Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

அழகோ அழகு 

 

 

பள்ளிச் சிறுமி  பருவம்  அடைந்ததும்  பேரழகு

 

பருவப் பெண் மண மேடையில் இன்னும் அழகு

 

மணப்பெண்ணுக்கு  மாலையிடட  மணமகன் அழகு

 

மணமக்களுக்கு முதற்குழந்தை பரிசு பெற்ற  அழகு

 

 

அழகுக்கு குழந்தையின்   மழலை ப் பேச்சு   அழகு

 

தத்தி த்தவளும் மழலையின்  முதலடி அழகு

 

தத்தி நடைபயிலும்  மழலையின்  ஒவ்வொரு அசைவும் அழகு

 

அழகுக்கு அழகு சேர்க்கும் பெண் குழந்தை இன்னும் அழகு

 

 

 புரிந்து நடக்கும்  மனையாள்  ஆடவனுக்கு அழகு

 

பெற்றோருக்கு  முதற் குழந்தை பெருமித  அழகு

 

என் பையன் என் பொண்ணு என்ற அப்பாக்கு கர்வம் கொண்ட  அழகு

 

  ஆண்  பிள்ளையும் பெண் மகவும் கொண்ட குடும்பம்  பூரண அழகு

 

 

மகிழ்வான குடும்பம்  பிறர் பார்வைக்கு அழகு

 

அன்பான மனைவியும் பண்பான கணவனும் ஊருக்கு அழகு

 

இன்  சொல்லும் உபசரிப்பும்  ஊர் மண்ணுக்கு அழகு

 

 இயற்கை வளம் கொண்ட  கிராமங்கள் அந்த நாட்டுக்கு அழகு

 

 

நாடுகளின்  நல்லாட்சி  நல்லரசனுக்கு  அழகு  

 

 நல்லரசனின்  ஆடசியில்  மதி நுட்ப மந்திரி அழகு 

 

மந்திரியின் உதவிக்கு  மெய்க்  காப்பாளர்  அழகு 

 

காவலர்களின் நேர்மை   ச ட் டம்   ஒழுங்குக்கு அழகு 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அழகில் ஒரு கவிதை வடித்த நிலாமதி அக்காவுக்கு நன்றி 

  ஆண்  பிள்ளையும் பெண் மகவும் கொண்ட குடும்பம்  பூரண அழகு

எனக்கு இரு பையன்கள், இதுவும் அழகாகத்தான் உள்ளது 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அழகுக்கு குழந்தையின்   மழலை ப் பேச்சு   அழகு

 

தத்தி த்தவளும் மழலையின்  முதலடி அழகு

 

தத்தி நடைபயிலும்  மழலையின்  ஒவ்வொரு அசைவும் அழகு

 

அழகுக்கு அழகு சேர்க்கும் பெண் குழந்தை இன்னும் அழகு

 

எனக்கு இதுதான் பிடித்திருக்கு சகோதரி....!  tw_blush:

Posted

அக்கா, மொத்தத்தில் உங்கள் கவிதை அழகு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அழகை பட்டியலிட்ட....  நிலாமதி அக்காவின்  கவிதை,  பேரழகு.:)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அழகான கவிதை நிலாமதி எழுதஎழுத இன்னும் மெருகேறும் தொடருங்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.