Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தந்தையை திருத்த முயன்ற மகள் : தந்தையின் கொடூரத்தால் மகள் பலி : யாழில் அதிர்ச்சி சம்பவம்

Featured Replies

தந்தையை திருத்த முயன்ற மகள் : தந்தையின் கொடூரத்தால் மகள் பலி : யாழில் அதிர்ச்சி சம்பவம்

 

 

யாழ்ப்பாணம், அளவெட்டி மத்தியில் பெற்ற மகளை தீ மூட்டி எரித்துக் கொன்ற  தந்தையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. father-daughter.jpg

தந்தையால் தீ மூட்டப்பட்டு கடுமையான தீக்காயங்களுக்கு உள்ளான யுவதி ஒருவர் ஒரு வாரத்தின் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

யாழ் அளவெட்டி மத்திப் பகுதியில் இடம்பெற்ற இச் சம்பவத்தில் திருவளங்கன் ஜனனி என்ற 27 வயது யுவதி பரிதாபகரமாக உயிரிழந்தாள்.

குறித்த யுவதி கடந்த ஒருவார காலமாக யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

  தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து தொல்லை தரும் தனது தந்தையை திருத்துவதற்காக ஜனனி முயன்றுள்ளார். 

இருந்தும் அவர் திருந்தாத காரணத்தால் தனது உடலில் பெற்றோலை ஊற்றி தீ வைக்க முயன்றார். அப்போது ஜனனியின் தாயார் தனது மகளை கட்டிப் பிடித்துக் காப்பாற்றி ” உன்னால் தான் நான் உயிர் வாழ்கின்றேன்” என கத்தியுள்ளார். 

 இதனால் ஜனனி தற்கொலை முயற்சியைக் கைவிட்டு பெற்றோலை கழுவுவதற்காக குளிப்பதற்கு கிணற்றடிக்குச் சென்ற போது ”நீ இவ்வளவுக்கு துணிந்து விட்டாயா?” என கூறிக் கொண்டு ஜனனியின் உடலில் தந்தை தீக் குச்சியைக் கொழுத்தி எறிந்துள்ளார். 

உடனடியாக ஜனனியின் உடல் தீப் பிடித்து எரிந்துள்ளார். தாயார் கத்திச் சென்று அதை அணைக்க முற்பட்டும் பயனளிக்கவில்லை. 

அங்கு கூடிய அயலவர்கள் ஜனனியின் உடலில் பிடித்த தீயை ஒருவாறு அனைத்து யுவதியை தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். 

அங்கிருந்து யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட ஜனனி சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துள்ளார். 

 

தற்போது தந்தை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

http://www.virakesari.lk/article/18625

2 minutes ago, நவீனன் said:

இதனால் ஜனனி தற்கொலை முயற்சியைக் கைவிட்டு பெற்றோலை கழுவுவதற்காக குளிப்பதற்கு கிணற்றடிக்குச் சென்ற போது ”நீ இவ்வளவுக்கு துணிந்து விட்டாயா?” என கூறிக் கொண்டு ஜனனியின் உடலில் தந்தை தீக் குச்சியைக் கொழுத்தி எறிந்துள்ளார். 

நானும் இன்றைய தினசரியில் வாசித்திருந்தேன்.

மொக்குப்பெட்டை // அப்பனை பெட்ரோல் ஊத்தி கொளுத்தியிருக்கணும்.tw_rage:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படிப்பட்ட கொடூர  தந்தையர்களை நடுவீதியில் வைத்து கல்லால் எறிந்து தண்டனை கொடுக்க வேண்டும். இதனை பார்த்தாவது ஏனையவர்கள் திருந்த வேண்டும்...... 

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, குமாரசாமி said:

இப்படிப்பட்ட கொடூர  தந்தையர்களை நடுவீதியில் வைத்து கல்லால் எறிந்து தண்டனை கொடுக்க வேண்டும். இதனை பார்த்தாவது ஏனையவர்கள் திருந்த வேண்டும்...... 

எப்பண்ணா..மதம் மாறினியள்...அது அ வயின்ரை சட்டமல்லோ.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, alvayan said:

எப்பண்ணா..மதம் மாறினியள்...அது அ வயின்ரை சட்டமல்லோ.....

நாங்கள் ஊரிலை நாயளுக்கு கல்லாலைதான் எறியிறனாங்கள்..

  • கருத்துக்கள உறவுகள்

ஆணாதிக்க திமிரில் சிக்கி ........
நாளும் நாளும் எத்தனையோ 
பெண்கள் உலகில் 
வேறு வேறு வடிவில் சாகிறார்கள்.

இவர்களுடைய தந்தையை 
ஒரு கொலைகாரனாக ஆக்கியது 
ஆம்பிளை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் 
எனும் ஆணாதிக்க சமூகம்தான்.

பெண்களை மதிக்கும் படி 
சொல்லிக்கொடுக்கும் ஒரு மதம் 
உலகில் புதிதாக தோன்றவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

 

5 hours ago, Maruthankerny said:

பெண்களை மதிக்கும் படி 
சொல்லிக்கொடுக்கும் ஒரு மதம் 
உலகில் புதிதாக தோன்றவேண்டும்.

 

மதம் எதற்கு? ஒரு மனிதனே வந்தான்! செயலிலும் காட்டினான்!! அவனை அழித்துவிட்டதில்... இன்று தமிழர் எனச் சொல்லிவாழும் எங்கள் அனைவருக்கும் ஏதோ ஒரு வகையில் பங்குண்டு. :( :shocked: 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.