Jump to content

காரசாரமான காளான் உருளைக்கிழங்கு ஃபிரை

Recommended Posts

பதியப்பட்டது

காரசாரமான காளான் உருளைக்கிழங்கு ஃபிரை

அசைவ உணவுகளைப் போன்றே சுவையைக் கொடுக்கும் காளானுக்கும் நிறைய பிரியர்கள் உள்ளனர். இன்று காளான், உருளைக்கிழங்கை பயன்படுத்தி பிரை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

காரசாரமான காளான் உருளைக்கிழங்கு ஃபிரை
 
தேவையான பொருட்கள்:

காளான் - 2 கப்
உருளைக்கிழங்கு - 2
வெங்காயம் - 1 கப்
கிராம்பு - 2
பூண்டு - 2
எண்ணெய் - தேவைக்கு
மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

201704061513348206_Mushroom-potato-fry._

செய்முறை:

* காளானை துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

* உருளைக்கிழங்கை பொடியாக நறுக்கி நன்றாக கழுவி வைக்கவும்.

* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* பூண்டை தண்டி வைக்கவும்.

* ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பூண்டு, கிராம்பு போட்டு தாளித்த பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் மிளகு தூள் சேர்த்து கிளறி, நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து வதக்க வேண்டும்.

* உருளைக்கிழங்கு வேகும் அளவு சிறிது தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் மூடி போட்டு வேக வைக்க வேண்டும்.

* 10 நிமிடம் ஆன பின்பு அத்துடன் காளானை போட்டு கிளறி, மூடி வைத்து 8 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

* காளான் மற்றும் உருளைக்கிழங்கானது நன்கு வெந்ததும், அதில் உப்பு, கொத்தமல்லி தழை தூவி நன்கு கிளறி இறக்கவும்.

* சுவையான காளான் உருளைக்கிழங்கு ஃபிரை ரெடி!!!

http://www.maalaimalar.com

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இது அப்பப்ப செய்யும் ஆயிட்டம். ஒரு பொரித்த மிளகாயுடன் பிட்டுக்கு அந்தமாதிரி இருக்கும்....!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, suvy said:

இது அப்பப்ப செய்யும் ஆயிட்டம். ஒரு பொரித்த மிளகாயுடன் பிட்டுக்கு அந்தமாதிரி இருக்கும்....!  tw_blush:

காளான் கறி சுவையாகவே இருக்கும்.ஆனால் ஒன்றுக்குமே உதவாத உருளைக்கிழங்கு தான் பிரச்சனையே!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எனக்கு காளான் சூப் தான் பிடிக்கும்  பிரட்டலையும் ஒருக்கா ரை பண்ணவேணும் :unsure:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, ஈழப்பிரியன் said:

காளான் கறி சுவையாகவே இருக்கும்.ஆனால் ஒன்றுக்குமே உதவாத உருளைக்கிழங்கு தான் பிரச்சனையே!

இங்கை அப்படி இருக்கலாம்.ஆனால் ஊரில் உருழக்கிழங்குப் பிரட்டலும் இடியப்பமும் முட்டடைப்ப் பொரியலும் வாட்டிய வாழை இலையயில் பார்சல் பண்ணி சாப்பிட்டால் பிறந்த பயனை பல முறை அடையலாம்.:)

Posted
9 hours ago, சுவைப்பிரியன் said:

இங்கை அப்படி இருக்கலாம்.ஆனால் ஊரில் உருழக்கிழங்குப் பிரட்டலும் இடியப்பமும் முட்டடைப்ப் பொரியலும் வாட்டிய வாழை இலையயில் பார்சல் பண்ணி சாப்பிட்டால் பிறந்த பயனை பல முறை அடையலாம்.:)

மம்மி அடிக்கடி பார்சல் பண்ணி பள்ளிக்கூடத்துக்கு தந்திருக்கிறா போல :grin:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 hours ago, சுவைப்பிரியன் said:

இங்கை அப்படி இருக்கலாம்.ஆனால் ஊரில் உருழக்கிழங்குப் பிரட்டலும் இடியப்பமும் முட்டடைப்ப் பொரியலும் வாட்டிய வாழை இலையயில் பார்சல் பண்ணி சாப்பிட்டால் பிறந்த பயனை பல முறை அடையலாம்.:)

நாற்பது வயது வரை சாப்பிடுவதற்காக வாழ்

நாற்பதுக்கு பின் வாழ்வதற்காக சாப்பிடு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, ஈழப்பிரியன் said:

நாற்பது வயது வரை சாப்பிடுவதற்காக வாழ்

நாற்பதுக்கு பின் வாழ்வதற்காக சாப்பிடு.

சாப்பிட வேண்டிய வயதிலை சாப்பிடாமல்...அனுபவிக்காமல் நித்திரையில்லாமல் வேலை செய்து சேர்த்து.....ஒருத்தருக்கும் குடுக்காமல் பதுக்கி வைச்சிட்டு......
வயது போனாப்பிறகு டாக்குத்தர் அது சாப்பிடக்கூடாது...இது குடிக்கக்கூடாது.....ஒருசிலதை நினைச்சும் பார்க்கக்கூடாது எண்டு சொல்லுற நேரம் இருக்கெல்லே....
அங்கைதான் நிக்கிறான் இறைவன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
46 minutes ago, குமாரசாமி said:

சாப்பிட வேண்டிய வயதிலை சாப்பிடாமல்...அனுபவிக்காமல் நித்திரையில்லாமல் வேலை செய்து சேர்த்து.....ஒருத்தருக்கும் குடுக்காமல் பதுக்கி வைச்சிட்டு......
வயது போனாப்பிறகு டாக்குத்தர் அது சாப்பிடக்கூடாது...இது குடிக்கக்கூடாது.....ஒருசிலதை நினைச்சும் பார்க்கக்கூடாது எண்டு சொல்லுற நேரம் இருக்கெல்லே....
அங்கைதான் நிக்கிறான் இறைவன்.

அங்கை தான் ஈழப்பிரியனும் நிக்கிறான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.