Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைக்கு கால அவகாசம் வழங்கவேண்டியது அவசியம் ஜெனிவாவில் எடுத்துரைத்தது பிரிட்டன்

Featured Replies

இலங்கைக்கு கால அவகாசம் வழங்கவேண்டியது அவசியம்

p11-208cbd393bb9e0affa1fa57fcbb64bf869842929.jpg

 

ஜெனிவாவில் எடுத்துரைத்தது பிரிட்டன் 
(ரொபட் அன்டனி)

ஜெனிவா மனித உரிமை பேரவையில் 2015 ஆம் ஆண்டு இலங்கைதொடர்பாக நிறைவேற்றப்பட்ட பிரேரணையை அமுல்படுத்துவதற்கு நாம் இலங்கைக்கு கால அவகா சத்தை வழங்கவேண்டும் என் பதனை ஏற்றுக்கொள்கின்றோம் என்று 

பிரிட்டன் நேற்று ஜெனிவாவில் தெரிவித்தது.  

ஜெனிவாவில் ஆரம்பமாகியுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 34 ஆவது கூட்டத் தொடரின் நேற்றைய உயர்மட்ட அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரிட்டனின் வெ ளிவிவகார பொதுநலவாய பாராளுமன்ற செயலர் ஆலோக் சர்மா மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.  

அவர் மேலும் உரையாற்றுகையில்

இலங்கை வெ ளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர முன்வைத்த பயனுள்ள ஈடுபாட்டை நான் வரவேற்கின்றேன். அந்தவகையில் 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட ஜெனிவா பிரேரணையை அமுல்படுத்துவதற்கு நாம் இலங்கைக்கு கால அவகாசத்தை வழங்கவேண்டும் என்பதனை ஏற்றுக்கொள்கின்றோம்.

அத்துடன் யுத்தத்துக்குப் பின்னரான இலங்கையில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தவும் நல்லிணக்கத்தை முன்னெடுக்கவும் நீதியை நிலைநாட்டவும் நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும். அதற்கு இலங்கைக்கு கால அவகாசம் வழங்கவேண்டும் என்றார்.

இதேவேளை ஜெனிவா மனித உரிமை பேரவையில் உரையாற்றுவதற்கு முன்னர் பிரிட்டனின் வெ ளிவிவகார பொதுநலவாய பாராளுமன்ற செயலர் ஆலோக் சர்மா வெ ளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை நேற்று ஜெனிவா வளாகத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-03-01#page-1

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நவீனன் said:

இலங்கைக்கு கால அவகாசம் வழங்கவேண்டியது அவசியம்:

ஜெனிவாவில் எடுத்துரைத்தது பிரிட்டன் 
(ரொபட் அன்டனி)

ஜெனிவா மனித உரிமை பேரவையில் 2015 ஆம் ஆண்டு இலங்கைதொடர்பாக நிறைவேற்றப்பட்ட பிரேரணையை அமுல்படுத்துவதற்கு நாம் இலங்கைக்கு கால அவகாசத்தை வழங்கவேண்டும் என் பதனை ஏற்றுக்கொள்கின்றோம் என்று பிரிட்டன் நேற்று ஜெனிவாவில் தெரிவித்தது.  

.....

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-03-01#page-1

கால அவகாசமெனில் தோராயமாக ஒரு நூறு ஆண்டுகள் தேவைப்படுமா? :)

அதற்குள் 12+12 சதவீதத்தை சுவடில்லாமல் ஆக்கமுடியாதா என்ன? (தங்களுக்குள்ளேயே அடித்துக்கொண்டு அழிந்துவிடுவர், கவலை வேண்டாம்.. ஜீன் டிசைன் அப்படி! :unsure:)

  • கருத்துக்கள உறவுகள்

ஏலவே பல வருடங்கள் கால அவகாசம் வழங்கி.. ஆதாரங்களை எல்லாம் இல்லாமல் செய்து.. பெரியாக்கள் தங்கட வியாபாரத்தை நல்லாக் கொண்டு போறாங்கள். இதே தங்களுக்கு தேவையான இடமென்றால்.. முட்டையில் மயிர்புடுங்க வெளிக்கிட முதலே.. குண்டைக் கொண்டு போய் கொட்ட வெளிக்கிட்டிருவாங்கள். இது தான் மேற்குலகின் ராஜதந்திரமாம். மனித உரிமைகள் பாதுகாப்பாம். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நவீனன் said:

இலங்கைக்கு கால அவகாசம் வழங்கவேண்டியது அவசியம்

p11-208cbd393bb9e0affa1fa57fcbb64bf869842929.jpg

 

கொடுக்கவேண்டிய நிர்ப்பந்தம் மங்கள எதைக் கொடுத்தாரோ....... முகம் காய்ந்து இறுகிக் கவலை தெரிகிறது.Bildergebnis für Sad simily

எடுக்கவேண்டிய சந்தர்ப்பம் சர்மா எதை எடுத்தாரோ.... முகம் மலர்ந்த பிரகாசம் மின்னிப் பளிச்சிடுகிறது. Bildergebnis für love smileys

Edited by Paanch

  • கருத்துக்கள உறவுகள்

மங்கள  :  அண்ணன் "அலேக் சர்மாவுக்கு"  ஒரு ஊத்தப்பம் பார்சல்ல்ல்ல்ல்....! :cool:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.