன. 
 
இதில் நீரிழிவுக்குப் பாவிக்கும் மருந்துவில்லைகளே அதிகளவில் கண்டுபிடிக்கப்பட்டவையாகும். இதனையடுத்து குறித்த மருத்துவ மனையில் இருந்து மருந்து வில்லைகள் அப்புறப்படுத்தப்பட்டு, விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

http://onlineuthayan.com/news/24013

இந்த பிரச்சினை அங்கு மட்டும் அல்ல இங்கும் மிக மோசம் காலாவதியான மீன் டின்களில் பழைய திகதியை அழித்துவிட்டு புது திகதியை அடித்து குறைந்த விலையில் விற்ப்பது பிஸ்கட்டுகள் போன்றவை

Turkey Mackerel Tin Fish - 425g - Kapruka Product grocery0068US$ 2.47( 2.47US$ ≈ 1.95 Pounds )இது 

சாதரான விலை இலங்கையில் விற்க்கும் விலை௧1.95

No automatic alt text available.

சிலோனில் 1.95 பவுண்ட் மீன் டின்

லண்டனில் ஒரு பவுன் ?

அதி உயர் ரசாயன கலப்புள்ள மீன் டின் கள் ஒரு குறிபிட்ட காலம் மாத்திரம் இருக்கலாம் அதன்பின் புற்றுநோய் ஊக்கிகளாக மாற்றம் ஏற்படும் இதனால் 55வயதுக்கு முன் திடிரென புற்றுநோய் தாக்கத்துக்கு உட்பட்டு பரலோகம் போகும் புலம்பெயர் நம்மவர்கள் தொகை மற்ற புலம்பெயர்வாசிகளை விட கூட இலங்கையில் இருந்து வரும் அநேகமான பொருட்கள் 70வீதமானவை இங்கு மறு திகதி போடபட்டு மீண்டும் சந்தையில் விடப்படுகின்றன.

Edited by TNT

லங்காவில் லெமன் பப் லண்டன் காசு .85பென்ஸ்  லிங்க் http://www.kapruka.com/shops/deliveryProductPreview.jsp?id=grocery00151&type=specialGifts

ஆனால் லண்டனில் மூன்று லெமன் பப் ஒரு பவுன் எப்படி இவ்வளவு மலிவாக கிடைக்கிறது என்று மனது சிந்திக்க மறந்து வியாதிகளை இலகுவாக வேண்டிகொள்கிறம்.

மொத்தத்தில் புலம்பெயர் தமிழர் நாம் ஏமாளிகளாக மாற்றபட்டுள்ளம்.

  • கருத்துக்கள உறவுகள்

54 minutes ago, TNT said:

இலங்கையில் ஒரு பொருள் நேரடியாக சில்லறை கடைகளுக்கு போவதில்லை, பிராந்திய  மொத்த கொள்வனவாளர்கள் 2/3 பேருக்கு கைமாறியே சில்லறைக்கடைகளுக்கு செல்கிறது.

ஆனால் ஏற்றுமதியாகும் பொருள் நேரடியாக உற்பத்தி நிறுவனத்திடம் கொள்வனவு செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஏற்றுமதி செய்யும் நிறுவனம் கொள்வனவுக் கட்டளையும் காசையும் செலுத்தி ஓரிரு மாதங்களின் பின்னரே பொருட்கள் உற்பத்தி நிறுவனத்தினால் வழங்கப்படும். மொத்த வியாபாரிகளின் இலாபம் இல்லை.

அத்துடன் ஏற்றுமதி செய்யும் நிறுவனம் தாம் ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கான சுங்கத்தீர்வையையும் வரியையும் ( duty & tax) Inland revenue விடம் இருந்து கழித்து கொள்ளும் அதனாலேயே விலை குறைவாக இங்கு இருக்கிறது.

இன்னொருவிடயம், இத்தகைய பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்யும் நிறுவனங்கள்  தமது சொந்த பொருட்களுக்கு (own brand) அதிக இலாபத்தையும் இப்படியான மற்றைய பொருட்களுக்கு குறைந்த இலாபத்தையும் வைக்கிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

நான் பிரஸ் மீன் வேண்டிச் சமைக்கிற பஞ்சியில உந்த ரின் மீன் தான் வேண்டி சமைக்கிறது.இனி மேல் நிப்பாட்ட வேண்டும்

5 hours ago, MEERA said:

Meera உங்கள் தயாரிப்புகளுக்கு நீங்கள் போடும் கணக்கு சரியாய் வரும் இந்த மீன் டின் போன்ற தகர அடைத்தல் பொருள்கள் மிக ஆபத்தானவை தெரிந்தும் உங்கள் பகுதி தமிழ் வியாபாரி குச்ச்ட்டன் ஏரியா ஆள் அசராமல் அடித்து விடுறார் முக்கியமாய் சுவிஸ், ஜெர்மன் ,பிரான்ஸ் வாழும் தமிழர்கள் கவனம் சுவிசில் இருப்பவர்களை கேளுங்கள் இளவயது மரணம்கள் கூட ஏன்? டொக்டர் மாரும் தலையை பிக்கினம் கொஞ்சம் சிந்தியுங்கள்.

அந்தாளின் முக்கிய இலாப பகுதிகள் இந்த சுவிஸ் ,ஜெர்மன் ,பிரான்ஸ் இங்கு லண்டனில் பெரிதாய் செய்தால் மாட்டுப்பட்டுவிடுவம் என்ற முனெச்சரிக்கை ஆளுக்கு.

முக்கிய தமிழ் தயாரிப்பாளர்களின் குப்பைகளை காசாக்கும் சந்தை இந்த ஜெர்மன் ,சுவிஸ்,பிரான்சஸ் போன்ற தமிழ் கடைகள் இதில் TRS விதி விலக்கல்ல.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐரோப்பிய யூனியனிலை தடைசெய்யப்பட்ட சிறிலங்கன் சாப்பாட்டு சாமான்கள் கனடா போய்....அங்கையிருந்து கனேடியன்  மேட்டோடை நலமே இங்கிலாந்து வந்து ஐரோப்பியயூனியன் முழுக்க ஊடுருவி நாசமறுக்குது.
கதைக்க வெளிக்கிட்டால்...இன்னும் கனக்க வரும்.:cool:

ஆனால் நேற்று இன்று நடந்த ஒருசில ஒப்பந்தங்கள் தமிழ்சிங்கள நாசகாரிகளுக்கு ஒரு முடிவை தரும் என நம்புகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ரதி said:

நான் பிரஸ் மீன் வேண்டிச் சமைக்கிற பஞ்சியில உந்த ரின் மீன் தான் வேண்டி சமைக்கிறது.இனி மேல் நிப்பாட்ட வேண்டும்

நாங்கள் 90ம் ஆண்டு அந்த கூப்பன்கடையில்  கொடுத்த டின்மீனோடு விட்டுட்டம்  இப்ப பிரஷ் மீன் மட்டுமே ரதி tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.