Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுமுறைக்கு இப்படியும் ஒரு காரணமா? - வைரலாகும் பள்ளி மாணவனின் கடிதம்

Featured Replies

அநேகமாக நாம் ஆங்கிலத்தில் எழுதிய முதல் கடிதம் லீவ் லெட்டராகத்தான் இருக்கும். பள்ளியில் படிக்கும்போது என்ன காரணத்தால் நமக்கு விடுமுறை தேவைப்பட்டாலும் எழுதும் காரணம் ஒன்றுதான். i am suffering from fever.  அது மாறவே மாறாது.

ஒரே நாளில் காய்ச்சல் வந்து அதேநாளில் அது குணமாகியும்விடும் ஆச்சர்யத்தைச் சந்திக்காத மாணவர்களே இருக்க முடியாது. தேர்வு நேரத்தில் வரும் காய்ச்சலை 'எக்ஸாம் ஃபீவர்' என்று சொல்வதைப் போல விடுமுறைக்காக வரும் காய்ச்சலை 'லீவ் ஃபீவர்' என்றும் சிலர் சொல்வர். உடல்நிலை சரியில்லை என்று சொன்னால்தான் ஆசிரியர் விடுமுறை அளிப்பார் என்று நினைத்து இந்தக் காரணத்தை பல மாணவர்கள் எழுதுவார்கள். இன்னும் சில மாணவர்களுக்கு வயிற்று வலி என்பதையோ, உறவினர் திருமணத்திற்குச் செல்லவிருக்கிறோம் என்பதையோ ஆங்கிலத்தில் எழுதத் தெரியாமல் i am suffering from fever என்றே எழுதுவர். ஆனால் ஏழாம் வகுப்பு படிக்கும் ஈஸ்வரன் மட்டும் இதில் விலக்கு.

தேனி மாவட்டம், வருஷ நாடு அருகில் இருக்கும் பூசணியூத்து எனும் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் படிக்கிறார் ஈஸ்வரன். ஈஸ்வரனின் வீடு, பள்ளியிலிருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தள்ளியிருக்கும் சிங்கராஜபுரம். அங்கிருந்து பள்ளிக்கு வருவதற்கு பேருந்து வசதி கிடையாது. ஆட்டோ மூலமே செல்லமுடியும். ஆனால் ஈஸ்வரன் ஆட்டோவை எல்லாம் எதிர்ப்பார்ப்பது இல்லை. நடந்தே பள்ளிக்கு வந்துவிடுகிறான். ஈஸ்வரனின் அண்ணன்களும் அதே பள்ளியில்தான் படிக்கிறார்கள். மிக எளிமையான குடும்பத்தைச் சேர்ந்த ஈஸ்வரன் நன்றாகப் படிக்கும் மாணவராக மட்டுமல்லாமல் சக மாணவர்களோடு தோழமையோடும் உதவும் தன்மையோடும் பழகுவார்.

அந்தப் பள்ளியின் ஆசிரியர் வி.வெங்கட் இரண்டு நாட்களுக்கு முன், வகுப்பில் வருகைப் பதிவு எடுத்துக்கொண்டிருந்தார். அப்போது அவரிடம் ஒரு மாணவர் விடுப்பு விண்ணப்பம் ஒன்றைக் கொடுக்கிறார். அந்த வகுப்பில் படிக்கும் மாணவர் ஈஸ்வரன் தனக்கு ஒருநாள் விடுப்பு கேட்டு எழுதிய கடிதத்தை தன் நண்பனிடம் கொடுத்து அனுப்பியிருந்தார்.

மாணவர்கள் எழுதும் வழக்கமான விடுப்பு விண்ணப்பம்தானே என்று நினைத்து அதைப் படித்த ஆசிரியருக்குப் பெரும் ஆச்சர்யத்தை அளித்தது அந்தக் கடிதம். தன் அம்மாவுக்கு உடல்நிலைச் சரியில்லாத காரணத்தால் தன் வீட்டில் இருக்கும் கால்நடைகளைக் கவனித்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக விடுமுறை கேட்டு விடுப்பு விண்ணப்பம் அனுப்பியிருக்கிறார் ஈஸ்வரன்.  தனது விடுமுறைக்கான உண்மையான காரணத்தையே ஈஸ்வரன் எழுதியிருந்ததைக் கண்டு திகைத்தார் ஆசிரியர் வெங்கட்.  

leave letter


"இந்தக் கடிதத்தைப் படித்ததும் ஒரு சில நிமிடங்கள் ஆச்சர்யத்தில் உறைந்துவிட்டேன். இப்படி ஒரு காரணம் எழுதிய லீவ் லட்டரை நான் முதன்முதலாக இப்போதுதான் பார்க்கிறேன். அடுத்த நாள் பள்ளிக்கு வந்த ஈஸ்வரனிடம் வழக்காக இந்தக் காரணத்தை எழுதமாட்டார்களே... நீ எப்படி எழுதினாய், என்றேன். அதற்கு மிக இயல்பாக, 'சார், நீங்கதானே உண்மை எதுவாக இருந்தாலும் அதைப் பேசுங்க என்பீர்கள்' என்றான். எனக்கு பதில் பேசுவதற்கு வார்த்தை கிடைக்கவில்லை. கண்களில் என்னையறியாமல் நீர் வழிந்தது. அதை மாணவர்கள் முன் காட்டிக்கொள்ளாமல், ஈஸ்வரனின் கடிதத்தைப் பற்றி சிலாகித்துக் கூறினேன். எப்போதோ நாம் சொல்லும் வார்த்தை மாணவர்களின் மனதில் எவ்வளவு ஆழமாகப் பதிகிறது என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்துகொண்டேன். இன்னும் பல மடங்கு பொறுப்பு உணர்வுடன் செயல்பட வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ளவும் முடிந்தது" என்கிறார் ஆசிரியர் வெங்கட்.

ஆசிரியர் சொல்வது உண்மைதான். ஈஸ்வரனின் செயல்பாட்டுக்கு ஆசிரியர் - மாணவர் உறவு ஆரோக்கியமாக இருப்பதே முதன்மையான காரணம். கால்நடைகளைப் பார்த்துகொள்வதற்காக விடுப்பு எடுக்கிறேன் என்று சொல்வதற்கு பின்னால், அந்தக் காரணத்தின் சூழலை தன் ஆசிரியர் புரிந்துகொள்வார் எனும் நம்பிக்கையே இருக்கிறது. இந்த நம்பிக்கை ஓரிரு நாள்களில் வந்துவிடக் கூடியது அல்ல. ஜனநாயகத் தன்மையோடு வகுப்பறையை ஆசிரியர் கொண்டு செல்லும்போதே இது நிகழும். அதற்கான வாய்ப்புகளை அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஏற்படுத்திக்கொடுத்திருப்பதும் பாராட்டுக்கு உரியது. இதுபோன்ற சூழல்களே மாணவர்களின் படைப்புத் திறனை வளர்த்தெடுத்து புதிய விஷயங்களைக் கண்டுபிடிக்க உதவும்.

உண்மையின் ஒளியில் பயணம் செய்வதை விடவும் மகிழ்வானது எதுவுமில்லை. உற்சாகத்துடன் அந்தப் பயணத்தில் இருக்கும் ஈஸ்வரனுக்கு அன்பு வாழ்த்துகளைச் சொல்வோம்.

http://www.vikatan.com/news/tamilnadu/83251-a-school-students-leave-letter-goes-viral-in-social-media.html

  • கருத்துக்கள உறவுகள்

நான் வேலைபார்த்த தொழிற்சாலையில் தொழிலாளி ஒருவரினால் விடுமுறை கோரி எழுதப்பட்ட கடிதங்களில் 38 கடிதங்கள் பல்லுப் புடுங்கிய காரணத்தைக் கொண்டிருந்தது. :grin:

  • தொடங்கியவர்
1 hour ago, Paanch said:

நான் வேலைபார்த்த தொழிற்சாலையில் தொழிலாளி ஒருவரினால் விடுமுறை கோரி எழுதப்பட்ட கடிதங்களில் 38 கடிதங்கள் பல்லுப் புடுங்கிய காரணத்தைக் கொண்டிருந்தது. :grin:

இருக்கிறதே 32 பல்லுத்தானை. எப்படி 38 பல்லு புடுங்கினவராம்?

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் எல்லாம் ஸ்கூலுக்கு லீவ் லெட்டர் குடுக்கிற ஆட்கள் இல்லை:101_point_up:.ஏன் நேற்று வரேல்லை என்டால் சும்மா:10_wink: தான் டீச்சன் என்று தைரியமாக சொல்கின்ற ஆட்கள்:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

மாதம் ஒரு நாள் மாணவிகள் சுகயீனம் காரணமாய் நிற்பதுபோல் 
எனக்கு மாதம் இருநாள் நிற்கவேண்டும் .......
காரணம் தோட்ட காவல். 9 பேர்கள் ஓர் இடத்தில் தோட்டம் செய்தோம் 
குரங்கு தொல்லை அதிகம் .. ஆதலால் பகலில் எப்படியும் காவல் வேண்டும் 
9 நாளில் ஒருக்கா எனது முறை வரும் ..எப்படியும் ஒன்று இரண்டு சனி- ஞாயிறில் விழும் 

மீதிக்கு கூட படிக்கும் நண்பனே கடிதம் எழுதுவான் 
அம்மாவின் பெயரை போட்டு கையெழுத்தும் இட்டு விடுவான். 
சுகயீனம் தவிர்த்து வேறு ஒன்றும் எழுதியது கிடையாது. 

7 hours ago, ரதி said:

நாங்கள் எல்லாம் ஸ்கூலுக்கு லீவ் லெட்டர் குடுக்கிற ஆட்கள் இல்லை:101_point_up:.ஏன் நேற்று வரேல்லை என்டால் சும்மா:10_wink: தான் டீச்சன் என்று தைரியமாக சொல்கின்ற ஆட்கள்:rolleyes:

7-8ஆம் வகுப்பை தாண்டினால் 
பெட்டைகளை பெருசா கேள்வி கேட்க மாட்டினம். 

எங்களுக்குதான் வில்லங்கம். 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Maruthankerny said:

மாதம் ஒரு நாள் மாணவிகள் சுகயீனம் காரணமாய் நிற்பதுபோல் 
எனக்கு மாதம் இருநாள் நிற்கவேண்டும் .......
காரணம் தோட்ட காவல். 9 பேர்கள் ஓர் இடத்தில் தோட்டம் செய்தோம் 
குரங்கு தொல்லை அதிகம் .. ஆதலால் பகலில் எப்படியும் காவல் வேண்டும் 
9 நாளில் ஒருக்கா எனது முறை வரும் ..எப்படியும் ஒன்று இரண்டு சனி- ஞாயிறில் விழும் 

மீதிக்கு கூட படிக்கும் நண்பனே கடிதம் எழுதுவான் 
அம்மாவின் பெயரை போட்டு கையெழுத்தும் இட்டு விடுவான். 
சுகயீனம் தவிர்த்து வேறு ஒன்றும் எழுதியது கிடையாது. 

7-8ஆம் வகுப்பை தாண்டினால் 
பெட்டைகளை பெருசா கேள்வி கேட்க மாட்டினம். 

எங்களுக்குதான் வில்லங்கம். 

மருதர்,நான் உதுக்காக ஒரு நாளும் லீவ் எடுக்கேல்ல

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Maruthankerny said:

7-8ஆம் வகுப்பை தாண்டினால் 
பெட்டைகளை பெருசா கேள்வி கேட்க மாட்டினம். 

எங்களுக்குதான் வில்லங்கம். 

ம் உன்மைதான்:2_grimacing: நம்மளைத்தான் வாத்தி கிண்டி கிழங்கெடுப்பது கடிதம் கொண்டு போகாட்டால் கம்பால காற்சட்டையில் புழுதி பறக்கும் வரைக்கும் வெழுப்பது :unsure:

இருக்கிற பெரிசுகளை அடிக்கடி சாகடிச்சு லீவு எடுக்கிறது வழமை தானே நம்மூர்லtw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

சின்னப் பிள்ளையளின் மனசு வெள்ளை. அதில் கரியை பூசுவது வளர்ந்ததுகள் சிலது செய்யுற வேலை.

இந்தப் பையனின் அந்த வெள்ளை மனசு வெள்ளையாகவே இருக்க விடுமா இந்த உலகம்.. அது கிடக்க..... அவனின் வெள்ளை மனசை புரிந்து கொண்டு செயற்பட்ட எல்லாரையும் பாராட்டத்தான் வேண்டும். tw_blush:

எங்கட வாத்திமார் என்றால்.. கொம்மாக்கு வருத்தம் என்றால் கொப்பர் என்னடா செய்யுறார் எருமை மாடு.. என்று பேசிட்டு கடிதத்தை நமக்கு முன்னாடியே கிழிச்சும் வீசக் கூடியதுகள். tw_blush::rolleyes: 

ஆனால்.. இப்ப ஊரில பாடசாலை நடைமுறைகளில் சில நல்ல மாற்றங்கள் வந்திருக்குது. விடுமுறை தொடர்பில் பெற்றோர் அறிவுக்கவும் அறிவுறுத்தவும் படுகிறார்கள். கையடக்கத் தொலைபேசிக்கு மாணவர் வரவில்லை என்றால்.. தகவல் போகிறது. அந்தளவுக்கு ஊரில் நகர்புற பாடசாலைகள்.. மேற்கத்தைய நல்ல வழிமுறைகள் சிலதை பின்பற்ற ஆரம்பிச்சிருக்கினம். இதுவும் பாராட்டப்படனும். tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Surveyor said:

இருக்கிறதே 32 பல்லுத்தானை. எப்படி 38 பல்லு புடுங்கினவராம்?

அவர் ஓரளவுக்குப் பார்த்து எழுதவும், எழுத்துக்கூட்டிப் படிக்கவும் தெரிந்தவர். அநுபவத்தால் இயந்திர இயக்குனராக உயர்ந்த திறமைசாலி, ஆரம்பத்தில் விடுமுறையை வேண்டி யாரோ ஒருவர் அவருக்கு எழுதிக்கொடுத்த விடுமுறைக் கடிதத்தைப் பார்த்து எழுதி அப்படியே அனுப்பிவிடுவது அவர் வழக்கம். தானம் கொடுத்த மாட்டைப் பல்லைப் பிடித்து பார்க்கக்கூடாது என்ற பழமொழிக்கு இணங்க விடுமுறை வேண்டி எழுதிய கடிதங்களில் உள்ள பற்கள் எத்தனை என்று  அவர் பார்ப்பதில்லை என நினைக்கிறேன். :grin: :grin:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.