Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜப்பானின் சீனி தொழிற்சாலை வவுனியாவில்

Featured Replies

ஜப்பானின் சீனி தொழிற்சாலை வவுனியாவில்

(எம்.எம்.மின்ஹாஜ்)

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இவ்வருடம் பல்வேறு முதலீடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதன்பிரகாரம் ஐப்பான் முதலீட்டின் பயனாக இவ்வருடம்  வவுனியாவில் சீனி தொழிற்சாலை ஒன்றை நிர்மாணிப்பதற்கு உத்தேசித்துள்ளதாக இலங்கை முதலீட்டு சபை தலைவர் உபுல் ஜயசூரிய தெரிவித்தார்.

1.jpg

கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள உலக வர்த்தக மையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில்,

வடக்கு, கிழக்கு மாகாணத்தில் பல்வேறு முதலீடுகளுக்கான வாய்ப்புகள் ஏற்படுத்தி கொடுக்கப்படவுள்ளன. இதன்படி இவ்வருடம் ஜப்பான் நிறுவனமொன்றின் முதலீட்டை கொண்டு வவுனியாவில் சீனி தொழிற்சாலை ஒன்று ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதுபோல வடக்கு கிழக்கு பகுதிகளில் பலதரப்பட்ட முதலீடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இந்நிலையில், கந்தளாய் சீனி தொழிற்சாலையின் செயற்பாடுகள் மூன்று நாடுகளின் கூட்டு பங்காண்மையின் கீழ் கொண்டு செல்வதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளன. இதன்படி இந்தியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுடன் இலங்கை கூட்டுச்சேர்ந்து பணிகளை முன்னெடுக்கவுள்ளது. 

கந்தளாய் சீனி தொழிற்சாலைக்கு முதலீடு செய்யப்பட்டுள்ள நிலையில் அதன் அடுத்த கட்ட நகர்வுக்கு விவசாய அமைச்சு பெரும் முட்டுக்கட்டையாக உள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/17341

  • கருத்துக்கள உறவுகள்

கரும்பு செய்கையை மேற்கொண்டால் இந்த தொழில் சாலைக்கு கொடுத்து  ஏதாவது சம்பாதிக்கலாம்  முதலில் தொழிற்சாலை அமையட்டும்  பல்  தரிசு நிலங்கள் சும்மாதான் கிடக்கிறது கரும்பை உற்பத்தி பண்ணினால் பலருக்கு தொழில் வாய்ப்பு கிட்டும் 

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்தி

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்தி .ஆனால் உண்மையில் எம்மவர் கைகளுக்கு வர வேண்டியது.என்ன நாம் இப்பவும் பழைய வீராப்படன்.அதாவது அடைந்தால் மாகா தேவி இலிலையேல் மரண தேவி என்ற நிலைப்பாடு.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, முனிவர் ஜீ said:

கரும்பு செய்கையை மேற்கொண்டால் இந்த தொழில் சாலைக்கு கொடுத்து  ஏதாவது சம்பாதிக்கலாம்  முதலில் தொழிற்சாலை அமையட்டும்  பல்  தரிசு நிலங்கள் சும்மாதான் கிடக்கிறது கரும்பை உற்பத்தி பண்ணினால் பலருக்கு தொழில் வாய்ப்பு கிட்டும் 

கரும்பு தரிசில வளருமாப்பா... முடியல்ல. tw_blush::rolleyes:

தென் தமிழீழத்தில் இருந்த கந்தளாய் சீனித் தொழிற்சாலைக்கு என்ன நடந்தது.. இதேன் இப்ப இங்க வருகுது..?!

கரும்பில் இருந்து சீனி வடிக்கும் ஜப்பான்.. அதே கரும்பில் இருந்து சீனி எடுத்த பின்.. உயிரியல் எரிவாயு.. உயிரியல் எரியெண்ணை தயாரிக்க ஏன் கற்றுக்கொடுக்கவில்லை..??! உலகில் கரும்பு உற்பத்தியில் முன்னிலையில் இருக்கும் பிரேசில் தான்.. உயிரியல் எரிபொருள் உற்பத்தியிலும் முன்னணியில் உள்ளது. ஜப்பான்காரனும்.. ஏதோ உள்நோக்கோடு தான்.

எங்களுக்கு கரும்புச் சீனியை விட.. புரக்டோஸ் சுவீட்னர்.. அல்லது தேன் தான் அவசியம்.. ஏனெனில்.. எமது மக்களின் உணவு வழக்கமும்.. அவர்களிடம் நீரிழிவு நோயின் தாக்கத்துக்கு முக்கிய காரணம். வவுனியாவில்.. தேன் உற்பத்திக்கு நல்ல வளம் உள்ளது. அதை ஊக்குவிக்கலாமே. 

கந்தளாயில் அமைந்த சீனித் தொழிற்சாலையால்.. அது என்ன உலக தர நகரமாகி விட்டதா..?! 

ரெம்ப அவசரப்பட்டு.. வரவேற்பதில் வல்லவர்களாக இருக்கும் நாம்.. முன் பின் யோசிப்பதில்லையோ..?!

இதே ஜப்பான்காரன் எமது போராட்ட காலத்தில்.. தேவையில்லாமல் தலைப்போட்டு.. எமது போராட்டத்தை சீரழிக்க உதவியதையும் நாம் மறந்து விட முடியாது..! ஜப்பானின் இணைத்தலைமை நாடுகள்.. இப்ப எங்க..?! இவ்வளவு மனிதப் படுகொலைகள் நடந்தும்.. அவை ஒரு வார்த்தையும் பேசாதது ஏன்..?! ஜப்பானின் சமாதானத் தூதுவருக்கு தமிழ் மக்களுக்கு நடந்த அநியாயங்கள் தெரியாதா... இருந்தும் ஜப்பான் ஐநாவில் நடந்து கொண்ட முறை என்ன..?! இப்படியாப்பட்ட ஜப்பான்... எங்களுக்கு உதவி செய்ய வருகுதென்றால்...... இப்ப பல வகையில் யோசிக்கனும் என்றாகி விட்டது.

வரவேற்பதில் தவறில்லை. ஆபத்துக்களையும் சுட்டிக்காட்டனும்... உணரனும். tw_blush: 

பிரித்தானியாவில்.. சீனிக்கு தனி வரி வந்திட்டுது. சீனி அதிகம் உள்ள பானங்களுக்கும் வரி. அதைவிட nhs தனி வரி போடுது. நாங்கள்....??????! :rolleyes:

Image result for sugar industry environmental pollution

இதுவும் சீனித் தொழிற்சாலைகளின் கழிவுகளை ஏரிகளில் கலக்க விடுவதால்.. வந்த வினை தான். வவுனியா போன்ற புரதத்திற்கு ஏரி மீன்களை நம்பி இருக்கும் சிறு நகர்களில்.. இப்படியான தொழிற்சாலைகள்.. வருவது.. சுற்றுச்சூழலுக்கு எவ்வகையான பாதிப்பை தரும் என்றும் ஆராயனும். tw_angry:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nedukkalapoovan said:

கரும்பு தரிசில வளருமாப்பா... முடியல்ல

ஹிங்குராணை பகுதியில் கரும்புத்தோட்டங்கள்  தரிசு நிலங்களை வளப்படுத்தி பயிர்செய்கிறார்கள் 
வயல் சதுப்பு நிலமாக இருப்பதை கூட  அவர்கள் பயன் படுத்துகிறார்கள்  அறுவடை முடிந்தவுடன் காலங்களுக்கு ஏற்ப பயிர் செய்க்கிறார்கள் மாற்றி மாற்றி பயி செய்து உழைக்கிறார்கள் 

மிகவும் சதுப்பாக உள்ள நிலங்களை மீண்டும் மண் இட்டு உழவி ஓரளவு சதுப்பை குறைத்து  கரும்பு செய்கிறார்கள் 

cult.jpg

banner_2.jpg

Edited by முனிவர் ஜீ

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, முனிவர் ஜீ said:

ஹிங்குராணை பகுதியில் கரும்புத்தோட்டங்கள்  தரிசு நிலங்களை வளப்படுத்தி பயிர்செய்கிறார்கள் 
வயல் சதுப்பு நிலமாக இருப்பதை கூட  அவர்கள் பயன் படுத்துகிறார்கள்  அறுவடை முடிந்தவுடன் காலங்களுக்கு ஏற்ப பயிர் செய்க்கிறார்கள் மாற்றி மாற்றி பயி செய்து உழைக்கிறார்கள் 

மிகவும் சதுப்பாக உள்ள நிலங்களை மீண்டும் மண் இட்டு உழவி ஓரளவு சதுப்பை குறைத்து  கரும்பு செய்கிறார்கள் 

cult.jpg

banner_2.jpg

சதுப்பு நிலம்.. நீர்ப்பிடிப்பானது. அது கரும்புச் செய்கைக்கு ஏற்வகையில் மாற்றி அமைக்கப்படலாம். ஆனால் நீர்ப்பிடிப்பற்ற தரிசு நிலம்.. தரிசு என்பது வரண்ட நிலம் என்றாகவே கொள்ளப்படுகிறது என்று நினைக்கிறம்.. அதில் கரும்புச் செய்கை கடினமானது. கரும்புச் செய்கைக்கு ஓரளவு நீர் அவசியம். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
Just now, nedukkalapoovan said:

சதுப்பு நிலம்.. நீர்ப்பிடிப்பானது. அது கரும்புச் செய்கைக்கு ஏற்வகையில் மாற்றி அமைக்கப்படலாம். ஆனால் நீர்ப்பிடிப்பற்ற தரிசு நிலம்.. தரிசு என்பது வரண்ட நிலம் என்றாகவே கொள்ளப்படுகிறது என்று நினைக்கிறம்.. அதில் கரும்புச் செய்கை கடினமானது. கரும்புச் செய்கைக்கு ஓரளவு நீர் அவசியம். :rolleyes:

நெடுக்கு அப்படி இல்லை தற்போது  குளங்களை  புண்ரமைத்து விட்டார்கள்  நெடுக்கு தரிசு நிலங்களை எல்லாம் வாய்க்கால் வெட்டி வருகிறார்கள்  அதான தரிசு நிலங்களை நீர் கொண்டு வளப்படுத்துவதில் சிக்கல் இல்லையே அதானால் விவசாயம் செய்யலாம் தானே

உதாரணம் கிழக்கில் கஞ்சிக்குடிச்சாறு , உன்னிச்சை குளம் இதானால் பல் நிலங்கள் மக்கள் வளப்படுத்தி பயிர் செய்கிறார்கள் ஏன் இதே போல் வன்னியில் எத்தனை குளங்கள் உள்ளன அவைகளை ஏன் பயன் படுத்தி பயிர்செய்கைமேற் கொள்ளக்கூடாது

ஆயுதம் உற்பத்தி செய்யும் நாடுகள் அது அழிவுக்குத்தான் என தெரிந்தும் அவைகளை உற்பத்தி செய்வதில்லையா இவைமனிதன் நுகரும் பொருட் கள் மக்களுக்கு  தொழில் வாய்ப்பு கூடும் அல்லவா நெடுக்கு 
 
  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, முனிவர் ஜீ said:

வன்னி பொதுவாக இரு போகச் செய்கைகளைச் செய்யும் நிலம். யாழ்ப்பாணத்தில் மழைவாரி பயிர்செய்கை தான் அதனால்.. அங்கு ஒரு போகமே அதிகம். வன்னி நிலம்.. பணப் பயிர்களை விட உணவுப் பயிர்செய்கைக்கு தான் உகந்தது.

அண்மைய ஆண்டுகளாக பிரேசிலில்.. உயிரியல் எரிபொருளை நோக்கிய பயிர்செய்கை அதிகரிக்க.. உலக அரங்கில் அதன் தாக்கம்.. உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பில் முடிந்தது. காரணம் நிலங்களை மக்கள் கூடிய வருமானம் தரும்.. பயிர்களுக்குப் பயன்படுத்தப் போக.. உணவுப் பயிர்செய்கை வீழ்ச்சியை நோக்கி நகரத் தொடங்கியது. அதனால்.. உலக அரங்கில்.. உணவின் விலை அதிகரித்தது.

வன்னி போன்ற வளமான நிலங்களை உணவுப் பயிர்செய்கையில் இருந்து கபளீகரம் செய்வதென்பது கொஞ்சம் யோசிக்க வேண்டிய விடயமே.

மேலும்.. கரும்புப் பயிர்செய்கைக்கு கோடையில்.. நீர் வழங்கக் கூடிய அளவுக்கு வன்னிக் குளங்களின் ஆழமும் நீர்க்கொள்ளளவும் இருக்கா என்பதும் கேள்விக் குறியே. அந்தளவுக்கு புனரமைக்கப்பட்டிருக்கா..?! வன்னியில் உள்ள சிற்றாறுகள் கூட கோடையில் வரண்டு விடும். மாரியில் தான். வன்னியில் சிறுபோகத்தின் போது அதிக நீர்த்தேவையற்ற பயிர்களையும்.. பெரும்போகத்தில் நெல் போன்ற வற்றையும் பயிர் செய்து வருகிறார்கள்.

இங்கு கரும்பின் வரவு என்பது... அதுவும் வெளிநாட்டு நிறுவனம் ஒன்றின் பெருமித்த வரவு என்பது... அந்த பிராந்திய மக்களின் சமூக வாழ்வில் பயிர் செய்கையில்.. குறிப்பிடத்தக்க செல்வாக்குச் செய்யும். அந்த வகையில்.. இது நன்கு நுட்பமாக ஆராயப்பட்டு அனுமதிக்கப்பட வேண்டிய ஒன்று.. என்பதே எங்கள் கருத்து முனிவர் ஜீ. 

சீனன் நேரடியா சுரண்டுவான். ஜப்பான் மறைமுகமாகச் சுரண்டும் நாடு. tw_blush::rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, nedukkalapoovan said:

வன்னி போன்ற வளமான நிலங்களை உணவுப் பயிர்செய்கையில் இருந்து கபளீகரம் செய்வதென்பது கொஞ்சம் யோசிக்க வேண்டிய விடயமே

நான்சொன்ன தரிசு நிலங்கள்  வாழ்வாதர பயிர்செய்கைகள் செய்யாமல் கிடந்த நிலங்கள்  நெல் , மரக்கறி வகைகள் செய்யாமல் இன்னும் பல ஆயிரம் ஏக்கர் கணக்கில் காணிகள் சும்மா தான் கிடக்கிறது அதை தான் சொல்ல வந்தது நெடுக்கு 

வன்னியில் நிறைய  குளங்கள் உண்டு அவை உரிய முறையில் தூர் வாரப்பட்டு மக்களின் சமூக நலன் நோக்கி   அங்கிருக்கும் விவசாயம் செய்யும் மக்களால்  பயிர் செய்கை மேற்கொள்ளப்படுமாக இருந்தால்  மக்களின் வாழ்க்கை தன்னிறவு பெறும் 

12 minutes ago, nedukkalapoovan said:

மேலும்.. கரும்புப் பயிர்செய்கைக்கு கோடையில்.. நீர் வழங்கக் கூடிய அளவுக்கு வன்னிக் குளங்களின் ஆழமும் நீர்க்கொள்ளளவும் இருக்கா என்பதும் கேள்விக் குறியே. அந்தளவுக்கு புனரமைக்கப்பட்டிருக்கா..?! வன்னியில் உள்ள சிற்றாறுகள் கூட கோடையில் வரண்டு விடும். மாரியில் தான். வன்னியில் சிறுபோகத்தின் போது அதிக நீர்த்தேவையற்ற பயிர்களையும்.. பெரும்போகத்தில் நெல் போன்ற வற்றையும் பயிர் செய்து வருகிறார்கள்.

கோடையில் வேறு பயிர்கள் செய்கிறார்கள்  நெடுக்கு இப்போது 
இந்த வருடம் கிழக்கில் ம்ழை இல்லாமல் நெல் அறுவடை பெரும் நஸ்டம்  காலம் தாழ்த்தி மழை 
 3 நாட் களாக மழை இங்கே அறுவடைகாலம்   தற்போது  பயிர்ச்செய்கைகளை மாற்றி மாற்றி செய்ய சொல்லி அறிக்கை விட்டு இருக்கிறார்கள் ஒரு பயிர் மட்டும் செய்யாமல் பல பயிர்கள் செய்ய சொல்லி 

16 minutes ago, nedukkalapoovan said:

சீனன் நேரடியா சுரண்டுவான். ஜப்பான் மறைமுகமாகச் சுரண்டும் நாடு

உன்மைதான் ஆனால் சில நாடுகள் ஒப்பந்தம் போட்டுக்கொண்டுதானே  தொழில் தொடங்குறார்கள்  குறிப்பிட்ட காலம் முடியும் நேரத்தில் ஆலை அரசு உடமையாக்கப்டும் 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, முனிவர் ஜீ said:

வன்னியில் நிறைய  குளங்கள் உண்டு அவை உரிய முறையில் தூர் வாரப்பட்டு மக்களின் சமூக நலன் நோக்கி   அங்கிருக்கும் விவசாயம் செய்யும் மக்களால்  பயிர் செய்கை மேற்கொள்ளப்படுமாக இருந்தால்  மக்களின் வாழ்க்கை தன்னிறவு பெறும்

ஆனால் பிரச்சனை ஜப்பான்.. குளங்களை புனரமைக்கவோ.. அல்லது புதிய குளங்களை நீர்நிலைகளை அமைக்கவோ.. முன்வரவில்லை. மாறாக.. உள்ள வளத்தை திருடத்தான் வருகிறார்கள். அதுதான் சந்தேகமாக உள்ளது. இவர்களின் கடந்த காலச் செயற்பாடுகள் தமிழ் மக்களுக்கு நன்மையாகவும் அமையவில்லை. மாறாக.. தங்களின் ஆக்கிரமிப்பை இலகு படுத்த சிங்கள ஆக்கிரமிப்பின் கீழ் தமிழர்களை கொண்டு வருவதே நோக்கமாக இருந்துள்ளது.

அந்த வகையில்.. ஜப்பான் + சிங்கள கூட்டுத்திட்டங்கள்.. கூட்டுச் சதியாகக் கூட இருக்கலாம்.. என்ற நோக்கிலும் நாம் எமது வளம்.. அதன் நீண்ட கால பாதுகாப்பு.. பயன்பாடு... தொடர்பில்.. மிகக் கவனமாக இருக்க வேண்டும். இவர்கள் காலூண்றி இலாபம் கண்டுவிட்டால்.. பின்னர் இலகுவில் போக மாட்டார்கள். இரண்டு உலகப் போர்களின் தோற்றுவாயில் ஜப்பானும் கூட்டுப்பங்காளி. tw_blush::rolleyes:

ஏன் உந்த படிச்ச பட்டதாரிகள்.. தாங்களா சிறிய முதலீடுகளுடன் கூடிய.. பிற சீனி தயாரிப்புக்களை செய்யக் கூடாது. கரும்புச் சீனியை விட..  புரக்ரோஸ் சீனிச் சாறு சுவை கூடினதும்.. உடலுக்கும் நன்மையானது. இதனை கரட் பீற்றூட்டில் இருந்தும் தயாரிக்கலாம். ஏன் அந்தப் பயிர்களை வளர்க்க...  ஊக்கு வித்து.. இப்படியான.. பெரும் ஆக்கிரமிப்புக்களை தடுக்கக் கூடிய சிறு போட்டிகளை உருவாக்கக் கூடாது. நாம் போடியற்ற சூழலை உருவாக்கி வைச்சிருப்பதும்.. இவ்வாறான பெரும் நாடுகளின் இலகு வருகைக்கு தூண்டுதலாக உள்ளது. tw_blush:

நாம் ஒரு முதலீட்டுக்கு எதிரான போட்டியான சூழலை.. உருவாக்கினால்.. அவன் யோசிப்பான்... போட்டி இல்லாத சூழலில்.. அவன் தான் தான் ராஜான்னு வருவான்.  போட்டியை உருவாக்க வேண்டிய படிச்சவர்களின் சமூகக் கடமை. ஆனால்..  அவர்களே மடையர்களாக உள்ள போது.... பாவம் பாமர மக்களும்... மண்ணும். :rolleyes:tw_angry:

Image result for cane sugar vs beet sugar

Image result for cane sugar vs beet sugar

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, nedukkalapoovan said:

ஏன் உந்த படிச்ச பட்டதாரிகள்.. தாங்களா சிறிய முதலீடுகளுடன் கூடிய.. பிற சீனி தயாரிப்புக்களை செய்யக் கூடாது. கரும்புச் சீனியை விட..  புரக்ரோஸ் சீனிச் சாறு சுவை கூடினதும்.. உடலுக்கும் நன்மையானது. இதனை கரட் பீற்றூட்டில் இருந்தும் தயாரிக்கலாம். ஏன் அந்தப் பயிர்களை வளர்க்க...  ஊக்கு வித்து.. இப்படியான.. பெரும் ஆக்கிரமிப்புக்களை தடுக்கக் கூடிய சிறு போட்டிகளை உருவாக்கக் கூடாது. நாம் போடியற்ற சூழலை உருவாக்கி வைச்சிருப்பதும்.. இவ்வாறான பெரும் நாடுகளின் இலகு வருகைக்கு தூண்டுதலாக உள்ளது. tw_blush:

நான் ஒன்று சொல்லவா வடக்கு கிழக்கில் மது ,..... இதர பொருட் கள் தான் அதிக விற்பனை தரவு  சொல்லுது  கரும்பில் வேற ஏதாவது மது சார்ந்தவை தயாரிக்க யோசிக்கலாம்  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

அல்லது சோளச் சீனியும் உற்பத்தி செய்யலாம்.

Image result for corn sugar vs cane sugar

வன்னியில் சோளம் சிறுபோகப் பயிராக உள்ளது. இதில் இருந்து நல்ல வளமான புரக்ரோஸ் சுவீட்னர் தயாரிக்க முடியும். உடலுக்கு நன்மையானது... ஆனாலும் அதிக புரக்ரோஸ் செறிவு பாதிப்பானது. நுகவோரின் உடல் தேவைக்கு ஏற்ப தயாரிப்பதே சிறந்தது. 

10 minutes ago, முனிவர் ஜீ said:

நான் ஒன்று சொல்லவா வடக்கு கிழக்கில் மது ,..... இதர பொருட் கள் தான் அதிக விற்பனை தரவு  சொல்லுது  கரும்பில் வேற ஏதாவது மது சார்ந்தவை தயாரிக்க யோசிக்கலாம்  tw_blush:

கரும்புச் சக்கையில்.... இருந்து மதுபானம் தயாரிக்கலாம். பிரேசில் அதனையே.. எரிபொருளாக்கி விற்குது. எங்கடையள் குடிச்சு அழியுது. tw_blush:

Image result for ethanol from sugarcane

Image result for ethanol from sugarcane

ஜப்பான்காரன் தன்ர வியாபாரத்துக்கு தமிழனையும் சிங்களவனையும் மோதவிட்டு.. ஆக்கிரமிக்க விட்டு பாவிக்கிறானே தவிர.. எங்களின் நன்மை பற்றி யோசிக்கல்ல. அதனை நாங்க தான் யோசிக்கனும்.. அமுலாக்கனும். அடுத்தவனை வரவேற்கும் போது எப்பவும் எச்சரிக்கையா இருக்கனும். உலக சீனித் தேவை அதிகரித்து வரும் நிலையில்.. ஜப்பான் அதனை தான் குறி வைக்கிறது. ஆனால்.. நமக்குத் தேவை.. நல்ல சுற்றுச்சூழலும்.. இலாபமும். நாம் ஏன் உயிரியல் எரிபொருளையும் ஆக்கக் கூடாது. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு எங்கட வளத்தின் பெறுமதி தெரியவில்லை. அதனால் தான் காட்டிக்கொடுத்து நாமே நம் வளத்தை ஆட்சியை எதிரிகளுக்கு தாரை வார்த்தோம்.  எனியும் அதைச் செய்யாமல் மதிநுட்பமாகச் சிந்திப்போம். அடுத்தவன் எங்களிடம் எதனையும் கொண்டு வாறான் என்றால்.. வறுக வருகிறான் என்பது பொருள். அதாவது தூண்டில் புழுவாக எங்களை ஆக்கி அவன் திமிங்கலம் பிடிக்க வாறான் என்பது பொருள். நாம் தூண்டில் புழுவாவதோடு மகிழ்ந்திருப்பதை விடுத்து அவனுக்கு போட்டியா.. தூண்டில் போட்டு குறைஞ்சது சுறாவாவது பிடிக்க போட்டி போட்டால்.. அவன் சிந்திக்க வெளிக்கிடுவான்.  நாமும் சுறாவில் இருந்து திமிங்கலம் நோக்கி சிந்திப்பம். tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில் இருக்கும் அனேக மக்கள் மத்தியில் சீன மற்றும் ஜப்பானியர்களின் தயாரிப்புக்களில் நம்பிக்கை இருப்பதில்வை..காரணம் நிறைய கலப்படம் இருப்பதாக சொல்லிக் கொள்கிறார்கள்..உண்மை பொய் என்பதற்கு அப்பால் அனைவரும் பயன் பெற்றால் நன்று.

  • கருத்துக்கள உறவுகள்

இதை வாசிச்சுப்போட்டு ஜப்பான்காரன் ஹம்பாந்த்தோட்டைக்கு தொழிட்சாலையை மாத்தப்போறான் lol.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.